intjkwt லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
intjkwt லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 17 மார்ச், 2012

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் குவைத் மண்டலம் சார்பாக, நடைபெற்ற சமுதாய விழிப்புணர்வுக் கருத்தரங்கம்



த்தியத்தில் உறுதியாய்....சமூகத்தில் இணக்கமாய்....என்ற கொள்கையுடன் இந்தியா மட்டுமன்றி வளைகுடா நாடுகளிலும் முத்திரை பதித்துவரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் குவைத் மண்டலம் சார்பாக,  16 -3 -2012 வெள்ளிக்கிழமை  அன்று சமுதாய விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

குவைத் மிர்காப் பகுதியில் அமைந்துள்ள மன்னுசல்வா உணவகம் பார்ட்டி ஹாலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு  இதஜ குவைத் மண்டலத்தலைவர் முகவைஅப்பாஸ் தலைமையேற்க, மண்டலச் செயலாளர் சாதிக் சதாம் வரவேற்புரையாற்றினார். KIFF அமைப்பின் பிரநிதி சகோதரர் அப்பாஸ், 'தமிழ்நேசன்' விழிப்புணர்வுக் கையேடு ஆசிரியர் சகோதரர் அமானுல்லாஹ், TMCA அமைப்பின் பொதுச்செயலாளர் சகோதரர் திருமங்கலக்குடி. அப்துர்ரஹீம், தமுமுக குவைத் மண்டலத்தலைவர் பேராசிரியர் தாஜுத்தீன் ஆகியோர் முறையே,
படி தாண்டும் பாவைகளும் பக்குவப்படுத்தும் வழிகளும், ஊடகங்களும்-முஸ்லிம்களும், வேற்றுமையில் ஒற்றுமை, இஸ்லாத்திற்கெதிரான எதிர்ப்பலையை எதிர்கொள்வது எப்படி? ஆகிய தலைப்புகளில் சிறப்புரையாற்றினார்கள். 

நிகழ்ச்சிக்கு வந்திருந்த சகோதரர்களின் நிகழ்ச்சி பற்றிய எண்ண ஓட்டத்தை அறியும் வகையில் அவர்களுக்கு ஒரு துண்டுசீட்டு வழங்கி அவர்களின் கருத்து கேட்கப்பட்டது. அதில் அனைத்து சகோதரர்களும் இந்த நிகழ்ச்சி பயனுள்ளதாக இருந்ததாகவும், இதுபோன்ற நிகழ்ச்சிகள் வாரம் ஒருமுறை அல்லது மாதத்தில் இருமுறையாவது நடத்தப்பட வேண்டும் என்று கருத்தை பதிவு செய்ததோடு,  சகோதர அமைப்புகளை அரவணைக்கும் இதஜ பணிகள் சிறக்கவும் துஆ செய்திருந்தார்கள். இறுதியாக இதஜ மண்டலத் துணைத்தலைவர் ஜாஹித் பிர்தவ்ஸ் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!

வியாழன், 10 பிப்ரவரி, 2011

வாராந்திர மார்க்க சொற்பொழிவு அழைப்பு!

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால்,
குர்'ஆன்- ஹதீஸ் வழிகாட்டுதலின் அடிப்படையில், [intj]தேசியத்தலைவர் எஸ்.எம்.பாக்கர்  அவர்களின் சீரிய தலைமையில் , இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் குவைத் மண்டலம்  வீரியமாக செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வாரம்  தோறும் நடைபெறும் மார்க்க சொற்பொழிவு வெள்ளிக்கிழமை[ 11 -02 -2011] மாலை 7 மணியளவில் நடைபெறவுள்ளது இன்ஷா அல்லாஹ். நிகழ்ச்சியில்,

சகோதரர் ஜாஹித் பிர்தவ்ஸ் அவர்கள்,
மவ்லிது மார்க்கமாகுமா..?என்ற தலைப்பில் 
 உரை நிகழ்த்துகிறார்கள்.

இடம்; அல்-ரூமி பில்டிங் கீழ்த்தளம், அலுவலக எண்;8 
[மீனா பஜார் அருகில்] மிர்காப் குவைத்.

அனைவரும் வருக; அல்லாஹ்வின் அருள் பெருக; 
அன்புடன் அழைக்கிறது; இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம்.
தொடர்புக்கு; 97659759 ,65120393 ,65727633 , 97102763 ,97465872 ,55890813 ,65531023 ,65569054

சனி, 5 பிப்ரவரி, 2011

குவைத் மண்டல தலைமையகத்தில் நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு!

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

குவைத் மண்டல இதஜ தலைமையகத்தில்  வாரம்தோறும் நடைபெற்று வரும், வாராந்திர  மார்க்க சொற்பொழிவு
நிகழ்ச்சி  வெள்ளிக்கிழமை[ 04 -02 -2011] மாலை 7 மணியளவில் சிறப்புடன் நடைபெற்றது.   நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய

சகோதரர் ஜாஹித் பிர்தவ்ஸ் அவர்கள்,
அமல் செய்வதால் ஆதாயம் யாருக்கு...? என்ற தலைப்பில்  உரை நிகத்தினார்.
அவர் தனது உரையில், இஸ்லாத்தின் அடிப்படை அம்சமான கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் உள்ளிட்ட கடமைகளை நாம் நிறைவேற்றுவதால், அல்லாஹ்வுக்கு எந்த அந்தஸ்தும் உயர்ந்துவிடுவதிலை. மாறாக இக்கடமைகளை நிறைவற்றுவதன்  மூலம் பயனடைவது மனிதர்களே! மனிதனுக்கே இம்மை-மறுமைக்கு பயனளிக்கும் என்ற கருத்தை முன்வைத்தார். அல்ஹம்துலில்லாஹ்.


தகவல்; முகவைஅப்பாஸ்,
மண்டலத்தலைவர்.

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

வாராந்திர மார்க்க சொற்பொழிவு அழைப்பு!

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால்,
குர்'ஆன்- ஹதீஸ் வழிகாட்டுதலின் அடிப்படையில், [intj]தேசியத்தலைவர் எஸ்.எம்.பாக்கர்  அவர்களின் சீரிய தலைமையில் , இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் குவைத் மண்டலம்  வீரியமாக செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வாரம்  தோறும் நடைபெறும் மார்க்க சொற்பொழிவு வெள்ளிக்கிழமை[ 04 -02 -2011] மாலை 7 மணியளவில் நடைபெறவுள்ளது இன்ஷா அல்லாஹ். நிகழ்ச்சியில்,

சகோதரர் ஜாஹித் பிர்தவ்ஸ் அவர்கள்,
அமல் செய்வதால் ஆதாயம் யாருக்கு...?என்ற தலைப்பிலும்,

சகோதரர் கண்டியூர் ராஜ்முஹம்மத்  அவர்கள்,
அமானிதம் பேணுவோம்!என்ற தலைப்பிலும்,  உரை நிகழ்த்துகிறார்கள்.

இடம்; அல்-ரூமி பில்டிங் கீழ்த்தளம், அலுவலக எண்;8 
[மீனா பஜார் அருகில்] மிர்காப் குவைத்.

அனைவரும் வருக; அல்லாஹ்வின் அருள் பெருக; 
அன்புடன் அழைக்கிறது; இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம்.
தொடர்புக்கு; 97659759 ,65120393 ,65727633 , 97102763 ,97465872 ,55890813 ,65531023 ,65569054

வியாழன், 3 பிப்ரவரி, 2011

[இதஜவின் சமூகத்தீமை எதிர்ப்பு மாதம். பிப்-2011] ஆபாசம் அது ஆபத்து!!

بسم الله الرحمن الرحيم

சமூகத்தில் புரையோடிப்போய் உள்ள சமூகத் தீமைகளை ஒழிக்கும் வகையில், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகம்,  பிப்ரவரி-2011 முழுவதும் சமூகத்தீமை எதிர்ப்பு மாதமாக அறிவித்து, சமூகத் தீமைகள் குறித்த பிரசுரங்கள்- தெருமுனைக் கூட்டங்கள் வாயிலாக, மக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்க தீர்மானித்துள்ளது. இதையொட்டி, 
 04 -02 -2011 வெள்ளியன்று நமது மண்டலம் சார்பாக விநியோகம் செய்த பிரசுரம் உங்கள் பார்வைக்கு;

சமூகத்தீமைகள் குறித்த கட்டுரைப் போட்டி!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மார்க்கம் மற்றும் சமுதாயப் பணிகளில் தன்னை அர்பணித்துக் கொண்ட நமது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இந்த பிப்ரவரி மாதத்தை சமூக தீமை எதிர்ப்பு மாதமாக கடைப்பிடிக்கிறது. அதற்கான கட்டுரைப் போட்டியினையும் அறிவித்துள்ளது. நீங்களும் கலந்து கொள்ளுங்கள்; பிறரையும்  கலந்துகொள்ளுமாறு தூண்டுங்கள். 

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

இனிய உதயம்...

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும்...
அன்பு சகோதர/சகோதரிகளுக்கு,
குர்'ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில், சகோதரர் எஸ்.எம். பாக்கர் அவர்களின் சீரிய  தலைமையில் செயல்பட்டுவரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலத்தின் அதிகாரப்பூர்வ  இணையதளம் இதுவாகும்.  இந்த தளத்தில், இதஜ வின் மார்க்க/சமூக பணிகள் குறித்த செய்திகளும் பொதுவான பயனுள்ள செய்திகளும் இடம்பெறும் இன்ஷா அல்லாஹ். அனைவரும் வருக;

அன்புடன்-முகவைஅப்பாஸ்.
குவைத் மண்டலத்தலைவர்.இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.
link;http://kuwaitintj.blogspot.com/