சனி, 14 ஏப்ரல், 2012

அசத்தியத்தை எதிர்த்து அனைத்து அமைப்புகளும் [டி.என்.டி.ஜே. உட்பட] ஓரணியில்...


ஏகத்துவத்தில் உறுதி எல்லோருடனும் இணக்கம் என்ற கொள்கையை வகுத்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தனது பணிகளை திறம்பட செய்து சமுதாயத்தில் நன்மதிப்பை பெற்று வருகிறது.

இதன் காரணமாக முஸ்லிம் மக்களிடம் மட்டுமல்லாது முஸ்லிமல்லாத மக்களிடமும் அங்கீகாரம் பெற்ற ஜமாஅத்தாக செயல்பட்டு வருகிறது ஐஎன்டிஜே.

சமுதாயப் பிரச்சினைகளில் காய்தல் - உவத்தலின்றி உள்நோக்கம்,அரசியல்தனமில்லாமல் நேர்மையாக களம் கண்டு வருகிறது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்பதற்கு உதாரணமாக இருக்கிறது பின்வரும் செய்தி.

விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களால் மவ்லூது ஓதுவது மார்க்க அடிப்படையில் எவ்வளவு பெரிய தீமை என்பதை விளக்கி கைப் பிரதிகள் விநியோகிக்கப்பட்டிருந்தன. இந்த வெளியீட்டைப் படித்த சிவகாசி உள்ளூர் ஷாஃபி ஜமாஅத் நிர்வாகம்நிர்வாகக் கூட்டத்தைக் கூட்டி எடுத்த முடிவின்படிஇந்த நோட்டீசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் விளக்கம் தர வேண்டும் என அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

ஆனால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினரோ ஷாஃபி ஜமாஅத்தின் அழைப்பை ஏற்காமல் புறக்கணித்து விட்டனர்.

இதனால் கோபமடைந்த ஷாஃபி ஜமாஅத் நிர்வாகம்தவ்ஹீத் ஜமாஅத்தினரை ஊர் நீக்கம் செய்வதாகவும்ஷாஃபி ஜமாஅத்துக்கு சொந்தமான கட்டிடங்களை அவர்களுக்கு வாடகைக்கு தருவதில்லைஇறந் தவர்களை அடக்கம் செய்ய மையவாடியில் இடமளிப்பதில்லை என்றெல்லாம் தீர்மானம் போட்டுபிரசுரமாக அச்சடித்து ஊரெல்லாம் விநியோகமும் செய்திருக்கிறது.


பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உள்ளூர் கிளை நிர்வாகிகள் இயக்க வேறுபாடுளை மறந்து சகோதர இயக்கங்களின் உள்ளூர் நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

இதனடிப்படையில் தமுமுகபாப்புலர் பிரண்ட்இந்திய யூனியன் முஸ்லிம் லீக்தேசிய லீக் ஆகிய இயக்கங்களிலுள்ள தவ்ஹீத் சிந்தனை கொண்ட சகோதரர்களும்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களும் கடந்த1ம் தேதி ஒன்று கூடி ஷாஃபி ஜமாஅத் நிர்வாகம் எடுத்த தீர்மானத்தை எதிர்கொள்ள முடிவெடுத்தனர்.

அனைத்து இயக்கங்களைச் சேர்ந்த சகோதரர்கள் ஒன்றிணைந்து ஷாஃபி ஜமாஅத்தை எதிர் கொள்ள முடிவெடுக்கப் பட்டதால் "சிவகாசி பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் இளைஞர் குழுஎன இந்த கூட்டமைப்புக்கு பெயர் வைக்கப்பட்டது.

இந்த கூட்டமைப்பின் பெயரில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மேற்கண்ட இயக்கங்களிலிருந்து ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு இயக்கங்களின் முக்கிய நிர்வாகிகள் கருத்துரைத்தனர். இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கலந்து கொண்ட அதன் மாநிலப் பேச்சாளர் யூசுஃப் மிஸ்பாஹிஏகத்துவ சகோதரர்கள் ஒற்றுமையாக செயல்படுவதன் அவசியம் பற்றி குர்ஆன் - ஹதீஸ் விளக்கங்களுடன் எடுத்துக் கூறினார்.

ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில் ஊர் நீக்கம் உள்ளிட்ட அனைத்து தடைகளையும் ஷாஃபி ஜமாஅத் நீக்கிக் கொள்ள வேண்டும் என கடிதம் அனுப்புவது என்றும் இதைச் செய்யத் தவறினால் இந்தப் பிரச்சினையில் ஓரணியில் நின்று சட்ட நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை அபு யாசிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக