புதன், 30 ஜனவரி, 2013

சமூக நீதி காத்த வீராங்கனை'க்கு நன்றி! நன்றி!! நன்றி!!!

காவி நாயகன் கமல் கைவண்ணத்தில் வெளியாகியுள்ள சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் விஷரூபம் படத்திற்கு எதிராக ஆரம்பம் முதலே தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.

இஸ்லாமியர்கள் மட்டுமன்றி இந்திய இறையானமையையும் இழிவுபடுத்தி கமல் எடுத்துள்ள விஷரூபத்தை தடை செய்யவேண்டும் என்று முஸ்லிம் இயக்க கூட்டமைப்பு சார்பாக அதன் தலைவர்கள் கமிஷனர் மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோரிடம் மனு அளித்தனர் கடந்த 25 ஆம் தேதி விஷரூபம் விஸ்வரூபம்  வெளியாக இருந்த நிலையில் தமிழக மாவட்ட ஆட்சியர்கள் 15 நாட்கள் தடை வித்து 144 தடை விதித்தனர். இதனால் அதிர்ந்த காவி நாயகன் கமல், சென்னை உயர்நீதிமன்றம் சென்றார். அங்கே தமிழக் அரசு விதித்த தடைக்கெதிராக தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்றார். உடனடியாக இன்று (30.1.2013) தமிழகமெங்கும் தனது விஷரூபத்தை வெளியிடலாம் என நினைத்து களமிறங்கியபோது, மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உத்தரவின் பேரில் தமிழக அரசு வழக்கறிஞர்  உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து எதிர்வரும் 6.2.2013 வரை தடை நீட்டிப்பு உத்தரவு பெற்றார். இதன் மூலம் முதல்வர் ஜெயலலிதா அவர்கள், தான் ஒரு சமூக நீதி காத்த வீராங்கனை என்று மீண்டும் நிரூபித்துள்ளார்.

நேற்று நள்ளிரவில் தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்ற காவி நாயகன், முதல்வரின் இந்த சமயோசித முடிவால் தனது படம் விக்கிரமாதித்தன் கதையாக தடை நீள்வதை கண்டு ஆடிப்போய் உள்ளார். உச்சநீதிமன்றம் செல்வதாக மிரட்டியுள்ளார். காவி நாயகன் உச்சநீதிமன்றம் கண்டிப்பாக செல்லவேண்டும் என்றே நாமும் விரும்புகிறோம். அங்கும் தமிழ்க முதலவர் விஷரூபத்திற்கு எதிராக வென்று காட்டுவார் (இறைவன் நாடினால்) என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. டேம் 999 படத்திற்கு தமிழகத்தில் ஏற்பட்ட நிலை காவி நாயகனின் படத்திற்கும் ஏற்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது தமிழக முதல்வரின் உறுதியில் தெரிகிறது. தமிழக முதல்வரின் சமூக நல்லிணக்க நடவடிக்கைக்கு ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் பின்னே அணிவகுக்கும் என்று கூறிக்கொள்கிறேன்.

இவண்;
அல்லாஹ்வின் அடிமை.,
முகவைஅப்பாஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக