வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

குவைத்தில் பொது மன்னிப்பு!

குவைத் சுதந்திர தின பொன்விழாவை முன்னிட்டு சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்கு பொது மன்னிப்பளித்து வெளியேறுமாறு உத்தவிட்டுள்ளது அரசு. முதல்நிலை துணைப் பிரதமரும்,  உள்துறை அமைச்சருமான ஷேக் அஹ்மத் அல்-ஹமூத் விடுத்துள்ள அறிக்கையில்,
 
''குவைத் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் மார்ச் முதல் ஜூன் இறுதிக்குள் வெளியேற வேண்டும் என்றும், இவர்கள் இதுவரை சட்டவிரோதமாக தங்கியமைக்காக எவ்வித அபாதாரம் செலுத்த வேண்டியதில்லை என்றும் இந்த காலகட்டத்திற்குள் வெளியேறியவர்கள் மீண்டும் சட்டபூர்வமாக குவைத்திற்கு வரலாம் என்றும் கூறியுள்ளதோடு, குறிப்பிட்ட இந்த நான்கு மாதத்திற்குள் வெளியேறாதவர்கள் மீது, அபராதம், நாட்டைவிட்டு வெளியேற்றம், மற்றும் மீண்டும் குவைத் வரமுடியா தடை முத்திரையிடல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தனது அறிக்கையில் கூறியுள்ளார்..[al -watan]
 
குவைத்தில் பணி நிமித்தமாக வந்த வெளிநாட்டவர் பலர், அனுமதிக்கப்பட்ட  காலக்கெடு முடிந்த பின்னும் தங்கியுள்ளனர். அவர்கள் இந்த சட்டத்தின் மூலம் பயனடைவர். அதே நேரத்தில் இதே பிரச்சினைக்காக  கைதானவர்களும் சிறையில் உள்ளனர். அவர்களும் இதே போன்று பொதுமன்னிப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக