புதன், 31 ஆகஸ்ட், 2011

பதவி போனதோடு மரியாதையும் போச்சு!

நாடு முழுவதும், அன்னா ஹசாரே அலை வீசிக்கொண்டிருந்த நேரம் பார்த்து, சுரங்க ஊழலில் சிக்கி, முதல்வர் பதவியை இழந்த, கர்நாடகாவின் எடியூரப்பா, தன் இமேஜை தூக்கி நிறுத்துவதற்கான முயற்சியில் இறங்கினார்.அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக, பெங்களூரில் போராட்டம் நடத்த முடிவு செய்து, கட்சி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.


இது, கர்நாடகா அரசியலில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. "இவரே, ஊழலில் சிக்கித் தான், முதல்வர் பதவியை பறிகொடுத்துள்ளார். ஊழலுக்கு எதிராக, இவர் போராட்டம் நடத்துவது, சாத்தான் வேதம் ஓதுவதைப் போல் உள்ளதே' என, எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனங்களை வைத்தனர்.இதையெல்லாம் பொருட்படுத்தாமல், திட்டமிட்டபடி போராட்டத்துக்கு கிளம்ப தயாரானார் எடியூரப்பா. ஆனால், முதல்வர் பதவியில் இருந்த போது, எடியூரப்பாவை சுற்றிச் சுற்றி வலம் வந்தவர்கள் யாருமே, போராட்டத்தில் பங்கேற்க வரவில்லை.


திடீரென, பா.ஜ., மேலிடத்திடம் இருந்து, எடியூரப்பாவுக்கு தகவல் வந்தது. "தயவு செய்து போராட்டத்துக்கு கிளம்பும் எண்ணத்தை கைவிடுங்கள். இதுபோன்ற நடவடிக்கைகள் தேவையில்லாமல், உங்களைப் பற்றிய, வேறு சர்ச்சைகளுக்கு வழி வகுத்து விடும்'என, கண்டிப்பு கலந்து குரலில், தகவல் தெரிவிக்கப்பட்டது. வேறு வழியின்றி, போராட்ட திட்டத்தை எடியூரப்பா கைவிட்டார்."பதவி இல்லாவிட்டால், சாதாரண தொண்டரிடம் இருந்து கூட, நமக்கு மரியாதை கிடைக்காது போல் தெரிகிறதே'என, கவலை கலந்த யோசனையில் ஆழ்ந்திருக்கிறாராம் எடியூரப்பா.
 
நன்றி;தினமலர் ஆகஸ்ட் 31,2011

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

நபி[ஸல்] அவர்களின் பரிந்துரையைக் கேட்பது கூடுமா? பீஜே அன்றும்-இன்றும்!

بسم الله الرحمن الرحيم
நாளை மறுமையில் நபி[ஸல்] அவர்களின் பரிந்துரையைக் கேட்பது கூடுமா? என்பது குறித்து அறிஞர் பீஜே அவர்கள்,  திருக்குர்'ஆன் மொழியாக்கம் செய்வதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய 'திருமறை தோற்றுவாய்' என்ற நூலில் 'மறுமையில் பரிந்துரை' என்ற பகுதியில் எழுதியுள்ளதை கீழே படியுங்கள்;
 
''நபிமார்கள் மற்றும் நல்லவர்கள் நமக்காக பரிந்துரை செய்ய வேண்டுமென்று விரும்பினால், அப்போது இறைவனை மட்டும் வணங்கி இறைவனிடம்  தான் இதை  கேட்கவேண்டும். இறைவா! என் விஷயத்தில் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களை பரிந்துரை செய்ய வை என்று கேட்க வேண்டுமே தவிர, நபியே நீங்கள் பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்கலாகாது.
 
பீஜேயின் மேற்கண்ட விளக்கத்தில், பரிந்துரையை நபிகளாரிடத்தில் நேரடியாக கேட்கக் கூடாது. அதே நேரத்தில்,  ''இறைவா! என் விஷயத்தில் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களை பரிந்துரை செய்ய வை' என்று கேட்கலாம் என்று சொன்னவர் பின்னாளில் தனது திருக்குர்'ஆன் தமிழாக்கத்தில் 'பரிந்துரை பயனளிக்குமா' என்ற விளக்கத்தில் மேற்கண்ட தனது கூற்றிற்கு தானே முரண்படுவதை கீழே படியுங்கள்;
 
இறைவா! நபிகள் நாயகத்தின் பரிந்துரையத் தா!' என்று கேட்பது தவறாகும்.
என் பரிந்துரையை அல்லாஹ்விடம் வேண்டுங்கள் என்று நபி[ஸல்] அவர்கள் கற்றுத்தரவில்லை. பாவிகளுக்கு என் பரிந்துரை உண்டு என்றே கூறினார்கள். சில காரியங்கள் மூலம் என் பரிந்துரை கிடைக்கலாம் எனவும். கூறினார்கள்.
 
முதலில் ''இறைவா! என் விஷயத்தில் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களை பரிந்துரை செய்ய வை' என்று கேட்கலாம் என்று சொன்னவர்,
பிறகு அவரே அந்தர் பல்டியடித்து, இறைவா! நபிகள் நாயகத்தின் பரிந்துரையத் தா!' என்று கேட்பது தவறாகும் என்று கூறுகிறார். நிகழ்ச்சிக்கொரு சட்டையை மாற்றுவது போன்று நித்தமும் ஃபத்வா'வை மாற்றும் இவரை மக்கள் புரிந்து கொள்ள அல்லாஹ் அருள்புரிவானாக!

'பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

بسم الله الرحمن الرحيم
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
புனிதமிக்க ரமலான் மாதம் முழுவதும், ஏக இறைவனின் ஏவலுக்கு கட்டுப்பட்டு உண்ணல்-பருகல்-உறவுகொள்ளல் தவிர்த்து உண்மையான நோன்பை கடைபிடித்து, அதன்மூலம் இறையச்சம் எனும் பேரொளியை இதயத்தில் இனிதே தாங்கி இந்த இனிய ஈகைத்திருநாளை இன்று கொண்டாடும், நாளை [31 -08 -2011 ] கொண்டாட விருக்கும் சகோதர- சகோதரிகளே! உங்களுக்கும்- உங்கள் குடும்பத்தார்களுக்கும்-உறவினர்களுக்கும் எமது இதயம் கனிந்த
'பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

என்றும் இறைப்பணியில்,

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்- குவைத் மண்டலம்.
தொடர்புக்கு; 65653431 , 97659759 , 97465872 .

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

ஒருபாலர் திருமணம் இயற்கை நியதிக்கு மாறானது; போப் விளாசல்!

னும்- பெண்ணும் திருமணம் செய்து இல்லறத்தில் ஈடுபட்டு, சந்ததிகளை பெருக்கி, அமைதியான வாழ்க்கை வாழ்வதுதான் இயற்கையான வழிமுறையாகும். இந்த வழிமுறைக்கு மாற்றமாக நாகரீகத்தின் பெயரால், ஆனும்-ஆனும்- பெண்ணும்-பெண்ணும் திருமண பந்தத்திலும், இதற்கு வெளியிலும் இணையும் கலாச்சாரம் மேற்கத்திய நாடுகளில் அதிக அளவில் உள்ளது. சில  நாடுகளில் ஓரினச் சேர்க்கை திருமணங்கள் சட்டரீதியாக அங்கீகரிக்கப் பட்டும் இருக்கின்றன. இந்தியாவில் கூட ஓரினச் சேர்க்கை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற குரல் அவ்வப்போது வலுவாக எழுகிறது. ஒரே பாலியல் திருமணம் அங்கீகரிக்கப்பட்ட  நாடுகளில் ஒன்றான ஸ்பெயினுக்கு சமீபத்தில் விஜயம் செய்த போப்பாண்டவர், 10 லட்சம் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் மத்தியில் நிகழ்த்திய உரையில், ஒருபாலர் திருமண முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஒரு ஆணும், ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொள்வதுதான் இயற்கை. அதைத்தான் நாம் திருமணம் என்று அங்கீகரிக்கவும் முடியும். ஆனால் ஒரு ஆண் மற்றொரு ஆணையோ, ஒரு பெண் மற்றொரு பெண்ணையோ திருமணம் செய்து கொள்வதை எவ்விதத்திலும் ஏற்க முடியாது. இது இயற்கை நியதிக்கு மாறானது. திருமணம் என்பது புனிதமானது. ஒரு ஆணும், ஒரு பெண்ணும் திருமணம் என்ற உறவின் மூலம் பிணைக்கப்படும் போது அவர்கள் தங்கள் இன்ப, துன்பங்களை உணர்வுப்பூர்வமாகப் பகிர்ந்து கொள்கிறார்கள். இப்படி மாண்புமிக்க ஆண்-பெண் திருமண முறை நிரந்தரமானது. விவாகரத்தை ஏற்க முடியாது என்று போப்பாண்டவர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
 
போப்பாண்டவரின் மேற்கண்ட விளாசல் நிச்சயம் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு பேரிடியாகும். ஏனெனில் நாகரீகம்  என்பது மனிதனின் நல்வாழ்வுக்கு வழிகாட்டுவதாக இருக்க வேண்டுமேயன்றி, மனிதனை காட்டுமிராண்டி காலத்திற்கு இழுத்து செல்லும் வகையில் அமையக் கூடாது. இதைத் தான் உலகப் பொதுமறை குர்'ஆன் அன்றே சொன்னது;

இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல்  பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை  உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. [30:21 ]

 


ராமதாஸ் வழியை கட்சிகள் கடைபிடிக்கலாமே?

ரு காலத்தில் பண்டிகை காலங்களில் மட்டும் வெடித்த பட்டாசுகள் பின்னாளில்  அரசியல்வாதிகள் கைக்கு மாறி, மாநில முதல்வர் முதல் ஏரியா கவுன்சிலர் வரை வரவேற்புக்கு அச்சாரமாக ஆகிவிட்டது. தமது தலைவரை வரவேற்க பல மீட்டர் நீளம் உள்ள சரவெடிகளை தொண்டர்கள் வெடிக்கச்  செய்கிறார்கள். இதனால் அப்பகுதி குப்பை கூளமாக காட்சியளிப்பதுடன், காற்றும் மாசுபட்டு மக்களுக்கும் பெரும் இடைஞ்சலாக ஆகிவிடுகிறது. ஆனால் தொண்டர்களோ- தலைவர்களோ இதையெல்லாம் கண்டுகொள்வதில்லை. ஆனால் பாமக நிறுவனர்  ராமதாஸ் சற்றே வித்தியாசமாக பட்டாசு வெடித்த தனது கட்சியினருக்கு தண்டனை வழங்கியுள்ளார்.
 
பாமகவின் மாவட்ட பொதுக்குழு கூட்டத்திற்கு வந்த ராமதாசை கட்சி நிர்வாகிகள்
பட்டாசுகளை வெடித்து வரவேற்றுள்ளனர். "பட்டாசுகளை வெடித்து, காசை கரியாக்கியது யார்?' எனக் கேட்ட ராமதாஸ்,  "பட்டாசு வெடித்ததற்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டினால் தான் கூட்டத்தில் பேசுவேன்' என கூறி, அதை பெற்றுக் கொண்ட பிறகே அவர் கூட்டத்தில் பேசினார் என்று செய்திகள் கூறுகின்றன.
 
ராமதாசின் இந்த கடுமையான நடவடிக்கை அவரது கட்சியினரை பக்குவப் படுத்தும். இனிமேல் பட்டாசு வெடிப்பதிலிருந்து அவர்களை தடுக்கும். இதே வழிமுறையை மற்ற கட்சிகள் பின்பற்றி காசைக் கரியாக்கும் செயலை தடுக்கலாமே? 

திருக்குர்' ஆனை விளங்க சஹாபாக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டுமா? பீஜே அன்றும்-இன்றும்.

بسم الله الرحمن الرحيم
குர்'ஆனும்-ஹதீஸும் மட்டுமே மார்க்கம் என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை. ஆனால் இந்த குர்'ஆனுக்கும்- ஹதீசுக்கும் விளக்கம் தேவைப்பட்டால் நமது கருத்தை விட, நபி[ஸல்] அவர்களின் நிழலாக வாழ்ந்த சஹாபாக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது  தவ்ஹீத் அறிஞர்களில் பெரும்பாலோர் கருத்தாக உள்ளது. இவ்வாறு நபித்தோழர்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்ற கருத்துடையவர்களை வழிகேடர்கள் என்று விமர்சிக்கும் அறிஞர் பீஜே, அன்று திருக்குர்'ஆனை விளங்க நபிகள் நாயகம்(ஸல்)அவர்களின் அன்புத்தோழர்களின் சுயநிர்ணய ஆற்றல்களுக்கே முதலிடம் தர வேண்டும் என்ற கொள்கையில் இருந்துள்ளார் என்பதை கீழே படியுங்கள்;

''முதலில் திருமறைக்குத் தெளிவு பெற விரும்புவோர் திருமறை மூலமே பெற்றிட முயல வேண்டும். ஏனெனில் திருமறையின் வசனங்களில் பெரும்பாலானவற்றிற்குத் திருமறையின் வேறு சில வசனங்களே தெளிவுரையாக அமைந்து விட்டிருக்கின்றன. அவ்வாறு திருமறைக்குத் திருமறை மூலமே தெளிவுரை பெறமுடியாத இடங்களில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்வு வாக்குகளிலிருந்து விளக்கமும் தெளிவும் பெற முயல வேண்டும். ஏனெனில் பேரறிஞர் பெருந்தகை இமாம் ஷாஃபியீ அவர்கள் குறிப்பிடுவது போல் "அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் செய்த தீர்ப்புகள், சட்டங்கள் யாவுமே அவர்கள் தனது திருமறையில் திருக்குர்ஆனை அவர்களுக்கு அருளப்பட்டதற்கான காரணங்களைச் சொல்லும் போது அதனையே அவர்கள் முன் எழும் சட்டப்பிரசினைகளுக்கு அவர்களே விளக்கம் தரக் கடமைப்பட்டவர்கள் என்பதாகவும் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறான்.

"(நபியே!) மக்களுக்கிடையில் (எழும் பிரசினைகளுக்கு) அல்லாஹ் உமக்கு அறிவித்தவாறு நீர் தீர்ப்பளிக்க வேண்டுமென்பதற்காக, சத்தியத்தைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நிச்சயமாகவே நாம் தான் உமக்கு அருளினோம் (4:105) (இந்த வேதத்திலிருந்து) மக்களுக்குச் சிறுக சிறுக அருளப் படுபவற்றிற்கு நீர் விளக்கம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே உமக்கு நாம் இந்த நினைவூட்டும் வேதத்தை அருளினோம் (உமது விளக்கத்தின் மூலம் அதனை) அவர்கள் சிந்தித்து அறிந்து கொள்வார்கள்.

இதைத்தான், நபிக் நாயகம் (ஸல்) அவர்கள் "நான் திருக்குர்ஆனையும், அதனுடன் அதுபோன்ற (மதிப்பும் சிறப்பும் உடைய) வற்றையும் வழங்கப்பட்டிருக்கிறேன்" என்றார்கள். திருக்குர்ஆன் போன்றது என்பதற்கு, "திருக்குர்ஆனின் விளக்கமாக அமைந்து விட்ட நபிகள்(ஸல்) அவர்களின் வாழ்வும், வாக்கும் என்றே அனைவரும் விளக்கம் தந்துள்ளனர். அதுவும் இறைவன் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட செய்திகள் தான் எனினும், திருக்குர்ஆன் ஓதி உணரப்பட வேண்டிய ஒன்றாகவும், அதனுடைய ஒரு காற்புள்ளி உட்படப் பாதுகாக்கப்பட்ட ஒன்றாகவும், அமைந்துள்ளது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாக்குகள் குர்ஆன் அளவுக்கு சொல்லுக்கு சொல் பாதுகாக்கப்பட்டதில்லை. எனினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் சந்தேகத்திற்கு இடமின்றி அவர்களுடையவைதான் எனத் தெரிய வரும்போது பின்பற்றப்பட்டாக வேண்டியவையாகவும் திகழ்கின்றன.

மொத்தத்தில் திருக்குர்ஆனுக்குத் தெளிவுரை பெற முயல்வோர் திருக்குர்ஆனின் மூலமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வு வாக்கு மூலமுமே பெற வேண்டும். அவ்வாறு அவ்விரண்டின் மூலமும் தெளிவுரை பெறாத போது "முஆது(ரழி) அவர்களுக்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியதைப் போன்று, இஜ்திஹாது என்ற சுயநிர்ணய ஆற்றல் மூலம் தெளிவுரை பெற முயல வேண்டம்.

திருமறைக் குர்ஆன் அருளப்பட்ட இருபத்தி மூன்றாண்டு காலத்தில் அதனுடன் ஒட்டி உறவாடி, அதன் வழியில் தமது அடிச்சுவடு ஒவ்வொன்றையும் எடுத்து வைத்து, நடந்து குர்ஆன் விரும்பும் இலட்சிய சமுதாயதாய் உருவாகி நின்ற, நபிகள் நாயகம்(ஸல்)அவாகளின் அன்புத்தோழர்களின் சுயநிர்ணய ஆற்றல்களுக்கே முதலிடம் தர வேண்டும். அவர்களிலும் குறிப்பாக

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு பின், அறநெறி வழுவா ஆட்சி நடத்திய நாற்பெரும் குடியரசு தலைவர்களான அறிஞர் பெருந்தகையினராக ஒருமித்து ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது(ரழி) அப்துல்லாஹ் அப்னு அப்பாஸ்(ரழி) போன்றோரின் சுய நிர்ணய ஆற்றலால் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும், அவர்கள் தந்த தெளிவுரைகளுக்குமே முதலிடம் தரப்பட வேண்டும். எனினும் இப்னு மஸ்ஊது(ரழி) இப்னு அப்பாஸ்(ரழி) ஆகிய இருவரும் கூட "இஸ்ரவேலர்கள் பற்றி உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லுங்கள்" என்ற நபிமார்களின் அனுமதிகேற்ப, இஸ்ரவேலர்களிடமிருந்து வாழையடி வாழையாக வந்த கருத்துகளைத் தமது திருமறைத் தெளிவுரைகளில் கலந்துவிட்டிருக்கின்றனர்.

ஆயினும் அவற்றை, இஸ்லாத்தின் கருத்துக்களுக்கு ஒத்து வரும் போது அதற்கொரு சான்றாகக் கொள்ளலாமே தவிர, அதனையே தீர்ந்த முடிவாகவும், உறுதியாகவும் நம்பிட முடியாது.

இஸ்ரவேலர்களின் மூலம் அறிவிக்கப்படுபவை, அறிஞர்களால் மூன்று வகைகளாக பகுக்கப்பட்டிருக்கின்றன.

(1) குர்ஆன், நபிமொழி மூலம் அவை நம்பத்தகுந்தவை என்று நிரூபிக்கப்பட்டவை.

(2) குர்ஆன் நபிமொழி மூலம் நம்பத்தகாதவை என்று நிரூபிக்கபட்டவை.

(3) இந்த இரண்டு வகைகளிலும் சேராத கதைகள், இவைகளை நாம் உண்மை என்றும் கூறத்தேவையில்லை. பொய் என்றும் அவமதிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவற்றை நபிகள்(ஸல்) அவர்கள் அனுமதித்து இருப்பதால் எடுத்துச் சொல்வதில் தவறில்லை. எனினும், ஒன்றை நிரூபிக்கும் ஆதாரமாக அவற்றைப் பயன்படுத்த முடியாது.

இவற்றில் பெரும்பாலான கதைகளில் எவ்வித மார்க்க நன்மையும் இல்லை. சுவையூட்டுவதாக தமது திருமறைத் தெளிவுரைகளில், இவற்றை எடுத்துச் சொல்வதின் மூலமே பெரும்பாலும் அவர்களின் தெளிவுரைகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன.

(கஹ்ஃபு) குகை என்ற அத்தியாயத்தில் கூறப்படும் குகைவாசிகளின் பெயர்கள், அவர்களுடன் சென்ற நாயின் நிறம், அவர்களின் எண்ணிக்கை போன்றவற்றையும், மூஸா(அலை) அவர்களிடமிருந்த கைத்தடி எந்த மரத்தில் ஆனது என்பதையும், இப்ாஹிம்(அலை) அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அல்லாஹ், உயிர்ப்பித்துக் காட்டிய நான்கு பறவைகள் எவை என்பதையும், அந்த நான்கு பறவைகளையும் அல்லாஹ் ஏன் தெரிவு செய்தான் என்பதற்குக் கட்டிவிடப்பட்ட கதைகளையும், மூஸா(அலை) அவர்களின் சமூகத்தவரில், ஒருவர் கொல்லப்பட, கொல்லப்பட்டவரை உயிர்ப்பிக்க ஒரு மாட்டை அறுத்து, அதன் உறுப்புகளில் ஒன்றால் அடித்ததும், அவர் உயிர் பெற்ற வரலாற்றில், எந்த உறுப்பில் கொல்லப்பட்டவன் அடிக்கப்பட்டான் என்பதையும், மூஸா(அலை) அல்லாஹ்விடம் உரையாடிய போது நின்று பேசிய மரம் எந்த மரம் என்பதையும் இதற்கு உதாரணங்களாக குறிப்பிடலாம்.

இவ்வாறு அல்லாஹ் குறிப்பிட்டபடி குர்ஆனுக்கு "குர்ஆன் மூலம், நபிமொழி மூலம், ஸஹாபாக்களின் தெளிவுரை மூலம் தெளிவுரை பெற முடியாத போது, நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் அன்புத் தோழர்களிடம், அதிகமதிகமாக நட்பும் தோமையும் வைத்திருந்த தாபியின்களில் குறிப்பிடத்தக்கவர்களான, முஜாஹித் இப்னு ஜப்ரு(ரழி), சயீதுபின் ஜுபைர்(ரழி), இக்ரிதா அதா இப்னு ரபாஹ்(ரழி), ஹஸன் அல்பஸரீ(ரழி)மஸ்ருக், சயீதுஇப்னு அல்முஸய்யபு, அபுல் ஆலியா(ரழி), ரபீவு இப்னு அனஸ்(ரழி), கதாதா லஹ்ஹாக்(ரழி) போன்றோரின் கருத்துகளுக்கு முதலிடம் தர வேண்டும். இவர்களில் பெரும்பாலோர் மேற்கூறப்பட்ட நாயகத் தோழர்களிடம் மிக நெருங்கிப் பழகியவர்களும் அவர்களின் மாணவர்களுமாவார்கள்.

மேற்கூறப்பட்ட இந்த நடைமுறைகளைப் பின்பற்றாது, தன்னிச்சையாகக் திருமறைக்கு தெளிவுரை தரும் போக்கு தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

நஸயீ, திர்மிதி, அபுதாவூது போன்றோர் அறிவிக்கும் நபிமொழி ஒன்று "தன்னிச்சையாக திருக்குர்ஆனுக்கு எவன் விளக்கம் தர முற்பட்டானோ, அவன் சரியான விளக்கமே தந்தாலும் (திருமறையை இலேசாகக் கருதி அவன் மேற்கொண்ட அசட்டுத் துணிச்சலுக்காக) அது தவறாகவே கருதப்படும்" என்று எச்சரிக்கின்றது.

எனவேதான், மேற்கூறப்பட்டவைகளின் அடிப்படையில், திருமறைக்கு சரியான விளக்கம் தமக்குக் கிடைக்காதபோது, அதுபற்றி தன்னிச்சையாக தெளிவுரை கூற அபூபக்கர், உமர்(ரழி) போன்ற மிகப் பெரும் நாயகத் தோழர்களெல்லாம் கூட பெரிதும் அஞ்சி இருக்கின்றனனர்.

பேரறிஞர் பெருந்தகை இமாம் இப்னு கஸீர்(ரஹ்) அவர்கள் தங்களின் திருமறைத் தெளிவுரைக்குத் தந்திருக்கின்ற முன்னுரையை உங்கள் முன் வைத்திருக்கிறோம்.

அவர்கள் தந்துள்ள விளக்கங்களுக்கு உட்பட்டு திருமறைத் தெளிவுரையை "நஜாத்" மாத இதழில் தொடர்ந்து வெளியிட இருக்கிறோம். வாசகர்கள் தொடர்ந்து அதனைப் படித்து வரும்போது "இன்ஷா அல்லாஹ்" திருமறையின் சரியான தெளிவுரையைப் பெறும் வாய்ப்பினை பெறுவார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் இந்தப் பணியை அவனுக்காகவே துவக்கி அவனுக்காகவே முடித்து, அதற்கான நன்மையை மறுமையில் நமக்கு வழங்கிட அவனிடமே பிரார்த்திக்கின்றோம்.வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.[ 1986 மே,by அந்நஜாத்]

அன்பு சகோதரர்களே! மேலே நீங்கள் படித்த விளக்கம் என்பது, அந்நஜாத்தில் திருக்குர்'ஆன் விரிவுரை எழுதிய காலஞ்சென்ற அறிஞரும் பீஜேயின் அண்ணனுமான பீ.எஸ்.அலாவுதீன் அவர்கள், திருக்குர்'ஆனுக்கு விரிவிரை எழுத தொடங்குவதற்கு முன்பாக பிரபல மேதை இமாம் இப்னு கஸீர் அவர்களின் முன்னுரையை பதிவு செய்து, இமாம் இப்னு கஸீர் அவர்கள் எந்த வழிமுறையை காட்டினார்களோ அந்த வழிமுறையில் நான் திருக்குர்'ஆனுக்கு விரிவுரை எழுத இருக்கிறேன் என்று அறிஞர் பீ.எஸ். அலாவுதீன் அவர்கள் கூறுகிறார்கள்.

மேற்கண்ட செய்தியின் மூலம் திருக்குர்'ஆன் விரிவுரை எழுத விரும்பும் எவராகினும் பேன வேண்டிய விதிமுறைகள்;

  1. திருமறைக்குத் தெளிவு பெற விரும்புவோர் திருமறை மூலமே பெற்றிட முயல வேண்டும்.
  2. அவ்வாறு திருமறைக்குத் திருமறை மூலமே தெளிவுரை பெறமுடியாத இடங்களில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்வு வாக்குகளிலிருந்து விளக்கமும் தெளிவும் பெற முயல வேண்டும்.
  3. அவ்விரண்டின் மூலமும் தெளிவுரை பெறாத போது நபிகள் நாயகம்(ஸல்)அவர்களின் அன்புத்தோழர்களின் சுயநிர்ணய ஆற்றல்களுக்கே முதலிடம் தர வேண்டும்.
  4. அவர்களிலும் குறிப்பாக அறிஞர் பெருந்தகையினராக ஒருமித்து ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது(ரழி) அப்துல்லாஹ் அப்னு அப்பாஸ்(ரழி) போன்றோரின் சுய நிர்ணய ஆற்றலால் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும், அவர்கள் தந்த தெளிவுரைகளுக்குமே முதலிடம் தரப்பட வேண்டும்.
  5. ஸஹாபாக்களின் தெளிவுரை மூலம் தெளிவுரை பெற முடியாத போது, நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் அன்புத் தோழர்களிடம், அதிகமதிகமாக நட்பும் தோமையும் வைத்திருந்த தாபியின்களில் குறிப்பிடத்தக்கவர்களான, முஜாஹித் இப்னு ஜப்ரு(ரழி), சயீதுபின் ஜுபைர்(ரழி), இக்ரிதா அதா இப்னு ரபாஹ்(ரழி), ஹஸன் அல்பஸரீ(ரழி)மஸ்ருக், சயீதுஇப்னு அல்முஸய்யபு, அபுல் ஆலியா(ரழி), ரபீவு இப்னு அனஸ்(ரழி), கதாதா லஹ்ஹாக்(ரழி) போன்றோரின் கருத்துகளுக்கு முதலிடம் தர வேண்டும்.
மேற்கண்ட ஐந்து வழிமுறைகளை பின்பற்றாமல் குர்'ஆனில் விளக்கம் இல்லை; நபிமொழியில் விளக்கம் இல்லை எனு கூறிக்கொண்டு, தனது சொந்த வியாக்கியானத்தை திணிக்கக் கூடாது என்றும், கீழ்கண்டவாறு இமாம் இப்னு கஸீர் அவர்களின் கருத்தை பதிவு செய்கிறார் அறிஞர் பீ.எஸ்.அலாவுதீன்.

மேற்கூறப்பட்ட இந்த நடைமுறைகளைப் பின்பற்றாது, தன்னிச்சையாகக் திருமறைக்கு தெளிவுரை தரும் போக்கு தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

நஸயீ, திர்மிதி, அபுதாவூது போன்றோர் அறிவிக்கும் நபிமொழி ஒன்று "தன்னிச்சையாக திருக்குர்ஆனுக்கு எவன் விளக்கம் தர முற்பட்டானோ, அவன் சரியான விளக்கமே தந்தாலும் (திருமறையை இலேசாகக் கருதி அவன் மேற்கொண்ட அசட்டுத் துணிச்சலுக்காக) அது தவறாகவே கருதப்படும்" என்று எச்சரிக்கின்றது.

எனவேதான், மேற்கூறப்பட்டவைகளின் அடிப்படையில், திருமறைக்கு சரியான விளக்கம் தமக்குக் கிடைக்காதபோது, அதுபற்றி தன்னிச்சையாக தெளிவுரை கூற அபூபக்கர், உமர்(ரழி) போன்ற மிகப் பெரும் நாயகத் தோழர்களெல்லாம் கூட பெரிதும் அஞ்சி இருக்கின்றனனர்.

மேலே உள்ள விஷயங்களை காய்தல் உவத்தலின்றி படித்தால், குர்'ஆனை விளங்க குர்'ஆன் மட்டும் போதாது; நபிமொழி மட்டும் போதாது. சஹாபாக்களின் விளக்கம் வேண்டும், தாபியீன்களின் விளக்கம் வேண்டும் என்ற கருத்தை பீ.எஸ். அலாவுதீன் ஏற்றுள்ளார். பீ.எஸ். அலாவுதீனின்  இந்த விதிமுறையை பீஜேயும் ஒப்புக்கொண்டு அவர் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில் அந்நஜாத்தில் இடம்பெற செய்துள்ளார். இதன் மூலம் பீஜேயும் அன்று குர்'ஆனை விளங்க சஹாபாக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பது மட்டுமல்லாது அதையும் தாண்டி தாபியீன்கள் கருத்தையும்  ஏற்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துள்ளார் என்பது தெளிவாகிறது.

இன்று மார்க்கத்தில் நமது கருத்தை விட சஹாபாக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று சொல்பவர்களை 'வழிகேடர்கள்' 'தடம் புரண்டவர்கள்' என்று விமர்சிக்கும் பீஜே, இவரது அண்ணனை வழிகேடர் என்று சொல்வாரா?  ஏன் அண்ணனின் கருத்தை வழிமொழிந்த பீஜே, தன்னைத் தானே 'வழிகேடர்' என்று சொல்லிக் கொள்வரா?

சிந்தியுங்கள் மக்களே!

குர்'ஆனுக்கு நபித்தோழர்கள் விளக்கத்தை ஏற்காமல் இவரது மனோஇச்சை விளக்கத்தை தினித்ததால் ஏற்பட்ட விளைவுகள்  பட்டியலிடப்படும் இன்ஷா அல்லாஹ்.

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

இயக்கம் தாண்டி இதயங்களை இணைக்கும் இதஜ'வின் இஃப்தார் நிகழ்ச்சிகள்!

இதஜ மாநிலத் தலைமையகத்தில் இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பு செய்த சமுதாய தலைவர்கள்;

சேலத்தில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி!

இதஜ சார்பாக திருக்குர்'ஆன் வழங்கல்!

குவைத்தில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி!

அல்லாஹ் அர்ஷின் மீது அமைந்தானா? அமர்ந்தானா? பீஜே அன்றும்-இன்றும்!

அந்நஜாத்தில் இடம்பெற்ற திருக்குர்'ஆன் விளக்கம் தொடரில், காலஞ்சென்ற அறிஞரும் பீஜேயின் அண்ணனுமான பீ.எஸ்.அலாவுதீன் அவர்கள்,  'அல்லாஹ் அர்ஷின் மீது அமைந்தான் என்று திருக்குர்'ஆன் வசனத்திற்கு மொழிபெயர்த்துள்ளார். இது தவறு அர்ஷின் மீது 'அமர்ந்தான்' என்பதுதான் சரியாகும் என்று தவ்ஹீத் மூத்த அறிஞர் மவ்லவி K.M. முகம்மது இக்பால் மதனீ அவர்கள் சுட்டிக் காட்டியபோது அதை ஏற்க மறுத்து அறிஞர் பீஜே அளித்துள்ள பதில் பாரீர்;
 
கேள்வி; இஸ்லாமியக் கொள்கை விளக்கம் என்ற பகுதியில் அர்ஷின் மீது ஒழுங்குற அமைந்தான் என்று போடப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அமர்ந்தான் என்றே எழுதி இருக்க வேண்டும்.

மவ்லவி K.M. முகம்மது இக்பால் மதனீ, துபை. ஜஹாங்கீர் சுல்தான், துபை.

பதில்; 'இஸ்தவா' என்று திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ள சொல்லுக்கு P.S. அலாவுதீன் அவர்கள் 'அமைந்தான்' என்று மொழி பெயர்த்துள்ளனர். அந்த வார்த்தைக்கு 'அமர்ந்தான்' என்றும் மொழி பெயர்த்துள்ளனர். அந்த வார்த்தைக்கு 'அமர்ந்தான்' என்றே பொருள் கொள்ள வேண்டும் என்பது உங்கள் கருத்து. 'இஸ்தவா' என்ற சொல்லுக்கு 'உட்காருதல்' என்று நேரடியாகப் பொருளில்லை. விரிவான பொருளைக் கொண்ட ஒரு வார்த்தை அது. உட்காருதல், நிலைபெறுதல், ஆதிக்கம் செலுத்தல் போன்ற பல பொருள்களுக்கு இடம் தரக் கூடிய ஒரு வார்த்தை. அதற்கு 'அமர்ந்தான்' என்று பொருள் கொள்ளும் போது, அதன் விரிவான பொருள் சிதைக்கப்பட்டு, சுருங்கிய ஒரு பொருளைத் தரக் கூடியதாக அது ஆகின்றது. அதனால் தான், அதற்கு நிகரான விரிந்த பொருள் கொண்ட அமைந்தான் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. P.S. அவர்கள் உயிருடன் இருக்கும் போதே இது பற்றி நானும், அவர்களும் விவாதித்த பின்னர் தான் 'அமைந்தான்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. 'இஸ்தவா' என்பதற்கு நேரடியாக 'அமர்ந்தான்' என்று பொருள் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. 'இஸ்தவல் மாவு' என்று அரபியர்கள் பயன்படுத்தும் சொல்லுக்கு 'தண்ணீர் அமர்ந்தது' என்று பொருள் கொள்ளப்படுவதில்லை. 'இஸ்தவத் அலல்ஜுதிய்யி என்ற குர்ஆன் வசனத்திற்கு, அமர்ந்தது என்று அங்கே பொருள் கொள்ளப்படுவதில்லை. இந்த இடங்களிலும்…. மற்றும் ஏனைய இடங்களிலும் 'அமைந்தான்' என்றெ பொருள் கொள்ளப்பட வேண்டும்' என்பதற்குரிய ஆதாரங்களை எடுத்துச் சொன்னால் நாம் ஏற்கிறோம். 'அமைந்தான்' என்பது. 'அமர்ந்தான்' என்ற பொருள் உட்பட வேறு பல பொருள்களையும் உள்ளடக்கிய அதே தரத்தில் உள்ள சொல் தான். எனவே 'அமைந்தான்' என்பது சரியான மொழி பெயர்ப்பு என்றே நாம் கருதுகிறோம்.[அந்நஜாத்: டிசம்பர், 1986 ]
 
மேற்கண்ட பதிலில் பீஜே, 'அமர்ந்தான்' என்று மொழியாக்கம் செய்தால் அது விரிவான பொருளை சிதைக்கிறது. எனவே 'அமைந்தான்' என்று மொழிபெயர்ப்பதுதான் சரி என்று சொல்லி, அன்று தனது  அண்ணனின் கூற்றுக்கு வக்காலத்து  வாங்கிய பீஜே, இன்றைக்கு 'அமர்ந்தான்' என்று கூறுவதுதான் சரி என்று அந்தர் பல்டியடித்து ஃபத்வா வழங்கியுள்ளதை இணைப்பை கிளிக்  செய்து படியுங்கள்; http://onlinepj.com/kelvi_pathil/quran_virivurai/arshil_amarnthan_enbathu_sariya/
 
இந்த புதிய ஃபத்வாவில் 'இஸ்தவா' என்ற வார்த்தை இடம்பெறும் வசனங்கள் அனைத்திற்கும் 'அமர்ந்தான்'  என்றும் 'அமர்தல்' என்றும் மொழிபெயர்த்துள்ள பீஜே, இறுதியாக 'இவ்வாறு அர்த்தம் செய்யக்கூடாது  என்பவர்கள் இவ்வார்த்தைகளுக்கு  வேறு விளக்கங்களைத் தருகிறார்கள். அந்த  விளக்கங்கள் அனைத்தும் அரபு இலக்கணப்படியும்,  குர்'ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் பார்த்தாலும் தவறாகவே இருக்கின்றன' என்கிறார்.
 
அதாவது 'இஸ்தவா' என்ற சொல்லுக்கு 'அமர்ந்தான்' என்ற அர்த்தம் தவிர்த்து வேறு விளக்கங்கள் சரியல்ல என்று அழுத்தமாக பதிவு செய்கிறார்.இதன் மூலம் காலஞ்சென்ற தனது அண்ணன் விளக்கம் தவறு என்பதையும், அண்ணனுக்கு வக்காலத்து வாங்கி அன்று அந்நஜாத்தில் 'அமைந்தான்' என்பதுதான் சரி என்று தான் கூறியதும் குர்'ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் தவறானது என்று ஒப்புக் கொள்கிறார்.
 
இதை இங்கே முன் வைப்பதற்கு காரணம் இவரது ஒரு மஸாயில் தவறு என்று பிறரால் சுட்டிக் காட்டப்பட்டால் ஏற்க மறுக்கும் இவரது மன முரண்டை  மக்கள் விளங்கிக் கொள்ளவும், இவரது கூற்றுக்கு தகுந்த ஆதாரமின்றி இவரே முரண்படுவதையும்   மக்கள் விளங்கிக் கொள்ளத்தான்.
 
நேரத்துக்கு நேரம் இவருக்கு இவரே முரண்படும் இந்த    மனோஇச்சை வாதியை  பின்பற்றுபவர்கள் சிந்திப்பார்களா?

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

சகோதரி மகளை திருமணம் செய்தவர்கள் நிலை; பீஜே அன்றும்-அன்றும்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
முஸ்லிமல்லாத ஒருவர் தனது சகோதரி மகளை திருமணம் செய்திருந்த நிலையில் இஸ்லாத்தை  தழுவினால் அந்த திருமண உறவின் நிலை என்ன என்ற கேள்விக்கு அன்று அறிஞர் பீஜே அளித்துள்ள பதிலை படியுங்கள்;
 
ஐயம் : தனது உடன் பிறந்த சகோதரி மகளை மனம் செய்த ஒரு மாற்று மத தம்பதியினர், முஸ்லிமாக மாறினால் அவர்களின் திருமண உறவு தொடருமா? முடியுமா?

S.M. நாசர், தேங்கா பட்டிணம்.

தெளிவு : திருமணம் செய்து கொள்ளத் தகாத உறவுகளை அல்லாஹ் திருமறையில் 4 : 23 வசனத்தில் கூறும் போது சகோதரியின் மகள்களும் ஹராமாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறான். எக்காரணத்தினாலும் சகோதரியின் மகளை ஒருவன் மணம் புரியக் கூடாது. இஸ்லாத்தை அவர்கள் தழுவினாலும் அந்த உறவு தொடரக் கூடாது. உடனடியாக அவர்கள் திருமண உறவை முறித்துக் கொள்ள வேண்டும்.

"குர்ஆனில் அல்லாஹ் இடுகின்ற கட்டளையை ஏற்கிறேன்" என்பதையும் உள்ளடக்கித்தான் ஒருவன் இஸ்லாத்தைத் தழுவுகிறான். குர்ஆனுடைய இந்தக் கட்டளைகளையும் ஏற்றே ஆக வேண்டும்.

"மூமின்களே! நீங்கள் இஸ்லாத்தில் பூரணமாக நுழைந்துவிடுங்கள்!" (அல்குர்ஆன் 2:28) என்று அல்லாஹ் ஆணையிடுகிறான். யூதர்களில் ஒரு பிரிவினர் இஸ்லாத்தை தழுவும் போது சனிக் கிழமையைத் தாங்கள் புனித நாளாகக் கொண்டாட அனுமதி கேட்டார்கள். அதை நிராகரிக்கும் விதமாகவே இந்த வசனம் இறங்கியது (இப்னு கஸீர்)

இஸ்லாத்தின் அனைத்துச் சட்டங்களையும் ஏற்றுக் கொண்டு அதில் இணைபவர்கள் தான் இஸ்லாத்திற்கு வேண்டும்.

அவர்கள் கடந்த காலங்களில் கணவன், மனைவியாக வாழ்ந்த தவறான உறவை அல்லாஹ் மன்னிக்கிறான். மேலும் அந்தக் தவறு தொடர்வதை அல்லாஹ் அனுமதிக்கவில்லை.[1987 மார்ச், அந்நஜாத்].
 
பீஜே அவர்களின் மேற்கண்ட பதிலை கவனமாக நீங்கள்  பார்த்தால், இஸ்லாத்தை ஏற்ற ஒருவர் தான் திருமணம் செய்திருந்த சகோதரி மகளை உடனடியாக விவாகரத்து செய்யவேண்டும் என்கிறார். இஸ்லாத்தை தழுவும் ஒருவன் குர்'ஆனின் கட்டளையை ஏற்பதாக உறுதிமொழி அளித்தே இஸ்லாத்தில் இணைகிறான். எனவே குர்'ஆனின் கட்டளையான சகோதரி மகள் விசயத்தையும் அவன் ஏற்றே ஆகவேண்டும் என்கிறார். அது மட்டுமன்றி இஸ்லாத்தின் அனைத்து சட்டங்களையும் ஏற்றுக்கொண்டு இணைய விரும்புபவர்கள் மட்டும் தான் இஸ்லாத்திற்கு வரவேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக  முன் வைக்கிறார் பீஜே. ஆனால் இன்று இதே விஷயத்தில் அவரது நிலை என்ன?  இணைப்பை படியுங்கள்; http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/sakothari_makalai_thirumanam_seythavar_islathil_sera_mutiyuma/
 
பீஜேயின் இந்த லேட்டஸ்ட் ஃபத்வாவில் இஸ்லாத்தில் ஒருவர் இணைவதற்கு அவர் மணந்திருந்த சகோதரி மகளை விவாகரத்து செய்து விட்டு வா என்று சொல்ல கூடாது என்கிறார். உண்மைதான். ஆனால் இஸ்லாத்தை ஏற்ற பின் அவரை  உடனடியாக தனது சகோதரி மகளை விவாகரத்து செய் என்று சொல்லக் கூடாது என்றும், சிறிது காலம் மார்க்க உபதேசங்களை கேட்டு பின்பு அவராகவே விவாகரத்து செய்ய அவகாசம் அளிக்க வேண்டும்  என்கிறார்.  இஸ்லாத்தை ஏற்ற ஒருவர் தான் திருமணம் செய்திருந்த சகோதரி மகளை உடனடியாக விவாகரத்து செய்யவேண்டும் என்று அன்று சொன்ன பீஜே, இன்று அவகாசம் அளிக்க வேண்டும் என்று சொல்லி தனக்குத் தானே முரண்படுகிறார். மேலும் இவரது இந்த நவீன ஃபத்வாவிற்கு அவர் என்ற சான்றையும் வைக்க வில்லை. முழுக்க முழுக்க இவரது சொந்த மனோஇச்சையன்றி  வேறில்லை. இவரது கூற்றுப்படி இஸ்லாத்தை  ஏற்ற  ஒருவருக்கு அவகாசம் அளித்து அந்த அவகாச காலத்தில் தனக்கு அனுமதிக்கப்படாத அந்த அந்த மனைவியுடன்  உடலுறவு கொண்டால் அதை ஆகுமானது என்று பீஜே கூறுவரா? இது ஒருபுறமிருக்க, இந்த விசயத்திற்கு மார்க்கம் தெளிவான வழியை காட்டியுள்ளது.
 
இப்னு உமர்[ரலி] அவர்கள் கூறினார்கள்;
ஃகைலான் இப்னு சலமா[ரலி] அவர்களுக்கு பத்து மனைவியர் இருந்தனர். அவர் இஸ்லாத்தை தழுவியபோது அவருடன் அவரது மனைவியரும் இஸ்லாத்தை தழுவினர். அப்போது நபி[ஸல்] அவர்கள் அவரிடம், 'அவர்களில் நால்வரைத் தேர்ந்தெடுத்தக் கொள்ளும்படி[யும்] மற்றவர்களை விவாகரத்து செய்யும்படி[யும்] கட்டளையிட்டார்கள். நூல்; திர்மிதீ, பைஹகீ.
 
நாம் வைத்துள்ள மேற்கண்ட ஹதீஸில் இஸ்லாத்தை ஏற்ற ஃகைலான் இப்னு சலமா[ரலி] அவர்களுடன் அவரது பத்து மனைவியரும் இஸ்லாத்தை   ஏற்ற நிலையிலும், அந்த  சஹாபிக்கு நபியவர்கள் அவகாசம் அளிக்கவில்லை. நால்வரைத் தவிர மற்றவர்களை விவாகரத்து செய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார்கள் என்றால், இதிலிருந்து புரிவது என்ன? இஸ்லாத்தை ஏற்ற ஒருவர்,  இஸ்லாத்திற்கு மாற்றமாக மனமுடித்திருந்தால் உடனடியாக விவாகரத்து செய்ய வேண்டும் என்பதுதானே?  சொல்ல முடியாது, இந்த ஹதீஸில் 'உடனடியாக' விவாகரத்து செய் என்று நபியவர்கள் கட்டளையிட்டார்கள் என்ற கருத்து உள்ளதா? என்று  வார்த்தை   விளையாட்டை பீஜே செய்தாலும்  ஆச்சர்யமில்லை. பீஜேயிக்கு  ஹதீஸ்கள் முக்கியமல்ல. மாறாக அவரது  நோக்கமெல்லாம் முஸ்லிமல்லாதவர்கள் ஏற்கும் வகையில் சட்டங்களை பூசி மெழுகி சொல்வது தானே!

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

நெல்லை மாவட்ட போலீஸ் கமிஷனருக்கு திருக்குர்'ஆன் பரிசு!

இதஜ கடையநல்லூர் கிளை இஃப்தார் நிகழ்ச்சி!

இதஜ'வின் மனிதநேய உதவிகள் வழங்கல்!

இதஜ தலைமையகத்தில் சமுதாயத் தலைவர்கள் பங்கேற்கும் இஃப்தார் நிகழ்ச்சி!

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

குவைத் இதஜ சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் சார்பாக, இஃப்தார் நிகழ்ச்சி!
 
நாள்; 25 -08 -2011 வியாழக்கிழமை,
 
நேரம்; சரியாக மாலை 5 ;15 மணிக்கு இன்ஷா அல்லாஹ்,
 
இடம்; தஞ்சை உணவகம்-மிர்காப் குவைத்
 
சிறப்புரை; 
மவ்லவி. இஸ்மாயில் ஸலபி அவர்கள். 
 
அனைவரும் வருக! அறிவமுதம் பருக! அல்லாஹ்வின் அருள் பெருக!!
 
அழைப்பின் மகிழ்வில்; இந்திய தவ்ஹீத் ஜமாஅத்,
[குவைத் மண்டலம்]
 
தொடர்புக்கு; 65653431 , 97659759 , 97465872 

நபி[ஸல்] அவர்கள் சில சொற்களை அறிந்து கொள்வார்கள்; பீஜேயின் 'சூப்பர்' ஃபத்வா!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
அறிஞர் பீஜே அவர்கள், ஒரு ஹதீஸை வைத்து ஒரு சட்டம் சொல்லி விட்டால் அதை அப்படியே ஏற்றுக்கொள்வதும், பின்னாளில் அவரே  அதே ஹதீஸை பலவீனம் என்று சொல்லி வேறு சட்டம் சொன்னால் அதையும் அப்படியே ஆமோதிப்பதையும்  அவரது அபிமானிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு காரணம் பீஜேயிக்கும்  தவறு ஏற்படும் என்று ஒருபக்கம் சொல்லிக் கொண்டு, அவர் சொல்லும் அனைத்தையும் சரி காண்பது அவருக்கு தவறே ஏற்படாது என காட்டுவதாகவே  பீஜேயின் அபிமானிகளின் செயல்பாடுகள் உள்ளது. ஆனால் பீஜே ஒரு சாமான்யனுக்கு புரிந்த விஷயத்தைக் கூட புரியாமல் பல விஷயங்களில் ஃபத்வா வழங்கக் கூயயவர் என்பதற்கு ஒரு சான்று;
 
நபி[ஸல்] அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் இருக்கும் சராசரி முஸ்லிமும் அறிந்த ஒன்றாகும். ஆனால் பீஜே இது குறித்து வழங்கிய ஃபத்வா பாரீர்;
 
  • நபி(ஸல்) அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்று எழுதி இருந்தீர்கள். ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது "ரஸுலுல்லாஹ்" என்ற வார்த்தையைக் காபிர்கள் ஆட்சேபணை செய்த போது தங்கள் கையாலேயே அந்த வார்த்தையை அழித்ததாகக் கூறப்படுகிறதே! குறிப்பிட்ட அந்த வார்த்தையை மட்டும் அழிக்க வேண்டுமாயின் நிச்சயம் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்? இதில் எது உண்மை?

K.A. முஹம்மது கோரி, த.பெ.எண். 6930, ஜித்தா.

இரண்டுமே உண்மைதான், குறிப்பிட்ட சில வார்த்தைகள் படிக்கத் தெரியாதவர்களும் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. என் மகனுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் ஆங்கிலத்தில் அவர் பெயரை Mohamed என்று எழுதுவான். அவன் பெயர் ஆங்கிலத்தில் எங்காவது எழுதப்பட்டிருந்தால் சரியாகக் கண்டு பிடித்து விடுவான். ஆனால் அவனுக்கு ஆங்கிலம் தெரியாது.

எழுதவும், படிக்கவும் தெரியாத எத்தனையோ கிராமவாசிகள் தங்கள் கையெழுத்தை மட்டும் போடுவார்கள். அதனால் எழுதப் படிக்கத் தெரிந்தவர் என்று கூற முடியாது. நபி(ஸல்) அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பது இந்தக் கருத்தில் தான். அந்த மொழியில் உள்ள எல்லா சொற்களையும் எல்லா வார்த்தைகளையும் அவர்களால் எழுதவோ, படிக்கவோ இயலாது. அவர்கள் ஒரு சில சொற்களை அடையாளம் கண்டு கொள்ளக் கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.1987 மே,அந்நஜாத்
 
மேற்கண்ட பீஜேயின் ஃபத்வாவில், நபி[ஸல்] அவர்களுக்கு  எழுதப் படிக்கத் தெரியாது என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் சில சொற்களை அடையாளம் கண்டுகொள்வார்கள் என்று கூறியுள்ளார். இவரின் கூற்றுபடி நபி[ஸல்] அவர்கள் குறிப்பறிந்து அழித்தது 'முஹம்மது' என்ற வார்த்தை என்றால் ஓரளவு இவரது கூற்றில் அர்த்தமிருக்கும். ஆனால் நபியவர்கள் அழித்தது அல்லாஹ்வின் தூதர் என்ற வார்த்தையாகும். அவ்வாறாயின்  தனது பெயர் அல்லாத வேறு சொற்களையும் நபி[ஸல்] அறியக்கூடியவர்களாக இருந்தார்கள் என்று பீஜே சொல்ல வருகிறாரா? சில சொற்களை நபியவர்கள் அறியக்கூடியவராக இருந்தார்கள் என்றால் இறைவன் 'உம்மி நபி' என்று சொன்னதற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடுமே, குர்'ஆன் வசனத்திற்கு எதிராக போய் விடுமே என்றெல்லாம் கூட பீஜே கவலைப்படவில்லை. ஆனால் உண்மை நிலை என்ன? நபி[ஸல்] அவர்களுக்கு எழுதவோ- படிக்கவோ- வார்த்தைகளை அறிந்து கொள்ளவோ[ அது முஹம்மத் என்பதாக இருந்தாலும்] அவர்களுக்கு தெரியவே  தெரியாது. அப்படியாயின் ஒரு வார்த்தையை நபியவர்கள் அழித்தது எப்படி? இதோ விடை;
 
பராஉ(ரலி) அறிவித்தார்.

(ஹுதைபிய்யா ஆண்டில்) நபி(ஸல்) அவர்கள் உம்ரா செய்ய நாடியபோது மக்காவாசிகளிடம் ஆளனுப்பி மக்காவினுள் நுழைய அனுமதி கேட்டார்கள். அவர்கள் (அடுத்த ஆண்டு உம்ரா செய்ய வரலாம் என்றும்) மூன்று நாள்களுக்கு மேல் அங்கு தங்கக் கூடாது என்றும் அவர்களில் எவரையும் (தம் மார்க்கத்தை ஏற்கும்படி) அழைக்கக் கூடாது என்றும் நிபந்தனையிட்டனர். அவர்கள் இருவருக்குமிடையிலான (ஒப்பந்த) ஷரத்துகளை அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) எழுதலானார்கள். அப்போது அவர்கள், 'இது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்த சமாதான ஒப்பந்தமாகும்" என்று எழுதினார்கள். மக்காவாசிகளில், 'நீங்கள் இறைத்தூதர்(ஸல்) தாம் என்று நாங்கள் நம்பியிருந்தால் உங்களை (மக்காவினுள் நுழையவிடாமல்) தடை செய்திருக்கமாட்டோம். மேலும், உங்களை நாங்கள் (ஏற்று) பின்பற்றவும் செய்திருப்போம். மாறாக, 'இது அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது செய்த சமாதான ஒப்பந்தம்' என்று எழுதுங்கள்" என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது தான். மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதருமாவேன்" என்று கூறினார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் எழுதத் தெரியாதவர்களாக இருந்தார்கள். எனவே, அலீ(ரலி) அவர்களிடம், ' 'இறைத்தூதர்' என்னும் சொல்லை அழித்து விடுங்கள்" என்று உத்தரவிட்டார்கள். அலீ(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை ஒருபோதும் அழிக்க மாட்டேன்" என்று மறுத்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியானால் அ(ந்தச் சொல் இருக்கும் இடத்)தை எனக்குக் காட்டுங்கள்" என்று கேட்டார்கள். அலீ(ரலி) நபி(ஸல்) அவர்களுக்கு அதைக் காட்டினார்கள். நபி(ஸல்) அவர்கள் அதைத் தம் கரத்தால் அழித்தார்கள். பின்பு (அடுத்த ஆண்டு), நபி(ஸல்) அவர்கள் (உம்ராவிற்காக) மக்காவிற்குள் நுழைந்து மூன்று நாள்கள் கழிந்தவுடன் மக்காவாசிகள் அலீ(ரலி) அவர்களிடம் வந்து, 'உங்கள் தோழரை (மக்காவைவிட்டுப்) புறப்படும் படி கூறுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்கள். உடனே, அலீ(ரலி) அவர்களிடம் அதைத் தெரிவித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'ஆமாம் (புறப்பட வேண்டியது தான்)" என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்கள். நூல்; புகாரி எண்; 3184 ]
 
அலீ[ரலி]அவர்கள் சம்மந்தப்பட்ட வார்த்தையை அடையாளம் காட்டிய பின்பே நபியவர்கள் அதை அழித்தார்கள் என்று புகாரியிலேயே ஹதீஸ் இருக்கும் போது அதைக் கூட கவனிக்காமல் இவர் ஃபத்வா வழங்குகிறார் என்றால் இவரது பொடுபோக்கை விளங்கிக் கொள்ளலாம்.
 
குறிப்பு; வழக்கம் போல இப்போது இந்த விஷயத்திலும் பீஜே தனது நிலையை மாற்றிக் கொண்டு விட்டார்  என்றாலும், இவர் மார்க்க சட்ட விஷயத்தில் எவ்வளவு மேம் போக்கானவர் என்பதை விளங்கிக் கொள்வதற்காகவே இங்கே இதை பதிவு செய்கிறோம். எனவே பீஜே சொல்லும் சட்டத்தை அப்படியே நம்பி விடாமல் ஆய்வு செய்து அங்கரிக்க வேண்டும். இல்லையேல் அமல்கள் பாழாகும் என்று அவரது அபிமானிகளுக்கு அறிவுறுத்துகிறோம்.

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

காயிப் ஜனாஸா தொழுகை; பீஜே'யின் மூன்று பரிமாணங்கள்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
காயிப் ஜனாஸா தொழுகை தொழலாமா என்பதில் பீஜே தொடர்ந்து முரண்பட்டு  வருகிறார். இந்த மஸாயில் பிரச்சினையில் பீஜே'யின் முதல் பரிமாணம்;
 
கேள்வி: காயிப் ஜனாஸா தொழலாமா? ஹனபி மத்ஹப் கூடாது எனிகிறார்களே?  – T. ஷேக் ஜாகிர் ஹுஸைன், கடையநல்லூர்.

பதில்: தொழலாம். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு வஸல்லம் வெளியூர் சென்றிருந்த போது, உம்முஸஃது என்பவர் இறந்து விடுகிறார். ஒரு மாதம் கழித்து மதீனா வந்த நபி ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம் அவர்கள், காயிப் ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள் என்று திர்மிதீயில் ஹதீஸ் உள்ளது. இன்னும் பைகஹீ தாரகுத்னீ ஆகிய நூல்களிலும் காயிப் ஜனாஸா பற்றி ஹதீஸ்கள் உள்ளன. இவைகள் காயிப் ஜனாஸாத் தொழலாம் என்று தெளிவாகக் காட்டுகின்றன. [1986 அக்டோபர் அந்நஜாத்]

 
மேற்கண்ட ஃபத்வாவில் காயிப் ஜனாஸா கூடும் என்பதற்கு திர்மிதி உள்ளிட்ட ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது என்று கூறிய பீஜே, பின்னாளில்  காயிப் ஜனாஸா கூடாது என்ற சட்டத்தை அறிவித்தார். அப்படியாயின் கூடும் என்பதற்கு ஆதாரமாக இவர் வைத்த ஹதீஸ்களின் நிலை குறித்த இவரின் நிலைப்பாடு என்ன? என்பது பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல், அந்த ஹதீஸ்களை கண்டு கொள்ளாமல் காயிப் ஜனாஸா கூடாது என்று அவர் வழங்கிய ஆய்வை[?] படிக்க இங்கே கிளிக் செய்க; http://onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/kayip_janaasa_eppothu/
 
முந்தைய ஃபத்வாவில், ஒருமாதம் கழித்து நபியவர்கள் காயிப் ஜனாஸா தொழுகை நடத்தினார்கள் எனவே கூடும் என்றவர், பிந்தைய பத்வாவில்,  தொழுகை நடத்தப்பட்ட ஒரு ஜனாஸாவுக்கு மீண்டும் ஜனாஸா தொழுகை கூடாது என்கிறார். இதிலாவது இவர் உறுதியாக உள்ளாரா என்றால் இல்லை. காயிப் ஜனாஸா விசயத்தில் இவர் [அதாவது இவரது கண்ணசைவில் செயல்படும் ஜமாஅத்] மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளதை படியுங்கள்;
 
உணர்வு வார இதழில், [15;42 ] ''காயிப் ஜனாஸா தொழுகை' என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்கள்.
 
''நல்ல கவுண்டன் பாளையம் தவ்ஹீத் கல்லூரி ஆலிமா ஒருவர் மரணித்துவிட, நபிவழியின் அடிப்படையிலேயே அவருக்கான இறுதிக் காரியங்கள்  அனைத்தும் நடக்கவேண்டும் என்று மரணித்தவரின் தாயார் உள்ளிட்டோரின் வேண்டுகோளை புறந்தள்ளி, சுன்னத் ஜமாஅத்தினர் ஜனாஸா தொழுகை நடத்தி விட்டார்களாம். பிறகு பீஜே ஜமாஅத்தினர்,மாநிலத்தலைமையின் ஆலோசனையின் படி தனியாக, இறந்த பெண்ணின் வீட்டிற்கு முன்பாக காயிப் ஜனாஸா [பிரேதம் இல்லாமல் நடத்துவது] தொழுகை நடத்தினார்களாம்.
 
மேற்கண்ட செய்தியை கவனமாக  படியுங்கள். ஏற்கனவே தொழுகை நடத்தப்பட்ட ஒரு பெண்ணிற்கு இவரது ஜமாஅத், மீண்டும் காயிப் ஜனாஸா தொழுகை நடத்தியுள்ளது. இந்த செய்திக்கும் பீஜேயிக்கும் சம்மந்தமில்லை  என்று கூறி தப்பிக்க முடியாது. ஏனெனில், மாநிலத்தலைமையின் ஆலோசனையின் படி  [மாநிலத் தலைவர் பீஜேயின் ஆலோசனையின் படி]   நடந்துள்ளது.
 
மேற்கண்ட விஷயங்களை மாச்சர்யமின்றி படித்தால், இவர் ஒரு மஸாயில் பிரச்சினையில் நாளுக்கொரு அவதாரம் எடுப்பவர் என்பதை சிந்திப்பவர்கள் விளங்கிக் கொள்வார்கள்.

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

நபியும்-ரசூலும் ஒன்றா? பீஜே அன்றும்-இன்றும்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
அறிஞர் பீஜே, நபியும்- ரசூலும் ஒன்றுதான் என்ற கொள்கையை இப்போது கொண்டிருக்கிறார். இதே அறிஞர் பீஜே நபியும்-ரசூலும் ஒன்றல்ல என்று அன்று வழங்கிய ஃபத்வா'வை கீழே படியுங்கள்;
 
கேள்வி: நபி, ரசூல் வேறுபாடு என்ன? நபிமார்கள் எத்தனை? ரசூல்மார்கள் எத்தனை? K.நதீம் அஹ்மது, ஆம்பூர்.
 
பதில்: முந்திய சமுதாயத்துக்கு இருந்த சட்டங்களில் சில மாறுதல்களுடன் புதிய சட்டங்கள் கொடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட இறைதூதரை ரசூல் என்று கூறுகிறோம். ஒரு ரசூல் கொண்டு வந்த சட்டங்கள் மறக்கப்பட்டு விட்ட கால கட்டத்தில் அந்தச் சட்டங்களுக்குப் புத்துயிர் ஊட்ட இறைவனால் அனுப்பபட்டவர் நபி எனப்படுவார். எண்ணிக்கை பற்றி பல்வேறு கருத்துக்கள் காணப்படுகின்றன. அல்லாஹ் அனுப்பிய அனைவரையும் ஏற்றுக் கொள்வதாகப் பொதுப்படையாக நாம் நம்பிக்கை  கொள்ளவேண்டும். அல்லாஹ்வும், அவனது ரசூல் என்று கூறினார்களோ அவர்களை அவ்வாறே ஏற்க வேண்டும்.
-அந்நஜாத் 1986 ஆகஸ்ட்
 
மேற்கண்ட ஃபத்வா'வில் நபி வேறு; ரஸூல் வேறு என்று தெளிவாக குறிப்பிடுகிறார் பீஜே. மேலும் தனது இந்த தீர்ப்பு குர்'ஆனின் ஆதாரத்தின் அடிப்படையில் அமைந்தது என்றும் பீஜே கூறுவதை கீழ்கண்ட ஃபத்வா'வில் படியுங்கள்;
 
ரசூல், நபிக்கு உள்ள வேறுபாட்டைச் சென்ற இதழில் எழுதி இருந்தீர்கள்! அந்த விளக்கம் குர்ஆன், ஹதீஸிலிருந்து பெறப் பட்டதா?

S.A. இப்னு அப்துல்லா, அம்மாபட்டினம்.

ஆமாம்! குர்ஆனிலிருந்து பெறப்பட்டதுதான்.

"நாம் தவ்ராத்தை இறக்கியருளினோம். அதில் நேர்வழியும் பிரகாசமும் உண்டு. அதைக் கொண்டு பல நபிமார்கள் தீர்ப்பு வழங்குவர்" (அல்குர்ஆன் 5:44)

இந்த இறைவசனம், "மூஸா" என்ற ரசூலுக்கு அருளப்பட்ட தவ்ராத்தை அடிப்படையாகக் கொண்டு, பல நபிமார்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்" என்று தெளிவாகின்றது.

-அந்நஜாத்1986 அக்டோபர் 

நபியும்-ரசூலும் ஒன்றல்ல என்றும் குர்'ஆன் அடிப்படையில் இருவரும் வெவ்வேறானவர்கள் என்றும் தீர்ப்பளித்த பீஜே, இன்று நபியும் ரசூலும் ஒன்றே என்று வாதிடுவதை இந்த இணைப்பை கிளிக் செய்து படியுங்கள்;

http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/398/

அன்று நபி வேறு; ரஸூல் வேறு என்று ஃபத்வா வழங்கும் போதும் தனது கூற்றுக்கு குர்'ஆனை ஆதாரம் வைத்தார். இன்று அந்த 5:44வசனத்தின் அர்த்தம் மாறி விட்டதா? அல்லது அந்த வசனம் குர்'ஆனிலிருந்து மறைந்து விட்டதா? இப்போது நபியும்-ரசூலும் ஒன்றல்ல என்று கூறுவதற்கும் வேறு பல குர்'ஆன் வசனங்களை ஆதாரமாக வைக்கிறார்.
 
இவர் சில சட்டங்களை மாற்றியது குறித்து கேள்வி எழுப்பினால், ''சம்மந்தப்பட்ட இந்த ஹதீஸ் இப்போதுதான் என் கவனத்திற்கு வந்தது; உடனே மாற்றிக் கொண்டேன் என்பார். ஆனால் இந்த நபி-ரஸூல் பிரச்சினையில் அன்றும் சரி, இன்றும் சரி  குர்'ஆன் வசனங்களை வைத்தே இரு வேறு முரண்பட்ட தீர்ப்பை வழங்குகிறார். அவ்வாறாயின் நபியும்-ரசூலும் ஒன்றுதான் என்று கூறும் இந்த வசனங்கள் கூட இவரது கவனத்திற்கு இப்போதுதான் வந்ததா?
 
இதன் மூலம் ஒன்று தெளிவாக புலப்படுகிறது. இவர் அன்றும் இன்றும் தான் கொள்ளும் கருத்திற்கு ஏற்ப உள்ள வசனங்களை மட்டும் கையிலெடுத்து, கண்டபடி தீர்ப்பு வழங்கி, கண்ட நேரத்தில் மாற்றிக் கொள்பவர் என்பதற்கு இவரது இந்த நபி-ரஸூல் சட்ட முரண்பாடும் ஒரு சான்றாக திகழ்கிறது. சிந்திப்பவர்கள் இவரது முரண்பாட்டை விளங்கிக் கொள்வார்கள்.  

சனி, 20 ஆகஸ்ட், 2011

'அவனை நிறுத்தச் சொல்' பாணியில் அமைச்சரின் பதில் சரியா?

க்களை பாதுகாக்க வேண்டிய அரசே, அந்த மக்களை மரணப் படுகுழிக்கு தள்ளும் பாழாய்ப்போன மது வியாபாரத்தை செய்து வருகிறது. மது விற்பனையின் மூலம் கோடிகள் கஜானாவை நிறைப்பதால், என்னதான்  பூரண மதுவிலக்கு கோஷங்கள் எழுப்பப்பட்டாலும் மது எனும் பொன் முட்டையிடும் வாத்தை அறுக்க அரசு தயாராக இல்லை. நேரடியாக பூரண மதுவிலக்கு இல்லை  என்று சொல்ல திராணியின்றி,  அரசு  பல்வேறு நொண்டிச் சாக்குகளை இந்த விசயத்தில் சொல்லி வருகிறது. அதில்  ஒன்றுதான் ''பக்கத்து மாநிலங்கள் மதுவிலக்கு கொண்டு வந்தால்தான் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வர முடியும்' என்ற அமைச்சரின் பதில்.  
 
சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பா.ம.க. எம்.எல்.ஏ. கலையரசு (அணைக்கட்டு தொகுதி) பேசும்போது, ''தமிழக அரசின் நிதி நிலையைப் பற்றி கவலைப்படாமல் லாட்டரி சீட்டை ஒழித்ததுபோல, பூரண மதுவிலக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று பேச,
 
இதற்கு பதிலளித்த  மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், ''மக்கள் உயிரோடு விளையாடும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. மதுவின் தீமையை இந்த அரசு உணராமல் இல்லை. அதில் மாற்றுக் கருத்தும் கிடையாது. இருந்தபோதிலும், பக்கத்து மாநிலங்கள் மதுவிலக்கை கொண்டு வராத நிலையில், தனித்தீவு போல நாம் மட்டும் மதுவிலக்கு கொண்டு வந்தால் வெற்றி கிடைக்காது. பக்கத்து மாநிலங்களில் மதுவிலக்கை அமல்படுத்தினால்தான், தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை கொண்டு வர முடியும். இல்லாவிட்டால், கள்ளச்சாராயத்திற்கும், சமூக விரோத செயல்களுக்கும் அது வழிவகுத்துவிடும்'' என்று கூறியுள்ளார். 
 
அமைச்சரின் பதிலை கூர்ந்து கவனித்தால் எவ்வளவு நகைச்சுவையானது என்பது புலப்படும். அண்டை மாநிலங்களில் பூரணமதுவிலக்கு அமுல்படுத்தப்படாமல் தமிழகத்தில் மட்டும் 
அமுல்படுத்தப்பட்டால் கள்ளச்சாராயத்திற்கும், சமூக விரோத செயல்களுக்கும் அது வழிவகுத்துவிடும் என்கிறார். அமைச்சரின் கூற்றுப்படி,  தமிழகத்தில் தற்போது 'டாஸ்மாக்' மூலம் மதுவிற்பனை அமலில்  இருக்கையில் கள்ளச்சாராயம் அறவே இல்லாமல் இருக்க வேண்டுமல்லவா? ஆனால் இருக்கிறது என்றும் ''மக்கள் உயிரோடு விளையாடும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் இதே அமைச்சர் கூறுகிறார். இதிலிருந்து புரிவது என்ன? மது விற்பனை அமலில் இருந்தாலும், பூரண மதுவிலக்கு அமலில் இருந்தாலும் கள்ளச்சாராயம் விற்பனை என்பது ஆங்காங்கே நடக்கும் என்பதுதான். எனவே பூரண மதுவிலக்கை அமலாக்கினால் அண்டை மாநிலங்கள் வாயிலாக கள்ளசாராயம் பெருகிவிடும் என்ற அமைச்சரின் கூற்று  அர்த்தமற்றது என்பது தெளிவாகிறது.
 
எனவே உப்புச்சப்பில்லாத காரணங்கள் கூறி மதுவிற்பனையை தொடர அரசு நினைப்பதைவிட, பூரண மதுவிலக்கை அமுல்படுத்தி, கள்ளச் சாராயத்தையும் கட்டுப்படுத்தி, தமிழக அரசை மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ வழிவகை காண முதல்வர் முயற்ச்சிக்கலாமே?

கலைஞர் டி.வி.யுடன் எனக்கு தொடர்பு இல்லை; கட்டுச் சோற்றுக்குள் மறைய முயலும் கனிமொழி.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் காரணமாக கனிமொழி எம்.பி. கடந்த மே 21-ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இருவரது ஜாமீன் மனுக்களும், அவை தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இந்த் வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில்  விசாரணையில் உள்ளது. சாஹித் உஸ்மான் பல்வாவின் டி.பி.ரியால்டி நிறுவனத்திடமிருந்து கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியது தொடர்பாக கனிமொழி மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.
 
இந்நிலையில்,சமீபத்தில் நீதிபதியிடம் பேசும்போது தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த கனிமொழி,  "கலைஞர் டி.வி.க்கும் எனக்கும் ஒருபோதும் தொடர்பு இல்லை. அந்த நிறுவனம் எப்படி இயங்குகிறது, அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பது பற்றி எனக்கு ஏதும் தெரியாது' என்று அவர் கூறியுள்ளார்.

கலைஞர் டிவிக்கும் தனக்கும் ஒருபோதும் தொடர்பு இல்லை என்று கனிமொழி எந்த அர்த்தத்தில் கூறுகிறார் என்று தெரியவில்லை. தான் அந்த டிவியின் பாங்குதாரர் இல்லை என்று சொல்ல வருகிறாரா? அவ்வாறு சொல்ல முடியாது. ஏனெனில் கனிமொழி பங்குதாரர் தான் என்று அவரது தந்தையே வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

"சன்" தொலைக்காட்சி நிறுவனத்தில் தயாளு அம்மாள் பங்குதாரராக இருந்து பிரிந்ததையொட்டி – 18-10-2005 அன்று "சன்" தொலைக்காட்சி நிறுவனத்தால் தரப்பட்ட தொகை 100 கோடி ரூபாயில் – 22.5 கோடி ரூபாய் வருமான வரியாக முறைப்படி செலுத்திய பின் எஞ்சிய தொகையான 77.5 கோடி ரூபாய் பகிர்ந்து கொள்ளப்பட்டபோது என் இளைய மகள் கனிமொழி தனக்குக் கிடைத்த 2 கோடி ரூபாயை பங்குத்தொகையாக செலுத்தி, கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு பங்குதாராக இருக்கச் சொல்லி நான்தான் வலியுறுத்தினேன்.கனிமொழி அதை விரும்பாவிட்டாலும் கூட, அப்பா சொல்கிறாரே என்று அதற்கு ஒப்புதல் அளித்த ஒரு குற்றத்தைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை என்கிறார் கலைஞர்.
 
பிறகு எதில் தனக்கு தொடர்பு இல்லை என்கிறார் கனிமொழி? நிர்வாக விஷயத்திலா? நிர்வாகத்தில் இவர் தலையிட்டாலும், தலையிடா விட்டாலும் பங்குதாரர் என்ற வகையில் ஒரு பெருந்தொகை கலைஞர் டிவிக்கு வந்தது தனக்கு தெரியாது என்பது கட்டுச் சோற்றுக்குள் கலைஞர் டிவியை மறைக்க முயல்கிறார் என்பதைவிட இவரே மறைய முயல்கிறார் என்பதுதான்  உள்ளங்கை நெல்லிக்கனியாக புலப்படுகிறது.

 

 

 

 


கடவுள்கள் தோன்றிய வரலாறு; கண் முன்னே கடவுளான எம்.ஜி.ஆர்.

ந்தியாவில் இருக்கும் மக்களை விட கடவுள் எண்ணிக்கை அதிகம் என்று நாத்திகர்கள் நகைச்சுவையாக மேடைகளில் குறிப்பிடுவதுண்டு.  ஆத்தல்- காத்தல்- அழித்தல் இவ்வாறான மூன்று பிரதானக் கடவுள்கள், பின்னர் இலாகா வாரியாக கடவுள்கள், பின்னர் முப்பத்து முக்கோடி தேவர்கள் என கணக்கிலடங்கா ஒரு பட்டியல் உண்டு. இது போக ஊருக்கு ஒரு எல்லைச்சாமியாக  கடவுள்கள்; அதுவும் காணாது என குடும்பத்திற்கேற்ப விதவிதமான குலதெய்வ கடவுள்கள். இதையும் தாண்டி நடப்பன- பறப்பன- ஊர்வனவைகள் அனைத்தும் கடவுள்களாக ஆக்கப்பட்டன. இவ்வாறெல்லாம் கடவுள்கள் பெருகியதற்கு இதற்கு காரணம் கடவுளின் இலக்கணம் என்ன என்பதை விளங்காத மக்கள் பெரும்பானமையாக வாழ்வதுதான்.
 
எம்.ஜி.ஆரின் தீவிர பக்தர் ஒருவரால்,  சென்னையில் அவருக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.. அக்கோயிலுக்கு பெயர்  "அருள்மிகு எம்.ஜி.ஆர்., ஆலயம், நத்தமேடு, என, முகவரி வெளியிடப்பட்டுள்ளது.  தனது மனதில் ஒரு மனிதரை நல்லவர் என கருதினால் அந்த  மனிதரை மதிக்கலாம். ஆனால் அவரை கடவுளாக்கி, அவருக்கு  கோயில் எழுப்பி கும்பாபிஷேகமும் நடத்தினால் கடவுள் எண்ணிக்கை  உயராமல் என்ன செய்யும்?
 
எம்.ஜி.ஆர், நாம் வாழும் காலத்தில் ஒரு தம்பதிக்கு மகனாக பிறந்து, நாடகம் சினிமாவில் சம்பாதித்து, அரசியலில் நுழைந்து ஆட்சியை பிடித்து பத்தாண்டு காலம் ஆட்சி செய்து மறைந்த ஒரு சாதாரண மனிதர். இவர் இன்று கடவுளாக்கப் பட்டு  'அருமிகு எம்.ஜி.ஆர்' ஆக காட்சி தருகிறார் என்றால், வருங்காலத்தில் இவருக்கு தினமும் ஆறுகால பூஜைகளும், ஆடம்பர திருவிழாக்களும் எடுக்கும் கோயிலாக இது மாறும் என்பதில் ஐயமில்லை. ஆக மனிதன் என்னதான்  கணினியுகத்தில் இருந்தாலும், கடவுளின் இலக்கணத்தை மட்டும் அறிவதில் தோல்வியில் தான் இருக்கிறான் என்பதற்கு இது ஒரு நிதர்சன  சான்றாகத் திகழ்கிறது. இறைவனின் இலக்கணத்தை பற்றி இஸ்லாம் ரத்தினச் சுருக்கமாக சொல்வதை பாரீர்;

(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. 

அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். 

அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. 

அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.  (112:1 ,2 ,3 ,4)

 
இறைவனுக்கு இலக்கணமாக இறைமறை கூறும் இந்த அளவுகோலை மனித சமூகம் கையிலெடுத்தால் ஒரு கடவுளைத் தாண்டி இன்னொன்று  உருவாக வாய்ப்புண்டோ..?

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

மத்ஹப் பாணியில் கரண்டைக்கு கீழ் ஆடையணிய ஃபத்வா!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
ய்வு என்ற பெயரில் அவ்வப்போது மார்க்கத்தை மாற்றும் பீஜேயும் அவரது அபிமானிகளும் சமீபத்தில் கரண்டைக்கு கீழ் ஆடையணியலாம் என்ற ஃபத்வாவை  வழங்கியிருந்தனர்.  இதில் வேடிக்கை  என்னவென்றால் கரண்டைக்கு கீழ் ஆடையணியக் கூடாது  என்பதற்கு அடுக்கடுக்கான ஹதீஸ் ஆதாரங்களை அவர்களே அந்த ஆய்வில் வைத்துள்ளார்கள். அவைகளில் சில;
  1. ஹுஜைமீ குலத்தைச் சார்ந்த நபித்தோழர் ஒருவர் கூறுகிறார் :
    நான் நபி (ஸல்) அவர்களிடம் கீழாடையைப் பற்றிக் கேட்டேன். நான் கீழாடையை எது வரைக்கும அணியலாம் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் தனது முதுகை வளைத்து தன் கெண்டைக்காலின் எலும்பைப் பிடித்து இது வரை அணிந்து கொள். இதை நீ விரும்பாவிட்டால் இதற்குக் கீழே இது வரை அணிந்து கொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால்களுக்கு மேல் இது வரை அணிந்து கொள். இதையும் நீ விரும்பாவிட்டால் பெருமையடித்து ஆணவத்துடன் நடக்கும் யாரையும் மாண்பும் வலிமையும் மிக்க அல்லாஹ் விரும்ப மாட்டான் என்று கூறினார்கள்.நூல் : அஹ்மது(15389)
  2. கெண்டைக்காலின் பாதிவரை கீழாடையை அணிந்துகொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால்கள் வரை அணிந்துகொள். கீழாடையை (தரையில் படுமாறு) நீட்டுவதை விட்டும் உம்மை நான் எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும். பெருமை கொள்வதை அல்லாஹ் விரும்பமாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல் : அஹ்மது (22121)
  3. உனது கீழாடையைக் கெண்டைக்காலின் பாதி வரை உயர்த்திக் கொள். இதை நீ விரும்பா விட்டால் கணுக்கால்கள் வரை (அணிந்து கொள்). கீழாடையை (தரையில்) தொங்க விடுவதை விட்டும் உம்மை எச்சரிக்கின்றேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும். அல்லாஹ் (நாம்) பெருமை கொள்வதை விரும்ப மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல் : அபூதாவுத் (3562)
  4. ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள் :அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கெண்டைக்காலின் சதைப் பகுதியைப் பிடித்து இதுவே கீழாடையின் (எல்லையாக உள்ள) இடமாகும். இதை நீ விரும்பா விட்டால் இதற்குக் கீழே அணிந்து கொள்ளலாம். இதையும் நீ விரும்பாவிட்டால் கணுக்கால்களுக்குக் கீழ் கீழாடைக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறினார்கள்.நூல் : திர்மிதி (1705)
  5. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
    இறை நம்பிக்கையாளரின் கீழாடை கெண்டைக்கால்களின் சதைப்பகுதி வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் கெண்டைக்காலின் பாதி வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் அவரது கணுக்கால்கள் வரை இருக்க வேண்டும். இதற்குக் கீழே செல்லும் ஆடை நரகத்திற்கு(அழைத்து)ச் செல்லும்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)நூல் : அஹ்மது (7519)
  6. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :உனது கீழாடையைக் கெண்டைக்காலின் பாதி வரை உயர்த்திக் கொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக் கால்கள் வரை (அணிந்து கொள்). ஆடையை இஸ்பால் செய்வதை விட்டும் உம்மை எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும்.அறிவிப்பவர் : ஜாபிர் பின் சுலைம் (ரலி)நூல் : அபூதாவுத் (3562)
  7. மேற்கண்ட ஹதீஸ்கள் மட்டுமன்றி இன்னும் இதுபோன்ற  சில ஹதீஸ்களையும் வைத்து விட்டு, கடைசியில் தங்களது வழக்கமான பாணியான வார்த்தை விளையாட்டை நடத்தியுள்ளார்கள். கரண்டைக்கு கீழ் ஆடையணியக் கூடாது என்று வரும் ஹதீஸ்களில் 'இஸ்பால்' செய்யக் கூடாது என்று கூறுகிறது. இஸ்பால் என்றால் தரையைத் தொடும் அளவிற்கு ஆடையைத் தொங்க விடுவது என்பது பொருள் என அரபு அகராதி நூல்களும் அறிஞர்களும் குறிப்பிடுகின்றனர் என்று கூறிவிட்டு,
கீழாடை தரையில் படுமாறு ஆடையை இறக்கி அணிவதையே மார்க்கம் தடை செய்கின்றது. கணுக்கால்கள் வரை ஆடை அணியலாம் என்பதன் கருத்து ஆடை தரையில் இழுபடாத வகையில் அணியலாம் என்பதாகும். கணுக்கால்களுக்குக் கீழ் ஆடை செல்லக் கூடாது என்பதன் கருத்து தரையில் ஆடை படுமாறு அணியக் கூடாது என்பதாகும்.

கணுக்கால்களின் முன் பகுதியே கீழாடையின் இறுதி எல்லை என்ற கருத்தில் வரும் செய்திகள் பலவீனமானவை. கணுக்கால்களின் மீது ஆடை படும் வகையில் அணிந்தால் தவறில்லை என்பதற்கு ஏராளமான ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.

எனவே ஒருவர் தன் கீழாடையைத் தரையில் இழுபடாத வகையில் அணிந்தால் அதை மார்க்கம் தடை செய்யவில்லை. இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட வழிமுறையாகும்.என்று தீர்ப்பளித்துள்ளனர்.

கவனமாக கவனிக்கக் வேண்டும். கணுக்கால் வரை ஆடையணிய
அனுமதித்த நபி[ஸல்] அவர்கள், 'இஸ்பால்' செய்வதை விட்டும் அதாவது கணுக்காலுக்கு கீழே தரையை தொடும் அளவுக்கு ஆடையனிவதை எச்சரிக்கிறேன் என்று சொல்கிறார்கள்.  கணுக்கால் வரை என்று சட்டம் சொன்ன நபியவர்களுக்கு தரையை தொடாமல் ஆடையணிந்து கொள் என்று சொல்லத் தெரியாதா? இதிலிருந்து தெரிவது என்ன? கீழாடையின்  அதிக பட்ச எல்லை என்பது கணுக்கால் வரை தானே?

ஒருவர் சொல்கிறார் தொண்டி எல்லையோடு நின்று கொள்; இதைவிட்டும் தாண்டுவதை நான் எச்சரிக்கிறேன் என்கிறார். இதிலிருந்து என்ன சட்டம் எடுக்க முடியும்? தொண்டி தான் இறுதி எல்லை அதை விட்டும் தாண்டக் கூடாது என்பதுதானே!ஆனால் ஆய்வாளர்  
பீஜேயின் மனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. உடனே ஒருவரிடம், ''தொண்டி எல்லையை தாண்டக்கூடாது  என்பதின் அர்த்தம்  என்ன? என்று கேட்கிறார். அவரோ தொண்டி எல்லையை தாண்டுதல் என்றால் தொண்டிக்கு அடுத்த ஊரை நெருங்குவதாகும் என்கிறார். அப்படியானால் அந்த ஊரைத் தொடாமல் ஒரு அடி  முன்னால்  நின்று கொள்வது தவறில்லை என்று பீஜே சட்டம் சொல்லி விட்டார் என்றால் 'தொண்டியை தாண்டாதே  என்று கட்டளையிட்டதற்கு மதிப்புண்டா?

மேலும், இவர்கள் அடிக்கடி மேடையில் மத்ஹபை குறித்து ஒன்று சொல்வார்கள். அதிகமாக சாப்பிட்டால் போதை தருவதை குறைவாக சாப்பிட்டால் ஹராம் இல்லை. அதாவது பத்துக் கிளாஸ் அடித்தால் தான் போதை ஏறும் என்றால், ஒன்பது கிளாஸ் அடிப்பது  தவறில்லை என்று மத்ஹபு சட்டம் சொல்கிறது என்று கிண்டலடிப்பார்கள். அதே பாணியில் இவர்களின் இந்த தீர்ப்பு குறித்து சொல்வதாக இருந்தால், 'கரண்டைக்கு கீழ் ஆடையணிதல் என்பது தரையில் இழுபட்டால் ஹராம். தரையை தொட்டால் ஹராமில்லை' என்பதுதான்.

மேலும், இவர்கள் வைத்துள்ள அகராதிப் படி பார்த்தால்  கூட 'இஸ்பால்' என்பது ஆடையைத் தரையில் படும் அளவிற்கு தொங்க விடுதலாகும் என்பதுதானே! ஆனால் இவர்களோ அதையும் கீழாடையைத் தரையில் இழுபடாத வகையில் அணிந்தால் அதை மார்க்கம் தடை செய்யவில்லை  என்று தீர்ப்பளிப்பது மனோ இச்சையின் வெளிப்பாடுதானே? தரையை தொடுவதற்கும், தரையில் இழுபடுவதற்கும் வேறுபாடு கூட விளங்க வில்லையா?

கரண்டைக்கு கீழே ஆடையணிதல் நரகத்திற்கு இட்டுச் செல்லும் செயல், பெருமைக்குரிய செயல், அல்லாஹ் விரும்பாத செயல் என்றெல்லாம் தெளிவாக இறைத்தூதர்[ஸல்] அவர்கள் சொல்லியிருக்க, அல்லாஹ்வின் தூதருக்கு மாற்றமாக தரையில் இழுபடாமல் ஆடை அணிந்தால் தவறில்லை என்று ஃ பத்வா வழங்கும் இவர்களை சமுதாயம் என்று அடையாளம் காணப் போகிறது?

அதெல்லாம் சரி! தொழுகைக்கு 'டவுசர்' போதும்; மற்ற நேரங்களில் தரையை தொடும் அளவுக்கு ஆடையணியனுமா?

-எண்ணம்; சகோதரர் பக்ருதீன்.
எழுத்து; முகவைஅப்பாஸ்.

இந்தியாவின் ராஜபக்சே நரேந்திரமோடி சிக்குவாரா?

2002ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் நர வேட்டை நரேந்திரமோடி - தனது ஆட்சி அதிகாரத் தின் முழுபலம் கொண்டு சிறுபான்மை மக்களைக் கொத்துக் கொத்தாக வேட்டையாடித் தாகம் தீர்த்தார். புரியும்படிச் சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவின் ராஜபக்சே என்றே வைத்துக் கொள்ளலாம்.

சிறுபான்மை மக்களின் வணிக நிறுவனங்கள் எல்லாம் கொடிய தீயின் நாக்குக்கு ருசியாகின.

கர்ப்பிணிப் பெண்கள்கூட இந்தக் காட்டு மிராண்டிகளின் கத்திக் குத்துகளுக்குத் தப்பவில்லை.

ஒன்பதாண்டுகள் உருண்டோடி ஓய்ந்து விட்டன. இன்னும் இந்தப் படுகொலைபற்றி விசாரணைகளின் அடிப்படையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இஹ்சான் ஜாஃப்ரி இந்துத் துவக் கொடியவர்களால் கொடூரமான முறையில் எரித்துக் கொல்லப்பட்டார். அவரின் மனைவி ஜாகியா அம்மையாரின் கடும் முயற்சிக்குப்பிறகு உச்சநீதி மன்றம் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்து விசாரணையை நடத்துமாறு உத்தரவிட்டது.

சிறப்புப் புலனாய்வுக்குழு குஜராத் முதல் அமைச்சர் மோடியைப் பல மணி நேரம் விசாரித்தது.

இந்த வழக்கில்  குஜராத் மாநில உளவுத்துறை முன்னாள் தலைவர் சஞ்சீவ்பட்டின் பிரமாண வாக்கு மூலம் மிகவும் முக்கியமானது.

காவல்துறை அதிகாரிகள் மத்தியில் முதல் அமைச்சராகவிருந்த நரேந்திரமோடி எத்தகைய ஆணைகளைப் பிறப்பித்தார் என்பதை எல்லாம் அவர் போட்டு உடைத்து விட்டார்.

இதுதான் சரியான சந்தர்ப்பம், முஸ்லீம்களைத் தண்டிக்க வேண்டும்? கலவரங்களைக் காவல்துறை கண்டு கொள்ளக் கூடாது என்று வாய்மொழி ஆணைகளைப் பிறப்பித்தார். முதல் அமைச்சர் என்கிற தகவல்களை எல்லாம் இந்த மூத்த காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.

இந்தக் காவல்துறை அதிகாரி மாத்திரம் அல்ல; கலவரத்தின் போது காவல்துறை உதவி டைரக்டர் ஜெனரலாக விருந்த ஸ்ரீகுமார் நானாவதி ஆணையத் தின் முன்னர் என்ன கூறினார்?

பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் காவல்துறைக்குப் புகார் கொடுத்தும் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருந்தன. அவர்கள்மீது முதல் தகவல் அறிக்கை (FIR) போடப்பட்டு இருந்தும் உடனே விடுதலை செய்யப்பட்டனர். அரசுத் துறையின் வழக்கறிஞர்கள் இதற்குத் துணை போனார்கள்; சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டும் அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொன்னாரே!

குஜராத்தில் பெஸ்ட் பேக்கரி - படுகொலை சாதாரணமானதா? ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர்களை விறகு கட்டைகளைக் கட்டுவதுபோல கட்டி பேக்கிரியின் அடுப்பில் துடிக்கத் துடிக்கக் கொன்று குவித்தார்களே கொடூரக்காரர்கள் - அந்தக் குடும்பத்தில் தப்பிப் பிழைத்த ஜாஹிரா தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் நரேந்திரமோடியை நீரோ மன்னனுக்கு ஒப்பிடவில்லையா?

14 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் உயர்நீதி மன்றம் குற்றவாளிகளை விடுதலை செய்ததற்கு உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்ததே!

வழக்கை குஜராத்திலிருந்து மும்பையில் நடத்த உத்தரவிட்டதே! இதில் என்ன கொடுமை தெரியுமா? வழக்குத் தொடுத்த அந்த ஜாஹிராவே பிறகு பல்டி அடித்துவிட்டார். இல்லை பல்டியடிக்க வைக்கப் பட்டாரே! எந்த நியாயத்துக்கும் தர்மத்துக்கும் கட்டுப்படாதவர்கள் பிஜேபி - சங்பரிவார்க் கும்பல்!

உச்சநீதிமன்றத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு இப்பொழுது அறிக்கையைக் கொடுத்துள்ளது அல்லவா - அதன் நிலை என்ன தெரியுமா? அட்வகேட் ஜெனரல் அந்த அறிக்கையின் முக்கிய அம்சத்தைக் குற்றவாளிகளுக்குக் கசிய விட்டார் என்ற குற்றச்சாற்று எழுந்துள்ளது.

ஆர்.எஸ்.எசுக்கு ஆலோசகராக இருக்கக்கூடிய கோயங்கா வீட்டுக் கணக்கப் பிள்ளைக்கும் அந்த ரகசிய அறிக்கை வந்து சேர்ந்ததாக என்.டி.டி.வி. போன்ற தொலைக்காட்சிகளிலேயே செய்தியாக வெளிவந்து விட்டது.

இன்னும் என்னதான் செய்ய மாட்டார்கள்? சூத்திரன் சம்பூகனை வெட்டிக் கொன்ற ராமனின் பெயரால் ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கத் துடிப்ப வர்கள் ஆயிற்றே!

குஜராத் கலவர வழக்கில் மோடியும், மசூதி இடிப்பு வழக்கில் அத்வானியும் தண்டிக்கப்படாவிட்டால் நாட்டில் நீதிக்கும், சட்டத்துக்கும் மரியாதை இல்லாமல் போய்விடும் என்பது மட்டும் உறுதி! உறுதி!!

நன்றி; விடுதலை நாளிதழ் 18 ஆகஸ்ட் 2011

புதன், 17 ஆகஸ்ட், 2011

பெண்கள் ஜியாரத் செய்யலாமா? பீஜே அன்றும்-இன்றும்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

பெண்கள் கப்ர் ஜியாரத் செய்யலாமா? என்றால் செய்யக் கூடாது என்று அறிஞர் பீஜே உட்பட அவர் தரப்பு ஆதரவாளர்கள் பல காலமாக எழுத்திலும் பேச்சிலும் செய்துவந்ததை அனைவரும் அறிவோம். எந்த அளவுக்கென்றால் இறந்தவர்கள்  கபுருகளுக்கு பெண்கள் ஜியாரத்து செய்யலாம் என்று சொல்பவர்களை 'பறேலவிகள்' என்று கடுமையாக அன்று அந்நஜாத்தில்  விமர்சித்தார் அறிஞர் பீஜே. ஆனால் இன்று ஆய்வு என்ற பெயரில் பெண்கள் ஜியாரத் கூடும் என்ற ஃபத்வாவை வழங்கி இவரே 'பரேலவி'யாக காட்சி தருகிறார். பெண்கள் கப்ர் ஜியாரத் கூடும் என்பதற்கு இவர் வைத்துள்ள ஆதாரம்;

1 .ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் "அல்லாஹ்வின் தூதரே! அ(டக்கத் தலங்களில் இருப்ப)வர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அஸ்ஸலாமு அலா அஹ்ரித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்ரிமீன். வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் ல லாஹிகூன்" என்று சொல்" என்றார்கள்.
(பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள இறைநம்பிக்கையாளர்களுக்கும் முஸ்ரிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்றுவிட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! நாம் அல்லாஹ் நாடினால் உங் களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம்.)
நூல் முஸ்­லிம் 1774

இறந்தவர் கபுருகளுக்கு பெண்கள் ஜியாரத்து செய்ய இன்று பீஜே ஆதாரமாக காட்டும் மேற்கண்ட ஹதீஸ் குறித்து அந்நஜாத்தில் 1987 மே மாதம் செய்த  விமர்சனம் பாரீர்;

"இறந்தவர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்" என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். "மூமின்களாகிய கபுருவாசிகள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும் நம்மில் முன் சென்றவர்களுக்கும் இனி வருபவர்களுக்கும் அல்லாஹ் மன்னிக்கட்டும்". (என்ற பொருள் கொண்ட வார்த்தைகளை) ஓதும்படி நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரழி) நூல்கள் : முஸ்லிம், நஸயீ

இது பெண்கள் ஜியாரத்தை ஆதரிப்பவர்களின் இரண்டாவது ஆதாரம். இதில் அவர்களின் கருத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை எவரும் உணரலாம். ஏனெனினல் "கபுரை ஜியாரத்து செய்யும் போது நான் என்ன ஓத வேண்டும்" என்று ஆயிஷா(ரழி) கேட்கவில்லை. மாறாக கபுராளிகளுக்காக (இறந்தவர்களுக்காக) நான் என்ன கூற வேண்டும் என்று தான் அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த அந்த துஆவை வீட்டிலிருந்து கொண்டே இறந்தவர்களுக்காக நாம் ஒதலாம். கபுருக்கு சென்று ஜியாரத்து செய்வது பற்றி இதில் குறிப்பிடப்படவே இல்லை . மேலும் முஸ்லிமில் இடம் பெற்றுள்ள இந்த ஹதீஸ் நீண்ட ஹதீஸின் இறுதிப் பகுதியாகும். அதன் முன் பகுதிகளையும் நாம் கவனித்தால் பெண்கள் ஜியாரத்து கூடாது என்ற முடிவுக்கே வரமுடியும். அந்த முற்பகுதியைப் பார்ப்போம்:

அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:-

என் இல்லத்தில் நபி(ஸல்) அவர்கள் தங்கி இருக்கும் போது தங்கள் மேலங்கியைக் களைந்து, செருப்பைக் கழற்றி, காலருக்கே வைத்து பூ, தங்கள் படுக்கையின் மீது ஒருக்களித்துப் படுத்தார்கள். அவர்கள் தீடிரென மேலங்கிளை அணிந்து கொண்டு, செருப்பை மாட்டிக் கொண்டு கதவைத் திறந்து கொண்டு வெளியேறினார்கள். நானும் முக்காடிட்டுக் கொண்டு உடலை மறைத்துக் கொண்டு அவர்களின் அடிச்சுவட்டைத் தொடர்ந்தேன். "பகீஃ" என்ற கபரஸ்தானுக்கு வந்தார்கள். அவர்களுக்காக துஆச் செய்தார்கள்.

அவர்கள் திரும்பும் போது நானும் திரும்பினேன், அவர்கள் வேகமாக நடக்க நான் (அதைவிட ) வேகமாக வந்தேன். (எப்படியோ) அவர்களுக்கு முன்பே வீடு வந்து ஒருக்களித்துப் படுத்தேன். உடன் அவர்களும் வந்தனர். என்னைக் கண்ட அவர்கள் "ஆயிஷா! ஏன் உனக்கு மூச்சிரைக்கிறது?" என்று கேட்டார்கள்'. (அதாவது வேகமாக விரைந்து வந்ததால் ஆயிஷா(ரழி) மூச்சு இறைக்கப்படுத்திருந்தார்கள்)

நான், ஒன்றுமில்லை என்று கூறினேன். காரணத்தை நீ கூறாவிட்டால் அல்லாஹ் எனக்கு அறிவிப்பான்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் நடந்ததைக் கூறினேன். உடனே எனக்கு வேதனை ஏற்படும் விதமாக என் நெஞ்சில் அறைந்தார்கள், பிறகு தான் கபரஸ்தானுக்குச் சென்ற காரணத்தைப் பின்வருமாறு கூறினார்கள். ஜிப்ரில்(அலை) அவர்கள் வந்து "பகீஃ" கபரஸ்தானில் அடங்கப்பட்டவர்களுக்காக அங்கே வந்து பாவமன்னிப்புக் கோரும் படி உன் இறைவன் கட்டளையிட்டான் என்று கூறினார்கள். (அதனால் அங்கே சென்று அவர்களுக்காக மன்னிப்புக் கோரினேன்)

"அவர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்" என்று கேட்டேன்.

"முமீன்களாகிய கபுர்வாசிகள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும் . நம்மில் முன் செல்பவர்களுக்கும், இனி வருபவர்களுக்கும் அல்லாஹ் மன்னிக்கட்டும் என்ற பொருள் கொண்ட வார்த்தையைச் சொல்!" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸின் முற்பகுதியை (எதிர்த்தரப்பினர் அதைக் குறிப்பிட மாட்டார்கள்) க்கவனித்தால் பெண்கள் ஜியாரத் கூடாது என்று கருதத்தான் ஆதாரமுள்ளது. அன்னை ஆயிஷா(ரழி) நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாமல் சென்று விட்டு, அவர்களுக்குத் தெரியாமலே விரைந்து வந்து ஒன்றும் நடவாதது போல் இருந்து விடப் பார்க்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் கேட்ட போதும் "ஒன்றுமில்லை" என்றே பதில் கூறுகிறார்கள். இதிலிருந்தே பெண்கள் கப்ருகளுக்குச் செல்வதை நபி(ஸல்) அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்று நன்கு தெரியவரும். நடந்ததைக் கூறியதும் நெஞ்சில் வேதனை ஏற்படும் அளவுக்கு அறைகிறார்கள் என்ற வாசகமும் கவனிக்கத்தக்கது.

இந்த ஹதீஸிலும் பெண்கள் ஜியாரத் செய்யலாம் என்பதற்கு நேரடியான ஆதாரமும் இல்லை. சுற்றி வளைத்துக் கொண்டாவது அதற்கு ஆதாரம் உண்டா என்றால் அதுவுமில்லை. மாறாக கூடாது" என்று கருதத்தான் அதில் இடம் உண்டு.என்று அன்று சொன்ன அறிஞர் பீஜே இன்று அதை மறந்து அதே ஹதீஸை பெண்கள் ஜியாரத்துக்கு  ஆதாரமாக காட்டுகிறார் என்றால் இவரின் முரண்பாட்டை விளங்கிக் கொள்ளுங்கள்.

பீஜேயின் ஆதாரம் 2 ;

நீங்கள் கபுருகளை ஜியாரத்து செய்ய நான் ஏற்கனவே தடை விதித்திருக்கிறேன். இனி நீங்கள் கபுருகளை ஜியாரத் செய்யுங்கள். அறிவிப்பவர் : புரைதா(ரழி) நூல் : முஸ்லிம்

மேற்கண்ட ஹதீஸை குறித்து அன்று பீஜே செய்த விமர்சனம் பாரீர்;

பெண்களுக்கு ஜியாரத்து செய்வதை தடுக்கப்பட்டு தெளிவான பல ஹதீஸ்கள் வந்திருக்காவிட்டால் இவர்களின் இந்த வாதத்தில் நியாயமிருக்கும். ஆனால் தடை செய்து பல ஹதீஸ்கள் வந்துள்ளன. அவற்றை பார்ப்போம்.

"நபி(ஸல்) அவர்கள் கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை 'லஃனத்' செய்தனர்.

இது நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி. இந்த நபிமொழியை இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்(ரஹ்), இமாம் திர்மிதீ, இமாம் இப்னுமாஜா ஆகிய மூவரும் மூன்று வழிகளில் அறிவிக்கின்றனர். அபுஹுரைரா(ரழி) இப்னு அப்பாஸ்(ரழி) ஹஸ்ஸான்(ரழி) ஆகிய மூன்று சஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து இதை அறிவிக்கின்றர். இந்த மூன்று ஹதீஸ்களையும் மேற்கூறிய மூன்று இமாம்களும் தங்கள் நூல்களில் பதிவு செய்துள்ளனர்.

மேலும் இமாம் நஸயீ, இமாம் இப்னு ஹிப்பான் இருவரும், இப்னு அப்பாஸ்(ரழி) மூலமாகவும், அபூஹுரைரா(ரழி) அவர்கள் மூலமாகவும் இந்த நபி மொழியை அறிவிக்கின்றனர்.

இமாம் அபூதாவுது அவர்கள் இப்னு அப்பாஸ்(ரழி) மூலமாக இதை அறிவிக்கின்றனர்.

இத்தனை வழிகளில் அறிவிக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் தான் நாம் மேலே எடுத்துக் காட்டிய ஹதீஸ்.

இந்த ஹதீஸில் இரண்டாவது கருத்துக்கு இடமே இல்லாமல் பெண்கள் ஜியாரத் லஃனத்துக்கு உரியது. அதுவும் அல்லாஹ்வின் திருத்தூதரின் லஃனத்துக்கு உரியது என்பது தெளிவாக்கப்படுகிறது. -[அந்நஜாத் 1987 மே]

கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை நபியவர்கள் சபித்தார்கள் என்ற ஹதீஸ் இருப்பதால், நீங்கள் கபுருகளை ஜியாரத்து செய்ய நான் ஏற்கனவே தடை விதித்திருக்கிறேன். இனி நீங்கள் கபுருகளை ஜியாரத் செய்யுங்கள். என்ற ஹதீஸை வைத்து பெண்களுக்கு ஜியாரத்துக்கான  பொது அனுமதியாக கருத  முடியாது என்று அன்று சொன்ன  பீஜே, இன்று அந்த ஹதீஸை பலவீனம் என்கிறார்.

கப்ருகளை தரிசிக்கும் பெண்களை அல்லாஹ் சபிப்பானாக என்று நபி ஸல் அவர்கள் கூறியதாக அபூஹீரைரா ர­லி அவர்கள் அறிவித்த செய்தி திர்மிதியில் 976 ல் இடம் பெற்றுள்ளது.

ஆனால் இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் அம்ரு பின் அபீ ஸலமா என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் தீர்பளித்திருக்கிறார்கள்.  

என்று கூறி  பெண்களுக்கு கப்ர் ஜியாரத் கூடும் என்கிறார். அன்று வழிகளில் அறிவிக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்று சொன்னவர், இன்று தனது நிலைப்பாட்டிற்காக அந்த ஹதீஸ் பலவீனமானதாக கூறுகிறார். இப்படி ஒவ்வொரு மஸாயில் பிரச்சினையிலும் நாளுக்கொரு முரண்பாட்டை கடைபிடிக்கும் இவரை மக்களே புரிந்து கொள்ளுங்கள்.

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

'மக்கீ' அல்லது 'மதனீ' என்று குறிப்பிடலாமா? பீஜே அன்றும்-இன்றும்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
திருக்குர்'ஆன் மொழிபெயர்ப்புகளில் பீஜே மொழிபெயர்ப்பு நீங்கலாக மற்ற எல்லா மொழிபெயர்ப்புகளிலும் ஒவ்வொரு அத்தியாயத்திற்கு மேலும் 'மக்கீ' அல்லது 'மதனீ' என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இவ்வாறு குறிப்பிடப்படுவது சரியா? என்ற கேள்விக்கு அந்நஜாத் இதழில் அறிஞர் பீஜே அன்று சொன்ன பதில் உங்கள் பார்வைக்கு;
 
'யாராக இருந்தாலும் ஆதாரம் கேளுங்கள்' என்று எழுதி இருந்தீர்கள்! குர்ஆனில் மக்கீ, மதனீ என்று கூறுவதற்கு ஆதாரம் உண்டா?
-மவ்லவி A.R. முஹம்மது அஸ்அது, அம்மாபட்டினம்.
 
இதில் என்ன ஆதாரம் கேட்கிறீர்கள்? மக்கீ என்றால் மக்காவில் இறங்கியது என்று பொருள் மதனீ என்றால் மதீனா வாழ்வில் இறங்கியது என்று பொருள். மக்கா வாழ்க்கையில் இறங்கிய வசனங்களை மக்காவில் இறங்கியது என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்ல முடியும்? பாரசீக நாட்டில் பிறந்த ஸல்மான் அவர்களை ஸல்மான் 'பார்ஸீ' என்று சொல்லவில்லையா? அவை எங்கே இறங்கின என்ற சரித்திரக் குறிப்பை உணர்த்துவதற்கு அப்படிக் கூறுகிறோம்.[1987 மே,விமர்சனங்கள்! விளக்கங்கள்!!  அந்நஜாத்]
 
மேற்கண்ட அறிஞர் பீஜேயின்  பதிலை நிதானமாக  படித்தால், ஒவ்வொரு அத்தியாயத்திற்கு மேலும் 'மக்கீ' அல்லது 'மதனீ' என்று குறிப்பிடுவது தவறு அல்ல என்றும், அதற்கு எந்த ஆதாரமும் தேவையில்லை என்றும் கூறியதோடு,  மக்கா வாழ்க்கையில் இறங்கிய வசனங்களை மக்காவில் இறங்கியது என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்ல முடியும்? பாரசீக நாட்டில் பிறந்த ஸல்மான் அவர்களை ஸல்மான் 'பார்ஸீ' என்று சொல்லவில்லையா? என்று அறிவுப்பூர்வமாக வாதம் வைத்த அறிஞர் பீஜே, இன்று 'மக்கீ' அல்லது 'மதனீ' என்று குறிப்பிடுவது தவறு என்கிறார்.
 
''எனவே ஒரு அத்தியாயம் முழுவதும் மக்காவில் அருளப்பட்டது என்றோ, மதீனாவில் அருளப்பட்டது என்று குறிப்பிடுவதாக இருந்தால் அதற்கு தெளிவான ஆதாரங்கள்  இருக்க வேண்டும். இத்தகைய ஆதாரங்கள்  எதுவுமின்றியே மக்காவில் அருளப்பட்டவை  மதீனாவில் அருளப்பட்டவை  என்று அத்தியாயங்களின் துவக்கத்தில் அச்சிடுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது' என்கிறார்.
 
நன்றாக கவனிக்க வேண்டும் 'மக்கீ' அல்லது 'மதனீ'  என்று குறிப்பிடுவதற்கு எந்த ஆதாரமும் தேவையில்லை என்றவர், இன்று தெளிவான ஆதாரம்  வேண்டும் என்கிறார். அன்று சரியாக தெரிந்ததை  மாற்ற இன்று இவர் எந்த ஆதாரத்தை கண்டு விட்டார்? ஏனிந்த முரண்பாடு? எல்லாம் மனோ இச்சையின் வெளிப்பாடு.  

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

நபி[ஸல்] அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதா? பீஜே அன்றும்-இன்றும்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
நபி[ஸல்] அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு அந்நஜாத் செப்டம்பர் 1986 இதழில் அறிஞர் பீஜே அவர்கள் அளித்த பதில்;
 
கேள்வி: நபி(ஸல்) அவர்களுக்கே சூனியம் செய்யப்பட்டதாக ஒரு ஆலிம் சொன்னாரே! அது உண்மையா? உண்மை என்றால் மன உறுதி உள்ளவர்களையும் அது பாதிக்குமா?
M. சேகு இஸ்மாயில் , தொண்டி.
 
பதில்: நபி(ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டு அதனால் பாதிக்கப்பட்டார்கள் என்ற செய்தி புகாரி உட்பட பல ஹதீஸ் நூல்களில் காணப்படுகின்றது. அது உண்மைதான். நபி(ஸல்) அவர்களுக்கு இவ்வாறு ஏற்படுத்தியதன் மூலம் நாம் ஓர் உண்மையைப் புரிந்து கொள்ள முடிகின்றது. சூனியம் என்று சொல்லிக் கொண்டு கப்ருகளுக்கு செல்பவர்கள், "அங்கே சூனியம் நீக்கப்படும்" என்று கூறுவது பொய் என்பதை இதன் மூலம் புரியலாம். நபி(ஸல்) அவர்களே தனக்கு வைக்கப்பட்ட சூனியத்திலிருந்து தானே தப்பித்துக் கொள்ள முடியவில்லை எனும் போது மற்ற நல்லடியார்களால் என்ன செய்ய இயலும்? பலக், நாஸ் ஆகிய இரு சூராக்களும் போதிக்கின்ற அடிப்படையில் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொண்டிருங்கள்! அது தான் நாம் செய்ய வேண்டியது.
 
நபி[ஸல்] அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது உண்மைதான் என்று அன்று சொன்ன அறிஞர் பீஜே, இன்று நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்படவில்லை என்று மறுக்கிறார். பார்க்க; http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/357/
 
நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதற்கு ஆதாரமாக அன்று அவர் ஏற்றுக்கொண்ட புகாரி உள்ளிட்ட ஹதீஸ்கள் இன்று பலவீனமாகி விட்டதால் மறுக்கிறாரா என்றால் இல்லை. அந்த  ஹதீஸ்கள் அனைத்தும் ஆதாரப் பூர்வமனவைதான் என்று இன்றும் சொல்கிறார். பிறகு மறுப்பதற்கான முகாந்திரம் என்ன? இந்த ஹதீஸ்கள்  எல்லாம் குர்'ஆனோடு மோதுகிறது என்கிறார். 1986 ல் குர்'ஆனோடு மோதாத ஹதீஸ்கள், 2002 ல் 'பிரேக்' பிடிக்காமல் குர்'ஆனோடு மோதி விட்டதா?  மேலும் குர்'ஆனோடு நபிமொழி ஒரு காலத்திலும் மோதாது என்று இவரே வழங்கியுள்ள ஃபத்வாவை படிக்க;http://mugavai-abbas.blogspot.com/2011/08/blog-post_14.html
இப்படி மார்க்கத்தை இஷ்டத்திற்கு வளைக்கும் இவரது செயலுக்கு ஒரே ஆதாரம் வழக்கம் போல மனோஇச்சை தானே. சிந்திப்பவர்கள் விளங்கிக் கொள்வார்கள்.

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

திருக்குர்ஆனோடு நபியின் கூற்று முரண்படுமா? பீஜே; அன்றும்-இன்றும்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
திருக்குர்'ஆனோடு ஹதீஸ் ஒரு காலத்திலும் முரண்படாது என்று அறிஞர் பீஜே அன்று சொன்னது;
 
கேள்வி: குர்ஆன் வசனங்கள் ஸஹீஹான ஹதீஸ்களோடு சில நேரங்களில் முரண்படுகிறதே! உதாரணத்திற்கு "இறந்தவர்களை நீங்கள் செவியேற்கச் செய்ய முடியாது", "கப்ரில் உள்ளவர்களை கேட்க வைப்பவராக நீர் இல்லை" என்ற குர்ஆன் வசனங்களுக்கு மாற்றமாக நபி(ஸல்) அவர்கள் பத்ருப் போர்க்களத்தில் எதிரிகளின் சடலங்களைப் பாழடைந்த கிணற்றுக்குள் போட்டு அவர்களை நோக்கி "உங்களிறைவன் உங்களுக்கு வாக்களித்ததைப் பெற்றுக் கொண்டீர்களா?", என்று கூறிய போது உமர்(ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! இறந்தவர்களுடன் பேசுகிறீர்களே" என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், "அவர்கள் இப்போது கேட்கிறார்கள்" என்று கூறினர். இங்கே ஆயத்தும் ஹதீதும் முரண்படுகிறதல்லவா?

O.P. அப்துல் மஜீது, சென்னை .

பதில்: அல்லாஹ்வின் கூற்றோடு அவனது தூதரின் கூற்று ஒரு காலத்திலும் முரண்படாது. மேலோட்டமாகப் பார்த்தால் சிலருக்கு அப்படித் தோன்றலாம். சற்று சிந்தித்துப் பார்த்தால், குர்ஆன் வசனத்தை விளக்கம் செய்யக் கூடியதாகவே ஹதீஸ் அமைந்திருக்கும். முதலில் நீங்கள் குறிப்பிட்ட குர்ஆன் வசனத்தைப் பார்ப்போம். "அல்லாஹ், தான் நாடியவர்களுக்குக் கேட்கச் செய்பவராக இல்லை" (அல்குர்ஆன்)

இதுதான் அந்தக் குர்ஆன் வசனம். இந்த வசனத்தின் ஆரம்பத்தில் அல்லாஹ் நாடியவர்களுக்குக் கேட்க செய்கிறான்" என்று குறிப்பிடுவதன் மூலம் இயற்கையாக அவர்களால் செவியுற முடியாது. ஒரு சில சந்தர்ப்பங்களில் அல்லாஹ் நாடினால் செவியேற்கச் செய்வான் என்பதை உணர முடிகின்றது. அதற்கு விளக்கமாக நபி(ஸல்) அவர்கள் கூறிய சொல் அமைந்துள்ளது. "அவர்கள் இப்போது நான் சொல்வதைச் செவியேற்கிறார்கள" என்ற சொல்லை, நீங்கள் உற்று நோக்குங்கள்! 'இப்போது' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதன் மூலம் எப்போதும் அவர்களால் செவியுற முடியாது, என்பதை விளங்கலாம். அந்தக் காபிர்கள் கப்ரில் வேதனையை மேலும் அதிகமாக்குவது இறைவனின் விருப்பமாக இருக்கலாம். இதை நன்றாகப் புரிந்து கொள்ள ஒரு சின்ன உதாரணம் பார்ப்போம். நீங்கள் அணிந்துள்ள செருப்பு உங்கள் பேச்சைக் கேட்காது. ஆனால், அல்லாஹ் நாடினால் அதையும் செவியுறச் செய்ய முடியும் அல்லவா? ஒரு சந்தர்ப்பத்தில் "அல்லாஹ் தன் நாட்டப்படி செருப்பைச் செவியுறச் செய்கிறான்" என்று வைத்துக் கொள்வோம். அதிலிருந்து அந்த செருப்பு எப்போதும் நீங்கள் சொல்வதை செவியேற்றுக் கொண்டே இருக்கும் என்று சொல்ல முடியாது. இந்த பத்ரு நிகழ்ச்சி அது போன்ற ஒரு அற்புத நிகழ்ச்சியாகும். அல்லாஹ் நாடினால், எது, எதையும் கேட்க இயலாமல் இருக்கின்றதோ அதனையும் சில நேரங்களில் கேட்கச் செய்து தனது ஆற்றலை வெளிப்படுத்துகின்றான். இங்கே முரண்பாடு எதுவுமில்லை. விளக்கமாகத்தான் அமைந்துள்ளது
[மவ்லவி P. ஜைனுல் ஆபிதீன்அந்நஜாத் செப்டம்பர்,1986 செப்டம்பர்,ஐயமும்! தெளிவும்!!]
அல்லாஹ்வின் கூற்றோடு அவனது தூதரின் கூற்று இன்று மட்டுமல்ல ஒரு காலத்திலும் முரண்படாது என்று அன்று ஆணித்தரமாக முழங்கிய அறிஞர், குர்'ஆனோடு நேரடியாக மோதுவது போன்ற ஹதீஸுக்கு விளக்கமளித்து குர்'ஆணுடன் நபிமொழி ஒரு காலத்திலும் முரண்படாது என்று நிலைநாட்டியவர்,  இன்று என்ன சொல்கிறார்?
 
''மிகச்சில ஹதீஸ்கள் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் அதன் கருத்து குர்'ஆனுக்கு மாற்றமாக இருப்பதால் நபி[ஸல்] அவர்கள் இதை கூறியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் இந்த ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்கிறார்.
 
ஏனிந்த மாற்றம்? எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த மாற்றம்? 'குர்'ஆணுடன்  மோதுவது போன்ற கருத்துடைய ஹதீஸ் வந்தால் அது நான் சொல்லியதல்ல அதை புறக்கணியுங்கள் என்று நபியவர்கள் சொன்ன ஹதீஸை கண்டதால் வந்த மாற்றமா? இல்லை சகோதரர்களே! மனோ இச்சையால் வந்த மாற்றம் மார்க்கத்தை வளைக்குமாறு இந்த அறிஞரை தூண்டியுள்ளது. சிந்திப்பவர்கள் இவரின் முரண்பாட்டை விளங்கிக் கொள்வார்கள்.
 
 

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

தொடை மறைக்க வேண்டிய பகுதியா..? பீஜே அன்றும் இன்றும்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
2005 ஆம் ஆண்டு 'தொடை தெரிய டவுசர் போட்டு தொழலாம்' என்ற ஃபத்வாவை வழங்கி புரட்சி செய்த மவ்லவி பீஜே அவர்கள், தொடையை மறைப்பது குறித்து i987 ஜூன் மாதம் அந்நஜாத் இதழில் அபூ  முஹம்மத் என்ற பெயரில் இஸ்லாத்தில் புறத்தோற்றம் -6  என்ற தொடரில் எழுதியவை உங்கள் பார்வைக்கு;
 

மறைக்கப்பட வேண்டியவை

"ஆண்கள் தங்கள் தொப்புளிலிருந்து முழங்கால் வரை மறைக்க வேண்டும்" என்பதைத்தவிர மற்ற உறுப்புக்களை கட்டாயம் மறைக்க வேண்டியதில்லை. அதற்குரிய ஆதாரங்களைக் கீழே காண்போம்.

"உங்களில் எவரேனும் தன்னுடைய வேலைக்காரனுக்கோ, அடிமைக்கோ மணமுடிக்கும் காலம் வரும்போது தொப்புளுக்குக் கீழே உள்ள பகுதியையும், முழங்காலுக்கு மேலு உள்ள பகுதியையும் பார்க்க வேண்டாம்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்ரு இப்னு ஷுஐபு(ரழி) நூல் : அபூதாவூது

தனது ஆண் அடிமையின் தொப்புளுக்குக் கீழே உள்ள பகுதியை முழங்காலுக்கு மேலே உள்ள பகுதியைக் கூட பார்க்கக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டதிலிருந்து அந்தப் பகுதிகளை ஆண்கள் கட்டாயம் மறைக்க வேண்டும் என்பது தெளிவு.

குறிப்பாக தொடைப் பகுதியைக் கட்டாயம் மறைக்க வேண்டும் "அலியே! உன் இரு தொடைகளையும் நீ வெளிப் படுத்தாதே!" என்று நபி(ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : அலி(ரழி) நூல்கள் : அபூதாவூது, இப்னுமாஜா

"மஃமர்(ரழி) என்பவரை நபி(ஸல்) அவர்கள் கடந்து செல்லும்போது அவரது இரு தொடைகளும் திறந்திருக்கக் கண்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் மஃமரே! உன் தொடைகளை மூடிக்கொள் ஏனெனில் இரு தொடைகளும் மறைக்கப் படவேண்டிய பகுதிகளாகும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஹம்மது இப்னு ஐஹ்ஷ்(ரழி) நூல் : அஹ்மத்

இதுபோன்ற கருத்துக்களைக் கொண்ட பல ஹதீஸ்கள் உள்ளன. எனவே ஆண்கள் தங்கள் தொப்புளிலிருந்து முழங்கால் வரை அவசியம் மறைக்கப் கடமைப் பட்டுள்ளனர். குறிப்பாகத் தொடை பகுதியை அவசியம் மறைக்க வேண்டும்.

இவ்வாறு மறைக்க வேண்டும் என்ற விதியிலிருந்து இல்லற நேரத்தில் மனைவியுடன் தனித்திருக்கும் நேரம் விலக்குப் பெறும். அந்த நேரத்தில் மறைக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

"அல்லாஹ்வின் தூதரே! எங்கள் மறைவான உறுப்புக்களை எந்த நேரத்தில் மறைக்க வேண்டும்? எந்த நேரத்தில் மறைக்காது விட்டு விடலாம்? என்று நான் கேட்டபோது நபி(ஸல்) அவர்கள் "உன் மனைவியிடமும் உன் அடிமைப் பெண்ணிடமும் தவிர மற்ற நேரங்களில் மறைவுப் பகுதிகளை மறைத்துக் கொள்!" என்றனர். எங்களில் எவரும் தனித்திருக்கும் போதுமா? என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் "(ஆம்! வெட்கப் படுவதற்கு அல்லாஹ் மிகவும் தகுதியானவன்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : பஹ்ல் இப்னு ஹகீம்(ரழி)

நூல்கள் : அபூதாவூது, திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜா

இதுதவிர மற்ற நேரங்களில் மேற்குறிப்பிட்ட பகுதிகளை அவசியம் மறைத்தாக வேண்டும்.

 
தொப்புளிலிருந்து முழங்கால் வரை மறைக்க வேண்டும் மறைக்கப்பட்ட வேண்டியவையே என்று அன்று ஆணித்தரமாக ஆதாரப்பூர்வமாக சொன்ன அறிஞர் பீஜே,  அன்று அவர் சொன்னதற்கு மாற்றமாக இன்று அந்தர் பல்டியடித்து தொடை தெரிய தொழலாம் என்று ஃபத்வா வழங்குகிறார். முன்பு எழுதியவை எல்லாம் மாயமாய் மறைந்து விடும் என்று எண்ணி விட்டாரா? இப்படி நாம் கேட்டவுடன் அன்று சரியென தெரிந்த பல விஷயங்களை இன்று நாம் ஆதாரம் கிடைத்தவுடன் மாற்றியுள்ளோம். அது போலத்தான் இதுவும் என்று பீஜெயோ அவரது அபிமானிகளோ சொல்ல முன்வருவார்களானால், இன்று தொடை தெரிய தொழலாம் என்பதற்கு எந்த ஹதீஸ்களை ஆதாரமாக பீஜே காட்டுகிறாரோ அதே ஹதீஸ்களை அன்றே அவர் ஆய்வு செய்து, கீழ்கண்டவாறு இப்படி கூறுகிறார்;  

''தொடையைத் திறந்திருப்பதை நபி(ஸல்) அவர்களே வன்மையாகக் கண்டித்துள்ளதால், தொடை தெரிந்ததாக வரும்  ஹதீஸ்களில் கூறப்படுபவை தற்செயலாக திட்டமிடாமல் நடந்ததாகத்தான் கருத வேண்டும். என்கிறார்.

இன்று தொடை மறைக்கப் படவேண்டிய பகுதியல்ல என்பதற்கு ஆதாரமாக வைக்கும் ஹதீஸ்களை பற்றி மேற்கண்ட அதே  தொடரில் பீஜே எழுதியுள்ளதை படியுங்கள்;

ஒரு சில அறிஞர்கள் "இந்த அளவுகூட மறைக்க வேண்டியதில்லை; முன் துவாரம், பின் துவாரம் இவைகளை மறைத்துக் கொண்டால் போதுமானது" என்று கூறுகிறார்கள். அதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸ்களை எடுத்து வைக்கின்றனர்.

1) "கைபர் போரின் போது, நபி(ஸல்) அவர்கள் தமது கைலியை தொடைப் பகுதியை விட்டும் நீக்க நேரிட்டது. அவர்களின் தொடையின் வெண்மைப் பகுதியை நான் கண்டேன்"

அறிவிப்பவர் : அனஸ்(ரழி) நூல்கள் : புகாரி, அஹ்மத்

2) "நபி(ஸல்) அவர்கள் ஈரமான ஒரு இடத்தில் முழங்கால்களைத் திறந்தவர்களாக இருந்தனர். உஸ்மான்(ரழி) அவர்கள் நுழைந்த போது அதை மூடிக் கொண்டனர்"

அறிவிப்பவர் : அபூமூஸா(ரழி) நூல் : புகாரி.

3) நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது தன் முழங்கால் தெரியும் அளவுக்கு தன் ஆடையின் ஒரு பகுதியைத் தூக்கிப் பிடித்தவராக அபூபக்ரு(ரழி) அவர்கள் வந்தார்கள். அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் "உங்கள் தோழர் ரொம்பவும் ஆத்திரத்துடன் வருகிறார்" என்று கூறினார்கள் . (இந்த ஹதீஸில் உமர்(ரழி) அவர்களுக்கும், அபூபக்ரு (ரழி) அவர்களுக்கும் ஏற்பட்ட ஒரு தகராறில் அபூபக்ரு(ரழி) அவர்கள் மிகவும் ஆத்திரத்துடன் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட வருவது கூறப்படுகிறது.

அறிவிப்பவர் : அபுத்தர்தா(ரழி) நூல்கள் : புகாரி, அஹ்மத்

4) ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் தொடைப் பகுதி வெளியில் தெரிந்த நிலையில் அமர்ந்திருந்தனர். அவர்களைக் காண அபூபக்ரு(ரழி) வந்த போதும், உமர்(ரழி) வந்த போதும் அப்படியே அமர்ந்திருந்தனர். உஸ்மான்(ரழி) வந்த போது மட்டும் தன் ஆடையைச் சரி செய்து கொண்டனர். இதைக் கண்ட ஆயிஷா(ரழி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! அபூபக்ரு(ரழி) வந்த போதும், உமர்(ரழி) வந்த போதும் சும்மா இருந்த நீங்கள் , உஸ்மான்(ரழி) வந்த போது மட்டும் ஆடையைச் சரி செய்து கொண்டீர்களே! (இது ஏன்?) என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் மலக்குகளே அவரைக் கண்டு வெட்கப்படும் போது நான் வெட்கப்பட வேண்டாமா?

அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரழி) நூல் : அஹ்மத்

(இதே கருத்தில் முஸ்லிமிலும், பைஹகீயிலும் ஹதீஸ்கள் உண்டு)

இந்த ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு சில அறிஞர்கள் "தொடைப் பகுதியை மறைக்க வேண்டியது அவசியமில்லை" என்கின்றனர். அவர்கள் எடுத்துக் காட்டுகின்ற ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை என்பதில் சந்தேகம் இல்லை, எனினும் நாம் முன்னர் எடுத்துக் காட்டிய ஹதீஸ்கள் வந்திருக்காவிட்டால் இந்தக் கருத்தை ஏற்கலாம்.

தொடையைத் திறந்திருப்பதை நபி(ஸல்) அவர்களே வன்மையாகக் கண்டித்துள்ளதால், இந்த ஹதீஸ்களில் கூறப்படுபவை தற்செயலாக திட்டமிடாமல் நடந்ததாகத்தான் கருத வேண்டும்.

அனஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கும் முதல் ஹதீஸில் கூறப்படுவது 'கைபர்' போரில் நடந்தது. போர்க்களத்தில் ஈடுபட்டிருக்கும்போது அவ்வாறு அவர்களை அறியாமல் விலகி இருக்கலாம்.

இரண்டாவது ஹதீஸில் ஈரமான இடத்தில் ஆடை நனைந்துவிடக்கூடாது என்று சற்று கைலியை உயர்த்தி இருந்த போது முழங்கால் தென்பட்டதாக தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.

மூன்றாவது ஹதீஸில் அபூபக்ரு(ரழி) அவர்கள் உமர்)ரழி) அவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கோபத்துடன் தங்கள் ஆடையின் ஒரு பகுதியைத் தூக்கியவர்களாக வந்தபோது அவர்களின் முழங்கால் தெரிந்துள்ளது.

நான்காவது ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் தன் தொடைப் பகுதி வெளியில் தெரிவதை அறியாமலிருக்கலாம். சிலர் முன்னிலையில் சிலர் அதிகப்படியான வெட்க உணர்வுடன் இருப்பதை நான் சாதாரணமாகக் காணலாம். அந்த அடிப்படையில் உஸ்மான்(ரழி) அவர்கள் வந்த போது தனது ஆடைகளைச் சரி செய்திருக்கலாம். இவ்வாறு நாம் கருதவதற்குக் காரணம், நபி(ஸல்) அவர்கள் தொடையை மறைக்கும்படி பலமான உத்திரவு பிறப்பித்துள்ளதால், அவர்களே அந்த உத்திரவுக்கு மாற்றமாக நடந்திருக்க மாட்டார்கள் என்பது தான்.

நம்மை அறியாமல் தற்செயலாகத் தெரிந்து விட்டால் அதில் தவறில்லை என்று தான் இந்த ஹதீஸிகளிலிருந்து நாம் முடிவெடுக்க முடியும். "நிரந்தரமாக எப்பொதும் அப்படி இருக்கலாம்" என்று கூறுவோர் நாம் முன்னர் எடுத்துக் காட்டிய ஹதீஸ்களை நிராகரித்தவர்களாக ஆக நேரும்.

ஃபத்வா விசயத்தில் மனோஇச்சைப்படி அவ்வப்போது மாற்றி மார்க்கத்தை வளைப்பவர் இந்த பீஜே என்பதற்கு இந்த 'தொடை' விஷயம் தெளிவான விடையாக உள்ளது. சிந்திப்பவர்கள் தெளிவு பெறுவார்கள் இன்ஷா அல்லாஹ்.