சனி, 19 ஜனவரி, 2013

சகோதரி றிஸானாவின் மரணம் தண்டனையிலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள்


சகோதரி றிஸானாவின் மரணம் தண்டனையிலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள்
உரை: எம். எல்.முபாரக் (மதனி); தொகுப்பு: பி. எம். எம். . காதர்
கடந்த 2013-01-09 புதன் கிழமை சஊதி அரேபியாவில் சகோதரி றிஸானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து உலகம் முழுக்கவும் பல விமர்சனங்களும் வாதப் பிரதிவாதங்களும் எழுந்துள்ளன
இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் என்றவகையில் நாம் பெறவேண்டிய படிப்பினைகள் நிறைய உள்ளன
அவற்றில் சில:
1. சஊதி அரேபியாவின் நீதித்துறை :
சஊதி அரேபியாவின் நீதித் துறையைப் பொறுத்தவரை அல்குர்ஆன் சுன்னாவை அடிப்படையாக வைத்தே தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டுமென்பது அங்குள் சட்டமாகும். அதேவேளை அங்கு நீதித் துறை சுயாதீனமானது. அதில் யாரும் தலையிடவோ செல்வாக்குச் செலுத்தவோ முடியாது. இதற்கு றிஸானாவின் விவகாரம் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. அவ்வாறே 2002 காலப்பகுதியில் சஊதி அரேபியா றியாத் பிரதேசத்தில் இளவரசர் நாயிப் பின் சஊத் (15 வயது ) தனது சமவயதுடைய ஒரு நண்பரைக் கொலை செய்தபோது இளவரசருக்கு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது. சுமார் ஒன்றரை வருடங்கள் அரச குடும்பம் கொலை செய்யப்பட்டவரின் பெற்றோருடன் பேச்சுவாhத்தையில் ஈடுபட்டது. இறுதிவரை அவர்கள் மன்னிக்க முன்வராதபோது இளவரசர் நாயிபுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்காக உரிய இடத்திற்கு அழைத்துச்சென்றுஇ தண்டனை நிறைவேற்றுவதற்காக தயாரனவேளை கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் அமீர் நாயிப் அல்குர்ஆனை முழுக்க மனனம் செய்வதாக வாக்களித்தால் தாம் அவரை மன்னிப்பதாகக் கூறினர். இது போன்று பல நிகழ்வுகள் சஊதியில் இடம்பெற்றுள்ளன. இவை சஊதியின் நீதித்துறையின் சுதந்திரமான நிலையையே எடுத்துக்காட்டுகின்றன.
சஊதி நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகளின் நிலை:
சஊதியில் ஷரீஆஇ கழாஉ (இஸ்லாமிய சட்டத்துறை) கற்கை பட்டதாரிகளே நீதிபதிகளாக உள்ளனர். வாதிகள் மற்றும் பிரதிவாதிகளின் வாதங்கள் முன்வைக்கப்படும் ஆதாரங்களை ஆய்வு செய்தபின் இஸ்லாமிய சட்டத்துறையை அடிப்படையாக வைத்தே தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. நீதியான அல்லாஹ்வுக்குப் பொருத்தமான தீர்ப்பை வழங்கவே நீதிபதிகள் முயற்சிக்கின்றனர் என்பதை அங்குள்ள நீதித்துறையைப் பற்றி அறிந்தவர்கள் புரிந்து கொள்வர்
நபி (ஸல்) அவர்களே தீர்ப்புகள் வழங்கம்போது வாதிகளிடம்இ  என்னிடம் தீர்ப்புக்கேட்டு வருவோர் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். உங்களது வாதங்கனின் வலிமையை வைத்தே நான் தீர்ப்பு வழங்குகிறேன். என்று கூறியதிலிருந்து நீதிபதி தன்னால் முடியுமானவரை சரியான தீர்ப்பையே வழங்குவார் என்பதையும் சிலவேளை வாதிகளின் வாதத்திறமையால் பிரதிவாதிகள் யதார்த்தத்தில் அநீதிக்கு உள்ளாகலாம் என்பதையும் பரிந்துகொள்ள முடிகிறது
றிஸானாவின் தீர்ப்பின் நிலை :
 றிஸானா கடைசிவரை தான் அந்தக்கொலையைச் செய்யவில்லை என வாதாடியது அனைவரும் அறிந்ததே. (இதன் உண்மை நிலையை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்.) ஆனால் றிஸானாவின் வழக்கை விசாரித்த நீதிபதிகள் 'குழந்தை கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டிருப்பதை மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது' என்று கூறுகின்றனர். குற்றம் சுமத்தப்பட்டவருக்கு எதிராக ஆதாரங்கள் இருக்கும்போது அவரது வாக்குமூலமோ அல்லது அவர் செய்யும் சத்தியமோ எடுபடாது என்பது இஸ்லாமிய நீதித்துறையின் மிக முக்கியமான ஒரு அம்சமாகும்.
றியாத்திலுள்ள இலங்கைத்தூதுவராலயத்திலிருந்து சட்டத்துறை அதிகாரிகள் இவ்வழக்கு விசாரணையின்போது பங்கெடுத்ததாக சஊதிய ஊடகங்கள் சில எழுதியுள்ளன. (இதுபற்றிய தெளிவை இலங்கை அரசே முன்வைக்க வேண்டும்). இந்த நிலையில் ஆதாரங்களற்ற விமர்சனங்களில் ஈடுபடாமல் இருப்பதே இஸ்லாமியப் பண்பாகும்.
 
2- வேலை வாய்ப்புக்காகப் பெண்கள் வெளிநாடு செல்வது:

வேலை
வாய்ப்புக்காகப் பெண்கள் வெளிநாடு செல்வதை இஸ்லாம் தடைசெய்துள்ளது என்பது கருத்து வேறுபாட்டுக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயமாகும். ஹராம் என்பதோடு இவ்வாறான பெண்கள் உடல், உள பண்பாட்டு ரீதியாக பல்வேறு மோசமான விழைவுகளைச் சந்தித்துவருகின்றனர் என்பது மிகத்தெளிவாகத் தெரிந்த விஷயம். எனவே முஸ்லிம்கள் தமது பெண்களை இனிமேலாவது வெளிநாடுகளுக்கு அனுப்பாமல் இருப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சமுதாயத் தலைவர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள் அனைவரும் சேர்ந்து இவ்விடயத்தில் முடிவெடுக்கவேண்டும். குறிப்பாக ஜம்இய்யதுல் உலமா இதுபற்றிய காத்திரமான முடிவை முஸ்லிம்களுக்கு அறிவிக்க வேண்டும்.
 
3. வளைகுடா நாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்:
வளைகுடா நாடுகளில் தொழில்புரியும் இலங்கையர் நாளாந்தம் பல்வேறு அநீதிகளைச் சந்தித்துவருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். தொழில் வழங்குனர்களால் மட்டுமல்ல அரச அதிகாரிகளாலும் சிலவேளை அநீதிக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இதுபற்றி இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைத் தூதுவராலயங்கள் தமது கடமைகளை சரியாக நிறைவேற்றுவதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும்.
 
4- [அல்லாஹ் நாடினாலன்றி] உலகமே ஒன்று சேர்ந்தாலும் யாருக்கும் நன்மையோ, தீங்கோ செய்ய முடியாது. 
றிஸானாவின் மரண தண்டனை சொல்லும் ஒரு மகத்தான செய்தி இது.

Regards,
Shadhuly A. Hassan
 
 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக