சனி, 26 பிப்ரவரி, 2011

குவைத் மண்டலத்தில் நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி!

குவைத் மண்டலத்தில் வாரம் தோறும் நடைபெற்றுவரும் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி 25 -02 -2011 வெள்ளி மாலை ஏழு மணியளவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மண்டல அழைப்பாளர் ஏ.கே.ஜாஹித் பிர்தவ்ஸ் அவர்கள், சுவனம் நபிவழியில் மட்டுமே என்ற தலைப்பில் பேசினார். அவர் தனது உரையில், 'என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுது கொள்ளுங்கள்' என்ற நபிமொழியை மைய்யமாக வைத்து, நபிவழியில் தொழுவதை விடுத்து, இமாம்கள் காட்டிய வழியில் தான் தொழுவோம் என்று அடம்பிடிப்பவர்களை நாளை மறுமையில் இமாம்கள் கரையேற்றுவார்களா?  மாறாக, தொழுகை உள்ளிட்ட நமது ஒவ்வொரு அமலையும் நபிவழியில் அமைத்துக்  கொண்டால்தான் சுவனம் பெறமுடியும் என்று விளக்கினார். அல்ஹம்துலில்லாஹ்.




வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

குழப்பம் கொலையை விடக் கொடியது!




                                                                           இறைவனின் பெயரால் ...

                                              குழப்பம் கொலையை விடக் கொடியது!


இந்திய தவ்ஹீத் ஜமாத்தை தன குடும்பத்தார் பெயரில் திருட்டு தனமாக அபகரித்து , சமுதாயத்தாலும், சக நிர்வாகிகளாலும், வளைகுடா எஜமானர்களாலும் , ஏன் நீதி மன்றத்தாலும் கூட குட்டுப்பட்டு அவமானப்பட்ட பொய்யர் மீண்டும் திரு விளையாடலை துவங்கியுள்ளார். 

னது பைலாவை தானே மீறி மாத்தின் தலைவரான பொய்யர் , மீண்டும் அதிகாரம் கைக்கு வந்த ஆணவத்தில் ' குழப்பம் கொலையை விடக் கொடியது 'எனும் குர்ஆன் வசனத்தை மறந்து தன் குலத் தொழிலான குழப்ப வேலையை துவங்கியுள்ளார்.

பேரம் படியாத காரணத்தால் யாரை ஆதரிப்பது எனும் முடிவை அறிவிக்காமல், ம.ம.கவை மண்ணை கவ்வ வைப்பது தான் தன் தலையாய வேலை என இந்துத்வா சக்திகள் கூட எடுக்காத ஒரு நிலைப்பாட்டை தங்களின் தேர்தல் நிலைப்பாடாக அறிவித்து உள்ள இவர்களின் கொள்கை [?] முடிவை மக்களிடம் சொல்லாமல் ஒரு ஒப்பீட்டை வெளியிட்டுள்ளார்கள்!


  • எந்த கோரிக்கையும் வைக்காமல் அதிமுக வோடு இணைந்த ம.ம.க.
  • 5% இட  ஒதுக்கீடு தரும்   கட்சிக்கே வாக்கு ! எனும் த.த.ஜ
இந்த இரண்டு நிலைப்பாட்டில் எது சமுதாய சிந்தனையோடு எடுக்கப் பட்ட முடிவு? எனும் செய்தியை மக்களுக்கு வைக்கிறார்கள் ! வைக்கட்டும் அது அவர்களுடைய உரிமை! 

ஆனால் அதை தங்கள் பெயரில் வெளியிட தைரியம் இன்றி இந்திய  தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் வெளியிட்டுள்ளார்கள்! தங்கள் கருத்தை தங்கள் பெயரில் வெளியிடும் தைர்யமின்மை  அல்லது த.மு.மு.க.மற்றும் இ.த.ஜ.வுக்கு இடையில் உள்ள உறவை கெடுக்க வேண்டும் என்ற நோக்கம் ! இந்த இரண்டைத்தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும் இவர்களின் இந்த இழி செயலுக்குக்கு?  முஸ்லிம் சகோதரர்களுக்கு மத்தியில் குரோதம் உண்டாக்க எண்ணி குழப்பம் ஏற்படுத்தும் இந்த செயல் யாருடைய செயல் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் ! 

குறைவான எண்ணிக்கையில் இருந்த உங்களை அவன் அதிகமாக்கி வைத்ததையும், குழப்பம் செய்தோரின் முடிவு என்னவானது ? என்பதையும் எண்ணிப்பாருங்கள்! [அல்குரான் 7:86]      
  
.


குவைத்தில் பொது மன்னிப்பு!

குவைத் சுதந்திர தின பொன்விழாவை முன்னிட்டு சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்கு பொது மன்னிப்பளித்து வெளியேறுமாறு உத்தவிட்டுள்ளது அரசு. முதல்நிலை துணைப் பிரதமரும்,  உள்துறை அமைச்சருமான ஷேக் அஹ்மத் அல்-ஹமூத் விடுத்துள்ள அறிக்கையில்,
 
''குவைத் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் மார்ச் முதல் ஜூன் இறுதிக்குள் வெளியேற வேண்டும் என்றும், இவர்கள் இதுவரை சட்டவிரோதமாக தங்கியமைக்காக எவ்வித அபாதாரம் செலுத்த வேண்டியதில்லை என்றும் இந்த காலகட்டத்திற்குள் வெளியேறியவர்கள் மீண்டும் சட்டபூர்வமாக குவைத்திற்கு வரலாம் என்றும் கூறியுள்ளதோடு, குறிப்பிட்ட இந்த நான்கு மாதத்திற்குள் வெளியேறாதவர்கள் மீது, அபராதம், நாட்டைவிட்டு வெளியேற்றம், மற்றும் மீண்டும் குவைத் வரமுடியா தடை முத்திரையிடல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தனது அறிக்கையில் கூறியுள்ளார்..[al -watan]
 
குவைத்தில் பணி நிமித்தமாக வந்த வெளிநாட்டவர் பலர், அனுமதிக்கப்பட்ட  காலக்கெடு முடிந்த பின்னும் தங்கியுள்ளனர். அவர்கள் இந்த சட்டத்தின் மூலம் பயனடைவர். அதே நேரத்தில் இதே பிரச்சினைக்காக  கைதானவர்களும் சிறையில் உள்ளனர். அவர்களும் இதே போன்று பொதுமன்னிப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

புதன், 23 பிப்ரவரி, 2011

குடியுரிமை கேட்டு குவைத்தில் கிளர்ச்சி!

குவைத் நாட்டில் சுமார் ஒரு லட்சம் பேர் குடியுரிமை இல்லாத 'பெதூன்' என்றழைக்கப்படும் அரபியர்கள் உள்ளனர். இவர்களில் சுமார் 300 பேர் அடங்கிய குழுவினர் ஜஹ்ரா எனும் பகுதியில் ஜும்ஆ தொழுகைக்குப் பின் போராட்டத்தில்  ஈடுபட்டனர். சிலர் நாட்டின் கொடியுடனும், சிலர் ஆட்சியாளர்களின் புகைப்படங்களை ஏந்தியபடியும், சிலர் குர்'ஆனை கையிலேந்தியும் வந்திருந்தனர். ''எங்களுக்கு குடியுரிமை வேண்டும்; கல்வி-சுகாதாரம்-வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அடிப்படை உரிமை வேண்டும் என்று குரல் எழுப்பினர்.
 
போரட்ட செய்தியறிந்து விரைவாக திரண்டு வந்த சுமார் ஆயிரம் போலீசார், போராட்டக்காரர்களை  சுற்றி வளைத்து கலைந்து செல்லுமாறு கூறியும்,  கலைந்து செல்லாததால் தண்ணீரைப் பீச்சியும், கண்ணீர்  புகை செலுத்தியும் கலைத்தனர். இதில் சுமார் ஐந்து பேர் காயமுற்றதாகவும், ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் செய்திகள்  கூறுகின்றன. மேலும், இந்த சம்பவத்தை கண்டித்துள்ள இஸ்லாமிஸ்ட் எம்.பியான ஜமான் அல் ஹர்பஷ், போராட்டக்காரர்களை அடக்குவதற்கு முன்பாகவோ, கைது செய்வதற்கு முன்பாகவோ அவர்களை அழைத்து அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம் என்றும், அதுதான் பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்றும் கூறியுள்ளார்.
 
ஏற்கனவே ஈரான்-ஏமன்-லிபியா-பக்ரைன்-ஜோர்டான் என முஸ்லிம் நாடுகளின் போராட்டம் நடந்துவரும் நிலையில்,
குவைத்தின் சுதந்திரதின பொன்விழா  நெருங்கும் நிலையில், இங்கும் போராட்டம் வெடித்துள்ளது உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.


விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கவேண்டுமாம்; சொல்கிறார் காங்கிரஸ் பிரமுகர்!

இந்தியாவை பொருத்தமட்டில் விபச்சாரத்தின் மூலம் விளையும் 'எயிட்ஸ்' எனும் உயிர்க்கொல்லி நோயால் மரணிப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்துவரும் நிலையில், விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் எம்.பி.பிரியாதத்
 
''விபசாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும். இந்த தொழிலில் ஈடுபட்டு இருக்கும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களும் இந்த சமூகத்தில் ஒரு அங்கம்தான். எனவே அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்த, விபசாரத்தை சட்டபூர்வமாக்குவதே ஒரே வழி என்றும், விபசாரம் என்பது உலகில் பழமையான தொழில். இதில் ஈடுபடுவோருக்கு, இந்த நாட்டு மக்களுக்கு உரிய அனைத்து உரிமைகளும் இருக்கின்றன. எனவே அவர்களது நலனை பேண வேண்டியது அரசின் கடமை என்றும்  இவர் தெரிவித்ததாக செய்திகள் கூறுகின்றன.
 
விபச்சாரம் ஒரு தொழில் என்று சொல்லி, உண்மையான தொழிலாளர்களை இழிவுபடுத்துகிறார் இவர். சென்னை போன்ற பெருநகரங்களில், பார்வையிழந்த போதும் பிறரிடம் கையேந்தாமல். கவுரவமாக ரயில்களில் ஏறி இறங்கி பேனா விற்கும் அவர்களை குறித்தோ, குறைவான ஊதியத்திற்கு நாளெல்லாம் மாடாய் உழைக்கும் தொழிலாளிகள் குறித்தோ, இவர் கவலை கொள்ளவில்லை. மாறாக, இறைவன் தந்த அழகை வைத்து, ஆனை மயக்கி சம்பாதிப்பதோடு, உயிர்கொல்லி நோயை விதைக்கும் விபச்சாரம் செய்பவர்களைக் குறித்து கவலைகொள்கிறார். மேலும் இது பழமையான[?] தொழிலாம். எனவே சட்டபூர்வமாக்க வேண்டுமாம். திருட்டு- கொலை- கற்பழிப்பு போன்ற குற்றங்களும் பழமையானவைத்தான். இவைகளும் நாட்டில் தொன்று தொட்டு நடந்துதான் வருகின்றன. இவைகளையும் சட்டப்பூர்வமாக்கிவிடலாம் என்பாரா? இவரைப் போன்றவர்களை வைத்து கட்சி நடத்தும் காங்கிரஸ், இவரது கருத்தை அங்கீகரிக்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
 
 

ஒரு மிஸ்டுகால்; ஒரு மரணம்; ஒரு அதிர்ச்சி!

 
டிரிங்..டிரிங்...
சுரேஷ்[பெயர் மாற்றப்பட்டுள்ளது] மொபைல் இரு சிணுங்கி அடங்கியது. மிஸ்டுகால் வந்த நம்பருக்கு  டயல் செய்தான் சுரேஷ். எதிர்முனையில் ஒரு பெண் குரல். நீங்க ரகுவா எனக் கேட்டது. இல்லை நான் சுரேஷ் என்று கூறி விட்டு, உங்களுக்கு என்ன நம்பர் வேண்டும் என கேட்டான். அப்பெண் கூறிய  நம்பரை கவனித்த சுரேஷ், கடைசி நம்பரை மாற்றியடித்துள்ளதை கூறியவுடன், ஒ சாரி! என்ற அப்பெண், பை த பை ஒங்க கிட்ட ஒரு விஷயம் பேசலாமா என கேட்க, ஓகே என்றான் சுரேஷ். 'நான் நல்லா படிப்பேங்க! எங்க வீட்ல வசதியில்லாததால  இடையிலே நிருத்தீட்டாங்க. நீங்க கொஞ்சம் உதவி பன்னுனா நான் படிப்பை தொடர முடியும் என கூறினாள்.
 
உடனே அப்பெண்ணின் வங்கிக்கணக்கு கேட்ட சுரேஷுக்கு, எஸ்.எம்.எஸ்ஸில் வங்கிக்கணக்கு வர, பணம் அனுப்பிவிட்டு தகவல் சொன்னான். அப்பெண் நன்றி கூற, தொடர்ந்தது அலைபேசி உரையாடல். நாளடைவில் 'காதல்கோட்டை' பாணியில், காணாமலேயே இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டது. இதற்கிடையில் சுரேஷ் பணி நிமித்தமாக வெளிநாடு சென்றான். அங்கும் அலைபேசி அலையடித்தது.  அது  மட்டுமன்றி, சுரேஷிடமிருந்து பணமும்,  இருவருக்கும் மத்தியில் பரஸ்பரம் கடிதங்கள்- மெயில்கள்  பரிமாற்றம் வேறு. அப்படி ஒரு கடிதத்தோடு, அப்பெண்ணின்  புகைப்படமும் இருக்க, 'நீங்களும் நானும் சேர்ந்து இருக்குற மாதிரி இந்த படத்த மாத்தி அனுப்புங்க' என அப்பெண் கூற அப்படியே செய்தான் சுரேஷ்.
 
மேலும் அப்பெண், தான் படித்த கல்வியகத்தில் பிரின்ஸிபல் மகன் தன்னை மணக்க விரும்பியதாகவும், இரு வீட்டார் எதிர்ப்பையடுத்து  நிறைவேறவில்லை என்றும், பின்பு மத போதகர் ஒருவர் என்னை விரும்பினார் என்றும், அவர் வசதியற்றவர் என்பதால் என்னை திருமணம் செய்து வைக்க என் வீட்டார் மறுத்து விட்டார்கள் என்றும் கூறிவிட்டு, என்னமோ உங்ககிட்ட மயங்கி விட்டேன் என்றெல்லாம் கூற வானத்தில் பறந்தான் சுரேஷ்.
 
சிறிது நாளில், எனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள். சீக்கிரம் கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள் என அப்பெண் கூற, சுரேஷ் வெளிநாட்டில் பணியாற்றும் தன் அண்ணனிடம் கூற, அவரோ 'அவள் யார்- அவள் குணம் எப்படி, அவள் குடும்பம் எப்படி இப்படி எதையுமே தெரியாத நிலையில் கல்யாணம் செய்ய நினைப்பது தவறு எனக் கூற, சுரேஷின் பிடிவாதத்தால் ஆகட்டும்  பார்ப்போம் என்கிறார்.
 
இதற்கிடையில் பணி நிமித்தம் காரணமாக சுரேஷ் சில நாட்கள் அப்பெண்ணை போனில் தொடர்பு கொள்ளவில்லை. ஒருநாள் அப்பெண்ணின் அம்மாவிடமிருந்து சுரேஷுக்கு போன், 'நீங்க போன் பண்ணாததால் என் மகள் மருந்தை குடித்து விட்டாள். இப்போது ஆஸ்பத்திரியில இருந்துதான் பேசுறேன் என்று கூற பதறிய சுரேஷ், அப்பெண்ணிடமும்-மருத்துவர் என அறிமுகப் படுத்தப்பட ஒருவரிடமும் பேசினான். இறுதியில் பணம் தேவை என்றவுடன் அனுப்பினான்.
 
சில நாட்களில் மீண்டும் தொடர்புகொண்ட அப்பெண், தான் 'டிஸ்சார்ஜ்' ஆகிவிட்டதாக கூறிய பின்பே சுரேஷுக்கு உயிர் வந்தது. இந்நிலையில், சுரேஷ் தனது பணி ஒப்பந்தம் முடிந்து தாயகம் திரும்பினான். தனது கண் காணாக் காதலிக்காக வாங்கிவந்த பொருட்களை கொடுத்துவிட்டு, காதலியை கண் குளிர காண நாடினான். அவனது பெற்றோரோ, அவனை தடுத்தனர். உடனே சுரேஷ் தனது அண்ணனிடம் போன் போட்டு, பெற்றோர் அப்பெண்ணை பார்க்க செல்வதை தடுப்பதை பற்றி கூற அவர், அவசரப்படாதே! முதலில் பெரியவர்கள் மூலம் அப்பெண்ணை பார்ப்போம் என்று கூற அமைதியடைந்த சுரேஷ் அலைபேசியில் மீண்டும் காதலியிடம் பேச நாடிய சுரேஷுக்கு பல நாட்கள் காதலியின் நம்பர் 'பிசியாகவே' இருக்க, என் மாமாவிடம் பேசிக்கொண்டிருந்தேன் என காதலி கூறினாலும், சுரேஷுக்கு சந்தேகப் பொறி விழ,
 
பெண்ணின் தாயாரின்  நம்பரை தொடர்பு கொண்டு, உங்க தம்பி எங்க இருக்கிறார் என கேட்க? அவன் எங்க வீட்ல தான் என்று அந்த அம்மா கூற, வீட்ல இருக்குற மாமாகிட்ட இரவு நேரத்துல பேசுனன்னு காதலி சொன்னது பொய் என்பதையறிந்து காதலியிடம் கேட்க, அவள் மழுப்ப இறுதியில், தான் பேசிக்கொண்டிருந்தது மதபோதகரிடம் எனக்கூறிவிட்டு, எங்க இருவருக்கும் இன்னமும் தொடர்பு  இருக்கு எனக் கூற, அதிர்ந்த சுரேஷ், 'இதோடு உனக்கும்- எனக்கும் எந்த உறவில்லை என்று கூறி, லைனை துண்டித்தான்.
 
இனி இவன் கதைக்காக மாட்டான் என முடிவெடுத்த அப்பெண், தனது தாயுடன் சுரேஷ் மாவட்டத்திற்கு வந்து, உயர் காவல்துறை அதிகாரியிடம் தன் தாய் மூலம் மனுக்கொடுத்த அப்பெண், ''தன் மகளை சுரேஷ் காதலித்ததாகவும், இருவருக்கும் திருமணம் பேச சுரேஷ் பெற்றோரை அணுகியபோது, அவர்கள பெருந்தொகை  வரதட்சனையும்- நகையும் கேட்டதாகவும், சுரேஷும் பெற்றோர் பேச்சை கேட்டுக்கிட்டு தனது மகளை கண்டுகொள்வதில்லை என்றும், எனவே தனது மகளை சுரேஷுடன் சேர்த்து வைக்கவேண்டும் என மனுவில் கூற, சுரேஷின் பெற்றோரை காவல்நிலையம் அழைத்து விசாரித்தது போலீஸ்.
 
வயதான சுரேஷின் தந்தை, ஊரில் கவரவமாக வாழ்ந்தவர். அவரை போலீசின் இந்த விசாரணை மனதளவில் பாதிக்க, இரண்டே நாளில் இறைவனடி சேர்ந்தார். தந்தையின் மரணம் ஒருபுறம்- காதலியின் துரோகம் ஒருபுறம்- போலீசின் துரத்தல் ஒருபுறம் என திசை திசை தெரியாமல் அல்லாடுகிறானாம் சுரேஷ்.
 
ஒரு அலைபேசியின் இரு மணியோசை, இரு மனங்களை இணைத்து, இன்னலுக்கும் உள்ளாக்கும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. இருவரில் யாருடைய காதல் உண்மையானது என்று நாம் முடிவு சொல்ல முடியாவிட்டாலும், ஒரு முதியவரின் மரணத்த்திற்கு இக்காதல் முன்னுரை எழுதியதுதான்  வேதனையாகும்.
 
நன்றி; சமுதாய மக்கள் ரிப்போர்ட்  
 

தினத்தந்தியின் திருகுதாளம்!

நியாயமின்றி ஒரு கொலை எங்கு நடந்தாலும், எவரால் நிகழ்த்தப் பட்டாலும் அது வன்மையாக கண்டிக்கத் தக்கதே! அதே நேரத்தில் அந்த கொலை பற்றிய செய்தியை வெளியிடும் ஊடகங்கள், அதன் மூலம் ஒரு சாரார் மீது தப்பெண்ணம் ஏற்படும் வகையில் செய்தி வெளியிடக் கூடாது. தினத்தந்தியில் வெளிநாட்டு செய்திகள் என்று ஒரு பகுதி உண்டு. இப்பக்கத்தில் இடம்பெறும்  செய்திகளை  தினத்தந்தி தனது சொந்த நிருபர்கள் மூலமாக சேகரித்து வெளியிடுகிறதா? என்பது நமக்கு தெரியாது. ஆனால் அப்பக்கத்தில் வெளியாகும் செய்திகளில், பல நேரங்களில் முஸ்லிம் நாடுகள் குறித்த  செய்திகள் மிகைப்பைடுத்தப்படுகிறதோ என்று எண்னும் வண்ணம் உள்ளன.  
 
பாகிஸ்தானில் ஒருவரை சிலர் சுட்டுக்கொன்றதாக ஒரு செய்தியை தினத்தந்தி தொடர்ந்து இரு நாட்களாக இப்பகுதியில் வெளியிடுகிறது. ஒரு கொலை செய்தியை வெளியிட்டால், கொலையாளியின் பெயரையும், அவரை கொன்றவர்கள் பற்றியும் குறிப்பிட வேண்டும். ஆனால் தந்தியோ,
 
''பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்தவர் சுட்டுக்கொலை'' என்று முதல் நாளும், அதே செய்தியை  
''பாகிஸ்தானில் இந்து வியாபாரி சுட்டுக்கொலை'' என்று இரண்டாம் நாளும் வெளியிடுகிறது.
இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொல்லப்பட்டவர்கள் குறித்து இதுவரை எத்தனையோ செய்திகளை  வெளியிட்ட தினத்தந்தி, அப்போதெல்லாம் இந்து சுட்டுக்கொலை- முஸ்லிம் சுட்டுக்கொலை-கிறிஸ்தவர்   சுட்டுக்கொலை என்று போடவில்லையே! மாறாக, பாகிஸ்தானில் நடந்த ஒரு கொலையை ஒரு மத அடையாளத்தோடு , மறுபடி- மறுபடி செய்தியாக்குவது, பாகிஸ்தான் இந்து விரோத நாடு என்ற தோற்றத்தை மக்கள் மத்தியில் உண்டாக்கிவிடும் என்பது தினதந்தி அறியாத ஒன்றா?
 
எனவே ஊடகங்கள் செய்திகளை வெளியிடும்போது, குற்றத்தைக் கண்டியுங்கள். குற்றவாளியை தண்டிக்க உறுதுணையாய் இருங்கள். ஆனால் எவனோ ஒருவன் செய்யும் செயலுக்கு மத அடியாளம் காட்டி, மத நல்லிணக்கத்திற்கு வேட்டுவைக்கும் வகையில் உங்கள் எழுத்துரு அமையவேண்டாம் என்பதே எமது அவா.
 

பாதிப்பை உண்டாக்கும் 'பஸ்டே'; பாராமுகமாய் காவல்துறை!

மாணவர்கள் இந்தியாவின் வருங்கால தூண்கள் என்று சொல்லப்படுவதுண்டு. காரணம் மாணவப் பருவம் தான் ஒருவனின் வருங்கால வாழ்க்கையின் உரைகல்லாக உள்ளது. மாணவப்  பருவத்தில் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்ட பலர் பிற்காலத்தில் உலகம் போற்றும் மேதைகளாக திகழ்ந்து தனக்கும், தனது குடும்பத்தினர்க்கும், தனது நாட்டிற்கும் பெருமை சேர்த்த  வரலாறு உண்டு. அப்படிப்பட்ட மாணவப் பருவம் இன்று பல்வேறு சமூக சீர்கேடுகளின் தாக்கத்தால் சீர்குலைந்து நிற்கிறது. இன்றைய  மாணவர்களிடம் பெற்றோரை மதிக்கும் பாங்கு- ஆசிரியருக்கு கண்ணியமளிக்கும்  போக்கு ஆகியவை  மிக மிக குறைந்ததன் விளைவு அங்கே 'எவருக்கும் கட்டுப்படாமை' என்ற மனப்பக்குவம் மேலோங்கி நிற்கிறது.
 
கடந்த நவம்பர், 2008 ல் நடைபெற்ற சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களின் மோதல் மாணவர்களின் வரலாற்றில் விழுந்த துடைக்க முடியா கரும்புள்ளியாகும். இதுபோக அவ்வப்போது மாணவர்கள் திடீர் திடீர் என கோஷ்டி மோதலில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் பொது இடத்தில் தாக்கிக் கொள்வதும் நடக்கிறது. மாணவர் தலைவர் தேர்தல், அரசியல் தேர்தல்களையும் தாண்டிய மனமாச்சர்யத்தை மாணவர்களிடம் உண்டாக்கி விடுகிறது. அதில் ஏற்படும் விரோதம் மாணவர்களிடையே பகையாக தொடரும் சூழல். இவ்வாறான விஷயங்கள் ஒருபுறமிருக்க, மாணவர்களின் சில கொண்டாட்டங்கள் மக்களின் வெறுப்பை சம்பாதிப்பவையாக உள்ளன.
 
இப்போது சில வாரங்களாக மாணவர்கள் 'பஸ்டே' கொண்டாடுகிறார்கள். அதாவது தாங்கள் எந்த வழித்தடத்தில் கல்லூரி செல்கிறார்களோ அந்த பஸ்ஸை ஆண்டுக்கொருமுறை அலங்கரித்து அளப்பரை செய்வதுதான் இவர்களின் கொண்டாட்டம். பொதுவாக ஒருவரின் கொண்டாட்டம் மற்றவர்களுக்கு திண்டாட்டமாகிவிடக்  கூடாது. ஆனால் இவர்களின் 'பஸ்டே' கொண்டாட்டம் மக்களுக்கு பல வகையில் இன்னல் தருபவையாக உள்ளன. பஸ்ஸின் கூரை மீது நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆட்டம் போடுவது; பஸ்ஸில் உள்ள பொதுவான பயணிகளிடம் அநாகரிகமாக நடந்து கொள்வது; பஸ்ஸை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து முக்கிய சாலைகளில் ஊர்வலமாக செல்வதன் மூலம் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவது; பஸ்ஸை சிறைபிடித்தது  போன்று தங்கள் கல்லூரியில் பல மணிநேரம் நிறுத்தி வைத்து பயணிகளை இம்சிப்பது; பஸ்ஸை சேதப்படுத்துவது இவ்வாறாக இவர்களின்  கொண்டாட்டம் மற்றவர்களுக்கு திண்டாட்டத்தையும் , அரசுக்கு வருமான இழப்பையும் உண்டாக்குகிறது.
 
ஆயினும் பிரச்சினை செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அது ஒட்டுமொத்த  மாணவர்கள் பிரச்சினையாக  மாறிவிடும் என்ற பயத்தில் காவல்துறையும், 'பஸ்டே' வை படிப்படியாகத்தான் தடை செய்யமுடியும்' என்று கூறி தனது இயலாமையை வெளிப்படுத்துகிறது. காவல்துறையின் இந்த மென்மையான அணுகுமுறை மாணவர்களுக்கு மேலும் தெம்பைத் தருவதாக உள்ளது. அதனால் மாணவர்களின் அளவுகடந்த இம்சையும் தொடர்கிறது. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ஒரு கல்லூரி முதல்வர், மாணவர்கள் மீது போலீசில் புகார் தெரிவித்துள்ளார் என்றால், இந்த 'பஸ்டே' யின் பாதிப்பை புரிந்து கொள்ளலாம்.
 
மாணவர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். மாணவசக்தி வலுவானது என்பதற்காக மனம்போன போக்கில் செயல்பாட்டை அமைத்துக் கொள்வது ஆரோக்கியமன்று. உண்மையில் 'பஸ்டே' கொண்டாடும் மாணவர்கள் செய்யவேண்டியது என்ன? இதுபோன்ற மக்கள் முகம் சுளிக்கும் செயல்பாட்டை விடுத்து, உங்களை தினமும் பாதுகாப்பாக கல்லூரியில் கொண்டு சேர்க்கும்  குறிப்பிட்ட வழித்தடத்தின் ஓட்டுனர்- நடத்துனரை கவுரவித்து, அவர்களுக்கு பர்சிசுப் பொருட்கள் வழங்கினால் உங்கள் மீது அவர்களுக்கும்- பொது மக்களுக்கும் நல்ல அபிப்ராயம் தோன்றும். மாணவர்கள் செய்வார்களா?
 
 


பாலை பாழாக்கலாமா..?

''புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும் ஒன்னால முடியாது தம்பி;
அட பாதி புள்ள  பெறக்குதடா- பசும்பாலை தாய்ப்பாலா  நம்பி''
என்று ஒரு கவிஞன் எழுதினான்.
ஆம்! பாலூட்டவேண்டும் என்ற எண்ணமிருந்தும்,பெற்ற தாயின் மார்பகத்தில் போதுமான அளவு பால் சுரக்காத பிள்ளைகளுக்கும், பாலூட்டினால் அழகு குறைந்துவிடும் என்று கருதும் நவீன மங்கைகளை தாயாக  கொண்ட பிள்ளைகளுக்கும் தாய்ப்பாலைத்  தருவது பசு தான். இத்தகைய பால் மீது தாய்மார்களுக்கு அலாதி நம்பிக்கைகள் அதிகம். கிராமங்கள் சிலவற்றில், பால் தப்பித்தவறி கெட்டுவிட்டால் அதை தரையிலே கொட்டமட்டார்கள். மாறாக வீட்டின் கூரை மீது கொட்டுவார்கள். காரணம் கேட்டால், பால் காலில் மிதிபடக்கூடாது என்று சொல்வார்கள்.[ இது தவறான நம்பிக்கை என்பது தனி விஷயம்]
 
இந்த அளவுக்கு மக்கள் மதிக்கும் பாலை, சிலர் போராட்டம் என்ற பெயரில் தரையில் கொட்டி வீனாக்கியுள்ளனர். பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தினர் அரசை வலியுறுத்தி வந்தனர்.
 இதையடுத்து தமிழக அரசு பசும்பாலுக்கு கொள்முதல் விலையை லிட்டருக்கு ஒரு ரூபாய் 10 காசும், எருமை பாலுக்கு 2 ரூபாய் 20 காசும் உயர்த்தி வழங்கி உத்தரவிட்டது. ஆனால் இந்த கொள் முதல் விலை உயர்வை பால் உற்பத்தியாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பசும்பாலுக்கு ரூ. 5 ஆகவும், எருமை பாலுக்கு ரூ.8 ஆகவும் கொள்முதல் விலையை உயர்த்தவேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.  
 
அத்துடன் பிரதம பால் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றும் பணியாளர்களை பணி வரன் முறைப்படுத்த வேண்டும், மானிய விலையில் கால்நடை தீவனம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 7 -2 -11 முதல் பால் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். அதன்படி பலர் கறவை மாடுகளுடன் கலந்து கொண்டனர். அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பாலை தரையில் ஊற்றி போராட்டம் நடத்தினார்கள் என்ற செய்தி அதிர்ச்சிக்குரியதாகும்.
 
அரசை நோக்கி ஒவ்வொரு தரப்பாரும் பல்வேறு கோரிக்கைகளை வைக்கிறார்கள். அந்த வகையில் பால் உற்பத்தியாளர்களுக்கும் கோரிக்கை வைக்கவும், போராட்டம் நடத்தவும் ஜனநாயக ரீதியாக உரிமை உண்டு. அதே நேரத்தில் அந்த போராட்டத்தில் ஒரு வரைமுறை வேண்டும். சமீபத்தில் கரும்பு விவசாயிகள், கரும்புக்கான கொள்முதல் விலையை  உயர்த்தக் கோரி போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் யாரும் கரும்புகளை வெட்டி குப்பையில் போடவில்லை. அவ்வளவு ஏன்? சிலர் போதைப் பொருளான கள்ளை இறக்க அனுமதி கேட்டு, 'கள் இறக்கும் போராட்டம்' நடத்தினார்கள். மனிதனுக்கு கேடு விளைவிக்கும் கள்ளைக் கூட அவர்கள் இறக்கி, கீழே கொட்டி போராட்டம் நடத்தவில்லை. மாறாக சிலரின் வாயில்தான் ஊற்றினார்கள். ஆனால் போராட்டம் என்ற பெயரில் பால் உற்பத்தியாளர்கள் பல லிட்டர் பாலைக் கறந்து கீழே கொட்டி வீனாக்கியுள்ளனர்.
 
இந்தியாவில் பாலின்றி மரணிக்கும் குழந்தைகளின்  செய்தியை இவர்கள் அறியவில்லையா?  ஒரு உணவுப் பொருளை வீணாக்குவது எந்த வகை அறிவுடமை என்பதை சிந்திப்பார்களா? ஏற்கனவே கல்லிற்கும்- கட் அவுட்டிற்கும்  உணவுப் பொருளான பால் தாரைவார்க்கப் பட்டு ஒருபுறம் வீணாக்கப்  படுகையில், பால் உற்பத்தியாளர்களே இத்தகைய காரியத்தை செய்தது பொது மக்களை முகம் சுளிக்க செய்துள்ளது.
 
இவ்வாறு நாம் எழுதுவது  பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைக்கு எதிராக அல்ல. மாறாக, இனிவரும் காலங்களிலாவது உணவுப் பொருளை விரையமாக்கும் எந்த காரியத்தையும், எதன் பெயரிலும், எவரும் செய்யக்கூடாது என்ற நன்னோக்கில்தான் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்வார்கள் என நம்புகிறோம்.
 

எல்லைக்கல்; எல்லைச் சாமியாகுமா..?

றைவனின் படைப்பில் சிறந்தது மணித  இனமே. அதற்கு காரணம் மனிதனுக்குள்ள பகுத்தறிவே.  அந்த பகுத்தறிவு மூலமே படைப்பினங்களை ஆராய்ந்து, அதன் மூலம் படைத்தவனை அறிந்து அவனை வணங்குகிறோம். நாம் வணங்கும்  இறைவன் எல்லாவகையிலும் சிறந்தவனாக, எவருக்கும்-எதற்கும் ஒப்பற்றவனாக இருக்கவேண்டும். இத்தகைய இறையிலக்கனத்தை  மனிதர்களில் பெரும்பான்மையோர் மறந்த காரணத்தினால்தான், மனிதனை விட பலவீனமான  இன்னும் சொல்லப்போனால் மனிதனால் உருவாக்கப்பட்டவையே அவனுக்கு கடவுளாக கற்பித்துக் கொண்டான். அந்தவகையில், திரைப்படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி,
 
ரோட்டோரம் நடப்படும் எல்லைக்கல் மீது ஒருவர் சிவப்பு துண்டைக் காயப்போட, அந்த கல்மீது அமரும் காமெடியருடன் 'எங்க சாமி மேலேயே உட்காந்துட்டியா' என்று சண்டைபோடுவார் ஒரு பக்தர். அது நிஜத்திலும் இப்போது நடந்துள்ளது.
''.ராமநாதபுரம் மாவட்டம் எட்டிவயல் அருகே மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் எல்லை கல் ஒன்று உள்ளது. சில நாட்களுக்கு முன், அந்த கல் மீது சிலர் மாலை போட்டு, பூஜை நடந்ததற்கான அடையாளங்களுடன் விட்டு சென்றனர். அதை அவ்வழியாக வந்தவர்கள் பார்த்து, வழிபட துவங்கினர்.சில நாட்களில் எல்லை கல் வழிபாடு பிரபலமானது. என்ற செய்தி வெளியாகியுள்ளது.
 
சாலையோராம் நடப்படும் எல்லைக்கல் என்று தெளிவாக தெரிந்த பின்னும் அதை வணங்குவதற்கு மனிதன் தயாராகிறான் என்றால், அவனது கடவுள்கொள்கை எந்த அளவுக்கு பலவீனமானது என்பதை உணர்ந்து கொள்ளலாம். ஆனால், பலநூறு சிலைகள் மூலம் படைத்தவனுக்கு இணைவைத்துக் கொண்டிருந்த பாமர மக்களை தனது பகுத்தறிவு பிரச்சராத்தால் பக்குவப்படுத்தினார்கள் முஹம்மது நபி[ஸல்] அவர்கள், அந்த அறியாமைக்கால மக்கள் எந்த அளவுக்கு, இஸ்லாத்திற்கு பின் சிறந்த பகுத்தறிவுவாதியாக திகழ்ந்தார்கள் என்பதற்கு ஒரு சான்று;
 
உமர்(ரலி) அவர்கள், ஹஜருல் அஸ்வத் [கருப்புக்கல்] அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு, 'நீ தீங்கோ, நன்மையோ அளிக்கமுடியாத ஒரு கல்தான் என்பதை நான் நன்கறிவேன். நபி(ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதைக் காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்' என்றார்.
[புகாரி]
 
''நபிகளார் உருவாக்கிய இவர் 'அந்த கல்லிற்கு எந்த சக்தியுமில்லை' என்று திட்டவட்டமாக கூறுகிறார். ஆனால், எல்லைக்கல்லை வணங்கும் ஒருவர் கூறுவதை பாருங்கள்;
 
''ஒரு மாதத்தில் தான் இந்த வழிபாட்டு முறை வந்தது. இதை வழிபட்டு சென்றதால், எனக்கு சில காரியத்தில் வெற்றி கிடைத்தது. இதற்கு பெயர் வைத்தால் வழிபட வசதியாக இருக்கும் என்கிறார்.
 
கூடியவிரைவில் எல்லைக்கல், எல்லைச்சாமி ஆனாலும் ஆகலாம். ஆச்சர்யப்படுவதற்கில்லை.

[இதஜவின் சமூகத்தீமை எதிர்ப்பு மாதம். பிப்-2011] மதுவை மாய்ப்போம்!!

بسم الله الرحمن الرحيم

சமூகத்தில் புரையோடிப்போய் உள்ள சமூகத் தீமைகளை ஒழிக்கும் வகையில், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகம்,  பிப்ரவரி-2011 முழுவதும் சமூகத்தீமை எதிர்ப்பு மாதமாக அறிவித்து, சமூகத் தீமைகள் குறித்த பிரசுரங்கள்- தெருமுனைக் கூட்டங்கள் வாயிலாக, மக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்க தீர்மானித்துள்ளது. இதையொட்டி, 
 18-02 -2011 வெள்ளியன்று நமது மண்டலம் சார்பாக, பிரசுரமாக  விநியோகம் செய்த கட்டுரை  உங்கள் பார்வைக்கு
 
து நாட்டுக்கு, வீட்டுக்கு, உடலுக்கு கேடு' என்று ஒருபுறம் எழுதிவைத்துக்கொண்டு அத்தகைய கேடானதை விற்பதற்கென 'டாஸ்மாக்' நிலையங்களை உருவாக்கி அதில் படித்த பட்டதாரிகளையும் பணியாளர்களாக்கி அரசு கஜானாவை நிறைத்துவருகிறது தமிழக அரசு. அரசின் பட்ஜெட் தேவையை நிறைவேற்றுவதில் மது வியாபாரம் முக்கிய இடத்தில் இருந்து வருகிறது. இந்த மது அருந்துபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதையும், வரும் பத்தாண்டுகளில் மது அருந்ததாதவர்களை காண்பது அரிதாகிவிடும் என்று ஆய்வுகள் சொல்லும் அளவுக்கு, பெரியவர்களில் தொடங்கி, சிறார்கள் வரை இந்த மது எனும் சமூகத்தீமை ஆட்கொண்டுள்ளது.அது மட்டுமன்றி நாகீகம் என்ற பெயரில் மது பென்களையும் கவர ஆரம்பித்துள்ளது ஆபத்தின்  அறிகுறியாகும். இத்தகைய மதுவை ஒருகாலத்தில் மறைந்திருந்து குடித்தவர்கள், இன்று பட்டப்பகலில் தேநீர் அருந்துவதுபோல் பொது  இடத்தில் அருந்துகின்ற அளவுக்கு இந்த தீமை சகஜமாகிவிட்டது. மதுவால் எத்தனை லட்சம் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளன. எத்தனை குற்றங்களுக்கு இந்த மது காரணியாக உள்ளது என்பதைப் பற்றி எல்லாம் எவரும் கவலை கொள்ளும் நிலையில் இல்லை. ஆனால் இத்தகைய சமூகத்தீமையான  மதுவை,  குடம் குடமாக குடித்த மதுப்பிரியர்களை ஒரு கட்டளை  மூலம், திருத்திக் காட்டியது இஸ்லாம்;
 
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.[5 ;90]
நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான். எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?[5 ;91 ]
 
இறைக்கட்டளை வந்த மாத்திரமே கட்டுப்பட்ட சஹாபாக்கள்;
 
அனஸ்[ரலி] அவர்கள் அறிவித்தார்கள்;
நான் அபூ தல்ஹா(ரலி) வீட்டில் மக்களுக்கு மது பரிமாறுபவனாக இருந்தேன். அந்த நாள்களில் பேரீச்சம் பழ மதுவை (பேரீச்ச மரக்கள்ளை)யே அவர்கள் குடித்து வந்தனர். (மதுவைத் தடை செய்யும் இறைவசனம் அருளப்பட்டவுடன்), இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவரை அழைத்து, '(மக்களே!) மது தடை செய்யப்பட்டுவிட்டது" என்று அறிவிக்கும்படி கட்டளையிட்டார்கள். அபூ தல்ஹா(ரலி) என்னிடம், 'வெளியே சென்று இதை ஊற்றிவிடு" என்று கூறினார்கள். நான் வெளியே சென்று அதை (சாலையில்) ஊற்றி விட்டேன். மதீனா நகரின் தெருக்களில் அது ஓடியது.
[நூல்;புகாரி]
 
ஆனால் இன்றைக்கு முஸ்லிம்கள என்று தங்களை சொல்லிக் கொள்பவர்களில் பலர், இன்றைக்கு  மதுப் பிரியர்களாக இருப்பதை பார்க்கிறோம். மது அருந்தும் ஒருவர் அந்த நேரத்தில் முஸ்லிமாக இருக்க மாட்டார். நீங்கள் முஸ்லிமா? முடிவு உங்கள் கையில்!
 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"
"விபசாரி, விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் விபசாரம் புரிவதில்லை. மேலும், ஒருவன் மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் மது  அருந்துவதில்லை. ஒருவன் திருடுகிற பொழுது இறைநம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் திருடுவதில்லை. ஒருவன் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க, (பிறரின் பொருளை அபகரித்துக்) கொள்ளையடிக்கும்போது இறைநம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் கொள்ளையடிப்பதில்லை.[புகாரி]
 
இறைத்தூதர் வெறுத்த பானம் நம் கையிலா?
 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"
என்னை (விண் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் நான் மூஸா அவர்களைப் பார்த்தேன். அவர்கள், 'ஷனூஆ' குலத்து மனிதர்களில் ஒருவரைப் போல் (எண்ணெய் தடவிப்) படிந்த தொங்கலான தலைமுடியுடையவர்களாக இருந்தார்கள். நான் ஈசா அவர்களைப் பார்த்தேன். அவர்கள் நடுததர வயதுடைய சிகப்பான மனிதராகவும் (அப்போதுதான்) குளியலறையிலிருந்து வெளியே வந்தவரைப் போன்றும் இருந்தார்கள். இப்ராஹீம்(அலை) அவர்களின் சந்ததிகளிலேயே அவர்களுக்கு (தோற்றத்தில்) மிகவும் ஒப்பாக இருப்பவன் நானே. பிறகு என்னிடம் இரண்டு பாத்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அவ்விரண்டில் ஒன்றில் பால் இருந்தது; மற்றொன்றில் மது இருந்தது. (வானவர்) ஜிப்ரீல் அவர்கள், 'இரண்டில் எதை நீங்கள் விரும்புகிறீர்களோ அதைக் குடியுங்கள்" என்று கூறினார்கள். நான் பாலை எடுத்துக் குடித்தேன். 'நீங்கள் இயல்பான (பானத்)தை எடுத்துக் கொண்டீர்கள். மதுவை நீங்கள் எடுத்திருந்தால் உங்கள் சமுதாயம் வழி தவறிப் போயிருக்கும்" என்று கூறினார்கள்.[புகாரி]
 
இறைத்தூதர்[ஸல்] அவர்களோ மதுவை வெறுத்து, இயற்கை பானமான பாலை தேர்ந்தெடுக்க, நாமோ இறைத்தூதருக்கு மாற்றமாக, மதுவை தேர்ந்தெடுத்து மண்ணாகிப் போவது நியாமா?
 
போதைதரும் ஒவ்வொன்று பானமும் ஹராமே!
இன்றைக்கு சிலர் சிலவகை  மதுபானங்கள் ஹராம் அல்ல என்று கூறுவதை பார்க்கிறோம். ஆனால் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் கூறுவதை பாருங்கள்;
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'பித்உ' குறித்துக் கேட்கப்பட்டது. அது தேனால் தயாரிக்கப்படும் மதுவாகும். யமன் வாசிகள் அதை அருந்திவந்தார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'போதை தரும் (மது)பானம் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதேயாகும்' என்று கூறினார்கள்.[புகாரி]
 
மது அருந்துபவர்களுக்கு செருப்படிதான் தண்டனை;
 
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்; மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாகப் பேரீச்ச மட்டையாலும் காலணியாலும் அடுத்திடும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள் (தம் ஆட்சிக் காலத்தில்) நாற்பது சாட்டையடிகள் வழங்க உத்தரவிட்டார்கள்.[புகாரி]
 
மது அருந்துபவன் சுவனம்  செல்ல முடியாது;
 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உலகில் மது அருந்திவிட்ட பிறகு (அதைக் கைவிட்டு) அதற்காகப் பாவமன்னிப்புக் கோராதவன் மறுமையில் (சொர்க்கத்தின்) மதுவை அருந்தும் பேற்றை இழந்துவிடுவான்.[புகாரி]
 
மது மறுமைநாளின் அறிகுறியாகும்;
 
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்; என் அல்லாத வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியேற்ற செய்தி ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கப் போகிறேன், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கல்வி அகற்றப்பட்டுவிடுவதும், அறியாமை மலிந்துவிடுவதும், விபசாரம் அதிகரித்து விடுவதும், மது அருந்துதல் அதிகரித்து விடுவதும், ஐம்பது பெண்களுக்கு - அவர்களை நிர்வகிக்க  ஒரே ஆண் என்ற நிலைமைவரும் அளவுக்குப் பெண்கள் மிகுந்து, ஆண்கள் குறைந்துவிடுவதும் மறுமை நாளின் அடையாளங்களில் அடங்கும்.[புகாரி
]
 
எனவே மதுவை மாய்ப்போம்! மணிதம் பேணுவோம்!
 
சமுதாய நலன் நாடி வெளியிடுவது;
இந்திய தவ்ஹீத் ஜமாஅத், குவைத் மண்டலம்.

சனி, 19 பிப்ரவரி, 2011

குவைத் மண்டலத்தில் நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி!

بسم الله الرحمن الرحيم
குவைத் மண்டலத்தில் வாரம் தோறும் நடைபெற்றுவரும் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி 18 -02 -2011 வெள்ளி மாலை ஏழு மணியளவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மண்டல அழைப்பாளர் ஏ.கே.ஜாஹித் பிர்தவ்ஸ் அவர்கள், 'மவ்லிது மார்க்கமாகுமா?  என்ற தலைப்பில் பேசினார்.

அவர் தனது உரையில், நபிகளாரை நம் உயிருக்கும் மேலாக  மதிக்கவேண்டும். அப்போதுதான் நாம் நம்பிக்கை கொண்டவர்களாக ஆகமுடியும் என்று கூறிவிட்டு, நபிகளாரை மதிப்பது- நேசிப்பது என்பது யாரோ எழுதிவைத்த குர்'ஆன்- ஹதீசுக்கு முரணான  கவிதையை பாடுவதல்ல. மாறாக, நமது ஒவ்வொரு அசைவையும் அல்லாஹ்வின் தூதர் காட்டிய பிரகாரம் அமைத்துக் கொள்வதுதான் என்று விளக்கினார். மேலும் சுப்ஹான மவ்லிது உள்ளிட்டவைகளில் உள்ள மார்க்க முரணான விஷயங்களையும் பட்டியலிட்டு பேசியது அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

வெளிநாடுவாழ் இந்தியர் வாக்களிப்பது எப்படி.?

திரைகடலோடியும் திரவியம் தேடு என்ற தத்துவத்திற்கேற்ப, 
வளைகுடா உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்தியாவைச்சேர்ந்த சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள்  மூலம் இந்தியாவிற்கு பெருமளவில் அந்நியச்செலவாணி கிடைத்து வருகிறது. தாயகத்தின் வளர்ச்சிக்காக அந்நிய மண்ணில் பணியாற்றும் இவர்கள், தாயகத்தின் ஆட்சியாளரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைக்காமல் தவித்ததையடுத்து, வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் வாக்குரிமை வேண்டும் என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை சமீபத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்டது. இதற்கிடையே, வெளிநாடுவாழ் இந்தியர்கள் எவ்வாறு வாக்களிப்பது என்ற விளக்கத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.  அதன்படி,
 
18 வயது நிரம்பிய, வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றிடாத ஒருவர், தேர்தல் நடைபெறும்போது தங்கள் தொகுதிக்கு வருகை தந்து, பாஸ்போர்ட்டை  வாக்குச்சாவடியில் காண்பித்து வாக்கு செலுத்தலாம். மேலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் வாக்கு செலுத்தலாம் என்றால், அவர் தேர்தலில் போட்டியிடவும் செய்யலாம் என்பதும் கவனிக்கத்தக்கது. அதே நேரத்தில் பழைய விதிகளின் படி, ஒருவர் ஆறு மாதத்திற்கும்  மேலாக வெளிநாட்டில் தங்கிவிட்டால், அவரது பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

புதன், 16 பிப்ரவரி, 2011

மமகவுக்கு எதிரான தீர்மானம்; நெஞ்சமெல்லாம் வஞ்சம்!

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..
ப்பாவியாய் நின்ற அண்ணன் கழுத்தில் மாலையிட்டு, தலைவராக்கிய அந்த பொதுக்குழு, அண்ணனின் ஆசைப்படி கடந்த நாடளுமன்றத் தேர்தலில் எடுத்த அதே முடிவை, இந்த சட்டமன்றத் தேர்தல் நிலைப்பாட்டிலும் தீர்மானமாக கொண்டு வந்துள்ளது. அந்த தீர்மானம்; மமகவை தோற்கடிப்பது என்பதுதான்.

1. மனித நேய மக்கள் கட்சி எங்கு நின்று போட்டியிட்டாலும் அவர்களுக்கு எதிராக
அவர்களின் சமுதாய துரோகங்களை அடையாளம் காட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் களம் இறங்கி அவர்களை தோல்வியை தழுவச் செய்யும் என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
இவர்கள் சமுதாயத் தொண்டு செய்யாமல் ஜமாஅத் நிர்வாகிகளையும்
தலைவர்களையும் மிரட்டுதல் பள்ளிவாசல் நிர்வாகத்தில் நுழைந்து நிர்வாகத்தை
சீரழிப்பது, கட்டப் பஞ்சாயத்து செய்வது, அப்பாவிகளின் நிலத்தை
அபகரிப்பது, குடும்பப் பஞ்சாயத்து என்ற பெயரில் அராஜகம் செய்வது ஆகிய காரியங்க்ளைச் செய்து முஸ்லிம் சமுதாயத்தின் வெறுப்பைச் சம்பாதித்துள்ளனர். இவர்கள் வளர்வது சமுதாயத்துக்கு கேடாக முடியும் என்பதால் இவர்கள் எந்த அணியில் இருந்தாலும் இவர்களை எதிர்த்து பிரச்சாரம் செய்வது என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது
.
அண்ணன் ஜமாஅத்தின் தீர்மானத்தில் கூறியுள்ளபடி, மமக சமுதாயத்தின் வெறுப்பை சம்பாதித்துள்ளது உண்மை எனில், தனது வாக்குச்சீட்டின் மூலம் சமுதாயம் வெளிப்படுத்தட்டுமே! அதற்குள் தீர்மானம் நிறைவேற்றும் அவசியமென்ன? ஒருவேளை அண்ணன் ஜமாஅத்துதான் சமுதாயம்- சமுதாயம்தான் அண்ணன் ஜமாஅத் என்ற என்னமோ..?

மேலும் சில ஆண்டுகளுக்கு முன்னால், மத்தியசென்னையில், அதிமுக கூட்டணி சார்பில் மறைந்த சகோதரர் அப்துல்லத்தீப் ஸாஹிப் அவர்களும், திமுக கூட்டணியில் முரசொலி மாறனும், மூன்றவாது அணி சார்பில் பேராசிரியர் காதர்மொஹிதீன் அவர்களும் மோதும் நிலை. சமுதாயக்கட்சியின் இரு பிரமுகர்கள் மோதுவதை குறித்து, சமுதாயத்தில் பல்வேறு கருத்துக்கள் எழும்பியதையொட்டி, பேராசிரியர் காதர்மொஹிதீன் அவர்கள் தாமாக முன்வந்து போட்டியிலிருந்து விலகி பெருந்தன்மையோடு நடந்துகொண்டார். இப்படிப்பட்ட பெருந்தன்மையை பேரறிஞர்[!]ரிடம் எதிர்பார்க்க முடியாது என்பது தனிவிஷயம்.

சில நேரங்களில் முஸ்லிம்லீக்கும்- தேசியலீக்கும் சில தொகுதிகளில் மோதியுள்ளது. ஆனால் இவ்விரு அமைப்புகளும் அதை தேர்தல் போட்டியாகத்தான் கருதியதேயன்றி, அண்ணன் ஜமாஅத்தைப் போல் வஞ்சம் வைத்து வருஷா வருஷம் தீர்மானம்  நிறைவேற்றவில்லை. அவ்வளவு ஏன்? சங் பரிவார்கள் கூட முஸ்லிம் அமைப்புகளை களம் இறங்கி தோற்கடிப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றியதில்லை. ஆனால் 'நாங்கள்தான் சமுதாய பாதுகாவலர்கள்' என தம்பட்டம் அடிக்கும் அண்ணன் ஜமாஅத், இந்த தீர்மானத்தில் மூலம் சங்பரிவாரையும் மிஞ்சிய முஸ்லிம் விரோதிகள் என காட்டிவிட்டார்கள்.

அடுத்து, இவர்கள் கூறியது போன்ற துரோகங்கள் மமக செய்வதாகவே வைத்துக்கொள்வோம். சமீபத்தில் திராவிடக்கட்சிகள்  முஸ்லிம்களுக்கு இழைத்த துரோகங்கள் என்று ஒரு நாளிதழில் அண்ணன் பட்டியலிட்டாரே! அப்படிப்பட்ட இரு திராவிடக்கட்சிகளை மண்ணைக்கவ்வ வைப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றாது ஏன்? காங்கிரஸையும் தாண்டி முஸ்லிம்களுக்கு துரோகமிழைத்த கட்சி ஒன்று உண்டா? அந்த காங்கிரஸை மண்ணைக் கவ்வவைப்போம் என்று தீர்மானம் போடாதது ஏன்? போடமுடியாது.  ஏனெனில் தேர்தலில் போட்டியிடாமலேயே தேர்தல் செலவுக்கு[?] லகரங்களை பெறவேண்டுமே!

மேலும், மமகவை நோக்கி குற்றம்சாட்டும் சமுதாய துரோகங்களை விட்டும் அண்ணன் ஜமாஅத் தூய்மையானதா என்றால் இல்லை என்பதற்கு, திருவிடைச் சேரி படுகொலைகளும், ஊர்கள் தோறும் ஜமாஅத்தில் குழப்பம் உண்டாக்கி தோல்விக்குப் பின் தனிப்பள்ளி காண்பதும், கடயநல்லூர்-மேலப்பாளையம்-திருச்சி-எஸ்.பி.பட்டினம் பள்ளிவாசல்கள் ஆக்கிரமிப்பு, மற்றும் பட்டப்பகலில் பாக்கர் அமைப்பை திருடியது உள்ளிட்ட பல விஷயங்களில் அண்ணன் ஜமாஅத்தை நோக்கி மக்களின் குற்றப்பார்வை உள்ளதே! ஆக மமகவுக்கு எதிரான தீர்மானம், சமுதாயத்தின் குரல் அல்ல. மாறாக, சமுதாயப் போர்வையில் சண்டித்தனம் செய்யும் ஒருவரின் குரலே என்பதை மக்கள் புரிந்து வைத்துள்ளார்கள்.

இறுதியாக, மமகவை பெற்றெடுத்த தமுமுகவிற்கு ஒன்றை நினைவூட்டுகிறோம். பிறந்த இரண்டே மாதங்களில் தேர்தல் களம் கண்டபோது, அனைத்தையும் மறந்து, நீங்கள் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஆதரவுக்கரம் நீட்டி, தேர்தல் பிரச்சாரம் செய்து, ஆளும்கட்சியால் மத்திய சென்னையில் மமக தாக்கப்பட்டபோது கண்டனக்குரல் எழுப்பி, தனது சகோதர பாசத்தை  வெளிப்படுத்தினார் பாக்கர். அவரது அமைப்பை அண்ணன் கள்ளத்தனமாக பதிவு செய்து உரிமை கொண்டாடியபோது, சக சமுதாய இயக்கம் என்ற ரீதியில் பீஜேயின் காவாளித்தனத்தை கண்டிக்க நீங்கள் முன்வரவில்லை. எங்கே கண்டித்தால் தேர்தலில் அண்ணனின் ஆதரவு நமக்கு கிட்டாமல் போய்விடுமோ என்று நீங்கள் கருதி மவ்னம்  காத்திருக்கலாம்.

ஒன்றை மமக தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். தனக்கு தீங்கிழைத்தவனை யானை நீண்ட நாள் நினைவில் வைத்திருக்கும் என்று ஒரு கதையுண்டு. அது உண்மையா பொய்யா என்பது தெரியாது. ஆனால் அண்ணன் ஆயுளுக்கும் பகை மறப்பவரல்ல. அவ்வாறு அண்ணன் பகை மறக்க நீங்கள் திராவிடக் கட்சியல்ல என்பதை ஆணித்தரமாக உணர்ந்துகொண்டு, அரசியல் ஆதரவுக்காக அநீதியைக் கண்டு கண்மூடிகொள்ளும் செயலை தமுமுக விட்டொழிக்கவேண்டும். தவறு செய்பவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கண்டிக்க முன்வர வேண்டும். அதுதான் தமுமுகவின் உண்மையான சமுதாயப் பணியாக இருக்கும்.
 
நன்றி; அப்துல்முஹைமீன்.http://amaibbukal.blogspot.com/2011/02/blog-post_15.html

குவைத் பொன்விழா; சிறைவாசிகளின் பொது மன்னிப்புக்கு இந்தியா முயற்சிக்குமா..?

குவைத். வளைகுடாவில் வளமான நாடு மட்டுமல்ல. வந்தாரை வாழவைக்கும்  நாடுமாகும். இங்கு சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டினர் பல லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை மண்ணின் மைந்தர்களைவிட  கூடுதலாகும். இப்படி தனது நாட்டினர் மட்டுமன்றி, வெளி நாட்டு மக்களுக்கும் வேலைவாய்ப்புகள்  வழங்கி  வாழ்வளித்துக் கொண்டிருக்கும் குவைத்,
பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற 50  வது  ஆண்டு பொன்விழா மற்றும், ஈராக் ஆக்கிரமிப்பிலிருந்து மீண்ட 20 வது ஆண்டு விழாவை எதிர்வரும் 25 -26 ஆகிய  இரு தினங்கள்  வெகு விமரிசையாக கொண்டாட உள்ளது.
 
இதையொட்டி, திரும்பிய பக்கமெல்லாம் நாட்டின் கொடிகள் பட்டொளி வீசிப் பறக்கிறது. மின் விளக்குகள் வண்ண வண்ண பூக்களாக கண்ணைப் பறிக்கிறது. மேலும் இந்த விழாவிற்காக இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் உள்ளிட்ட ஐம்பது நாட்டு பெரும் தலைவர்கள் வருகை தந்து சிறப்பிக்க உள்ளனர். மேலும் நாமறிந்தவரை, வழக்கமாக எந்த நாட்டின் சுதந்திர  விழாவை எடுத்துக் கொண்டாலும், அது ஒரு விழாவாக இருக்குமேயன்றி, அவ்விழாவினால் சாமான்ய மக்களுக்கு எந்த பலனும் விளைவதில்லை. ஆனால் குவைத் இதிலிருந்து மாறுபட்டு,
 
''தனது நாட்டவர் ஒவ்வொருவருக்கும்  தலா 1000 தினார் (ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்து 561) வழங்கப்படும் என்றும், அவை தவிர இந்நாட்டு மக்களுக்கு[மட்டும்] இலவச உணவு வழங்கப்பட உள்ளது. இது அடுத்த ஆண்டு (2012) மார்ச் 31-ந் தேதி வரை அதாவது 14 மாதங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது என்பதற்கான  உத்தரவை குவைத் மன்னர் ஷேக் சபாஅல்-அகமது அல்-சபா பிறப்பித்துள்ளார்.  
குவைத் அரசின் இந்த அறிவிப்பு அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியதோடு, அந்நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் விழாவாக மாற்றிவிட்டது. இவ்வாறான  நிறைவுகள்  மண்ணின் மைந்தர்களிடம் இருந்தாலும், இவ்விழாவையொட்டி இன்னொரு சிறு எதிர்பார்ப்பும் அந்நாட்டு மக்கள் சிலரிடம் உள்ளது. அதாவது இந்த மகிழ்ச்சியான  விழாவை முன்னிட்டு, சிறையில் உள்ள தங்கள் உறவினர்களை விடுவிக்கவேண்டும் என்ற உருக்கமான வேண்டுகோள் சம்மந்தப்பட்ட சிறைவாசிகள் குடும்பத்தினர் வாயிலாக எழுப்பப்பட்டுள்ளது.
 
குவைத் நாடாளுமன்றத்தின் முன்பாக குழந்தைகள் சகிதமாக கூடிய சிறைவாசிகள் குடும்பத்தினர் சிலர்,
''அமீர் அவர்களே!
அவர்களை மன்னியுங்கள்!!
எனக்கு என் சகோதரர் வேண்டும்!
எனக்கு என் தாய் வேண்டும்!!
எனக்கு என் தந்தை வேண்டும்!
 
என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்தியிருந்தனர். அரசும் கருணை காட்டி பொது மன்னிப்பளிக்கும் என உருக்கத்துடன் எதிர்பார்க்கின்றனர். இதே போன்ற உருக்கமான எதிர்பார்ப்பு இந்தியாவின் பல மூலைகளிலிருந்தும் வெளிப்படுகிறது. ஆம்! குடும்ப முன்னேற்றத்திற்காக குவைத் சென்ற தனது தந்தை- தனது மகன்-தனது சகோதரன்- தனது கணவன், ஏதோ ஒரு குற்றம் செய்ததால் சிறையில் வாட, அவனது குடும்பமோ வறுமையில் வாட, இந்த நிலை குவைத் பொன்விழா நாளில் மாறாதா? பல லட்சம் இந்தியக் குடும்பங்களில் விளக்கேற்றிய குவைத், சின்ன சின்ன தவறுகள் செய்த சிறைவாசிகளுக்கு மட்டுமாவது கருணை காட்டாதா? பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யாதா? என உருக்கமுடன் காத்திருக்கின்றனர்.
 
மேலும், விழாவில் கலந்துகொள்ள வருகைதரும் இந்திய ஜனாதிபதி அவர்கள், குவைத் சிறையில் உள்ள இந்திய சிறைவாசிகள் குறித்து குவைத் அரசுக்கு கருணைக் கோரிக்கை வைக்கவேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர். செய்வாரா ஜனாதிபதி..?
 
டெய்ல்பீஸ்; விழா நாளான்று 'கானூன்' எனப்படும் தொழிலாளர் சம்மந்தப்பட்ட சட்டம் வெளியாக உள்ளதாகவும், அச்சட்டம் தொழிலாளர்கள் நலன் காக்கும் வகையில் இருக்கும் என தகவலறிந்த வட்டராங்கள் கூறுகின்றன.

பாதணி துடைக்கவா பாதுகாப்பு அதிகாரி..?

''உங்கள் கால் செருப்பாகத் தேய்ந்து கடமையாற்றத் தானே உங்கள் கட்டளையை எதிர்பார்க்கிறேன்''
இப்படி தேர்தல் நேரத்தில் பேசும் அரசியல்வாதிகளில் சிலர், பதவிக்கு வந்தவுடன் பாதுகாப்பு அதிகாரியே  பாதணியை துடைக்கும் அளவுக்கு நடந்து கொள்வார்கள் என்பதற்கு சமீபத்திய ஒரு சம்பவம் சான்று பகர்கிறது.  
 
பரபரப்பின்  மறுபெயராக  உத்திரபிரதேச மாநில முதல்வர் மாயாவதி இருந்து வருகிறார். தனக்குத் தானே மாநிலம் முழுவதும் பல சிலைகளை நிறுவியது, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தொண்டர்கள் மாலையாக  அணிவித்தபோது அதை இன்முகத்துடன் ஏற்றது, பூங்காக்களில் தனது கட்சி சின்னமான யானையை நிறுவியது இவ்வாறு இவரது கடந்த கால பரபரப்புகள்  இன்னும் ஓயாத நிலையில், பாதுகாப்பு அதிகாரி இவரது ஷூவை துடைத்ததன் மூலம் மீண்டும் பாரபரபுக்குள்ளகியுள்ளார் மாயாவதி.
 
ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற மாயாவாதி சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் வந்து இறங்கினார். கிளம்பிய புகை காரணமாக அவரது கால் ஷூ முழுவதும் தூசு படிந்தது. இவருடன் வந்த பெர்சனல் செக்ரியூட்டி ஆபீசர் (பி.எஸ்.ஓ.,) மாயாவதியை நோக்கி ஓடினார். பின்னர் அவர் தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த கர்ச்சீப்பை எடுத்து காலடியில் குனிந்து சுத்தம் செய்தார். அவர் சுத்தம்  செய்ததை கண்டுகொள்ளாமல் மாயாவதி,சகவாசமாக அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். ஒரு பாதுகாப்புக்கு வந்த போலீஸ் இப்படி அடிமைத்தனமாக நடத்திக்காட்டியது பெரும் கண்டனத்திற்குள்ளாகியிருக்கிறது.
 
மேலும், காலில் விழுந்(து )த தூசியை துடைத்த பத்மசிங், டி.எஸ்.பி., ரேங்கில் உள்ளவர் ஆவார். பத்மசிங் 15 ஆண்டு காலமாக பாதுகாப்பு படை அதிகாரியாக பணியாற்றி வந்திருக்கிறார். இவர் ஜனாதிபதி விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
 
''உன்னுடைய பதவிக் காலம் அஞ்சு வருஷம்; என்னோட பதவிக்காலம் அம்பத்தி நாலு வருஷம். எங்கிட்ட வச்சுக்காதே! என்று சினிமா போலீஸ், அரசியல்வாதியிடம் அடுக்குமொழி பேசுவார். ஆனால் நிஜத்திலோ காவல்துறையோ  ஆட்சியாளர்களின் ஏவல்  துறையாகத்தான் உள்ளது. இவ்வளவு காலம் ஆளும்கட்சி கூறிய பிரகாரம் சட்டத்தை காக்கும்[!] காவல்துறையை பார்த்திருக்கிறோம். ஆட்சியாளரின்  கார் கதவை திறந்து விட்டு, சல்யூட் அடிக்கும் அதிகாரிகளை பார்த்திருப்போம். ஆனால், பாதுகாப்பு  அதிகாரியையே பாதணி துடைக்கவைத்ததன்  மூலம், அரசியல்வாதிகள் அதிகாரிகளை  எந்த அளவுக்கு பகடைக்காயாக பயன்படுத்துகிறார்கள் என்பது புலப்படுகிறது.
 
இதில் வேடிக்கை என்னவெனில் இந்த சம்பவ குறித்து மாயாவதி கட்சி எம்.எல்.ஏ. நவாப் சையது கூறுகையில், ''உண்மையிலேயே இதை ஒரு பிரச்சினை என்று என்னால் கருத முடியவில்லை. தனது ஷூக்களை  துடைக்குமாறு முதல்மந்திரி மாயாவதி கூறி இருக்க மாட்டார். இப்போது, நான் ஒரு கிராமத்துக்கு செல்வதாக வைத்துக் கொள்வோம். அங்கு சேறு நிறைந்த இடத்தில் நான் காலை வைத்து விட்டால், கண்டிப்பாக எனது காலணிகளை சுத்தம் செய்வதற்காக கிராம மக்களில் சிலர் கண்டிப்பாக முன் வருவார்கள். அதில் எப்படி தவறு காண முடியும்? என்று  கூறியதுதான்.
 
இவர் சேறு நிறைந்த இடத்தில்  காலை வைத்து விட்டால், இவரது காலணிகளை சுத்தம் செய்வதற்காக கிராம மக்களில் சிலர் கண்டிப்பாக வரமாட்டார்கள். வேண்டுமானால் இவர் சேற்றை கழுவிக்கொள்ள ஒரு வாளி தண்ணீர் வேண்டுமானால் தருவார்கள். இப்படி எல்லாம் நொண்டிச்சாக்கு சொல்லி தனது தலைவியின் செயலை நியாயப்படுத்த  முயல்வது தவறாகும்.
 
எது எப்படியோ இனியேனும், அதிகாரிகள் படித்த படிப்பிற்கும் வகிக்கும் பதவிக்கும் உரிய மதிப்பு கிடைக்க வேண்டுமெனில், மக்களின் சேவகர்களான அரசியல்வாதிகளுக்கு கார்கதவை திறந்து விடுவது, சல்யூட் அடித்து பம்மி நிற்பது, அவர் அமரும் சேரை துடைப்பது, பாதணியை துடைப்பது இதுபோன்ற அடிமை சேவகம் தவிர்த்து, நான் அரசியல்வாதியின்  பாதுகாப்பு அதிகாரி  தானேயன்றி, பணியாளன் அல்ல என்பதை உணர்ந்து கம்பீரமாக நிற்கவேண்டும். நிற்பார்களா?

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

بسم الله الرحمن الرحيم

சமூகத்தில் புரையோடிப்போய் உள்ள சமூகத் தீமைகளை ஒழிக்கும் வகையில், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகம்,  பிப்ரவரி-2011 முழுவதும் சமூகத்தீமை எதிர்ப்பு மாதமாக அறிவித்து, சமூகத் தீமைகள் குறித்த பிரசுரங்கள்- தெருமுனைக் கூட்டங்கள் வாயிலாக, மக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்க தீர்மானித்துள்ளது. இதையொட்டி, 
 11-02 -2011 வெள்ளியன்று நமது மண்டலம் சார்பாக விநியோகம் செய்த பிரசுரம் உங்கள் பார்வைக்கு;

திங்கள், 14 பிப்ரவரி, 2011

அண்ணன் மீண்டும் அரியாசனம் ஏறினாரா?

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
அண்ணன் பீஜே, சமீபத்தில் மீண்டும் ததஜ மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதையொட்டி, அண்ணன் 'மீண்டும் அரியாசனம் ஏறிவிட்டார்' என்று சில சகோதரர்கள் விமர்சிக்கிறார்கள். அது தவறாகும். ஏனெனில் அண்ணன் தொடர்ந்து நான்காவது முறையாக மாநில நிர்வாகத்தில்தான் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.

தமுமுகவிலிருந்து பிரிந்தவுடன்,
  1. துணைத்தலைவர்.
  2. மாநிலத்தலைவர்.
  3. மேலாண்மைக்குழு உறுப்பினர்.
  4. மாநிலத்தலைவர். [தொடர்கிறார்]
இவ்வாறாக அண்ணன் தொடர்ந்து மாநில நிர்வாகத்தில் தான்  இருக்கிறார். ஆனால் இது பைலாவுக்கு முரணானது. கேட்டால், 'தொடர்ந்து' என்ற பதத்தை  பிடித்துக் கொண்டு, ''நான் தொடர்ந்து இருக்கவில்லையே. இடைவெளி விட்டு மக்கள் தேர்ந்தெடுத்தால் தவறில்லை. ஒரு பதவிக்காலம் விட்டு மீண்டும் பதவிக்கு வர தடையில்லை என்று பைலாவில் உள்ளது என்று பக்கா 'எஸ்கேப்' ஆகிறார். திருத்தப்பட்ட பைலாவில் அவ்வாறு உள்ளது என்பது சரிதான். ஆனால் இது பீஜேவுக்கு பொருந்தாது. ஏனெனில் அவர் தொடர்ந்து நான்கு முறையாக மாநில நிர்வாகத்தில் இருக்கிறார் எனபதுதான் உண்மை.

அதஜ என்பதிலிருந்து ததஜ ஆன பின் முதலில் துணைத்தலைவர். அதைத் தொடர்ந்து மாநிலத்தலைவர். அதைத் தொடர்ந்து பாக்கரை  கழட்டிவிடும் நோக்கில் நடத்தப்பட்ட காமராஜர் அரங்க பொதுக்குழு நாடகத்தில், நிறுவனத் தலைவராக முடிசூட்டிக்கொண்டார். இது கிளைத்தலைவர் பதவிக்கு ஒப்பானது என்று யாரும் கூறமாட்டார்கள் என நம்புகிறோம். அடுத்து கொஞ்ச நாளில் மேலாண்மை குழு அமைத்து அதில் தன்னை உறுப்பினர் என்று கூறிக்கொண்டார். அதைத் தொடர்ந்து இப்போது மீண்டும் மாநிலத்தலைவர். ஆக தொடர்ந்து நான்காவது முறையாக கோலோச்சுகிறார் என்பதுதான் உண்மை.

மேலும், தான்  இடைவெளிவிட்டு மீண்டும் பதவிக்கு வந்ததாக  பாமரர்களை நம்பவைக்கிறார். மேலாண்மைக்குழு உறுப்பினர் பதவி என்பது மாநில நிர்வாகம் அல்ல என்று காட்ட முனைகிறார். ஆம்! அது மாநில நிர்வாகத்தைவிட உயர்ந்தது. மாநில நிர்வாகத்தின் குடுமியை கையில் வைத்துள்ளதுதான் மேலாண்மைக்குழு. இந்த மேலாண்மைக்குழு 'மாநில நிர்வாகம்' என்ற பிரிவின்  கீழ்தான் பைலாவில் வருகிறது.

மேலும், இந்த மேலாண்மைக் குழுவுக்கு  கீழேதான் மாநில நிர்வாகம் பற்றிய விபரங்களே  வருகிறது. அதோடு மாநில நிர்வாகக் குழுவை கூட்டும் அதிகாரம் மேலாண்மைக் குழுவிற்கு உண்டு. மாநிலப் பொதுக் குழுவைக் கூட்டும் அதிகாரம் மாநில நிர்வாகத்திற்கு இல்லை. மேலாண்மைக் குழுவிற்கே உண்டு. இத்தகைய அதிகாரம் வாய்ந்த மேலான்மைக்குழுவில் இருந்த பீஜே, இடையில் நான் 'சும்மா' இருந்தேன்; இப்ப  மறுபடியும் யானை என் கழுத்தில் மாலை போட்டு என்னை தலைவராக்கிவிட்டது என்று கூறுவது தார்பாயில் வடிகட்டிய பொய்யல்லவா?

இது மட்டுமல்ல. மாநிலத்தலைவர் என்று அல்தாபியையும், நிர்வாகத் தலைவர் என்று ரஹ்மத்துல்லாஹ்வையும், மேலாண்மைக் குழுத் தலைவர் என்று ஷம்சுல்லுஹாவையும் வைத்துக் கொண்டு, 'பிரதமர் சந்திப்பிலிருந்து, பிசுக்கோத்து பிரச்சினை வரைக்கும் பயாஸ்கோப் முன் தோன்றி தன்னை முன்னிலைப் படுத்தியதோடு, தான் உறுப்பினர்தான் என்று ஒருபுறம் கூறிக்கொண்டு மறுபுறம் ஜமாஅத்தின் குடுமி என் கையில் எனும் அளவுக்கு எல்லா விஷயத்திலும் காட்டிக்கொண்டரே! இது எப்படி..?  மாநில நிர்வாகத்தில் இல்லாமலா?

ஆக அண்ணன் பதவிக்கு புதிதாக வரவில்லை; அவர் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறார், இப்போதும் தொடர்கிறார், இன்னும் தொடர்வார் ஏனெனில் மாநிலத் தலைவர் என்று பெயர் போட்டாலும் போடாவிட்டாலும்  அவர்தான் ததஜவுக்கு ஆயுட்காலத் தலைவர். அதை எந்த பைலாவைக் காட்டியும் எவரும் கேள்வி கேட்டால், நீங்கள் 'தடம் புரண்டவர்கள்' என்பதைக் கவனத்தில் கொள்க.
 
நன்றி; அப்துல்முஹைமீன்.http://amaibbukal.blogspot.com/2011/02/blog-post.html

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

வேளச்சேரி பகுதியில் அடக்கஸ்தலம்- மேயர் அறிவிப்பு; ஐ.என்.டி.ஜே போராட்டத்தின் வெற்றி!




''போராட்டம் இது போராட்டம்
ஐ.என்.டி.ஜே போராட்டம்!
அநீதிக்கு எதிரான அறவழி போராட்டம்!!

''கேட்க மாட்டோம் கேட்கமாட்டோம்!
இலவசங்களை கேட்கமாட்டோம்!!
கேட்கிறோம் கேட்கிறோம்!
இறந்தவர்களை அடக்கம் செய்ய கபர்ஸ்தான் கேட்கிறோம்!!

என்ற கோஷங்கள் விண்ணை முட்ட, வேளச்சேரி மற்றும் தரமணி பகுதி முஸ்லிம்களின் பல்லாண்டு கோரிக்கையான 'அடக்கஸ்தலம்' கேட்டு, அலட்சியம் காட்டும் மாநகராட்சியைக்  கண்டித்து கடந்த 28 -01 -2011 அன்று களமிறங்கியது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.

தனி அமைப்பாக இருந்தாலும், தனி கட்சியிலே இருந்தாலும் கூட, சமுதாயப் பிரச்சினை என்ற அடிப்படையில் இந்த போராட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் முஹம்மது யூசுப், மற்றும் இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழக செயலாளர் தர்வேஷ் ரஷாதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களின் சமூக அக்கறையை வெளிப்படுத்தினர்.

இப்போராட்டத்தில் கண்டன உரையாற்றிய இதஜ தேசியத்தலைவர் எஸ்.எம். பாக்கர் அவர்கள்,
''ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிலே கொள்ளையடித்தீர்களே அதில் பங்கு கேட்கவில்லை. இந்த தேசத்தில் எங்களுக்கு உரிமை இருக்கிறது. இந்த நாட்டிற்காக தியாகம் செய்தவர்கள் முஸ்லிம்கள். இந்த சமுதாயம் அடக்கம் செய்வதற்கு இடம் கேட்டால் ஒடுக்கப் பார்க்கிறீர்களா? இது எச்சரிக்கை; இது ஆரம்பம். இதற்கு செவி சாயுங்கள்.
உரிமைக்காக போராடினால் கைது நடவடிக்கையா?  முஸ்லிம்கள் என்றால் கிள்ளுக்கீரையா? இது கலைஞர் அரசுக்கு அடிக்கின்ற சவப்பெட்டி. அடுத்து யாராவது இறந்தால் ஜனாஸாவை எடுத்துக் கொண்டு கலைஞர் வீட்டை முற்றுகையிடுவோம் என கர்ஜித்தார்.

தேசியத் தலைவரின் கர்ஜனையும், போராட்டத்தில் குழுமிய மக்களின் ஆதங்கமும் அதிகார வர்க்கத்தின்  கதவுகளைத் தட்ட, பல்லாண்டு கோரிக்கைக்கு விடை கிடைத்துள்ளது. நேற்று  [10 -02 -2011 ] நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் அவர்கள்,

''வேளச்சேரி பகுதி உட்பட இரண்டு  இடங்களில் இஸ்லாமியர்கள் உடல் அடக்கம் செய்வதற்காகவும், கிறிஸ்தவர்கள் அடக்கம் செய்வதற்காக இரண்டு இடங்களும், என சென்னையில் நான்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு வரும் மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!

வியாழன், 10 பிப்ரவரி, 2011

காதலர்தினம்; ஒரு இஸ்லாமியபார்வை!

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம்.
பிப்ரவரி 14  அன்று  காதலர்தினம் உலகம் முழுவதும் அனுஸ்டிக்கப்படுகிறது. காதல் என்றால் ஒரு பெண்ணும்-ஆணும் விரும்புவது என்ற ஒன்றுதான் அர்த்தம் என்ற ரீதியில் அர்த்தம் செய்யப்படுகிறது. 'லவ்' என்ற இந்த வார்த்தைக்கு அன்பு, நேசம், காதல் என்ற அர்த்தங்கள் உண்டு. இந்த காதலர்தினம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை முதலில் அறிந்துகொண்டு, இந்த தினம் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன என்பதை பார்ப்போம்.

கி.பி. நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மத "வேலண் டைன்' என்னும் பெயர் கொண்ட ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் ரோம் அரசாங்கத்தின் தடை உத்தரவை மீறி ஏராளமான காதலர்களுக்கு ரகசியமான முறையில் திருமணம் செய்து வைத்து காதலை அங்கீகரித்த காரணத்தினால் அவர் பெயரால் "காதலர் தினம்' என கொண்டாடப்படுகிறது.
இதுதான் காதலர்தின வரலாறு.
முதலாவது இது கிறிஸ்தவர்களால் உருவாக்கப்பட்டது. இஸ்லாம் காட்டித்தராத பிறமத கலாச்சாரத்தை பின்பற்றுவதை பற்றி நபி[ஸல்] கூறினார்கள்;

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்கள்;
"உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்று கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'வேறெவரை?' என்று பதிலளித்தார்கள்.
நூல்;புஹாரி,எண் 3456

சுப்ஹானல்லாஹ்! இன்றைய முஸ்லிம்களில் சிலர், சமாதானம் என்ற பெயரிலும், விழாக்கள் என்ற பெயரிலும் பிறமத கலாச்சாரத்தை பின்பற்றுபவர்களை பற்றி அன்றே அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் அறிவித்துள்ளதை காண்கிறோம். மேலும் இவ்வாறு பிற மதகலாச்சாரத்தை பின்பற்றுபவர்களை பற்றி நபி[ஸல்] அவர்கள் கடுமையாக கண்டித்து,
''யார் பிற சமுதாயக்காலச்சாரத்தை பின்பற்றுகிறார்களோ; அவர்கள் அவர்களை சேர்ந்தவர்கள்.[அஹ்மத்]
என்று கூறியுள்ளார்கள்.
எனவே காதலர்தினம் கொண்டாடும் முஸ்லிம்கள் இந்த பொன்மொழியை கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும், இஸ்லாத்தில் ஈகைத்திருநாள், தியாகத்திருநாள் என்ற இரு பெருநாட்களைத்தவிர, வேறு கொண்டாடப்படக்கூடிய நாட்களை யார் உருவாக்கினாலும் அவைகளை முஸ்லிம்கள் புறக்கணிக்கவேண்டும். மாறாக அவைகளை கொண்டாடினால் அவர்கள் அந்தவிசயத்தில் அவர்களை சார்ந்தவர்களே!
மேலும் காதலர் தினம் என்ற பெயரில் நடைபெறும் கூத்துக்கள் சொல்லிமாளாது. காதல் என்ற பெயரில் காமம்  மட்டும் விஞ்சி  நிற்கிறது. இந்த தினத்தில் பொதுமக்கள்  கூடும் இடம் என்று கூட பார்க்காமல் இவர்கள் அடிக்கும் காமக்கூத்துக்கள், கலாச்சார  சீரழிவின் அடையாளமாக உள்ளது. எனவே இத்தகைய கலாச்சார சீரழிவிற்கு வழிவகுக்கும் கொண்டாட்டங்களை தடுக்க அரசும், சமூக ஆர்வலர்களும் முன்வரவேண்டும். மேலும் முஸ்லிம்கள் நாகரீகம் என்ற பெயரில் இந்த நாசகார சகதியில் விழுந்துவிடக்கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இஸ்லாமின் மூலம் அவர்கள்தான் சிறப்படைகிறார்கள்!


நன்றி; அல்ஜன்னத் மாத இதழ்.

வாராந்திர மார்க்க சொற்பொழிவு அழைப்பு!

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால்,
குர்'ஆன்- ஹதீஸ் வழிகாட்டுதலின் அடிப்படையில், [intj]தேசியத்தலைவர் எஸ்.எம்.பாக்கர்  அவர்களின் சீரிய தலைமையில் , இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் குவைத் மண்டலம்  வீரியமாக செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வாரம்  தோறும் நடைபெறும் மார்க்க சொற்பொழிவு வெள்ளிக்கிழமை[ 11 -02 -2011] மாலை 7 மணியளவில் நடைபெறவுள்ளது இன்ஷா அல்லாஹ். நிகழ்ச்சியில்,

சகோதரர் ஜாஹித் பிர்தவ்ஸ் அவர்கள்,
மவ்லிது மார்க்கமாகுமா..?என்ற தலைப்பில் 
 உரை நிகழ்த்துகிறார்கள்.

இடம்; அல்-ரூமி பில்டிங் கீழ்த்தளம், அலுவலக எண்;8 
[மீனா பஜார் அருகில்] மிர்காப் குவைத்.

அனைவரும் வருக; அல்லாஹ்வின் அருள் பெருக; 
அன்புடன் அழைக்கிறது; இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம்.
தொடர்புக்கு; 97659759 ,65120393 ,65727633 , 97102763 ,97465872 ,55890813 ,65531023 ,65569054

திங்கள், 7 பிப்ரவரி, 2011

'சமூகத்தீமைகள்' பற்றிய விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
சமூகத்தில் புரையோடிப்போய் உள்ள சமூகத் தீமைகளை ஒழிக்கும் வகையில், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகம்,  பிப்ரவரி-2011 முழுவதும் சமூகத்தீமை எதிர்ப்பு மாதமாக அறிவித்து, சமூகத் தீமைகள் குறித்த பிரசுரங்கள்- தெருமுனைக் கூட்டங்கள் வாயிலாக, மக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்க தீர்மானித்துள்ளது. இதையொட்டி, ஸ்டிக்கர்களும் தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு கிளைகள் தோறும் வீடுகளில், பொது இடங்களில், வணிக நிறுவனங்களில் ஒட்டி விழிப்புணர்வை உண்டாக்க தீர்மானித்துள்ளது இதஜ.

அந்த ஸ்டிக்கர்களில் சில உங்கள் பார்வைக்கு;







சனி, 5 பிப்ரவரி, 2011

குவைத் மண்டல தலைமையகத்தில் நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு!

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

குவைத் மண்டல இதஜ தலைமையகத்தில்  வாரம்தோறும் நடைபெற்று வரும், வாராந்திர  மார்க்க சொற்பொழிவு
நிகழ்ச்சி  வெள்ளிக்கிழமை[ 04 -02 -2011] மாலை 7 மணியளவில் சிறப்புடன் நடைபெற்றது.   நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய

சகோதரர் ஜாஹித் பிர்தவ்ஸ் அவர்கள்,
அமல் செய்வதால் ஆதாயம் யாருக்கு...? என்ற தலைப்பில்  உரை நிகத்தினார்.
அவர் தனது உரையில், இஸ்லாத்தின் அடிப்படை அம்சமான கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் உள்ளிட்ட கடமைகளை நாம் நிறைவேற்றுவதால், அல்லாஹ்வுக்கு எந்த அந்தஸ்தும் உயர்ந்துவிடுவதிலை. மாறாக இக்கடமைகளை நிறைவற்றுவதன்  மூலம் பயனடைவது மனிதர்களே! மனிதனுக்கே இம்மை-மறுமைக்கு பயனளிக்கும் என்ற கருத்தை முன்வைத்தார். அல்ஹம்துலில்லாஹ்.


தகவல்; முகவைஅப்பாஸ்,
மண்டலத்தலைவர்.

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

வாராந்திர மார்க்க சொற்பொழிவு அழைப்பு!

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால்,
குர்'ஆன்- ஹதீஸ் வழிகாட்டுதலின் அடிப்படையில், [intj]தேசியத்தலைவர் எஸ்.எம்.பாக்கர்  அவர்களின் சீரிய தலைமையில் , இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் குவைத் மண்டலம்  வீரியமாக செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வாரம்  தோறும் நடைபெறும் மார்க்க சொற்பொழிவு வெள்ளிக்கிழமை[ 04 -02 -2011] மாலை 7 மணியளவில் நடைபெறவுள்ளது இன்ஷா அல்லாஹ். நிகழ்ச்சியில்,

சகோதரர் ஜாஹித் பிர்தவ்ஸ் அவர்கள்,
அமல் செய்வதால் ஆதாயம் யாருக்கு...?என்ற தலைப்பிலும்,

சகோதரர் கண்டியூர் ராஜ்முஹம்மத்  அவர்கள்,
அமானிதம் பேணுவோம்!என்ற தலைப்பிலும்,  உரை நிகழ்த்துகிறார்கள்.

இடம்; அல்-ரூமி பில்டிங் கீழ்த்தளம், அலுவலக எண்;8 
[மீனா பஜார் அருகில்] மிர்காப் குவைத்.

அனைவரும் வருக; அல்லாஹ்வின் அருள் பெருக; 
அன்புடன் அழைக்கிறது; இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம்.
தொடர்புக்கு; 97659759 ,65120393 ,65727633 , 97102763 ,97465872 ,55890813 ,65531023 ,65569054

வியாழன், 3 பிப்ரவரி, 2011

ரபியுல்-அவ்வல் மாதமும்-மவ்லிதும்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

ரபியுல்-அவ்வல் மாதம் வந்துவிட்டாலே, இருசாரார் கச்சைகட்டி கிளம்புவார்கள். ஒரு சாரார் 'இந்த மாசம் ஏதாவது தேத்துனாத்தான் உண்டு' என்று மவ்லிது கச்சேரிவாசிப்பவர்கள். இன்னொரு சாரார் 'இது பித்'அத்' மவ்லிது ஓதுபவர்கள் நரகவாதிகள் என்று பத்வா கொடுப்பவர்கள். இருசாராருமே நடுநிலையோடு மார்க்கத்தை அணுகுவதில்லை. முதல்சாராரின் வாதத்தை பார்ப்போம்.

#நாங்கள் நபி[ஸல்]அவர்களின்மீது நேசம்வைத்துள்ளோம். எனவே அவர்கள் பிறந்த இந்த மாதத்தில் அவர்களை புகழ்ந்து கவிபாடுகிறோம்


முதலாவதாக நபி[ஸல்]அவர்கள் ரபியுல்அவ்வல் பிறை 12.ல் தான் பிறந்தார்கள் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை. வரலாறுகளில் பல்வேறு கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அதில் பிரதானமானது ரபியுல்அவ்வல் ஒன்பது அன்று நபியவர்கள் பிறந்தார்கள் என்பதுதான்.

இறைத்தூதர்[ஸல்] மக்காவில் பனூ ஹாஷிம் பள்ளத்தாக்கில் ரபீவுல் அவ்வல் மாதம், 9ஆம் நாள் திங்கட்கிழமை (கி.பி. 571 ஏப்ரல் மாதம் 20 அல்லது 22ம் தேதி) அதிகாலையில் பிறந்தார்கள். அது யானைச் சம்பவம் நடைபெற்ற முதலாவது ஆண்டு. மேலும் ~அனூ ஷேர்வான் என்ற கிஸ்ராவின் ஆட்சி முடிவுக்கு வந்த நாற்பதாம் ஆண்டு.
இக்கருத்தையே அறிஞர் முஹம்மது ஸுலைமான் உறுதிப்படுத்துகிறார். (ரஹ்மத்துல்லில் ஆலமீன்)

ஒருவரின் பிறந்தநாளை கொண்டாடுவதாக இருந்தால் அவரின் பிறந்தநாள் உறுதியாக அறியப்பட்டிருக்கவேண்டும். பலமான, ஒத்தகருத்துடைய ஆதாரமில்லாமல் ரபியுல்அவ்வல் 12. என்று முடிவெடுத்தது எப்படி?

அடுத்து ரசூல்[ஸல்]அவர்களின்மீது நேசம் வைப்பது எப்படி என்றால் மவ்லிது கவிபாடி அல்ல. இதோ நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்;

'உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தை, அவரின் குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராகும் வரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அனஸ்(ரலி) அறிவித்தார்கள்.
நூல்;புஹாரி,எண் 15

நபி[ஸல்] வர்களின் மீது அன்பு செலுத்துவது என்பது அவர்களை நம் உயிரினும் மேலாக மதிப்பதுதான். இதோ சத்திய சகாபாக்கள் நபியவர்களை நேசித்த விதம்பாரீர்;

கப்பாப் இப்னு அரத்(ரலி) அறிவித்தார்கள்;

நான் அறியாமைக் காலத்தில் கருமானாக இருந்தேன். எனக்கு ஆஸ் இப்னு வாயில் என்பவன் சில திர்ஹம்கள் கொடுக்க வேண்டியிருந்தது. அதைக் கொடுத்து விடும்படி கேட்டு அவனிடம் சென்றேன். அவன், 'நீ முஹம்மதை நிராகரிக்காதவரை நான் உனக்குக் கடன் தீர்க்க மாட்டேன்" என்று கூறினான். நான், 'முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்து, பிறகு உயிராக்கி எழுப்பும் வரை நான் முஹம்மதை நிராகரிக்க மாட்டேன்" என்று கூறினேன். அதற்கு அவன், 'அப்படியென்றால் நான் இறந்து மீண்டும் உயிராக்கி எழுப்பப்படும் வரை என்னைவிட்டுவிடு. அப்போது எனக்குச் செல்வமும் குழந்தைகளும் கொடுக்கப்படும். பிறகு நான் உன் கடனைத் தீர்ப்பேன்" என்று கூறினான்.
அப்போதுதான், 'எவன் நம்முடைய சான்றுகளை மறுக்கிறானோ, மேலும் 'பொருள் செல்வமும் மக்கள் செல்வமும் எனக்கு வழங்கப்பட்டுக் கொண்டேயிருக்கும்' என்றும் கூறுகிறானோ அவனை (நபியே!) நீங்கள் பார்த்தீர்களா? அவன் மறைவான உண்மைகளை அறிந்து கொண்டானா? அல்லது கருணை மிக்க இறைவனிடம் ஏதேனும் உடன்படிக்கை செய்தானா? அப்படியொன்றுமில்லை. அவன் பிதற்றுவதை நாம் எழுதி வைத்துக் கொள்வோம். அவனுக்குத் தண்டனையை மேலும் மேலும் அதிகமாக்குவோம்..." (திருக்குர்ஆன் 19:77-80) என்னும் திருக்குர்ஆன் வசனம் அருளப்பட்டது.
நூல்;புஹாரி,எண் 2425

இதுதான் உண்மையில் நபியவர்கள் மீது செலுத்தும் நேசமேயன்றி, 'நீங்கள்தான் பாவங்களை மன்னிக்கக்கூடியவர்' ' நீங்கள்தான் பாவங்களை மன்னித்து, மறைக்கக்கூடியவர்' என்று அல்லாஹ்வின் தண்மைகளை அல்லாஹ்வின் தூதரைநோக்கி பாடுவதல்ல என்பதை மவ்லிது அபிமானிகள் விளங்கிக்கொள்ளவேண்டும்.

இப்படி நாம் கூறினால் இவர்கள் அடுத்து ஒரு வாதம் வைப்பார்கள். அதாவது ஹஸ்ஸான் இப்னு தாபித்[ரலி] அவர்கள் கவிபாடினார்களே என்பார்கள். ஹஸ்ஸான்[ரலி] அவர்கள் பாடிய கவி என்ன?

ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அறிவித்தார்கள்;

மஸ்ஜிதுந் நபவீயில் (நபித் தோழரும் கவிஞருமான) ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) கவிபாடிக் கொண்டிருக்க, உமர்(ரலி) அங்கு வந்தார்கள். (ஹஸ்ஸான்(ரலி) பள்ளிவாசலில் கவிபாடுவதை உமர்(ரலி) கண்டித்தார்கள்) ஹஸ்ஸான்(ரலி), 'நான் இந்தப் பள்ளிவாசலில் உங்களை விடச் சிறந்தவர் (நபி(ஸல்) அவர்கள்) இருக்கும் போதே கவிபாடிக் கொண்டிருந்தேன்" என்று கூறிவிட்டு, அபூ ஹுரைரா(ரலி) பக்கம் திரும்பி, 'அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கிறேன். (என்னிடம்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(ஹஸ்ஸானே!) என் சார்பாக (எதிரிகளின் வசைக் கவிகளுக்கு) நீங்கள் (கவிகளாலேயே) பதிலளியுங்கள். இறைவா! ஹஸ்ஸானுக்கு ரூஹுல் குதுஸ்(தூய ஆத்மா வானவர் ஜிப்ரீல் அவர்களின்) மூலம் துணை புரிவாயாக!" என்று கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அபூ ஹுரைரா(ரலி), 'ஆம் (செவியுற்றிருக்கிறேன்)" என்று பதிலளித்தார்கள்.
நூல்;புஹாரி,எண் 3212

ஹஸ்ஸான்[ரலி]அவர்கள் இஸ்லாமிய எதிரிகளை நபியவர்களின் அனுமதியோடு கவிநடையில் பதிலளித்தது, நபியவர்களை அல்லாஹ்வின் தன்மைகளை சூடி பாடக்கூடிய 'சுப்ஹானமவ்லிதுக்கு எப்படி ஆதாரமாகும்? சிந்திக்க மாட்டீர்களா? வேண்டுமானால், இந்த ஆதாரத்தை வைத்து புஷ், அத்வானி உள்ளிட்ட இஸ்லாமிய எதிரிகளை நோக்கி கவிதை நடையில் பதிலளியுங்கள் நாங்கள் தடுக்கவில்லை.

அல்லாஹ்வின் தூதரை நேசிப்பது என்பது அவர்களை இயன்றவரை அணு அணுவாக பின்பற்றுவதும் அவர்கள் மீது சலவாத்தை  அதிகமதிகம் மொழிவதும்தான்! அல்லாஹ் பூமியில் சிலவானவர்களை ஏற்படுத்தியிருக்கிறான். என்மீது சலவாத் கூறப்பட்டால் அதை எனக்கு எடுத்துக்காட்டுவார்கள் என்ற நபிமொழியின் மூலம் மரணித்துவிட்ட நபியவர்களுக்கு சொல்லப்படும் சலவாத்கள்தான் அவர்களை சென்றடையுமேயன்றி, மவ்லிது கவிகள் அல்ல. எனவே மவ்லிது என்பது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட ஒன்றல்ல என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்.

மவ்லிதும் மார்க்கம்தான் என்று வரட்டுவாதம் பேசாமல், மவ்லிதுகளில் உள்ள தவறான அர்த்தம்தரும் வார்த்தைகளை நீக்கிவிட்டு, பக்தி முலாம் பூசாமல் வேண்டுமானால் பொழுதுபோக்குக்கு வேண்டுமானால் பாடிக்கொண்டு திரியுங்கள்.

அடுத்து மவ்லிதை எதிர்ப்பவர்கள், ஒரு சாரார் அறிந்தோ-அறியாமலோ மவ்லிது ஓதுகிறார்கள் என்பதற்காக அவர்களை நரகவாதிகள் என்று சொல்வது அப்பட்டமான வரம்புமீரலாகும். ஏனெனில், யார் சொர்க்கம் செல்வர் யார் நரகம் செல்வர் என்று தீர்மானிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. நபியவர்கள் பாவங்களை மன்னிப்பார்கள் என்று கவிபாடினால் அது ஷிர்க். ஆனால் இறைவனின் தன்மையான தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை கையிலெடுத்து ஒரு சாராரை நரகவாதிகள் என்று கூறுவதற்கு பெயரென்ன? எனவே, மென்மையாக எடுத்துச்சொல்லி தவறான செய்கையிலிருந்து மக்களை மீட்டெடுக்க முயற்சிப்பதே அறிவுப்பூர்வமானதாகும்.

(மறுமையில் விசாரணைகள் முடிந்த பின்) சொர்க்க வாசிகள் சொர்க்கத்திலும் நரக வாசிகள் நரகத்திலும் நுழைந்து விடுவார்கள். பின்னர் உள்ளத்தில் கடுகளவேனும் ஈமான் எனும் இறைநம்பிக்கை இருப்பவரை (நரகத்திலிருந்து) வெளியேற்றி விடுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுவான். உடனே அவர்கள் கறுத்தவர்களாக அதிலிருந்து வெளியேற்றப்பட்டு 'ஹயாத்' என்ற ஆற்றில் போடப்படுவார்கள். இந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் ஒருவரான மாலிக், ஆற்றின் பெயர் 'ஹயா' என்று நபி(ஸல்) கூறினார்களோ என்று சந்தேகப்படுகிறார்... அவ்வாறு அவர்கள் அந்த ஆற்றில் போடப்பட்டதும் பெரும் வெள்ளம் பாயும் ஓடைக் கரையில் விதைகள் முளைப்பது போன்று பொலிவடைவார்கள். அவை வளைந்து மஞ்சள் நிறமாக இருப்பதை நீர் பார்த்ததில்லையா?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்கள்.
நூல்; புஹாரி,எண்; 22

அல்லாஹ்வே  மிக அறிந்தவன்.