அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 29 ஜூலை, 2011

ஜெயலலிதாவின் துணிச்சலான நடவடிக்கை; கலைஞரும் கையிலெடுப்பரா?

நில மோசடி புகாரில் சிக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் நில மோசடி புகார்கள் குவிந்து வருகின்றன. குற்றம் புரிந்ததற்கான ஆதாரம் இருப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் திமுகவினரே பெரும்பாலும் சிக்குகின்றனர். இந்த வழக்கில் திமுக முன்னாள்  அமைச்சர்களே முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டு படியேறும் நிலையில், புதிய திருப்பமாக அதிமுக அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது தொடுக்கப்பட்ட நிலமோசடி புகார் பொய்யானது என்று காவல்துறை கூறுகிறது. அதேபோல், அதிமுக எம்.எல்.ஏ. ஒருவர் மீதும் இத்தகைய நில மோசடி குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்நில்லையில்,
சேலம் அங்கம்மாள் காலனி நிலம் அபகரிப்பு புகார் தொடர்பாக 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சேலம் 24-வது வட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான சித்தானந்தம் பெயரும் இடம் பெற்றுள்ளது. இவரை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.இதே வழக்கில் சூரமங்கலம் பகுதி எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் கனகராஜூம் கைது செய்யப்பட்டுள்ளனர்.நிலம் மோசடி புகாரில் சிக்கியுள்ள இந்த 2 பேரையும் கட்சியில் இருந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அதிரடியாக நீக்கி உள்ளார். இதன் மூலம் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கருத்தை ஜெயலலிதா நிலைநாட்டியுள்ளார். இதே போல் ஜெயலலிதா மீதான நில ஆக்கிரமிப்பு குற்றசாட்டு வழக்கையும் விரைந்து முடிந்து அவர் தன்னை தூய்மைப்படுத்துவது தான் சிறந்தது.
மேலும், எதிர் முகாமான திமுகவில், இந்த வழக்கில் சிக்கியுள்ளவர்களுக்கு உதவ வேண்டும் என்று தனது கட்சி வழக்கறிஞர் பிரிவுக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி, இவை யாவும் திமுகவை பழி வாங்கும் நடவடிக்கை என்று நாள்தோறும் சொல்லி வருகிறார். வெறுமனே திமுகவினர் மட்டுமே கைது செய்யப்பட்டால் அரசியல் வழக்கு என்று சொல்லலாம். ஆனால் காங்கிரஸ் அதிமுக என அனைத்துக் கட்சியினரும் சிக்குகிறார்கள். இதில் திமுகவின் சதவிகிதம் அதிகமாக உள்ளது என்பதற்காக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று ஒற்றை வரியில் ஒதுக்கித் தள்ளிட முடியாது. மேலும் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தனது கட்சியினரை நீக்கிய ஜெயலலிதாவை போன்று அதிரடியாக கருணாநிதியும்  நீக்கவேண்டும். 'உங்கள் மீதான புகாரை சட்டரீதியாக சந்தித்து அதில் வெற்றி கண்டு கழகத்தில் மீண்டும் இணையுங்கள்' என்று சொல்லவேண்டும். அவ்வாறு  சொல்லும் துணிவு கருணாநிதிக்கு இல்லையெனில், குறைந்தபட்சம் வழக்கு முடியும் வரை இடை நீக்கமாவது செய்யலாம். அதைவிடுத்து கட்சி வழக்கறிஞர்கள் மூலம் உதவுவதும், ஒரு மத்திய அமைச்சரே இவ்வழக்கில் கைதாகியுள்ளவர்களை சிறையில் சந்திப்பதும், இத்தகைய நிலமோசடி விஷயங்களுக்கு திமுக தலைமையே ஆதரவு அளிக்கிறதோ என்ற என்னம் பொதுமக்கள் மனதில் எழாமல் இல்லை. கலைஞர் புரிந்து கொண்டு சுதாரித்தல்  நன்று.  

பயங்கரவாதி, "மனிதன்' அல்ல; உண்மையைச் சொன்ன மோடி!

மீபத்தில் மும்பையில் நடந்த தொட குண்டுவெடிப்பையடுத்து கருத்து தெரிவித்துள்ள குஜராத் முதல்வர் நரேந்திரமோடி சில கருத்துக்களை சொல்லியுள்ளார். அவை அனைத்தும் அக்கப்பூர்வமான கருத்துக்கள். அவற்றை படித்தால் பயங்கரவாதம் விஷயத்தில் மோடியின் ஆதங்கம் வெளிப்படுகிறது. ஆனால் மோடி சொல்லும் ஆலோசனையை மத்திய அரசு கடைபிடிக்கத் தொடங்கினால் என்னாகும் என்பதை கடைசியாக பார்ப்போம். இப்போது மோடியின் வார்த்தைகளிலிருந்து....
 ""மத்திய அரசின் வளைந்து கொடுக்கும் அணுகுமுறையால், பயங்கரவாதிகளுக்கு தெம்பு அதிகரித்து விட்டது. அதனால், இந்தியாவில், விரும்பும் இடத்தில் எல்லாம் தாக்குதல் நடத்துகின்றனர், மும்பை தொடர் குண்டு வெடிப்புகளில், அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். தற்போதைய மத்திய அரசு, பயங்கரவாதிகள் விஷயத்தில் வளைந்து கொடுக்கும் அணுகுமுறையை பின்பற்றுகிறது. அதனால், பயங்கரவாதிகளுக்கு தெம்பு அதிகரித்து, விரும்பும் இடங்களில் எல்லாம் தாக்குதல் நடத்துகின்றனர். பயங்கரவாதத்தின் கோரப் பசிக்கு, நாட்டில் ஏராளமான மக்கள் இரையாகியுள்ளனர். இதுபோல் ஈவு இரக்கமில்லாமல் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளுக்கு மன்னிப்பு வழங்கக் கூடாது. மன்னிப்பு என்பது மனிதர்களுக்குரியது. அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தும் பயங்கரவாதி, "மனிதன்' என அழைக்க தகுதியற்றவன். மதக் கலவரங்களை ஒடுக்க சட்டம் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டும் மத்திய அரசு, பயங்கரவாதத்தை தடுக்கும் நடவடிக்கைகளில் சுணக்கம் காட்டுகிறது. அமெரிக்கா உட்பட, பல்வேறு நாடுகள், உறுதியான நடவடிக்கைகளின் மூலம் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தியுள்ளன. இவ்வகையில், இந்தியாவிலும் பயங்கரவாதத்திற்கு எதிராக, கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். அப்போதுதான், பயங்கரவாதம் கட்டுக்குள் வரும்' என்று  நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பயங்கரவாதத்தின் கோரப் பசிக்கு, நாட்டில் ஏராளமான மக்கள் இரையாகியுள்ளனர். இதுபோல் ஈவு இரக்கமில்லாமல் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளுக்கு மன்னிப்பு வழங்கக் கூடாது. மன்னிப்பு என்பது மனிதர்களுக்குரியது. அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தும் பயங்கரவாதி, "மனிதன்' என அழைக்க தகுதியற்றவன் என்று சொல்லும் மோடி, தனது வார்த்தையை தனக்கே பொருத்திப் பார்ப்பாரானால், ஏனைய பயங்கரவாதிகளை விட இவருக்கு கச்சிதமாக பொருந்துவதைக் காணலாம். ஏனெனில் தனது சொந்த மாநிலத்து மக்களையே கருவறுத்த பயங்கரவாதிதான் இவர். அதுமட்டுமன்றி அது பற்றிய ஆவணங்களும் இவரது அரசால் அளிக்கப்பட்டுள்ளன என்றால் இவர் பயங்கரவாதியா? அல்லது மகாத்மாவா? மோடி சிந்திக்கட்டும்.
மேலும் மோடியின் ரத்த கறைபடிந்த கையை கண்ட மற்றொரு மனிதகுல விரோத நாடான அமெரிக்காவே, 'எங்கள் நாட்டுக்கு வந்து விடாதே' என்று மோடிக்கு விசா மறுப்பதில் இருந்து மோடியின் பயங்கரவாதத்தை தெரிந்து கொள்ளலாம். எனவே மத்திய அரசு மோடியின் அறிவுரையை அமுல்படுத்த தொடங்கினால், முதலில் நடவடிக்கைக்குரியவர் மோடியாகவும்,  அடுத்து பயங்கரவாதத்தை ரதயாத்திரை மூலம் தொடங்கி வைத்தவர்களும் பாபர் மஸ்ஜித் இடிப்பு குற்றவாளிகளுமான  அத்வானி  உள்ளிட்டோரும், அடுத்தபடியாக பல்வேறு குண்டுவெடிப்புகளில் சம்மந்தப்பட்ட சங்க்பரிவார கும்பலுமாகத்தான் இருக்கும் என்பதை மோடி மறந்து விடக்கூடாது. மேலும் மத்திய அரசு உடனடியாக மோடியின் ஆசையை நிறைவேற்றவேண்டும். பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஆனாலும்  மத்திய அரசு மவுனம்  காக்கின்ற காரணத்தால்,  பயங்கரவாதிகளே பயங்கரவாதம் என ஓலமிட்டு காமெடி செய்கிறார்கள். என்னத்த சொல்றது?  

ரூ.1800 கோடி சுரங்க ஊழல்: 'எடி'யின் தலையில் இறங்கிய இடி!

ர்நாடகத்தில் ஆட்சிக்கு வந்த காலம் முதலே பதவி நாற்காலியின் ஆட்டத்தை நிறுத்த அரும்பாடுபட்டு வருபவர் முதல்வர் எடியூரப்பா. சொந்த கட்சி உறுப்பினர்களால் குடைச்சல், ரெட்டி சகோதரர்கள் பிரச்சினை, ஆளுநருடன் மோதல், இதுபோக தன் மீது அவ்வப்போது ஊழல் குற்றசாட்டை அடுக்கும் முன்னாள் முதல்வர் குமாரசாமியுடன் சத்த்தியம் செய்யும் நாடகங்கள் என எப்போது பார்த்தாலும் எடியூரப்பாவின் நிலை கத்தி மேல் நடப்பது போன்றே இருந்து வந்த நிலையில், அடுத்து அவர் தலையில் இடியாக இறங்கியுள்ளது சுரங்க ஊழல் குற்றச்சாட்டு. சுரங்க தொழிலை ரெட்டி சகோதரர்களுக்கு  ஏகபோக குத்தகைக்கு விட்டது போல் கண்டும் காணாமல் இருந்தார் எடியூரப்பா. இந்த சட்ட விரோத சுரங்க தொழில் குறித்து லோக் ஆயுக்தா விசாரணை நடத்தி வந்த ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியும், லோக் ஆயுக்தா நீதிபதியுமான  சந்தோஷ் ஹெக்டே தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், 
''கடந்த 2009  மார்ச் முதல் 2010 மார்ச் வரையிலான 14 மாதங்களில் சட்ட விரோத சுரங்க தொழில் மூலம் மிகப் பெரிய அளவில் ஊழல்கள் நடந்துள்ளன. ரூ.1800 கோடிக்கு மேல் ஊழல்கள் நடந்துள்ளன. இந்த தொகை அரசின் கஜானாவுக்கு வர வேண்டியவை. ஆனால் அரசியல் வாதிகளின் கைகளுக்கு சென்று விட்டது. இதன் மூலம் அரசுக்கு அவர்கள் இழப்பை ஏற்படுத்தி உள்ளனர். இந்த ஊழிலில் முதல்-மந்திரி எடியூரப்பா, அவரது மந்திரிகள் மற்றும் சுரங்க உரிமையாளர்கள் ஆகியோருக்கு தொடர்பு இருக்கின்றன. இதற்கு தேவையான வலுவான மற்றும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.இந்த முறைகேட்டுக்கு எடியூரப்பா தான் பொறுப்பு என்று கூறியுள்ளார்.  
இந்த செய்தி பாஜக தரப்புக்கு பேரிடியாக இருந்தது. காரணம் ஆ. ராசா, தயாநிதி மாறன் போன்ற மத்திய அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சசாட்டுக்கள் எழுந்தவுடன், அவர்கள் பதவி விலகவேண்டும் என அதிகமாக குதித்தது பாஜக கட்சி. இந்நிலையில் தனது கட்சி  மாநில முதல்வர் மீதே ஊழல் குற்றச்சாட்டு வந்துள்ளது அக்கட்சிக்கு அதிர்ச்சியளித்தது. இந்த ஊழல் குற்றச்சாட்டால் எடியூரப்பாவை பதவி விலக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குரலெழுப்பிய நிலையில், பாஜக எடியை பதவி விலக சொன்னதையொட்டி எடியூரப்பா பதவி விலகுகிறார். எடிக்கு இப்படி அறியாப் புறத்திலிருந்து  ஒரு இடி இறங்கும்; அது பலமுறை அரும்பாடுபட்டு காப்பாற்றிய பதவிக்கு வேட்டு   வைக்கும் என நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.

வெள்ளி, 25 மார்ச், 2011

பிள்ளையார் சுழியுடன் பிரச்சாரமா? மைதீன்கானே இதுதான் இஸ்லாமிய நெறியா?

ரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா!  என்ற காமெடி வரி அனைவருக்கும் பரிச்சயமானதுதான். அரசியல் என்றாலே சில விட்டுக் கொடுத்தல்களை செய்து  தான் ஆகவேண்டும் என்பது எழுதாத சட்டமாக உள்ளது. ஆனால் அப்படி விட்டுக் கொடுப்பது இஸ்லாமாக இருப்பதுதான் வேதனையாகும். அரசியல் என்று வந்துவிட்டால் அங்கே இஸ்லாம் இரண்டாம் பட்சம்தான் போலும்.

வெள்ளிக்கிழமை தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தற்போதைய அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், தனது பிரச்சாரத்தை தொடங்கிய இடம்தான் கவனிக்க வேண்டியதாகும். இவர் நெல்லை வண்ணார்பேட்டை சாலைத் தெருவில் உள்ள வெற்றி வேலடி விநாயகர் கோயிலில்  சிறப்பு பூஜையை முடித்துக் கொண்டு, விநாயகரை வணங்கி கன்னத்தில் போட்டுக் கொண்டு, தேங்காய் விடலையும் போட்டு தனது பிரசாரத்தை தொடங்கினாராம்.  

 என்ன இப்படி? என கட்சிக்காரர்களிடம் கேட்டால், மைதீன்கான் இதே தொகுதியில் 2001, 2006 தேர்தல்களில் போட்டி போட்டபோதும் இதே கோயிலில் வணங்கிவிட்டுதான் பிரசாரத்தை தொடங்கினார். இரு தேர்தல்களிலும் அவருக்கு அமோக வெற்றி. அதுமட்டுமல்ல, கடந்த தேர்தல் வெற்றி அவரை அமைச்சராகவும் ஆக்கியது. அந்த "சென்டிமெண்ட்'தான் மைதீன்கானை இந்தத் தேர்தலிலும் இங்கே அழைத்து வந்துள்ளது என்றனராம். 
முஸ்லிமான மைதீன்கான், தனக்கு வெற்றியையும்-தோல்வியையும் தீர்மானிப்பது இறைவன் தான் என்பதை மறந்து, அல்லாஹ்வை விடுத்து வேறு ஒரு தெய்வத்தை பிரார்த்தித்து தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் என செய்திகள் கூறுகின்றன. மேலும், இந்த கோயிலில் வழிபட்டு சென்றால் வெற்றி உறுதி என்பதும் அவரது செண்டிமெண்ட் என்றும் தெரிகிறது. பதவி எனும் மேல் துண்டிற்காக இஸ்லாம் எனும் உயிர்மூச்சை பின்னுக்கு தள்ளுவது ஒரு முஸ்லிமுக்கு அழகல்ல என்பதை சகோதர வாஞ்சையோடு அவருக்கு சொல்லிக் கொண்டு, அவரது இறைநம்பிக்கையின் உறுதிக்காக பிராத்திக்கிறோம்.