வியாழன், 31 மே, 2012

உண்மையான மக்கள் தொண்டர்!


புகை நமக்கு பகை!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
ண்டு தோறும் (மே-31) உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. புகையிலையை பயன்படுத்துவது நாகரீகத்தின் அடையாளமாக கருதும் அளவுக்கு பெரும்பாலானோரை அது ஆட்கொண்டுள்ளது. நவநாகரீக பெண்களையும் இப்பழக்கம் சுற்றி வளைத்துள்ளது. இந்த புகையிலை நாகரீக வளர்ச்சிக்கேற்ப பல்வேறு பரிமாணங்களில் தனது உயிர் கொல்லி வேலைகளை கச்சிதமாக செய்து வருகிறது. 

ஒரு காலத்தில் புகையிலையாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்து, பின்பு சுருட்டாக, பின்பு பீடியாக சிகரெட்டாக, பான்பராக்காக, குட்காவாக, போதை தரும் பீடாக்களாக இவ்வாறான பல்வேறு முகங்கள் இந்த புகையிலைக்கு உண்டு. இதில் புகையிலையை, புகையிலையாக பீடாக்களாக பான்பராக்குகளாக பயன்படுத்துவதை பொருத்தமட்டில், யார் அதை உட்கொள்கிறாரோ அவரை மட்டுமே பாதிக்கும்.

ஆனால் புகைப்பதை பொருத்தமட்டில், புகைப்பவர் மட்டுமல்லாது அவருக்கு அருகாமையில் உள்ளவரையும் சேர்த்தே பாதிக்கும். புகை பிடிப்பவர் அருகே புகை பிடிக்காதவர் ஒருவர் இருந்தால், புகைப்பவர் விடும் புகையை இவர் சுவாசித்து, புகைக்காத மனிதருக்கும் நோய் வரும் நிலை. சிகரெட் புகைக்காமல் அடுத்தவர் பிடித்த சிகரெட் புகையால் பாதிக்கப்பட்டு ஆண்டு தோறும் சுமார் 6 லட்சம் பேர் பலியாகி வருவது தெரிய வந்துள்ளது. 

அவர்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள் மற்றும் 30 சதவீதம் ஆண், பெண் அடங்குவர். மேலும் இதயநோயினால் 3 லட்சத்து 79 பேரும், 1 லட்சத்து 65 பேர் மூச்சு கோளாறு சம்பந்தப்பட்ட நோயினாலும், 36 ஆயிரத்து 900 பேர் ஆஸ்துமாவினாலும், 21 ஆயிரத்து 400 பேர் நுரையீரல் புற்று நோயினாலும் ஆண்டு தோறும் மடிகின்றனர். புகையிலை பொருட்களில் சிகரெட் முதலிடத்தை வகிக்கிறது. 

* சிகரெட்டில் 4 ஆயிரம் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. இவற்றில் 43 வேதிப் பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை. 

* உலக அளவில் 6 விநாடிக்கு ஒருவர் புகைப்பிடிப்பதால் மரணத்தை தழுவுகிறார். 

* ஆண்டிற்கு 60 லட்சம் பேர் சிகரெட் உள்ளிட்ட புகையிலை தயாரிப்புகளால் உயிரை துறக்கின்றனர். 

* 2030-ம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கை ஒரு கோடியாக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. 

* வளரும் நாடுகளை சார்ந்தோர் 70 சதவீதம் பேர் இதில் அடங்குவர். 

* 10 சிகரெட் பிடிப்பவர் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நச்சு பொருளை உட் கொண்டு வெளியிடுகிறார். இவரால் மனைவி, குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். 

* பியூட்டேன், காட்மியம், ஸ்டியரிக் ஆசிப், அம்மோனியா, நாப்தலமைன், போலோனியம் உள்பட வேதிப்பொருட்கள் சிகரெட் புகையில் உள்ளன. இவை வெடிகுண்டு, பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்க பயன்படுபவை. 

* புகை பழக்கம் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கிறது. மாரடைப்பு, நுரையீரல் நோய், புற்றுநோய், சர்க்கரை, பக்கவாதம், தமனிச்சுருக்கம் குறிப்பாக கால், கை தமனிகள் அடைப்பு, ரத்தக்கொதிப்பு ஏற்படுகிறது. புகை பிடிப் போருக்கு மாரடைப்பால் இளவயதிலும் திடீர் மரணம் ஏற்படலாம். 

* இது இருதய துடிப்பை யும், ரத்த கொதிப்பையும் கூட்டுகிறது. மூக்குப்பொடி, புகையிலை உண்பது, பீடி புகைப்பதும், சிகரெட்டுக்கு சமமானதே. ஆண்களுக்கு மலட்டுத்தன்மையும், வீரியக் குறையும் ஏற்பட வாய்ப்புள்ளது. புகை பிடிப்போரின் குழந்தைகளுக்கு சளி, இருமல், மூச்சுத்திணறல் ஏற்படலாம். 

* சிகரெட் போன்ற புகையிலை பொருளில் புற்றுநோயை உற்பத்தி செய்யும் நச்சுப்பொருட்கள் உள்ளன. இவை வாய், தொண்டை, மூச்சுக்குழாய், உணவுக்குழாய், சிறுநீரக பாதை வரை எங்கு வேண்டுமானாலும் புற்று நோயை ஏற்படுத்தும். 

* நுரையீரல் நோய், புற்று நோய் ஏற்பட காரணம் புகை பிடிப்பதே. 

* உலக மக்கள் தொகையில் ஆஸ்துமா 15 சதவீத மக்களையும், சி.ஓ.பி.டி. என்ற இளைப்பு நோய் 5 சதவீத மக்களையும் பாதித்துள்ளது. இதற்கு புகை பிடிப்பதும் காரணம். 

* சிகரெட் புகைப்பதால் நுரையீரல், 30 வயதில் 60 வயதுக்குரிய தன்மையுடன் செயல்படும். 

* புகையிலை தொடர்பான சிகரெட், பீடி போன்ற வற்றை வாங்க தினமும் குறைந்தது 20 ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளதால், பொருளாதார பாதிப்பும் ஏற்படுகிறது. 

இத்தகைய தீங்களிக்கும் புகைப்பிடிக்கும் பழக்கமுடையவர் ஒரு முஸ்லிமாக இருந்தால் அவர் மற்றவருக்கு தீங்கை நாடுவதால் அவர் சிறந்த முஸ்லிமாக ஆகமாட்டார்.

நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்;
'பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். மேலும் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டவற்றைவிட்டு ஒதுங்கியவரே முஹாஜிர் எனும் துறந்தவராவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்கள்.[நூல்;புஹாரி]

மேலும் ஒரு முஸ்லிம் எல்லாவகையிலும் நன்மையான விஷயங்களில் பிறருக்கு முன்னுதாரணமாக திகழவேண்டும். தீமையான விஷயத்தில் முன்னுதாரணமாக திகழக்கூடாது. புகைபிடிப்பவர்கள் தன்னுடைய வீட்டில் சர்வ சாதாரணமாக புகைப்பதால், இவரை பார்த்து இவரது பிள்ளைகளுக்கும் இந்த பழக்கம் தொற்றிக்கொள்கிறது. அதுபோல் இவரது நண்பர்கள் உறவினர்கள் சிலரும் புகைப்பதற்கு இவர் காரணியாக அமைந்துவிடுவார். ஒரு முஸ்லிமை பொறுத்தவரையில், ஒரு நன்மைக்கு வழிகாட்டினால் அந்த நன்மையை உலகம் அழியும்வரை யார் செய்தாலும் அதிலும் இவருக்கு ஒருபங்கு நன்மை கிடைக்கும். தீமைக்கு வழிகாட்டினால் உலகம் அழியும்வரை இவர் காட்டிய தீமையை யாரெல்லாம் செய்கிறார்களோ அதிலிருந்து ஒரு பங்கு இவருக்கு கிடைக்கும்.

பொருளாதார வீண் விரயங்கள்;
புகைப்பிடிக்கும் ஒருவர் தான் இந்த பாழாய்ப்போன புகைக்கு செலவிட்டதை ஒரு ஆண்டு சேமித்து வைத்து பார்ப்பாரானால், அவரே பிரமிக்கும் அளவுக்கு ஒரு தொகை விரயமானதை உணர்வார். இத்தகைய வீண் விரயங்களுக்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா?

நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்; [மறுமையில்] அடியானின் பாதம் நகராது நான்கு கேள்விகளுக்கு பதிலளிக்காதவரை;
அதில் ஒன்றுதான் , எந்தவழியில் சம்பாதித்தாய்; எந்தவழியில் செலவழித்தாய்..? [திர்மிதி]


நாளை மறுமையில் அல்லாஹ் மேற்கண்ட கேள்வியை கேட்கும்போது, நாம் செலவு செய்த பட்டியலில் சிகரெட் மற்றும் புகையிலைக்காக அளித்த காசும் வருமே! அதற்கு என்ன பதில் சொல்லமுடியும்? சிகரட் பிடிப்பது மார்க்கத்தில் ஆகுமானது எனவே சிகரெட்டுக்காக செலவழித்தேன் என்று கூறமுடியுமா? அல்லது சிகரெட் பிடிப்பது உடம்புக்கு நல்லது எனவே சிகரெட்டுக்காக செலவழித்தேன் என்று கூறமுடியுமா? இந்த வீண் விரையத்திற்காக இறைவன் தரும் தண்டனையை தாங்க முடியுமா? சிந்திக்க வேண்டும்.

புகை பிடிப்பவர்கள் சைத்தானின் சகோதரர்கள்;
அல்லாஹ் கூறுகின்றான்;
நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். (17:27)

சிகரெட்டுக்காக செலவழிக்கும் பணத்தை ஒரு ஆண்டு நீங்கள் சேமித்தால் எத்துனை ஆயிரங்களை விரயமாக்கியிருக்கிறோம் என்று கணக்கிடமுடியும். ஒரு பாக்கெட் சிகரெட்டுக்காக செலவிடும் காசை ஒரு ஏழைக்கு தர்மம் செய்தால் உங்கள் செல்வமும் பெருகும். மறுமையில் நன்மையும் கிடைக்கும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இறைவன் நமக்கு பகுத்தறிவை வழங்கியுள்ளான். காசையும் கொடுத்து கெடுதியை வாங்குவதுதான் பகுத்தறிவா என்று சிந்திக்க வேண்டும்.

அரசாங்கத்தின் கவனத்திற்கு;
ஒரு மக்கள் நலன் நாடும் அரசின் நோக்கம் அரசு கஜானாவை நிரப்புவதில் மாத்திரம் இருக்கக் கூடாது. மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். புகை- போதை ஆகியவற்றின் மூலம் மக்களை நாசமாக்கி, அவர்களின் பொருளாதரத்தை திருடும் அரசு, அந்தப்பணத்தில் இலவசங்களை அளிப்பதினால் எந்த புண்ணியமும் இல்லை. எனவே உணமியில் அரசுக்கு மக்கள் நலனில் அக்கறையிருக்குமானால், 'புகையிலை தொடர்பான அனைத்து பொருள்களும் விற்க தடை' என்று சட்டம் கொண்டுவரவேண்டும். அதைவிடுத்து, அரசின் வருமானத்திற்காக புகையிலையை அனுமதிப்பது; பிறகு அதை தடுக்க 'விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்வது , பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போன்றதாகும்.

நீதிமன்றத் தீர்ப்புகள்; ஒரு இஸ்லாமியப் பார்வை- தொடர்[3]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

மூகத்தை சீரழிக்கும் குற்றவாளிகள் முதல், மத்திய நடுவன் அரசு தொடங்கி, மாநில அரசு வரை நடுங்குவது நீதிமன்றங்களைப் பார்த்துத் தான் என்றால் அது மிகையல்ல. அப்படிப்பட்ட நீதிமன்றங்களின் சில தீர்ப்புகள் அறிவுப்பூர்வமாகவும், சில தீர்ப்புகள் கேலிக்குரியதாகவும் அமைந்து விடுகின்றன. அந்த வகையில் சமீபத்தில் நீதிமன்றங்களில் வழங்கப்பட்டுள்ள சில தீர்ப்புகளில் நமது பார்வையை செலுத்துவோம்.

விளையாட்டு என்பது மனிதனுக்கு மனதளவிலும், உடலளவிலும் ஒரு மாறுதலைக் கொண்டு வருவதனால் விளையாட்டு அவசியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அந்த வகையில் உடலுக்கு வலுவூட்டுவதொடு, நீண்டநேரம் மூச்சை விடாமல் இருக்கும் பயிற்சியை வழங்கும் கபடி, உடல் வலிமை தரும் கால்பந்து, கைகளுக்கும், உடலுக்கும் வலுவூட்டுவதொடு சிறந்த தற்காப்புக் கலையாகவும் விளங்கும் சிலம்பம், மான்கொம்பு போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் நடைமுறையில் இருந்துள்ளன. இத்தகைய அறிவுக்கும் உடலுக்கும் பயன்தரும் விளையாட்டுகளை ஒழிக்கும் வகையில் எவ்வித பயனுமற்ற சூதாட்டமும், கிரிக்கெட்டும் இன்று மக்களை ஆட்கொண்டுள்ளது. இதில் சூதாட்டம் எனப்படும் சீட்டுக்கட்டு விளையாட்டில் பல்வேறு பரிமாணங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் ரம்மி ஆட்டம் என்பதாகும். இந்த ரம்மி ஆட்டம் ஆடுவது சட்டரீதியாக சரியானதா? என்பதில், சட்ட வல்லுனர்களுக்கு மட்டுமன்றி நீதிமான்களுக்கே குழப்பமாக உள்ளது போலும். 

சென்னையில் உள்ள ஒரு கலாசார சங்கத்தில் ரெய்டு நடத்திய போலீசார், அங்கே அப்போது மங்காத்தா என்ற சூதாட்டத்தை ஆடுவதாக கூறி 56 பேர் மீது வழக்கு தாக்கல் செய்தனர். 178 பண டோக்கன்களையும் கைப்பற்றினர். இதை எதிர்த்து அந்த சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ''ரம்மி சீட்டு விளையாட்டு சூதாட்ட குற்றத்தின் கீழ் வராது. அது மனரீதியான திறமையை வளர்க்கும் விளையாட்டு. பந்தயமாக பணம் கட்டியோ, கட்டாமலோ ரம்மி விளையாடுவது சூதாட்டம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. எனவே ரம்மி சீட்டு விளையாடுவதை தடுக்கும் விதமாக போலீசார் தலையிடக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. 

