செவ்வாய், 29 ஜனவரி, 2013

ஆப்கான் அல்காயிதா பயங்கரவாதிகளுக்கு(?) இந்திய ''ரா'' அதிகாரி பயிற்சி அளித்தார் என்று ஒப்புக் கொள்கிறதா சென்னை உயர்நீதிமன்றம்...?


ஆப்கான் அல்காயிதா பயங்கரவாதிகளுக்கு(?) இந்திய ''ரா'' அதிகாரி பயிற்சி அளித்தார் என்று ஒப்புக் கொள்கிறதா சென்னை உயர்நீதிமன்றம்...?
இஸ்லாமியர்களின் புனித நூலாகவும் உலகப் பொதுமறையாகவும் விளங்கக் கூடிய திருக்குரானை இழிவுபடுத்தி, முஸ்லிம்களின் தொழுகை உள்ளிட்ட அமல்களை தீவிரவாதத்தின் பக்கவாத்தியங்களாக காட்டியதோடு, ஒட்டுமொத்த இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் என்ற  கருத்தை விதைக்கும் ஒரு படத்தை காவியின் நாயகன் கமலஹாசன் எடுக்கிறார். அந்தப் படத்தைப் பார்த்த முஸ்லிம்கள் கூட்டமைப்பு தலைவர்கள் நினைத்திருந்தால் ஜனநாயகத்தை தூக்கி வீசிவிட்டு ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் இந்த கூட்டமைப்பின் அடலேறுகள்  கமல்ஹாசனின் வீட்டை தூள் தூளாக்கியிருப்பார்கள். அப்படி எங்களை இஸ்லாம் வார்த்தெடுக்கவில்லை. எனவே ஜனநாயக முறைப்படி முஸ்லிம் தலைவர்கள் காவல்துறை உயரதிகார்கள், தலைமைச் செயலக அதிகாரிகள் என முறையாக மனு செய்தார்கள். அரசும் முஸ்லிம்களின் உணர்வுக்கு மதிப்பளித்து காவி நாயகனின்  படத்தை தடை செய்தது.

பார்த்தார் காவி நாயகன். முஸ்லிம்கள் எங்கே சென்றால் வஞ்சிக்கப் படுவார்களோ அந்த நீதிமன்றம் சென்றார் தடையை நீக்கக் கோரினார். நீதிபதியும் நான் படத்தை பார்த்து விட்டு தான் தீர்ப்பளிப்பேன்  என்றார். படமும் பார்த்தார். சில நாட்கள் தள்ளிவைத்தார் கமலை சுமூகமாக செல்வதற்கு முயற்சியுங்கள் என்றார். இவ்வாறன நிலையில் இப்படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழில் முறைகேடு நடந்துள்ளது என்று  அரசும் வாதிட்டது. தனது படத்தை விற்ற பின்னால் அதுபற்றி வழக்கு தொடுக்க காவி நாயகனுக்கு அதிகாரமில்லை என்று ஆணித்தரமாக வாதிட்டது. எல்லாவற்றையும் செவியேற்ற நீதிபதி, இதோ தீர்ப்பு....அதோ தீர்ப்பு என இரவு பத்து மணிக்கு மேல் காவி நாயகனுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்குகிறார். அதுவும் தமிழக அரசுக்கு மேல் முறையீடு செய்ய கூட அவகாசம் அளிக்காமல் உடனடியாக படத்தை திரையிட அனுமதி அளிக்கிறார். 

இன்று இந்திய  நேரப்படி சுமார் 10;45 மணியளவில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவரால் ''சமநீதி'' படுகோரமாக கொலை செய்யப்பட்டது. கொலை செய்யப்பட்டது நீதி மட்டுமல்ல; இந்தியாவின் மதசார்பின்மை நம்பிக்கையும் தான்!


அன்பான முஸ்லிம் சகோதர்களே! துப்பாக்கி படத்தில் சில காட்சிகளை மட்டுமே நீக்கச் சொன்னோம் நமது கருத்துக்கு மதிப்பளித்து அப்படத்தின் தயாரிப்பாளரும்  இயக்குனரும் சில  காட்சிகளையாவது நீக்கினார்கள். ஆனால் இந்த காவி நாயகனின் படத்தை  முழுமையாக தடை செய்யச் சொன்னோம். ஆனால் படம் பார்த்த நீதிபதி[?] ஒரு பிரேம் கூட நீக்கச் சொல்லாமல் அப்ப்படியே வெளியிட அனுமதி வழங்கியுள்ளார் என்றால் இந்த தீர்ப்பிற்குப் பின்னால் என்ன ஒளிந்துள்ளது  என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சென்சார் போர்டு அனுமதி வழங்கிய  பின்னும் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து  டேம் 999 படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை உச்சநீதிமன்றம் உறுதி செய்கிறது ஆனால் முஸ்லிம்களின் உணர்வுக்கு மதிப்பளித்து தமிழக அரசு காவி நாயகனின் படத்திற்கு விதித்த தடையை நீக்கியதன் மூலம்   உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை  சென்னை உயர்நீதிமன்றம்  புறந்தள்ளியுள்ளது.

சரி முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு நீதிமன்றம் மதிப்பளிக்காவிட்டாலும் ஒரு இந்தியானாக யோசித்திருந்தால் கூட இந்த படத்தை  அனுமதித்திருக்காது. ஆப்கானிஸ்தான் அல்காயிதா மற்றும் தாலிபான் பயங்கரவாதிகளுக்கு[!] இந்தியாவின் உயரிய ''ரா'' பிரிவு அதிகாரி பயிற்சி அளிப்பதாக காவி நாயகன் காட்சி அமைத்துள்ளாரே!  இதை நீதிமன்றம் ஏற்கிறதா?  சர்வதேச பயங்கரவாதி[!] முல்லா உமர் கோவையிலும் மதுரையிலும் ஓராண்டுக்கு  மேலாக பதுங்கி இருந்தார் என்று காவி நாயகன் காட்சி வைத்துள்ளாரே! அப்படியாயின் இந்திய ராணுவமும தமிழக காவல்துறையும்  செயலிழந்து விட்டது என்று நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறதா? ஆக முடிவு செய்யப்பட்ட தீர்ப்பை முன்பே கொடுத்து விட்டு போயிருக்கலாமே!

அன்பான முஸ்லிம்களே!

தமிழக அரசு இடைக்கால தடை விதித்தபோது இதில் ஏதேனும் இரட்டை நாடகம் இருக்குமோ என்ற ஒரு சிறு சந்தேகம் இருந்தது ஆனால் நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் அவர்கள் வாதித்த விதத்தை பார்க்கும் போது, உண்மையில் தமிழக அரசு  குறிப்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இந்த படத்தை வெளியிட விதித்த தடை என்பது உண்மையானது என்று புலப்படுகிறது. எனவே தமிழக அரசுக்கு நாம் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறோம். அதே நேரத்தில் தமிழக அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து  உச்சநீதிமன்றம் வரை சென்று மேல்முறையீடு செய்து டேம் 999 படத்திற்கு ஏற்பட்ட  முடிவை காவி நாயகனின் படத்திற்கும் எட்ட முயற்சிக்க வேண்டும்.  அப்போதுதான் தமிழக அரசின் மீது முஸ்லிம்களுக்கு முழுமையான நம்பிக்கை பிறக்கும்.

அன்பான முஸ்லிம்களே!

காவி நாயகனின் படத்திற்கு தடை  நீங்கியுள்ள நிலையில், கூட்டமைப்புத் தலைவர்கள் அறிவுரையின் அடிப்படையில் களமிறங்குங்கள். இந்தியா நம்நாடு என்ற சிந்தனையோடு.

எங்கள் இறைவா! அநீதிக்கு எதிராக எங்கள் பாதங்களை உறுதிப் படுத்துவாயாக! இன்னும் உன் புறத்திலிருந்து அறியாப்புற உதவிகளையும் எங்களுக்கு நல்கிடுவாயாக!!

இவண்;

அல்லாஹ்வின் அடிமை

முகவைஅப்பாஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக