வெள்ளி, 29 ஏப்ரல், 2011

இதஜ, குவைத் மண்டலத்தின் இந்த வார பிரசுரம்!

உழைத்து வாழவேண்டும்! பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே!!

மே 1 அன்று 'உலக தொழிலாளர் தினம்' கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளை அனுஷ்டிப்பது சரியா?தவறா என்ற ஆய்வுக்கு செல்லாமல், இந்த நாள் உலகெங்கிலும் உழைப்பின் சிறப்பை எடுத்தியம்புவதால் இந்தநாளில், இஸ்லாம் உழைப்புக்கு தரும் முக்கியத்துவத்தை பகிர்ந்து கொள்வதுதான் இந்த ஆக்கத்தின் நோக்கம்.

உலகமாந்தர்களில் உழைக்கும் வர்க்கம் ஒன்றுதான். ஆனால் உழைக்காமல் வாழும் வர்க்கம் பலஉண்டு. அடுத்தவர் உழைக்க அதில் வாழுபவர்கள் ஒரு ரகம். உழைக்க தெம்பிருந்தும் 'வெட்கத்தைவிட்டு' பிச்சை எடுத்து வாழுபவர்கள் ஒருரகம். படித்து பதவியில் இருப்பவர்களில் சிலர், லஞ்சம் என்ற பெயரில் கவுரவபிச்சை எடுப்பவர்கள் ஒருரகம். உழைக்காமல் 'திருடி'வாழுபவர்கள் ஒருரகம். இப்படியான மக்கள் வாழும் நிலையில் இஸ்லாம் உழைப்பிற்கு உன்னதமான இடத்தைதந்து, அடுத்தவர் உழைப்பில் வாழாமல், அடுத்தவரை ஏய்க்காமல் உழைத்து வாழ்ந்தால் அதற்கும் நன்மையுண்டு என்று சொல்லிக்காட்டுகிறது.
 
உழைப்பின் முக்கியத்துவம்;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" ஒருவன் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தன்னுடைய முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவனுக்கு இழிவு ஏற்படாமல் தடுத்து விடுவான். மக்கள் அவனுக்குக் கொடுக்கவும் செய்யலாம்; அல்லது மறுக்கவும் செய்யலாம்."[நூல்;புஹாரி,1471]
பிச்சையெடுப்பதை காட்டிலும் உழைப்பு சிறந்தது;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" (கொடுக்கும்) கை தாழ்ந்த (வாங்கும்) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான். யார் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கிவிடுவான்."நூல்;புஹாரி,எண் 1427 ]
மேற்கண்ட இரு செய்திகளும் அடுத்தவர் உழைப்பில் வாழநினைப்பவர்களுக்கும், சுயமரியாதையை இழந்து பிச்சை எடுத்து பிழைப்பு நடத்த நினைப்பவர்களுக்கும் சாட்டையடியாக இருப்பதை காணலாம்.
 
லஞ்சம் ஒரு வஞ்சகச்செயல்;
அல்லாஹ் கூறுகின்றான்;
அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்;. மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்.[2:188 ]
கவுரவமான பதவியில் இருந்தபோதும் பேராசையின் காரணமாக லஞ்சம் வாங்குபவர்களிடம், லஞ்சம் கொடுக்கக்கூடாது எனபதை இவ்வசனம் சொல்லிக்காட்டி லஞ்சத்தின் வாசலை அடைக்கிறது. ஆனால், துரதிஷ்டவசமாக இவ்வசனத்தை கடைபிடிக்கவேண்டிய முஸ்லிம்களில் சிலர் தங்களுடைய அறியாமையின் காரணமாக லஞ்சம் கொடுத்து தங்களுடைய காரியத்தை முடித்துக்கொள்வதையும் பரவலாக பார்க்கிறோம். இந்த செயல் கண்டிப்பாக தடுக்கப்படவேண்டியதாகும்.
 
உழைப்ப்பின் மூலம் உண்ணும் உணவே சிறந்தது;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர்." [நூல்;புஹாரி,எண் 2072 ]
உழைத்து வாழ்ந்த சத்திய சகாபாக்கள்;
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்; நபித்தோழர்கள் பலர் உழைத்து உண்பவர்களாக இருந்தனர். இதனால் அவர்களிடம் (வியர்வை) வாடை வீசும். இதன் காரணமாகவே 'நீங்கள் குளிக்கக் கூடாதா?' என்று அவர்களிடம் கூறப்பட்டது. [நூல்;புஹாரி எண் 2071 ]
வியர்வை சிந்தி உழைத்த சத்திய சஹாபாக்களை புறந்தள்ளி, மார்க்கத்தையே பிழைப்பாக்கி கொண்ட 'மார்க்க அறிஞர்களை' என்னவென்று சொல்வது..?
 
தனக்கு மட்டுமல்ல.,தர்மம் செய்யவும் உழைத்த உத்தமர்கள்;
அபூ மஸ்வூத் அல் அன்ஸாரி(ரலி) அறிவித்தார். "நபி(ஸல்) அவர்கள் தர்மம் செய்யும்படி கட்டளையிட்டால், எங்களில் ஒருவர் கடைவீதிக்குச் சென்று, சுமைதூக்கி ஒரு 'முத்து' கூலியைப் பெற்று அதை தர்மம் செய்வார்! ஆனால், இன்று அவர்களில் சிலருக்கு ஓர் இலட்சம் தங்கக் காசுகள் உள்ளன!" [நூல்;புஹாரி எண் 2273 ]

உழைத்து வாழச்சொல்லும் மார்க்கத்தையுடைய, உழைத்துவாழ்ந்த நபிமார்கள், சத்திய சஹாபாக்கள்  வழியில் உண்மை முஸ்லிம்களாகிய நாம் உழைத்துவாழ்வோம். ஏனெனில், மிம்பர் மீதேறி உத்தம நபி[ஸல்] கூறினார்கள்;  தர்மம், சுயமரியாதை, யாசகம் ஆகியவற்றைப் பற்றி உபதேசம் செய்துவிட்டு, 'உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்ததாகும்; உயர்ந்த கை என்பது தர்மம் செய்யக்கூடியதும்; தாழ்ந்த கை என்பது யாசிக்கக் கூடியது" என்றும் கூறினார்கள்.[புஹாரி]

முஸ்லிம்களின் கை எப்போதும், எதிலும் உயர்ந்த கையாக இருக்கவேண்டும். அதுதான் உயர்வின் அடையாளமும் கூட! 
 
ஆண்கள் உழைத்திடுவோம்;
பெண்களையும்- குழந்தைகளையும் நிர்வகித்திடுவோம்;
குழந்தை தொழிலாளர் முறை ஒழித்திடுவோம்.

இப்போது விற்பனையில் பரபரப்பான செய்திகளுடன் இந்த வார சமுதாய மக்கள் ரிப்போர்ட்!






சாய்பாபாவுக்கு இரங்கல்; சன்மார்க்க சருகலில் மமக!

ஒப்பற்ற  ஓரிறையின் திருப்பெயரால்... 

அரசியலில் முஸ்லிம்களின் பங்களிப்பு அவசியம் என்ற அடிப்படையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மமகவை ஆதரித்து நாம் நிறைய ஆக்கங்கள் வரைந்தோம். அரசியலில் ஏற்கனவே இருக்கும் முஸ்லிம் அமைப்புகளில் இருந்து வேறுபட்டு இவர்கள் இஸ்லாமிய அடிப்படையில் அரசியல் நடத்துவார்கள் என்ற நம்பிக்கையில். ஆனால் வாக்கு பதிவு முடிந்த மாத்திரமே பக்கா அரசியல்வாதியாக மாறிவிட்டார் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ். இன்று மரணத்தை தழுவிய கடவுள்[?] சாய்பாபாவின் மரணத்தையொட்டி இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார் பேராசிரியர்.அதை கீழே படியுங்கள்; 

சாய்பாபா மறைவு-மனித நேய மக்கள் கட்சி அனுதாபம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை

இந்து சமய ஆன்மீக குருவான சாய்பாபாவின் மறைவுக்கு மனித நேய மக்கள் கட்சி ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது.


இந்து சமய ஆன்மீக வாதியும் சமூக சேவகருமான புட்டபர்த்தி சாய்பாபாவின் மறைவால் வாடும் அவரது பக்தர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம். ஆன்மீக  வாதியாக மட்டுமல்லாது   நாடறிந்த சமூக சேவகருமாக சாய்பாபா திகழ்ந்தார். ,அவரது நிறுவனங்கள் வாயிலாக கல்வியையும், மருத்துவ உதவியையும் எண்ணற்றோருக்கு வழங்கி பெரும் சேவையாற்றினார்.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் நிலவிய கடும் தண்ணீர் பஞ்சத்தை நீக்க அவர் பெரும் முயற்சி மேற்கொண்டார் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூர குழாய்கள் அமைத்து  700 கிராமங்களுக்கும் 11 நகரங்களுக்கும் தண்ணீர் பஞ்சத்தை தீர்த்து வைத்ததோடு அதற்காக நிதியுதவி வழங்க முன்வந்த மத்திய அரசின் நிதியுதவியையும் ஏற்க மறுத்தார்.

கல்வி உதவிகள்,  மருத்துவ உதவிகள்  மூலம் ஏராளமான மக்களுக்கு தொண்டாற்றிய சாய்பாபாவின் மறைவினால் வாடும் அவரது பக்தர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேற்கண்டவாறு அறிக்கையில்  கூறியுள்ளார் ஜவாஹிருல்லாஹ்.

ஒரு முஸ்லிம் மரணித்தால் அவனுக்காக துஆ செய்வதும், கணவன் நீங்கலாக யாருக்காவும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கக் கூடாது  என்பதும் இஸ்லாம் நமக்கு கட்டிய வழிமுறையாகும். அதே நேரத்தில் ஒரு இணைவைப்பாளர் மரணித்து விட்டால் அவருக்காக நாம் பிரார்த்திக்கவோ, வேறு காரியங்களை ஆற்றுவதற்கோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை. ஆனால் சாய்பாபா தன்னை கடவுளாகவும், கடவுளின் அவதாரமாகவும் காட்டிக் கொண்டவர். சில அற்புதங்களை[?] செய்து காட்டி தன்னை வழிபடும் கூட்டத்தை உருவாக்கியவர். சாய்பாபாவின் பக்தர்களுக்கு அனுதாபம்  தெரிவிப்பதன் மூலம் சாய்பாபாவை கடவுள் என நம்பும் அவரது பக்தர்களின் சித்தாந்தத்தை அங்கீகரிக்கிறது மமக. மேலும் சாய்பாபா சமூக சேவகர் என்று புகழாரம்  சூட்டுகிறது மமக. அப்படியே இருக்கட்டும் சாய்பாபாவின் சமூக சேவை மறுமையில் அவருக்கு பயனளிக்கும் என்கிறதா மமக? இதோ எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகின்றான்; 

ذَلِكَ هُدَى اللّهِ يَهْدِي بِهِ مَن يَشَاء مِنْ عِبَادِهِ وَلَوْ أَشْرَكُواْ لَحَبِطَ عَنْهُم مَّا كَانُواْ يَعْمَلُونَ

இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்; அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும்.[6:88 ]

இறைமறை இவ்வாறு கூற, அதற்கு நேர் மாற்றமாக புகழ்மாலை சூட்ட மமகவுக்கு ரொம்பவே துணிச்சல். முஸ்லிம் கட்சி, சமுதாய முன்னேற்றம் என்ற பெயரில் மக்களை தவறான வழிக்கு அழைத்து செல்ல வேண்டாம் என்று மமகவுக்கு குறிப்பாக இந்த அறிக்கை வெளியிட்ட ஜவாஹிருல்லாஹ்விற்கு அறிவுறுத்துகிறோம்.

நன்றி; அப்துல்முஹைமீன். http://amaibbukal.blogspot.com/2011/04/blog-post_24.html


திறந்தது மைசூர் கதவு; திறக்குமா முதல்வரின் மனது...?

ல்லியான தேகம்; முரட்டு மீசையுடன் அடர்ந்த காட்டுக்குள் அரசாட்சி செய்து மூன்று மாநில காவல்துறைக்கு சிம்ம சொப்பனமாக  திகழ்ந்து, பல போலீசாரைக் கொன்று ஒரு தனி சாம்ராஜ்யமாக திகழ்ந்த சந்தன கடத்தல் வீரப்பனை யாரும் மறந்திருக்க முடியாது. இந்த வீரப்பனை ஜெயலலிதாவின் முந்தைய  ஆட்சிக் காலத்தில் சம்காரம் செய்தது காவல்துறை. ஆனாலும் வீரப்பனின் வழக்கு மட்டும் இன்னும் ஆயுளோடு உள்ளது.
 
வீரப்பனின்  மனைவி முத்துலட்சுமி மீது  கர்நாடக போலீசார் மொத்தம் 5 வழக்குகள் தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்குகள எதிலும் முத்துலட்சுமி நேரடியாக தொடர்புடைய குற்றவாளியாக  குற்றம் சாட்டப்படவில்லை. மாறாக வீரப்பன் செய்த சில சட்டவிரோத கொலைகளுக்கு முத்துலட்சுமி உடந்தையாக இருந்தார் என்பதுதான் வழக்கு. இந்த வழக்குகளில் ஏற்கனவே 4 வழக்குகளில் அவர் விடுதலையாகி விட்டார். 5 வதாக நிலுவையில் இருந்த சாம்ராஜ் நகர் போலீஸ் கொலை வழக்கிலும் அவர் கடந்த 20  ம் தேதி விடுதலை செய்யப்பட்டு விட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த முத்துலட்சுமி மைசூர் மத்திய சிறையில் இருந்தார். இந்த நிலையில், அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால் கடந்த புதன் கிழமை சாம்ராஜ்நகர் கோர்ட்டு அவரை விடுதலை செய்தது. இதைத்தொடர்ந்து முத்துலட்சுமி மேட்டூர் சென்று தனது உறவினர்களை சந்தித்து விட்டு, சென்னையில் உள்ள தனது மகள்களுடன் வசிக்க முடிவு செய்து இருந்தார்.
 
இதற்கிடையே, வழக்கில் இருந்து முத்துலட்சுமி விடுதலை செய்யப்பட்டாலும், மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்ட வழக்கு கோபி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் முத்துலட்சுமியும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருக்கிறார். இந்த வழக்கு விசாரணை முடியாததால், முத்துலட்சுமியை தமிழக போலீசார் வசம் ஒப்படைத்தனர் கர்நாடக காவல்துறையினர். பின்னர் கோபி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவர் மற்றொரு நாள் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  
முத்துலட்சுமி மீது தற்போது நிலுவையில் உள்ள ஒரே வழக்கான நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கை பொறுத்தவரையில், கடத்தப்பட்ட ராஜ்குமாரும், கடத்திய வீரப்பனும் இன்று உயிரோடு இல்லை. ஆனால் அந்த வழக்கு மட்டும் இன்னும் உயிரோடு இருக்கிறது. அது முத்துலட்சுமியின் வாழ்க்கையை மட்டுமன்றி, ஏற்கனவே தந்தையை  இழந்த நிலையில் தாயின் அரவணைப்பை எதிர்பார்க்கும் அவரது மகள்களின் வாழ்க்கையையும் ஒரு சேர கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மேலும் ராஜீவ் காந்தி  கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட நளினிக்கு கருணை காட்டவேண்டும் என்று சொல்லும் மனித நேயர்கள், முத்துலட்சுமி விசயத்தில் மூச்சு விடாதது ஏன் என்பது புரியவில்லை. எனவே அரசு விரைவாக முத்துலட்சுமி மீதான நிலுவை வழக்கை விரைந்து முடிந்து, அவரையும் அவரது பிள்ளைகளையும் சுதந்திர சந்தோஷ வாழ்க்கை வாழ வழிகாட்டவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.
 
அதோடு, முத்துலட்சுமியின் வழக்கு விஷயங்கள், தவறான பாதையில் பயணிக்கும் கணவர்கள் தங்களது மறைவிற்கு பின்னும் தமது குடும்பத்திற்கு தீராத வேதனையை  விட்டு செல்கிறார்கள் என்பதற்கு நிதர்சன சான்றாகவும் படிப்பினையாகவும் உள்ளது.

'ஆள் இல்லா வீட்டில் திருடுவான் திருடன்; ஆள் இல்லா விமானம் மூலம் அப்பாவிகள் உயிரை திருடுகிறது அமெரிக்கா.

ப்கானிஸ்தான் மீது அமெரிக்க கூட்டுப்படைகள் ஆக்கிரமிப்பு போர் நடத்திய வேளையில், ஆப்கான் மக்களுக்கு அடைக்கலம் தந்தவர்கள் பாகிஸ்தானை சேர்ந்த, ஆப்கனிஸ்தான் எல்லையை ஒட்டிய வசிரிஸ்தான் மலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள். பொறுக்குமா அமெரிக்காவுக்கு..? இந்தப்பகுதியில் தாலிபான் மற்றும் அல்-காயிதாவினர் பதுங்கியிருக்கிறார்கள் என்று புருடாவிட்டு அவ்வப்போது இப்பகுதிமீது தாக்குதல் நடத்துகிறது அமெரிக்கா.

கடந்த 2008 ம் ஆண்டுமட்டும் சுமார் 30 ஏவுகணை தாக்குதலை இப்பகுதியில் அமெரிக்கா நடத்தியதாக செய்திகள் கூறுகின்றன. மேலும் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இப்பகுதிகளில் தாக்குதலை நடத்த தவறவில்லை அமெரிக்கா. இத்தாக்குதல்களில் பலர் பல்வேறு காலகட்டங்களில்  கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த பகுதியில் 22 -4-2011 அன்று  அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் நேற்று குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசின.
இரண்டு விமானங்கள் மூலமாக 4 ஏவுகணைகள் வீசப்பட்டன. அந்த தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டுனர்.. அதில் 3 பேர் பெண்கள். இந்த தகவலை, பாகிஸ்தானின் உளவுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்கண்ட பகுதியில் அமெரிக்கா கூறுவது போன்ற தீவிரவாதிகள் இருந்தாலும், பாகிஸ்தான் மூலம் நடவடிக்கை எடுப்பதுதான் நியாயமானது. நியாய/ அநியாயங்கள் அமெரிக்காவிற்கு பொருந்தாது என்பதுபோல் எந்த நாட்டின்மீதும் நினைத்த நேரத்தில் தாக்குதல் நடத்துவதும், அதை உலக நாடுகள் கண்டுகொள்ளாமல் இருப்பதும் ஏன் என புரியவில்லை. 'ஆள் இல்லா வீட்டில் திருடுவான் திருடன்; ஆள் இல்லா விமானம்  மூலம் அப்பாவிகள் உயிரை திருடுகிறது அமெரிக்கா. ஒருபுறம் பாகிஸ்தானை நேச நாடாக கைகுலுக்கிக் கொண்டு, மறுபுறம் மறைமுக போர் தொடுக்கும் அமெரிக்காவின்  செயல், அமெரிக்காவில் அதிபர் மாறினாலும் சிந்தனை மாறாது என்பதுபோல் உள்ளது.



வியாழன், 28 ஏப்ரல், 2011

திருமணம் முடிந்தது; ஆனால்...

பெண் தேடும் படலம் முடிந்து  மணமான மறுநிமிடம், முதலிரவு இப்போது இல்லை அடுத்த மாதம் தான்' என்று பெண்ணின் கையைப்பிடித்துக்கொண்டு தாய்வீட்டிற்கு  அப்பெண்ணின் தந்தை அழைத்து சென்றுவிட்டால் அந்த புது மாப்பிள்ளை எப்படி புலம்புவனோ அதுபோன்ற நிலையில் தான் தேர்தலை சந்தித்த அரசியல் கட்சிகளின் நிலையும் உள்ளது. கூட்டணிக்காக கட்சி தேடல்; சீட்டுப் பங்கீட்டு; தொகுதி பங்கீடு இழுபறிகள் யாவும் கடந்து தேர்தல் மனமேடை கண்ட கட்சிகள் தேர்தல்   முடிவு காண ஒருமாதம் காத்திருத்தல் என்பது பரிதாபத்திற்குரியதே. அதுமட்டுமன்றி ந்த ஒரு மாதத்திற்குள் ஏதேனும் உள் குத்து நடந்து விடுமோ என்ற பதற்றம், நாம் கரை சேருவோமா என்ற கலக்கம் இவை வேறு அக்கட்சிகளின் தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் காரணம் தேர்தல் கமிஷன் தான்.
 
முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் தேர்தலை முடித்து விட்டாலும், வாக்குகளை எண்ணாமல் தள்ளி வைத்ததற்கு காரணம், இங்கு முடிவு தெரியும் பட்சத்தில் அது ஏனைய மாநில தேர்தலில் மக்களிடம் உள ரீதியாக மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும்  என்று தேர்தல் கமிஷன் கருதியதுதான். முதலாவது இந்த கருத்து அடிப்படையிலேயே தவறாகும் ஏனெனில், நடைபெறுவது பாராளுமன்றத் தேர்தல் அல்ல. சட்டமன்றத் தேர்தல். அதுமட்டுமன்றி ஒரு மாநிலத்தில் ஆட்சியமைக்கும்  கட்சிக்கும் அடுத்த மாநிலத்திற்கும் சம்மந்தமில்லை. உத்தரமாக தமிழகம் மற்றும் புதுவை வாக்குகள் எண்ணப்பட்டு அதில் அதிமுக வெற்றி பெற்றாலும், இந்த முடிவு கேரளா உள்ளிட்ட ஏனைய மாநிலங்களில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஏனெனில் அதிமுக தமிழகம் தான்டி வேறு மாநிலங்களில் ஆட்சியமைக்கும் அளவுக்கு வலிமையான கட்சியல்ல. திமுகவுக்கும்  இதுதான் நிலை. எனவே எல்லா  மாநில தேர்தல் முடிந்த பின்தான் வாக்குகள் எண்ணப்படும்  என்ற நிலைப்பாடு தவறாகும்.
 
அடுத்து இதில் உள்ள சிக்கல்களையும் பார்க்கவேண்டும். நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டிய காவலர்களை வோட்டு எந்திரத்தை ஒரு மாதகலாம் பாதுகாக்க செய்வதும், அதற்காக கோடிகளை இறைப்பதும் அவசியமற்றதாகும். இந்நேரம் தமிழகம்- புதுவை-கேரளா வாக்குகள் எண்ணிக்கை முடிவுற்றிருந்தால் இந்த காவலர்களை ஏனைய மாநில தேர்தல் பாதுகாப்புக்கு பயன்படுத்தியிருக்கலாம். அதன் மூலம் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, அரசுக்கு செலவும் குறைந்திருக்கும் அதையும் தேர்தல் கமிஷன் செய்ய தவறிவிட்டது.
 
அடுத்து தேர்தல் விதிமுறை நடைமுறையில் உள்ளதாலும், வாக்குப்பதிவு நாளுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் ஒரு மாத கால இடைவெளி இருப்பதால் அரசு நிர்வாகம் எந்தப் பணியையும் செய்ய முடியாமல் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஜூன் மாதத்தில் தொடங்க இருக்கும் தென்மேற்குப் பருவமழை காலத்தின்போது வேளாண்மைப் பணிகள் முறையாக நடைபெறுவதற்குச் செய்ய வேண்டிய பராமரிப்பு ஆய்வுப் பணிகளைக்கூட அதிகாரிகள் மேற்கொள்ள முடியாமல் தேர்தல் ஆணையத்தின் ஆணை தடுக்கிறது என்றும் முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டியிருக்கிறார். முதல்வரின் ஆதங்கம்  முற்றிலும் சரியானதே!
 
மேலும் கடந்த காலங்களில் வாக்குச்சீட்டு முறை அமலில் இருந்தபோது எண்ணுவதற்கு சிரமமான அந்த வாக்குச்சீட்டு முறை காலத்தில் கூட 'கையில காசு; வாயில தோசை' என்பதைப் போல் உடனுக்குடன் தேர்தல் முடிவை தந்த தேர்தல் கமிஷன், ஒரு பட்டனை தட்டினால் மொத்த வரலாறையும் தரும் மிஷினரி காலத்தில் தேர்தல் முடிவுக்கு ஒரு மாதம் காத்திருத்தல் என்பது தேர்தல் கமிஷனின் ஒரு வகை இயலாமையோ என மக்கள் கருதுகின்றனர். எது எப்படியோ ஒரு மாநிலத் தேர்தல் முடிவை, அமெரிக்க அதிபர் தேர்தல் ரேஞ்சுக்கு மாதக்கணக்கில் இழுப்பதன் மூலம் இந்த விஷயத்திலாவது அமெரிக்காவை எட்டிபிடிக்க எண்ணுகிறார்கள் போலும்.

மின்சார அரசியல்; திமுகவின் துரோகம்!

திமுகவின் கடந்த ஐந்தாண்டு சாதனையின்  மைல் கல் 'பவர் கட்' தான். அதிகாரப்பூர்வமாக இரண்டுமணி நேரமும், அவ்வப்போது சில  பல  மணிநேரங்களும்  தமிழகம் தொடர்ந்து மின்வெட்டை சந்தித்துள்ளது. இந்த மின்வெட்டால் அரசுக்கு ஏற்பட்ட அவப்பெயரை மறைக்கவே சம்மந்தப்பட்ட துறை அமைச்சருக்கு நடந்து முடிந்த தேர்தலில் சீட்டு  கூட வழங்கவில்லை என்ற பேச்சும் உண்டு. இந்நிலையில் கோடை வெயிலின் தொடக்கமே தமிழகத்தை தகித்துக் கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு சூட்டைக் கிளப்பும்  அறிவிப்பை வெளியிட்டுள்ளது மின்வாரியம்.
 
''வீட்டு உபயோகத்திற்கான மின்சாரத்தில் நாள் ஒன்றுக்கு தற்போது இரண்டு மணி நேரம் மின்வெட்டு என்பதற்குப் பதிலாக  மூன்று மணி நேரம் அதுவும் பகலில் மட்டும் மின்வெட்டு செய்வதென்றும், சென்னை மாநகரில் இதுவரை எந்தவிதமான மின்வெட்டும் செய்யப்படாமலிருந்த நிலைக்கு மாறாக ஒரு மணி நேரம் மட்டும் அதுவும் பகலில் மின் வெட்டு செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
 
இதில் இரண்டு வகையான துரோகத்தை தமிழக அரசு செய்துள்ளது. ஒன்று சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெறுவதையொட்டி  மற்ற மாநிலங்களில் இருந்து கூடுதல் விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கி விநியோகம் செய்த அரசு, சட்டசபை தேர்தல் முடிந்த சூட்டோடு சூடாக தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு அதிகரிப்பு அறிவிப்பை  வெளியிட்டுள்ளது. இதே அறிவிப்பை தேர்தலுக்கு முன்னால் செய்திருந்தால் நம்மிடம் உள்ள பவரை மக்கள் 'கட்' செய்யும் வகையில் வாக்குகளை செலுத்தி  விடுவார்கள் என்ற பயத்தில் தேர்தல் முடியும் வரை அடக்கி வாசித்ததோ?
 
அடுத்து சென்னைக்கு மட்டும் ஒரு மணிநேரம், மற்ற இடங்களுக்கு மூன்று மணிநேரம் என்பது பாரபட்சமில்லையா? ஏற்கனவே இரண்டுமணி நேரம் அமலில் இருந்தபோது மற்ற மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட 2 மணி நேரத்தைவிட கூடுதலாக சில மாவட்டங்களில் 4 மணி நேரம் வரை கூட மின்சாரம் தடைபட்டது. அப்படிப்பட்ட மக்களுக்கு இன்னும் ஒருமணிநேரம் கூடுதலாக மின்வெட்டு அறிவிப்பது துரோகமில்லையா?
 
இப்போது தமிழ்நாட்டின் மின்சார தேவை 11,600 மெகாவாட்டாக இருக்கிறது. ஆனால் மின்சார பற்றாக்குறை சுமார் 2000 மெ.வா. அளவுக்கு உள்ளது. இந்த பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (மின்வாரியம்) திணறிவருவதாக கூறுபவர்கள், மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய கடந்த ஐந்தாண்டுகளில் தீட்டிய திட்டங்கள் என்ன? இலவச கலர் டிவி வழங்கி அதன் மூலம் தனது குடும்ப வருமானத்திற்கு வழி காண்பதில் காட்டிய ஆர்வத்தை மின்சார உற்பத்தியில் அரசு காட்டியதுண்டா? எங்கு யார் கோடை வெயிலில் புழுங்கினாலும் ஆட்சியாளர்களுக்கு  எந்த மின்வெட்டுமில்லை. பவனி வரும் கார்முதல் பள்ளி கொள்ளும் அறைவரை அனைத்தும் குளிரூட்டப் பட்டவை தானே! அவர்கள் ஏன் கவலைப்படபோகிறார்கள்..? பரிதாபத்திற்குரியவன் திருவாளர் பொதுஜனம் தானே! 'என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்; ஏன் கையை எந்த வேண்டும் வெளிநாட்டில்; என்று பாட்டெழுதினால்  மட்டும் போதாது.  வெளிநாடுகளைப் போல் குறிப்பாக வளைகுடா நாடுகள் போல் தடையில்லா மின்சாரம் கிடைக்க அதிகாரவர்க்கம் ஆவன செய்யட்டும். பின்பு வல்லரசு கனவு கானட்டும்.

கோர்ட்டில் அரசு பஸ்கள்; குறட்டையில் போக்குவரத்து கழகம்..?

நாம் ஒரு வங்கியிலோ, அல்லது ஒரு தனி நபரிடமோ  கடன் வாங்கியிருந்து, அக்கடனை உரிய தவணையில் திருப்பி செலுத்தாததால் நமது வீட்டில் உள்ள பொருட்களையோ, அல்லது வீட்டையோ சம்மந்தப்பட்டவர்கள் ஜப்தி செய்தால் நாம் அவமானத்தில் கூனி குறுகிப் போய்விடுவோம். ஆனால் அரசும் அதிகாரிகளும் தங்களது அதிகாரத்திற்குட்பட்ட ஒரு பொருள் ஜப்தி செய்யப்பட்டால் அதைப் பற்றி வெட்கமோ கவலையோ கொல்வதில்லை. இதற்கு நிதர்சன சான்றாக தமிழக போக்குவரத்து கழகம் திகழ்கிறது.
 
விபத்தில் காயம் அடைந்தவருக்கு நஷ்டஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி எனற செய்தியை நாம் அவ்வப்போது  படித்து வருகிறோம். இந்த ஒரு விஷயமே போக்குவரத்து துறையின் பலவீனத்தை  படம்பிடித்துக் காட்ட போதுமானதாகும். அரசு பஸ்களில் அடிபட்டு  மரணித்தவர்களின் உறவினர்கள்  அல்லது காயமுற்றவர்கள் பெரும்பாலும் நஷ்டஈடு கேட்டு கோர்ட்டு படியேறுவதில்லை. வெகு சொற்பமான சிலரே இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்கின்றனர். இந்த சொற்பமான நபர்களுக்கு கூட உரியமுறையில் நஷ்டஈடு வழங்கி தனது வாகனத்தை  மீட்க முன்வருவதில்லை போக்குவரத்து துறை. இதனால் ஜப்தி செய்யப்பட்ட பஸ்கள் பல ஆண்டுகள் கூட பயனற்று நிற்பதை காணலாம். இவ்வாறு இயங்காமல் நிற்கும்  பஸ்களால் நாளொன்றுக்கு ஏற்படும் இழப்பை கவனத்தில் கொள்ளவோ, அதுகுறித்து கவலை கொள்ளவோ நிர்வாகம் தயாராக இல்லை. ஆனால் போக்குவரத்து துறையில் ஆண்டுதோறும்  நஷ்டம் என்று முகாரி பாட மட்டும் நிர்வாகமும் அரசும் தயங்குவதில்லை. இவ்வாறு இப்போது ஜப்தி செய்யப்ப்பட்ட ஒரு பஸ் குறித்த செய்தியை இங்கே பதிவு செய்கிறோம்.
 
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது கத்தாளம்பட்டி.  இந்த ஊரை சேர்ந்த அன்னலட்சுமி இவர் கடந்த 1.1.2001 அன்று சோல்வார்பட்டி அணை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று அன்னலட்சுமியின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதை தொடர்ந்து விபத்தில் காயம் அடைந்த தனக்கு நஷ்டஈடு வேண்டும் என்று அன்னலட்சுமி சிவகாசி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சிவகாசி கோர்ட்டு அன்னலட்சுமிக்கு ரூ.75 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழகத்துக்கு கடந்த 3.3.2008 அன்று உத்தரவிட்டது. ஆனால் இந்த தொகை வழங்கப்படவில்லை. இதை தொடர்ந்து அன்னலட்சுமி நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு அன்னலட்சுமிக்கு ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியது. இந்த நிலையில் அன்னலட்சுமிக்கு நஷ்டஈடு தொகை வழங்கப்படாததால் அரசு பஸ்சை ஜப்தி செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்த சார்பு நீதிபதி சுமதி உத்தரவிட்டார். அதன்படி சிவகாசி பஸ் நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
 
2001 ம் ஆண்டு காயமுற்ற பெண்ணிற்கு 2008 ம் ஆண்டுதான் நஷ்டஈடு வழங்க கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. அதுவும் ஆரம்பத்தில் அன்னலட்சுமிக்கு ரூ.75 ஆயிரம் நஷ்டஈடு வழங்க சொன்னது நீதிமன்றம். அதை போக்குவரத்து துறை கட்டத் தவறியதால் அடுத்த தீர்ப்பில் அபராதம் சேர்த்து ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியது. உரிய நேரத்தில் நஷ்டஈடு வழங்கப்பட்டிருந்தால் இந்த கூடுதல் சுமை போக்குவரத்து துறைக்கு வந்திருக்குமா? அது சரி! நஷ்டமாவது மக்கள் வரிப்பணம் தானே! சரி அபராதம் விதிக்கப்பட்ட பின்பாவது ரோஷம் வந்து செயல்பட்டதா என்றால் இல்லை. மாறாக மூன்றாண்டுகள்  கழிந்த பின்னும்  நஷ்டஈடு வழங்காமல் காலம் கடத்தியுள்ளது போக்குவரத்து துறை. இதனால் பஸ் ஜப்தி செய்யப்பட்டுள்ளது.
 
ஏதோ இந்த ஒரு வழக்கில்தான் நிர்வாகம் சற்று மெத்தனமாக இருந்ததனால் பஸ் ஜப்தி என்று நினைத்து விடாதீர்கள். இதுபோல் ஒரு நீண்ட பட்டியலே உண்டு. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மட்டும் உரிய நேரத்தில் இழப்பீடு செலுத்த தவறியதால்  25க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டு திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன என்ற செய்தி ஜனவரி 3 ம் தேதி வெளியாகியிருந்தது.  அதிகாரிகள் அலட்சியம் காரணமாக போக்குவரத்து கழகத்திற்கு நஷ்டம் ஏற்படுவதோடு, ஜப்தி செய்யப்பட்ட பஸ்ஸின் தடத்தில் பயணிக்கும் பயணிகளுக்கும் பெரும் சிரமமாக உள்ளது. அரசு இனியேனும் கூடுதல் கவனம் செலுத்தி  ஜப்திக்கு முன் உரியவர்களுக்கு இழப்பை தர முன்வருமா? 
 
 

ஒரு வழக்கு; மூன்று தீர்ப்புகள்!

ரு வழக்கில் கீழ் கோர்ட்டு தண்டனை வழங்க, அத்தண்டனையை உயர்நீதிமன்றம் ரத்து செய்ய, அதே வழக்கில் உச்சநீதிமன்றம் மீண்டும் தண்டனை வழங்க இவ்வாறான சுழற்சிமுறை நீதிமன்ற குழப்பங்கள் நிறையபேருக்கு புரியாத  நிலையில், இப்போது அதுபோன்றதொரு தீர்ப்பு வெளியாகியுள்ளது.
 
1996ம் ஆண்டு பரபரப்பாக பேசப்பட்ட நாவரசு கொலை வழக்கில்,  நாவரசுவை அதே மருத்துவக் கல்லூரியில் படித்த  இரண்டாம் ஆண்டு மாணவர் ஜான் டேவிட் ஜான் டேவிட் கொலையாளியாக கைது செய்யப்பட்டார். ஜான் டேவிட் மீது 1997ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி, கடலூர் செஷன்ஸ் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி சிங்காரவேலு முன்னிலையில் நடந்த இந்த வழக்கில், 78 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்; 120 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.வழக்கை விசாரித்த நீதிபதி சிங்காரவேலு, 1998, மார்ச் 11ம் தேதி தீர்ப்பு கூறினார். அதில்,
 
ராகிங் காரணமாக நாவரசுவை கொடூரமான முறையில் கொலை செய்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனையும், கொலை செய்த தடயங்களை மறைத்ததற்காக மற்றொரு ஆயுள் தண்டைன என, ஜான் டேவிட்டிற்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். அதைத் தொடர்ந்து ஜான் டேவிட், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.கடலூர் செசன்ஸ் கோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஜான் டேவிட், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்படாததால், ஜான் டேவிட்டை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
 
உலகமே அச்சுறும் வகையில் நடந்த கொடூர கொலை வழக்கில் கைதான ஜான் டேவிட்டிற்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஐகோர்ட் ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு, டில்லி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, முகுந்தகம் சர்மா ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், "மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசுவை கொடூரமான முறையில் கொன்ற, அவரது சீனியர் மாணவர் ஜான் டேவிட்டிற்கு, கடலூர் செஷன்ஸ் கோர்ட் விதித்த இரட்டை ஆயுள் தண்டனை சரியானதே' என, தீர்ப்பளித்தது. அதோடு இந்த வழக்கை ஐகோர்ட் கையாண்ட விதம் சரியில்லை. சாட்சியங்கள் எல்லாம் திசை திருப்பப்பட்டுள்ளன என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் கொலை நடந்து 15 ஆண்டுகள் கடந்த நிலையில் மீண்டும் ஜான் டேவிட்டிற்கு தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஜான் டேவிட் எங்கிருக்கிறார் என்று இனிமேல்தான் தேடவேண்டும் என்று காவல்துறை கலங்கியிருந்த நிலையில், அவரே முன் வந்து சரணடைந்ததில் காவல்துறை நிம்மதி பெருமூச்சு விடுகிறது. 

என்றாலும், ஒரு வழக்கில் ஒரே மாதிரி சட்டம் பயின்ற நீதிபதிகளிடம் ஏன் இந்த தடுமாற்றம் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. செஷன்ஸ் கோர்ட் வழங்கும் தீர்ப்புகள் பெரும்பாலும் உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்படுவதின் காரணமும் மக்களுக்கு விளங்கவில்லை. இதே நிலை தொடர்ந்தால் நீதி  வேண்டுமானால் டெல்லி சென்று உச்சநீதிமன்றத்தின் கதவை தட்டினாலே சாத்தியம் என்ற மனநிலைதான் மக்களுக்கு ஏற்படும். எனவே நீதி வழங்கும் நீதிமான்கள், வழக்கின் தன்மைகளை அறிந்து குவிந்து கிடக்கும் வழக்குகளையும் கவனத்தில் கொண்டு பொறுப்புடன் செயல்பட்டால் பெரும்பாலான வழக்குகள் உச்சநீதமன்றத்தின் படியை தொடாது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.  


போலி விமானிகள்; காணாமல் போகும் கோப்புகள்; உயிரோடு விளையாடும் விபரீதம்!

போலி டாக்டர்கள் கைது, போலி வருமானவரி அதிகாரி கைது, போலி போலீஸ் கைது என்று எங்கும் போலி எதிலும் போலி என்ற பட்டியலில் இப்போது போலி விமானிகள் கைது என்ற அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. சாலை விபத்துகளில் பெரும்பான்மையான விபத்துகள்  போலி ஓட்டுனர் உரிமம்  பெற்ற ஒட்டுனர்களால்தான் என்று ஆய்வுகள் சொல்லி வரும் நிலையில், தரை இறங்கினாலே உயிர் நிச்சயம் என்ற அளவில் மேற்கொள்ளும் விமானப் பயணத்தில் விமானியே போலியாக இருந்தால் என்னாவது..?
 
போலி மதிப்பெண் பட்டியல் தாக்கல் செய்து பைலட் உரிமம் பெற்ற வழக்கில் டில்லி  போலீசார்  கைது செய்யப்பட்ட விமானிகளின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது. கைது செய்யப்பட்ட போலி விமானிகள் சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது சிவில் விமானப்போக்குவரத்து இயக்குனரக ஊழியர்கள் இருவர்  லட்சக்கணக்கில் ரூபாய் பெற்றுக் கொண்டு போலி மதிப்பெண் பட்டியல் மூலம் விமான ஓட்டுநர் உரிமம் பெற உதவியதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். 7 விமானிகள் தவிர போலி பைட் உரிமம் பெற உதவியதாக சிவில் விமானப்போக்குவரத்து இயக்குனரகத்தைச் சேர்ந்த 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 மேலும் சிலர் இதுபோல் போலி மதிப்பெண் பட்டியல் தாக்கல் செய்து விமான ஓட்டுனர் உரிமம் பெற்றிருப்பதை தெரியவந்துள்ளது. இதையடுத்து சிவில் விமானப்போக்குவரத்து இயக்குநரகத்தில் அதுதொடர்பான கோப்புகளைத் தேடியபோது அவை காணாமல் போய்விட்டது தெரியவந்தது.

 இதையடுத்து கோப்புகள் காணாமல்போனது தொடர்பாக 
 வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட இயக்குநரக அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலி மதிப்பெண் பட்டியல் தாக்கல் செய்து பைலட் உரிமம் பெற உதவிய அதிகாரிகளை காப்பாற்றும் நோக்கத்தோடு அந்த கோப்புகள் மறைக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறை  கருதுகிறார்கள்.
 
பைலட் உரிமம் பெற்றவரா என்று லைசென்சை வாங்கிப் பார்க்கலாம்; உரிமமே போலியாக இருந்தால்..? நம்மை பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பார் என்று நம்பும் பயணிகளின் உயிரோடு விளையாடும் போலி விமானிகள்- அவர்களுக்கு உதவியர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். அந்த நடவடிக்கை ஏனைய போலிகளுக்கு படிப்பினையாக இருக்கவேண்டும்.

திங்கள், 25 ஏப்ரல், 2011

முஸ்லிம் இனப்படுகொலை; மோடி மீது பாயும் உண்மை ஆயுதம்!

றக்கமுடியுமா?
மோடியின் அனுமதியோடும்,ஆசியோடும் நடைபெற்ற முஸ்லீம் இனபடுகொலையை!
மாபாவிகள் எம் சகோதரிகளின் மானத்தை பறித்த அந்தநாளை!
எம் சொந்தங்கள் கரிக்கட்டையாக கொளுத்தப்பட்டதை!
வயிற்றில் உள்ள பிஞ்சையும் வயிற்றை கிழித்து கொளுத்திய கொடுமையை! பயங்கரவாதிகள் நாங்கள் தான் செய்தோம் மோடியின் ஆசியோடு செய்தோம் என்று பகிரங்கமாக சொல்லியதை! தடயங்கள் அழிக்கப்பட்டதை! சாட்சிகள் மிரட்டப்பட்டதை! வழக்குகள் குழியில் புதைக்கப்பட்டதை!

இருப்பினும், உண்மையை ரெம்ப காலம் ஒழிக்கமுடியாது என்ற நியதிக்கேற்ப சில மனிதநேயர்களின் முயற்சியால் புதைக்கப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், தோண்டப்பட்டு விசாரணை நடந்துவருகிறது.இடையில் சில  மாதங்களுக்கு முன்னால் வெளியான விசாரணை அறிக்கை, முஸ்லிம்கள் இனப்படுகொலைக்கும் மோடிக்கும் தொடர்பு இல்லை என ஒரு முழு மலையை சோற்றில் மறைக்க, சந்தோஷத்தில் மிதந்தனர் சங்பரிவாரங்கள்.

ஆனால் உண்மை நீண்ட நாள் உறங்காது என்பதைப்  போல் மோடியின் பயங்கரவாத முகம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. குஜராத் கலவரம் நடந்த போது அங்கு மூத்த ஐ.பி.எஸ். போலீஸ் அதிகாரியாக இருந்த சஞ்சீவ் பட் தற்போது உளவுத்துறையில் பணியாற்றுகிறார். அவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:

''குஜராத் கலவரத்துக்கும், முதல்மந்திரி நரேந்திர மோடிக்கும் தொடர்பு உண்டு. கலவரம் நடந்த போது நான் அங்கு பணியாற்றினேன். அப்போது நரேந்திரமோடி, தனது வீட்டில் போலீஸ் உயர் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டினார்.இந்த கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி,

குஜராத்தில் நடந்து வரும் கலவரத்தை கண்டு கொள்ள வேண்டாம். இந்துக்கள் தங்கள் கோபத்தை தீர்த்துக்கொள்ளட்டும். அதற்கு அனுமதியுங்கள். கலவரத்தால் பாதிக்கப்படுவோருக்கு ஆதரவாக செயல்பட வேண்டாம். அவர்களது கூக்குரலை கேட்க வேண்டாம் என்று சொன்னார். சுப்ரீம் கோர்ட்டு அமைத்துள்ள புலனாய்வு குழுவினரிடம் நான் இதை தெரிவித்தேன். ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. நரேந்திரமோடிக்கும், அவரை சார்ந்தவர்களுக்கும் எதிரானவற்றை புலனாய்வு குழுவினர் எடுத்துக்கொள்ள வில்லை. எனவே நான் தனியாக சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்கிறேன். இந்த நிலையில் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் போலீஸ் அதிகாரி கூறி இருக்கிறார்.
 
மோடியின் அனுமதியே முஸ்லிம் இனப்படுகொலைக்கு காரணம் என்பதை ஆணித்தரமாக துணிவோடு கூறியுள்ளார் சஞ்சீவ் பட். அதுமட்டுமன்றி சுப்ரீம் கோர்ட்டு அமைத்துள்ள புலனாய்வு குழுவினர் நரேந்திரமோடிக்கும், அவரை சார்ந்தவர்களுக்கும் எதிரானவற்றை கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். சஞ்சீவ் பட் கூறியுள்ளதின் அடிப்படையில் புலனாய்வுக் குழுவின் விசாரணை மறுபரிசீலனைக்கு  உட்படுத்தப்பட வேண்டும். அதோடு, மோடி கைது செய்யப்படவேண்டும் என்பதே நீதி இன்னும் இந்நாட்டில் இருக்கிறது என்பதை நம்பும் மக்களின் எதிர்பார்ப்பாகும். மேலும், திருவாளர் மோடியை 'ரோம் பற்றி எரிந்தபோது பிடில் வாசித்துக்கொண்டிருந்த நீரோ மன்னனோடு'ஒப்பிட்டு உச்சநீதிமன்றம் ஏற்கனவே கண்டித்தது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

மக்கள் ரிப்போர்ட் வடிவமைப்பாளர் இஸ்லாத்தை ஏற்றார்.

ஸ்லாத்தை பிற மக்களிடத்தில் சேர்ப்பதை உன்னத பணியாக கொண்டுள்ள நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ வார இதழான சமுதாய மக்கள் ரிப்போர்ட்டின் வடிவமைப்பாளர் R.மன்மதன் இன்று (22.04.2011) தன் வாழ்வியலாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ். அவர் தனது பெயரை மூஸா என்று மாற்றிக் கொண்டார்.

இவர் நீண்டகாலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வார இதழ் உணர்வு பத்திரிக்கையில் பணியாற்றிக் கொண்டு இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு அங்கிருந்து விலகி, சமுதாய மக்கள் ரிப்போர்ட்டில் வேலைக்கு சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாத்தில் இணைந்தது பற்றி மூஸா [மதன்] அவர்கள் கூறும்போது,

''ஐந்தாண்டுகளாகவே இஸ்லாத்தில் இணையும் எண்ணம் எனக்குள் இருந்தாலும், மனைவி-மக்கள் சகிதமாக இஸ்லாத்தில் இணையவேண்டும் என்ற எண்ணத்தில் தள்ளிப் போட்டு வந்தேன். இன்றைக்கு நான் இஸ்லாத்தில் இணையவேண்டும் என்று அல்லாஹ் நாடிவிட்டான். இருந்தாலும் என் மனதில் ஷைத்தான் ஊசலாட்டத்தை ஏற்படுத்தினான். ஆனாலும் அல்லாஹ்வின் உதவியுடன் நான் இன்றைக்கு இஸ்லாத்தை தழுவி விட்டேன்  அல்ஹம்துலில்லாஹ்.  எனது இந்த இஸ்லாமிய தழுவல் எனது மனைவிக்கு இன்னும் தெரியாது. எனது மனைவி மற்றும் பிள்ளைகளும் இஸ்லாத்தை தழுவிட பிரார்த்தியுங்கள் என்றார்.

மூஸாவின் செயல்பாடுகள் இஸ்லாமிய அடிப்படையில் அமைந்திடவும், அவரது ஆசைப்படி அவரது குடும்பத்தாரும் இஸ்லாத்தில் சங்கமித்திடவும் நாமும் பிரார்த்திப்போமே!

அன்புடன்-முகவைஅப்பாஸ்.

 

வியாழன், 21 ஏப்ரல், 2011

பாமரனுக்கு புரியல. படிச்சவுக சொன்னா தேவலை.

தாமதிக்கப்ப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும் என்ற சொல் வழக்கு உண்டு. அதை உண்மைப்  படுத்துவது போன்றே நமது நீதிமன்றங்களின் பெரும்பாலான நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. ஒரு கொலை வழக்கு கோர்ட்டுக்கு போனால், கொலையாளி செத்தபின்பு அவனுக்கு மரணதண்டனை வழங்குவதும், வாய்க்கால் தகராறுக்காக கோர்ட்டுக்குப் போனால், வயலையே விற்று செலவு செய்தபின்பு தீர்ப்பு வருவதும், இவ்வாறான  வேடிக்கைகளை அவ்வப்போது நீதிமன்றம் செய்து வருவதை மக்கள் பார்த்துதான் வருகின்றனர். நீதிமன்றத்தின் இழுத்தடிப்புக்கு மற்றொரு சான்றை பார்க்கலாம்.
 
 கடந்த 2006-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் சேரன்மகாதேவி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேல்துரையும், அ.தி.மு.க. சார்பில் மனோஜ் பாண்டியனும் போட்டியிட்டனர். அதில், வேல்துரை 4 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி மனோஜ் பாண்டியன் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
 
அதில் வேட்பு மனுதாக்கலின்போது வேல்துரை தமிழக அரசுடன் ரோடு போடுவதற்கான ஒப்பந்தம் செய்து இருந்தார், தேர்தலில் போட்டியிடும் ஒரு நபர் அரசுடன் தொழில் ரீதியாக  தொடர்பு வைத்துக்கொள்ளவது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 9 ஏ-ன்படி குற்றமாகும். அவ்வாறு தொடர்பு வைத்தால், தேர்தலில் போட்டியிட தகுதி இழப்பு செய்யலாம் என அதில் கூறப்பட்டுள்ளது என கூறப்பட்டிருந்தது.
 
இந்த வழக்கை கடந்த 2009-ம் ஆண்டில் விசாரித்த சென்னை ஐகோர்ட்டு மனோஜ் பாண்டியன் மனுவை தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பன்சால், ஞானசுதா மிஸ்ரா ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த 3 மாதத்துக்கு முன்பு தங்களது தீர்ப்பை தள்ளி வைத்தனர்.
 
இந்த நிலையில் நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர். அதில், வேல்துரை எம்.எல்.ஏ. வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்தனர். மேலும், அவர்கள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-
 
வேட்பு மனுதாக்கல் செய்தபோது வேல்துரை எம்.எல்.ஏ. தமிழக அரசுடன் தொழில் ரீதியான ஒப்பந்தம் செய்துள்ளார். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது. எனவே அவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என தெரிவித்துள்ளனர்.  
 
2006 தேர்தலில் போட்டியிட்டு வென்ற ஒருவரது வெற்றி குறித்த வழக்கு, அவர் முழுமையாக ஐந்தாண்டுகள் எம்.எல்.ஏவாக இருந்து முடித்து, அடுத்த தேர்தலை  சந்திக்கும் நிலையில் அவரது வெற்றி செல்லாது என அறிவிப்பதால் என்ன பலனிருக்கும் என்று நீதிமன்றம் கருதுகிறது? சம்மந்தப்பட்ட வேல்துரை, வேட்பு மனுதாக்கலின்போது தமிழக அரசுடன் ரோடு போடுவதற்கான ஒப்பந்தம் செய்து இருந்தார் என்பதுதான் அதிமுக வேட்பாளரின் குற்றசாட்டு. இந்த ஒரே ஒரு குற்றச்சாட்டு உண்மையா அல்லது பொய்யா என நீதிமன்றம் கண்டுபிடித்து தீர்ப்பளிப்பதற்குள் அந்த எம்.எல்.ஏவின் பதவிக்காலமே  முடிந்து விட்டது  என்றால், இந்த வழக்கை தாக்கல் செய்த  அதிமுக வேட்பாளருக்கு என்ன பலன்? சம்மந்தப்பட்ட காங் எம்.எல்.ஏ வெற்றி பெற்றது செல்லாது என நீதிமன்றம் சொல்லி விட்டதால், அடுத்த இடத்தில் இருந்த அதிமுகவின் மனோஜ்பாண்டியனை சட்டமன்ற உறுப்பினர் என்று அறிவிக்கப் போகிறதா நீதிமன்றம்? இதில் பாதிக்கப்பட்ட மனோஜ்பாண்டியனுக்கு நீதிமன்றம் தரும் பரிகாரம் என்ன?
 
இதில் வேடிக்கை என்னவென்றால், எந்த காங் எம்.எல்.ஏ வேல்துரையின்  வெற்றி செல்லாது என நீதிமன்றம் சொல்லியுள்ளதோ அதே  வேல்துரை தற்போது நடைபெறும் சட்டசபை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தேர்தலும்  முடிந்துள்ளது. ஒருவேளை இவர் ஜெயித்தால் மீண்டும் எம்.எல்.ஏ ஆகிவிடுவார். அப்படியானால் ஏற்கனவே மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 9 ஏ வை இவர் மீறிய விஷயத்திற்கு என்ன தண்டனை..? பாமரனுக்கு புரியல. படிச்சவுக சொன்னா தேவலை.

வாக்களிக்க தெரிந்தவருக்கு வரிசையில் வரத் தெரியாதா?

டந்து முடிந்த சட்டமன்றத்  தேர்தலில் மக்கள் ஆர்வமாக வாக்களித்துள்ளனர். மக்களில் ஒருவர்களான திரையுலகத்தினரும் வாக்களித்துள்ளனர். பிரபல நடிகர்கள் கமல், அஜீத் உள்ளிட்ட பலரும், நடிகையரில் பலரும் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்துள்ள நிலையில், தனது அம்மா மற்றும் பாட்டி சகிதமாக வாக்களிக்க வந்த நடிகை திரிஷா, வரிசையில் நிற்காமல் விறு விறுவென நேராக வாக்குச்சாவடியில் நுழைய முற்பட்டுள்ளார். இதைக்கண்ட வரிசையில் நின்ற வாக்காளர் ஒருவர் திரிஷாவை நோக்கி, வரிசையில் வருமாறு கூற அவருடன் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார் திரிஷா. இறுதியில் காவலர்கள் வந்து திரிஷாவை வரிசையில் நிற்க செய்துள்ளனர்.
 
இந்த சம்பவம் குறித்து பத்திரிக்கை ஒன்றில் அவர் கூறியதாவது: ''ஓட்டுப்பதிவின்போது என்னை, கியூவில் நின்று ஓட்டுப்போடும்படி சொன்னது தப்பு அல்ல. ஆனால், அந்த வாக்காளர் சொன்ன முறை சரியல்ல. நான் ஓட்டுப்போட சென்றபோது கியூவில் நின்று ஓட்டுப்போடுங்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தால் அப்படியே செய்திருப்பேன். அவர் என்னிடம் முரட்டுத்தனமாக பேசினார். அதனால் நானும் அதேபோல் பேசவேண்டி இருந்தது. என்னிடம் மென்மையாக பேசுபவர்களிடம் நானும் மென்மையாக பேசுவேன். முரட்டுத்தனமாக பேசினால், நானும் பேசுவேன். அந்த வாக்குச்சாவடியில் இதுதான் நடந்தது என்று கூறியுள்ளார். 
 
மூத்த குடிமக்கள் உள்ளிட்ட சிலர் நீங்கலாக வேறு எவராக இருந்தாலும் வரிசையில் வந்துதான் வாக்களிக்க வேண்டும் என்று இவருக்கு தெரியாதா? அப்படியே தெரியாவிட்டாலும் இவர் சார்ந்த துறையின் இவரை விட சீனியர் கலைஞர்களே வரிசையில் நின்று வக்களிப்பதைக் கண்டபின்னும், அதை  கண்டு கொள்ளாமல் நேரடியாக தனது வீட்டிற்குள் நுழைவது போன்று வாக்கு சாவடிக்குள் நுழைய முற்படுவதும், தடுத்தவரோடும் காவல்துறையோடும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் கடும் வார்த்தைகளை பயன்படுத்தி பொது இடத்தில் மல்லுக்கு நிற்பதும்தான் ஒரு நடிகைக்கு அழகா? 
 
அது சரி! நடிகைக்கு கோயில் கட்டியவனும், உடல் மண்ணுக்கு; உயிர் ......வுக்கு என்று சொன்னவனும் தமிழன்தானே! கூத்தாடிகளின் ஆட்டத்தை ரசிக்க திரையரங்கு வாசலில்  காத்துக் கிடந்ததைப் போல, வாக்குச்சாவடியிலும் காத்துக் கிடப்பதுதான் அவனது தலைவிதி எனக் கருதியிருப்பாரோ?
 

ஒரு மதத்தின் கோட்பாட்டை மற்றவர்கள் மீது திணிக்கும் அரசு!

வ்வொரு மதத்தவருக்கும் ஒவ்வொரு வகையான கொள்கை கோட்பாடுகள், சடங்குகள்- சம்பிரதாயங்கள் இருக்கலாம் அது தவறென்று கூறமுடியாது. ஆனால் ஒரு மதத்தின் கோட்பாட்டை அனைத்து மக்கள் மீதும் திணிக்கும் செயல் ஆரோக்கியமானது அல்ல. அதிலும் குறிப்பாக வெகுஜன மக்களின் பிரதிநியான அரசே அத்தகைய செயலை முன்னின்று செய்வது புரியாத புதிராக உள்ளது. மகாவீர் அவர்கள் புலால் உண்ணாமை கொள்கையை கொண்டவராக இருந்திருக்கலாம். அவரை ஏற்றுக்கொண்ட மக்களும் மகாவீர் தினத்தன்று புலால் உண்ணாமல் இருந்தால் அது அவர்களின் தனிப்பட்ட விருப்பமாகும். அதை யாரும் தடுக்கமுடியாது. அதே நேரத்தில் மகாவீர் தினத்தன்று ஒட்டுமொத்தமாக இறைச்சிகள் வெட்டவும் விற்பனை செய்யவும் அரசு தடை விதிப்பது ஒருவரின் கோட்பாட்டை மற்றவர் மீது திணிப்பதற்கு ஒப்பாகும். மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு உத்தரவின்படி சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக்கூடங்கள் 16  ம்  தேதி மூடப்படும். இதே போல் ஆடு மாடு மற்றும் இதர இறைச்சி விற்பவர்களும் அவர்களது கடைகளை கண்டிப்பாக மூட வேண்டும்.இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்  என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
 
ஒவ்வொரு மதத்தையும் திருப்தி படுத்துவது அரசின் நோக்கமாக இருக்குமானால், ஒவ்வொரு மதத்தவரும் தமது குருவின் கொள்கையை ஒரு குறிப்பிட்ட நாளில் அமுல்படுத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்தால் என்னாகும் என்பதை அரசு சிந்தித்து பார்க்கவேண்டும். எனவே அரசு இது விஷயத்தில் நல்லமுடிவை எட்டவேண்டும். தமிழகத்தில் ஒரு சதவிகிதம் அளவு வாழும் ஒரு சமுதாயத்திற்காக 99 சதவிகித மக்களையும் அம்மதத்தின்  கோட்பாட்டை ஏற்கவேண்டும் என்று சட்டம் போடுவது அரசின் அறியாமையாகும். இப்படி சட்டம் போடும் அரசு, ரமலான் மாதம் முழுவதும் பகலில் பட்டினி கிடக்கும் முஸ்லிம்களைப்  போல் மற்றவர்களும் பட்டினி கிடக்கவேண்டும் என்று கூறுமா? எனவே இதுபோன்ற திணிப்புகளை அரசு கைவிட வேண்டும்.
 
அதே   நேரத்தில் காந்தி ஜெயந்தியன்று மதுக்கடைகள் மூடப்படுவது வரவேற்க்கத்தக்கதே! ஏனெனில் மது மனித குலத்தை நாசமாக்கும் மெல்லக்கொல்லும் விஷமாகும். எனவே காந்தி ஜெயந்தியன்று மட்டும் என்றில்லாமல் பூரண மதுவிலக்கை கொண்டுவர அரசு முயற்ச்சிப்பது தான் காந்திக்கு அரசு செலுத்தும் மரியாதையாகும்.

இட ஒதுக்கீடு குளறுபடி தீர ஒரே வழி..!

மிழகத்தில் முஸ்லிம்களுக்கு 3 .5 தனி இட ஒதுக்கீடு சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டம் அமலுக்கு வந்த காலம் தொட்டு, முஸ்லிம்களின் விகிதாசார அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை என்று பரவலான குற்றசாட்டு முஸ்லிம் சமூகத்தில் உண்டு. எனவே இச்சட்டம் அமலுக்கு வந்த பின்னால், எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன? அவைகளில் எத்தனை முஸ்லிம்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன? என்ற வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத்  உள்ளிட்ட சமுதாய அமைப்புகள் கோரிக்கை வைத்தும் அக்கோரிக்கை கடைசிவரையில் கருணாநிதியால் கண்டுகொள்ளப் படவில்லை. கருணாநிதி அரசு வெள்ளை அறிக்கை வெளியிடத் தயங்குவதன் மூலமும், இட ஒதுக்கீட்டு குளறுபடியை சரி செய்ய கண்காணிப்புக் குழு அமைத்ததன் மூலமும், முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டில் துரோகம் செய்துள்ளது தெரிகிறது. இதன் மூலம் முஸ்லிம்களின் இடத்தில் முஸ்லிமல்லாதவர்கள் நியமிக்கப் பட்டிருக்கலாம். இதற்கு தீர்வு என்ன? இதோ ஒரு  வழக்கு வழி கட்டுகிறது.
 
நெல்லை மாவட்டம் பாட்டபத்து காந்தி காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(வயது 29). இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனு வருமாறு: நான் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவன். பி.எஸ்.சி முடித்து விட்டு உடற்கல்வியலில் பட்டப்படிப்பு படித்துள்ளேன். இலஞ்சியில் உள்ள ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இட ஒதுக்கீட்டின்படி அந்த பணியிடத்தில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவரை தான் நியமிக்க வேண்டும். இதனால் எனது பெயரை அந்த பணிக்கு பரிந்துரைக்கும்படி நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரிக்கு மனு கொடுத்தேன்.
உடற்கல்வியலில் பட்டப்படிப்பு முடித்தவர்களில் என்னை தவிர வேறு யாரும், அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் இல்லை. ஆனால் எனது பெயரை பரிந்துரைக்காமல், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களின் பெயரை பரிந்துரைக்க வேலைவாய்ப்பு அதிகாரிகள் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. இதனால் எனக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு பறிபோகி விடுமோ என்ற அச்சம் உள்ளது. எனவே எனது பெயரை உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு பரிந்துரைக்க நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி கே.வெங்கட்ராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் டி.எஸ்.முகமது முகைதீன் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் மனுவை நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 4 வாரத்துக்குள் பரிசீலித்து அவரது பெயரை உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு பரிந்துரைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். 
 
அதாவது அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவருக்கு உரிய இடத்தை வேறு ஒரு சமூகத்திற்கு வழங்கப் போவதாக அறிந்ததனால் கிருஷ்ணகுமார் வழக்கு தொடுத்து, தனது உரிமையை நிலைநாட்டி இருக்கிறார். இந்த அடிப்படையில் முஸ்லிம்கள் செய்யவேண்டியது என்னவெனில், உடனடியாக தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட வேலைவாய்ப்பின் சதவிகிதத்தை அறியவேண்டும். அதில் 3 .5 சதவிகித அளவு முழுமையாக முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். முஸ்லிம்களுக்குரிய கோட்டாவில் வேறு சமூக மக்கள் நியமிக்கப்பட்டிருந்தால், அந்த நியமனத்தை  எதிர்த்து வழக்குத் தொடுக்கவேண்டும். அப்போதுதான் முஸ்லிம்களுக்குரிய பங்கை முழுமையாக பெறமுடியுமேயன்றி, 'மயிலே மயிலே இறகு போடு; கருணாநிதியே வெள்ளை அறிக்கை வெளியிடு என்று கேட்டுக் கொண்டிருந்தால், ஒருபோதும் முஸ்லிம்கள் உரிய பிரதிநிதித்துவத்தை எட்டமுடியாது என்பதை உணரவேண்டும். கொடுத்து கெடுத்த அரசியல்வாதிக்கு வால் பிடித்தவர்கள் இதை செய்யமாட்டார்கள். மாறாக, சமுதாய  நலனில் அக்கறையுள்ள இந்திய தவ்ஹீத் ஜமாஅத் போன்ற அமைப்புகள் தான் செய்யவேண்டும். 

 

சனி, 16 ஏப்ரல், 2011

அமெரிக்காவில் புனிதக் குர்'ஆன் எரிக்கப்பட்டதைக் கண்டித்து, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் சார்பாக, அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் பங்குபெற்ற கண்டனக்கூட்டம்.

பிஸ்மில்லாஹிர்   ரஹ்மானிர்  ரஹீம்.


புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே!


தேர்தல் கமிசனை பாராட்டி இ.த.ஜ.பேனர்.

 தமிழகத்தில் நடை பெற்ற அமைதியான தேர்தல் மக்களின் மனதில் தேர்தல் கமிசன் மேல் மதிப்பையும் மரியாதையும் ஏற்படுத்தி உள்ளது! இதை வரவேற்று மக்களின் மன நிலையை பிரதி பலிக்கும் வகையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சென்னையில் பல இடங்களில் பேனர் வைத்துள்ளது! இந்திய தவ்ஹீத் ஜமாஅத் திருவல்லிக்கேணி கிளையை சேர்ந்த சகோதரர் அப்துல் கரீம் அவர்களின் சிந்தனையில் உதித்த இந்த விஷயம் பத்திரிகைகள் உள்பட பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது! அல்ஹம்து லில்லாஹ்! அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்!   

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

இஸ்லாமியர்கள் இதயத்தில் இடம் பிடித்தது யார்?

எஸ்.எம்.பாக்கர், தேசிய தலைவர், இந்திய தவ்ஹீத் ஜமாஅத்: நான் தான் முஸ்லிம்களின் முதல் நண்பன் என்றும், சிறுபான்மையினரின் பாதுகாவலர் என்றும் சொல்லிக்கொள்ளும் கருணாநிதியால் நேரடியாக முஸ்லிம்களுக்கு சென்றடையும் திட்டம் ஏதுமில்லை. உலமாக்களுக்கு முதலில் எம்.ஜி.ஆர்., தான் பென்ஷன் வழங்கினார். வக்பு போர்டுக்கு கட்டடம் கட்ட எம்.ஜி.ஆர்., தான் நிலம் கொடுத்து உதவினார். ஜெயலலிதா கட்டடம் கட்டிக் கொடுத்தார்.

முஸ்லிம்களுக்கு ஜீவாதார பிரச்னை இட ஒதுக்கீடு குறித்து, 1997ம் ஆண்டு லத்தீப், சட்டசபையில் கருணாநிதியிடம் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டதற்கு, "லத்தீப் பாய்! என்னை குழப்ப பார்க்கிறீர்கள். முடியாது என்று உங்களுக்கு தெரியாதா' என்று கேட்டவர் தான் கருணாநிதி.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, 2006ம் ஆண்டு சிறுபான்மை நல பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் புதுப்பிக்கப்பட்டு, அதில் திருத்தம் கொண்டு வர, ஓராண்டு காலம் நிர்ணயம் செய்யப்பட்டது. கருணாநிதி ஆட்சிக்கு வந்தபோது, ஆணையத்தை கலைத்துவிட்டு, சிறுபான்மை மக்கள் நல ஆணையம் அமைத்து, வரைமுறைகளை ஏற்படுத்த இரண்டு ஆண்டு அவகாசம் அளித்தார். ஆணையத்தில் முஸ்லிம்கள் யாரும் இடம்பெறவில்லை.

"நாங்கள், 156 ஜாதியில் ஒரு ஜாதியாக இருக்கிறோம். அதிலிருந்து எங்களை தனியாக பிரித்துவிடுங்கள்' என்று கேட்டதற்கு, முடியாது என்று கருணாநிதி சொல்லிவிட்டார். முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடை 7 சதவீதம் ஆக்க வேண்டும் என்று பல போராட்டங்கள் நடத்தினோம். பயன் ஏதுமில்லை. தி.மு.க., அரசில், முஸ்லிம்கள் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர் என்று வெள்ளை அறிக்கை விட வேண்டும் என்று கேட்டதற்கு இதுவரை பதில் இல்லை. தேர்தல் நெருங்கியதும், 5 சதவீத இட ஒதுக்கீடு தருகிறேன் என்கிறார். இது முஸ்லிம்களை ஏமாற்றும் வேலை.

வக்பு போர்டுக்கு சொந்தமான ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அன்னியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்று வக்பு போர்டு தலைவர் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார். திருச்சியில், தி.மு.க., அறிவாலயம் கட்டியுள்ள இடத்தில் வாகன நிறுத்தம் உள்ள இடம், வக்பு வாரியத்திற்கு சொந்தமானது. அதை, அந்த இடத்தை வைத்திருந்தவரிடம் எழுதி வாங்கியுள்ளனர்.

ஜெயலலிதா, சிறுபான்மையினரை அடக்கி ஆள நினைக்கவில்லை. ஆனால், தி.மு.க.,வின் சிறுபான்மை பிரிவாக முஸ்லிம் லீக் மாற்றப்பட்டுள்ளது. தி.மு.க., அரசின் மிகப்பெரிய சாதனை, முஸ்லிம்களை தீவிரவாதி என 1996ம் ஆண்டு கருணாநிதி சொன்னது தான். 1996ம் ஆண்டு கோவையில் நடந்த கலவரத்தில் 19 முஸ்லிம்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களின் குடும்பங்களுக்கு கருணாநிதி வந்து ஆறுதல் சொல்லவில்லை. 1998ம் ஆண்டு கோவையில் குண்டு வெடிப்பு நடந்தது.

கருணாநிதி வந்து ஆறுதல் சொல்லியிருந்தால் அனைவரிடமும் சமாதானம் நிலவியிருக்கும். கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 164 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 12 பேரை தவிர மற்றவர்கள், 14 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் சிறையில் எத்தனை துன்பங்களை அனுபவித்திருப்பர் என்று கருணாநிதிக்கு தெரியாதது இல்லை.


எஸ்.எம்.இதயத்துல்லா, தமிழக அமைப்புச் செயலர், அகில இந்திய காங்கிரஸ். : தி.மு.க., ஆட்சியில் சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் பல்வேறு சலுகைகள் கிடைத்துள்ளன. சென்னை காயிதே மில்லத் கல்லூரிக்கும், மதுரை வக்பு போர்டு கல்லூரிக்கும் 50 ஏக்கர் நிலம் வழங்கி, கல்லூரி கட்டிக் கொடுக்கப்பட்டது. ஷேக் மற்றும் சையது போன்ற இனங்களைத் தவிர, உருது முஸ்லிம் உள்ளிட்ட அனைவரும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நபிகள் நாயகம் பிறந்த தினத்தை விடுமுறை நாளாக அறிவித்து, உலமாக்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்கி நல வாரியம் அமைக்கப்பட்டது. இலவச சைக்கிள் வழங்கப்பட்டது; சிறுபான்மை கமிஷன் அமைத்தது; அதற்கு அரசு அதிகாரம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முஸ்லிம் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை அமைத்து, கடன் உதவி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி உள்ளிட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அறிவித்து, மூன்றே மாதங்களில் அரசாணை வெளியிடப்பட்டது. இட ஒதுக்கீட்டில் வந்த ரோஸ்டர் பிரச்னை சரி செய்யப்பட்டது. முஸ்லிம் பெண்கள் உதவிச் சங்கம் அமைத்து மாவட்டந்தோறும் 10 லட்சம் ரூபாய் மானியத்தை தி.மு.க., அரசு வழங்கியது.

பிற மாநிலங்களில் வழங்கப்படாத சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகையை முதல்வர் கருணாநிதி வழங்கினார். அதற்காக மாநில அரசின் 25 சதவீதத்தை தி.மு.க., அரசு வழங்கியது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் உருவான திருமண பதிவு சட்டத்தில் சிறுபான்மை மக்களுக்கு திருத்தம் வழங்கப்பட்டது.கிறிஸ்தவ, முஸ்லிம் சிறுபான்மையினர் பள்ளிக்கூடங்களில் வேலை செய்யும் 11 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, தி.மு.க., அரசு சம்பளம் வழங்கியது. சமச்சீர் கல்வி முறையில் அரபி, உருது போன்ற சிறுபான்மை மொழிகளுக்கு இருந்த பிரச்னையையும் தி.மு.க.,வே தீர்த்து வைத்துள்ளது.

பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மக்களுக்கு தேவைப்படும் வழிபாட்டுத் தலங்களுக்கு உள்ளாட்சித் துறையே அதிகாரம் வழங்கலாம் என, சமீபத்திய தேர்தல் அறிக்கை மூலம் தி.மு.க., தெளிவுபடுத்தியுள்ளது. இரண்டு முஸ்லிம்கள், இரண்டு கிறிஸ்தவர்களுக்கு அமைச்சர் பதவியை வழங்கி முஸ்லிம்களை முதல்வர் கருணாநிதி பெருமைப்படுத்தினார். ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும், மற்ற கட்சிகளை விட கூடுதல் எம்.எல்.ஏ., சீட்டுகள் வழங்கி பரிவு காட்டி வருகிறார்.

இட ஒதுக்கீடு மூலம் நான்கு மடங்கு பொறியியல் கல்லூரி இடங்களும், மூன்று மடங்கு மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு கூடுதல் இடங்கள் கிடைத்தன. எனது கோரிக்கையை ஏற்று, 3.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதம் இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு வழங்குவேன் என வாக்குறுதி அளித்துள்ளார் முதல்வர்.

ஆனால், அ.தி.மு.க., அரசு சிறுபான்மையினரை தண்டிக்கும் வகையில் மதமாற்ற தடைச் சட்டத்தை கொண்டு வந்தது. முஸ்லிம்களின் பாரம்பரிய தொகுதியான வாணியம்பாடி இடைத்தேர்தலில், முஸ்லிம் சமுதாயத்தினருக்கு சீட் வழங்கவில்லை. ஆந்திராவில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ஜெயலலிதா எதிர்த்தார். நான்கு ஆண்டுகளாக, முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர் இல்லாமல் அ.தி.மு.க.,வின் முந்தைய ஆட்சி நடந்தது.

நன்றி;தினமலர் 09 -04 -2011


 

வியாழன், 14 ஏப்ரல், 2011

'கள்' இறக்க அனுமதி[?]; ஜெயலலிதாவின் வாக்கு வங்கி அரசியல் நல்லதல்ல.

நாடெங்கும் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்  படவேண்டும் என்ற கோரிக்கை பலமாக ஒலித்து வரும் நிலையில், வாக்குகளை மனதில் கொண்டு,  ''அதிமுக ஆட்சிக்கு வரும்பட்சத்தில், தென்னை மற்றும் பனை தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கள் இறக்க அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா பேசியுள்ளார்.
மது அருந்துவது குடும்பத் தலைவனாக இருந்தாலும், தள்ளாடுவது அவனது குடும்பமாக உள்ளது. மதுவின் மூலம் கோடிகளை வருமானமாக பெற்று நாட்டு மக்களை குடிகாரர்களாக்கி, அவர்களுக்கு சில இலவசங்களை வீசி அரசு ஏமாற்றி வரும் நிலையில்,  1991ல் ஆட்சிக்கு வந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் "மலிவுவிலை மதுக்கடைகளை" மூடும் உத்தரவில் முதல் கையெழுத்திட்டு தன் ஆட்சியைத் தொடங்கினாரோ, அதே ஜெயலலிதா, கள் இறக்க அனுமதிப்பதன் மூலம்  மீண்டும் வீதிக்கு வீதி மதுக்கடைகளை கொண்டுவரப் போகிறாரா?
மேலும் மலிவு விலை மதுக்கடைகளை மூடினாலும் தனியார் கடைகளை ஏலம் எடுப்பதில் நடைபெறும் முறைகேடுகளை களையும் வகையில், அரசாங்கத்திற்கு வருவாயைப் பெருக்கும் நோக்கிலும் பிராந்திக் கடைகளையும் அரசே(டாஸ்மாக்) எடுத்து நடத்தும் என்று அறிவிக்கப்பட்டதும் இவரது ஆட்சியில் தானே! இவரது இந்த முடிவினால்  காமராஜர் அவர்கள் ஊர்தோறும் பள்ளிகள் தொடங்கிய பெருமை பெற்றது போல் ஊர் தோறும் டாஸ்மாக் கடைகள் திறந்த புண்ணியம்(!)  ஜெயலலிதாவைச் சேரும். ஏற்கனவே டாஸ்மாக் மூலம் மக்களை கெடுத்த பாவத்திற்கு ஜெயலிதா பூரண மதுவிலக்கை அமுல்படுத்தி பரிகாரம் தேடுவதற்கு பதிலாக, சில ஆயிரம் ஓட்டுக்களை கவனத்தில் கொண்டு 'கள்' இறக்க அனுமதி என்பது கடைந்தெடுத்த அரசியலல்லவா?
அண்ணா பெயரில் கட்சி நடத்தும் ஜெயலலிதாவுக்கு மதுவிலக்கு கொள்கையில் அண்ணா எந்த அளவு உறுதியாக  இருந்தார் என்பதை நினைவு படுத்த கடமைப்பட்டுள்ளோம். 1968 ஏப்ரல் 12ம் நாள் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய மதுவிலக்கு மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்த அண்ணா அவர்கள் அந்த மாநாட்டில் ஆற்றிய உரையில்,

"..... மதுவிலக்கை ரத்து செய்வதனால் கிடைக்கக்கூடிய வருவாய் என் மனக்கண் முன்னால் ஒரு விநாடி தோன்றியது. அதற்குப் பின்னால், அழுகின்ற தாய்மார்களின் உருவமும், குழந்தைகளின் கதறலும், மனிதன் தன் அறிவை இழந்து காட்டுமிராண்டி போல் தெரியும் காட்சிதான் என் கண் முன்னால் நிற்கிறது. ஆகையால் மதுவிலக்கு ரத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு விடை சொல்வோம். அதற்கு மாறாகச் சிரிக்கின்ற தாய்மார்களின் முகங்களும், குதூகலம் உள்ள குடும்பங்களையும் குடிபோதைக்கு அடிமை இல்லாத மக்களையும் வரவேற்போம்" என்றார். 
வார்த்தைக்கு வார்த்தை அண்ணா நாமம் வாழ்க  என்று கூறும் ஜெயலலிதா, மதுவிலக்கு கொள்கையில் அண்ணாவை பின்பற்றாதது  ஏன்? அரசின் கஜானாவை பற்றி கவலைப்படாமல் அண்ணா, பூரண மதுவிலக்கை அமுல்படுத்தியிருக்கும் போது, வாக்குப் பெட்டியை கவனத்தில் கொண்டு போதைக்கு வக்கலாத்து வாங்குவதுதான் அண்ணா வழியா என்பதை ஜெயலலிதா சிந்திக்கட்டும். 
மேலும் 1987ல் எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கருணாநிதிதான் "மலிவு விலை மதுவை" தமிழகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார். எனவே ஜெயலலிதா பூரண மதுவிலக்கை அமுல்படுத்தி அண்ணா வழியை தேர்ந்தெடுக்கப் போகிறாரா? அல்லது சில ஆயிரம் ஓட்டுக்காக கருணாநிதி வழியை தேர்ந்தெடுக்கப்  போகிறாரா? அவரே முடிவு செய்து கொள்ளட்டும்.

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

தேர்தல் பணிக்கு துணை ராணுவத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும்-இந்திய தவ்ஹீது ஜமாத் வேண்டுகோள்

ராமநாதபுரம்,ஏப்.8
தமிழகத்தில் தேர்தல் பணிக்கு துணை ராணுவத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று இந்திய தவ்ஹீது ஜமாத் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்திய தவ்ஹீது ஜமாத் மாநில தலைவர் எஸ்.எம்.பாக்கர் ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
துணை ராணுவ படை
சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதால் அ.தி.மு.க. கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். தமிழக போலீசாரை தேர்தல் பாதுகாப்பு பணியில் இருந்து நீக்கி விட்டு முழுவதுமாக துணை ராணுவ படையினரை ஈடுபடுத்த வேண்டும்.
கலவரம் ஏற்பட்டால் கண்டதும் சுட அதிகாரம் வழங்க வேண்டும். ராமநாதபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் அசன் அலிக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியால் அவர் டெபாசிட் இழக்கும் நிலை ஏற்படும். தேர்தல் ஆணையம் தற்போது தான் தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தியுள்ளது.
வருகிற 13ந்தேதி வன்முறையின் உச்சக்கட்டம் தமிழகத்தில் கட்ட விழ்த்து விடப்படும் நிலை ஏற் பட்டுள்ளது. ஸ்பெக்டரம் வழக்கில் தொடர்புடைய சாதிக்பாட்சா வழக்கில் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட்தான் முக்கிய காரணம். உளவுத்துறை ஆளும் கட்சிக்கு அரசு தொடர்பான தகவல்களை தெரிவிக்கலாம்.
மழைநீர் சேமிப்பு
ஆனால் ஆளும் கட்சியாகவே செயல்பட்டதால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜெயலலிதா மழைநீர் சேகரிப்பு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியது போல சோலார் மின் திட்டத்தையும் செயல்படுத்துவார். தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும் உறுதியாக நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட தலைவர் முசம்மில்ஹார், மாவட்ட செயலாளர் இம்பாலா அலா வுதீன், மாநில செயலாளர் முகைதீன் ஆகியோர் உடனி ருந்தனர்.
 
நன்றி;தினமலர்.


தேர்தல் அதிகாரிகள் குடும்பத்துக்கு ஆபத்து : இந்தியதவ்ஹீத் ஜமாத் தலைவர் பாக்கர் பேட்டி

ராமநாதபுரம் : ""தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் குடும்பத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக,'' இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் எஸ்.எம்.பாக்கர் கூறினார். ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: ஓட்டுப்பதிவு நடக்கும் ஏப்.,13 தேர்தலை சீர்குலைக்க தி.மு.க., தயாராக உள்ளது. ஓட்டுச்சாவடிகளை கைவசம் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் குடும்பத்தை சிறை வைத்து காரியம் சாதிக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

காளிமுத்து ஆர்.டி.ஓ., விவகாரம் இதற்கு சரியான உதாரணம். நேரடி பேட்டி கொடுத்த ஒரு அதிகாரியை அடுத்த மூன்றாவது நாளில் மாற்றி பேச வைத்துள்ளனர். "தோல்வி அடைந்தாலும் பொறுப்பான எதிர்க்கட்சியாக இருப்போம்' என, கருணாநிதி கூறியிருப்பது, தொண்டர்களை தூண்டிவிடும் வேலை. ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் போலீசாருக்கு பதில் துணை ராணுவத்தை குவிக்க வேண்டும். வன்முறையில் ஈடுபடுவோரை கண்டதும் சுட வேண்டும். தி.மு.க.,வினரால் காங்.,அனைத்து இடங்களிலும் தோற்கும். சாதிக் பாட்ஷா இறப்பில் உளவுப்பிரிவு போலீசாருக்கு முழு பங்கு உண்டு.

சுப்ரீம் கோர்ட்டு தலையீட்டில் தான் அனைத்து ஊழலும் வெளிவருகிறது. மத்திய அரசு பொம்மையாக உள்ளது. புலிகள் பெயரை சொல்லி லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்தனர், தமிழக மீனவர்களை அடித்து விரட்டினர். அப்போது அமைதியாக இருந்த கருணாநிதி, இப்போது சோனியாவிடம் கோரிக்கை வைக்கிறார். "இனி அவர்கள் சுடமாட்டார்கள்' என, சோனியா சொல்கிறார் என்றால், இவரது கட்டுப்பாட்டில் இலங்கை இருப்பது உறுதியாகிவிட்டது, என்றார்.

நன்றி;தினமலர்


வியாழன், 7 ஏப்ரல், 2011

புதன், 6 ஏப்ரல், 2011

வினையை கண்டுகொள்ளாமல் எதிர்வினையை பரபரப்பாக்கும் ஊடகங்கள்!

ப்கானிஸ்தானில் வன்முறைக்கு  ஐநா தலைமையகத்தின் ஊழியர்கள் 10 பேர் பலி என்ற செய்தி ஊடகங்களில் சில  நாட்களுக்கு முன்  பரபரப்பாக வெளியானதை நாம் அறிந்திருப்போம். இந்த செய்தியை வெளியிடும் போதுதான் சம்மந்தப்பட்ட வன்முறை எதனால்  ஏற்பட்டது என்ற தகவலையும் ஊடகங்கள் வெளியிட்டன. அதாவது அமெரிக்காவில் திருக்குர்ஆன் எரிக்கப்பட்டதை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவு வன்முறை வெடித்து  பத்துப்பேர் கொலையில் முடிந்தது என்ற தகவலை தருகிறது ஊடகம். அமெரிக்காவில் புளோரிடா சர்ச்சின் பாதிரியார் முஸ்லிம்களின் புனித வேதமான  திருக்குர்ஆனை கடந்த 20 -03 -11 அன்று தீவைத்து எரித்து தனது இஸ்லாமிய விரோதத்தை வெளிப்படுத்தினார். இந்த செய்தியை பெரும்பாலான ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து விட்டன.
 
ஆனால் தங்களின் புனித வேதம் எரிக்கப்பட்டதை கண்டித்து ஆப்கானிஸ்தானில் உள்ள ஐநா தூதரகம் முன்பாக முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கனோர் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் வன்முறை தலைதூக்கி  ஐ.நா ஊழியர்கள் பத்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த செய்தியை பரபரப்பாக வெளியிடுகின்றன ஊடகங்கள். இதே பரபரப்பை திருக்குர்ஆன் எரிக்கப்பட்ட செய்தியை வெளிடுவதில் காட்டவில்லை ஊடகங்கள்.  இஸ்லாமியர்களுக்கு ஒரு இழப்பு என்றால் அதை மூடி மறைப்பதும், ஒரு இழப்பை ஏற்படுத்துபவர்கள் இஸ்லாமியர்கள் என்றால் அதை பரபரப்பாக்குவதுதான் பத்திரிக்கை தர்மம் போலும்.
 
அதே நேரத்தில் ஆப்கானில் கொல்லப்பட்ட பத்துபேர் கொலை கண்டிக்கத் தக்கதே! எங்கோ ஒரு மூடன் செய்த காரியத்திற்காக சம்மந்தமில்லாத அப்பாவிகள் கொல்லப்படுவதை இஸ்லாம் ஒருபோதும் அங்கீகரிக்காது. அதே  நேரத்தில் இந்த எதிர்வினைக்கு தூண்டுகோல் குர்ஆனை எரித்த அந்த அமெரிக்கக் பாதிரியார் தான்  என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து  இருக்க முடியாது.
 
முஸ்லிம்களின் புனித நூலோடு விளையாடி, முஸ்லிம்களை மனதளவில் காயப்படுத்துவதை அமெரிக்கர்கள் சிலர் வாடிக்கையாகவே கொண்டுள்ளனர். சில ஆண்டுகளுக்கு  முன்னால்  குவாண்டனாமோ சிறைச்சாலையில் அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் புனித குர்ஆனை கழிவறையில் வீசி இழிவு படுத்தினார். கடந்த செப்டம்பர் 11 அன்று திருக்குர்ஆனை எரிக்கப்போவதாக அறிவித்தார் இதே பாதிரியார். உலகெங்கிலும் கிளம்பிய எதிர்ப்பையடுத்து  தந்து முடிவை கைவிட்ட இந்த பாதிரியார், மீண்டும் திருக்குர்ஆனை எரித்துள்ளார். பாதிரியாரின் இந்த அயோக்கியத்தனத்தை அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்களின் வேதநூலோடு விளையாடுவதன் மூலம் முஸ்லிம்களின் உணர்வுகளை சீண்டி பார்ப்பவர்களை அமெரிக்கா இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும். இல்லையேல் அமெரிக்கா முஸ்லிம்விரோத நாடு என்ற முத்திரை நிலைப் பெற்றுவிடும். அது அமெரிக்காவுக்கு நல்லதல்ல.
 
மேலும் கடந்த செப்டம்பர் 11 அன்று திருக்குர்ஆனை எரிக்கப்போவதாக இதே பாதிரியார் அறிவித்தபோது பொங்கி எழுந்த அரபு நாடுகளும், முஸ்லிம் உலகமும் [ஆப்கான்-வங்கதேசம் நீங்கலாக] இப்போது திருக்குர்ஆன் எரிக்கப்பட்டுள்ள நிலையில் பெரிய அளவில் அலட்டிக்கொல்லாதது ஆச்சர்யமளிக்கிறது. அதோடு இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய இயக்கங்களும் இக்குர்ஆன் எரிப்பை கண்டுகொள்ளவில்லை. 'தேர்தல் நேரம்; 'நோ' இஸ்லாம்...????
 
-முகவைஅப்பாஸ்.
இந்திய தவ்ஹீத்ஜமாஅத்.
 

சனி, 2 ஏப்ரல், 2011

ஜெயலலிதாவிடம் பெட்டி வாங்கியதை ஒத்துக்கொண்ட தனிநபர் ஜமாஅத்!

             ல்லோரும் சீட்டுக்காகவும்-நோட்டுக்காவும் தான் அரசியல் கட்சிகளோடு கை கோர்க்கிறார்கள். ஆனால் நாங்கள் மட்டும் தான் சீட்டு- நோட்டு என எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் சமுதாய நலனை முன்னிறுத்தி கட்சிகளிடம் கூட்டு சேர்கிறோம் என்று தங்களை தாங்களே பரிசுத்தவான்கள் என்று கூறிக்கொள்ளும் தனிநபர் ஜமாஅத், கடந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் பன்னீர் செல்வம் மூலமாக ஜெயலலிதாவிடம் பணம் வாங்கியதை ஒப்புக்கொண்டுள்ளதை படியுங்கள்;
 
''பன்னீர் செல்வம் மூலம் தேர்தல் செலவுக்காக பணம் வாங்கியது பாக்கர் அலவுத்தீன் முனிர் ஆகியோர், தான்.
அதை நிர்வகிக்கும் பொறுப்பு அலாவுத்தீனுக்கு கொடுக்கப்பட்டது. வாகனப்பிரச்சாரம், கொடிகள், துண்டுப்பிரசுரங்கள் என்று ஒவ்வொரு செலவுக்கும் முறையாக லாவுத்தீன் கணக்கு எழுதி நிர்வாகத்தில் ஒப்படைத்தார். அப்போது சுமார் ஒரு லட்சம் ரூபாய் மிச்சமிருந்தது. அந்தத் தொகையை ஜெகவீரபாண்டியன் வழியாக அதிமுகவுடன் கொடுத்து விடுவ்து என்று முடிவ்பு செய்யப்பட்டது. ஆனால் ஜெகவீர பாண்டியன் அதை வாங்க மறுத்து விட்டார், உங்கள் பணிகலூக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டார். எனவே அது ஜ்மாஅத் கணக்கில் சேர்க்கப்பட்டது. அதாவ்து தொண்டியப்பாவிடம் கொடுக்கப்பட்டது
. [பொய்யன் டிஜே]
 
தேர்தலில் போட்டியிடாத தனிநபர் ஜமாஅத்,ஜெயலலிதாவிடம் பெட்டி வாங்கியதை பற்றி விமர்சனம் கிளம்பும் வரை மக்களுக்கு சொன்னதுண்டா? இது அந்த தனிநபரை நம்பிய மக்களை ஏமாற்றும் செயலல்லவா? அடுத்து ஜெயலலிதாவிடம் வாங்கிய பணத்திலிருந்து கொடிகள் தயாரித்தார்களாம். எந்தக்கொடி? அண்ணாதிமுக கொடியா? இல்லையே! ததஜ கொடி தயாரிக்க ஜெயலலிதாவிடம் பணம் வாங்கியது எந்த வகை நியாயம்? வாகனப் பிரச்சாரத்திற்கு செலவு செய்தார்களாம்! தன்னை ஆதரித்து பிரச்சாரம் செய்பவர்களுக்கு பிரச்சார வாகனத்தை சம்மந்தப்பட்ட வேட்பாளரே செய்துதருவார் என்பது அரசியலில் பச்சிளம் குழந்தையும் அறியுமே! துண்டு பிரசுரங்கள் அடித்தார்களாம். துண்டு பிரசுர மாதிரியை அண்ணாதிமுகவிடம் கொடுத்தால் எத்தனை லட்சம் நோட்டீஸ் வேண்டுமானாலும் அடித்து தந்திருப்பார்களே! அல்லது கொட்டேஷனை கொடுத்து, இந்த தொகையை இந்த பிரஸ்ஸில் கட்டுங்கள் என்றால் அக்கட்சி கட்டியிருக்குமே! அவ்வாறு செய்யாமல் பணம் பெற்றது எதற்காக? தனது மைத்துனருக்கு அந்த ஆர்டரை   தந்து லாபம் பார்க்கத்தானே! அதோடு இன்னொரு செய்தி என்னவெனில், அப்போது ததஜ அடித்த அந்த மூன்று வகையான பிரசுரங்களை இப்போது வெளியிட்டால், திமுகவை ஆதரிக்கும் தனிநபர் ஜமாஅத்தின் முகமூடியை அந்த பிரசுரமே கிழிக்கும் என்பது தனி விஷயம்.
 
இதோடு ஜெயாவிடம் வாங்கிய பணத்தை வைத்து இன்னொன்றும் செய்தார்கள். தேர்தல் நேரத்தில் பணம் வாங்கிக்கொண்டு கட்சிகளை ஆதரித்து பிரச்சாரம் செய்ய சில  நடிகர் கூட்டம் கிளம்பும். அதுபோல, கடந்த தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்த ததஜவின் முக்கிய  தனிநபர் பிரச்சாரகர் இருவருக்கு ஜெயலலிதாவிடம் வாங்கிய பணத்திலிருந்து ஆயிரக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டதா இல்லையா? கூலி வாங்கிக்கொண்டு கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்யும் நடிகர்கள் சிலருக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? தனிநபருக்கு துணிவிருந்தால் ஜெயலலிதாவிடம் வாங்கிய தொகை எவ்வளவு? அது எந்தெந்த வகைகளுக்கு பயன்படுத்தப்பட்டது என்ற விபரத்தை மக்கள் மன்றத்தில் வைக்கத் தயாரா?
 
ஆக, சகோதரர்களே! இவற்றை எல்லாம் எழுதும் எண்ணம் எமக்கு இவ்வளவு காலமாக இல்லை. ஆனால் தொடர்ந்து தாங்கள் மட்டுமே யோக்கியர்கள் என வேஷம் போடும் இவர்களை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே எழுதுகிறோம். அரசியல் கட்சிகளிடம் சீட்டும்- நோட்டும் வாங்கமாட்டோம் என்று சொல்லிக்கொண்டு ஜெகவீர பாண்டியனுக்கு ஜெயலலிதாவிடம் சீட்டுக் கேட்டார்கள். அதே ஜெயலலிதாவிடம் பணமும் பெற்றார்கள் என்பதை நாம் நிரூபித்துள்ளோம். நடுநிலையோடு சிந்தியுங்கள். இன்னும் இவர்களின் வேஷங்களை நம்பாதீர்கள்.
 
குறிப்பு; கடந்த தேர்தலின் போது பாக்கரும் தானே அங்கு இருந்தார் என்று திசை திருப்பக் கூடாது. அந்த காலகட்டத்தில் அந்த ஜமாஅத்தில் இருந்த மாநில நிர்வாகிகள் அனைவருமே இந்த விஷயத்தில் பங்காளிகளே!

அம்மாவிடம் சீட்டுக் கேட்ட கதை தெரியுமா?

முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரித்து சட்டமியற்றினால் தான் திமுகவை ஆதரிப்போம் எனக்கூறி வந்த தனிநபர் ஜமாஅத், அதிலிருந்து அந்தர்பல்டியடித்து தேர்தல் அறிக்கையில்  கருணாநிதி பரிசீலிப்போம் என்று கூறிவிட்டார். எனவே திமுகவுக்கு அதரவு  என்று எடுத்த நிலைப்பாடு குறித்து உணர்வு வார இதழில் எழுதும்போது,
 
''ததஜவை  பொறுத்தவரையில் தனக்கோ தனக்கு வேண்டியவர்களுக்கோ தேர்தலில்  சீட்டுகள் வழங்கப் படவேண்டும் என்ற கோரிக்கையை  எக்காலத்திலும் வைத்தது இல்லை என்று எழுதியுள்ளார்கள். இது அப்பட்டமான பொய்யாகும்.
 
ஆனால் கடந்த சட்டமன்றத்தேர்தலில் ஜெயலலிதாவோடு கூட்டணியில் இருந்த தனிநபர்  ஜமாஅத், அப்போது தங்களை ஜெயலலிதாவோடு 'நெருக்கி' வைத்த ஜெகவீரபாண்டியன் என்பவருக்கு அதிமுக சீட்டு தரவேண்டும் என்று கடிதம் எழுதி, அக்கடிதத்தை  அப்போதைய பொதுச்செயலாளர்  மூலம் ஒ. பன்னீர் செல்வத்தின்  வாயிலாக ஜெயலலிதாவிற்கு அனுப்பப்பட்டதா இல்லையா? அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு அப்படி ஒரு கடிதம் எழுதவில்லை என்று தனிநபர் ஜமாஅத் கூறத் தயாரா?
 
இல்லை வழக்கம் போல,ஜெயலலிதாவிடம் கடந்த தேர்தலில் பணம் வாங்கியது பற்றிய விவகாரம் கிளம்பியபோது, ஜெயலலிதாவிடம் பணம் வாங்கியது பாக்கரும்-முணீரும்- அலாவுதீனும் தான். எனக்கு ஒண்ணுமே தெரியாது என்று அண்ணாச்சி ஜகா வாங்கியது போல், இந்த கடித விவகாரமும் பாக்கர் செஞ்ச வேலைம்மா; எனக்கு தெரியாது என்று ஜகா வாங்கப்போகிறாரா? அப்படி ஜகா வாங்கினால் ஜமாஅத்தில் என்ன நடக்கிறது என்பதைக் கூட அறியாத தலைவராகவா இருந்தார் என்ற கேள்வியல்லவா எழும். அதுசரி! அப்படியெல்லாம் அண்ணன்கிட்ட கேள்வி கேட்க ஆளுண்டா?

குவைத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற இதஜவின் இரத்ததான முகாம்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அணியணியாய் அணிவகுத்துவந்த அவதூறு அலைகளை வென்று, அல்லாஹ்வின் அருளால் அரபகங்களிலும் தடம்பதித்துள்ள  நமது இந்தியதவ்ஹீத் ஜமாஅத்தின்  குவைத் மண்டலம் சார்பாக  01 -04 -2011 வெள்ளிக்கிழமையன்று  இரத்ததான முகாம் சிறப்புடன் நடைபெற்றது. ஜாப்ரியா இரத்தவங்கியில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு மண்டலத் துணைத்தலைவர் புஹாரிஹசன் தலைமை தாங்கினார். மண்டல நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நமது அமைப்பின் ஆதரவாளர் மும்பையை சேர்ந்த சகோதரர் ஷாஹித் அன்ஸாரி அவர்கள் இரத்தம் தந்து முகாமை தொடங்கி வைத்தார்கள். இரு முஸ்லிமல்லாத சகோதரர்கள் உள்ளிட்ட 57 சகோதரர்கள் குருதிக்கொடை வழங்கினார்கள். இறுதியில் குருதிகொடை வழங்கிய முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கு சிறப்பு விருந்தினர் ஜாஹித் அன்ஸாரி அவர்கள் மூலம்  திருக்குர்ஆன் பரிசளிக்கப்பட்டது. புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!
-அன்புடன் முகவைஅப்பாஸ்,
மண்டலத் தலைவர் இதஜ.