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் விசாரித்தார். அவர், ''வாய்ப்பை ஏற்படுத்தி பணத்தை கொட்டிக் கொடுக்கும் மற்ற சீட்டுக்கட்டு ஆட்டங்களைப் போல், ரம்மி ஆட்டத்தை கருத முடியாது. பல திறமையான அம்சங்களை உள்ளடக்கிய ஆட்டம் என்று சுப்ரீம் கோர்ட்டு உட்பட பல கோர்ட்டுகளில் ரம்மி பற்றி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. எனவே மனுதாரர் கூறுவதுபோல், அவர்கள் ரம்மி ஆட்டம்தான் ஆடியிருந்தால் அதில் குற்றம் கண்டுபிடிக்க முடியாது. பணம் வைத்து ரம்மி ஆடியிருந்தாலும் அது குற்றமல்ல. எனவே மனுதாரர் சங்கத்தை தொந்தரவு செய்யக்கூடாது' என்று தீர்ப்பளித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் போலீசார் அப்பீல் செய்தனர். இந்த அப்பீல் வழக்கை நீதிபதிகள் டி.முருகேசன், பி.பி.எஸ்.ஜனார்த்தன ராஜா ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: ரம்மி சீட்டாட்டம், மனிதனின் திறமையை பரிசோதிக்கும் ஒரு விளையாட்டாகத்தான் உள்ளது. திறமைக்காகவும், பொழுதுபோக்குக்காகவும் ரம்மி விளையாடும்போது அதில் போலீசார் தலையிடக் கூடாது. அதற்கு போலீசாருக்கு உரிமை இல்லை.
ஆனால் திறமையை சோதிக்கும் அதே ரம்மி ஆட்டத்தை பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் பணம் வைத்து விளையாடும்போது, அதை ஒரு சூதாட்டத்துக்கான ஆட்டமாகவே கருத வேண்டும். அதுபோன்ற நிலையில் சூதாட்டத்தை தடுக்கும் நோக்கத்தில், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று சோதனை மேற்கொள்ளவும், பணம் வைத்து ரம்மி ஆடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு அதிகாரம் உண்டு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட இந்த ரம்மி விசயத்தில் நீதிபதிகளுக்கே முரண்பட்ட பார்வை இருப்பதையும், உச்சநீதி மன்றம் ஒருவகையான தீர்ப்பும் உயர்நீதிமன்றம் ஒருவகையான தீர்ப்பும் வழங்கியுள்ளதைப் பார்க்கிறோம். இப்படியெல்லாம் பணம் வைத்து விளையாண்டால் தான் தவறு என்று சொல்லி ஆதரவு அளிக்கும் அளவுக்கு ரம்மி மனிதனுக்கு ஊட்டச்சத்து தரக்கூடிய ஒன்றா? ரம்மியாக இருந்தால் என்ன? வேறு வகை சூதாட்டமாக இருந்தால் என்ன? மொத்தத்தில் சூதாட்டம் என்பதே மனிதகுலத்திற்கு கேடுதானே! சூதாட்டங்களால் நடுத்தெருவுக்கு வந்த குடும்பங்கள் எத்தனை? சூதாட்டத்தால் ஏற்பட்ட சண்டைகள் எத்தனையோ? இதெல்லாம் நீதிமான்கள் அறியாத ஒன்றா? நீதிமான்கள் செய்யவேண்டியது என்ன? ஒரே தீர்வு சூதாட்டத்திற்கு தடைவிதிப்பதுதான்.

இதோ சூதாட்டம் பற்றி திருமறை குர்ஆன் வழிகாட்டுகிறது;

நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே 

பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் 

தடுத்து விடத்தான். எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? [அல்-குர்ஆன் 5 ;91 ]

ரம்மி ஆட்டத்தில் நீதிபதிகள் ஆட்டத்தை [தடுமாற்றத்தை] பார்த்த நாம், அடுத்து பார்க்க விருப்பது பரபரப்பான ஓரினச் சேர்க்கை சம்மந்தமானதாகும். ஆதிமனிதனை படைத்த கடவுள் அந்த மனிதன் மகிழ்வுற இன்னொரு ஆன் மகனை படைக்கவில்லை. மாறாக அங்கே ஒரு பெண்ணைப் படைத்து அந்த பெண்ணை ஆதிமனிதனுக்கு ஜோடியாக்கி, அவர்களை இன்புற்று வாழச் செய்து அவ்விருவர் மூலமாக மனித சமுதயத்தை பல்கிப் பெருகச் செய்தான். ஒரு ஆனும் பெண்ணும் இணைவதுதான் இயற்கை. ஆனும் பெண்ணும் இணையும் வகையில் தான் அவர்களின் உடலமைப்பும் வடிவமைக்கப் பட்டுள்ளது. மனிதர்கள் மட்டுமன்றி கால்நடைகள், பறவைகள், தாவரங்கள் இவைகள் கூட ஜோடி ஜோடியாகவே படைக்கப்பட்டு, அவைகள் கூட எதிர்பாலினத்தில் தான் இன்புற்று மகிழ்கின்றன. ஒரு ஆன் சிங்கம் இன்னொரு ஆன் சிங்கத்தை உறவுக்கு பயன்படுத்தியதாக காண முடியாது. காரணம் அவைகள் இயற்கையை மீறவில்லை. ஆனால் மனிதன் எங்கும் எதிலும் புதுமையாக செய்வேன் என்று கிளம்பி இன்று நாகரீகம் என்ற பெயரில் ஒருபால் உறவு எனும் ஓரினச்சேர்க்கையில் வந்து நிற்கிறான். இந்த ஓரினச் சேர்க்கை இயற்கைக்கு எதிரானது மட்டுமன்றி, மனிதனை அழித்தொழிக்கும் கொடிய எயிட்ஸ் நோய் போன்றவற்றை பரப்பும் காரணியாக உள்ளது. 

ஒரு சாமான்ய மனிதன் தவறு செய்தால் அவனை அந்த தவறிலிருந்து தடுத்து நிறுத்தும் கடிவாளம் போடவேண்டிய இடத்தில் உள்ள நீதிமன்றம், கடந்த 2009ம் ஆண்டு, ''அந்தரங்கமான ஒரு இடத்தில், இரண்டு நபர்கள் சம்மதித்து, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் அது குற்றம் அல்ல என்ற ஒரு தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டு வழங்கியது. அந்த தீர்ப்பில், ஓரினச்சேர்க்கை குற்றம் என்று கூறி, அதற்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ள இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377 திருத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறி இருந்தனர்.

நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த தீர்ப்பினை எதிர்த்து பாரதீய ஜனதா தலைவர் பி.பி.சிங்கால், ஓரினச்சேர்க்கை எதிர்ப்பாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் வழக்குகளை தாக்கல் செய்தனர். இந்த அப்பீல் வழக்குகளை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாய் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த ஓரினச் சேர்க்கை விசயத்தில் நீதிமன்றத்தில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் ஓரினச் சேர்க்கை குற்றம்தான்' என்றும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் '(இருவர் சம்மதத்துடனான) ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என்ற ஐகோர்ட்டு தீர்ப்பில் எந்த சட்டத்தவறும் இல்லை என்று மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது' என்றும் முன்னுக்குப் பின் முரணாக வாதங்கள் வயப்பட்டு நீதிபதிகளின் கண்டனத்திற்கு இலக்கான மத்திய அரசு, இறுதியில் ஒரு வழியாக,


ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றம் அல்ல என்பதுதான் மத்திய அரசின் நிலை ஆகும். ஐகோர்ட்டு தீர்ப்பில் இருந்து, ஓரினச்சேர்க்கை குற்றம் என்பது ஓரினச் சேர்க்கையாளர்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும் என்பதை தெரிந்துகொண்டோம். தெளிவு பெற்றோம். ஐகோர்ட்டின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டோம். அதற்கு எதிராக அரசு அப்பீல் செய்யவில்லை'' என்று முடித்துக் கொண்டது. இனி உச்சநீதிமன்றம் இந்த விசயத்தில் முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகளோ மாறிவரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப, ஓரினச்சேர்க்கை மீதான பார்வையிலும் மாற்றம் வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். ஏற்கனவே ஓரினச்சேர்க்கை குற்றம் என்று கூறி, அதற்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ள இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377 திருத்தப்பட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்ற  நீதிபதிகள் கூறியுள்ள நிலையில், மத்திய அரசும் ஓரினச்சேர்க்கைக்கு ஒத்து ஊதிவிட்ட நிலையில், இனி ஓரினச் சேர்க்கைக்கு பச்சைக்கொடி காட்டுவதற்கு எந்த தடையும் உச்சநீதிமன்றத்திற்கு இல்லை. ஆனால் எதார்த்தம் என்ன? 

இந்த விசயத்தில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் 2009 ல் வழங்கிய தீர்ப்பில் கூறியுள்ள, ''அந்தரங்கமான ஒரு இடத்தில், இரண்டு நபர்கள் சம்மதித்து, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் அது குற்றம் அல்ல என்ற கருத்துப் பிரகாரம், இதே உரிமையை விபச்சாரம் மற்றும் கள்ளக்காதல், முறைகேடான உறவில் ஈடுபடுபவர்களும் கையிலெடுத்தால், ஒரு ஆனும் பெண்ணும் அந்தரங்கமான ஒரு இடத்தில் இருவரும் சம்மதித்து திருமணத்திற்கு செய்யாமலேயே கூடினாலும் யாரும் தடுக்க முடியாதே! விடுதிகளில் விபச்சாரம் செய்யும் ஆனும் பெண்ணும், விரும்பித்தானே செய்கிறார்கள். அவர்களை காவல்துறை கைது செய்வதும் நீதிபதிகளின் இந்த தீர்ப்பின் அடிப்படையில் தவறுதானே! எந்த ஆனும் எந்த பெண்ணும் பரஸ்பரம் சம்மதித்து உறவு கொண்டால் அதை தடுக்கும் உரிமை இல்லாமல் போகுமே? அதைத்தான் நீதிமன்றம் விரும்புகிறதா? இதைத்தான் மத்திய அரசும் விரும்புகிறதா? இதுதான் மக்கள் நலன் நாடும் தீர்வுகளா? சிந்திக்க வேண்டும். ஒரு பாலினச் சேர்க்கை என்பது உரிமை சம்மந்தப்பட்டதல்ல. அது ஒழுக்ககேட்டின் உச்சம். அது தடைசெய்யப் பட்டே தீரவேண்டிய ஒரு மிகப்பெரிய தீமையாகும். இதைப்பற்றி திருமறைக் குர்ஆன் ஒரு தீர்க்கமான தீர்வை சொல்கிறது. இதுபோன்ற ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட மாபாவிகள் நிலை என்னவானது என்று விளக்குகிறது.

ஓரினச் சேர்க்கையை சர்வசாதரணமாக செய்துவந்த ஒரு பகுதி மக்களிடம் கடவுளின் தூதராக லூத் [அலை] அவர்கள் வருகிறார்கள். பல்வேறு உபதேசங்களை அந்த மக்களுக்கு வழங்குகிறார்கள். பெண்களை விட்டுவிட்டு வேறு வழியில் நீங்கள் முறையற்ற தீய செயலை செய்கிறீர்களா? இதோ என்னுடைய புதல்விகள்; உங்களுக்கு திருமணம் செய்து வாழ பரிசுத்தமானவர்கள் என்றெல்லாம் கடவுளின் தூதர் லூத் [அலை] அவர்கள் சொன்ன அறிவுரைக்கு அந்த மக்கள் செவியை சென்றடையவில்லை. இறுதியாக, ''அந்த மக்கள் வசித்த அவ்வூரின் பூமியின் மேல் பரப்பை கீழ்ப் பரப்பாக மாறினோம். இன்னும் அதன் மீது சுடப்பட்ட செங்கற்களை மழைபோல் பொழிவித்தோம் என்று குர்'ஆன் விவரிக்கிறது. ஆக இந்த ஓரினச் சேர்க்கை என்பது இறைவனின் கோபத்திற்கு இலக்காக்கும் செயல் என்பதும், இயற்கைக்கும் முரணான ஒன்று என்பதும், இவ்வாறான தீய செயல்களில் ஈடுபடுபவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதும் நீதிமன்றங்கள் அறியவேண்டிய ஒன்றாக உள்ளது. 

தீர்ப்புகள் வரும்....



சீர்கேட்டில் ஈடுபடும் ஆசிரியர்கள் சீட்டுக்'கிழிக்கப்படும்; தமிழக அரசு அதிரடி உத்தரவு.

''மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்வார்கள்; இந்த பழமொழியில் நமக்கு உடன்பாடில்லை. ஆயினும் பெற்றெடுத்த பெற்றோருடன், படைத்த இறைவனுடன் வைத்து மதிக்கும் அளவுக்கு ஆசிரியர்கள் உயர்வான இடத்தில் மக்கள் மனதில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்காக இதைச் சொல்கிறோம். இதற்கு காரணமும் இல்லாமலில்லை. ஒரு குழந்தை பால்குடி மறக்கிறதோ இல்லையோ, அடுத்து அந்த குழந்தைகளை பெற்றோர் நம்பி ஒப்படைப்பது ஆசிரியர்களிடம் தான். ஒரு குழந்தை பெற்றோருடன் இருக்கும் நேரத்தை விட, ஆசிரியர்களுடன் கழிக்கும் நேரம் தான் அதிகம். குழந்தையை வார்த்தெடுக்கும் சிற்பியாக பெற்றோர்கள் கருதுவது ஆசிரியர்களைத்தான். இந்த அளவுக்கு மக்கள் நம்பிக்கை வைத்துள்ள ஆசிரியர்கள், தங்களின் நம்பகத்தன்மையை காப்பாற்றுகிறார்களா என்றால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பெரும்பாலான ஆசிரியர்கள், தம்மிடம் கல்வி பயிலும் பிள்ளைகளை அதிலும் குறிப்பாக பெண்பிள்ளைகளை நாசம் செய்யும் வேலையை நாள் தவறாமல் செய்தி ஊடகங்களின் வாயிலாக அறிகிறோம்.

தம்மிடம் படிக்கும் பெண் பிள்ளைகளிடம் வரம்பு மீறுவது, பணிய மறுத்தால் பெயிலாக்கி விடுவேன் என்று மிரட்டுவது, ஒருமுறை வலையில் வீழ்த்தி விட்டால் அதை சொல்லி மிரட்டியே தொடர் கற்பழிப்பில் ஈடுபடுவது, டியூசன் வகுப்புகள், சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் தனது வீட்டிற்கு மாணவிகளை வரவழைத்து, தனிமையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது, மாணவியர் தங்கும் விடுதிகளிள் ரகசிய கேமராக்கள் மூலம் மாணவிகளின் குளியலறை வரை கண்களை நுழைப்பது. இவ்வாறு ஆசிரியர்கள் என்ற பெயரில் சிலர் காமகொடுரர்களாகவே வலம் வந்தாலும், பெரும்பாலான பிள்ளைகள் இவர்களின் இந்த இழிசெயலை வெளியே சொல்வதில்லை. துணிந்து சில பிள்ளைகள் சொல்வது மட்டுமே வெளியுலகிற்கு வருகின்றது. 

