ததஜ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ததஜ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 29 நவம்பர், 2011
வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011
மத்ஹப் பாணியில் கரண்டைக்கு கீழ் ஆடையணிய ஃபத்வா!
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
ஆய்வு என்ற பெயரில் அவ்வப்போது மார்க்கத்தை மாற்றும் பீஜேயும் அவரது அபிமானிகளும் சமீபத்தில் கரண்டைக்கு கீழ் ஆடையணியலாம் என்ற ஃபத்வாவை வழங்கியிருந்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால் கரண்டைக்கு கீழ் ஆடையணியக் கூடாது என்பதற்கு அடுக்கடுக்கான ஹதீஸ் ஆதாரங்களை அவர்களே அந்த ஆய்வில் வைத்துள்ளார்கள். அவைகளில் சில;
- ஹுஜைமீ குலத்தைச் சார்ந்த நபித்தோழர் ஒருவர் கூறுகிறார் :
நான் நபி (ஸல்) அவர்களிடம் கீழாடையைப் பற்றிக் கேட்டேன். நான் கீழாடையை எது வரைக்கும அணியலாம் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் தனது முதுகை வளைத்து தன் கெண்டைக்காலின் எலும்பைப் பிடித்து இது வரை அணிந்து கொள். இதை நீ விரும்பாவிட்டால் இதற்குக் கீழே இது வரை அணிந்து கொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால்களுக்கு மேல் இது வரை அணிந்து கொள். இதையும் நீ விரும்பாவிட்டால் பெருமையடித்து ஆணவத்துடன் நடக்கும் யாரையும் மாண்பும் வலிமையும் மிக்க அல்லாஹ் விரும்ப மாட்டான் என்று கூறினார்கள்.நூல் : அஹ்மது(15389) - கெண்டைக்காலின் பாதிவரை கீழாடையை அணிந்துகொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால்கள் வரை அணிந்துகொள். கீழாடையை (தரையில் படுமாறு) நீட்டுவதை விட்டும் உம்மை நான் எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும். பெருமை கொள்வதை அல்லாஹ் விரும்பமாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல் : அஹ்மது (22121)
- உனது கீழாடையைக் கெண்டைக்காலின் பாதி வரை உயர்த்திக் கொள். இதை நீ விரும்பா விட்டால் கணுக்கால்கள் வரை (அணிந்து கொள்). கீழாடையை (தரையில்) தொங்க விடுவதை விட்டும் உம்மை எச்சரிக்கின்றேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும். அல்லாஹ் (நாம்) பெருமை கொள்வதை விரும்ப மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல் : அபூதாவுத் (3562)
- ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள் :அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கெண்டைக்காலின் சதைப் பகுதியைப் பிடித்து இதுவே கீழாடையின் (எல்லையாக உள்ள) இடமாகும். இதை நீ விரும்பா விட்டால் இதற்குக் கீழே அணிந்து கொள்ளலாம். இதையும் நீ விரும்பாவிட்டால் கணுக்கால்களுக்குக் கீழ் கீழாடைக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறினார்கள்.நூல் : திர்மிதி (1705)
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இறை நம்பிக்கையாளரின் கீழாடை கெண்டைக்கால்களின் சதைப்பகுதி வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் கெண்டைக்காலின் பாதி வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் அவரது கணுக்கால்கள் வரை இருக்க வேண்டும். இதற்குக் கீழே செல்லும் ஆடை நரகத்திற்கு(அழைத்து)ச் செல்லும்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)நூல் : அஹ்மது (7519) - அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :உனது கீழாடையைக் கெண்டைக்காலின் பாதி வரை உயர்த்திக் கொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக் கால்கள் வரை (அணிந்து கொள்). ஆடையை இஸ்பால் செய்வதை விட்டும் உம்மை எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும்.அறிவிப்பவர் : ஜாபிர் பின் சுலைம் (ரலி)நூல் : அபூதாவுத் (3562)
- மேற்கண்ட ஹதீஸ்கள் மட்டுமன்றி இன்னும் இதுபோன்ற சில ஹதீஸ்களையும் வைத்து விட்டு, கடைசியில் தங்களது வழக்கமான பாணியான வார்த்தை விளையாட்டை நடத்தியுள்ளார்கள். கரண்டைக்கு கீழ் ஆடையணியக் கூடாது என்று வரும் ஹதீஸ்களில் 'இஸ்பால்' செய்யக் கூடாது என்று கூறுகிறது. இஸ்பால் என்றால் தரையைத் தொடும் அளவிற்கு ஆடையைத் தொங்க விடுவது என்பது பொருள் என அரபு அகராதி நூல்களும் அறிஞர்களும் குறிப்பிடுகின்றனர் என்று கூறிவிட்டு,
கணுக்கால்களின் முன் பகுதியே கீழாடையின் இறுதி எல்லை என்ற கருத்தில் வரும் செய்திகள் பலவீனமானவை. கணுக்கால்களின் மீது ஆடை படும் வகையில் அணிந்தால் தவறில்லை என்பதற்கு ஏராளமான ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.
எனவே ஒருவர் தன் கீழாடையைத் தரையில் இழுபடாத வகையில் அணிந்தால் அதை மார்க்கம் தடை செய்யவில்லை. இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட வழிமுறையாகும்.என்று தீர்ப்பளித்துள்ளனர்.
கவனமாக கவனிக்கக் வேண்டும். கணுக்கால் வரை ஆடையணிய
அனுமதித்த நபி[ஸல்] அவர்கள், 'இஸ்பால்' செய்வதை விட்டும் அதாவது கணுக்காலுக்கு கீழே தரையை தொடும் அளவுக்கு ஆடையனிவதை எச்சரிக்கிறேன் என்று சொல்கிறார்கள். கணுக்கால் வரை என்று சட்டம் சொன்ன நபியவர்களுக்கு தரையை தொடாமல் ஆடையணிந்து கொள் என்று சொல்லத் தெரியாதா? இதிலிருந்து தெரிவது என்ன? கீழாடையின் அதிக பட்ச எல்லை என்பது கணுக்கால் வரை தானே?

ஒருவர் சொல்கிறார் தொண்டி எல்லையோடு நின்று கொள்; இதைவிட்டும் தாண்டுவதை நான் எச்சரிக்கிறேன் என்கிறார். இதிலிருந்து என்ன சட்டம் எடுக்க முடியும்? தொண்டி தான் இறுதி எல்லை அதை விட்டும் தாண்டக் கூடாது என்பதுதானே!ஆனால் ஆய்வாளர்
பீஜேயின் மனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. உடனே ஒருவரிடம், ''தொண்டி எல்லையை தாண்டக்கூடாது என்பதின் அர்த்தம் என்ன? என்று கேட்கிறார். அவரோ தொண்டி எல்லையை தாண்டுதல் என்றால் தொண்டிக்கு அடுத்த ஊரை நெருங்குவதாகும் என்கிறார். அப்படியானால் அந்த ஊரைத் தொடாமல் ஒரு அடி முன்னால் நின்று கொள்வது தவறில்லை என்று பீஜே சட்டம் சொல்லி விட்டார் என்றால் 'தொண்டியை தாண்டாதே என்று கட்டளையிட்டதற்கு மதிப்புண்டா?
மேலும், இவர்கள் அடிக்கடி மேடையில் மத்ஹபை குறித்து ஒன்று சொல்வார்கள். அதிகமாக சாப்பிட்டால் போதை தருவதை குறைவாக சாப்பிட்டால் ஹராம் இல்லை. அதாவது பத்துக் கிளாஸ் அடித்தால் தான் போதை ஏறும் என்றால், ஒன்பது கிளாஸ் அடிப்பது தவறில்லை என்று மத்ஹபு சட்டம் சொல்கிறது என்று கிண்டலடிப்பார்கள். அதே பாணியில் இவர்களின் இந்த தீர்ப்பு குறித்து சொல்வதாக இருந்தால், 'கரண்டைக்கு கீழ் ஆடையணிதல் என்பது தரையில் இழுபட்டால் ஹராம். தரையை தொட்டால் ஹராமில்லை' என்பதுதான்.
மேலும், இவர்கள் வைத்துள்ள அகராதிப் படி பார்த்தால் கூட 'இஸ்பால்' என்பது ஆடையைத் தரையில் படும் அளவிற்கு தொங்க விடுதலாகும் என்பதுதானே! ஆனால் இவர்களோ அதையும் கீழாடையைத் தரையில் இழுபடாத வகையில் அணிந்தால் அதை மார்க்கம் தடை செய்யவில்லை என்று தீர்ப்பளிப்பது மனோ இச்சையின் வெளிப்பாடுதானே? தரையை தொடுவதற்கும், தரையில் இழுபடுவதற்கும் வேறுபாடு கூட விளங்க வில்லையா?
கரண்டைக்கு கீழே ஆடையணிதல் நரகத்திற்கு இட்டுச் செல்லும் செயல், பெருமைக்குரிய செயல், அல்லாஹ் விரும்பாத செயல் என்றெல்லாம் தெளிவாக இறைத்தூதர்[ஸல்] அவர்கள் சொல்லியிருக்க, அல்லாஹ்வின் தூதருக்கு மாற்றமாக தரையில் இழுபடாமல் ஆடை அணிந்தால் தவறில்லை என்று ஃ பத்வா வழங்கும் இவர்களை சமுதாயம் என்று அடையாளம் காணப் போகிறது?
அதெல்லாம் சரி! தொழுகைக்கு 'டவுசர்' போதும்; மற்ற நேரங்களில் தரையை தொடும் அளவுக்கு ஆடையணியனுமா?
-எண்ணம்; சகோதரர் பக்ருதீன்.
எழுத்து; முகவைஅப்பாஸ்.
புதன், 16 பிப்ரவரி, 2011
மமகவுக்கு எதிரான தீர்மானம்; நெஞ்சமெல்லாம் வஞ்சம்!
ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..
அப்பாவியாய் நின்ற அண்ணன் கழுத்தில் மாலையிட்டு, தலைவராக்கிய அந்த பொதுக்குழு, அண்ணனின் ஆசைப்படி கடந்த நாடளுமன்றத் தேர்தலில் எடுத்த அதே முடிவை, இந்த சட்டமன்றத் தேர்தல் நிலைப்பாட்டிலும் தீர்மானமாக கொண்டு வந்துள்ளது. அந்த தீர்மானம்; மமகவை தோற்கடிப்பது என்பதுதான்.
1. மனித நேய மக்கள் கட்சி எங்கு நின்று போட்டியிட்டாலும் அவர்களுக்கு எதிராக
அவர்களின் சமுதாய துரோகங்களை அடையாளம் காட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் களம் இறங்கி அவர்களை தோல்வியை தழுவச் செய்யும் என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
இவர்கள் சமுதாயத் தொண்டு செய்யாமல் ஜமாஅத் நிர்வாகிகளையும்
தலைவர்களையும் மிரட்டுதல் பள்ளிவாசல் நிர்வாகத்தில் நுழைந்து நிர்வாகத்தை
சீரழிப்பது, கட்டப் பஞ்சாயத்து செய்வது, அப்பாவிகளின் நிலத்தை
அபகரிப்பது, குடும்பப் பஞ்சாயத்து என்ற பெயரில் அராஜகம் செய்வது ஆகிய காரியங்க்ளைச் செய்து முஸ்லிம் சமுதாயத்தின் வெறுப்பைச் சம்பாதித்துள்ளனர். இவர்கள் வளர்வது சமுதாயத்துக்கு கேடாக முடியும் என்பதால் இவர்கள் எந்த அணியில் இருந்தாலும் இவர்களை எதிர்த்து பிரச்சாரம் செய்வது என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
அண்ணன் ஜமாஅத்தின் தீர்மானத்தில் கூறியுள்ளபடி, மமக சமுதாயத்தின் வெறுப்பை சம்பாதித்துள்ளது உண்மை எனில், தனது வாக்குச்சீட்டின் மூலம் சமுதாயம் வெளிப்படுத்தட்டுமே! அதற்குள் தீர்மானம் நிறைவேற்றும் அவசியமென்ன? ஒருவேளை அண்ணன் ஜமாஅத்துதான் சமுதாயம்- சமுதாயம்தான் அண்ணன் ஜமாஅத் என்ற என்னமோ..?
மேலும் சில ஆண்டுகளுக்கு முன்னால், மத்தியசென்னையில், அதிமுக கூட்டணி சார்பில் மறைந்த சகோதரர் அப்துல்லத்தீப் ஸாஹிப் அவர்களும், திமுக கூட்டணியில் முரசொலி மாறனும், மூன்றவாது அணி சார்பில் பேராசிரியர் காதர்மொஹிதீன் அவர்களும் மோதும் நிலை. சமுதாயக்கட்சியின் இரு பிரமுகர்கள் மோதுவதை குறித்து, சமுதாயத்தில் பல்வேறு கருத்துக்கள் எழும்பியதையொட்டி, பேராசிரியர் காதர்மொஹிதீன் அவர்கள் தாமாக முன்வந்து போட்டியிலிருந்து விலகி பெருந்தன்மையோடு நடந்துகொண்டார். இப்படிப்பட்ட பெருந்தன்மையை பேரறிஞர்[!]ரிடம் எதிர்பார்க்க முடியாது என்பது தனிவிஷயம்.
சில நேரங்களில் முஸ்லிம்லீக்கும்- தேசியலீக்கும் சில தொகுதிகளில் மோதியுள்ளது. ஆனால் இவ்விரு அமைப்புகளும் அதை தேர்தல் போட்டியாகத்தான் கருதியதேயன்றி, அண்ணன் ஜமாஅத்தைப் போல் வஞ்சம் வைத்து வருஷா வருஷம் தீர்மானம் நிறைவேற்றவில்லை. அவ்வளவு ஏன்? சங் பரிவார்கள் கூட முஸ்லிம் அமைப்புகளை களம் இறங்கி தோற்கடிப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றியதில்லை. ஆனால் 'நாங்கள்தான் சமுதாய பாதுகாவலர்கள்' என தம்பட்டம் அடிக்கும் அண்ணன் ஜமாஅத், இந்த தீர்மானத்தில் மூலம் சங்பரிவாரையும் மிஞ்சிய முஸ்லிம் விரோதிகள் என காட்டிவிட்டார்கள்.
அடுத்து, இவர்கள் கூறியது போன்ற துரோகங்கள் மமக செய்வதாகவே வைத்துக்கொள்வோம். சமீபத்தில் திராவிடக்கட்சிகள் முஸ்லிம்களுக்கு இழைத்த துரோகங்கள் என்று ஒரு நாளிதழில் அண்ணன் பட்டியலிட்டாரே! அப்படிப்பட்ட இரு திராவிடக்கட்சிகளை மண்ணைக்கவ்வ வைப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றாது ஏன்? காங்கிரஸையும் தாண்டி முஸ்லிம்களுக்கு துரோகமிழைத்த கட்சி ஒன்று உண்டா? அந்த காங்கிரஸை மண்ணைக் கவ்வவைப்போம் என்று தீர்மானம் போடாதது ஏன்? போடமுடியாது. ஏனெனில் தேர்தலில் போட்டியிடாமலேயே தேர்தல் செலவுக்கு[?] லகரங்களை பெறவேண்டுமே!
மேலும், மமகவை நோக்கி குற்றம்சாட்டும் சமுதாய துரோகங்களை விட்டும் அண்ணன் ஜமாஅத் தூய்மையானதா என்றால் இல்லை என்பதற்கு, திருவிடைச் சேரி படுகொலைகளும், ஊர்கள் தோறும் ஜமாஅத்தில் குழப்பம் உண்டாக்கி தோல்விக்குப் பின் தனிப்பள்ளி காண்பதும், கடயநல்லூர்-மேலப்பாளையம்-திருச்சி-எஸ்.பி.பட்டினம் பள்ளிவாசல்கள் ஆக்கிரமிப்பு, மற்றும் பட்டப்பகலில் பாக்கர் அமைப்பை திருடியது உள்ளிட்ட பல விஷயங்களில் அண்ணன் ஜமாஅத்தை நோக்கி மக்களின் குற்றப்பார்வை உள்ளதே! ஆக மமகவுக்கு எதிரான தீர்மானம், சமுதாயத்தின் குரல் அல்ல. மாறாக, சமுதாயப் போர்வையில் சண்டித்தனம் செய்யும் ஒருவரின் குரலே என்பதை மக்கள் புரிந்து வைத்துள்ளார்கள்.
இறுதியாக, மமகவை பெற்றெடுத்த தமுமுகவிற்கு ஒன்றை நினைவூட்டுகிறோம். பிறந்த இரண்டே மாதங்களில் தேர்தல் களம் கண்டபோது, அனைத்தையும் மறந்து, நீங்கள் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஆதரவுக்கரம் நீட்டி, தேர்தல் பிரச்சாரம் செய்து, ஆளும்கட்சியால் மத்திய சென்னையில் மமக தாக்கப்பட்டபோது கண்டனக்குரல் எழுப்பி, தனது சகோதர பாசத்தை வெளிப்படுத்தினார் பாக்கர். அவரது அமைப்பை அண்ணன் கள்ளத்தனமாக பதிவு செய்து உரிமை கொண்டாடியபோது, சக சமுதாய இயக்கம் என்ற ரீதியில் பீஜேயின் காவாளித்தனத்தை கண்டிக்க நீங்கள் முன்வரவில்லை. எங்கே கண்டித்தால் தேர்தலில் அண்ணனின் ஆதரவு நமக்கு கிட்டாமல் போய்விடுமோ என்று நீங்கள் கருதி மவ்னம் காத்திருக்கலாம்.
ஒன்றை மமக தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். தனக்கு தீங்கிழைத்தவனை யானை நீண்ட நாள் நினைவில் வைத்திருக்கும் என்று ஒரு கதையுண்டு. அது உண்மையா பொய்யா என்பது தெரியாது. ஆனால் அண்ணன் ஆயுளுக்கும் பகை மறப்பவரல்ல. அவ்வாறு அண்ணன் பகை மறக்க நீங்கள் திராவிடக் கட்சியல்ல என்பதை ஆணித்தரமாக உணர்ந்துகொண்டு, அரசியல் ஆதரவுக்காக அநீதியைக் கண்டு கண்மூடிகொள்ளும் செயலை தமுமுக விட்டொழிக்கவேண்டும். தவறு செய்பவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கண்டிக்க முன்வர வேண்டும். அதுதான் தமுமுகவின் உண்மையான சமுதாயப் பணியாக இருக்கும்.

நன்றி; அப்துல்முஹைமீன்.http://amaibbukal.blogspot.com/2011/02/blog-post_15.html
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)