சனி, 30 மார்ச், 2013

குவைத்தில்.....

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


குவைத்தில்.....

தமிழ் முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் ஜமாத்களின் கூட்டமைப்பு சார்பாக....

இலங்கை தமிழினப் படுகொலை மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறிப் போக்கை கண்டித்தும், மியான்மர் முஸ்லிம் இனப்படுகொலையை கண்டித்தும் மாபெரும் கண்டனக்கூட்டம்& கூட்டமைப்பு அறிமுக நிகழ்ச்சி.


நாள்; 05.04.2013
வெள்ளிக்கிழமை மாலை சரியாக 7;00 மணிக்கு இன்ஷா அல்லாஹ்.

இடம்; பின்னர் அறிவிக்கப்படும்.

அனைவரையும் அன்போடு அழைக்கிறது.
தமிழ் முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் ஜமாத்களின் கூட்டமைப்பு- குவைத்.
federation for islamic tamil organization-kuwait. (FITO_KUWAIT)

தொடர்புக்கு; 66490687, 65653431, 55428835

குவைத் தமிழ் முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் ஜமாத்களின் கூட்டமைப்பு உதயம்!


குவைத்தில்.....

தமிழ் முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் ஜமாத்களின் கூட்டமைப்பு உதயம்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

குவைத் தமிழ் முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் ஜமாத்களின் கூட்டமைப்பின் 6 வது  கலந்தாய்வுக் கூட்டம் 28.03.2013 அன்று மிர்காப்பில் உள்ள தஞ்சை  உணவகத்தின் பார்ட்டி ஹாலில் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இயக்கங்கங்கள், அமைப்புகள் மற்றும் ஜமாத்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும், கடந்த அமர்வில் பைலா தாக்கல் செய்யப்பட்டதன தொடர்ச்சியாக, பைலாவின் அடிப்படையில் தலைமை ஒருங்கிணைப்பாளராக முஹம்மதுபந்தர் முஹம்மது பாரூக் அவர்களும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக முகவை அப்பாஸ் மற்றும் நெல்லை பீர்மரைக்காயர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதுபோக 7 நிர்வாகக்குழு உறுப்பினர்களும் 3 ஆலோசகர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டமைப்பின் பிரதான கொள்கை கோட்பாடுகள்;

  • இஸ்லாமிய ஷரியத் மற்றும் முஸ்லிம்களுக்கு பாதகமான, பாதிப்பை உண்டாக்கும் பொதுவான பிரச்சினைகளுக்கு எதிராக இந்த கூட்டமைப்பு செயல்படும். இதற்கான விழிப்புணர்வு கூட்டங்கள், பிரசுரங்கள் உள்ளிட்ட எல்லா செயல்பாடுகளையும் கூட்டமைப்பின் கீழ் செயல்படுத்துவது. 
  • இந்த கூட்டமைப்பு கருத்துவேறுபாடுகள் கொண்ட இஸ்லாமிய மசாயில்களில் தலையிடாது.
  • கூட்டமைப்பின் கொள்கை கோட்பாடுகளை ஒப்புக்கொள்ளும் குவைத்தில் செயல்படும் எந்த ஒரு இஸ்லாமிய இஸ்லாமிய இயக்கங்களும், ஊர் ஜமாத்துகளும் கூட்டமைப்பில் இணைந்து செயல்பட முன்வரலாம்.
  • இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்க, எவரும் தான் அங்கம் வகிக்கும் இயக்கத்தை கலைக்கும் அவசியமில்லை. 

இக்கூட்டமைப்பில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத், காயிதேமில்லத் பேரவை, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மஜ்லிஸ் இஹ்யாவுஸ் ஸுன்னா(MISK), தமிழ்நாடு இஸ்லாமிய மாணவர் பேரவை உள்ளிட்ட இயக்கங்கள் அங்கம் வகிக்கின்றன.

தமிழகத்தில் கூட்டமைப்பின்  மூலம் நம் வலிமையை அரசு மட்டத்திலும் ஆதிக்க வர்க்கத்திற்கும் உணர்த்தி அல்லாஹ்வின் உதவியால் சில வெற்றிகளை ஈட்டியது மேலும் தொடர குவைத்திலிருந்து நமது குரலும் ஒனறினையட்டும். சமுதாய களத்தில் அங்கம் வகிக்க அனைத்து இயக்கத்தவரையும், ஜமாத்தினரையும் அன்போடு அழைக்கிறோம்.

இவண்;

முஹம்மது பாரூக் - முகவை அப்பாஸ் - பீர் மரைக்காயர்.

மேலதிக தொடர்புக்கு; 66490687,  65653431, 55428835


தமிழ் முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் ஜமாத்களின் கூட்டமைப்பு- குவைத்.

செவ்வாய், 19 மார்ச், 2013

Makkal Report 4-27 Poster



மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி


இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை தேவை இல்லாத Service - களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்து பணம் பறிப்பது. பேங்க் கொள்ளைகளை விட, இதில் தான் நிறைய பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும். இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக தப்பிக்கும் வழியை பார்ப்போம். 


இப்படி நமக்கு Activate செய்யப்படும் சர்வீஸ்களுக்கு VAS (Value Added Services) என்று பெயர். Dialer Tune/Caller Tune, Wallpaper, SMS(Joke, Devotional மற்றும் பல) மற்றும் பல இதில் வரும். 


இம்மாதிரி பிரச்சினை எந்த நெட்வொர்க்கில் வந்தாலும் நீங்கள் 155223 என்ற அலைபேசி எண்ணுக்கு அழைத்தால் நீங்கள் எந்த Service Activate செய்து உள்ளீர்களோ அதை Cancel செய்து விடலாம். இதை அழைக்க கட்டணம் எதுவும் கிடையாது.




தவறுதலாக எடுக்கப்பட்டிருந்து நீங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொண்டு Complaint செய்தால் உங்கள் பணம் திரும்ப கொடுக்கப்பட்டு விடும். 24 மணி நேரத்திற்கு பின் நீங்கள் Call செய்தால் சர்வீஸ் மட்டும் கான்சல் செய்யப்படும். 


நீங்களாக Activate செய்த சர்வீஸ்களையும் இதில் Deactivate செய்யலாம். அநேகமாக அனைத்து நிறுவனங்களும் தற்போது இதை கொண்டு வந்துவிட்டன. உங்கள் நெட்வொர்க்குக்கும் இது வந்து விட்டதா என்று அழைத்து பாருங்கள். 



வீட்டை விட்டு வெளியேறும் போது ஓதும் துஆ (Dua while going out of home)


 

 


 

ராக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையம் - தமிழ் மற்றும் சிங்களப் பிரிவு

Rakah Islamic Cultural Center - Tamil & Sinhala language section


ஃபலஸ்தீன் பெண் விடுதலைப் போராளி மர்யம் ஃபர்ஹாத் மரணம்

 

Palestine's 'mother of martyrs' Mariam Farhat dies in Gaza

காஸ்ஸா: 'உயிர் தியாகிகளின் அன்னை' என்றழைக்கப்படும் ஃபலஸ்தீன் விடுதலைப் போராளியும், பாராளுமன்ற உறுப்பினருமான மர்யம் ஃபர்ஹாத்(வயது 64) மரணமடைந்தார். ஞாயிற்றுக் கிழமை காஸ்ஸா மருத்துவமனையில் வைத்து அவரது மரணம் நிகழ்ந்தது. நுரையீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பால் சிகிட்சைப் பெற்றுவந்தார் மர்யம்.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டத்தில் முன்னணி போராளியான மர்யம் தனது தீரமிக்க உரைகளின் மூலம் ஃபலஸ்தீன் மக்களின் உள்ளங்களில் விடுதலைப் போராளியாக நீங்கா இடம் பிடித்துள்ளார். 17 வயது மகனை இஸ்ரேலியர்களை கொலைச் செய்ய போர்க்களம் அனுப்பியதன் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்தார் மர்யம் ஃபர்ஹாத்.

2002-ஆம் ஆண்டு இவரது மகன் முஹம்மது ஃபத்தாஹ் நடத்திய தாக்குதலில் 5 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். ஆறு பிள்ளைகளில் 3 பேர் இஸ்ரேலுடன் நடந்த போராட்டத்தில் உயிர்தியாகி ஆனார்கள். ஒரு மகன் 11 ஆண்டுகள் இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

தனது மகன்கள் கொல்லப்பட்ட வேளையில்; "எனது மகன்கள் உயிர் தியாகிகளாக மாறியதில் நான் அபிமானம் கொள்கிறேன்" என்று மர்யம் ஃபர்ஹாத்தின் பதில் அமைந்தது,

2005-ஆம் ஆண்டு செய்தி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் மர்யம் ஃபர்ஹாத் "அப்பாவிகளை கொலைச் செய்ய இஸ்லாம் அனுமதிக்கவில்லை. ஆனால், இஸ்ரேலிகளுக்கு தயவு கிடையாது. நாங்கள் அனுபவிப்பது அல்ல சமாதானம். நாங்கள் விரும்பும் சமாதானம் என்பது அனைத்து ஃபலஸ்தீன் மக்களின் சுதந்திரமாகும். ஜோர்டான் நதி முதல் மத்திய தரைக்கடல் வரையிலான ஃபலஸ்தீனின் சுதந்திரம். அவர்களுக்கு(இஸ்ரேல்) சமாதானம் தேவையென்றால் இதற்கு அவர்கள் தயாராகவேண்டும். சுதந்திர ஃபலஸ்தீனின் கீழ் அவர்கள் அமைதியாக வாழலாம். இந்த சுதந்திரம் கிடைக்கும் வரையில் நாங்கள் போராட்டக் களத்தில் இருந்து பின்வாங்கமாட்டோம்." இவ்வாறு கூறினார்.

'உம்மு நிதால்' 'ஃபலஸ்தீனின் கன்ஸா' போன்ற புனைப்பெயர்களில் ஃபலஸ்தீனில் பிரபலமானவர் மர்யம் ஃபர்ஹாத். ஃபலஸ்தீன் பிரதமர் இஸ்மாயீல் ஹானிய்யா மற்றும் உயர் ஹமாஸ் தலைவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் மர்யம் ஃபர்ஹாத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். மர்யமின் மரணம் குறித்து ஹமாஸ் தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.