ஞாயிறு, 17 ஜூலை, 2011

குவைத்தில் இதஜ'வின் நிகழ்ச்சி; தவ்ஹீதின் எழுச்சி!


بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيم
ளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் வரலாறு காணாத  அளவுக்கு கோடை வெயிலின் தாக்கம் கிளப்பிய அனலோடு, அவதூறுவாதிகளின் அடிவயிற்றிலிருந்து கிளம்பிய பொறாமை அணல் மூச்சும் அணிசேர 50 டிகிரியை தாண்டியது வெப்பத்தின் அளவு.
 
இத்தகைய பொறமை அனலுக்கு  காரணம் என்ன? சுனாமி அலையையும் விஞ்சிய அவதூறு அலைகளில் இவர்கள் பதர்களைப் போல் அடித்து செல்லப்பட்டு  விடுவார்கள் என்று சிலர் போட்ட கணக்கு தப்புக் கணக்காகி, இந்தியா-இலங்கை மட்டுமன்றி துபாய்-குவைத் என அரபகங்களிலும் ஆலவிருட்சமாய் இதஜ வளர்ந்து நிற்பதே இதற்கு காரணம்.
 
இந்நிலையில் குவைத் மண்டலம் சார்பாக இதஜ தேசியத்தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகள் இருவர் பங்கேற்கும் மூன்று நாள் சிறப்பு நிகழ்ச்சி முறையே ஜூலை 14 -15 -16 ஆகிய தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்கு மக்கள் வந்துவிடக் கூடாது என்று நினைத்த சில குறுமதியாளர்கள்,  நிகழ்ச்சிக்காக  ஒட்டப்பட்ட பிரசுரங்களில் பெரும்பகுதியை கிழித்தார்கள்.  எத்தனையோ மார்க்க விரோத நிகழ்ச்சிகள் குறித்த நோட்டீஸ்களை கண்டுகொள்ளாத இவர்கள், தவ்ஹீத் பிரச்சார நிகழ்ச்சி நோட்டீசை கிழித்தெறிந்ததன் மூலம் தங்களின் தவ்ஹீத் முகமூடியையும் கிழித்துக் கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
 
இதற்கிடையில், 14 ம்  தேதி வியாழன்று மாலை ஆறு மணி அளவில் குவைத் விமான நிலையம் வந்திறங்கிய தேசியத்தலைவர் எஸ்.எம். பாக்கர், மாநில பொருளாளர் அபூபக்கர், மாநிலச் செயலாளர் செங்கிஸ்கான் ஆகியோரை வரவேற்ற மண்டல நிர்வாகிகள், அவர்களுக்கு ஓய்வளிக்க விரும்பாமல் நேரடியாக நிகழ்ச்சியின் களத்திற்கு கொண்டு வந்தார்கள்.
 
முதல் நிகழ்ச்சி மிர்காப் சிட்டியில் அமைந்துள்ள மண்ணு-சல்வா உணவகத்தின் முதல் தளத்தில் மக்ரிப் தொழுகைக்கு பின்  மண்டலத்தலைவர் முகவை அப்பாஸ் தலைமையேற்க, மண்டல துணைத்தலைவர் ஜாஹித் பிர்தவ்ஸின் இறைமறை ஓதலுடன் தொடங்கியது. இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் அழைப்பாளர் மவ்லவி அப்துல்காதிர் மன்பஈ அவர்களின் முதல் உரையுடன் தேசியத்தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர். அவர்கள் தங்களின் உரையில், ''எங்களது தாஃவா இலக்கு என்பது முஸ்லிமல்லாத மக்களுக்கு இஸ்லாத்தை எத்திவைப்பதே. திருமறையை சேர்ப்பிப்பதே. அந்த தாஃவா களத்தில் எங்களுக்கு போட்டியாக எவரும் இல்லை கிறிஸ்தவர்களை தவிர. எனவே அவதூறுகள் குறித்தெல்லாம் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை'' என்று முத்தாய்ப்பாக முன்வைத்தார்கள்.
 
நிகழ்ச்சியில் ஐந்து பேர் கலந்து கொண்டாலே அதிசயம் என்று ஆணவம் பேசியவர்களின் முகத்தை கறியை பூசும் வகையில் அரங்கம் நிறைந்ததோடு, மக்கள் நிற்கும்  அளவுக்கு அல்லாஹ் மக்களை கொண்டுவந்தான். இறுதியாக மண்டல துணைச்செயலாளர் சாதிக்சதாம் நன்றியுரையுடன் முதல்நாள் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.
 
இரண்டாம் நாள் 15 ம்  தேதி வெள்ளிக்கிழமை 'சமூகத்தீமை ஒழிப்பு மற்றும் சமுதய விழிப்புணர்வு கருத்தரங்கமாக ஏற்பாடு செய்யப்பட்ட  நிகழ்ச்சி மிர்காப் சிட்டியில் அமைந்துள்ள ஷாலிமார் உணவகத்தின் முதல் தளத்தில் மண்டலத்தலைவர் முகவை அப்பாஸ் தலைமையில், மண்டல துணைத்தலைவர் ஜாஹித் பிர்தவ்ஸின் இறைமறை ஓதலுடன் தொடங்கியது.
 
ஆரம்பமாக KIFF அமைப்பின் பிரதிநிதி அப்துல் அஜீஸின் உரையை தொடர்ந்து, தமுமுக பொதுச் செயலாளர் முஜிபுர்ரஹ்மான், இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் அழைப்பாளர் மவ்லவி அப்துல்காதிர் மன்பஈ, தமிழ்முஸ்லிம் கலாச்சார பேரவையின் காப்பாளர் முஹம்மது பாரூக் ஆகியோர் உரையாற்றினார். தொடர்ந்து தேசியத்தலைவரின் சிறப்புரையுடன் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு பின்பு நிகழ்ச்சி நிறைவுற்றது.
 
இந்நிகழ்ச்சியிலும் மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டதோடு, இடமின்றி திரும்பி சென்றனர். பெண்களுக்கு தனி இடம் உண்டு என நாம் அறிவிக்காத நிலையிலும் பெண்கள் சிலர் தன்னார்வத்துடன் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.
 
மூன்றாம் நாள் நிகழ்ச்சி 16 ம் தேதி ஷுஹதா பகுதியில் அமைந்துள்ள யூசுப் அல் கலீபி மஸ்ஜிதில் மண்டல துணைச்செயலாளர் மீரான் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில நிர்வாகிகள் அபூபக்கர் மற்றும் செங்கிஸ்கான் உரையாற்றினர். இப்பகுதி தமிழ் சகோதரர்கள் கணிசமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ். நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை மண்டல நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
 
தேசியத்தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகளின் இதர நிகழ்வுகள்;
  • ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையில், சுளைபிஹாத் என்ற பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய அடக்கஸ்தலம் சென்ற நிர்வாகிகள்,  அங்கு ஜனாஸா தொழுகையில் பங்கெடுத்தனர்.
  • 16 ம் தேதி மதியம் 2 மணி அளவில் குவைத்தில் இயங்கும் தமிழ் முஸ்லிம் கலாச்சார பேரவை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இதஜ நிர்வாகிகளுக்கான கவுரவிப்பு நிகழ்ச்சியில் தேசியத்தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் பாக்கர் உரையாற்றினார்.
  • 15 ம் தேதி நடைபெற்ற இதஜ'வின் கருத்தரங்கில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  1. வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக தனி அமைச்சகத்தை தமிழக அரசு ஏற்படுத்தவேண்டும்.
  2. குவைத் இந்திய தூதரகத்தில் தமிழில் வழிகாட்டியை நியமிக்கவேண்டும். அதோடு தமிழில் அறிவிப்பு பலகைகள் இடம்பெற செய்யவேண்டும்.
  3. சிறிய குற்றங்களில் ஈடுபட்டு சிறையில் வாடும் இந்தியர்களின் விடுதலைக்கு இந்திய வெளியுறவுத் துறையும்- குவைத் தூதரகமும் முயற்ச்சிக்க வேண்டும்.
  4. ஒப்பந்தப்படி இந்திய பணியாளர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறதா என்பதை இந்திய தூதரகம் நேரடியாக கம்பெனிகளுக்கு சென்று ஆய்வு செய்யவேண்டும்.
  5. மத்திய அரசு உடனடியாக முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கவேண்டும்.
  6. தமிழகத்தில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டின் அளவு உயர்த்தப்பட வேண்டும்.
  7. தமிழகத்தில் அபகரிக்கப்பட்ட வக்பு நிலங்களை மீட்க காவல்துறையில் தனிப் பிரிவை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.
  8. தமிழகத்தில் முஸ்லிம் அமைச்சர்களை அதிகப்படுத்த வேண்டும்.
  9. இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கு அமுல்படுத்த வேண்டும்.
  10. பாபர் மஸ்ஜித் வழக்கில் விரைந்து தீர்ப்பளித்து, இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைப்பதோடு அத்வானி உள்ளிட்ட 68 குற்றவாளிகளையும் தண்டிக்கவேண்டும்.
-முகவைஅப்பாஸ்.
மண்டலத்தலைவர் இதஜ-குவைத்.





















 

ஞாயிறு, 10 ஜூலை, 2011

குவைத்தில் இதஜ தேசியத் தலைவர்&மாநில நிர்வாகிகள் கலந்து கொள்ளும் 3 வது சிறப்பு நிகழ்ச்சி.

குவைத்தில் இதஜ தேசியத் தலைவர்&மாநில நிர்வாகிகள் கலந்து கொள்ளும் 3 வது சிறப்பு நிகழ்ச்சி.

 
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيم
كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்;.   (3:110)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!
 
நாள்; 16 -07 -2011 சனிக்கிழமை  மக்ரிபுக்குப் பின் [இன்ஷா அல்லாஹ்]
இடம்;  மஸ்ஜித் யூஸுப் அல் கலீபி.
சாரா- 1 , கத்தா- 4 .
புதிய மக்பர் மற்றும் புதிய ஜம்மிய்யா அருகில்,
ஷுஹதா ஏரியா.
 
சிறப்புரையாற்றுவோர்;
சகோ; எஸ்.எம். பாக்கர் அவர்கள். தேசியத் தலைவர் இதஜ.
சகோ; அபூபக்கர் தொண்டியப்பா அவர்கள்.  மாநில பொருளாளர் இதஜ.
சகோ; செங்கிஸ்கான் அவர்கள். மாநிலச்செயலாளர் இதஜ.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
அனைவரும் வருக!                                                                 அல்லாஹ்வின் அருள் பெருக!! 
 
அழைப்பின்  மகிழ்வில்;   جمعية التوحيد-الهند‎ ‎
இந்திய தவ்ஹீத் ஜமாஅத். குவைத் மண்டலம்.
தொடர்புக்கு; தொடர்புக்கு; 65653431,97659759 ,65120393 ,
97102763 ,97465872 ,55890813 .

வெள்ளி, 8 ஜூலை, 2011

குவைத்தில் இதஜ தேசியத் தலைவர்&மாநில நிர்வாகிகள் கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சிகள்.

 

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيم

كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்;.   (3:110)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
[முதல் நாள் நிகழ்ச்சி]
இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!
 
நாள்; 14 -07 -2011 வியாழக்கிழமை மக்ரிபுக்குப் பின் [இன்ஷா அல்லாஹ்] இடம்; மண்ணுசல்வா உணவகம் முதல்தளம். மிர்காப்.
 
சிறப்புரையாற்றுவோர்;
சகோ; எஸ்.எம். பாக்கர் அவர்கள். தேசியத் தலைவர் இதஜ.
சகோ; அபூபக்கர் தொண்டியப்பா அவர்கள்.  மாநில பொருளாளர் இதஜ.
சகோ; செங்கிஸ்கான் அவர்கள். மாநிலச்செயலாளர் இதஜ.
சகோ; அப்துல்காதிர் மன்பஈ.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
[இரண்டாம் நாள் நிகழ்ச்சி]
மாபெரும் சமூகத்தீமை ஒழிப்பு மற்றும் சமுதாய விழிப்புணர்வுக் கருத்தரங்கம்.
 
நாள்; 15 -07 -2011 வெள்ளிக்கிழமை  மக்ரிபுக்குப் பின் [இன்ஷா அல்லாஹ்]
இடம்; நியூ ஷாலிமார் உணவகம் முதல்தளம். [ரவுண்டானா மஸ்ஜித் அருகில்] மிர்காப்.
 
உரையாற்றுவோர்;
 
சகோ; அப்துல்காதிர் மன்பஈ. அவர்கள்- அழைப்பாளர் இஸ்லாமிய வழிகாட்டி மையம்.
தலைப்பு; மதுவும்-சூதாட்டமும்.
 
சகோ; முஹம்மது பந்தர் R . முஹம்மது பாரூக் அவர்கள்- காப்பாளர் TMCA  மற்றும்  தலைவர் காயிதே மில்லத் பேரவை. 
தலைப்பு; வட்டியும்- சுரண்டலும்.
 
சகோ; அப்துல் அஜீஸ் அவர்கள்- KIFF
தலைப்பு; ஆபாசமும்-விபச்சாரமும்.
 
சகோ; முஜிபுர்ரஹ்மான் அவர்கள்- பொதுச்செயலாளர் தமுமுக.
தலைப்பு; லஞ்சமும்-ஊழலும்.
 
இவர்களுடன் சகோ; எஸ்.எம். ஹைதர்அலி அவர்கள். சேர்மன் டிவிஎஸ் கார்கோ.
 
சிறப்புரையாற்றுவோர்;
சகோ; எஸ்.எம். பாக்கர் அவர்கள். தேசியத் தலைவர் இதஜ.
சகோ; அபூபக்கர் தொண்டியப்பா அவர்கள் மாநில பொருளாளர் இதஜ.
சகோ; செங்கிஸ்கான் அவர்கள்.  மாநிலச்செயலாளர் இதஜ.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அனைவரும் வருக!                                                                 அல்லாஹ்வின் அருள் பெருக!! 
 
அழைப்பின்  மகிழ்வில்;   جمعية التوحيد-الهند‎ ‎
இந்திய தவ்ஹீத் ஜமாஅத். குவைத் மண்டலம்.
தொடர்புக்கு; தொடர்புக்கு; 65653431,97659759 ,65120393 ,
97102763 ,97465872 ,55890813 . 


__._,_.___

வெள்ளி, 1 ஜூலை, 2011

'அவன்-இவன்' பாலா மீது மீண்டும் புகார்.

மீபத்தில் வெளியான, "அவன் இவன்' படத்தில்,
குர்பானி கடமையை இழிவுபடுத்திய இயக்குனர் பாலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மதுரை கலெக்டர் சகாயம், போலீஸ் துணை கமிஷனர் செந்தில்குமாரிடம், தேசிய லீக் கட்சி நிர்வாகிகள் மாநில அமைப்பு செயலர் சீனி அகமது, நகர் தலைவர் ஜெய்லானி ஆகியோர் கடந்த 27 ம் தேதி புகார் மனு அளித்தது நினைவிருக்கலாம்.

இப்போது தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் மாநில பொதுச் செயலாளர் அக்ரம்கான் சென்னை போலீஸ் கமிஷனரிடம்  கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

 
சமீபத்தில் வெளிவந்து உலகமெங்கும் திரையிடப்பட்டுள்ள அவன்-இவன் திரைப்படத்தில் முஸ்லிம்கள் குர்பாணி கொடுக்கும் புனிதச் செயலை மாபெரும் குற்றச்செயலாக சித்தரித்து காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளன. இது அரசியல் சாசனத்திற்கு எதிரான குற்ற செயலாகும். முஸ்லிம் சமுதாய மக்களை புண்படுத்துவதாக உள்ளது.  
 
எனவே அவன்-இவன் படத்தின் இயக்குனர் பாலா மற்றும் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ். அகோரம் ஆகியோர் மீது மதநம்பிக்கையை புண்படுத்துதல், மத நம்பிக்கை, செயல்பாட்டை குற்றச்செயல்போல் சித்தரித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

குவைத் இதஜ'வின் வாராந்திர பிரசுரம்! [01-07-2011]

சிறுபான்மையினருக்கு கல்வி மறுக்கப்பட்டால் 3 ஆண்டு ஜெயில்; முஸ்லிம்களை ஏமாற்ற மத்திய அரசின் புதிய மசோதா..?

சிறுபான்மையினருக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டு வசதி மறுக்கப்பட கூடாது என்று சச்சார் கமிட்டியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த கமிட்டியின் அறிக்கையை நடைமுறை படுத்த வகை செய்யும் வரைவு மசோதா ஒன்றை, மத்திய அரசு தயாரித்து வருகிறது. இந்த மசோதாவின் படி, சிறுபான்மையினருக்கு கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டு வசதியை மறுப்போருக்கு 3 ஆண்டு வரை ஜெயில் தண்டனை அளிக்க முடியும். மேலும் தவறு செய்வோருக்கு ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்க முடியும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை எடுத்து வருகிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
சச்சார் கமிட்டியின் அறிக்கை மத்திய அரசிடம் கையளிக்கப்பட்டு  ஆண்டுகள் பல கடந்த பின்னும், அந்த அறிக்கையில் அவர் வலியுறுத்திய முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீடு குறித்து சிறு துரும்பையும் அசைக்காத மத்திய அரசு, சிறுபான்மை மக்களை ஏமாற்றும் வகையில் மேற்கண்ட மசோதாக்களை தாக்கல் செய்வதால் முஸ்லிம்களுக்கு எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. முஸ்லிம்களின் தனி பிரதித்துவ இடஒதுகீட்டை மத்திய அரசு வழங்குவதே ஒரே தீர்வாகும். அதை செய்யாமல் கண்கட்டி வித்தைகளை காட்டி முஸ்லிம்களை ஏமாற்ற ஆளும் காங்கிரசும், ஆதரவளிக்கும் கட்சிகளும் நினைத்தால், தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஏற்பட்ட நிலையை  மத்தியிலும் ஏற்படுத்த முஸ்லிம்கள் தயங்கமாட்டார்கள் என்பதை மத்திய அரசு உடனடியாக உணர்ந்து கொள்ளுதல் பயனளிக்கும்.  

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்; மு.க.வுக்கும் இது புரியும்!

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் காரணமாக கனிமொழி எம்.பி. கைதாகி, ஒரு மாதம் முடிந்த நிலையில்,  திகார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள அவர் ஜாமீனில் விடக்கோரி தாக்கல் செய்த மனுக்கள்  சி.பி.ஐ. சிறப்புக் கோர்ட்டிலும், டெல்லி ஐகோர்ட்டிலும்  பின்னர் சுப்ரீம் கோர்ட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்டதால் கனிமொழியின் சிறைவாசம் தொடர்கதையாகியுள்ளது. இதையடுத்து அதிர்சியடைந்த திமுக தலைவரும் கனிமொழியின் தந்தையுமான கருணாநிதி ஓடோடி சென்று தனது மகளை பார்த்து வந்துள்ளார். தந்து மகளுடனான அவரது சந்திப்பு குறித்து கேட்கப்பட கேள்விக்கு,
 
'திகார் சிறைச்சாலையிலே எப்படி இருப்பார்களோ அந்த அளவுக்கு வாடிக் கொண்டிருக்கின்றார். சிறிதும் மனிதாபிமானமற்ற முறையில் கனிமொழியும், சரத்குமாரும் அந்தச் சிறையிலே அடைக்கப் பட்டிருக்கிறார்கள். கனிமொழி மீது போடப்பட்ட வழக்கு, குற்றச்சாட்டு இவைகள் எல்லாமே பத்திரிகைகளிலே எழுதிய அவதூறுச் செய்திகளின் அடிப்படையில் போடப்பட்ட வழக்குகள்தான். அப்படி அவதூறாக வெளியிடப்பட்ட செய்திகளை உண்மைதான் என்று நிரூபிப்பதுதான் இன்றைய தங்களுடைய கடமை என்று சி.பி.ஐ. அதிகாரிகள் கருதுகிறார்கள் என்று நினைக்கிறேன்.
திகார் சிறையில் கனிமொழிக்கு அந்தச்சூழல் ஒத்துவராமல் உடம்பெல்லாம் வீக்கங்களாகவும், கொப்பளங்களாகவும் வந்து மிகுந்த அவஸ்தையில் இருக்கிறார். அதேபோலத்தான் சரத்குமாரின் உடல் நிலையும் மிகவும் பலவீனமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
 
கனிமொழி கைது என்பது ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்ததல்ல. மாறாக பத்திரிக்கைகளில் எழுதிய அவதூறு செய்திகளின் அடிப்படையில்தான் கைது செய்யப்பட்டார் என்று கூறும் கலைஞர் அவர்களே! சற்று பின்னோக்கி திரும்பி பாருங்கள். இன்று உங்கள் ஒரு மகளின் சிறைவாசத்திற்கு உள்ளம் குமுறும் நீங்கள், ஒரு குண்டு வெடிப்பை காரணமாக வைத்து ஒரு சமுதாயத்தையே குற்றவாளியாக்கி குமுறச்  செய்தீர்களே! கோவை குண்டுவெடிப்பையொட்டி குற்றவாளிகள் என்று நீங்கள் கைது செய்த அனைவரையும் ஆதாரத்தின் அடிப்படையில் தான் கைது செய்தீர்களா? மதானி என்று ஒருவரை கைது செய்து பத்து ஆண்டுகள் அடைத்தீர்களே! அவரும் உங்கள் மகளை போன்று பலமுறை ஜாமீன் மனு தாக்கல் செய்தாரே! அப்போதெல்லாம் இன்றைக்கு சி.பி. ஐ. உங்கள் மகள் மீதான வழக்கில் ஜாமீன் மறுப்பதற்கு காரணமாக கூறும், ''அசல் ஆவணங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை அழித்து விடுவார். எனவே அவரை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது' என்ற இதே வாசகத்தை கொஞ்சம் மாற்றி, இவரை ஜாமீனில் விட்டால் சாட்சியை கலைத்து விடுவார் என்று கோர்ட்டில் உங்கள் அரசு   PP   சொல்லவில்லையா? மதானி ஒரு நிரபராதி என்று கோர்ட்டு தானாக விடுதலை செய்யும் வரை அவருக்கு ஜாமீன் கிடைக்காமல் பார்த்துக் கொண்டீர்களே! மதானி ஜாமீன்  விஷயத்தில் ஜெயலலிதாவின்  பாதையில்  பயனித்தீர்களே!
ஒரு மாத காலம்  சிறையில் உங்கள் மகள் இருப்பதால் துடிக்கும் உங்களுக்கு, பத்து வருடம் சிறையில் இருந்த மதானியின் குடும்பத்தின் வலி இப்போது புரிகிறதா கலைஞரே?
 
கனிமொழிக்கு அந்தச்சூழல் ஒத்துவராமல் உடம்பெல்லாம் வீக்கங்களாகவும், கொப்பளங்களாகவும் வந்து மிகுந்த அவஸ்தையில் இருக்கிறார் என்று உருகும் கலைஞரே! அன்று தனது உடல் நிலையை காரணம் காட்டி சிகிச்சைக்காக ஜாமீன் கேட்ட போதும் மதானிக்கு ஜெயலலிதாவும்-தொடர்ந்து நீங்களும் ஜாமீன் மறுத்தீர்களே! 
 
கனிமொழி தன் மகனை பிரிந்துள்ளார். எனவே கருணை அடிப்படையில் கனிமொழியை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் மூலம் வாதம் வைக்கும் கலைஞரே, ஆயிஷா என்ற பெண் தீவிரவாதியை தேடுகிறோம் என்ற பெயரில் முஸ்லிம்கள் வீட்டு படுக்கை அறைவரை வந்து சல்லடை போட்டார்களே, பெண்கள் மதரசாக்களில் சோதனை என்ற பெயரில் அத்துமீறினார்களே, பர்தா அணிந்தபெண்களெல்லாம் ஆயிசாவோ என சந்தேகத்தோடு சோதித்தார்களே உங்கள் காவல்துறையினர் அந்த ஆயிஷா ஞாபகமிருக்கிறதா.. கலைஞரே?
 
சங்கீதாவாக இருந்த அப்பெண்  ஆயிஷாவாக மாறி, ஒரு முஸ்லிம் வாலிபரை மணக்க, அவர்களுக்கு அல் உம்மா ரபீக்  என்ற சகோதரர்   அடைக்கலம் தந்து உதவி செய்ய, அதையே காரணமாக்கி அந்த தம்பதியை கோவை குண்டுவெடிப்பு வழக்கில் உங்கள் காவல்துறை உள்ளே தள்ள, மூன்று ஆண்டுகள பிணையில் கூட வரமுடியாமல் அந்த தம்பதிகள் தனி தனி செல்லில் வாட, அவர்களது பிள்ளை பெற்றோரை பிரிந்து அனாதையாக வளர்ந்தானே! அப்போது அந்த ஆயிஷாவுக்கும் தாய்ப்பாசம் இருந்தது உங்களுக்கு தெரியவில்லையா கலைஞரே!
 
அன்று மதானி பத்து ஆண்டுகளாக தனது பிள்ளைகளை பிரிந்த வேதனை இப்போது புரிகிறதா கலைஞரே! மதானி மட்டுமல்ல;  உங்களால் கைது செய்யப்பட்ட ஒவ்வொரு அப்பாவியும் தனது பிள்ளையை-மனைவி- தாய்- தந்தையை பிரிந்து வாடினார்களே! அவர்களுக்கெல்லாம் ஜாமீன் கிடைக்க நீங்கள் அதாவது உங்கள் அரசு தடையாக நின்றதே! அன்றைக்கு அவர்களும் அவர்களது குடும்பமும் இப்படித்தானே துடித்திருக்கும்?
 
ஒரு குண்டுவெடிப்பிற்காக சம்மந்தப்பட்டவர்கள்  என்று கூறப்படும் சிலரோடு, சம்மந்தமில்லாத பலரை நள்ளிரவில் கூட வீடு புகுந்து உங்கள் காவல்துறை கைது செய்தபோது சம்மந்தப்பட்ட முஸ்லிம்கள் துடித்த வேதனையை உங்களை நள்ளிரவில் கைது செய்தபோது உணர்ந்திருப்பீர்கள். செய்யாத குற்றத்திற்காக சிறையில் வாடும்  அப்பாவி கைதிகளின் பிள்ளைகளும்- குடும்பத்தாரும் படும் வேதனையை கனிமொழி கைதின் மூலம் உணர்ந்திருப்பீர்கள். ஆம் கலைஞரே! 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்'  தானே!
 

அரசியலில் நிரந்தர நண்பனுமல்ல- பகைவனுமல்ல என்பதை நிரூபித்த ரங்கசாமி!

ரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா என்ற வாசகம் பெரும்பாலோர் அடிக்கடி உச்சரிப்பதாகும். அதை அட்சரம் பிசகாமல் காட்டியுள்ளார் புதுவை முதல்வர் ரங்கசாமி. தேர்தலுக்கு முன்பாக காங்கிரசிலிருந்து விலகிய அவர், என்.ஆர். காங்கிரஸ் என தனிக்கட்சி தொடங்கி, எனது கட்சி யாருடனும் கூட்டணி சேராது என்று சொன்னார். சொல்லிய அடுத்த நாளே அந்தர் பல்டியடித்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து, கூட்டணியும் அமைத்துக் கொண்டார். அப்போதே இவர் மீதான நம்பகத்தன்மை ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது. பின்பு தேர்தல் களத்தில் இவருக்காக பிரச்சாரம் மேற்கொண்ட ஜெயலலிதா, என்.ஆர். காங்கிரஸ்-அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால், ரங்கசாமி தான் முதல்வர் என்று பெருந்தன்மையாக அறிவித்தார்.
இதில் 17தொகுதிகளில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் 15இடங்களில் வெற்றிபெற்றது. 10இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க. 5 இடங்களை பிடித்தது.
 
இந்தநிலையில் 2தொகுதிகளில் போட்டியிட்ட ரங்கசாமி தனது இந்திராநகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பலம் 14ஆக குறைந்தது. எனவே போதிய பலமில்லாததால் அதிமுக ஆதரவுடன் கூட்டணி மந்திரிசபை அமைப்பார் என பரவலாக எதிர்பார்த்த நிலையில், அ.தி.மு.க. தயவு இல்லாமல் சுயேச்சை ஆதரவுடன் ரங்கசாமி ஆட்சி அமைத்தார். அதுவும் அதிமுக வேட்பாளரை தோற்கடித்த சுயேட்சை எம்.எல்.ஏ ஆதரவை பெற்றதும், அதிமுகவை புறந்தள்ளியதும்                      தமிழக முதல்அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடும் கோபத்தை தரவே, 'ரங்கசாமி துரோகம் செய்து விட்டார்' என்று கடுமையாக விமர்சித்தார். ஆனாலும் அவரது விமர்சனம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
 
ஆனால், இப்போது எந்த காங்கிரஸை விட்டு வெளியேறி தனிக்கட்சி கண்டாரோ, காங்கிரசுக்கு எதிரான அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தல் களம் கண்டாரோ, அந்த காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியாவை இவர் தில்லியில் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது அரசு பதவியேற்று இரு மாதங்களை தொடும் நிலையில் இன்னும் முழுமையாக மந்திரிகளை நியமிக்கவில்லை என்பதோடு சபாநாயகர் தேர்தலைக் கூட  இரு தினங்களுக்கு முன் நடத்தியுள்ள ரங்கசாமி, சோனியாவை சந்தித்தது அக்கட்சியின் ஆதரவை பெறுவதற்கே என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
 
அதிமுக எதிர்கட்சியாக செயல்படத் தொடங்கி விட்ட நிலையில், சபாநாயகர் தேர்தல் உள்பட பல்வேறு விஷயங்களில் ஆளும்கட்சியின் பலத்தை எதிர்க்கட்சிகள் சோதிக்ககூடும் என்பதால்தான் சோனியாவை சந்தித்தார் என்றும், ஆனால் எதிர்பாராத விதமாக சபாநாயகர் தேர்தலில் எதிர்கட்சிகள் பங்கேற்கவில்லை என்பதால் முதல் சோதனையில் முதல்வர் ரங்கசாமி வெற்றி பெற்று விட்டாலும்,  என்.ஆர்.காங்கிரசுக்கு 14எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில் காங்கிரசுக்கு  உள்ள  7 பேரின் ஆதரவு கிடைத்தால் ஆட்சிக்கு பலம் என அவர் கருதுகிறார். மேலும் மத்திய அரசு ஆதரவு இருந்தால்தான் ஆட்சியை நிம்மதியாக நடத்த முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு, கட்சியுடன் இணக்கமாக நடந்துகொள்ள முதல்அமைச்சர் ரங்கசாமி முடிவு செய்துள்ளார் என்பதுதான் சோனியா சந்திப்பின் மூலம் விளங்கமுடிகிறது என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.
 
இதன்படி காங்கிரஸ் ஆதரவுடன் ரங்கசாமி தனது அரசை நடத்த முற்படுவாரானால், ஜெயலலிதா கூறியபடி அவர் துரோகம் செய்துவிட்டார் அதிமுகவுக்கு மட்டுமல்ல; புதுவை மக்களுக்கும் தான்.




பாதுகாப்பு ஒத்திகையா? மதத் துவேஷ ஒத்திகையா?

ந்தியாவின் முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து,தமிழகத்தில் தீவிரவாத தாக்குதலை முறியடிப்பது குறித்த ஒத்திகை நடத்த போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி, தமிழகம் முழுவதும் 'ஆபரேஷன் ஹம்லா' என்ற பெயரில் 48 மணி நேர சோதனையை போலீசார் நடத்தினார்கள். அந்த ஒத்திகையில் கூட மதத்துவேஷம் வெளிப்பட்டதைக் காண முடிந்தது. பொதுவாக தீவிரவாதிகளுக்கு மதம் என்பது இல்லை. கோயிலை தாக்க முற்படும் தீவிரவாதி இருக்கிறான் என்றால், மஸ்ஜிதையும்-சர்ச்சையும் தாக்கும் எண்ணமுள்ள தீவிரவாதியும் நாட்டில் இருக்கவே செய்வான். இப்படிப்பட்ட வழிபாட்டு தளங்களை தாக்கும் முயற்ச்சியை முறியடிப்பது காவல்துறை ஒத்திகையின் நோக்கம் என்றால், அந்த ஒத்திகை கோயிலில் மட்டுமன்றி, மசூதி- சர்ச் ஆகியவற்றிலும் நடத்தப் பட்டிருக்க வேண்டும். ஆனால் காவல்துறையோ இந்திய நாட்டில் கோயில்களுக்கு மட்டுமே தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பது போன்ற தோற்றத்தை காட்டும் வகையில் கோயிலில் மட்டும் ஒத்திகை நடத்தியுள்ளது.
 
திருச்செந்தூர் கோயிலில்  5இடத்தில் வெடி குண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக கூறி, அவற்றை அகற்ற காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து  வெடிகுண்டு குழு ஆய்வாளர்  மற்றும் மோப்ப நாய் சகிதமாக அதிரடியாக கோயிலுக்குள் நுழைந்தனர் காவல்துறையினர். இதனால்   கோயிலுக்கு வந்திருந்தவர்கள் அதிர்ச்சியடந்தனர். அவர்களைகோயிலிலிருந்து வெளியேற்றினர். ஒருமணி நேர தேடுதலுக்குப்பின் வெடிகுண்டு ஒன்றை காவல்துறையினர்  கைப்பற்றினர்.பலமணி நேர தேடுதலுக்குப்பிறகு வெடிகுண்டுகளை மறைத்து வைத்திருந்த இடம் தெரியவந்தது. ஆபரேஷன் ஹம்லா என்ற இந்த சோதனை வெறும் ஒத்திகை என தெரிந்ததால் பக்தர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர் என்கிறது செய்தி.
 
ஏற்கனவே சங்கபரிவாரங்கள் கோயிலை தாக்க முஸ்லிம் தீவிரவாதிகள் சதி என்று ஓயாமல் ஒப்பாரி வைப்பதும்-  ஊடகங்கள் தங்கள் பங்கிற்கு, அந்த கோயிலை தகர்க்க சதி- இந்த கோயிலை தகர்க்க சதி என்ற பொய்யான செய்திகள் வெளியிடுவதன் மூலமும் முஸ்லிம்கள் கோயிலை தகர்க்கும் எண்ணமுடையவர்கள் என்ற சிந்தனையை  மக்கள் மனதில் பதிய வைத்துள்ள நிலையில், இந்த ஒத்திகை மூலம் காவல்துறையும் தன் பங்குக்கு முஸ்லிம்கள் மீதான துவேஷ சிந்தனைக்கு வித்திட்டுள்ளதாகவே  மக்களால் கருதப்படுகிறது. ஆனால்  உண்மையில் இதுவரை இந்தியாவில் எந்த கோயிலிலும் தீவிரவாதிகள் தாக்கியதாக சான்றுகள் இல்லை. ஆனால் மசூதிகளும்-தர்காக்களும்-சர்ச்சுகளும் இந்துத்தவா பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட    வரலாறுதான் உண்டு. எனவே இனியாகிலும்  தமிழக காவல்துறை நடுநிலை பேணட்டும்.