திங்கள், 30 ஏப்ரல், 2012

குவைத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் மாபெரும் கண்டனக் கூட்டம்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

நேற்று அயோத்தி..... இன்று இலங்கை தம்புள்ளா.... நாளை?

இலங்கை தம்புள்ளா பள்ளிவாசல் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், தாக்குதலை நடத்திய காடையர்களை கைது செய்யக்கோரியும், பள்ளிவாசலை இடமாற்றத் துடிக்கும் சிங்கள பேரினவாத அரசைக் கண்டித்தும், 
குவைத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் மாபெரும் கண்டனக் கூட்டம்.
 
நாள் : 04 -05 -2012 வெள்ளிக்கிழமை 

நேரம்; மாலை சரியாக 6:30 மணிக்கு [இன்ஷா அல்லாஹ்]

இடம் : மன்னுசல்வா உணவகம்-கீழ்த்தளம்[மிர்காப்]
 
தலைமை; கூத்தூர் ஜாஃபர் - கவுரவ ஆலோசகர் இதஜ.

கிரா'அத்; ஜாஹித் பிர்தவ்ஸ், மண்டலத் துணைத்தலைவர் இதஜ, 

நிகழ்ச்சித் தொகுப்பாளர்; முகவைஅப்பாஸ் - மண்டலத்தலைவர் இதஜ.

வரவேற்புரை; அபூ ஷிபா -மண்டலச் செயலாளர் இதஜ.

கண்டனக் கணைவீசும் அமைப்புகள்;
 
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்.

தமிழ்நாடு முஸ்லிம் கலாசாரப் பேரவை.

காயிதே மில்லத் பேரவை.

குவைத் இந்திய பிடர்நிட்டி பார்ம்.

தமிழர் மறுமலர்ச்சிப் பேரவை .

தாய்மண் கலை இலக்கியப் பேரவை .

நன்றியுரை; சாதிக் சதாம்- மண்டலப் பொருளாளர் இதஜ.

இனவாதம் ஒழிப்போம்; இலங்கையில் இறையாண்மை காப்போம்.

அனைவரையும் அன்புடன் அழைக்கிறது;
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (INTJ)
குவைத் மண்டலம்
தொடர்புக்கு; 65653431 ,97659759 ,60002975 ,97102763 , 99817230 .


ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

இலங்கையில் மஸ்ஜித் மீதான தாக்குதல்; கருணாநிதியின் காலம் கடந்த கண்டனம்!



சென்னை, ஏப். 29: இலங்கையில் மசூதி இடிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ளா என்ற இடத்தில் இருந்த மசூதி ஒன்றினை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்த பிட்சுகள் கடப்பாரை சம்மட்டிகள் கொண்டு இடித்து நாசம் செய்திருக்கின்றனர்.

மசூதியை அகற்றி அந்த இடத்தை புத்த புனித இடமாக மாற்ற இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

மதத்தின் பெயரால் நடந்த வன்முறையை இலங்கையிலேயே பலர் கண்டித்திருக்கின்றனர்.

இலங்கை முழுவதையும் ராஜபட்ச அரசு பெüத்த மயமாக்குவதில் கண்ணும் கருத்துமாக இருந்து செயல்பட்டு வருகிறது என்பதை அனைவரும் அறிவர்.

இந்த நோக்கத்தை ஈடேற்றிக் கொள்வதற்காகத்தான் தமிழர்கள் வாழும் பகுதிகளில் அனைவரையும் விரட்டி அடித்துவிட்டு, சிங்களர்களைக் குடியேற்றுதல் மற்றும் இந்துக் கோயில், கிறிஸ்தவத் தேவாலயங்களையும் நாசப்படுத்துவது போன்ற வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. இதுபோன்று நாசப்படுத்துவதை நாகரிக உலகம் நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது. இந்த நிகழ்ச்சிகள் கடும் கண்டனத்துக்குரியவை.

செய்தி நன்றி;தினமணி.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் இலங்கைத் தூதரக முற்றுகை-[தினத்தந்தி]


சனி, 28 ஏப்ரல், 2012

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இலங்கையில் தம்புள்ளா பகுதில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹைரிய்யா, புத்தமத பிக்குகள் மற்றும் சிங்கள காடையர்களால் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்தும், அந்த மஸ்ஜிதை இடம் மாற்றத் துடிக்கும் ராஜபக்சே அரசைக் கண்டித்தும் நேற்று [28 -4 -12 ] சனிக்கிழமை மாலை 4 .30 மணியளவில், சென்னையில் உள்ள இலங்கைத் துணைத்தூதரக  முற்றுகைப் போராட்டத்தை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது.

இப்போராட்டத்திற்கு மாநில நிர்வாகிகள் முஹம்மது முனீர், செங்கிஸ்கான், ஆபூபக்கர் தொண்டியப்பா, அபூ பைசல், இக்பால் ஆகியோர் தலைமை தாங்கினார். 

ஆக்ரோசமாக கிளம்பிய அடலேறுகளின் ஆர்ப்பரிப்புக்குப் பின் காவல்துறை கைது செய்து ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள மாநகராட்சி சமூக நலக்கூடத்தில் அடைத்தது. பின்னர் மாலை ஆறு மணிக்கு விடுவிக்கப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ்.




வியாழன், 26 ஏப்ரல், 2012

ஜாமீன் கிடைத்தும் திறக்காத சிறைக்கதவு; திறந்து விட்ட உயர்நீதிமன்றம்!

ரு குற்றவாளி என கருதப்பட்டு கைது செய்யப்பட்ட ஒருவருக்கோ, அல்லது தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிக்கோ கோர்ட்டு ஜாமீன் வழங்குவதற்கு முன்னால், அவருக்காக ரேஷன் கார்டு உள்ள ஒருவர் உத்திரவாத பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், சில வழக்குகளில் வைப்புத் தொகையும் செலுத்த வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிடுவதை நாம் நடைமுறையில் பார்த்திருக்கிறோம். ஆனால் அதில் கூட முஸ்லிம்களுக்கு என்றால் சில நீதிபதிகள் கூடுதல் நிபந்தனை விதிப்பது தொடர்கதையாக உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரத யாத்திரை பிரசாரத்துக்காக வந்த மதுரை வந்த அத்வானியின் பயணத்தின் பாதையில் திருமங்கலம் ஆலம்பட்டி பாலத்தின் கீழ் பகுதியில் பைப் வெடிகுண்டு வைத்து இருப்பது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. உரிய நேரத்தில் வெடிகுண்டை கண்டுபிடித்து போலீசார் அதை செயல் இழக்க செய்தனர். இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த இஸ்மத் உள்ளிட்ட சிலரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். கைதான இஸ்மத்துக்கு, திருமங்கலம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. அப்போது, கிரேடு1 பதவியில் இருக்கும் அரசு அதிகாரி ஒருவர் இஸ்மத்துக்காக சொத்து ஜாமீன் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. 

இந்த நிபந்தனை காரணமாக, இஸ்மத்தால் ஜெயிலில் இருந்து வெளியே வரமுடியவில்லை. தனக்கு விதிக்கப்பட்ட கடுமையான ஜாமீன் நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும் என்று இஸ்மத், மதுரை மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை மாவட்ட கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனால் மதுரை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். அந்த அப்பீல் மனு நீதிபதி ஆறுமுகச்சாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இஸ்மத் தரப்பில் ஆஜரான வக்கீல் எஸ்.எம்.ஏ.ஜின்னா, 
"இஸ்மத்தின் தந்தை கூலி தொழிலாளி. அவர்களுடைய உறவினர்கள் யாரும் அரசு பணியில் இல்லை. பொதுவாக நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களே குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். கடுமையான நிபந்தனை காரணமாக தொடர்ந்து ஒருவர் ஜெயிலுக்குள்ளேயே இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளக்கூடாது என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது" என்றார்.

மனுவை விசாரித்த நீதிபதி, கைதான இஸ்மத்துக்கு கீழ்கோர்ட்டு விதித்த கடுமையான நிபந்தனையை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், ரேஷன் கார்டு வைத்திருக்கும் இஸ்மத்தின் உறவினர் யாராவது ஒருவர் ஜாமீன் பத்திரம் கொடுத்தால் போதுமானது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

ஜாமீன் வழங்குவதில் வழக்கமாக பின்பற்றப்படும் நடைமுறைகளில் இருந்து மாறுபட்டு, ஜாமீன் கிடைத்தும் சிறையில் இருந்து வெளியே வரமுடியாத அளவுக்கு திருமங்கலம் நீதிமன்றம், கூடுதலாக கடுமையாக நிபந்தனை விதித்ததற்கு காரணம் இது அத்வானி சம்மந்தப்பட்டது என்பதாலா? அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் முஸ்லிம் என்பதாலா? ஏற்கனவே பயங்கரவாதிகள் பலருக்கு ஜாமீன் வழங்கும் நீதிமன்றங்கள், கர்நாடக குண்டுவெடிப்பு வழக்கின் 31 வது குற்றவாளியான மதானிக்கு மட்டும் தொடர்ந்து ஜாமீன் மறுத்து வருவது குறித்து நடுநிலையாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலவும் நிலையில், திருமங்கலம் நீதிமன்றத்தின் ஜாமீனுக்கான கூடுதல் நிபந்தனை என்பது நீதியின் பாரபட்சமான பார்வையோ என்ற கருத்தும் வலுவாக எழுகிறது. ஆனாலும் மதுரை உயநீதிமன்றக் கிளை நீதியை நிலைநாட்டியுள்ளது சற்றே ஆறுதல் தரும் விசயமாக உள்ளது. நீதிமன்றங்கள் முஸ்லிம்களுக்கு சலுகை காட்டவேண்டாம். தண்டிப்பதில் தாட்சண்யம் காட்டவேண்டாம். ஆனால் சட்டம் வழங்கியுள்ள உரிமையை அவர்களுக்கும் கிடைக்க வழி செய்யவேண்டும். அதுதான் நீதியும் கூட. 

எதிர்கட்சியை எதிரிக்கட்சியாக்கும் மம்தா பானர்ஜியின் ஆவேச அரசியல்!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவ்வப்போது தனது அதிரடி நடவடிக்கைகளால் பரபரப்புச் செய்தியில் இடம் பிடித்து வருகிறார். எளிமையான அவரது தோற்றம், சில இடங்களுக்கு நடந்தே செல்லுதல், ஆஸ்பத்திரிகளில் அதிரடி சோதனை மேற்கொள்ளுதல், தீ விபத்து நடந்த இடத்தில் நேரடியாக சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லுதல், கூட்டணியில் அங்கம் வகித்தாலும் மத்திய அரசை பல்வேறு விசயங்களில் கிடுக்கிப்பிடி போட்டு காரியம் சாதித்தல், இவை எல்லாவற்றையும் விட, கடந்த மாதம் ரெயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்தியதற்காக தன் கட்சியைச் சேர்ந்த மூத்த மந்திரி தினேஷ் திரிவேதி மீது எடுத்த அதிரடி நடவடிக்கை. இவைகள் எல்லாம் மம்தாவின் இமேஜை மக்கள் மத்தியில் ஒரு பக்கம் உயர்த்திக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் அவரது வேறு வகையான சில நடவடிக்கைகள் அவருக்கு அதே மக்கள் மத்தியில் பின்னடைவையும் உண்டாக்கி வருவதை கவனிக்கத் தவறிவிட்டார்.

அரசியல் தலைவர்களை கார்ட்டூன் வரைவது என்பது சாதரணமாக நடைமுறையில் உள்ளதுதான். ஆனால் சமீபத்தில் மம்தாவை கிண்டல் செய்து கார்ட்டூன் வரைந்த 2 பேராசிரியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இது கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்ற விமர்சனம் ஒருபுறம் எதிரொலிக்கும் நிலையில், இந்த பரபரப்பு ஓய்வதற்குள் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் அடுத்த அதிரடியை மேற்கொண்டுள்ளது.
 
''மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்காரர்கள் வீட்டில் திருமணம் செய்வதை திரிணாமுல் காங்கிரசார் தவிர்க்க வேண்டும். கம்யூனிஸ்டுகாரர்களிடம் எந்த உறவும் நமக்கு வேண்டாம். சொந்தக்காரர்களாக இருந்தால்கூட அவர்களிடம் சம்பந்தம் வேண்டாம். இன்னும் சொல்லப் போனால், கம்யூனிஸ்டுகளிடம் பேசுவதைக்கூட கைவிடவேண்டும். டீக்கடையில் அவர்களுடன் சகஜமாக பேசக்கூடாது. அவர்களது உறவே நமக்கு வேண்டாம். கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்களுடன் நாம் தொடர்ந்து பழகி வந்தால், அவர்களை எதிர்க்க இயலாமல் போய்விடும். மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் உங்கள் உறவினராக இருந்தால்கூட இப்போதைக்கு சற்று ஒதுக்கி வையுங்கள்.
அடுத்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் வரையிலாவது கம்யூனிஸ்டுகளுடன் தொடர்பு வேண்டாம். திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த ஒவ்வொரு தொண்டனும் இதில் உறுதியாக இருக்க வேண்டும்'' என்று மேற்கு வங்க உணவு மந்திரி ஜோதிபிரியா மல்லிக் கூறி, அடுத்த பரப்பரப்பை தொடங்கி வைத்துள்ளார்.

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; பகைவனும் இல்லை என்ற அடிப்படையில் தான் எந்த காங்கிரசிலிருந்து பிரிந்தாரோ அந்த காங்கிரசுடனே தேர்தல் உடன்பாடு கண்டார் மம்தா பானர்ஜி. மத்திய நடுவன் அரசில் அங்கம் வகித்தார். ஆனால் தனது மாநிலத்தின் எதிர்கட்சியான கம்யூனிஸ்டு கட்சியை எதிரிக் கட்சியாக பார்ப்பது சரியான அணுகுமுறை அல்ல. அதிலும் அக்கட்சியினரோடு ஒட்டு உறவு இருக்கக் கூடாது என இரு கட்சி தொண்டர்களுக்கு மத்தியில் ஜென்மப்பகையை உண்டாக்கும் வார்த்தைப் பிரயோகங்கள் ஆரோக்யமான அரசியலுக்கு அழகல்ல என்பதை மம்தா புரிந்து கொள்ளவேண்டும். தமிழகத்தில் திமுகவை எதிரிக் கட்சியாக கருதும் ஜெயலலிதாவையும் தாண்டியதாக மம்தாவின் நடவடிக்கை உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுவதும் நமக்கு நியாயமாகவே படுகிறது. அரசியல் என்பதை கொள்கை மோதலாக கருதவேண்டுமே தவிர, அதை குடும்ப மோதல் அளவுக்கு நிலைமையை மோசமாக்கும் செயலை நமது அரசியல்வாதிகள் கைவிடும் நாள் எப்போது?
 


ஒரு பிச்சை'க்குப் பின்னால் ஒரு லட்சியம்!

சிக்கு பிச்சை எடுப்பார் சிலர். பல வீட்டு ருசிக்கு பிச்சை எடுப்பார் சிலர். பணத்தை சேகரிப்பதற்காக பிச்சை எடுப்பதையே பிழைப்பாக கொண்டு திரிவோர் பலர். இவரும் பிச்சை எடுத்தார். இந்த பிச்சைக்குப் பின்னால் ஒரு லட்சியமும் விடாமுயற்சியும் இருந்தது. அது என்ன? ''மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்து மகளை என்ஜினீயரிங் படிக்க வைக்கும் ஊனமுற்றவர்'' என்று ஒரு செய்தி நமது புருவத்தை உயர்த்தியது. நமது பார்வையை அந்த செய்தியில் செலுத்தினோம்.

புதுக்கோட்டையை பூர்வீகமாக கொண்ட ரவிச்சந்திரன் என்பவர் இவர் கடந்த 86ம் ஆண்டு நடந்த ரெயில் விபத்தில் தனது வலது காலை இழந்தார். ஆனாலும் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தாமல், ஒற்றைக்காலுடன் தன்னால் இயன்ற வேலையை செய்து பிழைத்து வந்திருக்கிறார். திருமணமும் செய்து இரு பெண்மக்களை பெற்று வளர்த்து வந்திருக்கிறார். குழந்தைகள் படிக்க வேண்டிய காலம் நெருங்கியது. தனது வயிற்றுக்காக பிச்சை எடுக்காமல் கவுரவமாக வாழ்ந்த அவர், குழந்தைகள் படிப்பிற்கு தனது ஊதியம் போதாத காரணத்தால், தன் குழந்தைகளை எப்படியேனும் கல்விக்கடலில் கரைசேர்க்க எண்ணியவராக, சுய கவுரவத்தை விட்டு மகள்களின் படிப்புக்காக மதுரை பெரியார் பஸ் நிலையத்திலும், வீதிவீதியாகவும் உதவி கேட்க ஆரம்பித்தார். 
போவோர் வருவோரிடம் தன் குழந்தைகளின் படிப்புக் காகத்தான் இப்படி யாசகம் பெறுகிறேன் என்று கூறியே பணம் கேட்டார். நல்ல உள்ளங் களின் உதவியால் தற்போது அவருடைய மூத்த மகள் புதுக்கோட்டையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 2ம் ஆண்டு பி.இ. படிக்கிறார். அடுத்த மகள் பிளஸ்1 தேர்வு எழுதியுள்ளார். யாசகம் பெற்று பிள்ளைகளை படிக்க வைத்தாலும் அது போதுமானதாக இல்லை. இதற்காக பலரிடம் கடனும் வாங்கியுள்ளார். 
இந்த நிலையில் தனியார் தொண்டு நிறுவனத்தின் முயற்சியால், இவரது பி.இ. படிக்கும் மகளுக்கு லேப்டாப் வழங்கி கவுரவித்துள்ள மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம், 'படிப்பது தொடர்பாக எந்த உதவி வேண்டுமானாலும் செய்வேன்' என்று கூறியுள்ளார். 

கல்வி வளர்சிக்காக இந்த பட்ஜெட்டில் 17 .552 கோடி நிதி ஒதுக்கியுள்ள தமிழக முதல்வர், தனியார் பள்ளிகளிலும் ஏழை மாணவ மாணவியருக்கு 25 சதவிகித வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று உத்தவிட்டுள்ள முதல்வர், ரவிச்சந்திரன் பிள்ளைகளின் கல்விசெலவை முழுமையாக அரசே ஏற்கும் என்று அறிவித்தால் அந்த தந்தையின் லட்சியம் சிரமமின்றி நிறைவேறும். தமிழகத்தை கல்வியிலே முதன்மை மாநிலமாக்க முயற்சிக்கும் முதல்வரின் நோக்கத்திற்கு ஏற்ற செயலாகவும் இருக்கும். அதோடு இலவசங்கள் வழங்குவதை நிறுத்தி, அதற்காக ஒதுக்கப்பட்ட தொகைகளை கொண்டு ஏழைகளுக்கு இலவச கல்வி வழங்க முதல்வர் ஜெயலலிதா முன் வரவேண்டும். 

இந்த இடத்தில் பிச்சைக்காரர்கள் பற்றி சொல்லவேண்டியுள்ளது. வேற வழியே இன்றி நிர்பந்தம் காரணமாக பிச்சை எடுப்பதை குறைகாண முடியாது. ஆனால் ஏதேனும் ஒரு வழியில் சம்பாதிக்க வழிஇருந்தும் முதலில்லா வியாபாரமாக பிச்சை எடுப்பவர்கள் கண்டத்திற்குரியவர்கள். பிச்சை எடுத்தே பல லட்சம் சேர்த்தவர்கள் பற்றிய செய்திகளெல்லாம் பத்திரிக்கைகளில் அவ்வப்போது வருகின்றன. இவர்களைப் போன்றவர்களால் உண்மையிலேயே வறுமையில் வாடுபவர்களை கூட மக்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலையை ஏற்படுத்தி விட்டார்கள். இப்படிப்பட்ட மானத்தை இழந்து பொருளீட்டுவதில் மகிழ்ச்சி காணும் கூட்டத்திற்கு மத்தியில், மானத்தை இழந்தேனும் மகள்களின் லட்சிய வாழ்க்கைக்கு வழிகாட்டிய ரவிச்சந்திரன் பாராட்டுக்குரியவர் தான் என்பதில் சந்தேகமில்லை.


ஸ்டாலினின் மதுரைப் பயணம்; ஆட்டம் காணும் அழகிரியின் ராஜ்ஜியம்..?

ந்திய நாட்டின் தலைநகருக்கு மகளான கனிமொழியையும், தமிழகத்தின் தலைநகருக்கு மகனான ஸ்டாலினையும், தமிழகத்தின் மத்தியத் தலைநகராம் மல்லிகை மணக்கும் மதுரையில் மற்றொரு மகனான அழகிரியையும் அதிகார பீடத்தில் வைத்து அழகு பார்த்தார் திமுக தலைவர் கருணாநிதி. இவர்களில் அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் எக்கசக்க பிரியம் இருப்பதாக காட்டிக்கொண்டாலும், கருவாட்டு நாற்றத்தை போர்வை போட்டு மூடி மறைத்து விடமுடியாது என்பதைப் போல், இவ்விருவரின் பனிப்போரும் பட்டவர்த்தனமாக அவ்வப்போது பத்திரிக்கைகளில் பதிவாகிவிடுகின்றது. மதுரைக்கு திமுக தலைவரே செல்லவேண்டும் என்றாலும் அழகிரியின் கண்னசைவின்றி மதுரை எல்லைக்குள் நுழையமுடியாது என்று கூறப்படும் அளவுக்கு தென்மாவட்டத்தின் ஏகபோக அதிகார மையமாக திகழ்ந்தார் அழகிரி. தென் மண்டல அமைப்புச் செயலாளராக கட்சியில் முடிசூடிய அழகிரி, தென் மாவட்ட முக்கிய கட்சிப் பிரமுகர்கள் தொடங்கி, முன்னால் அமைச்சர்கள் வரை தனது கட்டளைக்கு கீழ் செயல்படும் வகையில் பார்த்துக் கொண்டார். 

இந்நிலையில் கட்சித் தலைவர் பதவி தந்தால் ஏற்றுக் கொள்வேன் என்று அழகிரி வெளிப்படையாக சொல்லியும் கூட, கட்சி அவருக்கு மாநில அரசியலில் முக்கிய பதவியை வழங்காமல், மத்திய அமைச்சராக்கி டெல்லிக்கு விரட்டியது. இதில் கருணாநிதியின் வாரிசுகளில் முதல் மத்திய அமைச்சர் என்ற அந்தஸ்து கிடைத்தாலும், மாநில அதிகாரத்தில் ஸ்டாலினுக்கு போட்டியாக அழகிரி உருவாகிவிடக் கூடாது என்பதற்காகவே அவரை டெல்லிக்கு தள்ளி விட்டதாக அரசியல் அரங்கில் பேசப்பட்டது. இதை உண்மைப்படுத்தும் வகையில் அழகிரியும் தான் ஏற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் பதவியில் ஈடுபாடு காட்டாமலும், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெரும்பாலும் பங்கேற்காமலும் காலம் கடத்தி வருகிறார். 

இது ஒருபுறமிருக்க, திமுக பொருளாளரும், இளைஞரணிச் செயலருமான ஸ்டாலின், மதுரை மாநகர் மாவட்ட மற்றும் புறநகர் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான நேர்காணலை ஏப்ரல் 14, 15-ம் தேதிகளில் நடத்தினார். ஏப்ரல் 15-ம் தேதி தமிழக அரசைக் கண்டித்து நடந்த பொதுக் கூட்டத்திலும் அவர் பேசினார். இந்த நிகழ்ச்சிகளை அழகிரியின் ஆதரவாளர்கள் புறக்கணித்துவிட்டனர்.

இளைஞரணி நேர்காணலுக்கான அழைப்பிதழில் அழகிரியின் பெயர் இடம் பெறவில்லை, பொதுக்கூட்டம் குறித்து அவரிடம் ஆலோசனை நடத்தவில்லை எனக் கூறி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சிகளை அழகிரியின் ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். அழகிரி கூறியதால்தான் அவரது ஆதரவாளர்கள் நிகழ்ச்சிகளைப் புறக்கணித்ததாகவும் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஸ்டாலின் நிகழ்ச்சிகளைப் புறக்கணித்த மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் 17 பேருக்கு விளக்கம் கேட்டு கட்சி மேலிடம் நோட்டீஸ் அனுப்பியது. அவர்களில் சிலர் விளக்கம் அளித்து தலைமைக்கு கடிதங்கள் அனுப்பினர். இந்நிலையில் அழகிரியின் நம்பிக்கைக்கு பாத்திரமான மதுரை இசக்கி முத்து கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, 'திமுகவில் இவ்வாறு நீக்குவது சாதரணமான ஒன்றுதான். இதுபற்றி கேள்வி எழுப்பும் நீங்கள் தினமும் அதிமுகவில் நீக்கப்படுபவர்கள் பற்றி கேட்டதுண்டா? என்று நிருபர்களை மடக்கினாரே தவிர, உருப்படியான பதிலைச் சொல்லவில்லை.

மேலும், தனது ஆதரவாளர்கள் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளாதது பற்றி முன்பு இதே அழகிரி, யார் வந்தாலும் நிர்வாகிகள் வரவேற்கவேண்டும் என்று அவசியமில்லை என்று கூறியிருந்தார். 

கட்சியின் மாநிலப் பொருளாளரும், இளைஞர் அணிச் செயலாளரும், முன்னாள் துணை முதல்வரும், மு.கருணாநிதியின் மகனுமான ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்காதது தவறுதான் , எங்கள் அண்ணன் அழகிரியை அவர்கள் அவமதித்தது தான் எங்கள் புறக்கணிப்புக் காரணம் என்று நோட்டீஸ் அனுப்பப்படுள்ள சிலரே ஒப்புக்கொண்ட நிலையில், ஒரு முக்கிய நிர்வாகி வந்தால் கூட அவரை வரவேற்க வேண்டும் என்று அவசியமில்லை என்று அழகிரி சொல்லியுள்ளது ஸ்டாலினுக்கு நெத்தியடிதான். 

இப்படி மல்லிகை நகராம் மதுரையில் ஸ்டாலினுக்கு எதிராக ஒரு புயல் வீசி வரும் நிலையில், மாங்கனி நகராம் சேலத்தில் வீரபாண்டியார் ஒருபக்கம் ஸ்டாலினுக்கு எதிராக கொடி பிடிக்கிறார். ஸ்டாலின் நேரடியாக தேர்வு செய்த இளைஞர் அணி நிர்வாகிகளில் அதிமுக உறுப்பினர்கள் சிலர் அங்கம் வகிப்பதாக அசகாய குண்டை வீசியுள்ளார். ஏற்கனவே கட்சியின் மாநிலப் பொதுக்குழுவில் வீரபாண்டியாருக்கு எதிராக வீறு கொண்டு எழுந்து கூச்சல் போட்டனர் ஸ்டாலின் ஆதரவாளர்கள் என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அதற்கு முன்பு ஸ்டாலினுக்கு எதிராக பாய்ச்சல் காட்டிய பரிதி இளம்வழுதி பம்மியிருக்கிறார். ஆக திமுகவின் வாரிசுரிமைப் போர் தொடங்கிவிட்டது. இதில் ஜெயிக்கப்போவது யார்? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. 

அவைக்கு வாராதவர் அஞ்சா நெஞ்சனா? விஜயகாந்தை விளாசிய அமைச்சர்!

மிழக சட்டமன்றத்தின் சாபக்கேடா என்னோவா எதிர்கட்சித் தலைவராக வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு சட்டமன்றத்திற்கு செல்வது எட்டிக்காயாக கசக்கிறது போலும். இன்றைய முதல்வர் ஜெயலலிதா எதிர்கட்சித் தலைவராக இருந்த போதும் அவைக்கு வராமல் ஆறுமாதத்திற்கு ஒருமுறை கையெழுத்துப் போட்டு காலத்தை கடத்தினார். அதே வழியில் இப்போது திமுக தலைவர் கருணாநிதியும் கையெழுத்து போட்டு காலத்தை கடத்துகிறார். மக்களுக்காகவே கட்சி தொடங்கினேன் என்று மார்தட்டும் தட்டும் தற்போதைய எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்தும் சபைக்கு வராமல் காலம் கடத்துகிறார். 

இவர் சட்டமன்றத்தில் நாகரீகமற்ற முறையில் நடந்து கொண்டதாக கூறி கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் பத்துநாள் சஸ்பெண்டு செய்யப்பட்டார். அந்த பத்துநாள் நிறைவுற்று பல நாட்கள் ஆனால் பின்னும், பல்வேறு முக்கிய மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதம் சட்டமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், சட்டசபைக்கு செல்லாமல் புறக்கணிக்கிறார். இது தொடர்பாக தேமுதிக உறுப்பினரின் பேச்சால் விஜயகாந்த் ஏகப்பட்ட கேலிக்கு உள்ளாகியுள்ளார்.

பேரவையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நெடுஞ்சாலை மற்றும் பொதுப் பணித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தைத் தொடங்கி வைத்து பேசிய தேமுதிக உறுப்பினர் வி. முத்துகுமார் (விருத்தாசலம்) விஜயகாந்தை அஞ்சா நெஞ்சன் எனப் புகழ, அப்போது குறுக்கிட்ட நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தேமுதிக தலைவர் அஞ்சாத நெஞ்சம் உடையவர் என்றால் ஏன் சட்டப் பேரவைக்கு வரவில்லை எனக் கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த அக்கட்சியின் கொறடா வி.சி.சந்திரகுமார் (ஈரோடு கிழக்கு): பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்க விஜயகாந்த்துக்கு 10 நாள்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். பேரவையில் வழங்கப்பட்ட தண்டனையை ஏற்கவில்லை என்பதால்தான் நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளார். தீர்ப்பு வந்தபிறகு அவர் பேரவைக்கு வருவார். எங்களுக்கு எந்தவித அச்சமும் கிடையாது'' என்று ஒரு நகைச்சுவையான விளக்கம் சொன்னார். 

இதற்கு மற்றொரு சினிமாக்காரரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் (தென்காசி): நீதிமன்றத்தில் 5 ஆண்டுகள் வரை வழக்கு நிலுவையில் இருந்துவிட்டால் விஜயகாந்த் பேரவைக்கு வராமலேயே இருந்து விடுவாரா? பேரவைக்கு வராமல் இருந்தால் தொகுதி மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது'' என்று நெத்தியடியாக சொல்ல, மூத்த அரசியல்வாதியான பண்ருட்டி ராமச்சந்திரனோ ரஜினிகாந்த் பாணியில், எப்ப வருவார் எப்படி வருவார் என்று தெரியாது. ஆனால்
வேண்டிய நேரத்தில் அவர் வருவார்'' என்று சிரிப்பு மூட்டினார். 

இதையெல்லாம் விட, சம்மந்தப்பட்ட விஜயகாந்த், ''
சட்டசபைக்கு வர தைரியம் இருக்கிறதா? என்று அ.தி.மு.க.வினர் கேட்டுள்ளனர். அப்படியில்லாமலா தமிழ்நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளுக்கும் பாதுகாப்பு இல்லாமல் சென்று மக்களை சந்தித்து வருகிறேன். அவர்களது தலைவர் அவ்வாறு சென்று வர முடியுமா? என்று கேட்டு கிச்சு கிச்சு மூட்டியுள்ளார். இவர் சட்டமன்றத்திற்கு வராதது பற்றி கேட்டால் அதற்கு பதில் சொல்லாமல்., தொகுதிக்கு போவது பற்றி பேசுகிறார். இவர் தொகுதிக்கு போகும்போது ஒரு போலீஸ் கூட இல்லாமல் ரொம்ப தைரியமாக[!] செய்யும் இவர், சட்டமன்றத்திற்கு செல்ல பயப்படுவது ஏன்? அங்கு இவரை என்ன செய்துவிடுவார்கள் என்று பயப்படுகிறார்? மேலும் மற்றொரு இடத்தில், சட்டமன்றத்திற்கு தொடர்ந்து செல்லவேண்டும் என்று சட்டம் எதுவும் இருக்கிறதா? என்று கேட்டு தனது அறியாமையை வெளிப்படுத்துகிறார்.

சட்டசபைக்கே செல்லாமல், சபையில் மக்கள் பிரச்சினையை பேச முடியவில்லை; எனவே மக்கள் மன்றத்தில் பேசுகிறேன் என்றெல்லாம் விஜயகாந்த் சொல்வது கண்துடைப்பாகவே மக்களிடம் கருதப்படும் என்பதை விஜயகாந்த் உணர்ந்து, இந்த கூட்டத்தொடர் நிறைவுறும் தருவாயில் உள்ளதை அறிந்து, தனது பதவிக்கு உள்ள அதிகாரத்தை புரிந்து, சபை நிகழ்ச்சியில் பங்கேற்று சாதிப்பாரா? அல்லது சினிமா வசனம் போல் பேசியே காலம் கடத்துவரா? என்று மக்கள் கண்காணிக்கிறார்கள் என்பதை விஜயகாந்த் புரிந்துகொள்ளட்டும்.

திங்கள், 23 ஏப்ரல், 2012

அட்சய திருதியை நாள்; பக்தியின் பெயரால் ஒரு வியாபார மோசடி!

ட்சய திருதியை நாளில் நகை வாங்கினால் செல்வம் கொழிக்கும் என்ற நம்பிக்கை இந்துக்கள் தாண்டி, இன்று பரவலாக அனைத்து சமுதாய மக்களில் சிலரிடமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. மக்களின் பக்தி முலாம் பூசப்பட்ட இந்த மூடநம்பிக்கையை பயன்படுத்தி நகைக்கடை வியாபாரிகள் நன்றாகவே கல்லா கட்டுகிறார்கள். தங்கம் விலை விமானத்தை விட உயர்வாக ரெக்கை கட்டிப் பறக்கும் இந்த காலகட்டத்திலும் நகைக்கடையில் மண்ணள்ளி போட்டால் கூட கீழே விழாத அளவுக்கு மக்கள் கூட்டம். எந்த அளவுக்கென்றால் ஏனைய நாட்களில் சாதாரணமாக பணத்துடன் சென்றால் நகை வாங்கிவிடலாம். ஆனால் இன்று முன்கூட்டியே டோக்கன் வாங்கியவர்கள் மட்டுமே நகை வாங்கமுடியும் என்று சொல்லும் அளவுக்கு சில பெரிய நகைக்கடைக் காரார்கள் டோக்கன் சிஸ்டம் கொண்டுவரும் அளவுக்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. உண்மையில் இது தெளிவான ஒரு மூடநம்பிக்கை என்று பல்வேறு காலகட்டங்களில் சிந்தனையாளர்களால் தெளிவுபடுத்தப்பட்டாலும் மக்கள் தெளிவடைய மறுக்கிறார்கள். கீழ் வரும் இந்த செய்தியை படித்த பின்பாவது தெளிவடைவார்களா என்று பார்ப்போம்.

சென்னை அண்ணா நகரில் வசிக்கும் கவுசல்யா என்ற இல்லத்தரசி அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்கி, தனக்கு நேரிட்ட கசப்பான அனுபவத்தை கூறியதாக தினத்தந்தி நாளிதழில் வந்துள்ள செய்தி;

''எல்லோரும் சொல்கிறார்களே என்று, கடந்த ஆண்டு அட்சய திருதியை அன்று, நானும் என் கணவரும் ஒரு நகைக்கடைக்குச் சென்றோம். அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் வெள்ளத்தில் நீந்திச்சென்று தங்க நாணயம் ஒன்றை வாங்கினோம். ஒரு வருடம் கடந்துவிட்டது. 

இன்னும் ஓரிரு மாதத்தில் எங்கள் பேத்திக்கு பெயர் சூட்டு விழா நடக்க உள்ளது. பேத்திக்கு தங்கத்தில் நகை செய்யலாம் என்று கருதி, கடந்த ஆண்டு அட்சய திருதியை அன்று வாங்கிய தங்க நாணயத்தை எடுத்துக்கொண்டு, பொற்கொல்லர் ஒருவரிடம் சென்றோம். தங்க நாணயத்தை எங்களிடம் இருந்து வாங்கிய பொற்கொல்லர், நாணயத்தை மேலும் கீழும் திருப்பித் திருப்பி பார்த்தார்.

''ஏம்மா, அட்சய திருதியை நாளில் வாங்கிய நாணயமா? என்று ஒருவித இளப்பமான தோரணையில் கேட்டுவிட்டு, மாற்று ரொம்ப கம்மியா இருக்கிறது அம்மா!' என்று சொன்னார். எங்களுக்கு தூக்கிவாரிப்போட்டது. இனிமேல், 'அட்சய திருதியை நாளில் நகை வாங்குவதைவிட வேறு ஒரு நாளில் வாங்கினால் நல்லது' என்று உறுதிமேற்கொண்டேன்.'
இவ்வாறு இல்லத்தரசி கவுசல்யா கூறினார். 

மக்கள் திருந்துவார்களா? அல்லது இன்னும் கெடுவோம் என்ன பந்தயம் என்று கேட்பார்களா? 

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [திருத்தப்பட்டது][part 7]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

எங்கே போனது 5 ,47 ,085 ரூபாய்கள்?

அயல்நாட்டு நிதி விசயத்தில் பீஜேயின் அப்பட்டமான பொய்களையும், முரண்பாடுகளையும் அலசிவரும் இந்த தொடரில், அபூதாவூத் மொழிபெயர்ப்புக்காக லுஹாவுக்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டதையும், பின்பு அவர் அபூதாவூதை மொழிபெயர்த்து தராததால் பீஜேயின் திர்மிதியை வெளியிடுவதற்காக பீஜெயிக்கு ஒரு லட்சம் இஸ்லாமிய கல்விச் சங்கம் வழங்கிய விஷயங்களை எழுதி, இவர்கள் தானமாக தந்த தியாகிகள் அல்ல. துரோகிகள் என்று தெளிவு படுத்தியிருந்தோம். இந்த தொடரில் திர்மிதி தொடர்பாகக பீஜே சொல்லும் இன்னொரு பொய்யை அலசுவோம்.

''பல மாதங்கள் கடுமையாக உழைத்து தயார் செய்து வைத்ததை எங்களிடம் தாருங்கள். நாங்கள் வெளியிடுகிறோம் என்று ஹாமித்பக்ரியும் சைபுல்லாஹ்வும் கேட்டனர். மற்ற நிர்வாகிகளும் வற்புறுத்தியதன் அடிப்படையில் திர்மிதியை நான் அவர்களுக்கு வழங்கினேன். மேலும், திர்மிதியை வெளியிட்டு அதை முழுமையாக ஜமாஅத்தில் ஒப்படைத்துவிட வேண்டும். அவை விற்பனையாவதற்கு ஏற்ப பணம் போட்டவர்களுக்கு ஜமாஅத் திரும்பக் கொடுக்கும்.பணம் தந்தவர்கள் பட்டியலை ஜமாத்திடம் தரவேண்டும் என்ற நிபந்தனை விதித்தோம்.

இந்த நூலை விற்பனை செய்யும் உரிமை சாஜிதா புக் சென்டர் வசம் இருந்தது. அவர் விற்று பணம் தரும் போதெல்லாம் பங்கு சேர்ந்தவர்களுக்கு உரிய தொகையை நாங்கள் கொடுத்து வந்தோம். ஆனால் திர்மிதி வெளியாகி சில நாட்களில் ஹாமித்பக்ரி ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்டார். உடனே சாஜிதா புத்தக வியாபாரியிடம் சென்று மீதிப் புத்தகத்தின் பணத்தை என்னிடம் தரவேண்டும்.ஜமாஅத்தில் கொடுக்கக் கூடாது என்று கூறி அந்தப் பணத்தை சாப்பிட ஆரம்பித்தார். ஷேர் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டால் தவ்ஹீத் ஜமாஅத்தில் எல்லாப் பணத்தையும் கொடுத்து விட்டேன் என்று கூறி அவர்களை விரட்டியடித்தார். பல நூறு ஏழை மக்கள் இவரிடம் கொடுத்த பணத்தை இன்னும் திரும்பப் பெறவில்லை. அவர்களின் சாபமும் பத்துவாவும் அவர் மீது உள்ளது'' இவ்வாறு பீஜே கூறியுள்ளார்.

உண்மை நிலை என்ன?

திர்மிதியை வெளியிடும் உரிமை இஸ்லாமிய கல்விச் சங்கத்திடமும், அதை விற்பனை செய்யும் உரிமை சாஜிதாவிடம் வழங்கப்பட்டது. சாஜிதா தரும் பணத்தை ஷேர் ஹோல்டருக்கு விநியோக்கிக்கும் பொறுப்பு பீஜேயின் நம்பிக்கைக்கு பாத்திரமான அன்றும் பொருளாளர், இன்றும் பொருளாளராக  இருக்கும் அன்வர் பாஷாவுக்கு வழங்கப்பட்டது. இதுவரைக்கும் பீஜே சொல்வது உண்மை. அதற்கு பிறகு சொல்வது அவருக்கே உரித்தான வழக்கமான பொய். 

திர்மிதி ஐந்தாயிரம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டது. அதை சென்னையில் அச்சடித்து பைண்டிங் செய்யப்படாமல், பிரிண்டிங் சிவகாசியிலும், பைண்டிங் சென்னையிலும் செய்யப்பட்டது. இதில் பீஜேயின் உறவினர் ஒருவர் பலனடைந்தார். தேவைப்பட்டால் அவர் பெயரைச் சொல்வோம். பிரிண்டிங் ஓரிடத்திலும், பைண்டிங் ஓரிடத்திலும் நடந்ததால் அந்த நூலின் சுமார் எழுநூறு புத்தகங்கள் அளவுக்கு சேதமானது. மேலும் பைண்டிங் சரியில்லை என்ற குற்றச்சாட்டு திர்மிதி வெளியீட்டு விழாவிலேயே முன்வைக்கப் பட்டது.  ஆக, விற்பனை செய்யும் தரத்தில் ஏறக்குறைய 4300 புத்தகங்கள் அளவுக்குத் தான் சாஜிதாவுக்கு கிடைத்தது. இதுபோக இந்த புத்தகங்கள் தேங்கிய நிலையில், அவ்வப்போது பீஜேயின் அனுமதியின் பேரில் 150 ரூபாய்களுக்கு சில நூறு பிரதிகள் விற்கப்பட்டது. ஆரம்பத்தில் சில்லறை விலை 230 ஆக இருந்ததை மாற்றி, 190 ரூபாய் என்று அறிவிப்பு செய்யப்பட்டது. இதில் மொத்தமாக வாங்குபவர்களுக்கு கழிவு உண்டு. 

இந்த நூலை விற்று வந்த சாஜிதா புக் சென்டர் நிறுவனர் ஜக்கரியா அவர்கள், 
5 ,47 ,085 [ ஐந்து லட்சத்து நாற்ப்பத்தி ஏழு ஆயிரத்து என்பத்தி ஐந்து] ரூபாய்களை அன்வர்பாஷாவிடம் வழங்கியுள்ளார். அதோடு பின்னாளில் ஒரு ஷேர் ஹோல்டருக்கு ஐயாயிரம் வழங்கியுள்ளார். ஆக ஐந்து லட்சத்து ஐம்பத்தி இரண்டாயிரத்து என்பத்தி ஐந்து ரூபாய்கள் ஜக்கரியவால் திர்மிதி நூலுக்காக வழங்கப்பட்டுள்ளது. இதுபோக திடீரென்று பீஜே அருள் வந்தவராக மீதமுள்ள புக்குகளை மீடியா வேல்டிடம் ஒப்பைடைக்க சொன்னார். பின்பு திரும்பவும் சாஜிதாவிடம் ஒப்படைக்கச் சொன்னார். இதில் மீடியா வேல்டு எத்தனை நூல்கள் விற்றது; அந்த தொகை என்ன ஆனது என்பது பற்றி அடுத்த தொடரில் பார்ப்போம்.

மேலும், திர்மிதி வெளியான சில நாட்களில் ஹாமித்பக்ரி ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்டார். பின்பு சாஜிதா புக் வியாபாரியிடம் திர்மிதி காசை வாங்கி சாப்பிட்டார் என்று பீஜே சொல்கிறாரே! சில நாட்களில் திர்மிதி ஐந்தரை லட்சத்துக்கு வியாபாரமாகி விட்டது என்கிறாரா? பொய் சொல்வதற்கும் ஒரு அளவில்லையா? திர்மிதி காசை ஹாமித்பக்ரி சாப்பிட ஆரம்பித்தார் என்று கதை விடும் பீஜே, ஜக்கரியா தந்த தொகையை லாவகமாக மறைத்தது ஏன்? அந்த தொகையை சொன்னால் இவர் சொல்லும் பொய் அடிபட்டுப் போகும் என்பதாலா?

திர்மிதி விசயத்தில் பீஜெயிடம் நாம் வைக்கும் கேள்விகள்;
  1. திர்மிதிக்காக இஸ்லாமிய கல்விச் சங்கத்திடம் ஒரு லட்சரூபாய் ராயல்டி வாங்கியது உண்மையா? இல்லையா?
  2. ஜக்கரியாவிடம் 5 ,47 ,085 [ ஐந்து லட்சத்து நாற்ப்பத்தி ஏழு ஆயிரத்து என்பத்தி ஐந்து] வாங்கியது உண்மையா? இல்லையா?
  3. இந்த தொகை யார் யாருக்கு எவ்வளவு விநியோகிக்கப்பட்டது என்ற வெள்ளையறிக்கை வெளியிடத் தயாரா?
  4. ஹாமித் பக்ரி வழங்கிய ஷேர் ஹோல்டர்கள் பட்டியலை வெளியிட்டு, இன்னினாருக்கு நாங்கள் பணத்தை வழங்கிவிட்டோம்; இன்னின்னாரை ஹாமித்பக்ரி ஏமாற்றி விட்டார் என்று வெளியிடவேண்டும்.
  5. திர்மிதி வெளியான சில நாட்களில் ஹாமித்பக்ரி நீக்கப்பட்டார் என்பதற்கு  திர்மிதி வெளியான நாளையும், ஹாமித்பக்ரி நீக்கப்பட்ட ஆதாரத்தையும் வைத்து நிரூபிக்கத் தயாரா?
  6. ஹாமித் பக்ரியிடம் அபூதாவூதுக்காக லுஹாவும், திர்மிதிக்காக பீஜேயும் வாங்கிய தொகையையும், திர்மிதி விற்று ஜக்கரியா தந்த தொகையையும் மறைத்த நோக்கம் என்ன?

அடுத்து வருவது;
த த ஜமாஅத் வெளிநாடுகளில் பெற்ற நிதி உதவிகள்; வெளிநாடு நிதி மூலம் கட்டிய பள்ளிகள். அதற்காக பீஜே செய்த முயற்சிகள்.

அருளாளன் நாடினால் அதிவிரைவில்.


சனி, 21 ஏப்ரல், 2012

ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரில் துவங்கப்பட்ட இந்திய தௌஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் விபரம் பின் வருமாறு.....

கே.பிரேம் நசீர் -கிளை தலைவர்.

கே.சீனி அஹ்மத் -துணை தலைவர்.

கே.செய்யது இப்ராஹீம் -செயலாளர்.

எம்.கடாப்தீன் -துணை செயலாளர்

பி.சுலைமான் -பொருளாளர்

எஸ்.அப்துல் ஹபீப் -துணை பொருளாளர் 

இந்திய தௌஹீத் ஜமாத்தின் நரிப்பையூர் கிளை துவக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் முசம்மில் ஹார் தலைமை தாங்கினார்.

நரிப்பையூர் கிளையில் இணைந்திருக்கும் சகோதரர்களில் பலர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினரின்
(நரிப்பையூர் ஹனபி ஜமாஅத் சொத்தான) மஸ்ஜித் நில மோசடியை கண்டித்து,நியாயம் கேட்டு,பின்னர் அந்த அமைப்பிலிருந்து வெளியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.(இந்த விவகாரம் தொடர்பாக சமுதாய மக்கள் ரிப்போர்ட்டில் விரிவான செய்தி இடம் பெற்றது.இது வரை அந்த செய்திக்கு மோசடி பேர்வழிகள் மறுப்பு வெளியிடாததிலிருந்தே மோசடி நடந்திருப்பதை டி.என்.டி.ஜே வின ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் என்பது தனி விஷயம்.)

இன்னும்,சவூதி அரேபியாவில் பணிபுரியும் நரிப்பையூர் சகோதரர்களான வாஹித்,சீனி முஹம்மது ஆகிய சகோதரர்கள் இந்திய தௌஹீத் ஜமாத்தின் சவூதி கிளை பொறுப்பாளர்களாக செயல்படப் போவதாக அறிவித்துள்ளனர்.அல்ஹம்துலில்லாஹ்



குவைத் மண்டல நிர்வாகக்குழு கூட்டம்.

த்தியத்தில் உறுதியாய்... சமூகத்தில் இணக்கமாய்... என்ற கொள்கையுடன் குர்'ஆன்-ஸுன்னா  வழிகாட்டுதலின் அடிப்படையில் களமாடி வரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலத்தின் நிர்வாகக்குழு கூட்டம் ஹவல்லி அல் கபீர் உணவகத்தின் பார்ட்டி ஹாலில், 
20 -4 -2012 வெள்ளியன்று இரவு 8 மணியளவில் நடைபெற்றது. 

தாயகத்தில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள மாநிலப் பொதுக்குழு தொடர்பான ஆலோசனை குறித்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டத்திற்கு மண்டலத்தலைவர் முகவை அப்பாஸ் தலைமை தாங்கினார். மண்டல நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். டி.என்.டி.ஜே.யின்  முன்னாள் குவைத் மண்டலத் தலைவர் சகோதரர் கூத்தூர் ஜாபர் அவர்கள், நிர்வாகிகளின் பண்புகள் என்ற தலைப்பில் சிற்றுரையாற்றினார்.

அதைத் தொடந்து மாநிலப் பொதுக்குழுவில் செயல்படுத்த வேண்டிய விஷயங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்யப்பட்டு சில முடிவுகள் எட்டப்பட்டு, அதை மாநிலத் தலைமைக்கு தெரிவிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும், மண்டலத்தின் செயலாளராக இருந்த புகாரி ஹசன் மற்றும் துணைச் செயலாளராக இருந்த முபாரக் ஆகியோர் ராஜினாமா அங்கீகரிக்கப்பட்டு,   மண்டலச் செயலாளராக அபூ ஷிபா [எ] அன்வர்பாஷா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். மண்டலப் பொருளாளராக இருந்த ராஜ்முஹம்மது தாயகத்தில் தங்கிவிட்ட காரணத்தால், அவரது பொறுப்பிற்கு சாதிக் சதாமும், மண்டல கவுரவ ஆலோசகராக கூத்தூர் ஜாபரும் நியமிக்கப்பட்டனர். இறுதியாக துஆ'வுடன் கூட்டம் நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.
 


செவ்வாய், 17 ஏப்ரல், 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 6]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

ஆளாய் பரந்த அந்த ஒரு லட்சம்.

அயல்நாட்டு நிதி விசயத்தில் பீஜேயின் அப்பட்டமான பொய்களையும், முரண்பாடுகளையும் அலசிவரும் இந்த தொடரில், இப்போது அவர் தன்னைத் தானே திர்மிதியை தந்த தியாகியாக காட்டிக்கொள்வதில் உள்ள பொய்களை பார்ப்போம்.

''நான் திர்மிதி நூலை மொழிபெயர்த்து சொந்தமாக வெளியிட திட்டமிட்டு தயார் நிலையில் வைத்திருந்தேன்''என்று பீஜே கூறுகிறார். அதாவது இவர் தயாரித்து சொந்தமாக ரிலீஸ் செய்ய இருந்தாராம். அவரும், அவரோடு நெருக்கமாக இருந்தவர்களும் உயிரோடு இருக்கும் இந்த காலத்திலேயே இப்படி அப்பட்டமாக பொய் சொல்கிறார் என்றால், அல்லாஹ் தான் பாதுகாக்க வேண்டும். உண்மையில் திர்மிதியைப் புதுப்பெண்ணாக இவர் ஹாமித்பக்ரி கையில் ஒப்படைத்தாரா? என்றால் இல்லை. ஏற்கனவே இந்த திர்மிதி இவர் ஜாக்கில் குப்பை கொட்டிக்கொண்டிருந்த காலத்திலேயே ஏறக்குறைய முப்பது பாகங்களுக்கும் மேலாக சிறிய நூல்களாக வெளிவந்து விட்டது. அந்த பாகங்களை எல்லாம் ஒட்டித்தான் ஹாமித்பக்ரி கையில் ஒப்படைத்தார். அதாவது அவர் அடிக்கடி சொல்வாரே! 'புதிய மொந்தையில் பழைய கள்' என்று; அதுபோல ஏற்கனவே வெளியான நூலைத்தான் 'மேக்கப்' போட்டு ஹாமித்பக்ரியிடம் தந்தார். இதில் தியாகம் எங்கே வாழுது? துரோகம் தான் வாழுது! அது என்ன துரோகம்? இவரது திர்மிதியை ஏற்கனவே விற்றுவந்த ஜாக்கின் வெளியீட்டு நிறுவனம், இவர் ஹாமித்பக்ரியிடம் கொடுத்து பெரிய புக்காக வெளியிட்ட பின்னால் ஜாக்கிடம் இருந்த சிறிய வடிவிலான திர்மிதி விற்பனையாகாமல் தேங்கிப் போனது. ஏற்கனவே ஒரு நிறுவனம் திர்மிதியை விற்று வரும் நிலையில், அதே திர்மிதியை இன்னொருவருக்கு கொடுப்பது, ஒரே நிலத்தை இரண்டு பேருக்கு விற்பதைப் போன்ற துரோகமல்லவா? இந்த துரோகத்தை செய்த பீஜே, அதையே தியாகமாக காட்டுவது அவரின் திறமைதானே!

இங்கே இன்னொன்றையும் பீஜே சொல்வார். அது என்னவென்றால், திர்மிதி சிறிய நூல்களாக பல பாகங்களாக வெளியாகியபோது, அதற்கான உரிமையை நான் அவர்களுக்கு கொடுக்கவில்லை. நானே புத்தகத்தை பிரிண்டிங் செய்து பைண்டிங் செய்து நூலாக அவர்களுக்கு கொடுப்பேன். அதற்குரிய விலையை நான் வாங்கிக் கொண்டேன். ஆனால் ஹாமித்பக்ரியிடம் ஹதீஸ்களை அவர் கையில் தூக்கி கொடுத்து, அதற்க்கான வெளியீட்டு உரிமையை இஸ்லாமிய கல்விச் சங்கத்திற்கு வழங்கினேன். எனவே அது வேறு; இது வேறு என்று பீஜே சொல்லலாம். ஒரு பொருளை ஒருவர் மூலமாக விற்றுவரும் நிலையில், அதே பொருளை வேறு வடிவத்தில் விற்பதாக இருந்தால் ஏற்கனவே விற்றுவரும் அவரிடம் அதைப் பற்றி பேசி, அவர் மறுத்தால் அவர் பாதிக்காத வகையில் வேறு ஒருவர் மூலமாக விற்கலாம். ஆனால் திர்மிதியை சிறிய பாகங்களாக வெளியிட்டு வந்த அந்த நிறுவனத்துடன் பீஜே, இந்த ஆலோசனை நடத்தினார் என்பதற்கான ஆதாரத்தை காட்டவேண்டும். நாம் விசாரித்த வகையில், இப்போது திர்மிதி பெரிய புத்தகமாக வெளியிட்டால் ஏற்கனவே சிறிய பாகங்களாக வெளியிட்டவர்கள் பாதிக்கப்படுவார்களே என்ற கருத்து பீஜெயிடம் சொல்லப்பட்டபோது, இல்லம்மா! சிறிய பாகம் வாங்க விரும்புறவன் அதை வாங்கிருவான்; பெரிய பாகமாக வாங்க விரும்புறவன் இதை வாங்கிருவான். எனவே அந்த விற்பனை பாதிக்காது என்று சொன்னதாக தகவல் கிடைத்தது. எது எப்படியோ, திர்மிதியை ஹாமித்பக்ரி கையில் பீஜே ஒப்படைத்தபோது அது புத்தம்புதிய காப்பியாக இருக்கவில்லை. அது ஏற்கனவே பல தியேட்டர்களில் ஒடி, மழை பெய்தது போன்ற கோடு வரும் அருதப் பழசான பிலிம் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

''பல மாதங்கள் கடுமையாக உழைத்து தயார் செய்து வைத்ததை எங்களிடம் தாருங்கள். நாங்கள் வெளியிடுகிறோம் என்று ஹாமித்பக்ரியும் சைபுல்லாஹ்வும் கேட்டனர். மற்ற நிர்வாகிகளும் வற்புறுத்தியதன் அடிப்படையில் திர்மிதியை நான் அவர்களுக்கு வழங்கினேன்''என்று பீஜே கூறுகிறார்.
ஹாமித்பக்ரியிடம் திர்மிதியை கொடுத்ததை கூறும் பீஜே, அதற்காக அவரிடம் இருந்து வாங்கியதை மட்டும் லாவகமாக மறைத்து தன்னை தியாகியாக காட்டுகிறார். அபூதாவூத் மொழிபெயர்த்து தருவதற்காக முன்பணமாக ஒரு லட்சம் வாங்கிய லுஹா அல்வா கொடுத்தார். [அவர் மாவட்டத்தில் அதுதானே பிரபலம்] பின்பு இந்த வாய்ப்பை பயன்படுத்திய பீஜே, ஹாமித்பரியிடம் தனது திர்மிதி நூலை வெளியிட ஒரு லட்சம் பெற்றுக் கொண்டார். முதலில் 3000பிரதிகள் அச்சடிப்பது என்ற அடிப்படையில் அதற்காக 60 ,000 வாங்கிக்கொண்ட பீஜே, பிறகு தனது பணத்தேவையை முன்னிட்டு 5000 பிரதிகள் அச்சடித்துக் கொள்ளுங்கள் என்று ஹாமித்பரியிடம் சொல்லி மீண்டும் 20000 பெற்றுக் கொண்டார். ஆக 5000 பிரதிகளுக்கு ஒரு நூலுக்கு 20 ரூபாய் வீதம் ஒரு லட்சம் பெற்றுக்கொண்டு தான் பீஜே திர்மிதியை கொடுத்தார். [திர்மிதியின் சில்லறை விலை 230 ரூபாய்; மொத்தவிலை 180மட்டுமே. இதில் விற்பனையாளருக்கு கழிவு வேறு. அந்தவகையில் நூலின் அசல் விலையில் சுமார் ஆறில் ஒரு பங்கை பீஜே ராயல்டி பெற்றுள்ளார்] 

மேலும், ஒரு லட்சம் என்பது இன்றைக்கு சாதாரணம். ஹாமித்பக்ரி மோசடி செய்தார் என்பதற்கு அன்றைக்கு பத்து லட்சம் என்றால் பயங்கரமான தொகை என்று பில்டப் காட்டும் பீஜே; இந்த ஒரு லட்சமும் அன்றைக்கு உள்ள மதிப்பில் எவ்வளவு பெரிய தொகை என்பதை சொல்வாரா? கணக்கு தெரியவில்லை என்றால் இவர் தொண்டியில் கட்டியுள்ள வீட்டின் கதவு ஜன்னல்களை கேட்டு தெரிந்து கொள்ளட்டும்.

ஆக, மக்களிடம் ஷேர் வசூலித்து ஹாமித்பக்ரி அபூதாவூத் வெளியிடாத காரணத்தால் ஜமாஅத் பெயர் கெட்டது போலவும், ஜமாஅத்தின் களங்கத்தை துடைக்கும் வகையிலும், ஹாமித்பக்ரியை கடனிலிருந்து மீட்கும் வகையிலும், முல்லைக்கு தேர் தந்த பாரி போன்று, இவர் தனது திர்மிதியை தானமாக தந்தது போன்று பிலிம் காட்டுகிறாரே! இவர் எவ்வளவு பெரிய பித்தலாட்டக்காரர் என்று மக்களே புரிந்து கொள்ளுங்கள். ஒருவரை கடனிலிருந்து காப்பது என்றால் அவருக்கு தனது பொருளை இலவசமாக கொடுத்து இதை விற்று கடனை கட்டு என்று ஒருவர் சொன்னால் அவர் உண்மையில் தியாகி. ஆனால் ஒருவரது கடன் இக்கட்டை பயன்படுத்தி தனது பொருளை வியாபாரமாக்கி பணம் வாங்கிக்கொண்ட ஒருவர் தியாகியாக முடியுமா? தான் ஒருவருக்கு கொடுத்த பொருளை சொல்லிக்கட்டும் பீஜே, அதற்கு பகரமாக தான் பெற்ற கையூட்டை மறைத்தாரே! இப்போது பீஜே தியாகியா? துரோகியா? மக்களே முடிவு செய்யுங்கள்.

திர்மிதி விற்பனை காசை சாப்பிட்டது ஹாமித்பக்ரியா? ஜமாத்தா? அன்வர்பாஷாவா?

அருளாளன் நாடினால் அதிவிரைவில்.

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 5]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

முன்னுரை; அயல்நாட்டு நிதி பெறுதல் விசயத்தில் பீஜேயின் அன்றும் இன்றும் உள்ள நிலைப்பாடுகளையும், அயல்நாட்டு நிதி பிரச்சினையில் அவர் அடித்து விடும் அப்பட்டமான பொய்களையும் அலசிவரும் இந்த தொடரில், இதுவரை அயல்நாட்டு நிதி பெறுதல் விசயத்தில் அவரது இப்போதைய நிலைப்பாடு அவரது தீர்ப்புக்கே மாற்றமாக அவரது மனோ இச்சை முடிவு என்பதையும், தானும் தனது ஜமாத்தும் வெளிநாட்டு நிதிக்கு அப்பாற்பட்டவர்கள் என்றும் இஸ்லாமிய கல்விச் சங்கம் என்ற பெயரால் ஹாமித்பக்ரியும், சைபுலாஹ்வும் தான் வசூல் வேட்டையாடினார்கள் என்ற அவரது பொய்யை உடைக்கும் வகையில் இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் உறுப்பினர்கள் யார் யார் என்பதை பட்டியலிட்டதோடு, அந்த சங்கத்திற்கும் பீஜெயுக்கும் உள்ள உறவை வெளிப்படுத்தினோம். அந்த சங்கம் குறித்த அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்பினோம். 

இப்போது அவர் தன்னைத் தானே திர்மிதியை தந்த தியாகியாக காட்டிகொள்வதற்கு காரணமாக அமைந்த அபூதாவூத் மொழிபெயர்ப்பு குறித்த அவரின் அப்பட்டமான பொய்யைப் பார்ப்பதற்கு முன்னால் ஏற்கனவே கேட்ட ஒரு கேள்வியை பீஜெயிக்கு மீண்டும் வைக்கிறோம்.அதற்கு அவர் பதில் சொல்லியாகவேண்டும்.

இன்று பீஜே ஜமாஅத்தில் இல்லாத இரு பிரச்சாரகர்கள் அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வெளிநாடு பயணம் மேற்கொண்டனர் என்று சொன்னீர்களே! அந்த இருவர் யார்? 
 
அபூதாவூத் விசயத்தில் பீஜே சொல்வது என்ன? 

ஹாமித்பக்ரியும், சைபுல்லாஹ்வும் அரபுநாடுகளுக்கு சென்றனர். அங்கு மக்களிடம் ஒரு திட்டத்தை முன்வைத்தனர். அதாவது நாங்கள் ஹதீஸ் நூல்களை தமிழாக்கம் செய்து வெளியிடப்போகிறோம். அதில் நீங்கள் ஷேர் சேர்ந்தால் நல்ல லாபத்துடன் முதலீட்டை திரும்பத்தருவோம் என்று சொல்லி நிதி திரட்டினார்கள். அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் முதன்மை நிர்வாகிகளாக இருந்தாலும் மற்ற நிர்வாகளிடமோ மூத்த அறிஞர்களிடமோ அவர்கள் எந்த ஒப்புதலும் பெறவில்லை. தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் அவர்கள் வெளியிடப்போவதாகவும் அவர்கள் சொல்லவில்லை. இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் பெயரால் வெளியிடப்போவதாக மக்களுக்கு நம்பிக்கை ஊட்டி நிதிகளை திரட்டினார்கள்.

இப்படி பங்கு சேர்த்து பல மாதங்கள் ஆன பின்னும் நூல் வெளியிடும் எந்த முயற்சியிலும் அவர்கள் இறங்கவில்லை. பங்கு சேர்ந்தவர்கள் என்னிடமும் லுஹாவிடமும் தொலைபேசி வழியாகவும், எழுத்து மூலமாகவும் புகார்களை அனுப்பினார்கள். உடனடியாக நிர்வாகக்குழுவை கூட்டி ஹாமித்பக்ரியிடமும் சைபுல்லாஹ்விடமும் விளக்கம் கேட்டோம். யாரை கேட்டு ஷேர் சேர்த்தீர்கள்? நீங்கள் இருவரும் ஜமாஅத்தின் தலைவர் மற்றும் செயலாளராக இருந்துகொண்டு இப்படி நிதி திரட்டுவது ஜமாஅத்தின் செயலாக பார்க்கப்படாதா? சரி! பணம் திரட்டி வந்து பல மாதங்கள் கடந்த பின்னரும் எந்த நூலையும் வெளியிட முயற்சி செய்யாமல் இருப்பது ஏன்? உடனடியாக ஷேர் கொடுத்தவர்கள் அனைவருக்கும் பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்று பீஜெயாகிய நான் வற்புறுத்தினேன். ஆனால் அதிகமான நிர்வாகிகள் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டாம்; உடனே ஹதீஸ் நூலை வெளியிட்டு இவ்விருவரும் கொடுத்த வாக்கை நாம் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம் என்று சொன்னதால் இவ்வாறே முடிவு எடுக்கப்பட்டது.

இவர்கள் சொன்னபடி அபூதாவூதை வெளியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே அபூதாவூத் 300 ஹதீஸ்களை லுஹா மொழிபெயர்த்து வைத்து இருந்தார். மேலும் 700 ஹதீஸ்களை மொழிபெயர்த்து 1000 ஹதீஸ்களாக வெளியிட எவ்வளவு நாள் தேவைப்படும் என்று லுஹாவிடம் கேட்டபோது தனக்கு ஆறு மாதங்களாவது தேவைப்படும் என்று கூறிவிட்டார். அப்படியானால் இன்னும் தாமதப்படும் மக்களிடம் இன்னும் கெட்டபெயர் ஏற்படும் என்று அனைத்து நிர்வாகிகளும் கருதினார்கள். நான் திரிமிதி நூலை மொழிபெயர்த்து சொந்தமாக வெளியிட திட்டமிட்டு தயார் நிலையில் வைத்திருந்தேன். பல மாதங்கள் கடுமையாக உழைத்து தயார் செய்து வைத்ததை எங்களிடம் தாருங்கள். நாங்கள் வெளியிடுகிறோம் என்று ஹாமித்பக்ரியும் சைபுல்லாஹ்வும் கேட்டனர். மற்ற நிர்வாகிகளும் வற்புறுத்தியதன் அடிப்படையில் திர்மிதியை நான் அவர்களுக்கு வழங்கினேன்.
மேலும், திர்மிதியை வெளியிட்டு அதை முழுமையாக ஜமாஅத்தில் ஒப்படைத்துவிட வேண்டும். அவை விற்பனையாவதற்கு ஏற்ப ஷேர் போட்டவர்களுக்கு பணத்தை ஜமாஅத் வழங்கும் என்று நிபந்தனை விதித்தோம்.

மேலே நீங்கள் படித்தது அபூதாவூத் வெளியீடு குறித்த பீஜேயின் வர்ணனையாகும். இதில் முதலாவதாக கவனிக்கவேண்டியது என்னவென்றால், ஹாமித்பக்ரியும்-கைவிட்ட தமுமுகவும் என்ற ஒரு நீண்ட தொடரை எழுதிய பீஜே, அபூதாவூத் வெளியிடுவதற்காக ஹாமித்பக்ரிதான் ஷேர் சேர்த்தார் என்று முழுக்க முழுக்க ஹாமித்பக்ரியை சாடியிருந்தார். அதில் சைபுல்லாஹ் ஹாஜா அவர்களை குறிப்பிடவில்லை. பார்க்க; 

அப்போது சைபுல்லாஹ்வை சேர்க்காததற்கு காரணம் அவர் அன்று ஜமாஅத்தில் இருந்தார். இப்போது ஷேர் மோசடி என்று இவரால் கூறப்படும் இதில் சைபுல்லாஹ் அவர்கள் பெயரை இணைப்பதற்கு காரணம் அவர் இப்போது ஜமாஅத்தில் இல்லை. ஆக இவரது ஜமாஅத்தில் இருந்தால் இவரே மோசடி என்று சொல்லும் ஒரு திட்டத்தின் பங்குதாரரை மறைத்து காப்பாற்றுவார். இவரை விட்டு வெளியேறினால் அவரை மோசடியாளராக அடையாளம் காட்டுவார் என்பதற்கு இது ஒரு சான்று என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

அடுத்து ஹாமித்பக்ரியும்-சைபுல்லாஹ்வும் அபூதாவூத் ஷேர் சேர்த்தது தனக்கோ ஏனைய நிர்வாகிகளுக்கோ தெரியாது. எங்களிடம் அவர்கள் அனுமதி வாங்கவில்லை. பின்னர் இதுபற்றி மக்கள் புகாரளித்த பின் தான் அவர்கள் இருவரையும் நிர்வாகக்குழுவில் சங்கைப்பிடித்தோம் என்று சளைக்காமல் சரடு விடுகிறார் பீஜே. ஆனால் இவ்விருவரும் வெளிநாட்டில் ஷேர் வசூலிக்கும் காலத்திலேயே இவருக்கு இந்த விஷயம் தெரியும் என்பதற்கு அவரது வாயாலேயே அல்லாஹ் வாக்குமூலம் கொடுக்க வைத்த அற்புதம் பாரீர்;

ஹாமித்பக்ரியும் கைவிட்ட தமுமுகவும் என்ற இவரது தொடரில், ''இதுபோல் வெளிநாடு சென்று ஹாமித்பக்ரி அபூதாவூத் வெளியிடப்போகிறேன் ஷேர் தாருங்கள். லாபம் தருகிறேன் என்று பல லட்சங்கள் திரட்டினார். என்னிடம் தொலைபேசியில் கேட்டவர்களுக்கு, யாரும் இதில் சேரவேண்டாம் என்று கூறினேன்.'' என்று பீஜே கூறுகிறார்.

இதன் மூலம் அபூதாவூத் வெளியிடுவது தாமதமான பின்னர், புகார் வந்த பின்னர் தான் தனக்கும் ஏனைய நிர்வாகிகளுக்கும் தெரிய வந்தது போல் பீஜே சொல்லியது அப்பட்டமான பொய்யல்லவா? தன்னிடம் போனில் கேட்டவர்களை இதில் ஷேர் சேராதீர்கள் என்று பீஜே சொன்னதற்கு காரணம், ஹாமித்பக்ரி மோசடியாளர் என்பதால்தான் என்றால், ஹாமித்பக்ரியின் இந்த மோசடியிலிருந்து ஏனைய மக்களையும் காக்கும் வகையில், ஹாமித்பக்ரி ஷேர்  கேட்டால் கொடுக்காதீர்கள் என்று இவர் அந்த வெளிநாட்டு கிளைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பாதது ஏன்? ஷேர் வசூலித்த ஹாமித்பக்ரியை தொடர்பு கொண்டு இந்த ஷேர் நீங்கள் பிடிக்கக் கூடாது; மீறி பிடித்தால் ஜமாஅத் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என்று சொல்லாதது ஏன்? சரி! இவர் கூற்றுப் பிரகாரம் ஹாமித்பக்ரி பல லட்சங்கள் அள்ளிக் கொடுவந்தாரே! வந்த பின்னால், ஏங்க பக்ரி! இந்த ஷேர் கலெக்ட் பண்ணீங்களே! அது என்ன ஆச்சு? ஏன் இன்னும் நூலை வெளியிடவில்லை? அதற்காக நீங்கள் எடுத்த முயற்சிகள் என்ன? என்று பீஜே கேட்காதது ஏன்? மக்கள் புகார் வரும்வரை வாய்மூடி மவுனம் காத்தது ஏன்? நிர்வாக்குழு கண்டிப்பதற்கு முன்பே நான் இதுபற்றி கேட்டேன் என்று பீஜே இப்போது சொன்னாலும் மாட்டிக்கொள்வார். 

அடுத்து, அபூதாவூத் விசயத்தில் ஹாமித்பக்ரி வசூலித்தது எவ்வளவு என்று பீஜெயிக்கு தெரியாது என்றால், அது எத்தனை லட்சங்கள் என்று எனக்கு தெரியாது என்று சொல்லியிருக்க வேண்டும். ஆனால், ஹாமித்பக்ரியும் கைவிட்ட தமுமுகவும் என்ற தொடரில், ''பல லட்சங்கள்; பத்துலட்சத்திற்கு மேல் என்று கூறுகிறார். உணர்வு 16;3௦ ல், சில லட்சங்கள் அது இப்போது எனக்கு நினைவில் இல்லை என்கிறார். பல லட்சங்களா? சில லட்சமா? இது போகட்டும்.

அபூதாவூத் பிரச்சினையில் மக்கள் புகாரளித்த பின் தான் லுஹாவை அணுகி ஆயிரம் ஹதீஸ் கேட்டதாகவும் அவர் ஆறுமாதம் ஆகும் என்றதாகவும் ஒரு செய்தியை சொல்கிறார் பீஜே. ஆனால் உண்மை என்ன? மேலப்பாளையம் வழக்கு ஒன்றில் சிறைமீண்ட லுஹா, தான் மொழிபெயர்த்த அபூதாவூத் ஹதீஸ் இத்தனை வைத்துள்ளேன் என்று ஹாமித்பக்ரியிடம் சொன்ன பின் தான் அபூதாவூத் வெளியிடும் திட்டமே தீட்டப்படுகிறது. அதற்காக ஷேர் பிடிக்கப்படுகிறது. அபூதாவூத் மொழிபெயர்ப்ப்புப் பணிக்காக லுஹாவுக்கு ஒரு லட்ச ரூபாய் இஸ்லாமிய கல்விச்சங்கம் வழங்கியது. உண்மை இவ்வாறிருக்க மக்கள் புகார் வந்த பின் தான் லுஹாவை அணுகியதாக பீஜே சொல்வது அப்பட்டமான பொய்யல்லவா? பிரச்சினை வந்த பின்பு கூட என்னால் முடியாது; இன்னும் ஆறு மாதம் ஆகும் என்று கூறிய லுஹா, இந்த பணிக்காக என்று ஒப்புகொண்டுஒரு லட்சம் வாங்கியது எதற்காக என்று கூறுவரா? நான் ஒரு லட்சம் வாங்கவில்லை என்று லுஹா அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு மறுப்பாரா? 

ஆக ஹாமித்பக்ரி அபூதாவூத் வகைக்காக ஷேர் பிடித்தது உண்மை. அதற்காக லுஹாவுக்கு ஒரு லட்சம் தந்து அதை வெளியிட முயற்சி செய்தது உண்மை. இதை மறைத்து ஹாமித்பக்ரி ஏதோ அந்த லட்சங்களை முழுசாக முழுங்கி ஏப்பம் விட்டது போல் பீஜே சொல்வது அப்பட்டமான பொய்யாகும். இறுதியாக, இதுவரை நாம் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பீஜே பதிலளிக்க வேண்டும்.

இதே அபூதாவூத் விசயத்தில் பீஜேயின் பல ஆண்டு நாடகங்கள்;








1991 லேயே அபூதாவூத் தயார் நிலையில் உள்ளதாக கூறும் பீஜே, அந்த அபூதாவூத் மாயமாய் மறைந்த ரகசியத்தை கொஞ்சம் மக்களுக்கு சொல்வாரா?

அடுத்து வருவது;
திர்மிதி வெளியீட்டில் பீஜேயின் நம்பிக்கைத் துரோகங்கள்.

திரிமிதியின் திரை மறைவு பணப் பரிமாற்றங்கள்.

திர்மிதி விற்பனை காசை சாப்பிட்டது ஹாமித்பக்ரியா? ஜமாத்தா? அன்வர்பாஷாவா?

அருளாளன் நாடினால் அதிவிரைவில்.



சனி, 14 ஏப்ரல், 2012

அசத்தியத்தை எதிர்த்து அனைத்து அமைப்புகளும் [டி.என்.டி.ஜே. உட்பட] ஓரணியில்...


ஏகத்துவத்தில் உறுதி எல்லோருடனும் இணக்கம் என்ற கொள்கையை வகுத்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தனது பணிகளை திறம்பட செய்து சமுதாயத்தில் நன்மதிப்பை பெற்று வருகிறது.

இதன் காரணமாக முஸ்லிம் மக்களிடம் மட்டுமல்லாது முஸ்லிமல்லாத மக்களிடமும் அங்கீகாரம் பெற்ற ஜமாஅத்தாக செயல்பட்டு வருகிறது ஐஎன்டிஜே.

சமுதாயப் பிரச்சினைகளில் காய்தல் - உவத்தலின்றி உள்நோக்கம்,அரசியல்தனமில்லாமல் நேர்மையாக களம் கண்டு வருகிறது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்பதற்கு உதாரணமாக இருக்கிறது பின்வரும் செய்தி.

விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களால் மவ்லூது ஓதுவது மார்க்க அடிப்படையில் எவ்வளவு பெரிய தீமை என்பதை விளக்கி கைப் பிரதிகள் விநியோகிக்கப்பட்டிருந்தன. இந்த வெளியீட்டைப் படித்த சிவகாசி உள்ளூர் ஷாஃபி ஜமாஅத் நிர்வாகம்நிர்வாகக் கூட்டத்தைக் கூட்டி எடுத்த முடிவின்படிஇந்த நோட்டீசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் விளக்கம் தர வேண்டும் என அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

ஆனால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினரோ ஷாஃபி ஜமாஅத்தின் அழைப்பை ஏற்காமல் புறக்கணித்து விட்டனர்.

இதனால் கோபமடைந்த ஷாஃபி ஜமாஅத் நிர்வாகம்தவ்ஹீத் ஜமாஅத்தினரை ஊர் நீக்கம் செய்வதாகவும்ஷாஃபி ஜமாஅத்துக்கு சொந்தமான கட்டிடங்களை அவர்களுக்கு வாடகைக்கு தருவதில்லைஇறந் தவர்களை அடக்கம் செய்ய மையவாடியில் இடமளிப்பதில்லை என்றெல்லாம் தீர்மானம் போட்டுபிரசுரமாக அச்சடித்து ஊரெல்லாம் விநியோகமும் செய்திருக்கிறது.


பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உள்ளூர் கிளை நிர்வாகிகள் இயக்க வேறுபாடுளை மறந்து சகோதர இயக்கங்களின் உள்ளூர் நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

இதனடிப்படையில் தமுமுகபாப்புலர் பிரண்ட்இந்திய யூனியன் முஸ்லிம் லீக்தேசிய லீக் ஆகிய இயக்கங்களிலுள்ள தவ்ஹீத் சிந்தனை கொண்ட சகோதரர்களும்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களும் கடந்த1ம் தேதி ஒன்று கூடி ஷாஃபி ஜமாஅத் நிர்வாகம் எடுத்த தீர்மானத்தை எதிர்கொள்ள முடிவெடுத்தனர்.

அனைத்து இயக்கங்களைச் சேர்ந்த சகோதரர்கள் ஒன்றிணைந்து ஷாஃபி ஜமாஅத்தை எதிர் கொள்ள முடிவெடுக்கப் பட்டதால் "சிவகாசி பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் இளைஞர் குழுஎன இந்த கூட்டமைப்புக்கு பெயர் வைக்கப்பட்டது.

இந்த கூட்டமைப்பின் பெயரில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மேற்கண்ட இயக்கங்களிலிருந்து ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு இயக்கங்களின் முக்கிய நிர்வாகிகள் கருத்துரைத்தனர். இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கலந்து கொண்ட அதன் மாநிலப் பேச்சாளர் யூசுஃப் மிஸ்பாஹிஏகத்துவ சகோதரர்கள் ஒற்றுமையாக செயல்படுவதன் அவசியம் பற்றி குர்ஆன் - ஹதீஸ் விளக்கங்களுடன் எடுத்துக் கூறினார்.

ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில் ஊர் நீக்கம் உள்ளிட்ட அனைத்து தடைகளையும் ஷாஃபி ஜமாஅத் நீக்கிக் கொள்ள வேண்டும் என கடிதம் அனுப்புவது என்றும் இதைச் செய்யத் தவறினால் இந்தப் பிரச்சினையில் ஓரணியில் நின்று சட்ட நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை அபு யாசிர்

நாளை 2ம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்

இந்தியாவில் இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோ நோயை ஒழிக்க மத்திய அரசு செய்து வரும் முயற்சியின் ஒரு கட்டமாக, இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை [15 -4 -2012 ]நடைபெற உள்ளது.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நாளை இரண்டாம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். எனவே பெற்றோர்கள் தவறாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கும் இடங்களுக்குச் சென்று தங்களது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடுமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் 40,399 மையங்கள் மூலமாக சுமார் 65 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது.

ஆரம்ப சுகாதார மையங்கள், பால்வாடிகள், மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் ரயில் நிலையம், பேருந்து நிலையங்களிலும் போலியோ சொட்டு மருந்து போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் தவறாமல் இந்த சொட்டு மருந்து குழந்தைகளுக்கு போடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி நாடு முழுவதும் மொத்தம் 17 கோடி குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. 

திங்கள், 9 ஏப்ரல், 2012

குஜராத்தில் 23 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு: 23 பேர் குற்றவாளிகள்.

ஆமதாபாத், ஏப்.9: 
குஜராத்தின் ஓடே கிராமத்தில் 2002-ம் ஆண்டு 23 பேரை எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தனி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 46 பேரில், 23 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த தனி நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லாததால் 23 பேரை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்துள்ளது. 
குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கான தண்டனை விவரம் இன்று பிற்பகலில் அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

கோத்ரா கலவரத்துக்கு பின்பு நடைபெற்ற 9 படுகொலை சம்பவ வழக்குகளை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. அதில் இந்த படுகொலை வழக்கும் ஒன்றாகும்.  

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 4]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அயல்நாட்டு நிதி பெறுதல் விசயத்தில் பீஜேயை நோக்கி,

அன்று குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் வெளிநாடு நிதி கூடும் என்றீர்கள். இன்று அந்த வசனத்திற்கு மாற்றமாக மனோஇச்சையை சட்டமாக்கி முரண்பட்டது ஏன் என்று கேட்டோம். 

குர்ஆன் அனுமதி அடிப்படையில் வெளிநாட்டு நிதி பெறுபவர்களை அரபுநாட்டு சல்லிக்கு மாரடிப்பவர்கள் என்று விமர்சிப்பது சரியா? என்று கேட்டோம்.

இஸ்லாமிய கல்விச் சங்கம் தான் வசூல் செய்தது. எனக்கோ தவ்ஹீத் ஜமாத்திற்கோ சம்மந்தமில்லை என்று பீஜே சொன்னதற்கு, இஸ்லாமிய கல்விச் சங்கம் விசயத்தில் அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டோம். இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் அங்கத்தினர்கள் ஹாமித்பக்ரியும் சைபுல்லாஹ்வும் மட்டும் தான் என்று பீஜே சொல்லத்தயாரா? என்று கேட்டோம்.

இன்று பீஜே ஜமாஅத்தில் இல்லாத இரு பிரச்சாரகர்கள் அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வெளிநாடு பயணம் மேற்கொண்டனர் என்ற பீஜேயின் வாதத்தை வைத்து அந்த இருவரின் பெயரை பீஜே பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டோம்.

இன்னும் இதுபோன்ற அடுக்கடுக்கான கேள்விகளை பீஜேயை நோக்கி நாம் எழுப்பியும் அவர் அசையாமல் இருப்பதின் மூலம் வெளிநாட்டு நிதி விசயத்தில் இஸ்லாமிய கல்விச் சங்கம் என்ற சங்கம் இவர் ஆதரவுடன் வசூல் வேட்டையாடியதை ஒப்புக்கொண்டுள்ளார். அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

வெளிநாட்டு நிதி வசூலித்தது ஹாமித்பக்ரிக்கு மட்டுமே சொந்தமான இஸ்லாமிய கல்விச் சங்கம்தான் என்று சொன்ன பீஜே, பிறகு அதில் சைபுல்லாஹ் ஹாஜா அவர்களும் ஒரு அங்கம் என்றார். அப்போது நாம் இஸ்லாமிய கல்விச் சங்கத்தில் இவ்விருவரைத் தாண்டி வேறு யாரும் இருக்கவில்லையா என்று கேட்டோம். அதற்கு பீஜே பதிலளிக்காததால், இப்போது நாமே இஸ்லாமிய கவிச் சங்கத்தின் அங்கத்தினர்களாக இருந்து இன்றும் பீஜெயோடு ஒட்டிக்கொண்டிருக்கும் சிலரை அடையாளம் காட்டுகிறோம்.

  • இன்று பீஜேயின் மேலாண்மைக்குழு தலைவராக வீற்றிருக்கும் சம்சுல்லுஹா ரஹ்மானி.
  • இன்று பீஜேயின் மேலாண்மைக்குழு உறுப்பினராக வீற்றிருக்கும் எம்.எஸ்.ஸுலைமான்.
  • இன்று பீஜேயின் தணிக்கைக் குழு தலைவராகவும், வருங்கால செயல் தலைவராகவும் அரியணை ஏறவுள்ள எம்.ஐ.ஸுலைமான்.

இவர்கள் மட்டுமன்றி இன்னும் சிலரும் இந்த சங்கத்தின் அங்கத்தினர்கள். அவர்கள் பட்டியல் இங்கே தேவையில்லை என்பதால் வெளியிடவில்லை. ஆக, இஸ்லாமிய கல்விச் சங்கம் என்பது ஹாமித்பக்ரி வசூல் மோசடி செய்வதற்காக தனக்கு மட்டுமே சொந்தமாக உருவாக்கிக் கொண்டது என்று பீஜே சொன்னது அப்பட்டமான பொய் என்பதை, அவரது இன்றைய சகாக்கள் அந்த சங்கத்தின் அங்கத்தினர்கள் என்பதன் மூலம் நிரூபித்துள்ளோம். 

இந்த லட்டர் பேடு சங்கத்தின் மூலம் ஹாமித்பக்ரி தமிழகம் முழுக்க வசூல் வேட்டையாடினார். அது நிர்வாகிகளுக்கு தெரியவந்தபோது, நானும்[பீஜே] சைபுல்லாஹ்வும், லுஹாவும், அலாவுதீனும் அடங்கிய குழுவில் அவரை கண்டபடி கண்டித்தோம் என்று பீஜே சொன்னாரே! அந்த லட்டர் பேடு சங்கத்தின் அங்கமான சைபுல்லாஹ் எப்படி ஹாமித்பரியை கண்டிக்க முடியும் என்று ஏற்கனவே கேட்டோம். இப்போது அந்த லட்டர் பேடு சங்கத்தின் அங்கமான லுஹா எப்படி ஹாமித்பக்ரியை கண்டிக்க முடியும் என்பதற்கும் பீஜே பதில் சொல்லட்டும். ஹாமித்பக்ரியின் வசூல் மோசடிக்கும், அந்த சங்கத்தின் அங்கமான சைபுல்லாஹ், லுஹா, எம்.ஐ.ஸுலைமான், எம்.எஸ். ஸுலைமான் ஆகியோருக்கும் சம்மந்தமில்லை என்று பீஜே மறுப்பாரா? அந்த சங்கத்தின் தலைவரான ஹாமித்பக்ரி வசூல் மோசடி செய்தார் என்பது உண்மை என்றால், அந்த மோசடி சங்கத்தில் அங்கம் வகித்த இவர்கள் மீது பீஜே எடுத்த நடவடிக்கை என்ன? ஆக பலர் அங்கம் வகித்த கூட்டு நிர்வாகத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தான் ஹாமித்பக்ரியும், சைபுல்லாஹ்வும் வெளிநாட்டு நிதி பெற முயற்சித்தார்கள். ஆனால் அவ்விருவர் மட்டும் இன்று பீஜெயோடு இல்லாத காரணத்தால், அவ்விருவர் மீது மட்டும் பழிபோட்டு இப்போது தன்னோடு இருக்கும் மற்ற சகாக்களை காப்பாற்ற நினைக்கிறார் பீஜே.

இன்னும் சொல்லப்போனால், ஒரு பேச்சுக்கு ஹாமித்பக்ரி செய்த வசூல் மோசடி, சைபுல்லாஹ், லுஹா, இரண்டு சுலைமான்களுக்கு தெரியாமல் நடந்தது என்றே வைத்துக் கொண்டாலும் இந்த வசூல் விவகாரம் தெரிந்தவுடன் இவர்கள் எல்லாம் இந்த சங்கத்தில் இருந்து விலகிவிட்டார்கள் என்று பீஜே சொல்லுவாரா? ஹாமித்பக்ரி இந்த சங்கத்தை கலைத்து விட்டு அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பணியை மட்டும்பார்த்தார் என்று பீஜே சொல்வாரா? 

இதையும் தாண்டி சொல்கிறோம். அனைத்து தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகளான ஹாமித்பக்ரி, சைபுல்லாஹ் ஹாஜா, இரண்டு சுலைமான்கள், லுஹா ஆகியோர் இஸ்லாமிய கல்விச் சங்கத்தில் அங்கம் வகித்தது போல் அதே காலகட்டத்தில் தமுமுகவிலும் அங்கம் வகித்தார்கள். அதுவும் மேல் மட்ட அங்கத்தினர்களாக. தலைமைக்கழக பேச்சாளர்களாக. தமுமுக அந்த காலகட்டத்தில் ஒரு வெளிநாட்டு நிதி வசூலித்தால் அதற்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை என்று இவர்கள் சொல்லமுடியுமா? அவ்வளவு ஏன்? இன்று த த ஜமாஅத்தில் அங்கம் வகிக்கும் இவர்கள், இந்த ஜமாஅத் வெளிநாட்டு நிதி வாங்கியதை நிரூபித்து விட்டால், அதற்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை என்று இவர்கள் நழுவமுடியுமா? இன்னும் தெளிவாக சொல்வதனால் ஜமாஅத் என்பது பரந்து விரிந்த உறுப்பினர்களை கொண்டது. ஆனால் இஸ்லாமிய கல்விச் சங்கமோ குறிப்பிட்ட விரல்விட்டு எண்ணக்கூடிய நபர்களை கொண்டது. அந்த சங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அந்த சங்கத்தின் நிர்வாகிகள் முதல் உறுப்பினர்கள் வரை அனைவரும் பொறுப்பாளியாவார்.

எனவே இஸ்லாமிய கல்விச் சங்கம் வெளிநாட்டு நிதியோ, உள் நாட்டு நிதியோ வசூலித்தது மோசடி என்றால் அது ஹாமித்பக்ரி என்ற தனிமனிதனை மட்டும் சாராது. மாறாக பீஜேயின் இன்றைய சகாக்கள் உட்பட அனைவரும் அதில் பங்காளிகள் என்பதும், இந்த பங்காளிகளை தனது பங்காளிகளாக கொண்ட பீஜேயும் இந்த மோசடியில் ஒரு பங்காளி என்பதும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட உண்மையாகும். 

அடுத்து வருவது;

இஸ்லாமிய கல்விச் சங்கத்தில் ஊதியம் பெற்ற அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் தாயி.

அபூதாவூத் மொழிபெயர்ப்பு; அவிழப்போகும் முடிச்சுகள்.

திர்மிதி வெளியீடு; பீஜேயின் தியாகமா? திரைமறைவு பணப் பரிமாற்றங்கள்.

இன்ஷா அல்லாஹ் விரைவில்.

வியாழன், 5 ஏப்ரல், 2012

'மணல்திட்டு' புனிதமென்றால் மஸ்ஜித் புணிதமில்லையா?

ராமரை வைத்து மத்தியில் ஆட்சியைப் பிடித்த மதவாத பாஜக, ஆட்சியில் இருந்த காலத்தில் ராமரை அல்ல ராமர் கோயில் கட்டும் திட்டத்தை வனவாசத்திற்கு அனுப்பிவிட்டு, தேவைப்படும் போது மட்டும் 'ராமர்கோயில்' எங்கள் லட்சியம் என்று முழங்குவதைக் காணலாம். உ.பி.யில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் கூட தனது தேர்தல் அறிக்கையிலும், பிரச்சாரத்திலும் ராமர் கோயில் ஸ்லோகத்தை முழங்க பாஜக தவறவில்லை. ஆனாலும் உ.பி.மக்கள் பாஜகவை வீழ்த்தி சமாஜ்வாடிக்கு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் அதிகாரத்தை வழங்கினார்கள். உ.பி., மற்றும் சில மாநிலங்களில் ஏற்பட்ட தோல்வி, கர்நாடகாவில் எடியூரப்பா கொடுத்துவரும் குடைச்சல் இவைகளில் இருந்து மக்களை திசை திருப்ப அதே ராமரை மீண்டும் துணைக்கு அழைத்துள்ளது இந்த சங் பரிவார் படைகள்.

தமிழகத்தின் கனவுத் திட்டம் என்று வர்ணிக்கப்படும் சேது சமுத்திரத் திட்டம், சுமார் 2400 கோடிக்கும் மேலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2005 ம் ஆண்டு பிரதமர் மன்மோகன்சிங் மதுரையில் தொடங்கிவைத்த திட்டம், இந்த மதவாத கூட்டத்தின் 'ராமர் பாலம்' என்ற கோஷத்தால் முடங்கிப்போனது. மக்களின் வரிப்பணம் கடலில் கரைந்த பெருங்காயமாக ஆகிவிட்டது. இந்த சேதுசமுத்திர திட்டத்தைப் பற்றி தொடங்கிவைத்த மன்மோகனின் காங்கிரசும் சரி, அதை தமிழகத்திற்கு போராடி பெற்றுத் தந்ததாக மார்தட்டிக் கொள்ளும் திமுக., மதிமுக கட்சிகளும் மறந்தே போய்விட்டன.

இந்நிலையில் ஜனதாக் கட்சி என்ற பெயரில் சங்பரிவாரக் கட்சி நடத்திவரும் பிரபல அரசியல் காமெடியர் சுப்ரமணிய சாமி, ''ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய, மீண்டும் ராமர் பாலம் என்று சொல்லப்படும் அந்த மணல்திட்டு விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. எத்தனையோ அதிமுக்கியமான வழக்கெல்லாம் உச்சநீதிமன்றத்தில் உறக்கத்தில் இருக்க, இந்த மணல்திட்டு விஷயத்தை தேசிய சின்னமாக அறிவிப்பது பற்றிய முடிவை 2 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால், வழக்கு விவாதங்களை தொடங்குவோம்' என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறியது.

இந்நிலையில், இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ராவல், 'ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிப்பது பற்றி உரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவது அவசியம். ஆகவே, பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும்' என்று கேட்டதன் அடிப்படையில், கூடுதலாக 2 வாரங்கள் கால அவகாசம் அளித்து உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 19ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர். 

இதற்கிடையில் இந்த மணல்திட்டு பிரச்சினை பாராளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது. திமுகவினர் சேதுசமுத்திர பணிகளை உடனே துவங்கவேண்டும் என்று குரல் எழுப்ப, மறுபக்கம் அதிமுகவோ சங்பரிவாரக் குரலில், இந்த மணல்திட்டை நினைவுச் சின்னமாக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று குரல் எழுப்புகிறது. மேலும், ''ராமர் பாலத்தை (ஆதம் பாலம்) தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும், அதனை கையகப்படுத்தி பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என்று தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகத்திற்கும் மற்றும் மத்திய அரசின் கலாசார அமைச்சகத்திற்கும் உத்தரவிடக் கோரியும், சுப்ரீம் கோர்ட்டு மறுஉத்தரவு வரும் வரை ராமர் பாலத்திற்கு எந்த விதத்திலும், எந்தவித சேதமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சேது சமுத்திர கழகம் மற்றும் மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு உத்தரவிடக் கோரியும் கடந்த 2007ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தனது 'இன'உணர்வைக் காட்டிய ஜெயலலிதா, தற்போது இந்த விவாகரம் சூடுபிடித்துள்ளதையொட்டி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், 
''தொல்பொருள் மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த, வரலாற்று சிறப்புமிக்க ராமர் பாலத்தின் குறுக்கே சேது சமுத்திர கால்வாய் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இனியும் தாமதிக்காமல் ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளதோடு,
இந்த விஷயத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தனியாக பதில் மனு தாக்கல் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

இதில் கவனிக்கவேண்டிய அம்சம் என்னவெனில், இராமாயணம் என்பது ஒரு புராணம். அந்த புராணத்தில் இலங்கையில் சிறைவைக்கப்பட்ட தனது மனைவி சீதையை மீட்க இலங்கை செல்வதற்காக ராமர் கட்டிய பாலம் தான் இது என்பது சங்பரிவார்களின் கூற்றாகும். இதையொட்டியே ராமர், பாலம் கட்டும் அளவுக்கு அவர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார்? என்று திமுக தலைவர் கேள்வி எழுப்ப, அவரது நாக்கை வெட்டுபவருக்கு பரிசு என்று சங்பரிவார 'வேதாந்தம்' அறிவித்ததெல்லாம் பழங்கதை. இது ஒருபுறமிருக்க, அவர்களின் கூற்றுப்படி ராமர் காட்டினார் என்றே வைத்துக் கொண்டாலும் ராமர் சீதையை மீட்டிக் கொண்டுவந்து விட்டார். சீதையும் தீயில் இறங்கி தனது கற்பை நிரூபித்தும் விட்டார். இப்போது ராமனும் இல்லை. சீதையும் இல்லை. ராமர் போன அந்த பாலம் இப்போது மனிதன் நடந்து போகும் வகையில் இல்லை. கடலுக்கடியில் இருக்கிறது. இனி ராமரே வந்தாலும் இந்த பாலம் வழியாக இலங்கை செல்லவேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இலங்கைக்கு அதிநவீன பயணிகள் கப்பல் மத்திய அரசால் தூத்துக்குடியிலிருந்து இயக்கப்படுகிறது. அதில் இலங்கை போகலாம். அல்லது வைகோ பாணியில் கள்ளத் தோணி ஏறி இலங்கை போகலாம். அல்லது விமானம் மூலம் இலங்கை போகலாம். அதெல்லாம் சரி. இனி ராமர் இலங்கை போய் எந்த மனைவியை மீட்கப் போகிறார்? ஆக ராமரே இருந்தாலும் அவருக்கே பயன்படாத இந்த மணல்திட்டை வைத்து அரசியல் நாடகம் நடத்துவது சரியா? சரி ராமர் பாலம் பற்றி குய்யோ முறையோ என கூப்பாடு போடும் இவர்கள், ராமர் வழியில் இலங்கை சென்றால் இந்த பாலத்தை தான் பயன்படுத்துகிறார்களா? சொகுசு விமானம் மூலம் செல்கிறார்களா? இன்று பயனில்லாவிட்டலும் அது எங்கள் கடவுளோடு சம்மந்தப்பட்டது; எனவே அதை நினைவுச் சின்னமாக்க வேண்டும் என்று இவர்கள் சொல்வார்களானால், கடலுக்கு கீழே உள்ள இந்த மணல்திட்டை விட, பூமிக்கு மேலே முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமான பாபர் மஸ்ஜித் என்ற புனித இடம் இவர்களால் தரைமட்டமாக்கப்பட்டதே! அப்படியானால் இவர்கள் நினைத்தால் ஒரு மணல்திட்டும் புணிதமாகிவிடும். மற்றவர்களின் பள்ளிவாசல் இவர்களுக்கு வெறும் கட்டிடமாகத் தெரியும் அப்படித்தானே! எல்லாம் அரசியல் படுத்தும் பாடு.


குஜராத் கலவரத்துக்கு அமெரிக்க நகரசபையில் கண்டன தீர்மானம்

குஜராத் மாநிலத்தில் உள்ள கோத்ராவில் கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து கலவரம் மூண்டு பலர் உயிர் இழந்தனர். இந்த கலவரத்துக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்காவில் உள்ள ஹார்வி நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.

 மேயர் எரிக் கெல்லெக் தலைமையில் நடைபெற்ற அந்த நகரசபை கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தில், குஜராத்தில் 2002ம் ஆண்டு நடந்த கலவரத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கை பராமரிக்க மாநில அரசு தவறி விட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளதால் இந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது' என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஹார்வி நகரசபை சிகாகோவிற்கு புறநகரில் அமைந்துள்ளது. நகரசபை நிறைவேற்றியுள்ள இந்த தீர்மானத்தை அமெரிக்க வாழ் இந்திய முஸ்லிம் கவுன்சில் வரவேற்றுள்ளது. 

சட்டமியற்றும் அவைகளில் ரகளை; தீர்வு என்ன?

மிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவரான விஜயகாந்த், நாக்கை கடித்துக் கொண்டு நாகரீகமற்ற முறையில் பேசி சபையின் கண்ணியத்திற்கு இழுக்கை ஏற்படுத்தி விட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த கூட்டத்தொடரில் பத்துநாள் சஸ்பென்ட் செய்யப்பட்டார். அதனால், இப்போது நடைபெற்று அவரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் சில நாட்கள் அவரால் பங்கேற்கமுடியவில்லை. மேலும் தனது விசயத்தில் சபாநாயகரின் இந்த முடிவை எதிர்த்து வழக்கு தொடர்ந்த விஜயகாந்த், தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், இதே போன்று மராட்டிய சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட சிவசேனா, பா.ஜனதாவை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் ஓராண்டு சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டம் திவேகாரில் உள்ள விநாயகர் கோவிலில் தங்கத்தால் ஆன விநாயகர் சிலை கடந்த வாரம் கொள்ளை போனது. இந்நிலையில், வெள்ளி முலாம் பூசப்பட்ட விநாயகர் சிலையுடன் சட்டசபைக்கு வந்த சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கை முன் வந்து தர்ணா செய்தனர். இந்த அமளி காரணமாக சபை 2 தடவை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் கூடியபோது, சட்டசபை விவகாரத்துறை மந்திரி ஹர்சவர்தன் பட்டீல், அமளியில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்டு செய்யும் தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானம் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி சபையின் மரபை மீறி செயல்பட்டதாக 13 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஒரு பா.ஜனதா எம்.எல்.ஏ. ஆகியோரை இந்த ஆண்டு முழுவதும் சஸ்பெண்டு செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

சட்டமன்றமும்-நாடாளுமன்றமும் நாட்டின் இதயம் போன்றது. அந்த இடத்தில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்று தெரியாத பாஜக-சிவசேனை கட்சியினர் எல்லாம் மக்கள் பிரதிநியாக வலம் வருவது ஜனநாயகத்திற்கே இழுக்காகும். கோயிலில் உள்ள சாமி சிலை திருட்டு போவது நாட்டில் ஆங்காங்கே அவ்வப்போது நடைபெறும் நிகழ்வுகள்தான். இந்த திருட்டைக் கண்டுபித்து குற்றவாளிகளை தண்டிப்பதற்குத்தான் காவல்துறை உள்ளது. தங்களது கடவுளின் தங்க சிலை காணவில்லை என்றால் இந்த சிவசேனா-பாஜக உறுப்பினர்கள் செய்யவேண்டியது என்ன? சட்டரீதியாக அணுகி தீர்வு காண முயற்சி செய்திருக்க வேண்டும். அல்லது சட்டமன்றத்தில் இதைக் கிளப்புவதாக இருந்தாலும், பிரச்சினையை பக்குவமாக சபையில் பேசி நடவடிக்கைக்கு அரசை வலியுறுத்த வேண்டும். அவ்வாறில்லாமல் கூச்சல் போடுவதும், ரகளையில் ஈடுபடுவதும் சபையின் நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதும் தவறானதாகும். இவ்வாறு மக்கள் பிரதிநிதிகள் நாளொன்றுக்கு பல்லாயிரம் கோடி செலவில் நடத்தப்படும் சட்டமன்ற, நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்கும் வண்ணம் நடப்பது, அவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு செய்யும் துரோகமாகும். இவ்வாறு செயல்படும் மக்கள் பிரதிநிதிகளின் அனைத்து ஊதியங்களையும் சலுகைகளையும் பிடித்தம் செய்வதோடு, அன்றைய நாள் சபையின் அனைத்து செலவுகளையும் அவர்கள் தலையில் கட்டவேண்டும். அப்போதுதான் சபை நிகழ்ச்சிகள் தங்குதடையின்றி நடக்கும் என்பதுதான் அதிகாரவர்க்கம் அறியவேண்டிய ஒன்றாக உள்ளது.

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

ஹஜ் பயணிகளுக்கான மானியம் ரத்து ஆகிறது?: மத்திய அரசு ஆலோசனை..?

இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக மெக்கா புனித ஹஜ் பயணம் உள்ளது. செப்டம்பர் மாதம் தொடங்கி நவம்பர் வரை இந்தியர்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள்.  
 
ஹஜ் பயணிகளுக்கு உதவுவதற்காக மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. அரசின் ஹஜ் கமிட்டி மூலம் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மட்டுமே இந்த மானிய உதவி கிடைக்கும்.
 
ஹஜ் பயணிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 16 ஆயிரம் மானிய உதவி கொடுக்கப்படுகிறது. ஹஜ் பயணித்தின்போது இந்த நிதிஉதவி கொடுக்கப்படும். கடந்த ஆண்டு இந்த மானிய திட்டம் மூலம் 1.25 லட்சம் பேர் பயன்பெற்றனர்.  

நன்றி; மாலைமலர்.
 
இந்த நிலையில் ஹஜ் பயணிகளுக்கு மானியம் அளிக்க வேண்டாம் என்று பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. மானியத்தை ரத்து செய்யும்படி மத்திய அரசிடம் இஸ்லாமிய அமைப்புகள் மனு கொடுத்துள்ளன.
 
இதையடுத்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மானிய உதவி வழங்குவதை நிறுத்துவது பற்றி மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. பல்வேறு தரப்பினரிடமும் இதுபற்றி கருத்து கேட்கப்பட்டுள்ளது.  
 
இதற்கிடையே மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா, கொச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போது, ஹஜ் பயணத்துக்கான மானியம் ரத்து ஆகலாம் என்றார். மத்திய அரசு இதுபற்றி விரைவில் முடிவு செய்யும் என்றார்.