இவ்வாறான இழிசெயலை செய்யும் ஆசிரியர்கள் கையும் களவுமாக மாட்டிக்கொண்டாலும் அவர்களுக்கு பெரிய அளவிலான தண்டனை கிடைப்பதில்லை. துறைரீதியான சில கண்துடைப்பு விசாரணைகள்; நடவடிக்கைகள் என்ற அளவில் தான் உள்ளன. இது தவறு செய்யும் ஆசிரியர்களுக்கு ஒரு தெம்பை தருவதாக இருப்பதாக மக்களால் விமர்சிக்கப்பட்ட நிலையில், அரசு அதிரடியாக ஒரு உத்தரவை வெளியிட்டு பெற்றோர் நெஞ்சில் பாலை வார்த்துள்ளது.

தமிழக அரசு 17ம் தேதியிட்ட அரசாணையில், பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா கூறியிருப்பதாவது:

மாணவர்களுக்கு முன் உதாரணமாகவும், வழிகாட்டியாகவும் செயல்பட வேண்டிய ஆசிரியர்களில் சிலர், மாணவ, மாணவியரிடம், ஒழுக்கக்கேடான முறையில் நடந்து கொள்கின்றனர்.இதனால், மாணவர் சமுதாயம், குறிப்பாக பெண் குழந்தைகள் மோசமாக பாதிக்கப்படுவது குறித்து, சமீபகாலமாக ஊடகங்களில், செய்திகள் அதிகளவில் வெளி வருகின்றன. இதுகுறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர், அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.இந்த அவல நிலையை உடனடியாக களையவும், மாணவ, மாணவியரிடம், ஆசிரியர் தவறான முறையில் நடந்து கொள்ளும் நிலையை முற்றிலும் தவிர்ப்பதற்கும், உரிய நடவடிக்கைகள் எடுக்க, பள்ளிக்கல்வி இயக்குனர், அரசுக்கு பரிந்துரைத்தார். பரிசீலனைக்குப் பின், தமிழக அரசு முடிவை எடுத்துள்ளது.

அதன்படி, தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு கடும் தண்டனையாக, கட்டாய ஓய்வு, பணி நீக்கம் மற்றும் பணியறவு (டிஸ்மிஸ்) போன்ற தண்டனைகள் வழங்கப்படும்.
அரசுப் பள்ளி ஆசிரியரைப் பொறுத்தவரை, அரசுப் பணியாளர் நடத்தை விதி 19(2), இதற்குப் பொருந்தும். இவ்விதியை மீறுபவர்களுக்கு, மேற்குறிப்பிட்ட தண்டனைகளுள் ஒன்று வழங்கப்படும். அத்துடன், சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.

பள்ளி குழந்தைகளும், மாணவ, மாணவியரும், பிற நபர்களின் தவறான நடவடிக்கைகளில் இருந்து, தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில், அவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மாணவ, மாணவியரின் மனநிலை பிரச்னைகளை களைய, உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்கென, பள்ளிக்கல்வித் துறை மூலம், உளவியல் ஆலோசகர், உதவியாளர் மற்றும் அனைத்து வகை வசதிகளுடன் கூடிய நடமாடும் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தி, மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வும், ஆசிரியருக்கு ஆலோசனைகளும் வழங்க வேண்டும். இவ்வாறு, சபிதா கூறியுள்ளார்.

இந்த அரசாணையில் கூறப்பட்டுள்ள நடைமுறைகள் தனியார் கல்வியகத்தின் ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என கருதப்படுகிறது. சமூக சீர்கேட்டில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான இந்த தண்டனை என்பது ஏட்டளவில் இருந்துவிடாமல், செயல்பாட்டில் இருக்கவேண்டும் என்பதோடு, அத்தகையோருக்கு பள்ளியில் அனைத்து மாணவ-மாணவியர் முன்னிலையில் கசையடி வழங்கினால்தான் அவர்களும் திருந்துவார்கள்; இந்த தண்டனையைப் பார்க்கும் ஏனைய இதுபோன்ற எண்ணமுள்ள ஆசிரியர்களுக்கும் புத்தி வரும் என்பதுதான் மக்களின் கருத்தாக உள்ளது. 

இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்லியாகவேண்டும். ஆசிரியர் என்ற பெயரில் இழிசெயலை செய்வதை தடுக்க ஆர்வப்படும் அரசு, அத்தகைய தவறுக்கு வழிகோலும் காரணிகளை களைய முற்படவேண்டும். ஆண்கள் தனியாக பெண்கள் தனியாக பயிலும் வகையில் பள்ளிகள் கட்டப்பட்ட வேண்டும். ஆண்களுக்கு ஆண் ஆசிரியரையும், பெண்களுக்கு பெண் ஆசிரியரையும் நியமிக்க வேண்டும். சில தனியார் பள்ளிகளில் வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளின் முட்டுக்கால் அளவுக்கு ஸ்கர்ட்டும், இறுக்கமான சிறிய அளவிலான சட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன. இவைகள் மாற்றப்பட்டு அவர்களின் முழு உடலமைப்பும் மறையும் வகையிலான சீருடை வழங்கப்பட வேண்டும். மாணவியை வகுப்பறையில் சக மாணவியர் சகிதமாக இருக்கும் நிலையிலன்றி, வேறு எங்கும் ஆசிரியர் தனிமையில் சந்திப்பது தடுக்கப்பட வேண்டும். மாணவியை விசாரிப்பதாகவே இருந்தாலும் தனிமையில் ஆசிரியர் விசாரணை நடத்தக் கூடாது. இவ்வாறான இன்னும் சில கட்டுப்பாடுகளை அரசு அமுல்படுத்தினால் குற்றங்கள் குறையவும், பெற்றோர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடவும் வாய்ப்பு உண்டாகும். அரசு கவனிக்குமா?




செவ்வாய், 29 மே, 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 12]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அயல்நாட்டு நிதி விசயத்தில் பீஜேயின் அப்பட்டமான பொய்களையும், முரண்பாடுகளையும் அலசிவரும் இந்த தொடரில், அயல்நாட்டு நிதி விசயத்தில் மார்க்கத்திற்கு முரணான அவரது மனோஇச்சை முடிவையும், அவரது இரட்டை வேடங்களையும் அம்பலப்படுத்தி வருகிறோம். சலபுக் கொள்கை வழிகேடு என விமர்சித்துவிட்டு, அரபு நாட்டுச் சலிக்காக 'நாங்களும் சலபுகள் தான்' என்று அரபியில் கடிதம் அனுப்பியதை அம்பலப்படுத்தினோம். இப்போது அவரது மற்றொரு இரட்டை வேடம் ஒன்றைப்பார்ப்போம்.

எஸ்.பி. பட்டினம் பள்ளிவாசல் ததஜ ஜமாஅத்திற்கு எழுதித்தரப்படுகிறது. அதனால் அந்த பள்ளிக்கு ததஜ உரிமை கொண்டாடி இப்போது வென்றெடுத்துள்ளதை அனைவரும் அறிவோம். இந்த பள்ளிவாசல் பிரச்சினை நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில், தொண்டியைச் சேர்ந்த சகோதரர் அப்துர்ரஹ்மான் மன்பஈ அவர்கள் இஸ்லாம் கல்வி டாட்.காமில் ஒரு கட்டுரை எழுதுகிறார். அதில், ''எஸ்.பி. பட்டினம் பள்ளிவாசல் தங்கள் ஜமாஅத்தின் பெயரால் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், தங்களுக்கே அந்த பள்ளி சொந்தம் என்று ததஜவினர் உரிமை கொண்டாடுகின்றனர். அது நியாயம்தான். இதே நியாயத்தின் அடிப்படையில் ஜாக் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ள கடயநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக், மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான், திருச்சி தவ்ஹீத் பள்ளிவாசல் ஆகியவற்றை ததஜவினர் ஜாக்கிடம் ஒப்பைடைக்கத்தயாரா? என்று எழுதியிருந்தார்.

இதற்கு தனது அதிகராப்பூர்வ இணையதளத்தில் பதிலளித்த அறிஞர் பீஜே, ''எஸ்.பி. பட்டினம் பள்ளிவாசல் ஒரு தனிநபரின் சொந்த பணத்தில் கட்டப்பட்டு, அவராலேயே நிர்வாகமும் செய்யப்பட்டது. இதில் எஸ்.பி.பட்டினம் ஜமாத்தினரின் சல்லிக்காசும் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக்கும், மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மானும் இந்த நிலையில் உள்ளதா? இப்பள்ளிகளின் நிலம் வாங்குவதற்காகவும், பள்ளிவாசல் கட்டுவதற்காகவும் உடலாலும் பொருளாலும் உழைத்தவர்கள் தவ்ஹீத் சகோதரர்கள். சுன்னத் ஜமாத்தினரின் கடும் எதிர்ப்புகள் வந்தபோதெல்லாம் பள்ளியைக் காத்தவர்கள் தவ்ஹீத் சகோதரர்கள். எனவே இந்த பள்ளிகளையும் எஸ்.பி.பட்டினம் பள்ளியையும் ஒப்பிடுபவர் மூளை குழம்பியவராகத் தான் இருக்கவேண்டும்'' என்று அதில் சாடியிருந்தார். பார்க்க இணைப்பு;

இதில் கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக்கும், மேலப்பாளையம் மஸ்ஜிதுல் ரஹ்மானும் முழுக்க முழுக்க தவ்ஹீத் சகோதரர்களின் பணத்தாலும், உடல் உழைப்பாலும் தான் கட்டப்பட்டது. எனவே அதற்கு தவ்ஹீத் சகோதர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள் என்று அறிஞர் பீஜே சொன்னது உண்மையா? உண்மையில் இப்பள்ளிகளை காட்டித்தந்தது யார்? முதலில் மேலப்பாளையம் விசயத்தைப் பார்ப்போம். அந்த பள்ளி அஹ்மத் அல் அஹ்மத் என்ற அரபி காட்டித்தந்தது என்று பீஜேயும்-லுஹாவும் அளிக்கும் வாக்குமூலத்தை இந்த வீடியோவில் காணுங்கள்;

இந்த வீடியோவில் அஹ்மத் அல் அஹ்மத் என்ற அரபிதான் மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியைக் கட்டித்தந்தவர் என்பதை பீஜேயும் லுஹாவும் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார்கள். அப்படியானால் தவ்ஹீத் சகோதரர்களின் பொருளாதாரத்தால் தான் இப்பள்ளி கட்டப்பட்டது என்று பீஜே சொல்வது அப்பட்டமான பொய்யல்லவா? பீஜே சொல்வது போன்று தவ்ஹீத் சகோதரர்கள் பணத்தில் கட்டப்பட்டது என்றால், சில அரபிக் கடிதங்களை இங்கே வைக்கிறோம். இதுபோன்று சம்சுல்லுஹா அவர்களால் அரபியில் எழுதப்பட்ட எராளமான கடிதங்கள் நம்மிடம் உண்டு. தேவைப்பட்டால் அனைத்தையும் வெளியிடுவோம். 


இந்த அரபிக்கடிதங்கள் தொண்டியிலிருந்தும், மேலப்பாலயத்திளிருந்தும் பிழைக்கப்போன தமிழனுக்கு எழுதிய கடிதங்கள் என்று பீஜே சொல்வாரா? அரபு நாட்டு சல்லியை வெறுக்கும் பீஜே, அந்த அரபு நாட்டில் பிறந்த ஒருவரால், அரபு நாட்டு சல்லியால் கட்டப்பட்ட மஸ்ஜிதுர் ரஹ்மானை விட்டு வெளியேறி தனது ஜமாஅத் தூய்மையானது என்று காட்டுவாரா?

மேலும், மேலப்பாளையம் பள்ளிவாசலைக் கட்டிக் கொடுத்த அஹ்மத் அல் அஹ்மத் என்றும் அரபி, லுஹாவுக்கு சம்பளமும் கொடுத்து வந்துள்ளார் என்பதை மேற்கண்ட வீடியோவில் லுஹா வார்த்தயிலேயே கேட்டீர்கள். மதீனா பல்கலைக் கழகத்தில் பயின்ற சில மதனிகள், சம்பளம் பெறுவதை விமர்சிக்கும் பீஜே, அஹ்மத் அல் அஹ்மத் எனும் அரபியிடம் சம்பளம் பெற்றுவந்த தனது சுப்ரீம்லீடர் லுஹா அவர்களை மட்டும் கண்டுகொள்ளாதது ஏன்? 

மேலும், பள்ளிவாசல் வகைக்காக அஹ்மத் அல் அஹ்மத் தந்த தொகையில் லுஹா மீது பொருளாதாரக் குற்றச்சாட்டு கிளம்பி, அதை லுஹாவுக்கான சம்பளமாக போட்டு பீஜே நேர் செய்து, லுஹாவை காப்பாற்றிய கதையையும் மேற்கண்ட வீடியோவில் கண்டீர்கள். அஹ்மத் அல் அஹ்மத் தனக்கு சில மாதங்கள் சம்பளம் தராததால் பள்ளிவாசல் பணத்தில் கை வைத்தேன் என்று லுஹா சொல்வது உண்மை என்றே வைத்துக் கொண்டாலும், அவரது சம்பளப் பாக்கி அளவுக்கு அல்லலவா எடுத்திருக்க வேண்டும்? மேலதிகமாக ஒன்றரை லட்சம் பள்ளிவாசல் பணத்தை எடுத்ததற்கு பெயர் என்னவோ? அதுவும் ரிபாயி போன்றவர்கள் இந்த பிரச்சினையைக் கிளப்பும்வரை இதற்கு தீர்வு காண லுஹா முயற்சிக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மேலும் லுஹா அவர்களுக்கு ஊதியம் வழங்கிவந்த அஹ்மத் அல் அஹ்மத் எனும் அரபி, மஸ்ஜிதுர் ரஹ்மான் மட்டுமல்ல; தமிழகத்தில் அனைத்து பள்ளிகளையும் உன் மூலமாக நான் நிர்மாணிக்கிறேன். ஆனால் நீ, அஷ்ஷைக் கமாலுத்தீன் மதனியுடன் இருக்கவேண்டும் என்று சொன்னதாகவும், அதை தான் ஏற்கவில்லை என்றும் லுஹா சொல்கிறார். லுஹாவை கொண்டு தமிழகத்தில் நலப்பணிகள் செய்ய முன்வரும் அளவுக்கு அரபியுடன் இணக்கம் கட்டியுள்ள லுஹாவை சுப்ரீம்லீடராக கொண்ட பீஜே, வெளிநாட்டு நிதி பற்றி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டாமா? 

அயல்நாட்டு நிதியில் பீஜேயின் வேஷங்கள் இன்னும் வெளிப்படும் அருளாளன் நாடினால்.


அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 12]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அயல்நாட்டு நிதி விசயத்தில் பீஜேயின் அப்பட்டமான பொய்களையும், முரண்பாடுகளையும் அலசிவரும் இந்த தொடரில், அயல்நாட்டு நிதி விசயத்தில் மார்க்கத்திற்கு முரணான அவரது மனோஇச்சை முடிவையும், அவரது இரட்டை வேடங்களையும் அம்பலப்படுத்தி வருகிறோம். சலபுக் கொள்கை வழிகேடு என விமர்சித்துவிட்டு, அரபு நாட்டுச் சலிக்காக 'நாங்களும் சலபுகள் தான்' என்று அரபியில் கடிதம் அனுப்பியதை அம்பலப்படுத்தினோம். இப்போது அவரது மற்றொரு இரட்டை வேடம் ஒன்றைப்பார்ப்போம்.

எஸ்.பி. பட்டினம் பள்ளிவாசல் ததஜ ஜமாஅத்திற்கு எழுதித்தரப்படுகிறது. அதனால் அந்த பள்ளிக்கு ததஜ உரிமை கொண்டாடி இப்போது வென்றெடுத்துள்ளதை அனைவரும் அறிவோம். இந்த பள்ளிவாசல் பிரச்சினை நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில், தொண்டியைச் சேர்ந்த சகோதரர் அப்துர்ரஹ்மான் மன்பஈ அவர்கள் இஸ்லாம் கல்வி டாட்.காமில் ஒரு கட்டுரை எழுதுகிறார். அதில், ''எஸ்.பி. பட்டினம் பள்ளிவாசல் தங்கள் ஜமாஅத்தின் பெயரால் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், தங்களுக்கே அந்த பள்ளி சொந்தம் என்று ததஜவினர் உரிமை கொண்டாடுகின்றனர். அது நியாயம்தான். இதே நியாயத்தின் அடிப்படையில் ஜாக் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ள கடயநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக், மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான், திருச்சி தவ்ஹீத் பள்ளிவாசல் ஆகியவற்றை ததஜவினர் ஜாக்கிடம் ஒப்பைடைக்கத்தயாரா? என்று எழுதியிருந்தார்.

இதற்கு தனது அதிகராப்பூர்வ இணையதளத்தில் பதிலளித்த அறிஞர் பீஜே, ''எஸ்.பி. பட்டினம் பள்ளிவாசல் ஒரு தனிநபரின் சொந்த பணத்தில் கட்டப்பட்டு, அவராலேயே நிர்வாகமும் செய்யப்பட்டது. இதில் எஸ்.பி.பட்டினம் ஜமாத்தினரின் சல்லிக்காசும் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக்கும், மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மானும் இந்த நிலையில் உள்ளதா? இப்பள்ளிகளின் நிலம் வாங்குவதற்காகவும், பள்ளிவாசல் கட்டுவதற்காகவும் உடலாலும் பொருளாலும் உழைத்தவர்கள் தவ்ஹீத் சகோதரர்கள். சுன்னத் ஜமாத்தினரின் கடும் எதிர்ப்புகள் வந்தபோதெல்லாம் பள்ளியைக் காத்தவர்கள் தவ்ஹீத் சகோதரர்கள். எனவே இந்த பள்ளிகளையும் எஸ்.பி.பட்டினம் பள்ளியையும் ஒப்பிடுபவர் மூளை குழம்பியவராகத் தான் இருக்கவேண்டும்'' என்று அதில் சாடியிருந்தார். பார்க்க இணைப்பு;

இதில் கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக்கும், மேலப்பாளையம் மஸ்ஜிதுல் ரஹ்மானும் முழுக்க முழுக்க தவ்ஹீத் சகோதரர்களின் பணத்தாலும், உடல் உழைப்பாலும் தான் கட்டப்பட்டது. எனவே அதற்கு தவ்ஹீத் சகோதர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள் என்று அறிஞர் பீஜே சொன்னது உண்மையா? உண்மையில் இப்பள்ளிகளை காட்டித்தந்தது யார்? முதலில் மேலப்பாளையம் விசயத்தைப் பார்ப்போம். அந்த பள்ளி அஹ்மத் அல் அஹ்மத் என்ற அரபி காட்டித்தந்தது என்று பீஜேயும்-லுஹாவும் அளிக்கும் வாக்குமூலத்தை இந்த வீடியோவில் காணுங்கள்;http://mugavaiabbas.blogspot.com/

இந்த வீடியோவில் அஹ்மத் அல் அஹ்மத் என்ற அரபிதான் மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியைக் கட்டித்தந்தவர் என்பதை பீஜேயும் லுஹாவும் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார்கள். அப்படியானால் தவ்ஹீத் சகோதரர்களின் பொருளாதாரத்தால் தான் இப்பள்ளி கட்டப்பட்டது என்று பீஜே சொல்வது அப்பட்டமான பொய்யல்லவா? பீஜே சொல்வது போன்று தவ்ஹீத் சகோதரர்கள் பணத்தில் கட்டப்பட்டது என்றால், சில அரபிக் கடிதங்களை இங்கே வைக்கிறோம். இதுபோன்று சம்சுல்லுஹா அவர்களால் அரபியில் எழுதப்பட்ட எராளமான கடிதங்கள் நம்மிடம் உண்டு. தேவைப்பட்டால் அனைத்தையும் வெளியிடுவோம். 


இந்த அரபிக்கடிதங்கள் தொண்டியிலிருந்தும், மேலப்பாலயத்திளிருந்தும் பிழைக்கப்போன தமிழனுக்கு எழுதிய கடிதங்கள் என்று பீஜே சொல்வாரா? அரபு நாட்டு சல்லியை வெறுக்கும் பீஜே, அந்த அரபு நாட்டில் பிறந்த ஒருவரால், அரபு நாட்டு சல்லியால் கட்டப்பட்ட மஸ்ஜிதுர் ரஹ்மானை விட்டு வெளியேறி தனது ஜமாஅத் தூய்மையானது என்று காட்டுவாரா?

மேலும், மேலப்பாளையம் பள்ளிவாசலைக் கட்டிக் கொடுத்த அஹ்மத் அல் அஹ்மத் என்றும் அரபி, லுஹாவுக்கு சம்பளமும் கொடுத்து வந்துள்ளார் என்பதை மேற்கண்ட வீடியோவில் லுஹா வார்த்தயிலேயே கேட்டீர்கள். மதீனா பல்கலைக் கழகத்தில் பயின்ற சில மதனிகள், சம்பளம் பெறுவதை விமர்சிக்கும் பீஜே, அஹ்மத் அல் அஹ்மத் எனும் அரபியிடம் சம்பளம் பெற்றுவந்த தனது சுப்ரீம்லீடர் லுஹா அவர்களை மட்டும் கண்டுகொள்ளாதது ஏன்? 

மேலும், பள்ளிவாசல் வகைக்காக அஹ்மத் அல் அஹ்மத் தந்த தொகையில் லுஹா மீது பொருளாதாரக் குற்றச்சாட்டு கிளம்பி, அதை லுஹாவுக்கான சம்பளமாக போட்டு பீஜே நேர் செய்து, லுஹாவை காப்பாற்றிய கதையையும் மேற்கண்ட வீடியோவில் கண்டீர்கள். அஹ்மத் அல் அஹ்மத் தனக்கு சில மாதங்கள் சம்பளம் தராததால் பள்ளிவாசல் பணத்தில் கை வைத்தேன் என்று லுஹா சொல்வது உண்மை என்றே வைத்துக் கொண்டாலும், அவரது சம்பளப் பாக்கி அளவுக்கு அல்லலவா எடுத்திருக்க வேண்டும்? மேலதிகமாக ஒன்றரை லட்சம் பள்ளிவாசல் பணத்தை எடுத்ததற்கு பெயர் என்னவோ? அதுவும் ரிபாயி போன்றவர்கள் இந்த பிரச்சினையைக் கிளப்பும்வரை இதற்கு தீர்வு காண லுஹா முயற்சிக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மேலும் லுஹா அவர்களுக்கு ஊதியம் வழங்கிவந்த அஹ்மத் அல் அஹ்மத் எனும் அரபி, மஸ்ஜிதுர் ரஹ்மான் மட்டுமல்ல; தமிழகத்தில் அனைத்து பள்ளிகளையும் உன் மூலமாக நான் நிர்மாணிக்கிறேன். ஆனால் நீ, அஷ்ஷைக் கமாலுத்தீன் மதனியுடன் இருக்கவேண்டும் என்று சொன்னதாகவும், அதை தான் ஏற்கவில்லை என்றும் லுஹா சொல்கிறார். லுஹாவை கொண்டு தமிழகத்தில் நலப்பணிகள் செய்ய முன்வரும் அளவுக்கு அரபியுடன் இணக்கம் கட்டியுள்ள லுஹாவை சுப்ரீம்லீடராக கொண்ட பீஜே, வெளிநாட்டு நிதி பற்றி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டாமா? 

அயல்நாட்டு நிதியில் பீஜேயின் வேஷங்கள் இன்னும் வெளிப்படும் அருளாளன் நாடினால்.

மத்திய அரசு வழங்கிய சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டிற்கு நீதிமன்றம் தடை.

முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான(ஒ.பி.சி) ஒதுக்கீட்டில் 4.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை வழங்கும் மத்திய அரசின் உத்தரவை ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் 27 சதவீத இடஒதுக்கீட்டில் சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று 2011-ம் ஆண்டில் வழிகாட்டு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது.

இதை எதிர்த்து ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் பிற்படுத்துப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆர்.கிருஷ்ணய்யா தொடர்ந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

நீதிபதிகளான மதன் பி லோகுர்,  சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு பெஞ்ச் இவ்வழக்கு தொடர்பாக அளித்த தீர்ப்பு:

மதத்தை அடிப்படையாக வைத்து மட்டுமே இந்த இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. வேறு எந்த தெளிவான அம்சமும் பரிசீலிக்கப்படவில்லை. இந்த விஷயத்தை மிகச் சாதாரணமாக மத்திய அரசு கையாளுகிறது.

மதச் சிறுபான்மையினர் அனைவரும் ஒரேவகையான இனக்குழுக்கள் என்பதாகவோ, அவர்கள் சிறப்புச் சலுகை தேவைப்படும் அளவுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் என்பதாகவோ நிரூபிக்கும் எந்தவிதமான ஆதாரத்தையும் மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சமர்ப்பிக்கவில்லை.

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், ஜொராஸ்டிரர்கள் ஆகியோர் ஒரேதன்மை கொண்ட இனக் குழுக்களாக இயங்கவில்லை. அவர்கள் பலவகையான குழுக்களாக இருக்கிறார்கள் என்று நீதிபதிகள் கூறினர்.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவு, ஐ.ஐ.டி. உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஏற்கெனவே நடைபெற்றிருக்கும் மாணவர் சேர்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கிருஷ்ணய்யா சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராமகிருஷ்ண ரெட்டி கூறினார். 

இதற்கிடையில் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

வெள்ளி, 25 மே, 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 11]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அயல்நாட்டு நிதி விசயத்தில் பீஜேயின் அப்பட்டமான பொய்களையும், முரண்பாடுகளையும் அலசிவரும் இந்த தொடரில், அயல்நாட்டு நிதி விசயத்தில் மார்க்கத்திற்கு முரணனான அவரது மனோஇச்சை முடிவையும், அவரது இரட்டை வேடங்களையும் அம்பலப்படுத்தி வருகிறோம். இப்போது அவரது மற்றொரு இரட்டை வேடம் ஒன்றைப்பார்ப்போம்.

சலபுக் கொள்கை வழிகேடு என்று விமர்சித்து வரும் பீஜேயும் அவரது தரப்பினரும், அயல்நாட்டுப் பணம் என்றால் சலபுக் கொள்கை எங்களுக்கு ஒரு பிரச்சினையில்லை என்று சொல்லும் வகையில், ''நாங்களும் சலபுகள் தான்'' என்று வெளிநாட்டிற்கு அரபியில் கடிதம் அனுப்பிய அவலத்தை இந்த கடிதத்தில் காணுங்கள்;


சல்லி கிடைக்கும் போது, அதைப் பார்க்காமல் கொள்கை பேசிக்கொண்டிருக்க நாங்க என்ன வெவரம் தெரியாதவர்களா என்ன? --பீஜே&லுஹா.

அயல்நாட்டு நிதியில் அண்ணனின் வேஷங்கள் இன்னும் வெளிப்படும் அருளாளன் நாடினால்.

வியாழன், 17 மே, 2012

பதவி என்றால், இவர்களுக்கு இஸ்லாம் இரண்டாம் பட்சம் தானோ?


எல்லா மதமும் சம்மதமே: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தே.மு.தி.க., சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த வேட்பாளர் ஜாகீர் உசேன் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டும் முன் கோவில்பட்டி பகுதியிலுள்ள பிடாரியம்மன் கோவிலில் கையில் விளக்கு ஏந்தி வழிபட்டார்.[நன்றி; தினமலர்18-05-2012 ]

செவ்வாய், 15 மே, 2012

வெளிநாடுவாழ் தமிழர்களுக்காக தனி அமைச்சகம்: பண்ருட்டி ராமச்சந்திரன் கோரிக்கை.


தமிழகத்தைச் சேர்ந்தவர்களில் எண்ணற்றோர் வெளிநாடுகளின் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இந்திய நாட்டிற்கு அன்னியச் செலவாணியை ஈட்டித்தருவதில் பெரும்பங்கு வகிக்கின்றனர். வெளிநாடுவாழ் கேரளர்களின் நலனுக்காக அந்த மாநில அரசு தனியாக அமைச்சகம் அமைத்து செயல்பட்டு வருகையில், தமிழகத்தில் அத்தகைய ஒரு அமைச்சகம் இல்லாதது, வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஒரு குறையாக இருந்தது. தமிழகத்தைச் சேர்ந்த சில முஸ்லிம் இயக்கங்கள் அவ்வப்போது இந்த தனி அமைச்சக கோரிக்கைகளை வைத்தபோதும் அவை கண்டுகொள்ளப்படாத நிலையில், சட்டமன்றத்தில் இந்த கோரிக்கையை பதிவு செய்துள்ளார் மூத்த அரசியல்வாதியும், சட்டமன்ற எதிர்கட்சித் துணைத்தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரன்.

சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசும்போது, ''வெளிநாடுகளில் வாழும் மலையாள மக்களின் நலனுக்காக கேரளத்தில் தனி அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. அதுபோல, வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு உதவுவதற்காக வெளிநாடுவாழ் தமிழர்கள் விவகாரத் துறை அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும்.'' என்று பேசியுள்ளார்.

சட்டமியற்றும் அவைதனிலே வெளிநாடுவாழ் தமிழர்களின் நலனுக்கான ஒரு கோரிக்கையை வைத்த எதிர்கட்சித்துனைத் தலைவரைப் பாராட்டுகின்றேன். இனியாவது அரசு வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு தனி அமைச்சகம் அமைத்து அவர்கள் நலன் காக்க முன்வரவேண்டும். 


திங்கள், 14 மே, 2012

நீதிமன்றத் தீர்ப்புகள்; ஒரு இஸ்லாமியப் பார்வை- தொடர்[2]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
ட்டம் என்பது அனைவருக்கும் சமமானதாக இருக்கவேண்டும் என்ற கருத்து அனைவராலும் பேசப்பட்டாலும், உண்மை என்னவோ நேர்மாறாகத்தான் இருக்கிறது. ஒரு தவறை எளியவன் செய்தால் எளிதில் பாயும் சட்டம், அதே தவறை வலியவன் செய்தால் அவனுக்கு வாயிற்காவல் காக்கிறது. இதுபோக நாட்டின் அரசியலமைப்பு சட்டங்கள் அதிகார மையத்தில் வீற்றிருப்பவர்கள் சிலருக்கு கூடுதல் சலுகைகளை வழங்கியுள்ளது. ஒரு ராமசாமி மீது யார் வேண்டுமானாலும் வழக்குப் போடலாம். எப்போது வேண்டுமானலும் கைது செய்யப்படலாம். அதே ராமசாமி ஒரு மாநிலத்தின் முதல்வர் என்றால் அவர் ஊழலே செய்தாலும் அது பகிரங்கமாக தெரிந்தாலும் அவர் மீது யாரும் வழக்குப் போட்டுவிட முடியாது. கவர்னரின் அனுமதி தேவை. 

அதே போன்று ஒரு நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்து, அந்த உத்தரவுக்கு மாற்றமாக நமது நாட்டு அதிகார வர்க்கம் நடந்துகொண்டால் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயுமா என்றால் பாயும்; ஆனால் பாயாது. உதாரணமாக பாபர் மஸ்ஜிதுக்கு எந்த பங்கமும் வராமல் பாதுக்காப்பேன் என்று உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்த அன்றைய உ.பி. சங்பரிவார முதல்வர் கல்யாண்சிங், நீதிமன்றத்திற்கு கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு பாபர் மஸ்ஜிதை தரைமட்டமாக்க எல்லாவகையிலும் உறுதுணையாக இருந்தார். நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய நீதிமன்றத்தை அவமதித்த இவருக்கு எத்தனை ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது? ஒரு நாள். அதுவும் வீட்டுக்காவல். இதையே ஒரு சாமான்யன் செய்திருந்தால் அவன் ஜாமீனில் கூட வெளியே வரமுடியாத அளவுக்கு தண்டனை பெற்றிருப்பான் என்பதில் மாற்றுக்கருத்து உண்டா? ஏன் இந்த வேறுபாடு? காரணம் அதிகார மையம் என்பதால் தானே!

நமது நாடுதான் இப்படியிருக்கிறது என்றால் அண்டை நாடுகள் சிலவற்றில் கூட ஆண்டான்-அடிமை நீதி பரிபாலனம் நிலவுவதைப் பார்க்கிறோம். பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு அந்த நாட்டு உச்சநீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பைப் பார்ப்போம்.

தற்போதைய பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, கடந்த 1990களில் ஏராளமான ஊழல் வழக்குகளில் சிக்கினார். அவற்றில், சுவிட்சர்லாந்தில் தொடரப்பட்ட சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கும் ஒன்றாகும். 
ஆனால், கடந்த 2007ம் ஆண்டு முஷரப் அதிபராக இருந்தபோது கொண்டு வந்த சட்டத்தால், ஆயிரக்கணக் கான ஊழல் வழக்குகளுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டது. இதன்படி, சர்தாரி மீதான ஊழல் வழக்குகளும் கைவிடப்பட்டன. ஆனால், முஷரப் கொண்டு வந்த இச்சட்டம் செல்லாது என்று கடந்த 2009ம் ஆண்டு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. ஊழல் வழக்குகளை மீண்டும் நடத்துமாறு பாகிஸ்தான் அரசுக்கு உத்தரவிட்டது. 

ஆனால், அதிபர் சர்தாரி மீதான ஊழல் வழக்குகளை மீண்டும் நடத்த பிரதமர் யூசுப் ராசா கிலானி முன்வரவில்லை. கோர்ட்டு கூறியபடி, சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கை மீண்டும் நடத்தும்படி, சுவிட்சர்லாந்து அரசுக்கு கடிதமும் எழுதவில்லை. இதனால், கிலானி மீது சுப்ரீம் கோர்ட்டு, கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இதை நீதிபதி நசிருல் முல்க் தலைமையிலான 7 நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு பெஞ்ச் விசாரித்தது.
இந்த வழக்கு விசாரணைக் காக, இரண்டு தடவை சுப்ரீம் கோர்ட்டில் கிலானி ஆஜரானார். அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி, அவர் தாக்கல் செய்த மனுவையும் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. 

இந்நிலையில், இவ்வழக்கில் 26ந் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கிலானியும் ஆஜரானார்.
கோர்ட்டு அறையின் மத்தியில் உள்ள கூண்டுக்கு கிலானி சென்றார். சிறப்பு பெஞ்சின் தலைவர் நீதிபதி நசிருல் முல்க், தீர்ப்பை வாசித்தார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை வேண்டுமென்றே மீறியதற்காக, பிரதமர் கிலானி மீதான கோர்ட்டு அவமதிப்பு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறினார். எனவே, கோர்ட்டு கலையும்வரை அவர் நிற்க வேண்டும் என்று அடையாள தண்டனை விதித்தார். தண்டனை அறிவிப்புக்கு பிறகு அவர் 30 வினாடிகள் மட்டுமே நின்றதால், அதுதான் அவர் அனுபவித்த தண்டனை ஆகும். அதே நேரத்தில் கிலானி மீதான குற்றம் நிரூபிக்கப் பட்டுள்ளதால் அவர் பதவிக்கு ஆபத்து என்றும் கூறப்படுகிறது.

இந்த தீர்ப்பை நாம் பார்க்கும் போது, பள்ளிக்கூடத்தில் சேட்டை செய்யும் மாணவனை, ''இந்த பீரியட் முடியும் வரை நீ பெஞ்சில் ஏறி நிற்கவேண்டும்' என்று ஆசிரியர் தண்டனை விதிப்பது போல் உள்ளது. பலகோடி ரூபாய்கள் ஊழல் செய்ததாக கூறப்படும் சர்தாரியின் மீதான வழக்கை புறந்தள்ளியதன் மூலம் நாட்டுமக்களுக்கு துரோகம் இழைத்துள்ள ஒருவருக்கு சில வினாடிகள் நிற்பது மட்டுமே தண்டனை என்ற தீர்ப்பு, கல்யான்சிங்கிற்கு நமது உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நினைவு படுத்துகிறது.

அதே நேரத்தில், கிலானி ஒரு பிரதமராக இருந்ததும் நம்முடைய தமிழக முதல்வர் பாணியில் வழக்கு விசாரணைக்கு ஆண்டுக்கணக்கில் வாய்தா வாங்கவில்லை. நம்முடைய முதல்வர் பாணியில் கோர்டில் ஆஜராகாமல் இருக்க காரணம் சொல்லிக்கொண்டிருக்கவில்லை என்பது ஆறுதலான விஷயம். ஆனால் நீதி விசயத்தில் நாடுகளுக்கு மத்தியில் இருக்கும் இந்த ஆண்டான் அடிமை பாரபட்சம் ஒழியவேண்டும். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற நிலைவரவேண்டும். அதற்கு இஸ்லாம் ஒரு அழகான தீர்வைக் காட்டுகிறது. இறைத்தூதர் முஹம்மது நபி[ஸல்] அவர்களின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்;

(மக்கா வெற்றியின் போது) மக்ஸூமீ குலத்துப் பெண் ஒருத்தி [பாத்திமா பின்த் அல் அஸ்வத்) திருட்டுக் குற்றம் செய்திருந்தாள். அவள் விஷயமாக குறைஷிகள் மிகவும் கவலைக்குள்ளாயினர். 'அவள் விஷயமாக அல்லாஹ்வின் தூதரிடம் யார் பேசுவார்கள்?' என்று தமக்குள் பேசிக் கொண்டனர். அவர்களில் சிலர், 'அல்லாஹ்வின் தூதருடைய செல்லப் பிள்ளையான உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களைத் தவிர இதற்கு யாருக்குத் துணிவு வரும்?' என்று கூறினர். (உஸாமா(ரலி) அவர்களிடம் பரிந்துரை செய்யும்படி அவர்கள் கேட்டுக் கொள்ள, அவ்வாறே) உஸாமா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் (அவள் விஷயமாகப்) பேசினார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையின் விஷயத்திலா (அதைத் தளர்த்தும்படி என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாய்" என்று (கோபத்துடன்) கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். பிறகு (அவ்வுரையில்), 'உங்களுக்கு முன்னிருந்தவர்கள், அழிக்கப்பட்டதெல்லாம் அவர்களில் உயர் குலத்தவன் திருடிவிட்டால் அவர்கள் அவனை (தண்டிக்காமல்)விட்டு வந்தார்கள்; அவர்களில் பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வன் திருடிவிட்டால் அவனுக்கு தண்டனையளித்து வந்தார்கள் என்பதால் தான். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃ பாத்திமா திருடி விட்டிருந்தாலும் அவரின் கையையும் நான் துண்டித்திருப்பேன்" என்று கூறினார்கள். 
நூல்; புகாரி.

இந்த சம்பவத்தில் என்னுடைய மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும் அவரது கரத்தை நான் துண்டிப்பேன் என்று முஹம்மத் நபி அவர்கள் சொல்லி, சட்டத்தில் பாரபட்சம் இருக்கக் கூடாது; யாருக்காகவும் சட்டம் வளையக்கூடாது. ஒரு தவறை செய்யும் சாமான்யனுக்கு கிடைக்கும் அதே தண்டனை எத்தகைய அதிகார மையத்தில் உள்ளவராக இருந்தாலும் கிடைக்கவேண்டும் என்ற நீதியின் இலக்கணத்தை செயல்படுத்திய பாங்கை நீதிமன்றங்கள் கையிலெடுத்தால், அநீதி அடியோடு மாண்டுவிடும் தானே!

-தீர்ப்புகள் வரும்...

நரேந்திரமோடி ஆட்சியில் குஜராத் மக்கள் அச்சத்துடன் வாழ்கிறார்கள்; பா.ஜனதா முன்னாள் முதல்மந்திரி குற்றச்சாட்டு.

ஆமதாபாத், மே.14
குஜராத் மாநிலத்தில் பா.ஜனதா கட்சி முதல் முறையாக ஆட்சி பொறுப்பேற்றபோது முதல்&மந்திரியாக பதவி ஏற்றவர் கேசுபாய்படேல். அவர் நிறைய பிரச்சினைகளை சந்திக்க நேரிட்டதால், 2001ம் ஆண்டு அவருக்கு பதிலாக நரேந்திரமோடி முதல்மந்திரியாக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். 2007ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, 'நரேந்திரமோடி ஆட்சியில், குஜராத்தில் 'மினி எமர்ஜென்சி' போன்ற சூழ்நிலை நிலவுவதாக குற்றம் சாட்டினார். அந்த தேர்தலில் நரேந்திரமோடிக்கு அபார வெற்றி கிடைத்ததை அடுத்து தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கினார். 

வரும் டிசம்பர் மாதம் குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையட்டி தனது ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்தில் பேசிய அவர், 'நரேந்திரமோடி ஆட்சியில், நான் சார்ந்த 'படேல்' சமுதாய மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக' முன்பு சொன்னேன். ஆனால் இன்றைக்கு குஜராத்தில் வாழும் அனைத்து மக்களும் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். 

பா.ஜனதா கட்சியின் முதல்மந்திரி நரேந்திரமோடியை அதே கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்மந்திரி குற்றம் சாட்டி இருப்பது குஜராத் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 
நன்றி;தினத்தந்தி.

சனி, 12 மே, 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 10]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அயல்நாட்டு நிதி விசயத்தில் பீஜேயின் அப்பட்டமான பொய்களையும், முரண்பாடுகளையும் அலசிவரும் இந்த தொடரில், அயல்நாட்டு நிதி விசயத்தில் மார்க்கத்திற்கு முரணனான அவரது மனோஇச்சை முடிவையும், அவரது இரட்டை வேடங்களையும் அம்பலப்படுத்தி வருகிறோம். இப்போது அவரது மற்றொரு இரட்டை வேடம் ஒன்றைப்பார்ப்போம்.

தமிழகத்தில் ஜாக், வெளிநாட்டில் நிதி உதவி பெற்று பள்ளிவாசல்கள் எழுப்பி வருகின்றது. அதே போல் இலங்கையில் சில நிறுவனங்கள் வெளிநாட்டு நிதி பெற்று, பள்ளிவாசல்கள், மற்றும் நலப்பணிகளை செய்துவருகிறார்கள். இத்தகையோரை பீஜே, அரபுநாட்டு சல்லிக்கு மாரடிப்பவர்கள் என்று விமர்சிக்கிறார். உண்மையில் இவ்வாறு விமர்சிக்கும் அருகதை பீஜே அவர்களுக்கு இல்லை என்பதே உண்மை.

தமிழகத்தில் சேலம் நகரில் தவ்ஹீத் ஜமாத்திற்கு சொந்தமான பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசல் கட்டுமானப் பணிக்காக பீஜே, இலங்கையைச் சேர்ந்த ஒரு தனவந்தரிடம் இந்திய மதிப்பில் ஒரு லட்சம் பெற்று அதை அந்த பள்ளிவாசல் கட்டுமானப் பணிக்கு வழங்கினார். இந்த தொகையை வழங்கிய அந்த இலங்கை தனவந்தருக்கு பீஜே நன்றி தெரிவித்து கடிதமும் எழுதினார். இதை பீஜே அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு மறுக்கத் தயாரா? 

வெளிநாடுகளில் நிதியை வாங்கி, பையில் பணத்தைப் போட்டுக்கொண்டு 'பள்ளிவாசல் வேண்டுமா? என்று ஜாக்கினர் அலைவதாகவும், அதில் அவர்களுக்கு 'பாயிதா'[வருமானம்] கிடைப்பதாகவும், ஜாக்கை விமர்சிக்கும் பீஜே, தனது கொள்கைக்கு மாற்றமாக, இலங்கை தனவந்தரிடம் பள்ளிவாசல் கட்ட பணம் வாங்கியது முரணில்லையா? இல்லையென்றால், அரபுநாட்டு சல்லி அடிக்க மாட்டோம். ஆனால் அண்டை நாட்டு சல்லி அடிப்போம் என்பதுதான் கொள்கையா? தமிழத்தில் இவர் அமைப்பின் சார்பாக எழுப்பப்படுள்ள மர்கஸ்கள், இவரது ஜமாஅத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள பள்ளிவாசல்கள், முழுக்க முழுக்க பிழைக்கப் போனவர்களிடம் மட்டுமே வசூலித்து கட்டப்பட்டது என்று காட்டும் வகையில் ஒரு வெள்ளையறிக்கை வெளிடுவாரா பீஜே?

சரி., இலங்கையில் மட்டும் தான் இவர் பணம் வாங்கினாரா என்றால் அரபு நாட்டிலும் வாங்கினார். எந்த வெளிநாட்டிடமிருந்தும், வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்தும் உதவி பெறமாட்டோம் என்று மூச்சுக்கு முன்னூறு முறை முழங்கும் பீஜே, துபையை சேர்ந்த ஒரு சகோதரர் [பெயர் தேவைப்பட்டால் வெளியிடுவோம்] முயற்சியின் பெயரில் ஒரு அரபியிடமிருந்து இப்தார் செலவுக்காக கடந்த 2005 அல்லது 2006 ஆம் ஆண்டு ஒன்றரை லட்ச ரூபாய்கள் ஜமாஅத் பெறவில்லையா? இதை பீஜே அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு மறுக்கத் தயாரா? 

இதில் இன்னொரு துரோகமும் உள்ளது. அதாவது ஒரு நாள் இப்தார் செலவு 5000 வீதம் ஒரு மாத இப்தார் செலவுக்கான 1 ,50 ,000 ரூபாய்களை அந்த அரபி வழங்கிய பின்னும், அதை மறைத்து நோன்புக் கஞ்சி இன்னும் முழுமையடையவில்லை. எனவே காசு குடுங்கம்மா என்று பாக்கர் மூலமாக ஒவ்வொரு ரமலான் சிறப்பு பயானுக்குப் பின்னும் அறிவிப்புச் செய்ய வைத்தார் பீஜே. இதுபற்றி ஒரு பிரச்சினையில் பீஜே பேசும்போது, ''இப்ப வசூலாகுற காசை வச்சுத்தான் நான் ஒரு வருஷம் ஜமாஅத்தை ஓட்டனும்'ன்னு சொன்னாரே! மறுக்கமுடியுமா? இப்தார் நோக்கத்திற்காக அரபி தந்த தொகையை இப்தாருக்கு செலவு செய்து விட்டு, உள்ளூரில் இப்தார் என்ற பெயரில் வசூலித்த பணத்தைக் கொண்டு ஜமாஅத் நடத்தினார் என்றால், ''நாங்கள் எந்த வகைக்கு என்று வசூலித்தோமா அந்த வகைக்கு மட்டுமே செலவு செய்வோம்'' என்று சொல்லிக் கொள்வது பொய்யில்லையா? நோன்புக்கஞ்சிக்காக தந்த பணத்தை ஜமாஅத் செலவிற்கு பயன்படுத்துவது துரோகமில்லையா?

அடுத்து, இன்னொரு அரபுநாட்டு அரபியிடம் பணம் பெற்ற பீஜே, அந்த பணத்தில் ஒரு தொகையை தர்மபுரியில் உள்ள ததஜ பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் போர் [ஆழ்துளைக் கிணறு] அமைக்க பணம் தந்தார். அவ்வாறு போர் அமைத்து அந்த தர்மபுரி நிர்வாகிகள் போட்டோ எடுத்து அனுப்பினார்கள். அந்த போட்டோ சரியில்லை என்று அரபியிடம் பணம் வாங்கித்தந்த வளைகுடா நிர்வாகிகள் சொன்னதையடுத்து, அன்றைய துணைப்பொதுச்செயலர் இக்பால் அவர்களை நேரடியாக தர்மபுரிக்கு அனுப்பி, ''பிர் அஹ்மத்' என்ற என்ற பதாகை வைக்கப்பட்டு, அந்த நீர்நிலை படம்பிடிக்கப்பட்டு, பணம் தந்த அரபிக்கு அனுப்பினார் பீஜே. இதை மறுக்க முடியுமா? அடுத்த இயக்கம் அரபியிடம் முறையாக பணம் பெற்று நலப்பணிகள் செய்தால், அவனை சல்லிக்கு மாரடிப்பவன் என்று விமரிக்கும் பீஜே, இந்த அரபியை தொண்டியிலிருந்து பிழைக்கப் போனவன் என்று சொல்லப்போகிறாரா? 

இதுபோன்று அரபிகளுடன் த த ஜமாத்திற்கு உள்ள தொடர்பு பற்றிய விபரங்கள் ஒரு பட்டியலே உண்டு. விரிவஞ்சி தவிர்க்கிறோம்.

அடுத்து வருவது;
வழிகெட்ட கொள்கை என்று பீஜெயால் வர்ணிக்கப்படும் சலபிக் கொள்கை, அரபு நாட்டு சல்லிக்காக புனிதமான கொள்கையாக பரிணாமம் பெற்ற அதிசயம்.
அருளாளன் நாடினால் அதிவிரைவில்.

வெள்ளி, 11 மே, 2012

அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்யும் செய்யும் அகிலேஷின் முடிவும்; ஆர்.எஸ்.எஸ்'ஸின் புலம்பல்களும்!

ந்திய நாட்டில் பெரும்பான்மை சமூகமான இந்துச் சமூகத்தில் மிக மிக குறைவான சதவிகிதம் மட்டுமே உள்ள 'அவாள்கள்' நாட்டின் பெரும்பதவிகளை சுகித்து, சுகபோக வாழ்கையில் திளைத்து வருகின்றனர். ஆனால் சுதந்திர இந்தியாவை கட்டமைத்த சிற்பிகளான முஸ்லிம்களுக்கு அவ்வபோது ஏதேனும் சிறு நன்மைகளை மத்திய மாநில அரசுகள் வழங்க முடிவெடுத்தால், ஆர் டி எக்ஸ்'ஸுக்கு, [மன்னிக்கவும்] ஆர்.எஸ்.எஸ்'ஸுக்கு மூக்கு வியர்க்க ஆரம்பித்துவிடும். 

உத்தரப்பிதேசத்தில் முஸ்லிம்களின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்துள்ள சமாஜ்வாதி கட்சியின் முதல்வர் அகிலேஷ்யாதவ், சிறையில் உள்ள அப்பாவி முஸ்லிம்களை எல்லாம் விடுதலை செய்ய ஆவன செய்யப்படும் என்று சமீபத்தில் கூறியிருந்தார். பொறுக்குமா ஆர்.எஸ்.எஸ்'ஸுக்கு..? எடுத்தது எழுதுகோலை! தீட்டியது கட்டுரையை!!

ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையான 'ஆர்கனைசர்' கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:

''அரசியல் ஆதாயத்திற்காக மதத்தை கையிலெடுக்கிறார் அகிலேஷ்யாதவ். சிறையில் உள்ள அப்பாவி முஸ்லிம்களை எல்லாம் விடுதலை செய்யப்போகிறேன் என்று அகிலேஷ் யாதவ் அறிவித்திருப்பது ஆபத்தான நடவடிக்கை ஆகும். சிறுபான்மை இனத்தவரை கைது செய்வதற்கு முன்பு பல முறை யோசிக்குமாறு போலீசுக்கு விடுக்கப்பட்டுள்ள மறைமுக எச்சரிக்கை இது. விசாரணை அமைப்புகளுக்கும் அதிகப்படியான நிர்ப்பந்தங்கள் வரும். 
மதத்தின் அடிப்படையில் சிறையில் உள்ளவர்களை விடுவிப்பதாக அறிவிப்பது என்பது, ஒரு குறிப்பிட்ட இனத்தவர் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று அரசாங்கம் லைசென்ஸ் கொடுப்பது போலத்தான். உத்தரபிரதேசத்தில் விரைவு நீதிமன்றங்களை அமைக்கலாம். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க கூடுதல் கோர்ட்டுகளை நிறுவலாம். அப்பாவி மக்களை வழக்குகளில் சிக்க வைத்தவர்களை தண்டிக்கலாம்'' என்று கூறியுள்ள ஆர்.எஸ்.எஸ்., ''ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தீவிரவாதத்துக்கு வர்ணம் கொடுக்கிறது. அதுவே மாநிலங்களிலும் பிரதிபலிக்கிறது' என்றும் கூறியுள்ளது.

அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக முதல்வர் அகிலேஷ் கூறியது அவர்கள் முஸ்லிம்கள் என்பதற்காக மட்டுமல்ல. அவர்கள் அநியாயமாக பாதிக்கப்படுள்ளார்கள் என்பதற்காகவே. இந்தியாவில் நினைத்த நேரத்தில் எந்த ஆதாரமுமின்றி குற்றவாளியாக ஆக்கப்படுபவர்களில் அதிகமானோர் முஸ்லிம்கள் தானே. விசாரணைக் கைதிகளாகவே பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடுவதும் முஸ்லிம்கள் தானே. நாட்டில் எந்த மூளையில் குண்டுவெடிப்பு நடந்தாலும், அதற்காக முதல் பலிகடா ஆக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும், பின்பு பத்து ஆண்டுகால சிறைவாசத்திற்கு பின் குற்றமற்றவராக விடுதலை செய்யப்படுவதும் முஸ்லிம்கள் தானே! அவ்வளவு ஏன்? மாலேகான் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்துத்துவாக்கள் நடத்திய குண்டுவெடிப்பில் முதலில் சந்தேகம் பதித்தது முஸ்லிம்கள் மீது தானே! ஹேமந்த் கர்கரே போன்ற நேர்மையான அதிகாரிகளால் தானே இந்துத்துவாக்களின் கோரமுகம் உலகுக்கு வெளிப்பட்டது என்பதை மறுக்க முடியுமா? இதுபோன்று தனது மாநிலத்தில் அநியாயமாக பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் விடுதலை குறித்துதான் அகிலேஷ் பேசியுள்ளாரே தவிர, குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட முஸ்லிம் கைதிகளை விடுவிப்பேன் என்று அவர் சொல்லவில்லை. எனவே ஆர்.எஸ்.ஸின் அலறல் என்பது அருவருக்கத்தக்கது.

அடுத்து, முஸ்லிம் அப்பாவி சிறைவாசிகள் விடுதலை என்ற அகிலேஷின் முடிவு அரசியல் ஆதாயத்திற்காக மதத்தை பயன்படுத்துவதாகும் என்று சாடுகிறது ஆர்.எஸ்.எஸ். அரசியல் ஆதாயத்திற்காக மதத்தை பயன்படுத்துவதில் கை தேர்ந்தவர்கள் யார் என்று மக்களுக்குத் தெரியாது என்று ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறதா? மத்திய ஆட்சியையும், மாநில ஆட்சிகளையும் பிடிக்க ராமரை பயன்படுத்தியதையும், ஆட்சியில் அமர்ந்தவுடன் அவரை வனவாசம் அனுப்பிதையும் மறக்கலாமோ?

மேலும், மத்திய அரசு தீவிரவாத்திற்கு வர்ணம் கொடுப்பதாகவும், அது மாநிலங்களிலும் பிரதிபலிக்கிறது என்றும் புலம்புகிறது ஆர்.எஸ்.எஸ்., நாட்டிலேயே தீவிரவாதத்திற்கு முதன் முதலில் இஸ்லாமிய வர்ணம் பூசியவர்கள் நீங்கள் தானே! ஒரு தீவிரவாதச் செயல் நடந்து அதில் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கு முயன்பாகவே, இஸ்லாமிய பயங்கரவாதம் என்றும் முஸ்லிம் தீவிரவாதம் என்றும் குதித்தவர்கள் நீங்கள் தானே! அன்று நீங்கள் தீவிரவாதத்திற்கு பூசிய இஸ்லாமிய வர்ணம் பொய் என்பது 'கர்கரே' எனும் மழையால் கரைந்து, மறைந்திருந்த தீவிரவாத்தின் நிறம் காவி எனும் வர்ணம் வெளிப்பட்டவுடன் இப்போது புலம்பி ஆவதென்ன? யார் தவறு செய்கிறார்களோ அவனை குறிப்பிட்டு தீவிரவாதி என்று அன்று நீகள் சொல்லியிருந்தால் இன்று புலம்பவேண்டிய நிலை வந்திருக்காது. மாறாக மனிதனின் செயலுக்கு மதச்சாயம் பூசினீர்கள். அது 'பூமாராங்; ஆக திருப்பி இன்று உங்களையே தாக்குகிறது என்பதை ஆர்.எஸ்.எஸ்., உணர்ந்து அடக்கி வாசிப்பதும் ஆகவேண்டிய வேலையைப் பார்ப்பதும் தான் அந்த அமைப்பிற்கும் நாட்டிற்கும் நல்லது.


























































































































முஸ்லிம்கள் கட்டாய மதமாற்றம் செய்கிறார்களாம்; சொல்கிறார் ராமகோபாலன்.



பாகிஸ்தானில் உள்ள இந்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் அறிக்கையொன்றை இந்து முன்னணியின் நிறுவனர் ராம.கோபாலன் சமீபத்தில் விடுத்துள்ளார். அதில், ''பாகிஸ்தானில் 65 ஆண்டுகளாக நடைபெற்று வரும் மதமாற்றக் கொடூரம் நெஞ்சை பிழிவதாக இருந்து வருகிறது. சில கோடியில் இருந்த இந்துக்கள் எண்ணிக்கை இன்று பல லட்சம் என்ற அளவில் வந்துவிட்டது என்று கூறியுள்ளார். அவரது கூற்றே பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றம் நிகழவில்லை என்பதற்கு சான்றாக உள்ளது. பாகிஸ்தானில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கிறார்கள். ராமகோபாலன் கூறுவது போன்று 65 ஆண்டுகளாக கட்டாய மதமாற்றம் அங்கு நடைபெற்று இருந்தால், இன்று அங்கே சில ஆயிரம் இந்துக்கள் கூட மிஞ்சியிருக்க மாட்டார்கள். ஆனால் அவரே பல லட்சம் இந்துக்கள் பாகிஸ்தானில் இருப்பதாக கூறுகிறார். இது முரண்பாடக அவருக்குத் தெரியவில்லையா?
அப்படியானால் பாகிஸ்தானில் கோடிகளாக இருந்த இந்துக்கள், இன்று லட்சங்களாக குறைந்தது ஏன் என்று ராமகோபாலன் கேட்கலாம். கோடிகளில் இருந்தார்கள் என்று பொதுவாக சொல்வதைவிட, அன்று இத்தனை கோடிப்பேர் இருந்தார்கள். இன்றோ இத்தனை லட்சம் பேர் தான் இருக்கிறார்கள் என்று புள்ளிவிவரத்தோடு அவர் சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும். மேலும் ஒரு மதத்தவரின் எண்ணிக்கை குறைவுக்கு மதமாற்றம் ஒரு காரணமாக இருந்தாலும் அது மட்டுமே காரணமாக இருப்பதில்லை. 
ஒரு காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த இந்து சகோதரர்கள் பத்துக்கும் மேற்பட்ட பிள்ளைகளை சாதாரணமாக பெற்று வளர்த்தார்கள். இன்று அதே இந்து சகோதரர்களில் பெரும்பாலோர் ஒன்றுக்கு மேல் பெறுவதில்லை. இதே நிலை நீடித்தால் இந்துக்களின் எண்ணிக்கை வளர்ச்சியடையாது. இந்த அடிப்படையில் பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், தங்களின் பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்தாத பட்சத்தில் அவர்கள் குறைவாகவே காணப்படுவார்கள். மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மதத்திலிருந்தும் குறிப்பிட்ட சதவிகித்தினர் விரும்பியே மதம் மாறுகிறார்கள். அந்த வகையில் ஏற்கனவே சிறுபான்மையாக இருக்கும் இந்துக்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர் மதம் மாறினால், இன்னும் எண்ணிக்கையில் குறைவது இயற்கையே. 
அதே நேரத்தில் முஸ்லிம்களில் பெரும்பாலோர் குழந்தை விசயத்தில் கணக்குப் பார்ப்பதில்லை. ஏனென்றால் தனக்கும், தான் பெற்றெடுக்கும் பிள்ளைக்கும் படியளிப்பவன் இறைவன் தான் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை அவனுக்கு இருக்கிறது. இதே ரீதியில் முஸ்லிம்கள் தங்களின் பிறப்பு விகிதத்தை கொண்டு செல்லும்போது, அவர்களில் ஒரு சாரார் மதம் மாறினாலும், முஸ்லிம்களின் சதவிகிதத்தில் மைக்ரோ அளவில் கூட குறைய வாய்ப்பில்லை. இன்னும் தெளிவாக ராமகோபாலனுக்கு புரியும் வகையில் சொல்வதாக இருந்தால் கடலிலிருந்து 4 டி.எம்.சி.தண்ணீர் வெளியேறினால் கடலுக்கு பாதிப்பில்லை. ஆனால் கிணற்றிலிருந்து வெளியேறினால்..? இதுதான் பாகிஸ்தான் நிலை. அப்படியானால் கட்டாய மதமாற்றம் பாகிஸ்தானில் நிகழவே இல்லையா? என்று ஒரு கேள்வி எழலாம். எல்லாநாடுகளிலும் எல்லா மதத்திலும் சில கடும்போக்காளர்கள் இருப்பது போன்று பாகிஸ்தான் முஸ்லிம்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய சில கடும்போக்கு மதவாத சிந்தனை உள்ளவர்கள் அத்திப்பூத்தது போன்று சிலரை மதம் மாற்றியிருக்கலாம். அதற்காக ஒட்டுமொத்த பாகிஸ்தான் முஸ்லிம்களே கட்டாய மதமாற்றத்தில் ஈடுபதுவது போன்ற கருத்தை ராமகோபாலன் விதைக்க முற்படுவது ஆரோக்யமானதல்ல. 
இன்னும் சொல்வதானால் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் ராமகோபாலன் நினைப்பது போன்று தீவிர இஸ்லாமிய வெறியர்கள் அல்ல. இந்தியாவில் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது, பாகிஸ்தானில் சிலரால் சில கோயில்கள் இடிக்கப்பட்டன. அவைகள் அந்த ஆண்டே பாகிஸ்தான் அரசால் திரும்பிக் கட்டித்தரப்பட்டன. ராமகோபாலன் நினைப்பது போன்று அவர்கள் இஸ்லாமிய வெறியர்களாக இருந்திருந்தால், முதலில் பள்ளிவாசலை இடித்த இந்தியா கட்டித்தரட்டும் என்று இருந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அவ்வாறு இருக்கவில்லை. இன்றும் அங்குள்ள இந்துக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டதாக ராமகோபாலன் பாராட்டும் எந்த பத்திரிக்கையும் சொல்லவில்லை. ஏன் ராமகோபலனே சொல்லவில்லை. பாகிஸ்தானில் மதவெறி ஆட்டம் போடுவதாக ராமகோபாலன் கருதுவதால் இங்கே இந்த தகவலை பதிய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. 
அடுத்து ''இஸ்லாத்தில் வன்முறைக்கு இடமில்லை என்பார்கள். ஆனால் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டு மனித உயிர்களைக் கொன்று குவிப்பவன் கையில் குரானைத் தான் தூக்கிபிடிக்கிறான். அதனை முஸ்லீம் அரசியல்வாதிகளோ, முஸ்லீம் மதகுருக்களோ கண்டிப்பதில்லை, அவனுக்கு எதிராக ஃபத்வா வழங்குவதில்லை. ஆனால் முஸ்லீம் அல்லாதவர்கள் தவறுதலாகச் செய்துவிட்டால் மதவெறியைத் தூண்டி கலவரத்தை உருவாக்கி வந்துள்ளார்கள். ஏன் இந்த இரட்டை வேடம்'' என்று கேட்கிறார் ராமகோபாலன்.
பயங்கரவாத செயலில் ஈடுபடுபவன் குர்ஆனை தூக்கிப் பிடித்து விட்டால், அவன் செயலை இஸ்லாம் அங்கீகரிக்கிறது என்று அர்த்தமா? சாமான்யர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்ட இந்துச் சாமியார்கள் அணியும் காவி உடையணிந்து பயங்கரவாதத்தில் ஈடுபட்ட பிரக்யா சிங் உள்ளிட்ட பலர் செய்த பயங்கரவாதங்களை இந்து மதம் அங்கீகாரம் பெற்ற செயலாக ஏற்றுக் கொள்வாரா ராமகோபாலன்? பயங்கரவாத செயலை செய்த ஒரு இந்துத்துவா, பகவத் கீதையை கையில் வைத்திருந்தால், அவனது பயங்கரவாதம், இந்து மதத்தில் உள்ளதுதான் என்று சொல்ல ராமகோபாலன் தயாரா? எந்த உயிரையும் அநியாயமாக கொல்லச் சொல்லும் ஒரு வசனத்தை குர்'ஆனிலிருந்து காட்டுவாரா ராமகோபாலன்? ''பயங்கரவாத செயலில் ஈடுபட்டவனை முஸ்லிம் மதகுருக்களும், முஸ்லிம் அரசியல் தலைவர்களும் கண்டிக்கவில்லையாம். கதைவிடுகிறார் ராமகோபாலன். எந்த பயங்கரவாதியை எந்த முஸ்லிம் மதகுரு தோளில் தட்டிக்கொடுத்து பாராட்டினார்கள்? இன்னும் சொல்லப்போனால் பாதிக்கப்பட்ட ஒரு முஸ்லிம் உணர்ச்சி வசப்பட்டு பழிவாங்க நினைத்தால் கூட அவனை பொறுமையை கொண்டு உபதேசம் செய்து பக்குவப்படுத்தும் வேலையைத் தான் முஸ்லிம் மதகுருக்கள் செய்கிறார்கள். இதற்கு உதாரணமாக பாபர் மஸ்ஜித் தகர்ப்பைக் கூறலாம். பாபர் மஸ்ஜிதை ராமகோபாலன் வகையறாக்கள் தகர்த்தபோது, முஸ்லிம்களை முஸ்லிம் மதகுருக்களும், தலைவர்களும் அமைதிப்படுத்தியிருக்காவிட்டால் அத்வானி வகையாறக்கள் செய்ததை அப்துல்லாக்களும் செய்திருப்பார்கள். எனவே எந்த முஸ்லிம் மதகுருவும், எந்த முஸ்லிம் தலைவரும் வன்முறையை விரும்புவதில்லை. அதை ஊக்கப்படுத்துவதுமில்லை. அவ்வாறு ஊக்கப்படுத்தினால் அவர் முஸ்லிம் மதகுருவாக இருக்கமாட்டார் என்பதை ராமகோபாலன் விளங்கிக் கொள்ளட்டும்.
அடுத்து, ''இஸ்லாத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு இடமில்லை என்று குரானிலிருந்து மேற்கொள்காட்டும் முஸ்லீம் அரசியல்கட்சித் தலைவர்கள், 30 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் தென்காசி, இராமநாதபுரம் பகுதிகளில் ஆசை வார்த்தை காட்டி, அச்சுறுத்தி ஒரு லட்சம் பேரை மதமாற்ற முயன்றபோது கண்டிக்கவில்லை. அதற்குத் தலைமை தாங்கியவர்களின் வாரிசுகள் தான் இன்றைய முஸ்லீம் அரசியல்வாதிகள். அந்தச் சூதாட்டத்தை இந்து முன்னணி ஆன்மீக, தேசிய பெரியோர்களின் ஒத்துழைப்பால் தடுத்து நிறுத்தியது. முஸ்லீம்களின் ஆசைக்கு பலியானவர்கள் இன்றும் துன்பத்தையே அனுபவித்து வருகின்றனர். இன்று இவர்கள் வடிப்பது முதலைக் கண்ணீர் என்பதை மக்கள் உணர்வார்கள்'' என்றும் கூறியுள்ளார் ராமகோபாலன்.
தமிழகத்தில் முஸ்லிம்கள், 30 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் தென்காசி, இராமநாதபுரம் பகுதிகளில் ஆசை வார்த்தை காட்டி, அச்சுறுத்தி ஒரு லட்சம் பேரை மதமாற்ற முயன்றதாக ஒரு முழுப்பொய்யை உதிர்க்கிறார் ராமகோபாலன். இவர் சுட்டிக்காட்டுவது போல் முஸ்லிம்கள் எதைச் சொல்லி ஆசை வார்த்தை காட்டினார்கள்? உங்கள் பிள்ளைகளை இலவசமாக படிக்க வைக்கிறோம் என்று ஆசை காட்டினார்கள் என்று சொல்லப் போகிறாரா? அப்படி சொன்னால அது பொய்யாகிவிடும். ஏனென்றால் முஸ்லிம்களே பத்து வரைக்கும் கூட படிக்க முடியாமல் பாஸ்போர்ட்டு எடுக்கையில், எப்படி மற்றவர்களுக்கு இந்த ஆசை காட்டமுடியும்? பணம் காசு தருகிறோம் என்றோ, வேலை வாய்ப்புகள் தருகிறோம் என்றோ ஆசை காட்டினார்கள் என்று ராமகோபாலன் சொன்னால் அதுவும் பொய்யாகிவிடும். ஏனென்றால் இந்தியாவில் தலித் சமுதாயத்தை விட பின்தங்கிய ஒரு சமூகமாக முஸ்லிம் சமுதாயம் உள்ளதாக நீதியரசர் ராஜேந்திர சச்சார் போன்றவர்களே சொல்லியிருக்கும்போது, முஸ்லிம்கள் எப்படி மற்றவர்களுக்கு ஆசை காட்டி மதமாற்றம் செய்யமுடியும்? மத மாற்றம் செய்வதற்காக முஸ்லிம்களுக்கு வேறு வெளிநாடுகள் பண உதவிகளை செய்கின்றன. அதைக் கொண்டு மதமாற்றம் செய்கிறார்கள் என்று ராமகோபாலன் சொல்லமுடியுமா? வெளிநாடுகளில் இருந்து ராமகோபாலன் வகையறாக்களுக்கு வரும் பொருளாதார உதவிகளையும், முஸ்லிம் நல அமைப்புகளுக்கு வரும் பொருளாதார உதவிகளையும் விசாரணைக்கு உட்படுத்த ராமகோபாலன் தயாரா? இதாவது பரவாயில்லை. முஸ்லிம்கள் அச்சுறுத்தி மதமாற்ற முயற்சித்தார்கள் என்று ராமகோபாலன் கூறி தானும் நகைச்சுவையில் வடிவேலுவை மிஞ்சமுடியும் என்று காட்டுகிறார். ராமகோபாலன் கூறும் அந்த காலகட்டத்தில் இந்தியாவில் எந்த முஸ்லிம் மன்னர் ஆட்சியில் இருந்தார்? மக்களாட்சி தானே நடந்தது. அதுவும் ராமகோபாலன் வகையறாக்களுக்கு ஆதரவு மனப்பான்மையுடைய ஒருவர் தானே தமிழக முதல்வராக இருந்தார்? அப்படியிருக்க முஸ்லிம்கள் எப்படி ஒரு லட்சம் பேரை அச்சுறுத்த முடியும்? ஆட்சியாளர்கள்   எங்கே போனார்கள்? நாம் ராமகோபாலனுக்கு சவாலாகவே சொல்கிறோம். அவர் கூறும் அந்த காலகட்டத்தில் முஸ்லிம்கள் ஆசை வார்த்தை கட்டினார்களா? அல்லது தாமாக முன் வந்து மதம் மாறியவர்களை, மாற முயன்றவர்களை மீண்டும் தாய் மதத்திற்கு இழுக்க அரசாங்கம் ஆசை வார்த்தை காட்டியதா? முஸ்லிம்கள் அச்சுறுத்தினார்களா? அல்லது விரும்பி மதம் மாறியவர்களை அரசு அச்சுறுத்தியதா? கலந்துரையாட ராமகோபாலன் தயாரா?
மேலும், ''முஸ்லீம் மதத்தில் கட்டாய மதமாற்றத்தை ஏற்கவில்லை என்பவர்கள் முன்பு கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்தபோது ஏன் எதிர்த்தார்கள். இஸ்லாத்தில் இருப்பதை வரவேற்கத்தானே செய்யவேண்டும்'' என்று அறிவுப்பூர்வமாக[!] கேட்கிறார் ராமகோபாலன். இஸ்லாத்தில் கட்டாய மதமாற்றம் இல்லை என்பது எள்ளளவும் எள்ளின் முனையளவும் சந்தேகமில்லா உண்மை. முஸ்லிம்களில் எவருக்கும் எவரையும் கட்டாய மதமாற்றம் செய்வதில் விருப்பமில்லை என்பதும் உண்மை. அப்படியிருக்க, கட்டாய மதமாற்ற சட்டத்தை ஏன் எதிர்த்தார்கள் என்று பார்ப்பதற்கு முன்னால், இன்னொன்றையும் ராமகோபாலன் விளங்கிக் கொள்ளவேண்டும். அதாவது கட்டாய மதமாற்ற சட்டத்தை முஸ்லிம்கள் மட்டுமன்றி கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சில மதத்தவரும் எதிர்த்தார்கள். முஸ்லிம்கள் எதிர்த்ததற்கு காரணம், இனிமேல் இஸ்லாத்திற்கு யாரும் வரமட்டார்களோ என்பதற்காக அல்ல. அந்த கருப்புச் சட்டத்தில் இடம்பெற்ற சில ஷரத்துகள், இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள மத ரீதியான சில உரிமைகளை பறிக்கும் வகையில் இருந்தது. இதுதான் முஸ்லிம்கள் எதிர்ப்பிற்கு காரணம் என்பதை ராமகோபாலன் விளங்கிக் கொள்ளட்டும்.
இறுதியாக, காட்டாற்று வெள்ளத்தை கைகளால் தடுத்திட முடியாது; அதுபோன்று தான் இஸ்லாமிய வளர்ச்சியையும் எவரது புலம்பலும் தடுத்து நிறுத்தி விடாது. அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை இஸ்லாமிய பயங்கரவாதிகள் தகர்த்து விட்டார்கள். இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் என்று அமெரிக்கா அதிபர்கள், அமெரிக்க மக்கள் மனதில் நஞ்சை விதைக்க நினைக்கையில், அதை உடைத்தெறிந்து இன்று இஸ்லாம் அமெரிக்காவில் மட்டுமல்ல, மேற்கத்திய நாடுகளில் வெகு வேகமாக பரவி வருகிறது. எனவே பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களோ, இந்தியாவில் உள்ள முஸ்லிம்களோ, வேறு எந்த நாட்டில் உள்ள முஸ்லிம்களோ கட்டாய மதமாற்றம் செய்யவேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இஸ்லாம் மற்ற மதங்களை மட்டுமல்ல; மனிதனின் மனங்களையும் தாமாகவே வெல்லும் வலிமையுடையது என்று கூறிகொள்கிறோம்.



நீதிமன்றத் தீர்ப்புகள்; ஒரு இஸ்லாமியப் பார்வை- தொடர்[1]

விளைநிலத்தின் வரப்புச் சண்டைக்காக கோர்ட்டு படியேறிய பங்காளிகள் இருவர், வயலையே விற்று கோர்ட்டுக்கு செலவு செய்த பின்னும் கூட தீர்ப்பு வந்தால் ஆச்சர்யமே என்று சொல்லும் அளவுக்கு நீதிமன்றங்களில் லட்சக்கணக்கில் வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன. இதை மனதில் கொண்டு பின் வரும் சம்பவத்தை பார்ப்போம்.

கேரளா, கொல்லம் நீண்டகரா துறைமுகத்திலிருந்து கடந்த பிப்ரவரி 15ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது, அந்த வழியாகச் சென்ற, "என்ரிகா லக்சி' என்ற இத்தாலி சரக்கு கப்பலின் பாதுகாவலர்கள் சுட்டதில், இரு மீனவர்கள் பலியாகினர். கடற்கொள்ளையர்கள் என, தவறாக நினைத்து, மீனவர்களை சுட்டு விட்டனர். இந்த சம்பவத்தில், படகிலிருந்த 11 மீனவர்களில், தமிழகம் கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட ஜலஸ்டின், 45, மற்றும் அஜீஷ் பிங்கி, 25 ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக, இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்கள் லத்தோர் மற்றும் ஜரோன் ஆகியோர் பிப்ரவரி 17ம் தேதி கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை விடுவிக்க, இத்தாலி வெளியுறவு இணை அமைச்சர் மற்றும் ராணுவ அமைச்சர், இந்திய நிர்வாகத்தினருடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் பயன் தரவில்லை. மேலும், இவ்வழக்கு இந்திய தண்டனை சட்டப்படி, கேரளாவில் நடைபெறும் என்றும், தவறு செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்றும், வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா மற்றும் கேரள முதல்வர் உம்மன் சாண்டி ஆகியோர் தெரிவித்தனர்.

இந்த மீனவர்கள் இருவருடைய குடும்பத்துக்கும் கேரளா மாநில அரசு ரூ.5 லட்சம் கருணைத்தொகை வழங்கி இருப்பது மட்டுமல்லாமல், கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஜெலஸ்டின் மனைவி ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டும், பிங்கியின் சகோதரி ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டும் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கை கேரள உயர் நீதிமன்றம் அனுமதித்ததுடன், கப்பல் நிறுவனம் ரூ.3 கோடியை வைப்புநிதியாகச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்களை சந்திக்க, அவர்களது மனைவி மற்றும் குடும்பத்தினர், திருவனந்தபுரம் வந்தனர். அவர்கள், பலியான மீனவர்கள் குடும்பத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, துப்பாக்கிச் சூட்டில் பலியான மீனவர்கள் இருவர் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க, இத்தாலிய பாதுகாவலர்களின் குடும்பத்தினர், இத்தாலிய நிர்வாகத்தினரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்கள் சுட்டதில் பலியான தமிழக மீனவர்கள் இருவர் குடும்பத்திற்கு, தலா ஒரு கோடி ரூபாய் தர சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான ஒப்பந்தத்தில், இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்கள் குடும்பத்தினரும், பலியான மீனவர்கள் குடும்பத்தினரும் கையெழுத்திட்டுள்ளனர். 

இதையடுத்து, இத்தாலிய பாதுகாவலர்களுக்கு கடும் தண்டனை தர வேண்டும் என, ஆரம்பத்தில் கேட்டுக் கொண்டிருந்த, துப்பாக்கிச் சூட்டில் பலியான மீனவர்களின் குடும்பத்தினர், "இத்தாலியர்கள் இருவருக்கும் எதிராக எந்த வழக்கையும் நடத்தப் போவதில்லை என்றும், அவர்கள் இருவரையும் மன்னித்து விட்டோம்' என்றும் தெரிவித்தனர். 

இதற்கிடையில், இத்தாலிய பாதுகாவலர்களுக்கு எதிரான, முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி, இத்தாலிய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு எதிராக, மீனவர்களின் குடும்பத்தினர் தாக்கல் செய்த ஆவணங்களை வாபஸ் பெற, கேரள ஐகோர்ட் அனுமதி அளித்தது. தங்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தர, இத்தாலிய நிர்வாகத்தினர் சம்மதித்து விட்டதால், தாங்கள் வழக்குகளைத் தொடர விரும்பவில்லை என, மீனவர்கள் குடும்பத்தினர் தெரிவித்ததை அடுத்து, நீதிபதி கோபிநாதன் அனுமதி வழங்கினார். இதையடுத்து இத்தாலியர்கள் இருவரும் விரைவில் விடுதலையாகலாம் என எதிர்பார்த்த நிலையில், உச்சநீதிமன்றம் தலையிட்டு இவ்வழக்கில் ஒரு வேகத்தடையை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியர்கள் மீதான முதல் தகவல் அறிக்கையை சம்மந்தப்பட்ட கொலையுண்டவர்களின் குடும்பத்தினர் வேண்டுகோளுக்கு இணங்க, வாபஸ் பெற அனுமதித்த கேரள நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையாக கண்டித்திருப்பதுடன், இது சட்டத்துக்கு விரோதமானது, இது செல்லாது என்று தெரிவித்துள்ளனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

இந்தப்பிரச்சினையில் கேரளா உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கை சட்டத்திற்கு முரணானதா என்பதை பார்ப்பதை விட, நியாயப்படி சரியானதா என்று பார்த்தால் சரிதான். ஏனென்றால் சம்மந்தப்பட்ட கொலையுண்டவர்களின் குடும்பத்தினர், கொலையாளிகளிடம் இழப்பீடு வாங்கிக்கொண்டு ஒதுங்கிக் கொண்ட நிலையில், அந்த வழக்கை வாபஸ் வாங்குவதாக கூறிய நிலையில், அந்த வழக்கை நடத்தியே தீருவோம் என்று கேரளா நீதிமன்றம் எப்படி சொல்ல முடியும்? யாருடைய புகாரின் பேரில், யாருடைய நலனுக்காக இந்த வழக்கு பதியப்பட்டதோ, அவர்களே நஷ்டஈடு பெற்றுக்கொண்டு குற்றவாளிகளை மன்னித்து விட்ட பின்னால், நீதிமன்றங்களுக்கு என்ன வேலை இருக்கிறது? கேரளா நீதிமன்றத்தின் நடவடிக்கை இஸ்லாமிய சட்டத்திற்கு ஏற்ப உள்ளது. இறைவன் கூறுகின்றான்; 

ஈமான் கொண்டோரே! கொ லைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்;, அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண். இருப்பினும் [கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.

[2 ;178 ]

இந்த இறை வசனத்தில் கொலைக்கு கொலைதான் தீர்வு என்று சட்டம் சொல்லும் இறைவன், கொலை செய்தவனை, கொலையுண்டவரின் வாரிசுகள் மன்னித்து விட்டால், அந்த வாரிசுகளுக்கு உரிய இழப்பீட்டை கொலை செய்தவன் நியாயமான முறையில் வழங்கவேண்டும் என்று கட்டளையிடுகின்றான். ஒரு கொலையாளியை தண்டிப்பதற்கும், மன்னிப்பதற்கும் கொலையுண்டவரின் குடும்பத்திற்கே இஸ்லாம் உரிமை வழங்கியுள்ளது. அந்த வகையில் இத்தாலி கொலையாளிகளை கொலையுண்டவரின் குடும்பமே மன்னித்து விட்டதால் அதை கேரளா உயர்நீதிமன்றமும் அங்கீகரித்து பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது. இதில் என்ன தவறு இருக்க முடியும்? ஒரு கொலைக்கு நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காணக் கூடாது என்பது ஒரு அறிவுப்பூர்வமான வாதமல்ல. இன்னும் சொல்லப்போனால் இந்த வழக்கில் கொலையுண்டவரின் வார்சுகள் நீதிமன்றத்தை அணுகியே  இதற்கு தீர்வு கண்டுள்ளனர். எனவே நீதிமன்றத்திற்கு வெளியே என்ற வாதம் அடிபட்டுப் போகிறது. மேலும், ஒரு பொருளுக்கு இழப்பீடு வாங்கிகொண்டு ஒதுங்கிக் கொள்ள அனுமதிக்கும் சட்டம், ஒரு விபத்திற்கு இழப்பீடு வாங்கிகொண்டு ஒதுங்கிக் கொள்ள அனுமதிக்கும் சட்டம், ஒரு உயிர் விசயத்தில் இழப்பீடு வாங்கிக் கொள்வதை அனுமதிக்க முடியாது என்று கூறுவது புதிராக உள்ளது. மேலும், இந்த விசயத்தில் தம்மைப் போலவே சட்டம் படித்த கேரளா நீதிபதிகளை கண்டிக்கும் உச்சநீதிமன்றம், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட கொலையாளிகள் விசயத்தில் என்ன செய்திருக்கிறது?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது மறு ஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்றமே விசாரிக்க முடிவு செய்துள்ளது. இந்த மறு ஆய்வு மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தமிழகத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெறக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்நிலையில் இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஜி.எஸ். சிங்வி தலைமையிலான அமர்வு, "சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது மறு ஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்றமே விசாரணைக்கு எடுத்து கொள்கிறது. ஜூலை 10-ம் தேதி முதல் விசாரணை நடைபெறும்" என்று கூறியுள்ளது.

இந்த மூவர் சம்மந்தப்பட்ட இந்த வழக்கு ஏற்கனவே தமிழகத்தின் கீழ்கோர்ட்டு தண்டனை விதித்து, அதை உயர்நீதிமன்றமும் உறுதிப்படுத்தி, பின்பு உச்சநீதிமன்றத்தில் இந்த தண்டனைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டு, தண்டனை உறுதிப்படுத்தப்பட்டு, பின்பு ஜனாதிபதியாலும் நிராகரிக்கப்பட்டு, தூக்குத்தண்டனைக்கு நாள் குறித்த பின்னால், மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு; அதான் தொடர்ச்சியாக இப்போது மறுபடியும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது என்றால், ஒரே வழக்கில் எத்தனை முறை சுழற்ச்சி விசாரணை; எத்தனை முறை தீர்ப்பு? ஒரு பிரதமர் கொலை வழக்கில் 20 ஆண்டுகள் கடந்தும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட முடியாத நிலை உள்ள நாட்டில், கொலைக்கு நஷ்டஈடு பெற்றுக்கொண்டு விரைவான தீர்வு காண மக்கள் முயற்ச்சிப்பதில் என்ன குறை காண முடியும்? 

ராஜிவ்காந்தி கொலையாளிகள் 20 ஆண்டுகளாக சிறையில் இருந்து விட்டதால் அவர்களுக்கு இதுவே ஒரு தண்டனை; இனியொரு தண்டனை விதிக்க முடியாது என்று சொன்னால், இந்த தாமதத்திற்கு யார் காரணம்? ஜனாதிபதியல்லவா? கொலையுண்டவர்களுக்கு சம்மந்தமே இல்லாத ஜனாதிபதிக்கு மன்னிக்கும் அதிகாரம் வழங்கிய அரசியல் சாசனம் அல்லவா? இப்படி ஜவ்வாக ஒரு வழக்கு இழுபடுவதைத் தான் உச்சநீதிமன்றம் விரும்புகிறதா? அல்லது இஸ்லாம் சொல்லும் வழிமுறையை பின்பற்றி கொலையுண்டவன் குடும்பத்தாரிடம் கருத்துக் கேட்டால் ஒரு நாளில் வழக்கு முடிவுக்கு வந்து விடுமே! மேலும், இருபது ஆண்டுகள் கண்ணித்தீவாக நீளும் இந்த கொலைவழக்கில் வெறுமனே ராஜீவ் மட்டும் தான் கொல்லப்பட்டாரா? ராஜீவோடு சேர்த்து பதினைந்து பேர் கொல்லப்பட்டார்களே! அவர் தம் குடும்பத்தின் நிலை என்ன ஆனது என்று என்றாவது நீதிமன்றங்கள் கவலைப்பட்டதுண்டா? ஆண்டுக்கணக்கில் நீளும் இந்த வழக்கால் கொலையுண்டவரின் குடும்பத்திற்கு நயாப்பைசா பிரயோஜனம் உண்டா? இல்லை. அதே நேரத்தில் இந்த கைதிகளை பாதுகாக்க, இவர்களின் வழக்கை நடத்த என்று பலகோடிகள் மக்களின் வரிப்பணம் பாழானது தான் மிச்சம். இதையெலாம் உணர்ந்துதானோ என்னவோ, அந்த இரு மீனவ குடும்பத்தினர் உடனடி நிவாரணத்திற்கு வழிகண்டு விட்டனரோ!

எனவே, கொலையுண்டவனுக்கு சம்மந்தமே இல்லாத ஜனாதிபதிக்கு மன்னிக்கும் அதிகாரம் வழங்கும் சட்டம், கொலையுண்டவனின் குடும்பம் மன்னித்தால் அதை எதிர்ப்பது எந்தவகையிலும் நியாயமில்லை தானே! எனவே குற்றவாளியை தண்டிக்கும் அல்லது மன்னிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குவதை மறு பரிசீலனை செய்து, பாதிக்கப்பட்டவனின் வாரிசுகளுக்கு வழங்கினால் வழக்குகள் தேங்குமா? வரிப்பணங்கள் பாழாகுமா? சிந்திப்போம்- சீர்திருத்தம் செய்வோம். சட்டங்கள் நீதியை நிலைநாட்டவே என்பதை உணர்வோம்.

தீர்ப்புகள் வரும்....