சனி, 14 ஏப்ரல், 2012

நாளை 2ம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்

இந்தியாவில் இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோ நோயை ஒழிக்க மத்திய அரசு செய்து வரும் முயற்சியின் ஒரு கட்டமாக, இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை [15 -4 -2012 ]நடைபெற உள்ளது.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நாளை இரண்டாம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். எனவே பெற்றோர்கள் தவறாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கும் இடங்களுக்குச் சென்று தங்களது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடுமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் 40,399 மையங்கள் மூலமாக சுமார் 65 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது.

ஆரம்ப சுகாதார மையங்கள், பால்வாடிகள், மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் ரயில் நிலையம், பேருந்து நிலையங்களிலும் போலியோ சொட்டு மருந்து போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் தவறாமல் இந்த சொட்டு மருந்து குழந்தைகளுக்கு போடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி நாடு முழுவதும் மொத்தம் 17 கோடி குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக