போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 23 ஜூலை, 2011

சென்னையில் மதுக்கடை முற்றுகை!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் உள்ள புகழ் பெற்ற ஸித்திக்  சரா எனும் புகழ் பெற்ற பள்ளிவாசல் உள்ளது! வெளி மாநிலத்தில் இருந்து வரும் முஸ்லிம்கள் மிகக் குறைந்த வாடகையில் தங்கும் விடுதியும் கொண்ட இந்த பள்ளிவாசல் அருகில், வழி பட்டு தளங்களுக்கு அருகில் மதுக்கடை இருக்கக் கூடாது எனும் உச்ச நீதி மன்ற நெறி முறைகளை காற்றில் பறக்க விட்டு விட்டு ஒரு டாஸ்மாக் மதுக் கடை உள்ளது! 

இதை அகற்றக் கோரி மஸ்ஜித் நிர்வாகமும் பகுதி மக்களும் பல புகார்கள் அளித்தும் எந்தப் பலனும் இல்லாததால் அவர்கள் இந்திய தவ்ஹீத் ஜமாத்தை அணுகினர்! இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சென்ட்ரல் கிளை மற்றும் வட சென்னை மாவட்ட நிர்வாகிகள் உடனடியாக களத்தில் இறங்கி மாவட்ட நிர்வாகத்திடம் பேசி பலன் இல்லாததால் 
நேற்று ஜும்மா தொழுகைக்குப் பின் மதுக்கடை முற்றுகை அறிவித்தனர்.

மதியம் சுமார் 3 மணிக்கு போராட்டத்தை அறிவித்திருந்தாலும் காலை முதலே மதுக்கடை அடைக்கப் பட்டு போலிஸ் படை குவிக்கப் பட்டு இருந்தது! கைது நிச்சயம் எனத் தெரிந்தும் ஏரளமான ஆண்களும் பெண்களும் குவிந்தனர்.   கூட்டம் சேருவதைக் கண்ட 
காவல் துறை மூன்று மணிக்கு முன்னரே கைது நடவடிக்கையை துவங்கினர்.

இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் எஸ்.எம்.பாக்கர், துணை போது செயலர் இக்பால் , மாநில செயலாளர் பிர்தவ்ஸ் , இணையதுல்லாஹ் 
வட சென்னை  மாவட்ட நிர்வாகிகள் யூசுப் , அன்சாரி, புஹாரி, இஸ்மாயில் சென்றால் கிளை நிர்வாகி பாவா உள்ளிட்ட சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கைதாகி மண்டபம் ஒன்றில் வைக்கப் பட்டு மாலை விடுதலை செய்யப்பட்டனர்.        


வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

வேளச்சேரி பகுதியில் அடக்கஸ்தலம்- மேயர் அறிவிப்பு; ஐ.என்.டி.ஜே போராட்டத்தின் வெற்றி!




''போராட்டம் இது போராட்டம்
ஐ.என்.டி.ஜே போராட்டம்!
அநீதிக்கு எதிரான அறவழி போராட்டம்!!

''கேட்க மாட்டோம் கேட்கமாட்டோம்!
இலவசங்களை கேட்கமாட்டோம்!!
கேட்கிறோம் கேட்கிறோம்!
இறந்தவர்களை அடக்கம் செய்ய கபர்ஸ்தான் கேட்கிறோம்!!

என்ற கோஷங்கள் விண்ணை முட்ட, வேளச்சேரி மற்றும் தரமணி பகுதி முஸ்லிம்களின் பல்லாண்டு கோரிக்கையான 'அடக்கஸ்தலம்' கேட்டு, அலட்சியம் காட்டும் மாநகராட்சியைக்  கண்டித்து கடந்த 28 -01 -2011 அன்று களமிறங்கியது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.

தனி அமைப்பாக இருந்தாலும், தனி கட்சியிலே இருந்தாலும் கூட, சமுதாயப் பிரச்சினை என்ற அடிப்படையில் இந்த போராட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் முஹம்மது யூசுப், மற்றும் இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழக செயலாளர் தர்வேஷ் ரஷாதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களின் சமூக அக்கறையை வெளிப்படுத்தினர்.

இப்போராட்டத்தில் கண்டன உரையாற்றிய இதஜ தேசியத்தலைவர் எஸ்.எம். பாக்கர் அவர்கள்,
''ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிலே கொள்ளையடித்தீர்களே அதில் பங்கு கேட்கவில்லை. இந்த தேசத்தில் எங்களுக்கு உரிமை இருக்கிறது. இந்த நாட்டிற்காக தியாகம் செய்தவர்கள் முஸ்லிம்கள். இந்த சமுதாயம் அடக்கம் செய்வதற்கு இடம் கேட்டால் ஒடுக்கப் பார்க்கிறீர்களா? இது எச்சரிக்கை; இது ஆரம்பம். இதற்கு செவி சாயுங்கள்.
உரிமைக்காக போராடினால் கைது நடவடிக்கையா?  முஸ்லிம்கள் என்றால் கிள்ளுக்கீரையா? இது கலைஞர் அரசுக்கு அடிக்கின்ற சவப்பெட்டி. அடுத்து யாராவது இறந்தால் ஜனாஸாவை எடுத்துக் கொண்டு கலைஞர் வீட்டை முற்றுகையிடுவோம் என கர்ஜித்தார்.

தேசியத் தலைவரின் கர்ஜனையும், போராட்டத்தில் குழுமிய மக்களின் ஆதங்கமும் அதிகார வர்க்கத்தின்  கதவுகளைத் தட்ட, பல்லாண்டு கோரிக்கைக்கு விடை கிடைத்துள்ளது. நேற்று  [10 -02 -2011 ] நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் அவர்கள்,

''வேளச்சேரி பகுதி உட்பட இரண்டு  இடங்களில் இஸ்லாமியர்கள் உடல் அடக்கம் செய்வதற்காகவும், கிறிஸ்தவர்கள் அடக்கம் செய்வதற்காக இரண்டு இடங்களும், என சென்னையில் நான்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு வரும் மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!

புதன், 2 பிப்ரவரி, 2011

முஸ்லிம்களின் சவப்பெட்டி போராட்டம்; கிடுகிடு சென்னை!

அல்லாஹ்வின் அழகிய திருப்பெயரால்....

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள கூட்டணிகுறித்த கவலையிலும், தேர்தலில் போட்டியிடும் சமுதாய இயக்கங்கள் சீட்டு  குறித்த கவலையிலும், தேர்தலில் போட்டியிடாமலேயே , தேர்தல் செலவுக்கு[?] அரசியல்கட்சிகளிடம் பணம் வாங்கும்  இயக்கம் அந்த கவலையிலும் இருக்க, சமுதாய நலனை மட்டுமே கவனத்தில் கொள்ளும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத், வேளச்சேரி பகுதி முஸ்லிம்களின் நீண்டகால கோரிக்கையான 'கபர்ஸ்தான்' விசயத்தை கையிலெடுத்து, அந்தபகுதி  முஸ்லிம்களின் ஆதரவுடன் 'சந்தூக் ஏந்தும் போராட்டம்' நடத்தி, ஆட்சியாளர்களை கிடுகிடுக்க  செய்துள்ளது அல்ஹம்துலில்லாஹ். அந்த போராட்டம் குறித்து ஜூ.வி. வார இதழில் வெளியான செய்தி உங்கள் பார்வைக்கு;
நன்றி; ஜூ.வி.