புதன், 10 ஆகஸ்ட், 2011

'நச்'சுன்னு ஒரு கேள்வி!

திமுக தலைவர் கருணாநிதி;
''இந்த அரசாங்கம் பழி வாங்கும் நடவடிக்கைக்கு உச்சக் கட்டமாகச் சென்று, இந்தக் குறிப்பிட்ட அதிகாரியை [ஜாபர்சேட், ஐ.பி.எஸ்.] தற்காலிகப் பணி நீக்கம் செய்ததோடு, அவர் மண்டபம் முகாமிலேதான் பணி நீக்கக் காலத்திலே இருக்க வேண்டும், சென்னையிலே உள்ள அவரது குடும்பத்தினரோடு இருக்கக் கூடாது என்றால் அதற்கு என்ன பெயர்? அதிலும் சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர் அவர். தற்போது அவர்களுக்கு நோன்பு காலமாகும். இந்த நேரத்தில் அவர் குடும்பத்தினரைக் காணக் கூடாது என்றெல்லாம் உத்தரவிடுவது எந்த அளவிற்கு நெறிக்குட்பட்டது? ஏன் இப்படிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள்?
அரசுக்கு விசுவாசமான அதிகாரிகளையெல்லாம் பழி வாங்கினால், மற்ற அதிகாரிகள் எல்லாம் ஒரு அரசுக்கு விசுவாசமாக நாம் பணியாற்றினால், அடுத்து வரும் ஆட்சியிலே தாங்கள் பழி வாங்கப்பட நேரிடும் என்று நினைத்தால், தங்கள் பணியினை முறையாகவும் நிறைவாகவும் ஆற்ற முடியுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக