புதன், 30 ஜனவரி, 2013

ஏனப்பா! நீங்க உடைச்சா தேங்கா; நாங்க உடைச்சா வெடிகுண்டா?

ஏனப்பா! நீங்க உடைச்சா தேங்கா; நாங்க உடைச்சா வெடிகுண்டா?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கருத்துசுதந்திரம் பேசி இஸ்லாமியர்கள் சகிப்புத்தன்மை  அற்றவர்கள் என்று பேசும் சந்தர்ப்பவாதிகளே! அன்று சென்சார் போர்டு அனுமதித்த டேம் 999 படத்திற்கு எதிராக வைகோ முழங்குவதை படியுங்கள்;

''மதிமுக இந்தப் படத்தை வெளியிட விடாமல் தடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். இந்தப் படம் வெளியாகவே கூடாது. அதற்கான போராட்டத்தில் மதிமுக இறங்குகிறது. இப்போது அமைதி வழியில் போராடுகிறோம். மீறி படத்தை வெளியிட முனைந்தால் போராட்டம் அடுத்த கட்டத்துக்கு போகும்.

முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இந்தப் படத்தை தமிழகத்தில் வெளியிடக்கூடாது என ஆணை பிறப்பிக்க வேண்டும். அத்துடன் மத்திய அரசையும் இதுகுறித்து வலியுறுத்தி இந்தியாவில் அந்தப் படம் வெளியாகாமல் தடுக்க வேண்டும்.

இந்திய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டில் மத்திய அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் டேம் 999 படத்தைத் தடுக்க வேண்டும். இப்படியொரு படத்தை கொஞ்சமும் சகித்துக் கொள்ள முடியாது.''
 **********************************************************
அன்பானவர்களே! அன்றைக்கு வைகோ போன்றவர்கள் கோரிக்கையை ஏற்று முதல்வர் ஜெயலலிதா டேம் 999 படத்திற்கு தடை விதித்த போது கருத்து சுதந்திரம் என்று ஏன் கூப்பாடு போடவில்லை?
***********************************************************

டேம் 999 படம் பிரிவியு காட்சி நடந்த தியேட்டர் மீது மதிமுகவினர் தாக்குதல்; தியேட்டர் கண்ணாடிகள் உடைப்பு!

மதிமுக ரகளை: டேம் 999 பிரிவியூ காட்சி ரத்து

சர்ச்சைக்குரிய டேம் 999 படத்தின் பிரிவியூ காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க.,வினர் ரகளையில் ஈடுபட்டதால், காட்சி ரத்து செய்யப்பட்டது.


இந்த நிலையில் இந்தப் படத்தின் அறிமுக பத்திரிகையாளர் சந்திப்பு சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் அரங்கில் இன்று மாலை 4 மணிக்கு நடப்பதாக இருந்தது.

இந்த விஷயம் தெரிந்ததும் மதிமுகவினர் பிரசாத் லேபில் குவிந்தனர். நாம் கட்சியினரும் அவர்களுடன் சேர்ந்து தமிழருக்கு எதிரான ஒரு படத்துக்கு சென்னையில் பிரஸ் மீட் வைப்பதா என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

படச்சுருளை உருவினர் போராட்டக்காரர்கள்

மேலும் பிரசாத் லேபில்தான் இந்த டேம் 999 படத்துக்கு பிரிண்ட் போடுகிறார்கள் என்ற தகவல் பரவியதால், அந்த படச்சுருளை கைப்பற்ற லேபுக்குள் புகுந்தனர் ஆர்ப்பாட்டக்காரர்கள். இதில் டேம் 999 படம் என நினைத்து வேறு ஒரு படத்தின் நெகடிவ்வை சில அடிகளுக்கு உருவிவிட்டனர்.

அது ஒரு கன்னடப் படம் என்பது தெரிந்ததும் விட்டுவிட்டனர்.

போராட்டக்காரர்களை அடக்க பெரும் போலீஸ் பட்டாளம் குவிக்கப்பட்டிருந்தது. தடியடிக்கு தயாராக பெரிய லட்டிகளை வைத்துக் கொண்டு நின்றனர் போலீசார்.

இதனால் கொதித்துப் போன இயக்குநர் வ கவுதமன், "தமிழருக்கு எதிராக, தமிழர் நலனுக்கு எதிராக வேண்டுமென்றே படம் எடுக்கிறார்கள். அதை எதிர்க்க வந்த எங்களை கைது செய்வதாக மிரட்டுகிறது நமது போலீஸ். இது என்ன நியாயம்? தமிழ்நாட்டுப் போலீஸ் தமிழருக்கு பாதுகாப்பாக இல்லையே...

இந்தப் படத்தை தமிழகத்தில் எந்த திரையரங்கிலும் திரையிட விடமாட்டோம். மீறி திரையிட்டால், அந்த திரையரங்கம் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும். அனைத்து திரையரங்குகள் முன்பும் தமிழ் சினிமா இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் போராட்டம் நடத்துவார்கள்," என்றார்.

இந்நிலையில், இதை திரையிடக்கூடாது என வலியுறுத்தி ம.தி.மு.க.,வினர் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் பிரிவியூ காட்சி ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக மல்லை சத்யா உள்ளிட்ட ம.தி.மு.க.,வினர் கைது செய்யப்பட்டனர்.

*********************************************************
அன்றைக்கு தியேட்டரில் இவர்கள் ரகளை செய்தபோது இந்த கருத்து சுதந்திரவாதிகள் எங்கே போயிருந்தார்கள்? ஏனப்பா! நீங்க உடைச்சா தேங்கா; நாங்க உடைச்சா வெடிகுண்டா?
********************************************************

''நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.

இப்ப தமிழகத்துல எல்லா நிருபர்களும் கமலையே சுத்தி சுத்தி வர்றதுனால நாமளும் கமலிடம் பேட்டி காண ஒரு நிருபரை அனுப்பினோம்.(கற்பனைதான்)

நிருபர் (கமலிடம்); நீங்கள் முஸ்லிம்களை இழிவுபடுத்தி படம் எடுத்தது தவறு என்று எல்லோரும் சொல்கிறார்களே?

கமல்; இதற்கான பதிலை பல ஆண்டுகளுக்கு முன்னால் நாயகன்  படத்திலேயே சொல்லியுள்ளேன். அதையே இப்போது பதிலாக தருகிறேன்., ''நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.

நிருபர்; அந்த நாலுபேர் யார்?

கமல்; நான்[கமல்] என்னுடைய ........கவுதமி, என் மகள்கள் சுருதி மற்றும் அக்ஷயா.

நிருபர் தலை தெறிக்க ஓடுகிறார்.

“தமிழக அரசு விஸ்வரூபம் படத்தை தடை செய்தது சரிதான்" - சோ (ராமசாமி),

"தமிழக அரசு விஸ்வரூபம் படத்தை தடை செய்தது சரிதான்" - சோ (ராமசாமி),

CNN IBN ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாய்க்கு வழங்கிய பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டார் சோ.

"தமிழக அரசு விஸ்வரூபம் படத்தை தடை செய்தது சரிதான். இப்படிதான் செய்ய முடியும். ஒரு திரைப்படத்துக்காக மாநில அரசு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவதை பொறுத்துக்கொள்ள முடியாது" என்றும் கூறியுள்ளார் அவர்.

ராஜ்தீப் சர்தேசாய், "அரசு எதற்காக எதிர்ப்பு தெரிவிக்கும் குழுக்களின் சார்பாக செயல்படுகிறது, கமல்ஹாசன் பக்கம் என்ன நியாயம் உள்ளது என்பதை பார்க்கவில்லை?" என்று கேள்வி எழுப்பியபோது சோ, "பொதுமக்கள் நலன் உள்ள திசையிலேயே முதல்வர் ஜெயலலிதா நின்றார். ஒரு படம் சிலரது நம்பிக்கைகளை தகர்க்கும் என்றால், அந்தப் படம் தடை செய்யப்படத்தான் வேண்டும்" என்றார்.

சமூக நீதி காத்த வீராங்கனை'க்கு நன்றி! நன்றி!! நன்றி!!!

காவி நாயகன் கமல் கைவண்ணத்தில் வெளியாகியுள்ள சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் விஷரூபம் படத்திற்கு எதிராக ஆரம்பம் முதலே தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.

இஸ்லாமியர்கள் மட்டுமன்றி இந்திய இறையானமையையும் இழிவுபடுத்தி கமல் எடுத்துள்ள விஷரூபத்தை தடை செய்யவேண்டும் என்று முஸ்லிம் இயக்க கூட்டமைப்பு சார்பாக அதன் தலைவர்கள் கமிஷனர் மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோரிடம் மனு அளித்தனர் கடந்த 25 ஆம் தேதி விஷரூபம் விஸ்வரூபம்  வெளியாக இருந்த நிலையில் தமிழக மாவட்ட ஆட்சியர்கள் 15 நாட்கள் தடை வித்து 144 தடை விதித்தனர். இதனால் அதிர்ந்த காவி நாயகன் கமல், சென்னை உயர்நீதிமன்றம் சென்றார். அங்கே தமிழக் அரசு விதித்த தடைக்கெதிராக தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்றார். உடனடியாக இன்று (30.1.2013) தமிழகமெங்கும் தனது விஷரூபத்தை வெளியிடலாம் என நினைத்து களமிறங்கியபோது, மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உத்தரவின் பேரில் தமிழக அரசு வழக்கறிஞர்  உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து எதிர்வரும் 6.2.2013 வரை தடை நீட்டிப்பு உத்தரவு பெற்றார். இதன் மூலம் முதல்வர் ஜெயலலிதா அவர்கள், தான் ஒரு சமூக நீதி காத்த வீராங்கனை என்று மீண்டும் நிரூபித்துள்ளார்.

நேற்று நள்ளிரவில் தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்ற காவி நாயகன், முதல்வரின் இந்த சமயோசித முடிவால் தனது படம் விக்கிரமாதித்தன் கதையாக தடை நீள்வதை கண்டு ஆடிப்போய் உள்ளார். உச்சநீதிமன்றம் செல்வதாக மிரட்டியுள்ளார். காவி நாயகன் உச்சநீதிமன்றம் கண்டிப்பாக செல்லவேண்டும் என்றே நாமும் விரும்புகிறோம். அங்கும் தமிழ்க முதலவர் விஷரூபத்திற்கு எதிராக வென்று காட்டுவார் (இறைவன் நாடினால்) என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. டேம் 999 படத்திற்கு தமிழகத்தில் ஏற்பட்ட நிலை காவி நாயகனின் படத்திற்கும் ஏற்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது தமிழக முதல்வரின் உறுதியில் தெரிகிறது. தமிழக முதல்வரின் சமூக நல்லிணக்க நடவடிக்கைக்கு ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் பின்னே அணிவகுக்கும் என்று கூறிக்கொள்கிறேன்.

இவண்;
அல்லாஹ்வின் அடிமை.,
முகவைஅப்பாஸ்.

செவ்வாய், 29 ஜனவரி, 2013

ஆப்கான் அல்காயிதா பயங்கரவாதிகளுக்கு(?) இந்திய ''ரா'' அதிகாரி பயிற்சி அளித்தார் என்று ஒப்புக் கொள்கிறதா சென்னை உயர்நீதிமன்றம்...?


ஆப்கான் அல்காயிதா பயங்கரவாதிகளுக்கு(?) இந்திய ''ரா'' அதிகாரி பயிற்சி அளித்தார் என்று ஒப்புக் கொள்கிறதா சென்னை உயர்நீதிமன்றம்...?
இஸ்லாமியர்களின் புனித நூலாகவும் உலகப் பொதுமறையாகவும் விளங்கக் கூடிய திருக்குரானை இழிவுபடுத்தி, முஸ்லிம்களின் தொழுகை உள்ளிட்ட அமல்களை தீவிரவாதத்தின் பக்கவாத்தியங்களாக காட்டியதோடு, ஒட்டுமொத்த இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் என்ற  கருத்தை விதைக்கும் ஒரு படத்தை காவியின் நாயகன் கமலஹாசன் எடுக்கிறார். அந்தப் படத்தைப் பார்த்த முஸ்லிம்கள் கூட்டமைப்பு தலைவர்கள் நினைத்திருந்தால் ஜனநாயகத்தை தூக்கி வீசிவிட்டு ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் இந்த கூட்டமைப்பின் அடலேறுகள்  கமல்ஹாசனின் வீட்டை தூள் தூளாக்கியிருப்பார்கள். அப்படி எங்களை இஸ்லாம் வார்த்தெடுக்கவில்லை. எனவே ஜனநாயக முறைப்படி முஸ்லிம் தலைவர்கள் காவல்துறை உயரதிகார்கள், தலைமைச் செயலக அதிகாரிகள் என முறையாக மனு செய்தார்கள். அரசும் முஸ்லிம்களின் உணர்வுக்கு மதிப்பளித்து காவி நாயகனின்  படத்தை தடை செய்தது.

பார்த்தார் காவி நாயகன். முஸ்லிம்கள் எங்கே சென்றால் வஞ்சிக்கப் படுவார்களோ அந்த நீதிமன்றம் சென்றார் தடையை நீக்கக் கோரினார். நீதிபதியும் நான் படத்தை பார்த்து விட்டு தான் தீர்ப்பளிப்பேன்  என்றார். படமும் பார்த்தார். சில நாட்கள் தள்ளிவைத்தார் கமலை சுமூகமாக செல்வதற்கு முயற்சியுங்கள் என்றார். இவ்வாறன நிலையில் இப்படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழில் முறைகேடு நடந்துள்ளது என்று  அரசும் வாதிட்டது. தனது படத்தை விற்ற பின்னால் அதுபற்றி வழக்கு தொடுக்க காவி நாயகனுக்கு அதிகாரமில்லை என்று ஆணித்தரமாக வாதிட்டது. எல்லாவற்றையும் செவியேற்ற நீதிபதி, இதோ தீர்ப்பு....அதோ தீர்ப்பு என இரவு பத்து மணிக்கு மேல் காவி நாயகனுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்குகிறார். அதுவும் தமிழக அரசுக்கு மேல் முறையீடு செய்ய கூட அவகாசம் அளிக்காமல் உடனடியாக படத்தை திரையிட அனுமதி அளிக்கிறார். 

இன்று இந்திய  நேரப்படி சுமார் 10;45 மணியளவில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவரால் ''சமநீதி'' படுகோரமாக கொலை செய்யப்பட்டது. கொலை செய்யப்பட்டது நீதி மட்டுமல்ல; இந்தியாவின் மதசார்பின்மை நம்பிக்கையும் தான்!


அன்பான முஸ்லிம் சகோதர்களே! துப்பாக்கி படத்தில் சில காட்சிகளை மட்டுமே நீக்கச் சொன்னோம் நமது கருத்துக்கு மதிப்பளித்து அப்படத்தின் தயாரிப்பாளரும்  இயக்குனரும் சில  காட்சிகளையாவது நீக்கினார்கள். ஆனால் இந்த காவி நாயகனின் படத்தை  முழுமையாக தடை செய்யச் சொன்னோம். ஆனால் படம் பார்த்த நீதிபதி[?] ஒரு பிரேம் கூட நீக்கச் சொல்லாமல் அப்ப்படியே வெளியிட அனுமதி வழங்கியுள்ளார் என்றால் இந்த தீர்ப்பிற்குப் பின்னால் என்ன ஒளிந்துள்ளது  என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சென்சார் போர்டு அனுமதி வழங்கிய  பின்னும் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து  டேம் 999 படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை உச்சநீதிமன்றம் உறுதி செய்கிறது ஆனால் முஸ்லிம்களின் உணர்வுக்கு மதிப்பளித்து தமிழக அரசு காவி நாயகனின் படத்திற்கு விதித்த தடையை நீக்கியதன் மூலம்   உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை  சென்னை உயர்நீதிமன்றம்  புறந்தள்ளியுள்ளது.

சரி முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு நீதிமன்றம் மதிப்பளிக்காவிட்டாலும் ஒரு இந்தியானாக யோசித்திருந்தால் கூட இந்த படத்தை  அனுமதித்திருக்காது. ஆப்கானிஸ்தான் அல்காயிதா மற்றும் தாலிபான் பயங்கரவாதிகளுக்கு[!] இந்தியாவின் உயரிய ''ரா'' பிரிவு அதிகாரி பயிற்சி அளிப்பதாக காவி நாயகன் காட்சி அமைத்துள்ளாரே!  இதை நீதிமன்றம் ஏற்கிறதா?  சர்வதேச பயங்கரவாதி[!] முல்லா உமர் கோவையிலும் மதுரையிலும் ஓராண்டுக்கு  மேலாக பதுங்கி இருந்தார் என்று காவி நாயகன் காட்சி வைத்துள்ளாரே! அப்படியாயின் இந்திய ராணுவமும தமிழக காவல்துறையும்  செயலிழந்து விட்டது என்று நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறதா? ஆக முடிவு செய்யப்பட்ட தீர்ப்பை முன்பே கொடுத்து விட்டு போயிருக்கலாமே!

அன்பான முஸ்லிம்களே!

தமிழக அரசு இடைக்கால தடை விதித்தபோது இதில் ஏதேனும் இரட்டை நாடகம் இருக்குமோ என்ற ஒரு சிறு சந்தேகம் இருந்தது ஆனால் நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் அவர்கள் வாதித்த விதத்தை பார்க்கும் போது, உண்மையில் தமிழக அரசு  குறிப்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இந்த படத்தை வெளியிட விதித்த தடை என்பது உண்மையானது என்று புலப்படுகிறது. எனவே தமிழக அரசுக்கு நாம் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறோம். அதே நேரத்தில் தமிழக அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து  உச்சநீதிமன்றம் வரை சென்று மேல்முறையீடு செய்து டேம் 999 படத்திற்கு ஏற்பட்ட  முடிவை காவி நாயகனின் படத்திற்கும் எட்ட முயற்சிக்க வேண்டும்.  அப்போதுதான் தமிழக அரசின் மீது முஸ்லிம்களுக்கு முழுமையான நம்பிக்கை பிறக்கும்.

அன்பான முஸ்லிம்களே!

காவி நாயகனின் படத்திற்கு தடை  நீங்கியுள்ள நிலையில், கூட்டமைப்புத் தலைவர்கள் அறிவுரையின் அடிப்படையில் களமிறங்குங்கள். இந்தியா நம்நாடு என்ற சிந்தனையோடு.

எங்கள் இறைவா! அநீதிக்கு எதிராக எங்கள் பாதங்களை உறுதிப் படுத்துவாயாக! இன்னும் உன் புறத்திலிருந்து அறியாப்புற உதவிகளையும் எங்களுக்கு நல்கிடுவாயாக!!

இவண்;

அல்லாஹ்வின் அடிமை

முகவைஅப்பாஸ்.

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

மருத்துவரே! அன்றைக்கு எங்கேபோனது உமது புழுத்துப்போன கருத்துச் சுதந்திரம்?

''மரம் வெட்டி'' என அறியப்பட்டிருந்த ராமதாசை மக்கள் மன்றத்தில் தலைவராக முன்னிறுத்தியவர் மறைந்த சகோதரர் பழனிபாபா அவர்களாவார். அரசியலில் சற்றே வளர்ந்தவுடன் பழனி பாபாவை ஓரங்கட்டினார் இந்த மருத்துவர். தனக்கு தேவைப்படும் போதெல்லாம் எந்த சாதியையும் தூக்கிப் பிடித்து பிழைப்பை ஓட்ட தயங்காதவர். சேரிகளின் எறிந்த குடிசைகளின் சாம்பலில் பல் துலக்கியவர், பின்னாளில்  தேர்தல் ஆதாயத்திற்காக திருமாவளவன் தோளில்  கை போட்டு அந்த சமுதாயத்தின் நம்பிக்கையை பெற்றவராக தன்னை காட்டிக்கொண்டு ''தமிழ் குடிதாங்கி''யாக உயர்ந்தவர். இப்போது அதே ராமதாஸ் மீது தர்மபுரி மாவட்டத்தில் மீண்டும் ஒரு  சாதீய தாண்டவம் ஆடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தலித்  மக்களுக்கு எதிராக சாதீயவாதிகளுடன் கரம் கோர்த்து  களமாடும்  ஒரு சுயநலவாதிதான் இந்த ராமதாஸ். அரசியல் ரீதியாக எந்தக் கட்சியும் இவரை சீண்டாத நிலையில், சீ..சீ.. இந்தப் பழம் புளிக்கும் என்ற கதையாக திராவிடக் கட்சிகளுடன்  கூட்டணி இல்லை என அறிவித்துக் கொண்டவர். தனது இருப்பை காட்டிக்கொள்ள அவ்வப்போது  அறிக்கை அரசியல் நடத்துபவர். அப்படி அவர்  நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை தான்  இஸ்லாமிய விரோதியும் இந்திய தேச விரோதியுமான கமல்   படமான விஸ்வரூபத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் என்ற அறிக்கை.

அவரது அறிக்கையில், ''விஸ்வரூபம் திரைப்படம் நடுநிலையான இஸ்லாமியர்களை பெருமையடையச் செய்யும் விதத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது என்று கமலஹாசன் கூறியுள்ள நிலையில், இதை பொதுவான இஸ்லாமியர்கள் உள்ளிட்ட ரசிகர்களின் முடிவுக்கே விட்டுவிடுவதுதான் சரியானதாக இருக்கும். மாறாக படத்தை முடக்க முயல்வது எதிர்மறையான எண்ணத்தையே ஏற்படுத்தும். விஸ்வரூபம் படத்திற்கு தணிக்கை வாரியம் அனுமதி அளித்துவிட்ட நிலையில், தமிழக அரசு தலையிட்டு, யாருடைய கருத்தையும் கேட்காமல் தடை விதித்திருப்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதாகும். எனவே, விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தமிழக அரசு உடனடியாக நீக்கவேண்டும்'' என்று கூறியுள்ளார்.

கமல்ஹாசனே சொல்லிட்டாராம். அதுனால மக்கள் தீர்ப்புக்கே விட்டுரனுமாம். அதோட சென்சார் போர்டு அனுமதிச்ச படத்தை தமிழக அரசு தடுத்தது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதாம் சொல்கிறார் மருத்துவர். மருத்துவருக்கு செலக்டிவ் அம்னீசியா நோய் இருக்கின்ற காரணத்தினால், ஒரு விஷயத்தை அவருக்கு நினைவூட்டுகிறோம்.  சில ஆண்டுகளுக்கு முன்னால் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் பாபா. இந்த படத்திற்கு சென்சார் போர்டும் அனுமதி அளித்தது.  தமிழக அரசு  தடை ஏதும் செய்யவில்லை. அந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கோ சாதிக்கோ எதிரான கருத்து இருப்பதாக யாரும் போராடவும் இல்லை. ஆனால் ராமதாஸ் அந்த படத்திற்கு எதிராக தனது கட்சியினர் மூலமாக கலவரத்தில் ஈடுபட்டார். அதைப்பற்றி அன்றைய காலகட்டத்தில் பத்திரிக்கைகளில் வெளியான செய்திகளில் ஒன்றே ஒன்று மட்டும் மருத்துவர் பார்வைக்கு;

பூம்புகாரில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து டாக்டர் ராமதாஸ் பேசிய பேச்சுக்கள் தமிழகத்தையே கடந் சில நாட்களாகஉலுக்கி எடுத்து விட்டன. குறிப்பாக வட மாவட்டங்களில் நடிகர் ரஜினிக்கு எதிராக ஆங்காங்கே போராட்டங்கள்நடந்தன. ரஜினியின் கொடும்பாவியை பாமகவினர் எரித்தனர். பாபா படம் போட்ட தியேட்டர்களுக்கு சென்று படங்களைத்திரையிட விடாமல் கலாட்டா செய்தனர். ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தியேட்டரைத் தாக்கி "பாபா" படப்பெட்டியை சிலர் கடத்திச் சென்றனர்.உச்சகட்டமாக விருத்தாசலத்தில் அப்படத்தைத் திரையிட்ட தியேட்டர் உரிமையாளரும் கடத்தப்பட்டு பின்னர்விடுவிக்கப்பட்டார். இதனால் பல பகுதிகளில் "பாபா" படம் திரையிடப்படவில்லை. "பாபா"வுக்கு எழுந்த எதிர்ப்பு வன்முறையாக மாறுவதைக் கண்ட தமிழக அரசு, "பாபா" ஓடும் தியேட்டர்களில்பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தது. அதேபோல, ரஜினிக்கு எதிராக பாமகவினர் நடத்தியபோராட்டங்களையும் போலீஸார் தலையிட்டுத் தடுத்தனர். அதேபோல, போராட்டத்தில் ஈடுபட்ட ரஜினிரசிகர்களும் சரமாரியாகக் கைது செய்யப்பட்டனர்.

Read more at: http://tamil.oneindia.in/news/2002/08/19/ramadoss.html


மருத்துவரே! அன்றைக்கு எங்கேபோனது  உமது  புழுத்துப்போன கருத்துச் சுதந்திரம்? நீர் உரசிப்பார்க்க இஸ்லாமியர்கள் வெறும் தீக்குச்சி அல்ல; அதையும் தாண்டி....''எரிமலை'' என்பதை மனதில் கொண்டு  தைலாபுர தோட்டத்தில்  காற்று வாங்குவதுதான்   நல்லது என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறோம்.

சனி, 26 ஜனவரி, 2013

தீவிரவாதிகளுக்கு ஆர்.எஸ்.எஸ். தொடர்பு! இதோ 10 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியல்!

ம்ஜாவ்தா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு தீவிரவாத தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு தொடர்பு உள்ளதாக அறிவித்துள்ள மத்திய அரசு, அவற்றில் தொடர்புடைய 10 பேர்களின் பெயர்களையும் வெளியிட்டு உள்ளது.

"தீவிரவாதம் தொடர்பாக குற்றங்களில் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தொடர்புகள் உள்ளன" என மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, கூறியிருந்தார். அவரது அந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. "காங்கிரஸ் கட்சி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். உள்துறை அமைச்சர் ஷிண்டேவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்" என்று, பா.ஜ.க. வற்புறுத்தி வருகிறது.

இந்த நிலையில், சுஷில்குமார் ஷிண்டே கூறியது சரியானதே. தீவிரவாதத்தில் ஆர்.எஸ்.எஸ்.க்கு தொடர்பு உள்ளது நிஜம்தான் என மத்திய அரசு கூறியுள்ளது.

மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங், "தீவிரவாத தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. சம்ஜாவ்தா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் (அஜ்மீர்) தர்கா ஷரீப்பில் நடந்த தீவிரவாத குண்டு வெடிப்பு தாக்குதல்களில், குறைந்தபட்சம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய 10 பேர் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன'' என்று தெரிவித்தார்.

சொன்னதோடு நிற்காமல், 10 பேருடைய பெயர், விவரங்களையும் ஆர்.கே.சிங் வெளியிட்டார். இதோ, இவர்கள்தான் அந்த 10 பேர்:

சுனில் ஜோஷி (மரணம்), சந்தீப் டாங்கே (தலைமறைவு), லோகேஷ் சர்மா (கைது), சுவாமி அசேமானந்த் (கைது), ராஜேந்தர் என்கிற சமுந்தர் (கைது), முகேஷ் வசானி (கைது), தேவேந்தர் குப்தா (கைது), சந்திரசேகர் லெவே (கைது), கமல் சௌகான் (கைது), ராம்ஜி கல்சங்ரா (தலைமறைவு).

இவர்கள் 10 பேரும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் வெவ்வேறு விதங்களில் இணைந்து செயல்பட்டு வந்தவர்கள் எனவும், ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.

நிரந்தரமாக தடை செய்; குவைத்தில் ''விஸ்வரூபம்'' எடுத்த முஸ்லிம்களின் கூட்டமைப்பு!

நிரந்தரமாக தடை செய்; குவைத்தில் ''விஸ்வரூபம்'' எடுத்த முஸ்லிம்களின் கூட்டமைப்பு!

குவைத் ஜன 25;
இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆனையும், இஸ்லாமியர்களையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் திரைப்படத்தை நிரந்தரமாக தடை  வேண்டும் என்று குவைத் தமிழ் முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இஸ்லாத்தையும் முஸ்லிம்களின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்தும் வகையில் விஸ்வரூபம் திரைப்படத்தை நடித்து, இயக்கி, தயாரித்துள்ள கமல் ஹாசனுக்கு கண்டனமும்,  இடைக்கால தடை விதித்த தமிழ்க அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், இப்படத்திற்கு நிரந்தரமாக தடை விதிக்கக் கோரியும். குவைத் தமிழ் முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக குவைத் தலைநகர் மிர்காப்'பில்  தஞ்சை உணவகத்தில் அமைந்துள்ள மாவீரன் சலாஹுத்தீன் அய்யூபி அரங்கத்தில் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கண்டன உரையாற்றிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமைப்புகளின் நிர்வாகிகள், ''விஸ்ரூபம் திரைப்படத்தின் மூலம் இஸ்லாமியர்களை மட்டுமல்ல; இந்தியாவையும் இழிவுபடுத்தியுள்ளார் கமல்ஹாசன். ஆப்கானிஸ்தான் அல் காயிதாவினருக்கு இந்தியாவின் உளவுப்பிரிவான ''ரா' அமைப்பின் அதிகாரி  பயிற்சி அளிப்பது போன்ற காட்சியை அமைத்துள்ளார். இது இந்தியாவின் இறையாண்மையை இழிவுபடுத்துவதாகும். அதோடு  தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள ஒரு ஆப்கானிஸ்தான் தலைவர், கோவையிலும் மதுரையிலும் ஒரு வருடத்திற்கும் மேலாக பதுங்கியிருந்தார் என்று காட்சி அமைத்திருப்பதன் மூலம் இந்திய ரானுவம் மற்றும் தமிழக போலீசார் தமது கடமையை தவறிவிட்டதாக சித்தரிக்கிறார். எனவே இப்படத்தை  இஸ்லாமியர்கள் மட்டுமன்றி, இந்திய  தேச நலனில் அக்கறையுள்ள ஒவ்வொரு இந்தியனும் எதிர்க்கவேண்டும்' என்று பேசினார்கள்.

மேலும், தமிழக அரசு உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள மற்றும் பல்வேறு நாடுகள இப்படத்தை தடை செய்த பின்னும் தனது தவறை திருத்த முன்வராத கமல்ஹாசன், தடையை நீக்க நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு   மதிப்பளித்து, டேம 999 படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததோடு, மக்களின் உணர்வுகளுக்கு மாற்றமாக ஒரு தனிநபரின் உணர்வுகளை உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொள்ளாது என்று கூறியுள்ளதன் அடிப்படையில் விஸ்வரூபம் படத்திலும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அப்படத்திற்கு நிரந்ததரமாக தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம்  தீர்ப்பளித்து  தமிழக அமைதிக்கு வித்திட வேண்டும் என்றும் தீர்மானம் இயற்றப்பட்டது.

கமல்ஹாசனின் விஸ்வரூபம் தடை: சில கருத்துக்கள்


கமல்ஹாசனின் விஸ்வரூபம் தடை: சில கருத்துக்கள் - கோ.சுகுமாரன்

by Sugumaran Govindarasu on Friday, January 25, 2013 at 7:22pm ·
விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்யப்பட்டது குறித்து பல்வேறு கருத்துக்கள் வந்துள்ளன. ஒரு மனித உரிமை ஆர்வலன் என்ற முறையில் எந்த கருத்தையும் தடை செய்வதன் மூலம் எதிர்கொள்ள கூடாது என்ற கருத்துடையவன். ஆனால், முஸ்லிம்களின் எதிர்ப்பில் நியாயம் இருப்பதாகவே கருதுகிறேன். இப்படத்தை எதிர்க்கும் முஸ்லிம்கள் கூறும் காரணங்களில் முக்கியமானது ஒட்டுமொத்த முஸ்லிம்களும் தீவிரவாதிகள் என இப்படத்தில் சித்தரிப்பது.
 
இந்தியாவில் இந்து பாசிசம் தலைத் தூங்கத் துவங்கிய காலத்திலும், அதன் பின்னர் 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் முஸ்லிம் மக்களிடையே மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தின. அப்போது இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்று போன முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதப் பாதையை தேர்வு செய்தனர்.  இதற்கு சர்வதேச அரசியலும் பின்புலமாக இருந்தது. அப்போதுதான் 'முஸ்லிம் தீவிரவாதம்' என்ற சொல்லாடல் புழகத்திற்கு வந்தது. இவற்றை அரசுகள் எதிர்க்கொண்ட விதமும், அது முஸ்லிம் சமூகத்தில் ஏற்படுத்திய விளைவுகள் பற்றியும்  பிரிதொரு சந்தர்ப்பத்தில் காண்போம்.
 
1994 கோவை கலவரம் நடந்து 19 முஸ்லிம்கள் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்ட போது, தமிழகத்தில் முஸ்லிம் அமைப்புகள் அவ்வளவு வீச்சாக இல்லை. அப்போதுதான் தமுமுக போன்ற அமைப்புகள் முற்றிலும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு முஸ்லிம்களை அணி திரட்டின. அதேபோல் பல அமைப்புகள் முன்னுக்கு வந்தன. இவை மிக வெளிப்படையாகவே தீவிரவாதத்தைக் கண்டித்தன. அதோடு மட்டுமல்லாது தற்போது இந்த அமைப்புகள் தேர்தல் அரசியலில் நேரடியாகவோ அல்லது ஆதரவு என்ற நிலையிலோ பங்கேற்கின்ற சூழலைக் காண முடிகிறது. தமுமுக இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு தேர்தல் அரசியலில் வெற்றியின் முதல் படியை எட்டியுள்ளது. இவை எல்லாம் முஸ்லிம் மக்கள் தீவீரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.
 
சென்ற 2010ல் பாபர் மசூதி வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அத்தீர்ப்பு முஸ்லிம்களுக்கு எதிராக சொல்லப்பட்டது என்பதோடு, நடுநிலையாளர்கள், மதச்சார்பின்மை மீது நம்பிக்கை கொண்டோர் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அது தீர்ப்பே அல்ல கட்டப் பஞ்சாயத்து என்று சொன்னவர்களும் உண்டு. இத்தீர்ப்பை முஸ்லிம் அல்லாத சட்ட மற்றும் வரலாற்று அறிஞர்கள் என அறிவுஜீவிகள் சமூகம் முற்றிலும் நிராகரித்தது. அப்போது முஸ்லிம் மக்கள் மத்தியில் இந்திய ஜனநாயகம், நீதித்துறை என அனைத்தின் மீதும் நம்பிக்கை மீண்டும் அற்றுப் போனது. அப்போதும்கூட இந்திய முஸ்லிம்கள் ஒரு சின்ன வன்முறையிலும் ஈடுபடவில்லை. இன்னமும் சொல்லப்போனால், வெளிப்படையாக கருத்துக்கூட கூறாமல், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மெளனத்தின் மூலமே எதிர்க் கொண்டனர்.
 
இன்றைய அரசியல் சூழலை சற்று உற்று நோக்குவோம். இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி ஊழல், நிர்வாக சீர்கேடு, பன்னாட்டு முதலாளிகளுக்கு அடிபணிதல், வாரிசு அரசியல் என பல்வேறு பிரச்சனைகளில் செல்வாக்கை இழந்து வருகிறது. மாற்றாக எழ வேண்டிய பா.ஜ.க. தன் இந்துத்துவ கொள்கையால் அதன் மீதான வெறுப்பு ஒருபுறம் இருந்தாலும், ஊழல், தலைமைப் போட்டி, மக்கள் பிரச்சனைகளில் கவனம் குவிக்காமை, மோடியின் அச்சுறுத்தல்,  உட்கட்சி பூசல் என தன் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டியுள்ளது. இச்சூழலில், காங்கிரசுக்கு மாற்றாக பா.ஜ.க. ஆட்சிக்குக் கொண்டு வர சில முயற்சிகள் நடக்கின்றன. இதற்கு ஊடக பின்புலமும் உள்ளது. அதனால்தான், காங்கிரஸ் வெளிப்படையாக ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. போன்றவற்றை அம்பலப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதன் வாயிலாக தான் முஸ்லிம் மக்களுக்கு என்றும் துணை நிற்பதாக காட்டுவதன் மூலம் முஸ்லிம் வாக்கு வங்கியை தக்க வைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
 
மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே 'மாலேகான், மெக்கா மசூதி' உள்ளிட்ட இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு பின்னணியில் இந்துத்துவ அமைப்புகள் உள்ளதைச் சுட்டிகாட்டி 'இந்து தீவிரவாதம்' பற்றிக் கூறிய கருத்துக்கள் நாடெங்கும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோரவில்லை என்றால் பாராளுமன்றத்தையே நடத்த விடமாட்டோம் என பா.ஜ.க. அறிவித்ததோடு, இந்த குற்றச்சாட்டில் தப்பித்துக் கொள்ள வழி தேடிக் கொண்டுள்ளது. 
 
இதுபோன்ற சூழலில்தான் 'விஸ்வரூபம்' திரைப்படம் சர்ச்சைக்குள் சிக்கித் தடை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய்யின் 'துப்பாக்கி' படம் முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு, அதன் அடிப்படையில் முஸ்லிம் தலைவர்களுக்குப் படத்தைத் திரையிட்டுக் காட்டி, அவர்கள் சொன்ன ஆலோசனைகள் அடிப்படையில் சில காட்சிகள் நீக்கப்பட்டு படம் வெளியிடப்பட்டது. இந்தப் படிப்பினையை கமல்ஹாசன் ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பதை இத்தடையை ஆதரிக்கும் யாரும் முன்வைக்காதது ஆச்சரியமளிக்கிறது. இத்தடையை எதிர்க்கும் நடுநிலையாளர்கள் கூட கமல்ஹாசனின் முஸ்லிம் எதிர்ப்புப் போக்கை ஆதரிக்காதது சற்று ஆறுதல் அளிக்கிறது.
 
திரைப்படங்களைத் தணிக்கைச் செய்து சான்றளிக்கும் அதிகாரம் மத்திய அரசுத்தான் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியும், பிரகாஷ் ஜா வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும் தமிழக அரசு இத்திரைப்படத்தைத் தடை செய்ததை மறுபரீசிலனை செய்ய வேண்டுமென தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் மனீஷ் திவாரி கூறியுள்ளார். இன்றைய இந்து நாளிதழில் எழுதப்பட்டுள்ள தலையங்கம் தடை தவறு என்பதற்கு வழக்கமான தன் வாதங்களை முன்வைத்தாலும், பெரும்பாலும் நீதிமன்றங்கள் வழங்கிய பல்வேறு தீர்ப்புக்களைச் சுட்டிக்காட்டி வாதிட்டுள்ளது. என்னைப் போன்ற மனித உரிமை ஆர்வலர்கள் இந்து போன்ற செய்தித்தாள்களில் வரும் தகவல்களையும் கட்டுரைகளையும் உற்று நோக்குபவர்கள் என்பதும் இங்குக் குறிப்பிட வேண்டும்.
 
ஆனால், 'டேம் 999' தடை குறித்து உச்சநீதிமன்றம் நேற்றைய தினம் வழங்கிய தீர்ப்பு இவ்வாதங்களை எல்லாம் தவிடு பொடியாக்கிவிட்டது எனலாம். 'ஒரு மாநிலத்தின் அச்ச உணர்வுகளைத் தவிர்த்துவிட்டு தனி நபரின் உரிமைகளை நீதிமன்றம் கருத்தில் கொள்ள முடியாது. மாநிலத்தின் அதிருப்தியைப் பார்க்காமல் நாங்கள் கண்களை மூடிக் கொண்டிருக்க முடியாது. இந்த வழக்கு முற்றிலும் சட்டம் சார்ந்தது என்றாலும், மக்களின் உணர்வுகளுக்கு நாங்கள் மதிப்பளிக்க வேண்டும்' என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறி தடையை நீக்க மறுத்துள்ளனர். இது 'விஸ்வரூபம்' தடைக்கான நியாயத்தை அளிக்கிறது. ஏனெனில், இப்படத்தைப் பார்த்த முஸ்லிம் தலைவர்கள் ஒட்டுமொத்தமாக இப்படத்தைத் திரையிட விட மாட்டோம் என்று கூறியுள்ளது கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அரசியலுக்கு அப்பாற்பட்டு முஸ்லிம் தலைவர்கள் அச்சமூகத்தின் ஒட்டுமொத்த குரல் என்பதை யாரும் மறுக்கவியலாது.
 
சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி இப்படம் தடை செய்யப்பட்டதைப் பலரும் விமர்சிக்கின்றனர். இது முற்றிலும் உண்மை என்று எடுத்துக் கொள்ளாவிட்டாலும், அமெரிக்க திரைப்படத்தை எதிர்த்து சென்னையில் நடந்த முஸ்லிம்களின் போராட்டம் சற்றே அரசை அச்சுறுத்தி உள்ளது.  இப்போராட்டத்தைக் கட்டுப்படுத்த தவறியதால் சென்னை மாநகர காவல் ஆணையர் திரிபாதி அப்பொறுப்பில் இருந்து உடனடியாக மாற்றப்பட்டதை இங்கு இணைத்துப் பார்க்க வேண்டும். அதோடுமட்டுமல்லாது, இப்படத்திற்கு எதிர்ப்பு வலுத்தவுடனேயே தமிழக அரசு நேற்றைய முன்தினம் தமிழகம் எங்கும் காவல்துறையை 'அலர்ட்' செய்ததும், கிராம நிர்வாக அதிகாரிகளை அந்தந்த ஊர்களில் இருக்குமாறு பணித்ததும் இங்கு கவனிக்கப்பட வேண்டியது. ஏனெனில், இதுபோன்ற உணர்ச்சிபூர்வமானப் பிரச்சனைகள் எளிதில் போராட்டமாகப் பற்றி எறியும் வாய்ப்புள்ளதையும் புறந்தள்ள முடியாது.
 
மேலும், முழுவதும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து படம் எடுக்க முடியாது என்றாலும், ஒரு சமூகத்திற்கு எதிராக கருத்து கூறுவதன் மூலம் சமூக நல்லிணக்கத்திற்குப் பங்கம் விளைவிப்பது என்பது சட்டப்படி குற்றமென்றாலும், அவ்வாறான சூழலை உருவாக்குவது ஒரு கலைஞனின் நோக்கமாக இருக்கக் கூடாது. இதை சமூக அக்கறையுடைய படைப்பாளிகள் எனக்கூறிக் கொள்பவர்கள் செய்ய துணியமாட்டார்கள்.   
 
அதையும் தாண்டி, ஜெயலலிதாவின் அரசியல் இதில் உற்று நோக்கப்பட வேண்டியது. சென்ற சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் அதிமுகவை ஆதரித்தன. முஸ்லிம் வாக்குகள் பெரும்பான்மையாக அதிமுக கூட்டணிக்கே விழுந்தது. இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கூட்டணியை ஆதரிக்கப் போவதில்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளது நுட்பமான தேர்தல் அரசியல் தந்திரம். ஒருபுறம் மோடி பதவியேற்பில் கலந்துக் கொள்வதன் மூலம் இந்துத்துவ முகம், மறுபுறம் முஸ்லிம்கள் பிரச்சனைகளில் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதன் வாயிலாக சிறுபான்மையினர் ஆதரவு எனும் மற்றொரு முகம் என அழகாகக் காய் நகர்த்துகிறார் என்றே சொல்லலாம்.
 
இவை எல்லாம் ஒருபுறம் இருந்தாலும், நான் ஏற்கனவே சொன்னது போல், எதற்கும் தடை தீர்வல்ல என்ற போதிலும், கமலஹாசனின் முந்தைய கால இந்துத்துவ அரசியல், குடியரசு தினத்திற்கு முன்நாள் வெளியிடுவதன் மூலம் இந்துத்துவத்துடன் இயைந்த தேசப்பக்தி, முஸ்லிம் மக்களுக்கு எதிராக உள்ள பொதுப்புத்தி அரசியலை அறுவடை செய்தல் என எல்லாவற்றையும் காசாக்கும் யுத்தி இம்முறை தோல்வி அடைந்துள்ளது. இதற்கு முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சி மிக அடிப்படையான காரணமாக அமைந்துள்ளது.

செவ்வாய், 22 ஜனவரி, 2013

90% சாதி அடிப்படையில் வாக்களிக்கின்றனர்: மார்க்கண்டேய கட்ஜூ கவலை!

டெல்லி: நாட்டில் 90% பேர் சாதி அடிப்படையில் வாக்களிக்கும் போக்கு இருப்பது கவலை அளிக்கிறது என்று உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும் இந்திய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், தேர்தலில் 90% பேர் சாதி அடிப்படையில் மட்டுமே வாக்களிக்கின்றனர். இதனால் குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதிகள்கூட தேர்தலில் வென்றுவிடுகின்றனர். இப்படி செய்பவர்கள் படிப்பறிவில்லாதவர்கள் மட்டுமல்ல.. படித்தவர்களும் கூட இப்படித்தான் சாதி பார்த்து ஓட்டுப் போடுகின்றனர். எனது நீதிமன்ற அனுபவத்தில், அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்களே சாதி அடிப்படையில் வாக்களிக்கும் நிலையை கண்டிருக்கிறேன். இதேபோல் சில கல்லூரி பேராசிரியர்களும்கூட இந்த தவறை செய்கின்றனர். இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இது தொழில் சார்ந்த சமூகத்தை கொண்டது. பிரபுத்துவ முறையை நாம் பின்பற்றவில்லை. இதுபற்றி அனைவரும் சிந்திக்க வேண்டும் என்றார் அவர்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/01/22/india-markandey-katju-says-90-people-vote-on-caste-lines-168388.html

சனி, 19 ஜனவரி, 2013

சகோதரி றிஸானாவின் மரணம் தண்டனையிலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள்


சகோதரி றிஸானாவின் மரணம் தண்டனையிலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள்
உரை: எம். எல்.முபாரக் (மதனி); தொகுப்பு: பி. எம். எம். . காதர்
கடந்த 2013-01-09 புதன் கிழமை சஊதி அரேபியாவில் சகோதரி றிஸானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து உலகம் முழுக்கவும் பல விமர்சனங்களும் வாதப் பிரதிவாதங்களும் எழுந்துள்ளன
இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் என்றவகையில் நாம் பெறவேண்டிய படிப்பினைகள் நிறைய உள்ளன
அவற்றில் சில:
1. சஊதி அரேபியாவின் நீதித்துறை :
சஊதி அரேபியாவின் நீதித் துறையைப் பொறுத்தவரை அல்குர்ஆன் சுன்னாவை அடிப்படையாக வைத்தே தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டுமென்பது அங்குள் சட்டமாகும். அதேவேளை அங்கு நீதித் துறை சுயாதீனமானது. அதில் யாரும் தலையிடவோ செல்வாக்குச் செலுத்தவோ முடியாது. இதற்கு றிஸானாவின் விவகாரம் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. அவ்வாறே 2002 காலப்பகுதியில் சஊதி அரேபியா றியாத் பிரதேசத்தில் இளவரசர் நாயிப் பின் சஊத் (15 வயது ) தனது சமவயதுடைய ஒரு நண்பரைக் கொலை செய்தபோது இளவரசருக்கு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது. சுமார் ஒன்றரை வருடங்கள் அரச குடும்பம் கொலை செய்யப்பட்டவரின் பெற்றோருடன் பேச்சுவாhத்தையில் ஈடுபட்டது. இறுதிவரை அவர்கள் மன்னிக்க முன்வராதபோது இளவரசர் நாயிபுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்காக உரிய இடத்திற்கு அழைத்துச்சென்றுஇ தண்டனை நிறைவேற்றுவதற்காக தயாரனவேளை கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் அமீர் நாயிப் அல்குர்ஆனை முழுக்க மனனம் செய்வதாக வாக்களித்தால் தாம் அவரை மன்னிப்பதாகக் கூறினர். இது போன்று பல நிகழ்வுகள் சஊதியில் இடம்பெற்றுள்ளன. இவை சஊதியின் நீதித்துறையின் சுதந்திரமான நிலையையே எடுத்துக்காட்டுகின்றன.
சஊதி நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகளின் நிலை:
சஊதியில் ஷரீஆஇ கழாஉ (இஸ்லாமிய சட்டத்துறை) கற்கை பட்டதாரிகளே நீதிபதிகளாக உள்ளனர். வாதிகள் மற்றும் பிரதிவாதிகளின் வாதங்கள் முன்வைக்கப்படும் ஆதாரங்களை ஆய்வு செய்தபின் இஸ்லாமிய சட்டத்துறையை அடிப்படையாக வைத்தே தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. நீதியான அல்லாஹ்வுக்குப் பொருத்தமான தீர்ப்பை வழங்கவே நீதிபதிகள் முயற்சிக்கின்றனர் என்பதை அங்குள்ள நீதித்துறையைப் பற்றி அறிந்தவர்கள் புரிந்து கொள்வர்
நபி (ஸல்) அவர்களே தீர்ப்புகள் வழங்கம்போது வாதிகளிடம்இ  என்னிடம் தீர்ப்புக்கேட்டு வருவோர் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். உங்களது வாதங்கனின் வலிமையை வைத்தே நான் தீர்ப்பு வழங்குகிறேன். என்று கூறியதிலிருந்து நீதிபதி தன்னால் முடியுமானவரை சரியான தீர்ப்பையே வழங்குவார் என்பதையும் சிலவேளை வாதிகளின் வாதத்திறமையால் பிரதிவாதிகள் யதார்த்தத்தில் அநீதிக்கு உள்ளாகலாம் என்பதையும் பரிந்துகொள்ள முடிகிறது
றிஸானாவின் தீர்ப்பின் நிலை :
 றிஸானா கடைசிவரை தான் அந்தக்கொலையைச் செய்யவில்லை என வாதாடியது அனைவரும் அறிந்ததே. (இதன் உண்மை நிலையை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்.) ஆனால் றிஸானாவின் வழக்கை விசாரித்த நீதிபதிகள் 'குழந்தை கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டிருப்பதை மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது' என்று கூறுகின்றனர். குற்றம் சுமத்தப்பட்டவருக்கு எதிராக ஆதாரங்கள் இருக்கும்போது அவரது வாக்குமூலமோ அல்லது அவர் செய்யும் சத்தியமோ எடுபடாது என்பது இஸ்லாமிய நீதித்துறையின் மிக முக்கியமான ஒரு அம்சமாகும்.
றியாத்திலுள்ள இலங்கைத்தூதுவராலயத்திலிருந்து சட்டத்துறை அதிகாரிகள் இவ்வழக்கு விசாரணையின்போது பங்கெடுத்ததாக சஊதிய ஊடகங்கள் சில எழுதியுள்ளன. (இதுபற்றிய தெளிவை இலங்கை அரசே முன்வைக்க வேண்டும்). இந்த நிலையில் ஆதாரங்களற்ற விமர்சனங்களில் ஈடுபடாமல் இருப்பதே இஸ்லாமியப் பண்பாகும்.
 
2- வேலை வாய்ப்புக்காகப் பெண்கள் வெளிநாடு செல்வது:

வேலை
வாய்ப்புக்காகப் பெண்கள் வெளிநாடு செல்வதை இஸ்லாம் தடைசெய்துள்ளது என்பது கருத்து வேறுபாட்டுக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயமாகும். ஹராம் என்பதோடு இவ்வாறான பெண்கள் உடல், உள பண்பாட்டு ரீதியாக பல்வேறு மோசமான விழைவுகளைச் சந்தித்துவருகின்றனர் என்பது மிகத்தெளிவாகத் தெரிந்த விஷயம். எனவே முஸ்லிம்கள் தமது பெண்களை இனிமேலாவது வெளிநாடுகளுக்கு அனுப்பாமல் இருப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சமுதாயத் தலைவர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள் அனைவரும் சேர்ந்து இவ்விடயத்தில் முடிவெடுக்கவேண்டும். குறிப்பாக ஜம்இய்யதுல் உலமா இதுபற்றிய காத்திரமான முடிவை முஸ்லிம்களுக்கு அறிவிக்க வேண்டும்.
 
3. வளைகுடா நாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்:
வளைகுடா நாடுகளில் தொழில்புரியும் இலங்கையர் நாளாந்தம் பல்வேறு அநீதிகளைச் சந்தித்துவருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். தொழில் வழங்குனர்களால் மட்டுமல்ல அரச அதிகாரிகளாலும் சிலவேளை அநீதிக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இதுபற்றி இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைத் தூதுவராலயங்கள் தமது கடமைகளை சரியாக நிறைவேற்றுவதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும்.
 
4- [அல்லாஹ் நாடினாலன்றி] உலகமே ஒன்று சேர்ந்தாலும் யாருக்கும் நன்மையோ, தீங்கோ செய்ய முடியாது. 
றிஸானாவின் மரண தண்டனை சொல்லும் ஒரு மகத்தான செய்தி இது.

Regards,
Shadhuly A. Hassan