வெள்ளி, 22 ஜூலை, 2011

கழகத்திற்கோர் 'எமெர்ஜென்சி'; கலக்கத்தில் கருணாநிதி..?

மிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் குறித்து வரும் புகார் குறித்து நடவடிக்கை  மேற்கொள்ள காவல்துறையில் தனிப் பிரிவை ஏற்படுத்தியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதையடுத்து அடுத்தடுத்து நில மோசடி வழக்கில் திமுக புள்ளிகள் கைதாவது திமுக தலைவருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது போல் தெரிகிறது. ''ஜெயலலிதா ஆட்சியில் காலையில் ஒரு வழக்கு மாலையில் ஒரு வழக்கு போடுவதால் தி.மு.க.வினர் மீது போடப்படும் வழக்குகளில் வழக்கறிஞர் அணிசார்பில் அவர்களுக்கு உதவவேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நகர்ப்புறங்களில், பட்டிதொட்டிகளில் ஆங்காங்கு பரவிக் கிடக்கின்ற கழக அமைப்புகளில் விரிசல் உண்டாக்க வேண்டுமென்பதற்காகவும், அந்த அமைப்புகளை நடத்துகின்ற கழகத் தோழர்களிடத்தில் பீதியை உண்டாக்க வேண்டுமென்பதற்காகவும், இப்போது நடைபெறுகின்ற அ.தி.மு.க. ஆட்சியில் நாள்தோறும் காலையிலே ஒன்று, பிற்பகலிலே ஒன்று, மாலையில் ஒன்று என்று வழக்குகள் போடப்பட்டு வருகின்றன என்று கூறியுள்ளதோடு, தி.மு.க. ஆட்சியில் இது போன்ற தவிர்க்க முடியாத வழக்குகளைப் போடுவதாக இருந்தாலும் அன்றைக்கு இருந்த காவல் துறையினர், உடனடியாக அந்தப்பணிகளுக்கு பாய்ந்து செல்லாமல், கூடுமானவரையில் அவர்களுக்கு நேரம் கொடுத்து ஒரு முறைக்கு இருமுறை எச்சரித்து அதற்குப் பிறகே நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.
 
இதன் மூலம் கருணாநிதி அவர்கள் தனது ஆட்சியில் தவறு செய்பவர்களை உடடியாக கைது செய்யாமல் அவர்களை எச்சரித்து திருந்துவதற்கு வாய்பளித்தாக காட்ட முனைகிறார். கருணாநிதி அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். ஒருவன் சிகரெட் அடிக்கிறான் என்றால் அவனை சில  முறை எச்சரித்து திருத்த முயற்சிக்கலாம். ஒருவன் தண்ணி அடிக்கிறான் என்றால் அவனுக்கும் எச்சரிக்கை செய்து திருந்த வாய்ப்பளிக்கலாம். ஆனால் ஒருவன் அடுத்தவனை மிரட்டியோ, அல்லது தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தோ ஒருவனுடைய இடத்தை ஆக்கிரமித்தால், அல்லது அடிமாட்டு விலைக்கு வாங்கினால் பாதிக்கப்படவன் கண்ணீரும் கம்பலையுமாக வந்து நின்றால், அவனுக்கு உரிய நியாயம் கிடைக்க சம்மந்தப்பட்ட அபகரிப்பாளரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமா? அல்லது அவனை அழைத்து , ''இந்த ஆளு நிலத்த அபகரிச்சதோட நிறுத்திக்க; இனிமே யாரு நிலத்திலயாச்சும் கை வச்ச... ''ன்னு எச்சரித்து விட்டுறனுமா? என்ன சொல்ல வர்றீங்க கலைஞரே! 
 
அடுத்து, ''நம்முடைய கழகத் தோழர்களுக்கு பாதுகாப்பாக கழகத்தின் சட்டத்துறையினுடைய துணை உண்டு என்பதை எடுத்துக்காட்டுவதற்காக நம்முடைய கழகத்தில் வழக்கறிஞர்கள் அணி என்று ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. அந்த அணி இப்போது பணியாற்றுகிறதா இல்லையா என்பது நான் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கின்றது. அந்த அணி தலைமைக் கழகத்திலே செயல்படுவதாகக் கூறப்படுகிறது.  நம்முடைய கழக வழக்கறிஞர்கள், கழகத்தினர் மீது போடப்படுகின்ற வழக்குகளையெல்லாம் சந்தித்து, கழக வழக்கறிஞர் அணியின் சார்பாக அவர்களுக்கு உதவி புரியவேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். அவர்களும் அந்த முயற்சியிலே ஈடுபடுவார்கள் என்று நம்புகிறேன். ஆம்; நம்பியிருக்கிறேன்!''என்று கலைஞர் விரகிதியோடு கூறுவதை பார்க்கும் போது, ஒன்றை விளங்கிக் கொள்ள முடிகிறது. அதாவது தேர்தல் தோல்விக்குப் பின் கழகம் கலைஞரின் கட்டுப்பாட்டில் இல்லை. அல்லது கழகத்தின் பணி மந்தமாக  உள்ளது  என்பதைத்தான் கலைஞரின் வழக்கறிஞர்கள் அணி குறித்த கண்ணோட்டம் சொல்லாமல் சொல்கிறது.
 
எது எப்படியோ, மத்திய அரசால் குடும்ப உறுப்பினர்கள் உள்ளே போக, மாநில அரசின் நடவடிக்கையால் கழக உறுப்பினர்கள் உள்ளே போக, கலைஞர் வார்த்தையில் சொன்னால் திமுகவுக்கு இது மீண்டும் ஒரு 'எமெர்ஜென்சி' தான். இதிலிருந்து கழகம் மீளுமா? கரையுமா என்பதுதான் இப்போது மக்களின் கூரிய பார்வையின் தேடலாக உள்ளது.
 
 

குடிமக்கள் அரசா? 'குடிமகன்' களின் அரசா?

க்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு மக்கள் நலப்பணிகளை மட்டுமே கவனத்தில் கொள்ளவேண்டும். அந்த மக்கள் நலப் பணிகளுக்கு தேவையான நிதிகளை உரிய நியாயமான வரிவிதிப்பின் மூலம் பெற்று, அதை சரியான வகையில் செலவிடுவதில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் அரசுகளோ மக்களின் வரிப்பணத்தில் மட்டுமன்றி உலக வங்கியிலிருந்து பெரும் கடன்களின் மூலம் கிடைக்கும் தொகைகளை தேவையற்ற இலவசங்களை வழங்குவதற்கும், தமிழில் திரைப்படத்திற்கு பெயர் வைத்தால் வரிவிலக்கு என்பது போன்றவைகளுக்கும், ஆடம்பர அரசியலுக்கும் பயன்படுத்தி வருகின்றன. இவைகளில் அரசின் கஜானா காலியாகி விடுவதால், நாட்டின் மூலாதாரப்  பணிகளுக்கு மேலும் கடன்களை வாங்குவதோடு, டாஸ்மாக் எனும் சாராய வியாபாரத்தை செய்தும் கஜானாவை நிறைக்கிறது. 
 
தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மாஸ்மாக் அரசு நிறுவனம் நடத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் 6696 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி வருமானம் இதன் மூலம் கிடைக்கிறது. மேலும், தற்போது சரக்குகளின் விலையையும் உயர்த்தி 'குடிமகன்' களை குடிக்காமலேயே தள்ளாட வைத்துள்ளது.  குவாட்டர் பாட்டில் ரூ.5, ஆப் பாட்டில் ரூ.10, முழுபாட்டில் ரூ.20, பீர் வகைகள் ரூ.5 என விலை உயர்த்தப்பட்டுள்ளது. விஸ்கி, பிராந்தி, ரம், பீர் உள்ளிட்ட அனைத்து மது பானங்களின் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.   இந்த விலை உயர்வினால் குடிப்பவர்களின் எண்ணிக்கை ஒரு போதும் குறையப்போவதில்லை. மாறாக குடும்பத்திற்கு குடிமகன்கள் வழங்கும் தொகைதான் குறைய வாய்ப்புண்டு. அடுத்து இன்னும் ஒரு அதிர்ச்சியான செய்தி என்னவெனில், நாடெங்கும் பூரண  மதுவிலக்கு வேண்டும் என்று சில அரசியல் கட்சிகளும், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் போன்ற சமுதாய நலன் நாடும் இயக்கங்களும், சமூக ஆர்வலர்களுக்கும் குரல் கொடுத்து வரும் நிலையில்,
 
மேலும் 280 மதுக்கடைகளை திறக்க டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும்,  இது தவிர எலைட் ஷாப் எலைட் பார் என்று சொல்லக்கூடிய புதிய நவீன கடைகளும் திறக்கவுள்ளதாகவும், இவைகளில் பார் வசதியுடன் உயர்தர மதுபானங்கள், வெளிநாட்டு மதுவகைகள் விற்க உள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
 
ஏற்கனவே பெட்டிக்கடைகள் போல் அரசின் மதுக்கடையான டாஸ்மாக் மலிந்து பரவிக்கிடக்கும் நிலையில், அதை இன்னும் அதிகப்படுத்துவது மக்கள் நல அரசுக்கு நல்லதல்ல. தாலிக்கு தங்கம் வழங்கும் அரசு, இந்த குடி மூலம் அதே தாலி கீழே இறங்குவதற்கு காரணமாகவுள்ள மதுக்கடையை அதிகரிப்பது அநீதியாகும். நாட்டின் குடிமக்களை காக்க வேண்டிய அரசு 'குடிமகன்கள்' அரசாக மாறுவது அரசுக்கு நிரந்தர அவப்பெயரையே பெற்றுத்தரும் என்பதை ஆளும் அரசு உணர்ந்து பூரண மதுவிலக்கை தமிழகத்தில்  அமுல்படுத்தி மக்கள் மனதில் இடம்பெற முதல்வர் முன்வரலாமே!

கட்டி கட்டியாக தங்கம்; கடவுளைக் காட்டி பயமுறுத்தும் மதவாதம்!

லக பணக்கார கடவுள்[?] என்று சொல்லப்படும் திருப்பதியாரையே திரும்பி பார்க்க வைத்தவர் பத்மநாப சுவாமி. தனது ஸ்தலத்தின் ரகசிய அறைகளில் தனது செலவுக்கு[?]கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆபரணங்களை 
அடுக்கி வைத்தவர். ஒருவர் கோர்டில் தொடர்ந்த பொது நல வழக்கின் மூலம் தான் பத்மநாப சுவாமி கோயிலில்  பதுக்கி வைக்கப்பட்டுவைகள் பட்டவர்த்தனமாக வெளியானது.  திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளில் இருந்து இதுவரை 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைரம், மரகத ஆபரணங்கள், நாணயங்கள், சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 5 அறைகளில் இவ்வளவு பொருள்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் 6-வது கடைசி அறை மட்டும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. அதன் கதவில் பாம்பு படம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆபத்து என்பதை, எச்சரிப்பதாக இந்தப் படம் இருக்கலாம் என்பதால், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்குப் பின் அதனைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ரகசிய அறையைத் திறப்பது தொடர்பாக திருவாங்கூர் ராஜ வம்சத்தைச் சேர்ந்த ராம வர்மா, உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், அந்த பாதாள அறையைத் திறக்க வேண்டாம் என்பதைக் குறிக்கும் வகையில்தான் அதன் கதவில் பாம்பு படம் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த அறையைத் திறந்தால் தெய்வத்தின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.

அதனையும் மீறி திறக்க வேண்டுமென்றால், "தேச பிரசன்னம்' பார்க்க வேண்டும். அதன் பின்னரே அறையைத் திறப்பது குறித்து முடிவு செய்ய வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே திறந்த ஐந்து அறைகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான ஆபரணங்கள் அரசுக்கு சொந்தமா? அல்லது குறிப்பிட்ட வம்சத்திற்கு சொந்தமா என பட்டிமன்றம் நடந்து வரும் நிலையில், ஆறாவது அறையில் எவ்வளவு கொட்டிக் கிடக்கிறதோ என உலகமே எதிர்நோக்கியுள்ள நிலையில், அந்த அறையை திறப்பதை தடுக்கும் நோக்கில்தான் மேற்கண்ட வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் கருதுகிறார்கள். சின்ன பிள்ளைகள் எதாவது சேட்டை பண்ணினால் 'சாமி கண்ணை குத்தீரும்' என்று மாற்று மதத்தவர்கள் சொல்வதை பார்த்திருக்கிறோம். அதைபோல் அந்த அறையை திறக்காதீர்கள்; தெய்வ குற்றமாகிவிடும் என்று பயம் காட்டப்படுகிறது. அப்படி தெய்வத்திற்கு[?] கோபம் வருமென்றால் ஏற்கனவே ஐந்து அறைகள் திறக்கப்பட்டபோது வரவில்லையே ஏன்? இதிலிருந்தே தெரியவில்லையா இது மூட நம்பிக்கை என்று?

பத்மநாப சுவாமி கடவுளென்றால் அந்த கடவுளுக்கு நாள்தோறும் பூஜை புனஸ்காரங்கள் குறைவின்றி நிறைவாக  நடந்து வரும் நிலையில், உபயோகமின்றி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆபரணங்களை சேமிக்க ஆசைப்படுவது ஏன்? அவைகளை ஏழைகளுக்கு வழங்குவதுதானே நியாயமாக  இருக்கும்? மேலும், அந்த கால அரசர்கள் அன்னியர்கள் படையெடுப்பால் தங்கள் நாட்டு செல்வங்கள் சூறையாடப்பட்டு விடக் கூடாது என்பதற்காக பதுக்குவதற்கு பாதுகாப்பான இடமான கோயில்களில்  பதுக்கி இருக்கலாம். இந்த பத்மநாபா  சுவாமி கோயில் ஆபரணங்களும் அந்த வகையை சார்ந்ததா என்பதை மத்திய அரசு திறந்த மனதுடன் ஆய்வு செய்து அரசு கஜானாவில் சேர்க்க முயற்சிக்க  வேண்டும். அவைகளை ஏழைகள் மேம்பாட்டிற்கு பயன்படுத்த  வேண்டும் என்பதே பக்திக்கு அப்பாற்பட்ட நடுநிலை மக்களின் மன நிலையாக உள்ளது என்பதை அரசு புரிந்து கொள்ளுமா?  

 

'நச்'சுன்னு ஒரு கேள்வி!

முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்;
''முதல்வர் பதவியேற்றவுடன் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதுதான் தனது முதல் வேலை என ஜெயலலிதா சூளுரைத்தார். கடந்த 60 நாள்களில் மட்டும் தமிழகம் முழுவதும் 60 கொலைகள், 120 வழிப்பறி கொள்ளைகள் மற்றும் 8 பாலியல் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகத் தெரிகிறது.
கொள்ளையர்கள், ரவுடிகள் எல்லாம் அண்டை மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டதாக ஜெயலலிதா கூறினார். அப்படியெனில் தற்போதைய சம்பவங்களில் தொடர்புடையவர்கள் யார்?

வியாழன், 21 ஜூலை, 2011

இதஜ மாநிலத் தலைமையகத்தில் ரமலான் தொடர் சொற்பொழிவு!


INTJ திருவல்லிக்கேணி மற்றும் சேப்பாக்கம் மர்கசில் ரமலான் முழுதும் தொடர் சொற்பொழிவு!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
INTJ திருவல்லிக்கேணி மர்கசில் வருகின்ற ரமலான் முழுதும் கடந்த ஆண்டுகளைப் போலவே இப்தார்  இரவுத்  தொழுகை கடைசி  பத்து  நாட்களில்  விடிய  விடிய நிகழ்சிகள்  ஏற்பாடு  செய்யப்  பட்டுள்ளது !  இதில்  ரமலான் முழுதும் சிறப்பு  சொற்பொழிவாக 
 அறியப்படாத சஹாபாக்களும்  
அவர்தம்  தியாக  வரலாறுகளும்  '
 எனும்  தலைப்பில்  சகோதரர்  செங்கிஸ்  கான்  உரை  நிகழ்த்துகிறார் .

இதைப்  போன்று  பெண்களுக்கான  இரவுத் தொழுகை மற்றும் சொற்பொழிவு சேப்பாக்கம்  ஆயிஷா  நசிர்  மதரசாவில்  நடை  பெற  உள்ளது. இன்ஷா அல்லாஹ்.

துபாய் சத்வா& அஸ்கான் பள்ளியில் INTJ நிகழ்ச்சி!

INTJ  மாநில நிர்வாகிகளின் துபாய் வருகையின் பொது   சத்வா  கிளை  சார்பில்  அங்குள்ள  பள்ளிவாசல்  ஒன்றில்    நிகழ்ச்சி நடை பெற்றது. எஸ்.எம்.பாக்கர் , செங்கிஷ்கான்  உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் உரையாற்றினர். இதில் இளையான்குடி ஜாவித் , எ.எஸ்.இப்ராகிம் துபாய் மண்டல நிர்வாகிகள் கீழை ஜமில் , முஹம்மத் மேலும் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

INTJ அஸ்கான் கிளை சார்பில் இ.டி.எ .அஸ்கான் பள்ளி வாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில செயலாளர் செங்கிஸ் கான் அழைப்பு பனி ஏன் எதற்கு ? எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதிரை ஜமால் , பொறையாறு ஜக்கரிய. மண்டல நிர்வாகிகள் கீழை ஜமில் மற்றும் . செய்யத் சாஜித்  உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

புதன், 20 ஜூலை, 2011

குழப்பவாதியின் தூண்டுதலை அன்பால் முறியடித்த இதஜ தலைவர்கள்!

குவைத்திற்கு இ.த.ஜ. தலைவர்கள் வருகிறார்கள் என்றதும் பல அவதூறுகளை பரப்பி 'ஐந்து பேர் கூட இவர்களின் கூட்டத்திற்கு வர மாட்டார்கள் ' என்றெல்லாம் அகமகிழ்ந்தோரின் எண்ணங்களில் இடி விழும் அளவிற்கு முதல் நாளன்று மண்ணு சல்வா உணவகத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது! 

இதைக் கண்ட தக்லித் ஜமாத்தினர்   மறு நாள் நிகழ்ச்சி நடந்த ஷாலிமார் உணவக வாசலில் வந்து 'விடுதலைப் புலிகள் ஆதரிக்கும் இயக்கங்கள் ' என கடுமையாக சாடி நோட்டீஸ் ஒன்றை வாசலில் நின்று விநியோகிக்க சற்று சலசலப்பு ஏற்பட்டது ! 

அவர்கள் நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் இது போன்று யாரேனும் நோட்டீஸ் விநியோகித்தால் இவர்கள் அனுமதிப்பார்களா? என நம் சகோதரர்கள் கோபப் பட்ட போது அவர்களை மாநில செயலாளர் செங்கிஸ் கான் கட்டுப்படுத்தி , அந்த த.த.ஜ.சகோதரரை தோளில் கை போட்டு வாஞ்சையோடு நலம் விசாரித்து 'நோட்டீஸ் கொடுப்பது உங்கள் உரிமை   தாரளமாக எனக்கும் கொடுங்கள்! ஆனால் அந்த உரிமையை த.த.ஜ வினராகிய நீங்கள் மற்றவர்களுக்கும் அளிக்க வேண்டும்' என கூறிய போது அந்த த.த.ஜ சகோதரர் 'நலமாக இருக்கின்றீர்களா ?    பாக்கர் அண்ணன் எப்படி இருக்கிறார் ? என நலம் விசாரித்தார்!  உடனே கீழே  வந்த தொண்டியப்பா , மற்றும் பாக்கரிடம் அந்த சகோதரை செங்கிஸ் கான் அறிமுகப் படுத்தி  சகோதரருக்கு   சலாம் சொல்லி கை குலுக்கி நலம் விசாரித்தனர். இதை அங்கு வந்த பொதுவான மக்கள் பாராட்டினர்!

அவர்களின் கூட்டத்தில் இது போன்று நடந்திருந்தால் பெரும் ரகளை செய்திருப்பார்கள் ! ஆனால் கொள்கை சகோதர்களுக்கு இடையில் 
மோதல் வந்து விடக் கூடாது என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம்!
அதனால் தான் அவர் இதஜ பெயரை அபகரித்த  போது கூட அமைதி காத்தோம்!.

கொள்கை சகோதர்களுக்கு இடையில் மோதல் நடந்தால் தான் அவர்கள் எந்தக் காலத்திலும் இணைய மாட்டார்கள்! எனும் பி.ஜே.வின் பிரிவினைக் கொள்கையை நாம் அன்பால் முறியடிப்போம்! இன்ஷா அல்லாஹ்!           


குழப்பவாதியின் தூண்டுதலை அன்பால் முறியடித்த இதஜ தலைவர்கள்!

குவைத்திற்கு இ.த.ஜ. தலைவர்கள் வருகிறார்கள் என்றதும் பல அவதூறுகளை பரப்பி 'ஐந்து பேர் கூட இவர்களின் கூட்டத்திற்கு வர மாட்டார்கள் ' என்றெல்லாம் அகமகிழ்ந்தோரின் எண்ணங்களில் இடி விழும் அளவிற்கு முதல் நாளன்று மண்ணு சல்வா உணவகத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது! 

இதைக் கண்ட தக்லித் ஜமாத்தினர்   மறு நாள் நிகழ்ச்சி நடந்த ஷாலிமார் உணவக வாசலில் வந்து 'விடுதலைப் புலிகள் ஆதரிக்கும் இயக்கங்கள் ' என கடுமையாக சாடி நோட்டீஸ் ஒன்றை வாசலில் நின்று விநியோகிக்க சற்று சலசலப்பு ஏற்பட்டது ! 

அவர்கள் நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் இது போன்று யாரேனும் நோட்டீஸ் விநியோகித்தால் இவர்கள் அனுமதிப்பார்களா? என நம் சகோதரர்கள் கோபப் பட்ட போது அவர்களை மாநில செயலாளர் செங்கிஸ் கான் கட்டுப்படுத்தி , அந்த த.த.ஜ.சகோதரரை தோளில் கை போட்டு வாஞ்சையோடு நலம் விசாரித்து 'நோட்டீஸ் கொடுப்பது உங்கள் உரிமை   தாரளமாக எனக்கும் கொடுங்கள்! ஆனால் அந்த உரிமையை த.த.ஜ வினராகிய நீங்கள் மற்றவர்களுக்கும் அளிக்க வேண்டும்' என கூறிய போது அந்த த.த.ஜ சகோதரர் 'நலமாக இருக்கின்றீர்களா ?    பாக்கர் அண்ணன் எப்படி இருக்கிறார் ? என நலம் விசாரித்தார்!  உடனே கீழே  வந்த தொண்டியப்பா , மற்றும் பாக்கரிடம் அந்த சகோதரை செங்கிஸ் கான் அறிமுகப் படுத்தி  சகோதரருக்கு   சலாம் சொல்லி கை குலுக்கி நலம் விசாரித்தனர். இதை அங்கு வந்த பொதுவான மக்கள் பாராட்டினர்!

அவர்களின் கூட்டத்தில் இது போன்று நடந்திருந்தால் பெரும் ரகளை செய்திருப்பார்கள் ! ஆனால் கொள்கை சகோதர்களுக்கு இடையில் 
மோதல் வந்து விடக் கூடாது என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம்!
அதனால் தான் அவர் இதஜ பெயரை அபகரித்த  போது கூட அமைதி காத்தோம்!.

கொள்கை சகோதர்களுக்கு இடையில் மோதல் நடந்தால் தான் அவர்கள் எந்தக் காலத்திலும் இணைய மாட்டார்கள்! எனும் பி.ஜே.வின் பிரிவினைக் கொள்கையை நாம் அன்பால் முறியடிப்போம்! 
இன்ஷா அல்லாஹ்!           

ஞாயிறு, 17 ஜூலை, 2011

குவைத் intj நிர்வாக சீர்திருத்தம்...

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம்.
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அல்லாஹ்வின் பேரருளால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத், குவைத் மண்டல  நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், தேசியத் தலைவர் பாக்கர் தலைமையில், மாநிலப் பொருளாளர் அபூபக்கர் தொண்டியப்பா மற்றும் மாநிலச் செயலாளர் செங்கிஸ்கான் ஆகியோர் முன்னிலையில், அல் ஹயாத் ஹோட்டலில் வெள்ளியன்று [15 -07 -2011 ௦]சிறப்புடன் நடைபெற்றது.
 
பின்பு அமைப்பை சூழ்ந்துள்ள சதிகளை முறியடிக்கும் வகையில், அமைப்பை வீரியமாக கொண்டு செல்லும் வகையில் நிர்வாக சீர்திருத்தம் செய்யப்பட்டு பின் வரும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 
  • மண்டலத் தலைவர்/செய்தி தொடர்பாளர்; முகவைஅப்பாஸ்.
  • துணைத்தலைவர்;                  ஏ.கே. ஜாஹித் ஃபிர்தவ்ஸ்
  • செயலாளர்             ;                  புகாரி ஹசன்
  • பொருளாளர்           ;                  ராஜ் முஹம்மத்
  • துணைச்செயலாளர்கள்;         

முபாரக் பாஷா,   சாதிக்சதாம், மீரான், முஹம்மது சேட், அபுதாகிர்.

தொடர்புக்கு;

65653431 , 65120393 ,  97465872 , 97659759 , 65727633 ,

97102763 , 55890813 , 65731568

புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே!