வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

அன்புள்ள முதல்வருக்கு....

அன்புள்ள முதல்வருக்கு....
உங்களின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தின் அப்பாவி முஸ்லிம் சகோதரன் எழுதிக்கொள்வது.
நேர்வழியைப் பின்பற்றுபவர்கள் மீது சாந்தி உண்டாகட்டுமாக!

முதல்வர் அவர்களே..!
ரமலான் மாதம் வந்து விட்டால் முஸ்லிம் இயக்கங்களில் சிலர் இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தங்களின் கூட்டணியில் உள்ள அல்லது தாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களை அழைத்து நோன்பு திறக்க[!?] செய்த நிலையில், நான் அறிந்தவரைக்கும் இந்த நடைமுறையை மாற்றும் வகையில் நீங்கள் 1996 ஆம் அண்டு என்று நினைக்கிறேன். உங்கள் கட்சியின் சார்பாக முதன் முதலாக இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து உங்கள் கூட்டணியில் உள்ள முஸ்லிம் கட்சியினரை அழைத்தீர்கள். இது ஒரு மாற்றம் தான் என்றாலும் இரண்டுக்கும் வேறுபாடு எனக்குத் தெரியவில்லை. 

இந்நிலையில் வழமைபோல் இந்த ஆண்டும் உங்கள் கட்சி சார்பாக உங்கள் தலைமையில் இப்தார் நிகழ்ச்சியை நடத்தி முடித்துள்ளீர்கள். இந்த நிகழ்ச்சியில் பேசிய நீங்கள், ''மதத்தின் மீது பற்று வைத்தல், குர்ஆன் ஓதுதல், நோன்பிருத்தல், இரவலர்க்கு தர்மம் செய்தல், புனித யாத்திரை மேற்கொள்ளுதல் ஆகிய 5 கடமைகளில் ஒன்றான நோன்பிருத்தலை இந்தப் புனித மாதத்தில் மேற்கொண்டிருக்கும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது ரம்ஜான் நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று பேசியுள்ளீர்கள்.

இஸ்லாம் என்பது ஐந்து கடமைகள் மீது நிறுவப்பட்டுள்ளது என்பது உண்மைதான். அதில்  நீங்கள் சொல்வது போல் நோன்பு- ஹஜ் எனும் புனிதப் பயணம் ஆகியவை இந்த ஐந்தில் உள்ளடங்கியது தான் என்றாலும் நீங்கள் சொல்லிய ஏனைய மூன்று விசயங்கள் இந்த ஐந்துக்குள் வருவதல்ல. அவை உபரியான கடமையாகும். இந்த ஐந்துக்குள் வரும் ஏனைய மூன்று விஷயங்கள்; கலிமா எனும் சாட்சி கூறல். (அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை என்றும் நபி முஹம்மது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சியம் கூறல்) இரண்டவதாக தொழுகை எனும் இறைவணக்கம். மூன்றவதாக ஜகாத் எனும் ஏழை வரியாகும். இந்த மூன்றுடன் நீங்கள் கூறிய நோன்பு மற்றும் ஹஜ் பயணம் ஆக இந்த ஐந்துதான் இஸ்லாமிய அடிப்படைக் கடமையாகும் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இது உங்களுக்கான விளக்கம் தானேயன்றி உங்கள் மீதான விமர்சனம் அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

மேலும், இன்றைய தமிழக அரசியல் தலைவர்களில் நீங்கள் ஓரளவு இஸ்லாத்தின் கருத்தை பிரதிபலிக்கும் வகையில் அறிக்கைகளில் சில வாசகங்களை சேர்ப்பதை நான் படித்திருக்கின்றேன். அதில் ''எல்லாம்வல்ல இறைவன்' என்ற வார்த்தையும் ஒன்றாகும். இறைவன் அனைத்திற்கும் ஆற்றலுடையவன் என்ற இஸ்லாத்தின் கருத்தை நீங்கள் வழிமொழியும் வகையில் ''எல்லாம் வல்ல இறைவன்'' என்று நீங்கள் கூறினாலும் அந்த எல்லாம் வல்ல இறைவனை ஒருமைப் படுத்தும் இஸ்லாமிய மார்க்கத்திற்கு உங்களை அழைப்பதில் உவகை கொள்கிறேன்.  அதே போல் சட்டமன்றத்தில் உங்கள் அமைச்சர்களில் ஒருவர், ''முஸ்லிம்கள் நபிகள் நாயகத்தை வணங்குகிறார்கள்'' என்று பேசியபோது, நீங்கள் குறுக்கிட்டு ''முஸ்லிம்கள் நபிகள் நாயகத்தை வணங்கவில்லை; அவர்கள் அல்லாஹ்வை வணங்குகிறார்கள்'' என்று திருத்திய செய்தி, நீங்கள் இஸ்லாத்தை அறிய முற்பட்டு சில விசயங்களை அறிந்தும் இருக்கிறீர்கள். அதில் ஒன்றுதான் முஸ்லிம்கள் இறைவனையன்றி வேறு யாரையும் குறிப்பாக நபிகள் நாயகத்தைக் கூட வணங்க மாட்டார்கள் என்ற செய்தி. அப்படி நீங்கள் அறிந்துள்ள சர்வவல்லமை மிக்க இறைவனின் மார்க்கமாம் இஸ்லாத்திற்கு உங்களை அழைப்பதில் உவகை கொள்கிறேன்.

மேலும், முஸ்லிம்களின் திருப்தியை நீங்கள் பெறுவதற்கு இப்தார் நிகழ்ச்சிகள் எந்தவகையிலும் பயனளிக்காது என்பதையும் உங்களுக்கு அறியத் தருகின்றேன். ஏனெனில் ஆடித்தள்ளுபடியில் ''தள்ளுபடி' போட்டு தங்களின் கைச்சரக்கை காலிசெய்யும் கடைக்காரர்கள் போல், நோன்புக் கஞ்சி கொடுத்து அல்லது குடித்து இவர்கள் நம்மிடம் கைச்சரக்கை திணிக்கப் பார்க்கிறார்கள் அதாவது ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்ற என்னத்தை தான் முஸ்லிம்கள் மனதில் இந்த இப்தார் நிகழ்ச்சிகள் ஏற்படுத்தியுள்ளன. எனவே எல்லோரும் செல்லும் வழியில் நீங்களும் சென்று நோன்புக்கஞ்சி வழங்குவதால் முஸ்லிம்களின் நெஞ்சத்தில் இடம்பிடித்து விடமுடியாது. மாறாக நீங்கள் அரசியல் அனாதையான காலங்களில் எல்லாம் உங்களுக்கு கைகொடுத்து ஆட்சியதிகாரம் வழங்கிய முஸ்லிம்களின் வாக்குவங்கி எப்போதும் உங்கள் கணக்கில் சேமிப்பில் இருக்கவேண்டுமென்றால், அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம்  ஆகியவற்றில் சம உரிமை, சமூக நீதி, பாதுகாப்பு ஆகியவற்றிலும் உரிய கவனம் செலுத்தி செயல்பட வேண்டும் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகின்றேன்.

இறுதியாக, உங்களை சீர்படுத்தவும் உங்கள் ஆட்சியை செம்மையாக்கவும், உங்களின் இவ்வுலக- மறுவுலக நிம்மதியான வாழ்க்கைக்கும் உங்கள் முன்னால் இருக்கும்  ஒரே அழகிய வழியாக திகழும் இஸ்லாத்தின் பக்கம் உங்களை மீண்டும் அழைப்புவிடுத்து முடிக்கிறேன்.

இவன்.,
உங்களின் நலன் நாடும்..
இஸ்லாமிய சகோதரன்.


வங்கதேச வாக்காளர்களை காட்டத் தயாரா? ராஜ்தாக்கரேயிக்கு ஆஸ்மி சவால்.

ந்துத்துவாவாதிகளுக்கு கொள்கை என்ற ஒன்று எப்போதுமே இருந்ததில்லை. தேசியம் என்பார்கள் அந்த தேசியத்தின் ஒரு அங்கமான முஸ்லிம்களை கருவருப்பார்கள். தீவிரவாதத்தை ஒழிப்போம் என்பார்கள் ஆனால் மாலேகான் போன்று குண்டுவைத்து அவர்களே தீவிரவாதிகளாகவும் காட்சிதருவார்கள். ராமராஜ்ஜியம் என்பார்கள் தேர்தல் முடிந்தவுடன் ராமரை, அடுத்த தேர்தல்வரை வனவாசம் அனுப்பிவிடுவார்கள். இந்துக்கள் எந்தப்பிரிவாக இருந்தாலும் அவர்களை பாதுகாப்போம் என்பார்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் இந்துக்க்களாக இருந்தால்கூட அவர்களையும் தாக்குவார்கள். சுருங்கசொன்னால் இந்துத்துவா என்றாலே சுயநலம் என்பதே உண்மை. இதை நிரூபிக்கும் வகையில் அவ்வப்போது அவர்கள்செய்யும் நடவடிக்கைமூலம் உலகுக்கு உணர்த்திவிடுவார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் மும்பையில் ரயில்வேத்துறை வேலைவாய்ப்பிற்கான நேர்முகத்தேர்வுக்கு வந்த வட இந்தியர்களையும், மும்பையில் வசித்துவந்த வடஇந்தியர்களையும் மும்பையில் தனிராச்சியம் நடத்திக்கொண்டிருக்கும் ராஜ்தாக்கரேயின் ஆட்கள் அடித்து துவைத்து காயப்போட, விஷயம் பெரியஅளவில் எதிரொலித்தவுடன் ராஜ்தாக்கரே கைதுசெய்யப்பட்டார்.பின்பு, வட இந்தியர்களுக்கு எதிராகப்பேசக்கூடாது என்ற நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். இப்போது அஸ்ஸாமில் முஸ்லிம் இனப்படுகொலை நடந்தேறிக்கொண்டிருக்கும் நிலையில், அதை மறைக்கும் வகையில் அசாமில் வங்கதேசத்திலிருந்து ஊடுருவியவர்களால் தான் வன்முறை நிகழ்கிறது என்றும், அதில் மண்ணின் மைந்தர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அத்வானி ராஜ்தாக்கரே உள்ளிட்ட இந்துத்துவாக்கள் கொக்கரிக்கிறார்கள்.

இந்நிலையில், ராஜதாக்கரேயிக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார் சாம்ஜ்வாடி கட்சியின் தலைவர் அபூ ஆஸிம்.
'' ராஜ்தாக்கரே தனது தொகுதியில் வங்கதேச வாக்காளர்கள் இருப்பதாக கூறுகிறார். அவ்வாறு அவரது  வாக்காளர்களில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்தவர்களை காட்டிவிட்டால் நான் அரசியலில் இருந்து விலகத் தயார். இல்லையேல் அவர் அரசியலில் இருந்து விலகவேண்டும். மேலும் அவரது தொகுதியில் இருந்து பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தவர் ஒரு லட்சம் பேரை காட்டிவிட்டால் அவருக்கு இரண்டு கோடி ரூபாய் பரிசளிக்கப்படும் என்றும் அபூ ஆஸிம் ஆணித்தரமாக கூறியுள்ளார். 

மேலும், என்னை கீழ்த்தரமாக ராஜ்தாக்கரே விமர்சித்துள்ளார். அதே போன்று அவரையும் என்னால் விமர்சிக்கமுடியும். ஆனால் எனது ஒழுக்கம் என்னைத் தடுக்கிறது என்று கூறியுள்ள ஆஸிம், மும்பையில் 21-ம் தேதி ராஜ்தாக்கரே தடையை மீறி பேரணி நடத்தியதை பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அசாமில் முஸ்லிம் இனப்படுகொலையை கண்டித்து அனுமதி பெற்று நடத்திய பேரணியில் சில விசமிகள் செய்த கலவரத்தால் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகினர்.  44 போலீசார் உள்பட 52 பேர் படுகாயம் அடைந்தனர். அதே நேரத்தில் மும்பை வன்முறையை கண்டித்து தடையை மீறி மும்பை கிர்காவ் கடற்கரையில் இருந்து ஆசாத் மைதானம் நோக்கி கண்டன பேரணி நடத்திய ராஜ்தாக்கரே மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இதுதான் இந்திய மதச்சார்பின்மையா என மக்கள் புலம்புகின்றனர். இந்நிலையில் இந்த இந்த்துவா பூனைகளுக்கு யார் மணி கட்டுவது என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில் அபூ ஆஸ்மியின் சவால் உள்ளபடியே ஆறுதல் தருவதாக உள்ளது.

விலைவாசி உயர்வு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது; மத்திய அமைச்சரின் மடத்தனமான பேச்சு!

டந்த ஆட்சியில் தமிழகத்தில் விலைவாசி தாறுமாறாக உயர்ந்தபோது அதுபற்றி வினா ஒன்றுக்கு பதிலளித்த அப்போதைய அமைச்சர் ஒருவர், விலைவாசி மட்டும் உயரவில்லை; மக்களின் வாங்கும் திறனும் உயர்ந்துள்ளது என்றார். அதே போல இப்போது விலைவாசி உயர்வு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்று மத்திய அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. 

மத்திய உருக்குத் துறை மந்திரி பெனிபிரசாத் வர்மா, சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலம் பரபங்கி நகரில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட அவர் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தபோது, ''விலைவாசி உயர்வு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதன் மூலம் விவசாயிகளுக்கு பயன் கிடைக்கும் என்றும் 'பருப்பு, ஆட்டா, அரிசி மற்றும் காய்கறி விலைகள் அதிகரித்து வருகின்றன. விலையேற்றத்தால் விவசாயிகளுக்கு அதிக பயன் கிடைத்து வருகிறது. எனவே இந்த விலை உயர்வால் நான் மகிழ்ச்சி அடைகிறேன்' என்றும், இந்த உண்மையை உணராத பத்திரிகை மற்றும் ஊடகங்கள் கூச்சலிடுவதாகவும், விவசாயிகள் பயன் அடைவதையே அரசு விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

பெனிபிரசாத் வர்மாவின் இந்த கருத்துக்கு பா.ஜனதா-சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. மத்திய அமைச்சரின் இந்த கருத்து அவரது அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக உள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கேற்ப விவசாயிகளின் விளைபொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்பது உச்சகட்ட நகைச்சுவையாகும். அமைச்சரின் கூற்று உண்மையானால் விலைவாசி விண்ணைத்தொடும் நிலையில் உள்ள இந்த காலகட்டத்திலும் உணவுப்பொருட்களின் கொள்முதல் விலையை அரசு உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை விவாசாயிகளால் இன்றைக்கும் எழுப்பப்படுகிறதே அது ஏன் என்று அமைச்சர் சொல்வாரா? விலைவாசி உயர்வுக்கேற்ப விவசாயி லாபமடைகிறான் என்றால் உலக நாடுகளில் விவசாயிகள் தற்கொலையில் இந்தியா முதலிடத்தில் இருப்பது ஏன் என்று அமைச்சர் சொல்வாரா? விலைவாசி உயர்வுக்கேற்ப விவசாயி லாபமடைகிறான் என்றால், லாபம் கொழிக்கும் தொழிலை செய்யும் விவசாயியின் கோடிக்கணக்கான ரூபாய் வங்கிக் கடன்களை மத்திய மாநில அரசுகள் தள்ளுபடி செய்வது ஏன் என்று அமைச்சர் சொல்வாரா? கடையில் ஒரு கிலோ தக்காளி பத்து ரூபாய் விற்கப்படுகிறது என்றால் அதை ஒன்பது ரூபாய்க்கு விவசாயியிடம் கொள்முதல் செய்யப்படுவதில்லை. அதிகபட்சம் நான்கு ரூபாய் அளவுக்கு விவசாயி பயனடைந்தால் அதுவே பெரிய தொகையாகும். 

மேலும், ஒரு உணவுப்பொருள் பரவலாக கூடுதலாக விளைந்துவிடுமானால் அப்பொருளுக்கு சந்தையில் மதிப்பிருக்காது. அப்போது அப்பொருளை விவசாயிகளிடம் இருந்து வாங்குவாரின்றி சீரழியும். அது விவசாயியின் கையைச் சுடும். சந்தையில் ஒரு பொருளுக்கு எப்போது மதிப்பு கூடுதலாகும் என்றால் அப்பொருள் குறைவான விளைச்சலால் பற்றாக்குறை ஏற்படும் போதுதான். உதாரணத்திற்கு காங்கிரசுக்கு மிக மிக அறிமுகமான வெங்காயத்தை சொல்லலாம். வெங்காயம் அதிகமாக விளையும் போது சந்தையில் விலையில்லை. அப்போதும் அந்த அதிகப்படியான விளைச்சலால் விவசாயிக்கு பயனில்லை. சந்தையில் நல்லவிலை இருக்கும்போது வெங்காயம் விளைச்சலில்லை. அதனாலும் விவசாயி பலனடையவில்லை. எனவே சந்தை மதிப்பை வைத்து விவசாயி மகிழ்ச்சியாக இருக்கின்றான் என்று கூறும் அமைச்சர் தன்னை திருத்திக் கொள்ளட்டும். விவாசாயிகள் உண்மையிலேயே மகிழவேண்டுமானால் அவர்களின் விளைபொருளுக்கு உரிய கொள்முதல் விலையை காலமறிந்து அரசு தீர்மானிக்கட்டும். இல்லையேல் விலையை தீர்மானிக்கும் உரிமையை விவாசயிகளுக்கே வழங்கட்டும். அதுதான் விவசாயிகளின் நிரந்தர மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதை அமைச்சர் உணரட்டும்.

உளவுத்துறையா..? உளரும் துறையா...??

மது நாட்டில் இரண்டு துறையினர் தரும் தகவல்களை எதிர்மறையாகத்தான் விளங்கிக் கொள்ளவேண்டும். ஒன்று வானிலை ஆராய்ச்சித் துறை. மற்றொன்று உளவுத்துறை. ஒரு குறிப்பிட்ட இடத்தில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்தால் அந்த இடத்தில் வெயிலடிக்கும். அல்லது சிறு தூறலோடு நின்றுவிடும். அதே போல உளவுத்துறை தகவலும் அப்படித்தான்.  ஒரு மதப்பண்டிகை வந்துவிடக் கூடாது; உடனே பண்டிகையை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி என்று உளவுத்துறை தகவல் தரும். ஒரு டிசம்பர் ஆறு வந்துவிடக்கூடாது; உடனே கோயில்கள் மீது தாக்குதல் நடத்த சதி என்று உளவுத்துறை சொல்லும். சுதந்திர தினம்  குடியரசுத் தினம் வந்துவிட்டால் உடனே பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் என்று சொல்லும். உளவுத்துறையின் இந்த செய்தி உண்மையா? பொய்யா? என்று கூட ஆராயாமல் வலிந்து கொண்டு பக்கம் பக்கமாக வெளியிட்டு ஊடகங்கள் காசு பார்க்கும். ஆனால் உண்மை என்னவோ நேர்மாறாகத் தான் இருக்கும். ''நடக்கும் என்பார் நடக்காது; நடக்காதென்பார் நடந்து விடும்' என்ற பாடலைப் போல, உளவுத்துறை நடக்கும் என்றால் எதுவுமே நடக்காது என்பதைத்தான் இதுவரை காலம் சொல்லும் சான்றாக உள்ளது. எப்போதெல்லாம் பயங்கரவாதிகள் சதி என்று உளவுத்துறை சொல்லியதோ அப்போதெல்லாம் நாடு அமைதியாகவே இருந்திருக்கிறது. ஆனால் உளவுத்துறை எச்சரிக்காத நாளில் நாட்டில் அசம்பாவிதங்கள் நடந்துள்ளது. 


ஒரு பயங்கரவாத செயலைச் செய்ய நினைக்கும் ஒருவன், கடுமையான சோதனைகளும் கட்டுப்பாடுகளும் மிக்க சுதந்திர தினம்-குடியரசு தினம்-பாபர் மஸ்ஜித் இடிப்பு தினம் போன்ற நாளையா தேர்ந்தெடுப்பான் என்ற சாதாரண அறிவு கூட உளவுத்துறைக்கும் இல்லை. உளவுத்துறையை மிஞ்சிய உளவுத்துறையாக செயல்படும் பத்திரிக்கைகளுக்கும் இல்லை. உளவுத்துறையின் குருட்டுத்தனமான அறிவிப்புகளால் சோதனை என்ற பெயரில் மக்கள் படும் பாடு சொல்லி மாளாது. வழிபாட்டுத்தலங்கள் மற்றும் முக்கியமான இடங்களில் சோதனை என்ற பெயரில் செய்யப்படும் கெடுபிடிகளால் அந்த நாள் ஏன் தான் வருகிறதோ என்று மக்கள் நினைப்பதற்கும், அந்த நாளோடு சம்மந்தப்பட்ட மதத்தினர் மீது வெறுப்புணர்வு கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாக ஆவதற்கும் காரணம் உளவுத்துறையின் உருப்படியில்லாத தகவல்கள் தான். இதை நாம் சொல்லவில்லை மாநில அரசுகள் சொல்லியுள்ளன. 


ராஜஸ்தான், ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத், காஷ்மீர் மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கூட்டம், சமீபத்தில் டில்லியில் நடந்தது. இதில், பேசிய மாநில அரசு அதிகாரிகள் கூறியதாக ஊடகங்களில் வந்துள்ள செய்தியில், 


''உளவு நிறுவனங்கள் தரும் தகவல்களை நம்பி, மாநிலங்களில் பாதுகாப்பு பணிக்கென அதிகளவில் ஆட்களை நியமிக்க நேரிடுகிறது. ஏற்கனவே, சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்காக, நிறைய பாதுகாப்பு படையினரும் பல்வேறு இடங்களில் பணி அமர்த்தப்படுகின்றனர்.உளவு நிறுவனங்களின் தகவல்கள் உறுதியற்றதாக இருக்கும் போது, பாதுகாப்புப் படையினருக்கு பணிச் சுமை அதிகரிப்பதோடு, அரசுக்கும் செலவு ஏற்படுகிறது. பொதுமக்களும் சோதனை என்ற பெயரில், பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. எனவே, இனி மேலாவது அரை குறை தகவல்களைத் தெரிவிப்பதை, மத்திய உளவு நிறுவனங்கள் கைவிட வேண்டும்' இவ்வாறு அதிகாரிகள் கூறியுள்ளனர். 


இனிமேலாவது உளவுத்துறை ஒழுங்காக உளவறிந்து தகவல்களை பரிமாறட்டும். ஒரு குறிப்பிட்ட நாளை தேர்ந்தெடுத்து அந்த நாளில் எதையேனும் சொல்லி பரபரப்பை உண்டாக்குவதை விட, ஒழுங்காக உளவறிந்திருக்குமானால் நாட்டில் நடைபெற்ற பல்வேறு குண்டுவெடிப்புகளை தடுத்திருக்க முடியும் என்பதுதான் உளவுத்துறை பற்றி மக்கள் கருத்தாக உள்ளது. மேலும் மக்களுக்கு உண்மையை சொல்லவேண்டிய பத்திரிக்கைகள் பொய்யான தகவல்களை முதல்பக்கத்தில் வெளியிட்டு மக்களுக்கு பீதியை உண்டாக்கி காசு பார்ப்பதை நிறுத்த வேண்டும். இல்லையேல் பத்திரிக்கை ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்று என்ற நம்பிக்கையை சிதைத்து விடும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். அசாம் கலவரம் தொடர்பான தவறான தகவலை அனுப்பி மக்களை பீதிக்குள்ளாக்கும் செயலை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்ததை போன்று, மக்களுக்கு அறிமுகமான பதற்றமான நாளில் மக்களை பீதிக்குள்ளாக்கும் வகையில் பொய்யான தகவலை பரப்பும் பத்திரிக்கைகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கக் மத்திய மாநில அரசுகள் முன் வரவேண்டும்.



வதந்''தீ''யை வாந்தி எடுக்கும் வழிகேடர்கள்!

தீயை விட வேகமாக பரவுவது வதந்''தீ'' என்று சொன்னால் மிகையல்ல; வடமாநில மக்களை பீதிக்குள்ளாக்கும் வகையில் குறுஞ்செய்திகள் பரவுவதாக கூறிய மத்திய அரசு, ஒரு நாளைக்கு ஒரு நம்பரிலிருந்து ஐந்து எஸ்.எம்.எஸ்.கள் மட்டுமே அனுப்பவேண்டும் என்ற தடையை கொண்டுவந்தது. இதனால் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு நாளொன்றுக்கு பல கோடிகள் நஷ்டமாக அடுத்த சில தினங்களில் தனது பிடியை தளர்த்தியது மத்திய அரசு. இந்த பரபரப்பு ஓய்வதற்குள்ளாக மெஹந்தி அணிந்த பெண்கள் சிலர் இறந்துவிட்டார்கள் என்றும் பலர் கவலைக்கிடமாக உள்ளார்கள் என்றும் வதந்தி பரவ, மெஹந்தி அணிந்த பெண்கள் குழந்தைகள் என ஊர்கள் தோறும் மருத்துவமனையை முற்றுகையிட பரபரப்பு உண்டானது. இந்த வதந்தி பொய் என்று ஆன அடுத்த சில  நாட்களிலேயே அடுத்த வதந்தி அவதாரம் எடுத்து விட்டது. 

பிறந்தவுடன் பேசிய குழந்தை, "நான் சிறிது நேரத்தில் இறந்து விடுவேன்; எனக்கு பிடித்த குழந்தைகளையும் அழைத்துச் செல்வேன்' என்று சொன்னதாக,  தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், ஆந்திராவிலும் வதந்தி பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பூர் மாவட்டங்களில், மக்கள் மத்தியில், அதிகாலை, 2 மணியில் இருந்து, எஸ்.எம்.எஸ்., மூலம் இந்த செய்தி பரப்பப்பட்டது.


இந்த செய்தி வந்த மாத்திரமே அது உண்மையா? பொய்யா? என்பதையெல்லாம் அறிய முற்படாத மக்கள் உடனடியாக பிறந்த குழந்தை சொன்ன தீமையிலிருந்து தங்கள் குழந்தையை பாதுகாக்க பரிகாரம் தேடக் கிளம்பிவிட்டனர். தங்கள் குழந்தைகளின் தலையில் தேங்காய் சுற்றி, திருஷ்டி கழித்து, ஆரத்தி எடுத்தனர். சிலர், மஞ்சள் நீரில் மிளகாய் வத்தல், கரி ஆகியவற்றை வைத்து, திருஷ்டி சுற்றி, முச்சந்திகளில் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி பரிகாரம் செய்தனர்.


இந்த செய்தி தமிழகம் தாண்டி ஆந்திர மாநிலம், ஐதராபாத், நிஜாமாபாத், கரீம் நகர், வாராங்கல் மாவட்டங்களிலும், இந்த வதந்தி வேகமாக பரவியது. அங்கே இந்த செய்தி போகும் போது வேறு வடிவம் எடுத்து விட்டதாம். பல கை, பல கால்களுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. இது பிறந்த உடனேயே, தன் தாயிடம், "இன்னும் சிறிது நேரத்தில் நான் இறந்து விடுவேன்; அதற்கு முன், இன்று இரவு என்னுடன் பிறந்துள்ள அனைத்துக் குழந்தைகளையும் பலி வாங்கி அழைத்துச் சென்று விடுவேன்' என்று கூறியதாக வதந்தி பரவியதாம். ஆம். உண்மைக்கு ஒரு முகம்; பொய்க்கு பல வடிவம் தானே.


ஒரு திரைப்படத்தில் காமெடி நடிகர் தனது சாமிக்கு தேங்காய் உடைக்க தேங்காய் கடைக்காரரிடம் விலை கேட்க, அவர் சொல்லும் விலை பயங்கரமாக இருந்ததால் ஒரு திட்டம் தீட்டி, ''நேற்று வந்த தேங்காய் லோடுல ஏதோ ஒரு தேங்காய்ல யாரோ பாம்(வெடிகுண்டு) வச்சுட்டாங்களாம்; அது எந்த தேங்காய்ன்னு தெரியல'ன்னு ஒரு வதந்தியை பரப்புவார். அதை நம்பிய மக்கள் பதறியடித்துக் கொண்டு தேங்காய் வாங்குவதை நிறுத்த, வதந்தி பரப்பிய காமெடி நடிகர் தேங்காய் கடைக்காரரிடம், ''பார்த்தாயா? நான் ஒரு தேங்காய் கேட்டேன்; நீ யானை விலை சொன்ன; நான் ஒரு பொய்யச் சொன்னேன்; மக்கள் தேங்காய் வாங்காம ஓடிட்டாங்க. இப்ப எல்லாத் தேங்காயையும் நீ வீட்டுக்கு கொண்டுபோய் சட்னி வச்சு சாப்பிடு' என்பார். அதுபோலத்தான் இந்த பிறந்த குழந்தையின் பேச்சும் அதையொட்டி பரிகராமாக தேங்காய் உடைப்பும் நடந்ததை பார்க்கும் போது இந்த வதந்திக்கும் தேங்காய் வியாபாரத்துக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோன்னு மக்களுக்கு சந்தேகம் வருவதில் வியப்பில்லை. ஏனென்றால் வதந்திகளுக்கும் வியாபாரத்திற்கும் எப்போதும் தொடர்பு உண்டு. திடீரென்று ஆண்களுக்கு ஆபத்து; அதில் இருந்து காக்கும் பரிகாரமாக தனது சகோதரிக்கு பச்சைக் கலர் சேலை வாங்கித் தரவேண்டும் என்று வதந்தி கிளம்ப நம்ம ஆம்பளைகள் எல்லாம் பச்சைக்கலர் சேலை தேடி அலைந்த காட்சிகளும் தமிழகத்தில் நடந்ததுதானே.


இது மட்டுமா? அம்மன் கண்ணில் நீர் வழிகிறது, புள்ளையார் பால் குடித்தார், ஏசுவின் பாதத்தில் நீர் வடிகிறது, அண்டா தண்ணீரில் அம்மனின் முகம் தெரிகிறது, பாம்பு ஒளிர்கிறது, பட்டப் பகலில் ஆவி வலம் வருகிறது இப்படியாக அடுக்க்கடுக்கான வதந்திகள் அணிவகுத்ததையும் அதை கொஞ்சமும் அறிவின்றி மக்கள் நம்பியதையும் யாரும் மறந்திருக்க முடியாது. அந்த வரிசையில் வந்த ஒன்றுதான் இந்த குழந்தையின் பேச்சும் அதையொட்டிய களேபரங்களும் என்பதை சொல்லிக் கொள்வதோடு வதந்தி பற்றி இஸ்லாம் எண்ணற்ற அறிவுரைகளை வழங்கியுள்ளது அதில் ஒன்றைப் பார்ப்போம்;


முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.

(அல் குர்'ஆன் 49:6 ) 


ஒரு செய்தியை ஒருவன் நம்மிடம் சொன்னால் அதை அப்படியே நம்பிவிடக்கூடாது; மாறாக அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொண்டு ஏற்பதுதான் ஒரு அறிவுடைய நம்பிக்கையாளரின் அடையாளமாகும் என்பது இந்த வசனத்தின் கருத்தாகும். எனவே வதந்தியை நம்புவதற்கு முன்னால் உங்கள் பகுத்தறிவுக்கு வேலை கொடுங்கள்.



சனி, 25 ஆகஸ்ட், 2012

மக்களின் மன ஓட்டத்தை பிரதிபலித்த மம்தா பானர்ஜி!



மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் பரபரப்புக்கும் அப்படி என்னதான் உறவோ தெரியவில்லை. அவர் எது பேசினாலும் அதோடு பரபரப்பு தொற்றிக்கொண்டு விடுகிறது. சமீபத்தில் மேற்குவங்க மாநில சட்டமன்றத்தின் 75-வது ஆண்டு விழா நிகழ்ச்‌சியில் அவர் பேசுகையில், ''நீதித்துறையில் ஊழல்கள் பெருகிவிட்டது. மாநிலத்தில் எந்த சம்பவங்கள் நடந்தாலும் நீதிவிசாரணை கமிஷன் உருவாக்கப்படும். ஆனால் நீதி கிடைத்ததா? எல்லாம் பணத்துக்காக விலை பேசப்பட்டுவிட்டது. நீதித்துறையில் அந்தளவுக்கு ஊழல். பணத்துக்காக நீதிபதிகள், சாதகமான தீர்ப்பு வழங்குகின்றனர். எனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலும் இது போன்ற நிலை உள்ளது என்பது எனக்கு நன்றாக தெரியும்.அதற்காக நான் பயப்படமாட்டேன். சிறைக்கு செல்லவும் தயார் என்று பேசியதாக செய்திகள் வெளியாகின. 

மம்தாவின் பேச்சால் அதிர்ந்த நீதிமன்ற வட்டாரங்கள் பொங்கி எழுந்தன. அவர் நீதிமன்றங்களை அவமதித்து விட்டார் என்று கூறி அவர் மீது சிலர் வழக்குகளும் போட்டுள்ளனர். இதற்கிடையில் தனது பேச்சு தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டுள்ளது என்று விளக்கமளித்த மம்தா பானர்ஜி, ''எல்லாத் துறைகளிலும் நல்லவர்களும் கேட்டவர்களும் இருப்பது போல் நீதித்துறையிலும் இருப்பதாக கூறியுள்ளார்'. மம்தா பேசியது சரியா என்று பார்ப்பதற்கு முன்னால் ஒரு துறை மீதான விமர்சனத்தை எவ்வாறு எடுத்துக் கொள்ளவேண்டும் என்று கூட சிலருக்குத் தெரிவதில்லை. உதாரணமாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி, ''காவல்துறையின் ஈரல் கெட்டு விட்டது' என்று ஒருமுறை சொன்னார். இதற்காக கருணாநிதி ஒட்டுமொத்த தமிழக காவல்துறையை இழிவுபடுத்தி விட்டார் என்று யாரும் அவர் மீது வழக்குப் போடவில்லை. அப்படி போட்டால் அதை விட ஒரு முட்டாள்தனம் எதுவுமிருக்க முடியாது. காரணம் காவல்துறையின் ஈரல் கெட்டு விட்டது என்ற விமர்சனத்தின் அர்த்தம் என்பது காவல்துறையில் உள்ள கெட்டவர்களை மட்டுமே குறிக்கும். அதே போன்று தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று விமர்சனம் செய்வார்கள். இதை நேரடி அர்த்தத்தில் பார்த்தால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய போலீசாரில் ஒருவர் கூட ஒழுங்காக வேலை பார்க்கவில்லை என்றோ, அல்லது சமூக விரோதிகளிடம் வாங்க வேண்டியதை வாங்கிக்கொண்டு அமைதியாகிவிட்டார்கள் என்றோ அர்த்தம் வரும். அப்படி அர்த்தம் கொள்ள முடியுமா என்றால் முடியாது. ஏனென்றால் தமிழகத்தில் முழுமையாக நூறு சதவிகிதம் சட்டம் ஒழுங்கு கேட்டுப் போகவில்லை. ஆங்காங்கே சிற்சில சம்பவங்கள் நடப்பதால் இப்படி பொத்தாம் பொதுவாக சொல்லப்படுகிறது. அதுபோல் காவல்துறையில் லஞ்சம் மலிந்துவிட்டது என்று யாரேனும் விமர்சித்தால் எல்லா காவலர்களும் லஞ்சம் வாங்குகிறார்கள் என்று அர்த்தமாகிவிடாது. அவர்களில் சிலர் வாங்குகிறார்கள் என்றே அர்த்தம் கொள்ளவேண்டும். இந்த அடிப்படையில் அமைந்தது தான்  மம்தா பானர்ஜியின் நீதித்துறை பற்றிய விமர்சனமும்.

இப்போது மம்தாவின் விமர்சனத்திற்கு வருவோம். ''நீதித்துறையில் ஊழல் மலிந்துள்ளது. பணத்திற்காக சாதகமான தீர்ப்பு கிடைக்கிறது' என்ற மம்தாவின் கூற்றில் என்ன தவறிருக்க முடியும்? லஞ்சம் வாங்கியதாக நீதிபதிகள் கூட கைது செய்யப்பட்ட சம்பவங்கள் நடக்கவில்லையா? சுரங்க மோசடியாளருக்கு ஜாமீன் வழங்க கோடிக்கணக்கில் ஒரு நீதிபதி லஞ்சம் வாங்கிய சம்பவம் நடக்கவில்லையா? பாபர் மஸ்ஜித் விசயத்தில் உரிமையாளனுக்கு ஒருபங்கு; அபகரிப்பாளனுக்கு இரண்டு பங்கு என்ற கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு வழங்கவில்லையா? என்னமோ நீதிமன்றம் சார்ந்தவர்கள் தவறுக்கே அப்பாற்ப்பட்டவர்கள் போல் குதிப்பது ஆச்சர்யமாக உள்ளது. நீதித்துறையில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது என்று மம்தா சொன்னால் மட்டும் குதிப்பவர்கள், காவல்துறை-மருத்துவம்-கல்வித்துறை-தொலைத்தொடர்புத்துறை போன்ற எண்ணற்ற துறைகள் மீது ஊழல் விமர்சனங்கள் வைக்கப்பட்டபோது மட்டும் குதிக்காதது என்? அப்படியானால் எந்த துறை பற்றி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம் தப்பில்லை; ஆனால் நீதித்துறை மீது மட்டும் விமர்சனம் கூடாது என்றால் நீதித்துறையில் கடுகளவு கூட தவறே நடப்பதில்லையா?  

அடுத்து மம்தாவின் விமர்சனத்தில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம், ''மாநிலத்தில் எந்த சம்பவங்கள் நடந்தாலும் நீதிவிசாரணை கமிஷன் உருவாக்கப்படும். ஆனால் நீதி கிடைத்ததா? எல்லாம் பணத்துக்கா விலை பேசப்பட்டுவிட்டது'' என்பதுதான். மம்தாவின் விமர்சனத்தைக் கண்டு பொங்கி எழுபவர்கள், நீதி விசாரணை அமைக்கப்பட்டு தண்டனை வழங்கபப்பட்ட சம்பவங்களை பட்டியலிட்டு விட்டு குதித்தால் அதில் அர்த்தமிருக்கும். குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை சம்மந்தமாக உச்சநீதிமன்றமே நேரடியாக விசாரணை ஆணையம் அமைத்ததே! அதன் முடிவு என்ன? அந்த ஆணையம் தந்த தகவல் அடிப்படையில் எத்தனை பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டார்கள்? இதுபோக மும்பைக் கலவரம் உள்ளிட்ட பல கலவரங்களில் ஒய்வு பெற்ற நீதிபதிகள் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு அறிக்கை பெறப்பட்டதே! அந்த அறிக்கை அடிப்படையில் எத்தனை பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டார்கள்? தண்டனை வழங்கவில்லை என்றால் அந்த விசாரணைக் கமிஷன் கண்துடைப்பு என்பது உண்மையாகி விடுகிறதே! மம்தாவின் விமர்சனமும் சரிதான் என்றாகி விடுகிறதே! 

எனவே சுருங்கக் கூறின் மம்தாவின் விமர்சனம் என்பது மக்களின் என்ன ஓட்டமே என்பது ஒருபுறமிருந்தாலும்,எப்படி எல்லாத் துறைகளிலும் நல்லவர்கள்- கெட்டவர்கள் உண்டோ அது போல நீதித்துறையிலும் உண்டு. ஆகவே எல்லாத் துறைகளையும் விமசரிக்கும் உரிமை மக்களுக்கு இருப்பது போல் நீதித்துறையையும் விமர்சிக்கும் உரிமை வழங்கவேண்டும். அப்போதுதான் நீதித்துறை ''நீதி'த்துறையாக இருக்கும் என்பதுதான் மக்களின் கருத்தாக உள்ளது.

புதன், 22 ஆகஸ்ட், 2012

''என் மனைவி, என் மனைவி'' என்று இளைஞர்கள் போட்டா போட்டி!


50 வாலிபர்களை மணந்து சாதனை படைத்த கேரள அழகி!! 


கமிஷனர் அலுவலகத்தில் புகார்கள் குவிகின்றன!!! 

பெண்களுக்கு கரு'ப்பை சுதந்திரம் வேண்டும் என்று ''லஜ்ஜா' எனும் நூலில் எழுதிய வங்கதேச தஸ்லிமாவை முற்போக்கு எழுத்தாளர் என்று பாராட்டிய பெண்ணுரிமைவாதிகளும் ஊடகங்களும், தஸ்லிமாவின் எழுத்தை செயல்படுத்திக் காட்டிய இந்தப் பெண்ணையும் பாராட்டுவார்களோ?

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்பு; மன்னிக்கும் குணம் இருக்கிறதா? உங்களுக்கு இதயநோய் வராது: ஆய்வில் தகவல்.

கோபம் பற்றி இஸ்லாம்; 
கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் !

அல்லாஹ் கூறுகிறான் :
(பயபக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக்கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் தவறு)களை மன்னிப்பார்கள். அல்குர்ஆன் 3 : 134 

அபூ ஹுரைரா ( ரலி ) அவர்கள் கூறினார்கள் :
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கோபம் கொள்ளாதே ! எனக் கூறினார்கள். மீண்டும் அந்த மனிதர் உபதேசம் செய்யுங்கள் எனக்கூறவே, மீண்டும் கோபம் கொள்ளாதே என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
நூல் : புகாரி 

அபூ ஹுரைரா ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
வீரன் என்பவன் கோபத்தின் போது தன்னை கட்டுப்படுத்திக் கொள்பவனே சிறந்த வீரன் ஆவான் என நபி ( ஸல் ) அவர்கள் அருளினார்கள். நூல்கள் : புகாரி , முஸ்லிம்
************************************************************

நமக்கு தீமை செய்தவர்களை பழிவாங்கவேண்டும் என்று நினைக்காமல் அவர்களின் தவறுகளை மன்னிக்கும் குணம் படைத்தவர்களுக்கு இதயநோய் உள்ளிட்ட எந்தவித நோய்களும் எட்டிப்பார்க்காது என்று சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது. மனிதர்களின் மனதிற்கும், உடல்நலத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில பல்கலைக்கழக ஆய்வு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

200 பேர் பங்கேற்ற அந்த ஆய்வில் நூறு பேரிடம் உங்களுக்கு கெடுதல் செய்பவர்கள் மீது நீங்கள் எப்படி ஆத்திரமடைவீர்கள்?, அவரை எப்படி பழிவாங்குவதுபோல் கற்பனை செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. மீதமுள்ள நூறு பேரிடம் நண்பர் தவறு செய்த பிறகும், அதை மன்னித்து மறந்து விடுவது போன்று கற்பனை செய்துகொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

அய்ந்து நிமிடம் கழித்து அதே சம்பவங்களை மீண்டும் நினைத்து பார்க்க வைத்து அவர்களது ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது. நண்பரின் தவறுக்கு ஆத்திரப்பட்ட நூறு பேரின் ரத்தம் அளவிற்கு அதிகமாக வேகமாக பாய்ந்தது. மறப்போம், மன்னிப்போம் கொள்கையை கொண்ட நூறு பேரின் ரத்த அழுத்தம் இயல்பு நிலையில் இருந்ததும் தெரிய வந்தது.

இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவித்த குழுவின் தலைமைப் பேராசிரியர் மருத்துவர் பிரிட்டா லார்சன், மன்னிக்கும் மனம் இல்லாதவர்களின் ரத்த அழுத்தம் ஆத்திரப்படும்போது மட்டுமின்றி நீண்ட நேர பாதிப்பை சந்திக்கிறது. அதனால், அவர்கள் ரத்த கொதிப்புக்கு ஆளாகி இதய நோயை சந்திக்க நேரிடலாம். அதேசமயம் மன்னிக்கும் குணம் கொண்டவர்களுக்கு இதயத் துடிப்பு சீராக இருந்ததும் மன்னித்ததால் ஏற்பட்ட மன அமைதி காரணமாக இதயத்துக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து அது பலம் அடைந்ததும் சோதனையில் தெரிந்தது. இது நீண்ட கால அடிப்படையில் அவர்களது ஒட்டுமொத்த உடல் நலனுக்கு நன்மை தரும்'' என்று கூறியுள்ளார்.

இந்த ஆய்வு முடிவு அமெரிக்காவில் வெளியாகும் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதைத்தான் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எண்ணம் போல் வாழ்வு என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். எனவே நமக்கு தீமை செய்தவர்களுக்கும் கூட நன்மை செய்வதையே நினையுங்கள் நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழலாம். 

நன்றி; விடுதலை 21 -8 -12

சனி, 18 ஆகஸ்ட், 2012

நான் சந்தித்த சதிகள்! - ஆச்சார்யா ஸ்பெஷல் பேட்டி


 
 
ச்சார்யா... தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிம்ம சொப்பனம். ஒரு வழக்கறிஞர் எப்படி தயவுதாட்சண்யம் பார்க்காமல் செயல்பட வேண்டும் என்பதன் உதாரண மனிதர்.
14 ஆண்டுகளாக கோர்ட் படி மிதிக்காமல் இருந்த ஜெயலலிதாவை, 'சாமூண்டீஸ்வரி கோயிலுக்கு வர முடியும். கோர்ட்டுக்கு வர முடியாதா?' என்று யதார்த்தமான கேள்வி கேட்டு மடக்கியவர். நொண்டி அடித்துக்கொண்டே இருந்த சொத்துக்குவிப்பு வழக்கின் குடுமியைப் பிடித்து, இறுதிக்கட்டம் வரை இழுத்து வந்தவர். அப்படிப்பட்ட ஆச்சார்யா, திடீரெனக் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணிக்கு, தனது அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்தார். பெங்களூரு நீதிமன்றத்தின் அடுத்த நீதிபதி யார் என்ற குழப்பம் நிலவும் நேரத்தில் ஆச்சார்யா ராஜினாமா செய்திருப்பது யாருமே எதிர்பார்க்காத திடீர் திருப்பம். ராஜினாமா செய்த ஒரு மணி நேரத்தில், பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் அவரைச் சந்தித்தோம். கோர்ட்டில் இருப்பது போலவே, அனல் தெறித்தார்!
''நீங்கள் ராஜினாமா செய்துள்ளீர்கள் என்பதை நம்பவே முடியவில்லை. நீங்கள் முழுமனதோடு எடுத்த முடிவுதானா?''
''தீர்க்கமாக யோசித்த பிறகு நான் முழுமனதோடு எடுத்த முடிவுதான். தாராளமாக நீங்கள் நம்பலாம்!'' (சத்தமாகச் சிரிக்கிறார்).
''கடந்த பிப்ரவரியில், அதிகாரம் பொருந்திய கர்நாடகாவின் அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பிடிவாதமாக ஜெயலலிதா வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாகத் தொடர்ந்தீர்கள். இப்போது, அந்தப் பதவியையும் ராஜினாமா செய்யும் அளவுக்கு அப்படி என்ன திடீர் நெருக்கடி?''
''ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்குக்கு 2005-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி என்னை, அரசு சிறப்பு வக்கீலாக நியமித்தார்கள். ஆறே மாதங்களில் வழக்கு முடிந்துவிடும் என்ற நம்பிக்கையில்தான் ஆஜரானேன். ஆனால், இந்த ஏழு வருடங்களில் அவர்கள் தரப்பில் இருந்து ஸ்பெஷல் கோர்ட்டிலும், ஹை கோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் எத்தனை மனுக்கள் போட்டிருக்கிறார்கள் தெரியுமா? எத்தனை முறை அப்பீலுக்குப் போய் இருக்கிறார்கள் தெரியுமா? இப்போதுகூட சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா போட்ட இரண்டு மனுக்கள் விசாரணையில் இருக்கின்றன. எல்லா மனுக்களையும் போட்டுவிட்டு கடைசியாக‌ நீதிபதியின் நியமனமே செல்லாது என்றும் மனுப் போட்டு இருக்கிறார்கள். அந்த மனு கர்நாடகா ஹைகோர்ட்டில் இருக்கிறது. இப்படி, சொத்துக்குவிப்பு வழக்கு கொஞ்சம்கூட நகராமல் அதே இடத்தில் இருந்தால், என்னால் என்ன செய்ய முடியும்? கடந்த ஓர் ஆண்டாகவே என்னை இந்த வழக்கில் இருந்து வெளியேற்ற பலவித சதி முயற்சிகளை மேற்கொண்டனர்!''
''என்ன மாதிரியான சதி முயற்சிகள்?'
''என்னைப் பற்றி அவதூறாக, கவர்னருக்கும் ஹை கோர்ட் நீதிபதிக்கும் பெட்டிஷன் போடுவது, ஸ்பெஷல் கோர்ட்டிலும் ஹை கோர்ட்டிலும் துண்டு அறிக்கை கொடுப்பது, போஸ்டர் ஒட்டுவது, மீடியாக்களில் புகார் பரப்புவது என்றெல்லாம் செய்தனர். ஒரு கட் டத்தில் நான் அட்வகேட் ஜெனரல் பதவி, அரசு சிறப்பு வக்கீல் என இரண்டு பொறுப்புகளையும் வகிக்கக் கூடாது என்றனர். அப்போது அவர்கள், நான் சிறப்பு வக்கீல் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்று நினைத்தனர். ஆனால், நான் அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். இறுதியாக‌ச் சிலரைத் தூண்டிவிட்டு கர்நாடக லோக் ஆயுக்தா நீதிமன்றத்திலும், ஹை கோர்ட்டிலும் என் மீது அவதூறு வழக்குப் போட வைத்தனர். லோக் ஆயுக்தாவில் போட்ட வழக்கு அடிப்படை ஆதாரம் இல்லாதது என்று, ஆரம்பத்திலேயே வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது கோர்ட். இரண்டாவதாக, 'கல்வி நிறுவன மோசடியில்' ஈடுபட்டதாகப் போடப்பட்ட வழக்கை விசாரித்த ஹை கோர்ட், 'நேர்மையானவர் மீது அவதூறு பரப்பாதீர்கள்' என்று  கண்டித்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து இருக்கிறது. ஹை கோர்ட்டின் தீர்ப்பு எனக்குச் சாதகமாக வந்திருந்தாலும், தொடர்ச்சியாக இதுபோன்ற பிரச்னைகளால் தேவை இல்லாத நெருக்கடிகளுக்கும் தீவிர மன உளைச்சலுக்கும் உள்ளானேன். மென்டல் டார்ச்சர் இந்த வயதில் எனக்குத் தேவையா? என் உடம்பைக் கவனிக்க வேண்டாமா?''
''உங்கள் உடம்புக்கு என்ன? உடல் ரீதியாக நீங்கள் பாதிப்பு அடைந்துள்ளீர்​களா?''
(கேள்வியை முடிக்கும் முன்பே) ''நோ நோ... எனக்கு எந்தக் குறிப்பிட்ட நோயும் இல்லை. ஐ ம் ஆல்ரைட். நான் நன்றாகவே இருக்கிறேன். மனு மேல் மனு போட்டு என்னை வெறுப்படைய​வைத்து விட்டனர். மென்டல் டார்ச்சரால் வயதான காலத்தில் எனக்கு அதிகத் தலைவலி ஏற்பட்டதைச் சொல்கிறேன்!''
''அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்தபோது, 'ஜெயல​லிதாவின் வழக்கில் இருந்து என்னை விலகச் சொல்லி பி.ஜே.பி. மேலிடம் அழுத்தம் கொடுத்தது. அதனால்தான் ராஜி​னாமா செய்தேன்' என்றீர்கள். இப்போது,அரசுத் தரப்பு வக்கீல் பதவி​யை ராஜினாமா செய்ததன் பின்னணி​யிலும் அரசியல் இருக்கிறது என்று சொல்கிறார்களே?''
''எனது இந்த ராஜினாமா முடிவுக்குப் பின்னால் எந்த அரசியல் கட்சியும் இல்லை. எந்த அரசியவாதியாலும் என்னைப் பணியவைக்க முடியாது. நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என்பது என்னோடு மோதியவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனக்கு இப்போது 78 வயது ஆகிறது. தொடர்ந்து இந்த வழக்கில் ஆஜராகி நெருக்கடிகளைச் சந்திக்க விருப்பம் இல்லை. நான் கையறு நிலையில் இருக்கிறேன். அதுதான் உண்மை!''
''உங்கள் மன உளைச்சலுக்கு, வழக்கில் சம்பந்தப்​பட்டவர்கள்தான் காரணம் என்று நினைக்​கிறீர்​களா?''
''ஜெயலலிதா செய்திருக்கலாம். சசிகலா செய்திருக்​கலாம். சுதாகரன் செய்திருக்கலாம். ஏன் இளவரசிகூட செய்திருக்கலாம். குற்றம்சாட்டப்​பட்டவர்​களுக்கு நெருக்கமானவர்கள் யாராவது அந்தக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ செய்திருக்கலாம். அ.தி.மு.க. தொண்​டர்களில் யாராவது செய்திருக்கலாம். நான் உறுதியாக நம்புவது என்னவென்றால், என் மீது சுமத்தப்படும் அத்தனை அவதூறுகளுக்கும் வழக்குகளுக்கும், நான் இந்த வழக்கில் இருந்து விலக வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கம் மட்டும்தான் இருந்திருக்க முடியும்!''
''தொடர் அச்சுறுத்தல்களுக்குப் பயந்தே, குடும்பத்​தினர் உங்களை ராஜினாமா செய்யச் சொன்ன​தாகவும் பேச்சு அடிபடுகிறதே?''
''அதெல்லாம் இல்லை. 56 ஆண்டு கால வக்கீல் தொழிலில் எத்தனையோ எதிர்ப்புகளைச் சந்தித்து விட்டேன். இதெல்லாம் சும்மா. இது நானே எடுத்த முடிவு. எனக்கு மட்டும் இன்னும் 10 வயது குறைவாக இருந்திருந்தால், நானா... அவர்களா என்று ஒரு கை பார்த்திருப்பேன். என்ன செய்வது, எனக்கு வயதாகி விட்டது. மனைவியும் பிள்ளைகளும் என்னுடைய வழக்கைப் பற்றியும், தொழிலைப் பற்றியும்கூட பேச மாட்டார்கள். ஏனென்றால் மகளும் மகனும் என்னைப் போலவே வழக்கறிஞர்கள்!''
''உங்களுடைய ராஜினாமா எதிர்த் தரப்பை குஷிப்படுத்தும் என்று நினைக்கிறீர்களா?''
''ஓ! நன்றாகத்‌ தெரியும். 'என்னுடைய ராஜினாமா ஜெயலலிதா தரப்புக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்!' என்று கர்நாடக உள்துறைச் செயலருக்கு அனுப்பி உள்ள கடிதத்திலும் குறிப்பிட்டு இருக்கிறேன். என்ன செய்வது..? என்னதான் போரில் ஒரு வீரன் ஜெயித்துக்கொண்டே போனாலும், ஒரு கட்டத்தில் விரக்தியும், வெறுப்பும் ஏற்படும் இல்லையா? அத்தகைய கட்டத்தில் நான் இருக்கிறேன்.''
''15 ஆண்டுகளாக இந்த வழக்கு இழுத்துக்கொண்டே போகிறது. இதற்​கெல்​​லாம் என்ன காரணம்?''
''வழக்கை இழுத்தடிக்கத் தேவையான எல்லாமும் அவர்களிடத்தில் இருக்கிறது. நீதிபதி மல்லிகார்ஜுனைய்யா இன்னும் கூடுதல் கண்டிப்புடன் இருந்திருந்தால், வழக்கை எப்போதோ முடித்து இருக்கலாம். மனு மேல் மனு, அப்பீலுக்கு மேல் அப்பீல், வாய்தாவுக்கு மேல் வாய்தா என ஹை கோர்ட்டுக்கும் சுப்ரீம் கோர்ட்டுக்கும் போய் இழுத்தடித்திருக்க மாட்டார்கள்!''
''நீதிபதி மல்லிகார்ஜுனைய்யாவின் செயல்பாடு எப்படி இருந்திருக்க வேண்டும் என்கிறீர்கள்?''
''ஜெயலலிதாவும் சசிகலாவும் பதில் சொல்ல இழுத்தடிக்​கிறார்கள் என்பது தெரிந்த பிறகு அதிக கண்டிப்புடன் வழக்கை அணுகி இருக்க வேண்டும்.  அரசு சிறப்பு வக்கீலாக இதைச்சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது நீதிபதியும் வரும் 31-ம் தேதியோடு ஓய்வு பெறு கிறார்!''
''நீதிபதிக்கு பதவி நீட்டிப்பு கொடுக்க வாய்ப்பு இருக்கிறதா?''
''பொதுவாக,‌ நீதிபதிகளுக்கு பதவி நீட்டிப்பு கொடுப்பது இல்லை. செப்டம்பர் 1-ம் தேதி புதிய நீதிபதியை அறிவிப்​பார்கள். எனக்குச் சரியாகத் தெரியவில்லை. இந்த வழக்கின் தன்மையைக் கருதி பதவி நீட்டிப்பை மல்லிகார்ஜுனைய்யாவுக்குக் கொடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது!''
''இனி, சொத்துக் குவிப்பு வழக்கு எந்தத் திசையில் பயணிக்கும்?''
''எனக்குத் தெரியாது. இன்னும் எத்தனை ஆண்டு காலம் இழுக்கப்போகிறார்களோ?''
''ஏழு ஆண்டுகள் இந்த வழக்கில் வாதாடி இருக்கிறீர்கள். வழக்கின் அத்தனை சாதக பாதகங்களும் உங்களுக்குத் தெரியும். அதனால் உங்​களுடைய பார்வையில் எப்படிப்பட்ட தீர்ப்பு வரும்?''
''தெரியாது. தெரிந்தாலும் அதை நான் சொல்ல மாட்டேன்!'' என்றவர் ஏதோ சொல்ல முயன்றார். பின் அவரே அமைதியாகி... அடுத்த சில நிமிடங்களில் சிரித்தபடி விடை கொடுக்கிறார்.
'பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் அரசியலும் அமானுஷ்யமும் கூட்டுச் சேர்ந்து இருப்பதால் மர்மங்கள் மட்டுமே நீடிக்கிறது!' என்பதை ஆச்சார்யாவின் மௌனமும் மர்மமும் கலந்த சிரிப்பு சொல்கிறது!
இரா.வினோத்
 
நன்றி ஜுனியர் விகடன்

நோன்பு பெருநாள் சிந்தனை !!!


ரமலான் பதிவு:30

நோன்பு பெருநாள் சிந்தனை !!!







நோன்பு பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி(ஸல்) அவர்கள் தொழும் திடலுக்கு புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர் புரைதா (ரலி) நூல்கள்: திர்மிதி, தாரகுத்னீ.

நபி(ஸல்) அவர்கள் நோன்பு பெருநாள் தொழுகைக்கு செல்லுமுன் ஒற்றைப்படையாக பேரீத்தப்பழத்தை உண்ணுவார்கள். அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்கள்: புகாரி, அஹ்மத்.

தொழுகைக்கு செல்வதற்கும் திரும்பி வருவதற்கும் வெவ்வேறான வழியை நபி(ஸல்) அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்: அபூதாவூத்.


நபி(ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைகளை (பள்ளியில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்கு சென்று தொழுவார்கள். அறிவிப்பாளர் அபூ ஸயீத் அல் குத்ரி (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

நபி(ஸல்) அவர்கள் இரண்டு பெருநாள் தொழுகைகளையும் பள்ளியில் தொழாமல் திடலுக்கு செல்பவர்களாக இருந்தார்கள். (அன்றைய தினம்) முதலில் தொழுகையைத் துவங்குவார்கள். அறிவிப்பாளர் அபூஸயீத் (ரலி) நூல்: புகாரி.

இரு பெருநாள் தொழுகைகளை நபி(ஸல்) அவர்களுடன் பல முறை தொழுதிருக்கிறேன் அவற்றில் பாங்கும் இகாமத்தும் சொல்லப்பட்டதில்லை. அறிவிப்பாளர் ஜாபிர் பின் சமூரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.

நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை தொழுதால் அதற்கு முன்னும் பின்னும் எந்தத் தொழுகையையும் தொழ மாட்டார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி.

நபி (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகையில்) முதல் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 7 தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 5 தக்பீர்களும் கூறுவார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அபூதாவூத்.

நபி (ஸல்) ஏழு - ஐந்து என்று பெருநாள் தொழுகையின் இரண்டு ரக்அத்களில் தக்பீர் சொல்வார்கள் அதன் முன்னும் பின்னும் எதையும் தொழ மாட்டார்கள். அறிவிப்பாளர் அம்ரு பின் ஆஸ் (ரலி) நூல்: அஹ்மத்.

இரண்டு பெருநாள்களிலும் ஜூம்ஆவிலும் நபி(ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் 'ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா...' என்ற (87வது) அத்தியாயத்தையும் இரண்டாம் ரக்அத்தில் 'ஹல் அதாக்க ஹதீஸூல் காஷியா..' என்ற (88வது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள். அறிவிப்பாளர் நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.

இரு பெருநாள் தொழுகைகளில் 'காஃப் வல் குர்ஆனில் மஜீத்' என்ற (50வது) அத்தியாயத்தையும் 'இக்தரபதிஸ்ஸாஅத்' என்ற (54வது) அத்தியாயத்தையும் நபி(ஸல்) அவர்கள் ஓதுவார்கள். அறிவிப்பாளர் உமர் (ரலி) நூல்: திர்மிதி.

நபி(ஸல்) அவர்களும் அபூபக்கர் - உமர் போன்ற நபித் தோழர்களும் (மக்களுக்கு) பிரச்சாரம் செய்யும் முன்பு பெருநாள் தொழுகைகளைத் தொழுவார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ.

உரை நிகழ்த்துவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்கள் மீது சாய்ந்தவாறு அல்லாஹ்வுக்கு அஞ்சுமாறும் அவனுக்கு கட்டுப்படுமாறும் கட்டளையிட்டார்கள். தர்மத்தை வலியுறுத்திப் பேசினார்கள். அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்.

பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும், திரைமறைவில் உள்ள பெண்களையும் கன்னிப் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) மக்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு மக்களுடன் சேர்ந்து தக்பீர் கூறுவார்கள். அறிவிப்பாளர் உம்மு அத்தியா (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்.

புஆஸ் (எனும் போர்) பற்றி அன்ஸாரிகள் இயற்றிய கவிதைகளை இரண்டு சிறுமிகள் பாடிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த அபூபக்கர்(ரலி) அவர்கள் இறைத்தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா... என்று கேட்டார்கள். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அபூபக்கரே! அந்தச் சிறுமிகளை விட்டுவிடும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள்கள் உள்ளன. இது நமக்குரிய பெருநாளாகும் என்றார்கள் இது பெருநாள் தினத்தில் நடந்தது. அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.

தப்ஸ் அடித்து பாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளைப் பார்த்து அபூபக்கர்(ரலி) அதட்டினார்கள். அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் அந்த சிறுமிகள் பாடுவதை விட்டு விடுங்கள். இது பெருநாளைக்குரிய தினமாகும் என்றார்கள். அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.


thanks to;
Engr.Sulthan

இனிய பெருநாளே.... ஈகைத் திருநாளே...!

ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும்,

புனிதமிக்க ரமலான் மாதம் முழுவதும், ஏக இறைவனின் ஏவலுக்கு கட்டுப்பட்டு உண்ணல்-பருகல்-உறவுகொள்ளல் தவிர்த்து உண்மையான நோன்பை கடைபிடித்து, அதன்மூலம் இறையச்சம் எனும் பேரொளியை இதயத்தில் இனிதே தாங்கி இந்த இனிய ஈகைத்திருநாளை இன்று கொண்டாடும், கொண்டாடவிருக்கும் சகோதர- சகோதரிகளே!
  
உங்களுக்கும்- உங்கள் குடும்பத்தார்களுக்கும்-உறவினர்களுக்கும் எமது இதயம் கனிந்த
'பெருநாள் நல் வாழ்த்துக்கள்!

என்றும் இறைப்பணியில்,

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.,
குவைத் மண்டலம்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் சார்பாக நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி!

ந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி, 17-8-12 வெள்ளியன்று மாலை மிர்காப் திருச்சி உணவாக பார்ட்டி ஹாலில் சிறப்புடன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முகவைஅப்பாஸ் தலைமையேற்க, மண்டலப் பொருளாளர் சாதிக்சதாம் முன்னிலை வகித்தார். மவ்லவி அப்துல்காதிர் மன்பயி அவர்கள், ''மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்'' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். சஹாபாக்களின் இறையச்சம் பற்றி பல்வேறு சம்பவங்கள் வாயிலாக விளக்கிய அவர், அத்தகைய இறையச்சத்தை இந்த நோன்பின் மூலம் நாம் பெறுவதோடு, ரமலானை தொடர்ந்து வரும் மாதங்களிலும் அந்த இறையச்சம் நமது உள்ளத்தில் ஆழமாக வேரூன்றி இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டார். தொடர்ந்து மண்டலச் செயலாளர் அபூஷிபா அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்பு சகோதர்கள் மட்டுமன்றி பொதுவான சகோதர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அல்ஹம்துலில்லாஹ். 

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012


வாக்கு'வாதம்'...!

வாக்குவாதம்

    தேவையற்ற விஷயத்தில் எவர் தர்க்கம் செய்வதைக் கைவிட்டு விடுகிறாரோ அவருக்குச் சுவனபதியைச் சூழ ஓர் இல்லம் கட்டப்படும். அன்றி உண்மையின் மீதிருந்தும் எவர் தர்க்கம் செய்வதைக் கைவிட்டு விடுகிறாரோ அவருக்கு சுவனபதியின் மத்தியில் ஓர் இல்லம் எழுப்பப்படும். மேலும் எவர் நற்பண்புகள் உள்ளவராக இருக்கின்றாரோ அவருக்குச் சுவனபதியின் மேலே ஓர் இல்லம் நிர்மாணிக்ப்படும் என்று  நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஉமாமாرَضِيَ اللَّهُ عَنْهُ  ஆதாரம்: திர்மதீ

   http://www.readislam.net/yellline.gif

    அல்குர்ஆனில் வீண் தர்க்கம் செய்வது நிராகரிப்பாகும் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம்: அபூதாவூத்  

http://www.readislam.net/yellline.gif

    நிச்சயமாக அல்லாஹ்விடம் மனிதர்களில் மிகவும் கோபத்திற்குள்ளாகிறவர்கள் அதிகமாகக் தர்க்கம் புரிபவரேயாவர் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: ஆயிஷாرَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ  

http://www.readislam.net/yellline.gif

    நாங்கள் விதி பற்றி தர்க்கம் செய்து கொண்டிருக்கும்பொழுது நபி صلى الله عليه وسلم அவர்கள் வந்தார்கள். (இதனைக் கண்ட) அவர்கள் மாதுளம் சுளைகளை அவர்களுடைய முகத்தில் பதித்து விட்டதைப் போன்று அவர்களுடைய முகம் சிவப்பாகும் வரை சினமுற்றனர். அப்பொழுது அவர்கள் 'இது கொண்டா கட்டளையிடப்பட்டுள்ளீர்கள்? இதற்குத்தானா நான் உங்களிடம் தூதுவனாக அனுப்பப்பட்டேன்? நிச்சயமாக உங்களுக்கு முன்னிருந்தோர் தங்களின் மார்க்க விஷயத்தில் அதிகமாக தர்க்கம் செய்ததன் காரணமாகவும், தங்களின் நபிமார்களுடன் மாறுபட்டதன் காரணமாகவும் தான் அழிந்தனர் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம்: திர்மிதீ

http://www.readislam.net/yellline.gif

     ஒரு தடவை   நபி صلى الله عليه وسلم அவர்கள் தங்களின் தோழர்களுடன் அமர்ந்திருந்தனர். (அப்பொழுது) திடீரென ஒருவன் வந்து அபூபக்கர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் மீது வசைமாரி பொழிந்து அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தினான். ஆனால் அவர்களோ ஏதும் கூறாமல் வாய் மூடி இருந்தனர். பின்னர் அவன் மறு முறையும் அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தினான். ஏனினும் அவர்கள் ஏதும் கூறவில்லை. மீண்டும் அவன் அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்திய பொழுது அவனுக்கு பதில் கூறினர்.  உடனே நபி صلى الله عليه وسلم அவர்கள் எழுந்து விட்டனர். அப்பொழுது அபூபக்கர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள், தாங்கள் என்மீது சினமுற்று விட்டீர்களா? என்று வினவினர். அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள், அல்ல; எனினும் விண்ணிலிருந்து  ஓர் வானவர் இறங்கி வந்து தங்களைப்பற்றி கூறிய வசைகளையெல்லாம் பொய்யாக்கி கொண்டிருந்தார். ஆனால் தாங்கள் பதில் கூறியதும் அந்த வானவர் சென்று விட்டார். எனினும் ஷைத்தான் (அவருடைய) இடத்தில் அமர்ந்து கொண்டான்; ஆதலின் ஷைத்தான் அங்கு அமர்ந்தபின் நான் அமர்ந்திருத்தல் தகாது' என்று கூறினர். அறிவிப்பவர்: இப்னுல் முஸையப் رَضِيَ اللَّهُ عَنْهُ அதாரம்: அபூதாவூத்

 

 

Best regards,

 

Abdul Gani




அகதிகள் பற்றி அத்வானி பேசுவதா?


செய்வதையும் செய்துவிட்டு அதற்கு தேசபக்தி முலாம் பூசுவதில் வல்லவர்கள் இந்துத்துவாக்கள். அசாம் பற்றி எறிகிறது. இந்த நேரத்தில் அதை அணைப்பது எப்படி என்று தெரியாமல் மத்திய-மாநில அரசுகள் விழித்துக் கொண்டிருக்கையில், அசாமில் கருவறுக்கப் படுபவர்கள் முஸ்லிம்கள் என்பதால் உள்ளம் குளிர்ந்த இந்த்துவாக்கள், இந்த முஸ்லிம் இனச் சுத்திகரிப்பை திசைதிருப்பும் வகையில், வங்கதேசத்திலிருந்து அகதிகளாக வந்த முஸ்லிம்களால் தான் பிரச்சினை என்று அத்வானியே பேசினார். 

அத்வானியின் கூற்று உண்மை என்றே ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் வங்கதேச அகதிகள் ஏதோ இப்போதுதான் ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்குள் வந்தது போல அத்வானி பேசுகிறார். இப்போதுள்ள காங்கிரஸ் அரசு அகதிகளின் வருகையை தடுக்கத் தவறிவிட்டது என்று கூறும் அத்வானி, தனது கட்சி மத்திய அரசில் கோலோச்சிய ஆறு ஆண்டுகளில் வங்கதேச அகதிகள் வருகையை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன என்று கூறுவாரா? அவ்வாறே அகதிகளாகவே வந்தாலும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதும், அவர்கள் நாட்டிற்கு திரும்ப செல்லும் வரையிலும் உதவிகள் செய்வதும் தான் உலக அளவில் நடந்து வரும் நிகழ்வாக உள்ளது. தமிழகத்தில் கூட இலங்கை அகதிகள் பன்னெடுங்காலமாக பாதுகாக்கப்பட்டு வருவதைக் கூறலாம். ஆனால் இந்த நியதிக்கு மாற்றமாக அகதிகளாக வந்தவர்களை கொல்வதுதான் அத்வானி படித்த பாடமோ? 

மேலும் அகதிகளாக வந்தவர்கள் பற்றி பாகிஸ்தானில் பிறந்த அத்வானி பேசுவது ஆச்சர்யமாக உள்ளது. அதோடு அத்வானியின்  இந்த அகதிகள் எனும் திசைதிருப்பும் தீர்மானம் நாடளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டு அவரது முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் [8 -8 -12 ]அசாம் விவகாரம் தொடர்பாகக் கொண்டு வரப்பட்ட ஒத்திவைப்புத் தீர்மானத்தின் மீது அத்வானி பேசியதாவது:

''அசாம் வன்முறைக்கு வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்களே காரணம். இந்தப் பிரச்னையை இனப் பிரச்னையாகவோ, இந்து-முஸ்லிம் பிரச்னையாகவோ பார்க்கக் கூடாது. வங்கதேசத்திலிருந்து அகதிகளாக அசாமுக்கு வந்தவர்களைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறி விட்டன. அதன் விளைவாக சொந்த மாநிலத்திலேயே அசாம்வாழ் இந்தியர்கள் அகதிகளாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியாவுக்கு மட்டுமின்றி ஆசிய நாடுகளின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று பேசினார்.

பின்பு அசாமில் சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுக்கவும், வன்முறையை ஒடுக்கவும் மத்திய அரசு தவறிவிட்டதாகக் கூறி பா.ஜ.க. கொண்டுவந்த ஒத்திவைப்புத் தீர்மானம் குரல் வாக்கு மூலம் தோற்கடிக்கப்பட்டது.

இனியாவது ஒரு கலவரம் நடத்தால் அதை அடக்குவதற்கு ஆலோசனை சொல்ல அத்வானி முன் வரட்டும். அதை விடுத்து வன்முறையாளர்களை ஊக்கப்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்துவதை அவர் விட்டொழிப்பது  நல்லது. அதே நேரத்தில் அத்வானி கூறியவாறு அசாம் கலவரத்தை தடுப்பதில் மத்திய மாநில அரசுகள் கவனமற்று இருந்துள்ளன என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும். 

புதன், 15 ஆகஸ்ட், 2012

கண்ணியமான சமுதாயத்தை ஒரு குற்றவாளியாக நிற்பவர் வழிநடத்துவதா?

கண்ணியமான சமுதாயத்தை ஒரு குற்றவாளியாக நிற்பவர் வழிநடத்துவதா?

முஸ்லிம்கள் நடத்தும் முதன்மையான நிறுவனங்களுள் ஒன்று LKS  ஜுவல்லர்ஸ். இந்த நிறுவனம் சார்பாக ஜெயேந்திரர் பிறந்தநாளுக்கு நாளிதழில் அரைப்பக்கம் அளவுக்கு விளம்பரம் தரப்பட்டுள்ளது. அதில் காஞ்சி சங்கராச்சாரியார் நீண்ட நாள் வாழ்ந்து எங்களின் LKS நிறுவனத்தை வழிநடத்த வேண்டும் என்று கூறியிருந்தால் அவர்களை நாம் குறை சொல்லமுடியாது. இவர்கள் மார்க்கத்தை விளங்கிய லட்சணம் இதுதான் என்று விலகிப் போயிருப்போம். ஆனால் அந்த விளம்பரத்தில்  ''சங்கராச்சாரியார் நீண்ட நாள் வாழ்ந்து சமுதாயத்தை வழிநடத்த வேண்டும்' என்று LKS கூறியுள்ளது. யாரை யார் வழிநடத்துவது? இந்த சமுதாயத்தை வழிநடத்த கேவலம் ஒரு கொலைக் குற்றவாளியா?  எங்களை வழி நடத்த எங்களின் உயிரினும் மேலான எங்கள் தலைவர் நபி[ஸல்] அவர்களின் வழிகாட்டுதல் இருக்கும் போது வேறு எவரும் எங்களை வழிநடத்த வேண்டிய அவசியமில்லை. காஞ்சி சங்கராச்சாரியின் சரித்திரம் என்ன என்பதை தரம் தரம் தாழ்ந்துவிட்ட LKS மட்டுமன்றி பொதுமக்களும் அறிந்துகொள்ள கடந்த 2010 ஆம் ஆண்டு விடுதலையில் வெளியான இதை படியுங்கள்;

காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதிமீது கொலைக் குற்றம் இருந்தும், காமவெறியர் என்று மக்களால் தூற்றப்பட்டும்கூட அவருக்கு 76  ஆம் ஆண்டு பிறந்த நாளை ஜெயந்தியை வெகு விமரிசையாகக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த ஆசாமியும் கொஞ்சமும் லஜ்ஜையின்றி ராஜ நடை போட்டுத் திரிந்து கொண்டு இருக்கிறார்.

சங்கை கெட்டுப் போன சங்கராச்சாரியாரை பார்ப்பனர்கள் தூற்றுவதில்லை; விட்டுக் கொடுப்பதில்லை. காரணம் இனவுணர்வுதான். தமிழர்களின் நிலை என்ன?

உண்டகலத்தில் ரெண்டுக்குப் போகும் மனிதர்கள் தானே!(தந்தை பெரியார் கூறிய உவமை இது.) நான் யார் தெரியுமா?

இதோ காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஸ்ரீலஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி பேசுகிறார்:

1) என்மீதுள்ள வழக்குகள் குற்றப்பிரிவு 302, 120பி,34, 201 ஆகிய பிரிவுகள் கொலை செய்யத் தூண்டுதல் கூட்டுச் சதி, பொய்யான சாட்சிகளைச் சமர்ப்பித்தல், கொலை இந்தப் பிரிவுகளில் என்னைக் கைது செய்துள்ளனர். (11.11.2004). என்மீதுள்ள முக்கிய குற்றச்சாற்று. காஞ் சிபுரம் வரதராஜ பெருமாள்கோயில் மேலாளர் ஆனந்த சர்மா மகன் சங்கரராமனைக் கொலை செய்தது. (3.9.2004)

2) என்மீதுள்ள இன்னொரு குற்றச்சாற்று சென்னை மந்தைவெளி ஆடிட்டர் ராதாகிருஷ்ணனைத் தாக்கியது (இ.பி.கோ. 120பி, 307).

3) மற்றொரு குற்றச்சாற்றும் உண்டு. சென்னை திருவல்லிக்கேணி மாதவன் என்பவரைத் தாக்கியது (31.8.2004) நெல்லை மாவட்டம் திருக்கருக்குடி பெருமாள் கோயிலில் இருந்த சிவன் கோயிலை நான் இடித்தேன். இடித்தது தவறு என்றுகூறி இந்த மாதவன் மறுபடியும் சிவன் கோயிலைக் கட்ட முயற்சி செய்தான். அதனால் மாதவனைத் தாக்கியது.

4) 1987இல் (23.8.1987) காஞ்சிபுரம் சங்கர மடத்தை விட்டு இரவோடு இரவாக தண்டத்தை விட்டு விட்டு தலைக் காவேரிக்கு ஓடினேன் (நேபாள பெண்மணி ஒருவருடன்)

5) தண்டத்தை மடத்தில் விட்டு விட்டு ஓடியதால் மடத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்றாகி விட்டது. காமத்தைத் துறந்த நிலையிலிருந்து விடுபட்டு, காதல் உலகில் சஞ்சரித்ததாக இதன் பொருள். நான் தண்டத்தைத் தூக்கி எறிந்து விட்டு மடத்தைவிட்டு ஓடியதால், காஞ்சிப் பெரியவாள் அவசர அவசரமாக விஜயேந்திரனுக்கு அடுத்த பட்டத்தைச் சூட்டி விட்டார்.

6) அன்றைய குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் முயற்சியால் மீண்டும் காஞ்சி மடத்துக்குக் கொண்டு வரப்பட்டேன். தண்டத்தைத் துறந்து மடத்தைவிட்டு நான் வெளியேறி விட்டதால், மடத்துக்கும் எனக்கும் சம்பந்தா சம்பந்தம் இல்லை என்று சொன்னதை மகா பெரியவாள் கடைசி வரை வாபஸ் வாங்கவேயில்லை. ஆனாலும் விவஸ்தைகெட்டு மடத்தில் இருந்தேன் இருக்கிறேன். 7) என்மீது வேறு குற்றச்சாற்றுகளும் உண்டு.

திருப்பதி தோமலை சேவையின்போது குலசேகரன் படியில் அமர்ந்து ஒரு முகூர்த்த நேரம் (ஒன்றரை மணி) அர்ச்சனை செய்தேன். கோயில் அர்ச்சகரைத் தவிர மற்றவர்கள் அவ்வாறு செய்யக் கூடாது என்று தெரிந்தும் அதனைச் செய்தேன். அர்ச்சகர் என்னைத் தடுத்தார்; நான் அதைச் சிறிதும் சட்டை செய்யவேயில்லை. (3.11.2000). 8) பெண் விஷயத்திலும் என்மீது ஏகப்பட்ட புகார்கள். இந்த வகையில் பிரேமானந்தா. நித்யானந்தாக்களுக்கு முன்னோடி நான். அனுராதா ரமணன் என்ற பிராமணப் பெண்ணை, கையைப் பிடித்து நான் இழுத்ததாக டி.வி.யில் கண்ணீரும், கம்பலையுமாக எடுத்துக்கூறி என் மானத்தைக் கப்பலேற்றிவிட்டார்.

9) திருப்பதி ஏழுமலையானுக்கு மூன்று கிலோ தங்கத்தில் பூணூல் செய்து அணிவித்தேன் (5.4.2002) இதன் மூலம் கடவுளையும் என் பிராமண ஜாதிக்குள் கொண்டு வந்து விட்டேன்.

10) தாம்ப்ராஸ் என்னும் பார்ப்பன சங்கத்தின் மூலம் வெளியிடப்பட்ட அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள் நூல் வெளியீட்டு விழாவில் கடவுளுக்கும் மேலே உயர்ந்தவன் பிராமணன் என்று பேசினேன் (9.10.2002). இதன்மூலம் என் ஜாதி ஆணவத்தை வெளிப்படுத்தினேன். (மும்மலத்தையும் அதாவது ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றைக் கடந்தவர்கள் தான் காமகோடி என்று சொல்லப்பட்டாலும், என்னைப் பொறுத்தவரை இவற்றிற்கு ஆட்பட்டவன் தான்).

11) மதுரை மாவட்டம் தும்பைப்பட்டிக்குச் சென்றேன், (10.11.2002). கக்கன் பிறந்த ஊர்அது. ஹரிஜன்கள் என்னைத் தொட்டு விடாதபடி தோளில் தொங்கிய துணியை எடுத்துக் காலில் சுற்றிக் கொண்டேன்.

இதன் மூலம் நான் தீண்டாமையை ஆதரிக்கும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டேன்.

12) எல்லா ஜாதியாருக்கும் ஒரே சுடுகாடு கூடாது என்ற கருத்தைச் சொன்னவன் நான் (விடுதலை 8.3.1982). இதனால் ஜாதி வெறியன் என்று தூற்றப்பட்டேன்.

13) பா.ஜ.க., ஆட்சியின் போது அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டதற்கு எனது பாராட்டுதலை வெளிப் படையாகத் தெரிவித்தேன் (தினமணி 16.5.1998).

இதன் மூலம் உலகில் சாந்தம் தழைக்க வேண்டும் ஹானி நீடிக்கக் கூடாது என்கிற பொதுவான மனிதப் பண்புக்கு எதிரியாக அடையாளம் காட்டப்பட்டேன்.

14) ரஜினியுடன் சேர்ந்து கட்சி ஆரம்பிக்கலாம் என்று விஜயகாந்துக்கு அட்வைஸ் செய்தேன்.

(குமுதம் 18.1.2001)

இதன் மூலம் ஒரு மதத் தலைவர் அரசியலில் ஈடுபடக் கூடாது என்ற கட்டுப்பாட்டை உடைத்தவன் ஆனேன்.

15) அயோத்தியில் கட்டடத்தை இடிப்பது கிரிமினல் நடவடிக்கை எனக் கூற முடியாது. இதற்காக அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் பதவி விலகத் தேவையில்லை என்று கூறினேன் தினமணி (27.11.2000). இதன்மூலம் வன்முறைக்கு வித்திட்டவன்; சட்டத்தை மதிக்க மறப்பவன் என்று விமர்சிக்கப்பட்டேன்.

16) தமிழில் குடமுழுக்கு கூடாது என்றேன்.(இந்தியா டுடே 2.10.2002).

இதன் மூலம் தமிழ் நீஷப்பாஷை என்று என் குருநாதர் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் கருத்தில் உறுதியாக நான் இருந்ததால் தமிழர்களால் நான் தூற்றப்பட்டேன்.

17) பெண்களுக்கு இடஒதுக்கீடு கூடாது என்றேன் (தி பயனீர் 17.3.1997)

பெண்களால், எதிர்க்கப்பட்டேன். விதவைப் பெண்களைத் தரிசு நிலத்துக்கு ஒப்பிட்டுப் பேட்டி அளித்தேன். வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் என்றும் கூறினேன்.

மகளிர் உண்டு இல்லை என்று எதிர்ப்புச் சூட்டைக் கிளப்பினார்கள். தி.க. மகளிர் அணியினர் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டமே நடத்தினர் (9.3.1998).

18) கொலை செய்யப்பட்ட சங்கரராமன் என் வண்டவாளங்களை எல்லாம் தண்டவாளத்தில் ஏற்றி விட்டான். எனது இன்னொரு பக்கமான ஆபாச நடவடிக்கைகளை எல்லாம் வண்டி வண்டியாக ஏற்றி விட்டான். (தனிப் பட்டியல் கீழே)

19) குற்றமற்றவன் என்று நீதிமன்றத்தால் நிரூபிக்கப்படும்வரை மடத்தின் பதவியிலிருந்து நான் விலக வேண்டும் என்று துவாரகா பீடம் ஸ்வரூபானந்துகூட கூறினார். (தி இந்து 3.12.2004) நான் சட்டை செய்யவில்லையே! ஆனாலும் பார்த்தேளா, எனது 76ஆவது ஜெயந்தி விழா ஜாம்ஜாமென்று நடக்கிறது. பத்திரிகைகளில் எல்லாம் பக்கம் பக்கமாக விளம்பரங்கள்! பிராமணாள் ஒரு பக்கம் சூத்திராள் இன்னொரு பக்கம் ஜமாயிக்கிறார்கள். எவ்வளவு கேவலமாக எங்கள் நடத்தை இருந்தாலும் எங்களவாள் விட்டுக் கொடுக்க மாட்டவே மாட்டாள். இவ்வளவு நடந்திருக்கே... எங்க மனுஷாள் என்மீதோ, மடத்தின் மீதோ கரித்துக் கொட்டியதுண்டா?

உங்களவாள் மாதிரியா? உண்ட வீட்டுக்கே ரெண்டகம் என்பதெல்லாம் எங்களைப் பொறுத்தவரை இல்லாத ஒன்று. ஆயிரம் பெரியார் தான் வரட்டுமே உங்களில் விபீஷணன்களை நாங்கள் உற்பத்தி செய்து கொண்டே இருப்போம்!

அந்தக் கைத்தடிகள் அனுமார்கள் இனாமாக எங்களுக்குக் கிடைக்கும் போது எங்களுக்கு ஏது பயம்?

ஹி... ஹி.... 

thankas ; viduthalai [minsaram 31-7-2010]

தகவல் நன்றி; முஹம்மது ரயீசுத்தீன்.

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் நடத்தும் இஃப்தார் [நோன்பு திறக்கும்] நிகழ்ச்சி!

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் நடத்தும்.... 

இஃப்தார் [நோன்பு திறக்கும்] நிகழ்ச்சி!

நாள்;17-8 -12 வெள்ளிக்கிழமை. மாலை 5 மணிக்கு [இன்ஷா அல்லாஹ்]

இடம்; திருச்சி உணவகம் பார்ட்டி ஹால், மிர்காப்- குவைத்

தலைமை; அபூஷிபா[மண்டலச் செயலாளர்]


சிறப்புரை; மவ்லவி. அப்துல்காதிர் மன்பஈ.

[தலைப்பு; மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்]

நன்றியுரை; சாதிக்சதாம் [மண்டலப் பொருளாளர்]

அழைப்பின் மகிழ்வில்;

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்- குவைத் மண்டலம்.

தொடர்புக்கு; 65653431 ,97659759 ,99324815 ,97145046 .