வெள்ளி, 11 மே, 2012

GCC நாடுகளில் குற்றப்பிண்ணனியில் தாயகம் சென்றவர்கள் மீண்டும் GCC வரமுடியாதா?

வூதி அரேபியா, குவைத், ஓமன், பஹ்ரைன், கத்தார், அமீரகம் ஆகிய நாடுகள் GCC நாடுகள் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாடுகளுக்குள் சில விசயங்கள் ஒருங்கினைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பான சட்டமாகும். இது தொடர்பான கேள்வி ஒன்றும் அதற்கான பதிலும் இந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இங்கே பதிவு செய்கிறோம்.

கேள்வி; ஒரு சகோதரர் சவுதி கபில் கொடுமை காரணமாக சவுதி அரேபியா ஜெத்தா சென்று
போலிசிடம் சரணடைந்து தாயகம் சென்றார் அப்போது போலிசில் அவருடைய கை ரேகையை
பதிவு செய்து கொண்டார்கள். தற்போது அவர் சென்று இரண்டரை வருடங்கள் ஆன நிலையில், இரண்டு தினங்களுக்கு முன் அல்தவா பார்மசி விசா மூலம், பம்பாயில் விசா ஸ்டாம்ப் செய்யப்பட்டு
தம்மாம் வந்த அவரை எமிக்ரேசன் போலீசார் கை ரேகையை பதிவு செய்து
பார்த்தவுடன் அடுத்த பிளைட்டில் மீண்டும் தாயகத்திற்கே அனுப்பி விட்டு
விட்டார்கள்.

அதே பிளைட்டில் ஏற்கனேவே குவைதில் பணி புரிந்து, குவைத் போலிசிடம்
சரணடைந்து தாயகம் சென்ற பெண் மீண்டும் சவுதிக்கு வந்த போது அவரையும்
சவுதி எமிக்ரேசன் போலீசார் கை ரேகையை பதிவு செய்து பார்த்தவுடன் அடுத்த
பிளைட்டில் மீண்டும் தாயகத்திற்கு அனுப்பயுள்ளர்கள் (இருவரும் ஒரே
பிளைட்டில் திரும்ப நேர்ந்ததால் இந்த தகவல் கிடைத்தது).

மேற்படி சகோதரர் ஒரு லட்சத்திற்கு மேல் சிலவு செய்து பாதிக்க பட்டு விட்டார்.

தயவு செய்து இதுபோல் சென்ற சகோதரர்களுக்கு எச்சரிக்கையாக இதை சொல்லவும்.


1 . இது போல் சென்றவர்கள் மீண்டும் சவூதிக்கு தான் வர முடியாதா?
2 . அல்லது GCC கே வரமுடியாதா?
3 . எந்தெந்த நாடுகளுக்கு செல்ல முடியாது?


இது சம்பதமாக தெரிந்தவர்கள் சொன்னால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

-நாகூர் சுல்தான்
சவுதி அரேபியா.

பதில்; வளைகுடா நாடுகளின் குடியுரிமை மற்றும் சட்டம் ஒழுங்கு சம்பந்தமான அனைத்தும் ஒரு குடையின் கீழ் நெட்ஒர்க் செய்யப்பட்டுள்ளது. வளைகுடாவில் உள்ள எந்த நாட்டிலாவது ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டு அவர் தாயகம் அனுப்பிய பின் அவர் மீண்டும் வளைகுடாவின் வேறு எந்த நாட்டிற்கும் வரமுடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 
ஒரு கம்பெனியில் பணியாற்றிய ஒருவர் அந்த கம்பெனியிலிருந்து விடுப்பில் தாயகம் சென்றுவிட்டு அந்த கம்பெனிக்கு மீண்டும் வராமல் அந்த விடுப்பு விசா காலாவதி ஆகிவிட்டால் வேறு விசாவில் வளைகுடாவின் எந்தப் பகுதிக்கும் அவரது வாழ் நாள் முழுதும் செல்லமுடியாத நிலை உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.  
 
யாராவது நான் ஏற்பாடு செய்கிறேன் என்றும் கொண்டுவந்து விடுவேன் என்றும் குறுக்கு வழியை கையாண்டு உள்ளே வந்தால் வந்தவர் நாடு திரும்பவே முடியாது என்பதையும் நினைவில் கொள்ளவும்.
 
இதில் குறிப்பிட்டுள்ள தகவல் தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் ஆகும். வரும் காலங்களில் மாற்றப்படலாம் அல்லது தொடரலாம்... அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
 
நன்றி; ஹூஸைன்கனி, ரியாத்.

வியாழன், 10 மே, 2012

செல்போனிலோ, வீடியோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத்தை படம் பிடிப்பவர்களுக்காக இந்த பதிவு..


செல்போனிலோ, வீடியோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத்தை படம் பிடிப்பவர்களுக்காக இந்த பதிவு.. Please SPEND SOME TIME AND READ THIS AND SHARE ESPECIALLY GIRLS:

''நீங்கள் செல்போனிலோ வீடியோ கேமராவிலோ உங்களின் அந்தரங்கத்தை படம் பிடித்து ரசிப்பவர்களாக இருந்தால்... வெரி சாரி.. உங்களின் நிர்வாணம் இப்போது உலகம் முழுக்க பரவிக்கொண்டிருக்கலாம். அது எப்படி...?? என் செல்போனில் நான் என்னைப் படம் எடுப்பதால் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது...?'' என்று யோசிக்கிறீர்களா...?? வெயிட்...!! உங்களுக்காகவே சாம்பிளுக்கு சில சம்பவங்கள்...(பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன)

அடையாறில் வசிக்கிறார்கள் மதுமிதா- ராம். புதுமணத் தம்பதிகளான இவர்கள் ஐ.டி. துறையில் வேலை செய்கிறார்கள். ஒருநாள் நண்பர் ஒருவரால் மதுமிதாவுக்கு அனுப்பப்பட்டிருந்த அந்த மெயிலில் ஒரு வீடியோ இணைக்கப்பட்டிருந்தது. அதைத் திறந்து பார்த்த மதுமிதாவுக்கு அதிர்ச்சியில் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. காரணம், அந்த வீடியோ மதுமிதாவும் அவர் கணவன் ராமும் பெட்ரூமில் அந்தரங்கமாக இருந்த போது சும்மா ஜாலிக்காக செல்போனில் எடுத்தது. கொஞ்ச நேரம் அதைப் பார்த்து ரசித்து விட்டு, செல்போனிலிருந்து அப்போதே அதை அழித்தும் விட்டார்கள். ஆனால் அது இப்போது இண்டர்நெட் முழுக்க பரவிக் கொண்டிருக்கிறது. "செல்போனில் இருந்து டெலிட் செய்த ஒரு வீடியோ எப்படி இண்டர்நெட்டுக்குப் போகமுடியும்..? என்பது தானே உங்கள் டவுட்". அதற்கான விடையைத் தெரிந்து கொள்வதற்கு முன் மேலும் சில அதிர்ச்சிச் சம்பவங்களையும் பார்த்துவிடுவோம்.

அண்ணாநகரைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் ரம்யா. துறுதுறுவென துள்ளித் திரியும் டீன் ஏஜ் பெண். 10_ம் வகுப்பு படிக்கிறாள். உடன் படிக்கும் மாணவிகள் பலர் செல்போன் வைத்திருக்கிறார்கள் என அப்பாவை நச்சரிக்கவே, அவரும் ஒரு காஸ்ட்லியான கேமரா செல்போனை வாங்கிக் கொடுத்தார். ஒருநாள் பெட்ரூமில் கண்ணாடி முன் நின்று தன் அழகை ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு, செல்போனில் தன் உடலில் துணியில்லாமல் படம் பிடித்தால் என்ன என்று தோன்றியது. உடனே அதைச் செய்தும் விட்டாள். பின்னர் சிறிது நேரம் துணியில்லாத தன்னுடைய அந்த வீடியோவை ரசித்துப் பார்த்துவிட்டு டெலிட் செய்துவிட்டாள். ஆனால் இப்போது அந்த வீடியோவும் நெட்டில் உலா வந்து கொண்டிருக்கிறது.

இதேபோல் நெல்லையைச் சேர்ந்த லட்சுமி-குமார் தம்பதியரும் தங்கள் அந்தரங்கத்தை செல்போனில் வீடியோவாக எடுத்து பின்னர் அதை டெலிட் செய்து விட்டனர். ஆனால் அந்த போன் ஒரு நாள் தொலைந்து போனது. புது செல்போன் வாங்கிக் கொண்டார்கள். பழைய போனை மறந்தும் விட்டார்கள். ஆனால் பழைய செல்போனில் இருந்த அந்த தம்பதியினரின் அந்தரங்கம் இப்போது இணையதளம் முழுக்க பரவிக் கெண்டிருக்கிறது.

இதுமட்டுமல்ல, குற்றாலத்தில் குளியல் போடும் கல்லூரி மாணவிகளின் வீடியோ, ஹாஸ்டல் ரூமில் பர்த்டே பார்ட்டி கொண்டாட்டத்தில் குத்தாட்டம் போடும் மாணவிகளின் வீடியோ... என ஏகப்பட்ட வெரைட்டிகளில் அந்தரங்க வீடியோக்கள் இண்டர்நெட்டில் நிரம்பிக் கிடக்கின்றன. செல்போனில் டெலிட் செய்யப்பட்ட ஒரு வீடியோ எப்படி இணையத்துக்குப் போனது என்பதுதான் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் புரியாத புதிர். அந்த புதிருக்கான விடையின் பெயர் "ரெக்கவரி சாஃப்ட்வேர்"(recovery software).

மேலே சம்பவத்தில் இடம்பெற்ற எல்லோருக்கும் ஒன்று போல் ஒரு விஷயம் நடந்தது. அது அவர்களின் செல்போனும், டிஜிட்டல் கேமராக்களும் ஒருநாள் பழுதடைந்தது. அவற்றைச் சரி செய்ய கடைகளில் கொடுத்திருந்தார்கள். அங்கிருந்து தான் அவர்களின் மானம் இணையதளத்தில் பறக்கவிடப்பட்டது. இதுபோன்ற வில்லங்க சம்பவங்களின் பின்னணி என்ன...? அண்ணாநகரில் செல்போன் கடை வைத்திருக்கும் மூர்த்தி விரிவாகச் சொல்கிறார்.

''செல்போன், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் நம்மில் பலருக்கு அதுகுறித்த முழுமையான தகவல்கள் தெரிவதில்லை. அதுவும் தங்கள் செல்போனில் எடுக்கப்பட்ட ரகசிய போட்டோக்கள், வீடியோக்கள் டெலிட் செய்யப்பட்டிருந்தாலும் மீண்டும் அதைப் பார்க்க முடியும் என்கிற விஷயமே புதுசாகத்தான் இருக்கும். அந்த விஷயம் தெரியாமல் தான் பலர் ஆர்வக் கோளாறில் தங்களின் படுக்கை அறைக் காட்சிகளை செல்போனிலும், டிஜிட்டல் கேமராவிலும் பதிவு செய்து ரசிக்கிறார்கள். பின்னர் டெலிட்டும் செய்துவிடுகிறார்கள்.

ஆனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் என்றாவது ஒருநாள் பழுதடையும். அப்போது அதை சரிபண்ண கடைகளில் கொடுக்க வேண்டி வரும். அங்கு தான் பிரச்னை ஆரம்பிக்கிறது. சர்வீஸ் செய்யும் கடைக்காரர்கள் சரிபண்ணி முடித்ததும், ஆர்வக் கோளாறில் ஒவ்வொரு போனிலும் என்னென்ன டெலிட் செய்யப்பட்டிருக்கிறது என்று தேடிப்பார்ப்பார்கள். இதற்காக அழிக்கப்பட்ட தகவல்களை திரும்பப் பெறும் வசதி கொண்ட பல "ரெக்கவரி சாஃப்ட்வேர்கள்" இருக்கின்றன. இதன் மூலம் திரும்பப் பெறப்படும் வீடியோ மற்றும் போட்டோக்களில் ஏதாவது ஆபாசப் படங்கள் இருந்தால் போதும், உடனே அதை இணையத்தில் விற்றுவிடுவார்கள். இந்த மாதிரியான "ஹோம் மேட் செக்ஸ் வீடியோக்கள்" எனப்படும் சம்பந்தப்பட்டவர்களே எடுக்கும் படங்களுக்கு வெளிநாட்டவர்களிடம் ஏக கிராக்கி என்பதால் இந்த அயோக்கியத்தனத்தை பல கடைக்காரர்கள் துணிந்து செய்கிறார்கள் என்கிறார்.

இதைத் தவிர்க்க என்ன செய்வது...? முக்கியமாக படுக்கை அறைக்கு செல்போனையோ, கேமராவையோ கொண்டு செல்லாதீர்கள். காதலனோ, கணவனோ, மாமனோ மச்சானோ.. படம் எடுக்க ஆண்கள் எவ்வளவு வற்புறுத்தினாலும் பெண்கள் சம்மதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இது ஒருவகையான ஆபத்து என்றால், இன்னொரு ஆபத்தும் இதில் இருக்கிறது. அது இன்று உயிருக்குயிராய் காதலிக்கும் கணவன் மனைவியோ, காதலர்களோ நாளை சூழ்நிலை காரணமாக பிரிந்து வேறொருவரைத் திருமணம் செய்ய நேரிடலாம். ஆனால்... ஏமாற்றப்பட்டதாக நினைக்கும் ஆண்கள், பெண்களைப் பழிவாங்க முடிவு செய்து, முன்பு எடுத்த அந்தரங்கப் படங்களை இண்டர்நெட்டில் பரப்பி விடுகிறார்கள்.

அதேபோல் வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர்களுடன் "வெப்கேமில் பேசும் பெண்களும், கணவர் ஆசைப்படுகிறார் என்பதற்காக கேமரா முன் தங்களின் அந்தரங்கத்தைக் காட்டாதீர்கள். கம்ப்யூட்டரில் அது பதிவு செய்யப்படலாம். அந்த கம்ப்யூட்டர்கள் ஒருநாள் பழுதடைந்து சரிசெய்ய அனுப்பும் போது அங்கிருந்து அது இணையத்துக்கு பரவக்கூடும். ஜாக்கிரதை...!!! ஒரு ஆபாச தளத்தில் ஒரு பெண்ணின் விடியோ வெளியானால் போதும்... உலகம் முழுக்க அது பரவி விடும். அப்புறம் அந்தப் பெண்கள் வெளியே தலைகாட்ட முடியாது. அசிங்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு.

இப்போது செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் கேமராக்களின் வரவால் ஒவ்வொருவரும் கேமராமேனாகி விட்டார்கள். பொது இடங்களில் உங்களுக்குத் தெரியாமல் ரகசியமாக கேமராக்கள் படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன. கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவ்வளவு நுண்ணிய கேமராக்கள் வந்து விட்டன. தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், துணிக்கடைகளின் ட்ரையல் ரூம்கள் போன்றவற்றைப் பயன்படுத்தும் முன் ஒருமுறை சுற்றி நோட்டமிடுங்கள். உஷாராக இருங்கள்.. இந்த பதிவின் நோக்கமே பெண்களை உஷார் படுத்தத்தான்...

நன்றி;
nazar khadar <faseeharifa@yahoo.co.in>

திங்கள், 7 மே, 2012

பெற்றோருக்குத் தெரியாமல் ஐ.ஏ.எஸ். ஆன மாணவி!

கல்லூரிக்காலத்தில் காதலில் விழுந்து, பெற்றோருக்குத் தெரியாமல் 'கம்பி' நீட்டி, தனக்கும், தனது பெற்றோருக்கும், தான் சார்ந்த மார்க்கத்திற்கும் களங்கத்தை ஏற்படுத்தும் சில கன்னியர்களுக்கு மத்தியில், பெற்றோருக்குத் தெரியாமல் ஐ.ஏ.எஸ். படிப்பில் வெற்றிபெற்ற சாதனை மாணவி சாஜிபானு பற்றிய செய்தியை தினமணி வெளியிட்டுள்ளது. அதை நன்றியுடன் சமர்ப்பிக்கிறோம். -முகவைஅப்பாஸ்.


First Published : 08 May 2012 09:22:15 AM IST

Last Updated :

கும்பகோணம், மே 7: பெற்றோருக்குத் தெரியாமல் ஐ.ஏ.எஸ். தேர்வெழுதி வெற்றி பெற்றுள்ளார் கும்பகோணம் கல்லூரி மாணவி சாஜிபானு .

கேரள மாநிலம் மலபுரத்தைச் சேர்ந்த மாணவி சாஜிபானு (22). கும்பகோணத்தை அடுத்த கோவிலாச்சேரி அன்னை கல்லூரியில் எம்.பி.ஏ. பயிலும் இவர், இதே கல்லூரியில் பி.எஸ்.சி., ஐ.டி. பிரிவில் பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் ஏழாமிடம் பெற்றவர். 

அகில இந்திய அளவில் 2,400 பேர் எழுதிய சிவில் சர்வீசஸ் தேர்வில், 910 பேர் வெற்றி பெற்றனர். இதில் இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) தேர்வில் வெற்றி பெற்ற 170 பேரில், முதல் முயற்சியிலேயே 98-வது இடத்தைப் பிடித்த சாஜிபானுவுக்கு அந்தக் கல்லூரியில் திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. 

தமிழகம்தான் என்னை ஐ.ஏ.எஸ். ஆக்கியது: பின்னர் அவர் அளித்த பேட்டி: எனக்கு ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆனால், எனது பெற்றோர் அதை விரும்பவில்லை. எனது மாமா, சகோதர, சகோதரிகள், உறவினர்கள் மற்றும் கல்லூரித் தலைவர், செயலர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனது விருப்பத்துக்கு ஆதரவு அளித்து ஊக்கப்படுத்தினர். 

இக்கல்வி நிறுவனத்தில் உள்ள நூலகம் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து பெற்ற தகவல்களைக் கொண்டு ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத முடிவு செய்தேன். 

அதன்படி, சைதை துரைசாமி நடத்தும் மனித நேய அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்தேன்.நான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராகி வந்தது எனது பெற்றோருக்குக் கூடத் தெரியாது. கல்லூரிக்கு கட்டுவதற்காக கொடுத்த செமஸ்டர் கட்டணத்தையே ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத செலவழித்தேன். மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் தேர்வெழுதி, முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளேன். என்னுடைய ஐ.ஏ.எஸ். கனவை நனவாக்கியது தமிழகம்தான். தமிழக மக்களுக்கு சேவை செய்வதே எனது விருப்பம் என்றார் சாஜிபானு. கல்லூரி முதல்வர் மணி, தலைவர் அன்வர்கபீர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நரேந்திர மோடி மீது, இ.பி.கோ. 153ஏ(1) (ஏ) மற்றும் (பி), 153 பி(1), 166 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு..?!


ஆமதாபாத், மே.8
குஜராத் கலவர சம்பவம் தொடர்பாக, நரேந்திர மோடி மீது வழக்கு தொடர முடியும் என்று சுப்ரீம் கோர்ட்டு நியமித்த ஆலோசகர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின்போது, குல்பர்க் சொசைட்டியில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. எசான் ஜாப்ரி உள்பட 69 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பற்றி விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. அந்த குழு, முதல்மந்திரி நரேந்திர மோடி உள்பட குற்றம் சாட்டப்பட்ட 58 பேரில் எவருக்கு எதிராகவும் ஆதாரங்கள் இல்லை என்று கூறியது. இத்துடன் விசாரணையை முடித்துக் கொள்ளலாம் என்றும் சிபாரிசு செய்தது. 

இவ்வழக்கை விசாரித்து வரும் ஆமதாபாத் மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனுடன், சுப்ரீம் கோர்ட்டுக்கு ஆலோசனை கூற நியமிக்கப்பட்ட ஆலோசகர் ராஜு ராமச்சந்திரனும், தனது அறிக்கையை ஆமதாபாத் கோர்ட்டில் சமர்ப்பித்து இருந்தார்.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, சிறப்பு புலனாய்வு குழு அறிக்கையும், ராஜு ராமச்சந்திரனின் அறிக்கையும், கொல்லப்பட்ட முன்னாள் எம்.பி.யின் மனைவி ஜாகியா ஜாப்ரியிடம் நேற்று வழங்கப்பட்டன. 
அதையடுத்து, ராஜு ராமச்சந்திரனின் அறிக்கையில் உள்ள விவரங்கள் பத்திரிகைகளுக்கு தெரிவிக்கப்பட்டன. அந்த அறிக்கையில் ராஜு ராமச்சந்திரன் கூறி இருப்பதாவது:

புகார்தாரர் ஜாகியா ஜாப்ரி, முதல்மந்திரி நரேந்திர மோடி மீது சுமத்தி உள்ள குற்றச்சாட்டுகளின்படி, இ.பி.கோ. 153ஏ(1) (ஏ) மற்றும் (பி), 153 பி(1), 166 ஆகிய பிரிவுகளின் கீழ் நரேந்திர மோடி மீது வழக்கு தொடரலாம். 
மதத்தின் அடிப்படையில், வெவ்வேறு பிரிவினருக்கிடையே விரோதத்தை பரப்புதல், தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவித்தல், காயம் ஏற்படுத்தும் நோக்கத்துடன், ஒரு அரசு ஊழியர், சட்டத்தை மதிக்காமல் இருப்பது ஆகிய குற்றச்சாட்டுகளை மேற்கண்ட சட்டப்பிரிவுகள் குறிப்பிடுகின்றன. 

கலவரத்தின்போது, கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ந் தேதி நடைபெற்ற போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, 'இந்துக்கள் தங்கள் கோபத்தை காட்டவும், முஸ்லிம்களுக்கு பாடம் கற்பிக்கவும் அனுமதிக்க வேண்டும்'என்று கூறியதாக, சஸ்பெண்டு ஆன போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட் கூறி உள்ளார். 

இந்த கூற்றை சிறப்பு புலனாய்வு குழு நிராகரித்தபோதிலும், எந்த அடிப்படையும் இல்லாமல் நரேந்திர மோடிக்கு எதிராக சஞ்சீவ் பட் இப்படி கூறி இருப்பார் என்று தோன்றவில்லை. சஞ்சீவ் பட், அந்த குறிப்பிட்ட கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதற்கு ஆவணரீதியான ஆதாரம் ஏதும் இல்லை. 

சஞ்சீவ் பட்டின் கருத்துகளை நம்பாத சிறப்பு புலனாய்வு குழு, அவருடைய உயர் அதிகாரிகளின் கருத்துகளை மட்டும் நம்புகிறது எனவே, சஞ்சீவ் பட்டின் கருத்து உள்நோக்கம் கொண்டது என்ற முடிவுக்கு சிறப்பு புலனாய்வு குழு வந்திருப்பதை ஏற்க முடியவில்லை. அந்த குறிப்பிட்ட கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொண்டாரா?, அந்த கூட்டத்தில் நரேந்திர மோடி அதுபோன்று பேசினாரா? என்பதெல்லாம் கோர்ட்டால் தீர்மானிக்கப்பட வேண்டும். அதற்கு முன்பு, சஞ்சீவ் பட்டின் கருத்தை நம்ப முடியாது என்று கூறுவது சரியல்ல.

எனவே, அந்த கூட்டத்தில், நரேந்திர மோடி பேசியதாக கூறப்படும் கருத்து, சட்டப்படி குற்றமா? என்பதுதான் இப்போது விசாரிக்கப்பட வேண்டிய விஷயம். 
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

செய்தி நன்றி;தினத்தந்தி.

சனி, 5 மே, 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 9]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அயல்நாட்டு நிதி விசயத்தில் பீஜேயின் அப்பட்டமான பொய்களையும், முரண்பாடுகளையும் அலசிவரும் இந்த தொடரில், அயல்நாட்டு நிதி விசயத்தில் மார்க்கத்திற்கு முரணனான அவரது மனோஇச்சை முடிவையும், அவரது இரட்டை வேடங்களையும் அம்பலப்படுத்தி வருகிறோம். இப்போது அவரது மற்றொரு இரட்டை வேடம் ஒன்றைப்பார்ப்போம்.

2002 ஆண்டு இலங்கையை சேர்ந்த ஒரு தனவந்தர், பீஜெயாகிய தனக்கு நியாஸ் ஹாஜியார் என்பவர் மூலமாக ஐந்து லட்சம் தர முன் வந்ததாகவும், அந்த தனவந்தரை எனக்குத் தெரியாது. எனவே நான் மறுத்து விட்டதாக சொல்லி விடுங்கள் என்று நியாஸ் ஹாஜியாரிடம் சொன்னதாகவும், ''ஹாமித்பக்ரியும் கைவிட்ட தமுமுகவும்' என்ற தொடரில் பீஜே கூறியுள்ளார். 

இதில் கவனிக்க வேண்டியது, ஐந்து லட்சத்தை தான் ஏற்க மறுப்பதற்கு காரணம் வெளிநாட்டு நிதி பெறக்கூடாது என்ற எனது கொள்கைதான் என்று பீஜே சொல்லவில்லை. தனக்கு ஐந்து லட்சம் தர முன் வந்த அந்த தனவந்தர் யாரென்று எனக்குத் தெரியாது. எனவே எனக்கு வேண்டாம் என்றுதான் பீஜே காரணம் சொல்கிறார். அப்படியானால் அந்த தனவந்தர் தெரிந்தவராக இருந்திருந்தால் வாங்கியிருப்பார்தானே? 

சரி. வெளிநாட்டு நிதி கூடாது என்ற கொள்கை இவர் ஜாக்கில் இருந்து கழன்ற காலத்திலேயே, அதாவது தவ்ஹீத் பிரச்சாரக்குழு உருவான காலத்திலேயே இவர் உருவாக்கிக் கொண்டதாகும். அப்படியானால் தான் மட்டும் வெளிநாட்டு நிதி வாங்காமல் இருந்தால் மட்டும் போதாது. வேறு யாருக்கும் வாங்கிக் கொடுக்கவோ, பரிந்துரை செய்யவோ கூடாது. அப்போதுதான் இவர் அந்த கொள்கையில் உறுதியாக இருக்கிறார் என்று அர்த்தம். இந்த அடிப்படையில் இலங்கையிலிருந்து வந்த அந்த ஐந்து லட்சத்தை இவர் திருப்பி அனுப்பியிருந்தால், உண்மையில் இவர் கொண்ட கொள்கையில் உறுதியானவர் என்று அர்த்தம். ஆனால் இவரோ கடையநல்லூரில் இயங்கும் ததஜ  சார்பு நிறுவனமான இஸ்லாமிய கல்லூரிக்கு கொடுக்குமாறு பரிந்துரை செய்கிறார். இதிலிருந்து இவரது வெளிநாட்டு நிதிக் கொள்கையின் லட்சணம் தெரியவில்லையா? 

இப்போது பீஜே சொல்லலாம். இஸ்லாமியக் கல்லூரி என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆதரவைப் பெற்றது தானே தவிர, தவ்ஹீத் ஜமாத்திற்கு சொந்தமானதல்ல என்று. ஏற்கனவே காயல்பட்டினம் இஸ்லாமியக் கல்விச் சங்கம் விசயத்தில் இப்படி இவர் சொன்னவர்தான். பின்பு நாம், இஸ்லாமிய கல்விச் சங்கம் ஹாமித்பக்ரிக்கு மட்டும் சொந்தமானதல்ல. இவரது இன்றைய ஜமாஅத் நிர்வாகிகள் பலர் அந்த சங்கத்தின் அங்கம் என்று பட்டியலிட்டோம். அதை பீஜெயால் மறுக்கமுடியவில்லை. அதே போல் இந்த இஸ்லாமியக் கல்லூரி வெறுமனே ஜமாஅத் ஆதரவு பெற்ற நிறுவனம் மட்டுமல்ல. முழுக்க முழுக்க ஜமாஅத்தின் தூண்கள் அங்கம் வகிக்கும் நிறுவனமாகும்.

இஸ்லாமியக் கல்லூரி சம்மந்தமான விபரங்கள்;

இக்கல்லூரிக்காக உருவாக்கப்பட்ட டிரஸ்டின் பெயர்; இஸ்லாமிய அறக்கட்டளை.

இந்த டிரஸ்டின் அங்கத்தவர்கள்;
  1. எஸ்.எஸ்.யூ. சைபுல்லாஹ் ஹாஜா.
  2. ஹாமித்பக்ரி.
  3. அப்துல் ஜலீல் மதனீ.
  4. சம்ஷுல்லுஹா.
  5. முஹம்மது அலி ரஹ்மானி.
  6. ஜே.எஸ்.ரிபாயி.
  7. டி.எம்.ஜபருல்லாஹ்.
  8. அப்துரரஹ்மான் பிர்தவ்சி.
  9. எம்.ஐ.ஸுலைமான்.
  10. எம்.எஸ்.ஸுலைமான்.
  11. அலிஅக்பர் உமரி.
இந்த டிரஸ்டிகளில் இன்றும் பீஜெயோடு ஒட்டிக்கொண்டிருக்கும் பலர் இருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். இதில் தமுமுக பிரிவின் பின்னால் ரிபாயி போன்ற சிலர் விலகிய பிறகு, பீஜேயின் நம்பிக்கைக்கு பாத்திரமான கலீல்ரசூல், அன்வர்பாஷா உள்ளிட்டோர் டிரஸ்டிகளாக சேர்க்கப்படுகிறார்கள். இந்த கல்லூரியில் அன்றும், தவ்ஹீத் ஜமாத் மாநில நிர்வாகிகள் தான் படம் நடத்தினர்கள். நிர்வாகம் செய்தார்கள். இன்றும் இந்த கல்லூரி ததஜ மேலான்மைக்குழுத் தலைவர் சம்சுல்லுஹா தலைமையில், ஜமாத்தின் கல்லூரி போலவே செயல்படுகிறது. மேலும், இந்த இஸ்லாமிய அறக்கட்டளை டிரஸ்டை ஜமாஅத்தில் சேர்க்கவேண்டும் என்ற கருத்து எழுந்தபோது, அதை சைபுல்லாஹ் நீங்கலாக , அனைவரும் எதிர்த்தார்கள். குறிப்பாக கலீல்ரசூல் கடுமையாக எதிர்த்தார். அதன் பின்னால் பீஜே தலைமையில் நடந்த பிறிதொரு அமர்வில், ஜமாஅத்தின் சார்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இக்கல்லூரி ஜமாஅத்தின் அதரவு பெற்ற கல்லூரியாக அவதாரம் எடுத்தது.
  1. இக்கல்லூரியின் பாடத்திட்டம் ஜமாஅத் தான் தீர்மானிக்கும்.
  2. இக்கல்லூரியில் மாணவர் சேர்க்க; நீக்கம் ஜமாஅத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
  3. கணக்கு வழக்குகளில் ஜமாஅத் தலையிடும்.
உள்ளிட்டவைகள் முக்கிய நிபந்தனைகளாகும். மேலும் இந்த இஸ்லாமிய அறக்கட்டளைக்கு சொந்தமான பல லட்சங்கள் மதிப்புள்ள ஒரு சொத்து இன்றைக்கு ததஜ கைவசம் உள்ளது. இதையெல்லாம் இங்கே குறிப்பிடுவதற்கு காரணம், அது தனி நிர்வகம்மா; அதுக்கும் ஜமாத்துக்கும் சம்மந்தமில்லம்மா; என்று பீஜே ஜகா வாங்குவார் என்பதற்காகத் தான்.

இப்போது சொல்லுங்கள். பீஜே வெளிநாட்டு நிதியில் யோக்கியராக இருந்தால், அந்த நிதியை திருப்பி அனுப்பாமல், ஜமாஅத்தின் மேற்பார்வையில் இயங்கும் ஒரு கல்லூரிக்கு வாங்கிக் கொடுத்தது ஏன்? பேங்கில் நாம் போடும் பணத்திற்கு வரும் வட்டியை வாங்கி, வேறு நற்காரியத்திற்கு பயன்படுத்தினால் கூட ஹராம் என்று பத்வா வழங்கும் பீஜே, தான் கொண்ட கொள்கைக்கு மாற்றமாக அதே வெளிநாட்டு நிதியை தனது ஜமாஅத் மேற்பார்வையில் இயங்கும் ஒரு நிறுவனத்திற்கு வாங்கித் தந்தது முரண்பாடில்லையா? [குறிப்பு; வட்டியை இங்கே உதாரணத்திற்குத்தான் காட்டியுள்ளோம். அதை நாம் சரிகானவில்லை. எனவே அதை வைத்து ஹலால்- ஹராம் என பீஜே திசை திருப்ப முயற்சிக்க வேண்டாம்]

மேலும், காயல்பட்டினம் இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் பணிகளுக்காக ஹாமித்பக்ரி, சைபுல்லாஹ் ஹாஜா ஆகியோர் வெளிநாட்டு நிதி பெற முயற்ச்சித்தார்கள். அது தனி நிறுவனமாக இருந்தாலும், இவ்விருவரும் ஜமாஅத்தின் முக்கிய பொறுப்பில் இருப்பதால், ஜமாஅத் தான் வசூலிக்கிறது என்ற தோற்றம் வரும் என்று நான் தடுத்து விட்டேன் என்று கூறும் பீஜே, அதே முக்கிய நிர்வாகிகளான ஹாமித்பக்ரியும், சைபுல்லாஹ்வும், லுஹாவும், இரண்டு சுலைமாங்களும், பிர்தவ்சியும், கலீல் ரசூலும், அன்வர்பாஷாவும் அங்கம் வகிக்கும் இந்த இஸ்லாமிய அறக்கட்டளைக்கு தானே முன் வந்து வெளிநாட்டு நிதியை பெற்றுத் தருகிறார் என்றால், இப்போது ஜமாஅத்தின் கொள்கை பாதிக்கப்படாதா? ஜமாஅத் பெயரில் வாங்கினால் தவறு. ஜமாஅத் நிர்வாகிகள் தனியாக கூடி ஒரு டிரஸ்டை உருவாக்கி அதற்காக வாங்கினால் தவறில்லையோ? மேலும், இஸ்லாமிய அறக்கட்டளை வெளிநாட்டு நிதி பெறலாம் என்றால், இஸ்லாமிய கல்விச் சங்கம் வெளிநாட்டு நிதி பெற முயற்ச்சித்ததை தடுத்தது பீஜேயின் மாற்றாந்தாய் மனப்பான்மையில்லையா? 

இதையொட்டி நாம் கேட்பது;
  1. வெளிநாட்டு நிதி ஜமாஅத் பெயரால் பெறக்கூடாது என்றால், ஜமாஅத் நிர்வாகிகள் தனிக்கடை போட்டு வசூலிக்கலாமா? அதற்கு பீஜே துணை நின்றது அவரது கொள்கைக்கு முரணில்லையா? பீஜேயின் இந்த வழிகாட்டுதல் அடிப்படையில், அவரது ஜமாஅத் நிர்வாகிகள், வெளிநாடுகளில் ஜமாஅத்திற்காக இல்லாமல் துணை நிறுவனங்களை ஏற்படுத்தி வசூலித்துக் கொள்ளலாமா?
  2. ஜமாஅத் சம்பளம் கொடுக்க கூட முடியாமல் திணறியபோது, ஹாமித்பக்ரி இஸ்லாமிய கல்விச் சங்கத்திற்காக வசூல் வேட்டையாடினார் என்று குமுறிய பீஜே, அதே காலகட்டத்தில் ஒரு பெருந்தொகையை இஸ்லாமிய அறக்கட்டளைக்கு பெற்றுத்தந்தது முரண்பாடில்லையா? 
  3. வெளிநாடுகளில் நாமாகப் போய் வசூலிக்கக் கூடாது. வெளிநாட்டினர் தாமாக தந்தால் வாங்கிக் கொள்ளலாம் என்றால், இதுவரை எத்தனை கோடிகள் வெளிநாட்டவரிடம் இருந்து ஜமாத்திற்காக வாங்கப்பட்டது என்று பீஜே சொல்லுவாரா?
  4. இஸ்லாமிய அறக்கட்டளைக்கும், அதன் பெயரால் இயங்கும் இஸ்லாமியக் கல்லூரிக்கும், அதன் சொத்துக்களுக்கும் ஜமாத்திற்கோ, தனக்கோ சம்மந்தமில்லை என்று கூறுவரா? அதன் சொத்து ஆவணங்களை ஜமாஅத் வாங்கி வைத்திருப்பது எதற்காக என்று கூறுவாரா?
  5. ஜமாத்திற்கு சம்மந்தமில்லை என்று பீஜே கூறினால், சென்னை களஞ்சியம் பெண்கள் கல்லூரியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த இரு தவ்ஹீத் ஜமாஅத் தாயிகளை உடனடியாக நிறுத்தியது போல், இஸ்லாமியக் கல்லூரியின் தலைவர், முதல்வர், ஆசிரியர்கள் என வியாபித்திருக்கும் தனது ஜமாத்தினரை உடனடியாக கல்லூரியை விட்டு வெளியேறச் சொல்லுவாரா? 
  6. இஸ்லாமியக் கல்லூரி சரியென்றால், அதில் தனது ஜமாஅத் நிர்வாகிகள் அங்கம் வகிக்கலாம் என்றால், அதற்காக வெளிநாட்டு நிதியும் பெறலாம் என்றால், காயல்பட்டினம் இஸ்லாமிய கல்விச் சங்கமும் சரிதான் என்றும், அதற்காக வெளிநாட்டு நிதி பெறலாம் என்றும், அதை ஹாமித்பக்ரி மீதான காழ்ப்புணர்வில் தான் எதிர்த்தேன் என்றும் பீஜே சொல்லுவாரா?
  7. ஹாமித்பக்ரியின் இஸ்லாமிய கல்விச் சங்கத்தில் இன்றும் அண்ணனின் அபிமானியாக இருக்கும் அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி உள்ளிட்ட அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் தாயிகள் சிலர் சம்பளம் பெற்றது எதற்காக என்று பீஜே சொல்லுவாரா? 
  8. இலங்கை வெளிநாடு இல்லை என்றோ, அந்த நாட்டின் பணம் அன்னிய நிதியில்லை என்றோ, தனது கொள்கை அரபு நாட்டு நிதிக்கு மட்டும் தான் என்றோ பீஜே சொல்லுவாரா?
வெளிநாட்டு நிதியும், பீஜேயின் அப்பட்டமான பொய்களும் இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்....

இலங்கையில் பள்ளிவாசல் மீதான தாக்குதலைக் கண்டித்து, குவைத்தில் இதஜ நடத்திய கண்டனக் கூட்டம்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
லங்கை தம்புள்ளா பகுதியில், புத்த பிக்குகள் மற்றும் சிங்கள வெறியர்களால் மஸ்ஜிதுல் ஹைரிய்யா தாக்கப்பட்டதைக் கண்டித்தும், தாக்குதல் நடத்திய காடையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும், இலங்கையின் மதசார்பின்மைக்கு சாவுமணியடிக்கத் துடிக்கும் ராஜபக்சேயின் இனவெறி அரசைக் கண்டித்தும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் சார்பாக 4 -5 -2012 வெள்ளிக்கிழமை மாலை மாபெரும் கண்டனக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு இதஜ கவுரவ ஆலோசகர் கூத்தூர் ஜாபர் தலைமை ஏற்று சிற்றுரையாற்ற, மண்டலத்துணைத் தலைவர் ஜாஹித் பிர்தவ்ஸ் இறைமறை ஓத, மண்டலத் தலைவர் முகவைஅப்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். மண்டலச் செயலாளர் அபூஷிபா அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மக்கள் தொடர்பாளர் பீர் மரைக்காயர், தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் பொதுச்செயலாளர் அப்துர்ரஹீம், காயிதே மில்லத் பேரவையின் தலைவர் தலைவர் முஹம்மது பாரூக், குவைத் இந்தியா பிடர்நிட்டி பார்ம் அமைப்பின் பிரதிநிதி சிக்கந்தர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் குவைத் பிரதிநிதிகள் சத்யா மற்றும் விஜயன், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் குவைத் பிரதிநிதிகள் அன்பரசன் மற்றும் அறிவழகன் ஆகியோர் மஸ்ஜித் தாக்கப்பட்டதற்கு எதிரான தங்களின் கண்டனக் கணைகளை, வார்த்தை ஏவுகணைகளை ராஜபக்சேயின் இனவாத அரசிற்கு எதிராக ஏவினார்கள். 

தொடர்ந்து, பள்ளிவாசலை தாக்கிய காடையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பள்ளிவாசல் இடம் மாற்றப்படாது என்ற உத்திரவாதத்தை இலங்கை அரசு வழங்கவேண்டும், இலங்கையில் மதசுதந்திரம் பேணப்பட சர்வதேச நாடுகள் இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும், பள்ளிவாசல் தாக்கப்பட்ட விசயத்தில் இலங்கை அரசைக் கண்டிக்காத இந்திய நடுவன் அரசையும், தமிழக அரசையும் கண்டிக்கிறோம் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பள்ளிவாசல் தாக்கப்படவில்லை என்று அறியாமையில் இருந்த மக்களுக்கு, மக்கள் ரிப்போட்டரில் வெளியான புத்த பிக்குகளின் மதவெறியாட்ட படங்களும், தர்கா இடிக்கப்பட்ட படமும், இடிக்கப்பட்ட பள்ளிவாசலை இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் பார்வையிடும் படங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டதால் உண்மைநிலையை அறிந்துகொண்டதாக கூறினர். இறுதியாக மண்டலப் பொருளாளர் சாதிக்சதாம் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. எல்லாப் புகளும் அல்லாஹ்வுக்கே.
மதிமுகவின் சம்பை விஜயன்.
தமுமுகவின் பீர் மரைக்காயர்.
காயிதே மில்லத் பேரவையின் முஹம்மது பாரூக்.
விடுதலைச் சிறுத்தைகளின் பிரதிநிதி அன்பரசன்.


இலங்கையில் பள்ளிவாசல் மீதான தாக்குதலைக் கண்டித்து, குவைத்தில் இதஜ நடத்திய கண்டனக் கூட்டம்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
லங்கை தம்புள்ளா பகுதியில், புத்த பிக்குகள் மற்றும் சிங்கள வெறியர்களால் மஸ்ஜிதுல் ஹைரிய்யா தாக்கப்பட்டதைக் கண்டித்தும், தாக்குதல் நடத்திய காடையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும், இலங்கையின் மதசார்பின்மைக்கு சாவுமணியடிக்கத் துடிக்கும் ராஜபக்சேயின் இனவெறி அரசைக் கண்டித்தும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் சார்பாக 4 -5 -2012 வெள்ளிக்கிழமை மாலை மாபெரும் கண்டனக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு இதஜ கவுரவ ஆலோசகர் கூத்தூர் ஜாபர் தலைமை ஏற்று சிற்றுரையாற்ற, மண்டலத்துணைத் தலைவர் ஜாஹித் பிர்தவ்ஸ் இறைமறை ஓத, மண்டலத் தலைவர் முகவைஅப்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். மண்டலச் செயலாளர் அபூஷிபா அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மக்கள் தொடர்பாளர் பீர் மரைக்காயர், தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் பொதுச்செயலாளர் அப்துர்ரஹீம், காயிதே மில்லத் பேரவையின் தலைவர் தலைவர் முஹம்மது பாரூக், குவைத் இந்தியா பிடர்நிட்டி பார்ம் அமைப்பின் பிரதிநிதி சிக்கந்தர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் குவைத் பிரதிநிதிகள் சத்யா மற்றும் விஜயன், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் குவைத் பிரதிநிதிகள் அன்பரசன் மற்றும் அறிவழகன் ஆகியோர் மஸ்ஜித் தாக்கப்பட்டதற்கு எதிரான தங்களின் கண்டனக் கணைகளை, வார்த்தை ஏவுகணைகளை ராஜபக்சேயின் இனவாத அரசிற்கு எதிராக ஏவினார்கள். 

தொடர்ந்து, பள்ளிவாசலை தாக்கிய காடையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பள்ளிவாசல் இடம் மாற்றப்படாது என்ற உத்திரவாதத்தை இலங்கை அரசு வழங்கவேண்டும், இலங்கையில் மதசுதந்திரம் பேணப்பட சர்வதேச நாடுகள் இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும், பள்ளிவாசல் தாக்கப்பட்ட விசயத்தில் இலங்கை அரசைக் கண்டிக்காத இந்திய நடுவன் அரசையும், தமிழக அரசையும் கண்டிக்கிறோம் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பள்ளிவாசல் தாக்கப்படவில்லை என்று அறியாமையில் இருந்த மக்களுக்கு, மக்கள் ரிப்போட்டரில் வெளியான புத்த பிக்குகளின் மதவெறியாட்ட படங்களும், தர்கா இடிக்கப்பட்ட படமும், இடிக்கப்பட்ட பள்ளிவாசலை இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் பார்வையிடும் படங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டதால் உண்மைநிலையை அறிந்துகொண்டதாக கூறினர். இறுதியாக மண்டலப் பொருளாளர் சாதிக்சதாம் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. எல்லாப் புகளும் அல்லாஹ்வுக்கே.
மதிமுகவின் சம்பை விஜயன்.
தமுமுகவின் பீர் மரைக்காயர்.
காயிதே மில்லத் பேரவையின் முஹம்மது பாரூக்.
விடுதலைச் சிறுத்தைகளின் பிரதிநிதி அன்பரசன்.


வியாழன், 3 மே, 2012

வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடங்களின் விவரங்களை திரட்ட அரசு உத்தரவிடுமா?

 

மிழகத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் பற்றிய விபரங்களை திரட்டி, அவற்றை சி.டி.யாக பதிவு செய்து, இந்து அறநிலையத்துறை கமிஷனருக்கு நில அளவைத் துறையின் கமிஷனர் வழங்க வேண்டும் என்று கடந்த 23.11.09 அன்று தமிழக அரசின் வருவாய்த் துறை அரசாணை பிறப்பித்தது. மேலும், இந்தத் தகவல்களை ஆவண காப்பகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட துறைகளிடம் இருந்து நில அளவை கமிஷனர் பெற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த அரசாணையின்படி, நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இந்த அரசாணையின்படி தகுந்த நடவடிக்கையை விரைவில் எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சர்வதேச ஸ்ரீ வைஷ்ணவ தர்ம சம்ரக்ஷனா சங்கத்தின் தலைவர் சுவாமி கோவிந்த ராமாணுஜதாசா தாக்கல் செய்துள்ளார். 

இந்த மனுவை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவில், 
இந்த உத்தரவை நிறைவேற்றும் விதமாக, 8 மாவட்டங்களில் இருந்து நில விவரங்கள் பெறப்பட்டுள்ளன.மற்ற மாவட்டங்களில் உள்ள கலெக்டர்களிடம் இருந்து உரிய தகவல்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று நில அளவைத்துரையின் கமிஷனரின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. எனவே அரசு துறைகளின் பணி நிலவரங்களை கருத்தில் கொண்டு, மேலும் 4 மாத கால அவகாசத்தை அளிக்கிறோம். மற்ற மாவட்ட கோவில் நில விபரங்கள், ஆவணங்களை ஸ்கேன் செய்து சி.டி.யாக்கி எல்லா விபரங்களையும் இந்த காலகட்டத்துக்குள் பெற்று, அதை இந்து சமய அறநிலையத் துறை கமிஷனரிடம் நிலஅளவைத்துறையின் கமிஷனர் வழங்க வேண்டும். இந்த மனு மீதான விசாரணையை 4 மாதங்களுக்கு தள்ளிவைக்கிறோம்'' என்று கூறியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை விட பன்மடங்கு அதிகமாக வக்பு வாரியத்திற்கு உள்ளது. வக்பு வாரியத்தின் சொத்துக்கள் எங்கெங்கு இருக்கிறது என்ற விபரங்கள் வக்பு வாரியத்தில் இருப்பது போல் தெரியவில்லை. அப்படி சொத்துக்களின் தகவல்கள் முழுமையாக வக்பு வாரியத்தால் ஆவணப்படுத்தப் பட்டிருந்தால், முறையாக கண்காணிக்கப் பட்டிருந்தால் இந்த அளவுக்கு ஆக்கிரமிப்புகள் நடந்திருக்காது. எனவே நில அளவைத்துறை வக்பு வாரியத்தின் சொத்துக்களை ஆவணப்படுத்தி, சீடியாக வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க அரசு ஆவன செய்யவேண்டும். அந்த ஆவன சீடியிலிருந்து ஊர் வாரியான சொத்து விபரங்களை பிரித்தெடுத்து அது தொடர்பான தகவல்கள் அடங்கிய ஒரு பிரதியெடுத்து எங்கே வக்பு சொத்துக்கள் உள்ளதோ அந்த ஊரின் மஹல்லா ஜமாஅத் நிர்வாகத்திற்கு வழங்கி, உங்கள் ஊரில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான இன்னின்ன சொத்துக்கள் உள்ளன. இதில் யாரேனும் ஆக்கிரமித்தால், அத்துமீறினால் வக்பு வாரியத்திற்கு தெரியப்படுத்துங்கள் என்று வக்பு வாரியம் சொல்லவேண்டும். ஒவ்வொரு ஊர் மஹல்லா ஜமாஅத்தினரும் தமது ஊரில் உள்ள வக்பு சொத்தை கண்காணித்து வந்தால், ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றி விடலாம். அதோடு இந்த ஆவணப்படுத்தும் முயற்சி வருங்கால சந்ததிகளுக்கும் நமது சொத்துக்களை அறிந்துகொள்ளும் தலையாய ஆதாரமாக திகழும். 

மேலும், வக்பு சொத்துக்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டு பாதுகாக்கப்படும் என்று உறுதியளித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, கோயில் சொத்துக்கள் விசயத்தில் காட்டும் கனிவை வக்பு சொத்துக்களிலும் காட்டுவாரா?பார்ப்போமே!


பொதி சுமக்கும் இயந்திரங்களா பிஞ்சுகள்.?

ரு காலத்தில் ஐந்து வயதில் தான் பிள்ளைகளை பள்ளிக்கூடத்தில் சேர்ப்பார்கள். இன்றோ தாய்மையின் அரவணைப்பு தேவைப்படும் இரண்டு வயது மூன்று வயதிலெல்லாம் பிள்ளைகளை ஆங்கில வழிக்கல்வியில் சேர்த்துவிட்டு விடுகிறார்கள். மேலும், ஐந்தாம் வகுப்புவரை ஒரு சிலேட்டும், சில புத்தகங்களும், ஒன்றிரண்டு நோட்டுகளும் இருந்த நிலை மாறி, இன்று 
L .K .G. பிள்ளைகள் கூட ஒரு பொதி அளவு புத்தகங்களை சுமக்க முடியாமல் சுமத்து செல்வதைக் காணமுடிகிறது. இவ்வாறு பிஞ்சுகள் கஷ்டப்படுவதை யாரும் பெரிய அளவில் அலட்டிகொள்வதில்லை. ஆனால் இவ்வாறு பிள்ளைகள் புத்தகச் சுமையை சுமப்பது அந்த குழந்தைக்கு பாதிப்பை உண்டாக்கும் என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது.

பள்ளி செல்லும் சிறுவர்கள் புத்தகபை சுமந்து செல்வதால் ஏற்படும் பாதிப்பை கண்டறிவதற்காக சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர், ஐதராபாத் உள்ளிட்ட 10 முக்கிய நகரங்களில் வசிக்கும் பள்ளிச்சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் அஸ்சோசம் என்ற சுகாதார அமைப்பு ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வில் 5 முதல் 12 வயதுள்ள பள்ளிச்சிறுவர்கள் அளவுக்கு அதிகமாக முதுகில் புத்தக சுமையை தினமும் சுமந்தபடி செல்வதால் அவர்கள் கடுமையான முதுகுவலியால் அவதிப்படுவதாகவும், முதுகில் சுமை ஏற்றப்பட்டு குனிந்தவாறு செல்வதால் 12 வயதுக்குட்பட்ட 1500 குழந்தைகள் முதுகெலும்பு பாதிக்கப்பட்டு அவதிப்படுவதாகவும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் குறைந்த வயதில் அதிக சுமையை சுமப்பதன் மூலம் அந்த குழந்தைகளின் முதுகு தண்டு வடம் பாதிக்கப்படும் அபாயமும், சதைபிடிப்பால் பாதிக்கப்படும் அபாயமும் இருப்பதாக சுகாதார ஆய்வு நிறுவன கமிட்டி தலைவர் பி.கே.ராவ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் குழந்தைகள் நலனில் அக்கறை காட்டும் வகையில் வெளிநாடுகளில் இருப்பதுபோன்று பாடத்திட்டங்களை நவீனப்படுத்தி, புத்தகங்களை குறைப்பதன் மூலம் பிஞ்சுகளின் சுமையைக் குறைக்க அரசு முன்வருமா?

போலீஸ் தடையை மீறி விடுதலை சிறுத்தைகள் சார்பில் இலங்கை தூதரகம் முற்றுகை; ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு தொல்.திருமாவளவன் கைது .

சென்னை, மே.4
போலீஸ் தடையை மீறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு போராட்டம் நடத்திய தொல்.திருமாவளவன் கைது செய்யப்பட்டார். 

இலங்கையில் மசூதி இடிப்பு சம்பவத்தை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக விடுதலை சிறுத்தை கட்சி அறிவித்திருந்தது. இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் இலங்கை தூதரகம் அருகே நேற்று போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். 
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் ஏராளமான பேர் இலங்கை தூதரகம் அருகே முற்றுகையிட்டு இலங்கை அரசுக்கு எதிராக கோஷம் போட்டனர். சிலர் நடுரோட்டில் உட்கார்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஒருசிலர் ராஜபக்சே உருவபொம்மையையும், அவரது படத்தையும் தீவைத்து எரித்தனர்.
 
இதை தடுத்தபோது போலீசாருக்கும், விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

போலீஸ் தடையை மீறி முற்றுகை போராட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், செய்தி தொடர்பாளர் வன்னிஅரசு, பொருளாளர் முகமது யூசுப், கொள்கை பரப்பு துணை செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி, வழக்கறிஞர் பழனிமுத்து உள்பட ஏராளமான பேர் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட அனைவரையும் போலீசார் வேனில் ஏற்றி நாககேஸ்வரராவ் பூங்கா அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைத்திருந்தனர். முன்னதாக தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:
இலங்கை தம்புள்ளை நகரில் அமைந்துள்ள சுமார் 70 ஆண்டுகள் பழமைவாய்ந்த மசூதியை ராஜபக்சே அரசு இடித்துள்ளது. இதை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது. 

தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் தொடர்ந்து எதிராக செயல்பட்டுவருகிற ராஜபக்சேவை சர்வதேச சமூகம் தண்டிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை அப்புறப்படுத்த வேண்டும். இடித்த இடத்தில் மீண்டும் மசூதியை கட்டிதருவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு கைதாகி இருக்கிறோம்.

நன்றி; தினத்தந்தி.