செவ்வாய், 3 ஏப்ரல், 2012

ஹஜ் பயணிகளுக்கான மானியம் ரத்து ஆகிறது?: மத்திய அரசு ஆலோசனை..?

இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக மெக்கா புனித ஹஜ் பயணம் உள்ளது. செப்டம்பர் மாதம் தொடங்கி நவம்பர் வரை இந்தியர்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள்.  
 
ஹஜ் பயணிகளுக்கு உதவுவதற்காக மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. அரசின் ஹஜ் கமிட்டி மூலம் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மட்டுமே இந்த மானிய உதவி கிடைக்கும்.
 
ஹஜ் பயணிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 16 ஆயிரம் மானிய உதவி கொடுக்கப்படுகிறது. ஹஜ் பயணித்தின்போது இந்த நிதிஉதவி கொடுக்கப்படும். கடந்த ஆண்டு இந்த மானிய திட்டம் மூலம் 1.25 லட்சம் பேர் பயன்பெற்றனர்.  

நன்றி; மாலைமலர்.
 
இந்த நிலையில் ஹஜ் பயணிகளுக்கு மானியம் அளிக்க வேண்டாம் என்று பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. மானியத்தை ரத்து செய்யும்படி மத்திய அரசிடம் இஸ்லாமிய அமைப்புகள் மனு கொடுத்துள்ளன.
 
இதையடுத்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மானிய உதவி வழங்குவதை நிறுத்துவது பற்றி மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. பல்வேறு தரப்பினரிடமும் இதுபற்றி கருத்து கேட்கப்பட்டுள்ளது.  
 
இதற்கிடையே மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா, கொச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போது, ஹஜ் பயணத்துக்கான மானியம் ரத்து ஆகலாம் என்றார். மத்திய அரசு இதுபற்றி விரைவில் முடிவு செய்யும் என்றார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக