ஞாயிறு, 30 அக்டோபர், 2011

உலக சிக்கன நாள்; சிக்கனமும்-கஞ்சத்தனமும்!

அல்லாஹ்வின் திருப்பெயரால்....


ன்று [அக்டோபர் 30 ] உலக சிக்கன நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. சிக்கனம் வீட்டை காக்கும்-சேமிப்பு நாட்டை காக்கும் என்ற வார்த்தைகள் நாம் பல்வேறு காலகட்டங்களில் செவியுற்றவைத்தான். நம்மில் பலருக்கு சிக்கனம் என்பதற்கும்- கஞ்சத்தனம் என்பதற்கும் வேறுபாடு தெரிவதில்லை. சிக்கனம் செய்கிறேன் என்ற பெயரில் தன்னுடைய-தன்னுடைய குடும்பத்தாருடைய தேவைகளை நிறைவேற்றாமல் காசை சேமிப்பதையே குறியாக கொள்வோரும் உண்டு. சிக்கனம் என்பது இதுவல்ல. சிக்கனம் என்றால் அவசியமான தேவைகளுக்கு அவசியமான அளவு [வீண் விரயமின்றி] செலவு செய்துவிட்டு மீதியை சேமிப்பதாகும். கஞ்சத்தனம் என்பது தம்மிடம் போதிய வசதியிருந்தும் தம்முடைய தம்மை சார்ந்தவர்களுடைய தேவையை மறுப்பதாகும். மனிதனை படைத்த அல்லாஹ், மனிதனின் வாழ்வில் அத்துணை பிரச்சினைக்கும் தீர்வு சொல்லும் தனது மார்க்கமான இஸ்லாத்தில் குர்ஆன்-மற்றும் நபிமொழிகள் வாயிலாக இந்த விசயத்திற்கும் வழிகாட்டியுள்ளான்.பொதுவாக இஸ்லாம் வணக்கமாக இருந்தாலும், வாழ்க்கையாக இருந்தாலும் அதில் நடுநிலை பேன சொல்லும் மார்க்கமாகும். அந்தவகையில் செலவு செய்வதை பற்றி அல்லாஹ் தன் அருள்மறையில்;

இன்னும் அவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் - எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள்.[அல்-குர்ஆன் 25:67 ]

இந்த வசனத்தில் அல்லாஹ், நாம் எவ்வாறு செலவு செய்யவேண்டும் என்பதை தெளிவாக விளக்குகிறான். நம்முடைய தேவைகளுக்காக செலவு செய்வதை மார்க்கம் தடுக்கவில்லை. ஆனால் அதில் வீண் விரையம் வந்துவிடக்கூடாது. மேலும் கஞ்சத்தனமாக இல்லாமல் நடுநிலையாக இருக்கவேண்டும் என்றும் சொல்லிக்காட்டுகின்றான் . ஆனால் முஸ்லிம்களாகிய நம்மில் பெரும்பாலோரின் நிலை என்ன..? 'வைச்சா குடுமி; இல்லைன்னா மொட்டைஎன்பார்களே அதுபோன்று, ஒன்று ஆடம்பரம் என்ற பெயரில் வீண் விரயம் செய்பவர்களாக இருக்கிறார்கள். அல்லது சிக்கனம் என்ற பெயரில் வடிகட்டிய கஞ்சர்களாக இருக்கிறார்கள். வசதி படைத்த முஸ்லிம்களின் வீடுகளில் தேவைக்கதிகமாக உணவுகள் தயாரிக்கப்பட்டு அவை விரையமாக்கப்படுகிறது. இதுபோக திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப காரியங்களில் தங்களின் 'பணத்திமிரை' ஊரறிய செய்ய தேவைக்கு அதிகமாக உணவுகள், ஆடம்பர செலவுகள், மார்க்கம் அனுமதிக்காத பல்வேறு அனுஷ்டானங்கள் இவைகளுக்காக லட்சக்கணக்கான ரூபாய்கள் வீன்விரையம் செய்யப்படுகிறது. இப்படி வீன்விரையம் செய்பவர்கள் பற்றி இதோ அல்லாஹ் கூறுகின்றான்;

மேலும், எவர்கள் மற்ற மனிதர்களுக்குக் காட்டுவதற்காகத் தங்கள் பொருட்களைச் செலவு செய்வதுடன், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாதிருக்கின்றனரோ (அவர்களுக்கு ஷைத்தான் கூட்டாளியாவான்). எவனுக்கு ஷைத்தான் கூட்டாளியாக இருக்கின்றானோ, அவன் கூட்டாளிகளிலெல்லாம் மிகத் தீயவன் (என்பதை அறியவேண்டாமா?)[அல்-குர்ஆன் 4:38 ]

மேலும் அல்லாஹ்கூறுகின்றான்;மேலும் விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தான் தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.[அல்-குர்ஆன் ]

இறைவனின் இந்த எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு வீன்விரையம் தவிர்ப்போம். நம்முடைய தேவைகளை கணக்கிட்டு தேவையான உணவுகளை தயாரிப்போம். திடீர் என்று ஒரு விருந்தாளி வந்தாலும் அவர்களுக்கென மாற்று உணவு தயாரிக்க இப்போதுள்ள நவீன காலத்தில் உடனே சாத்தியமானதுதான். அப்படி இல்லையென்றால் கூட ஒருவர் உணவு இருவருக்கு போதுமானது என்ற நபிமொழிக்கு ஏற்ப நம்முடைய உணவை பங்கிட்டு வழங்கினால் அதில் அல்லாஹ் நிச்சயமாக பரக்கத் செய்வான். மேலும் வசதி படைத்தவர்க்ள அணியும் ஆடைகளை அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருப்பார்கள். ஒருமுறை அணிந்த ஆடையை மறுமுறை அணியாதவர்களும் உண்டு. அப்படிப்பட்டவர்கள் தங்கள் உபயோகித்த ஆடைகளை தேவையுடையவர்களை தேடி வழங்கினால் இவர்களுக்கு நன்மை கிடைக்கும். மாறாக நாம் எவ்வளவு பெரிய அந்தஸ்துடையவர்; நாம் அணிந்த ஆடையை சாதரண ஒருவன் அணிவதா..? என்ற கர்வத்துடன் தூக்கி குப்பையில் வீசினால் இதுவும் வீண் விரயமாகும். இதுவும் அல்லாஹ்விடத்தில் தண்டனைக்குரியதாகும்.

அடுத்து அல்லாஹ் செல்வத்தை தந்திருந்தும் கஞ்சத்தனம் செய்பவர்கள் பற்றி எடுத்துக்கொண்டால் இவர்கள் தங்களை மிகப்பெரிய பொருளாதார மேதை என்று நினைத்துக்கொண்டு இவர்கள் செய்யும் கூத்து சொல்லிமாளது. ஒரு சோப்பு வாங்கி மனைவியிடம் கொடுத்துவிட்டு இத்துணை நாளைக்கு வைத்துக்கொள்ளவேண்டும் என்று கெடு விதிப்பவர்களும் உண்டு. குறிப்பிட்ட கெடுவுக்கு முன்னால், அந்த மனைவி ஏங்க! சோப்பு காலியாயிருச்சு என்று சொன்னால் அவ்வளவுதான் இவன் அதற்காக போடும் சத்தம் அடுத்த வீடுதாண்டி கேட்கும். சோப்பு என்பது கரையக்கூடியது அது என்ன கல்லிலா தயாரிக்கப்பட்டது அப்படியே இருப்பதற்கு..? அல்லது அது என்ன சாப்பிடக்கூடிய பொருளா..? மனைவி லேசா கடிச்சிருப்பா என்று சொல்வதற்கு ..? இது உதாரணம் தான்! இவ்வாறான கஞ்சர்களை, சாப்பிட்ட கையால் காக்கா விரட்டமாட்டன் என்பார்கள்ஏனெனில் இவன் கையில் ஒட்டியிருக்கும் சோத்து பருக்கை கீழே விழுந்து அதை காக்கா தின்றுவிடக்கூடாதாம். இவ்வாறு கஞ்சத்தனம் செய்பவர்களை பற்றி அல்லாஹ்,

 
அறிந்து கொள்க! அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள், ஆனால் உங்களில் கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார்கள்; ஆனால் எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான் - அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் - நீங்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள். (47:38)

எனவே, அல்லாஹ் நமக்களித்த அருட்கொடைகளை அவன் விதித்த வரம்புகளுக்குட்பட்டு அனுபவிப்போம். மேலும் அவன் வழியில் செலவும் செய்வோம். நமது சந்ததிகளுக்காக சேமிக்கவும் செய்வோம். அதே நேரத்தில் நம்முடைய உள்ளத்தில் கஞ்சத்தனம் வந்துவிடாமலும், நம்முடைய செயலில் வீண் விரையம் வந்துவிடாமலும் பார்த்துக் கொள்வதோடு, அதற்காக அல்லாஹ்விடத்திலும் பிரார்த்திப்போம்.

குறிப்பு; இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படும் உலக சிக்கன நாளை ஆதரித்து இக்கட்டுரை எழுதப்படவில்லை. மாறாக இந்த நாளில் எழுதினால் மாற்றார்களும் சிக்கனம் குறித்த இஸ்லாமிய நிலைப்பாட்டை விளங்கிக்கொள்வார்கள் என்பதற்காக எழுதப்பட்டது.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

சனி, 29 அக்டோபர், 2011

துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகளும் உழ்ஹிய்யாவின் சட்டங்களும்!

அல்லாஹ்வின் திருப்பெயரால்.....

ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும் ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக.

சிறப்புகள்1- துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும்தான் ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும் உயிரையும் அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : புகாரி

2- நாட்களில் மிகச்சிறந்த நாள் அரஃபாவுடைய நாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்.

இந்த நாட்களில் செய்யும் அமல்கள்;
1- ஹஜ் உம்ரா:- ஒரு உம்ரா மற்ற உம்ராவுக்கு இடைப்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும். மேலும் ஏற்றுக்கொள்ப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம் - புகாரி முஸ்லிம்.

2-உபரியான தொழுகைகள் நோன்புகள் தர்மங்கள் உறவினர்களுக்கு உதவுவது குர்ஆன் ஓதுவது பாவமன்னிப்பு தேடுவது நன்மையை ஏவுவது தீமையை தடுப்பது போன்ற நல் அமல்களில் ஈடுபடுவது.
[குறிப்பு- துல் ஹஜ் மாதத்தின் பத்தாம் நாளாகிய பெருநாளன்று நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டுள்ளது.ஆதாரம் - புகாரிமுஸ்லிம்]

3- அரஃபா நோன்பு :- அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம்-முஸ்லிம்
[குறிப்பு :- அரஃபா நோன்பை ஹாஜிகள் நோற்க்கக்கூடாது ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் சிறந்தது]

அரஃபா தினத்தன்று அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கொண்டுவந்த பாலை அருந்தி தான் நோன்பு நோற்கவில்லை என்பதை மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள்.ஆதாரம் புகாரி முஸ்லிம்.

4- தக்பீர் கூறுவது:- கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும் பள்ளிவாசல் வீடு கடைவீதி போன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறுவது ;

ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை. ஆகவே லாஇலாஹா இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : அஹ்மத்.

இப்னு உமர் (ரலி) அபூஹுரைரா (ரலி) ஆகிய இரு நபித்தோழர்களும் துல்ஹஜ் (மாதம் ஆரம்ப) பத்து தினங்களிலும் கடைவீதிகளுக்கு செல்லும் போதெல்லாம் தக்பீர் கூறுவார்கள் இவ்விருவரும் கூறுவதை கேட்கின்ற மற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள்.
ஆதாரம் - புஹாரி.

5- ஹஜ் பெருநாள் தொழுகை இன்னும் குத்பா பிரசங்கத்தில் கலந்து கொள்வது.
நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப்பெருநாளிலும் கன்னிப்பெண்கள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் (உட்பட) முஸ்லிம்களின் பிரார்த்தனைகளிலும் நல்ல அமல்களிலும் கலந்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழுகையில் கலந்து கொள்ளாமல் தொழுகை நடக்கும் பகுதிக்கு வெளியே இருந்து கொள்ள வேண்டும் என்றார்கள்.
ஆதாரம் :- புகாரி முஸ்லிம்.

6- உழ்ஹிய்யா:- உழ்ஹிய்யா என்பது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு பின் இறை திருப்தியை நாடி அறுக்கப்படும் பிராணிக்கு சொல்லப்படும் இது நபியவர்கள் வலியுறுத்திய சுன்னத்தாகும்.கொம்புள்ள கறுப்பு நிறம் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளை நபி (ஸல்) அவர்கள் உழ்ஹிய்யாவாக கொடுத்தார்கள் அப்போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி அவ்விரண்டின் ஒரு பக்கத்தின் மீது தனது காலை வைத்து கையால் அறுத்தார்கள்.
ஆதாரம் - புஹாரி.


குர்பானி பிராணியின் வயது;

குர்பானி கொடுக்கப்பட வேண்டிய பிராணிகளில் ஒட்டகத்திற்கு ஐந்து வயதும், ஆடு, மாடுகளுக்கு இரண்டு வயதும் பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
"
முஸின்னா"வைத் தவிர வேறு எதனையும் அறுக்காதீர்கள். அது கிடைக்க வில்லையானால் ஆறுமாதக் குட்டியைக் கொடுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்".(ஜாபிர்(ரலி) – முஸ்லிம், அபூதாவூத், நஸஈ, இப்னுமாஜா, அஹ்மத் )
இங்கு "
முஸின்னா" என்று கூறப்படும் வார்த்தை ஆடு மாட்டில் இரண்டு பல் முளைத்த பிராணிகளுக்கு பயன்படுத்தப் படுகின்றது. ஒட்டகம் ஐந்து வயது முடிந்தவுடனும், ஆடு, மாடு இரண்டு வயது முடிந்தவுடனும் இரண்டு பற்கள் வருவதால், ஒட்டகம் ஐந்து வயது, ஆடு, மாடு இரண்டு வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டுமெனக் கூறப்படுகின்றது.
"
முஸின்னா" கிடைக்காவிட்டால் ஆறுமாதக் குட்டியாட்டை அறுப்பது இந்த ஹதீஸில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் பிறிதொரு ஹதீஸின் மூலம் அது ஒரு தோழருக்கு மாத்திரம் வழங்கப்பட்ட சலுகை என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.
"இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்கு) திரும்பிச்சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்துகொள்வாரோ அவர் நமது வழியில் நடந்துகொண்டார். யார் (தொழுமுன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்தினருக்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியின் நன்மை எதுவும் கிடையாது" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபுர்தா(ரலி) அவர்கள் (தொழு முன்) அறுத்துவிட்டார். அவர் (நபி(ஸல்) அவர்களிடம்) என்னிடத்தில்
முஸின்னாவை விட சிறந்த ஆறுமாதக் குட்டியுள்ளது (அதைக் குர்பானி கொடுக்கலாமா) என்றார். முன் அறுத்ததிற்கு இதைப் பகரமாக்குவீராக (அறுப்பீராக). எனினும், உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இதை (குர்பானிகொடுக்க) அனுமதியில்லை" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (பரா(ரலி) – புகாரி, முஸ்லிம்)
உழ்ஹிய்யாவிற்கான கால் நடைகளில் கீழ்க்கண்ட குறைகள் இருக்கக்கூடாது:
  1. கண் குறுடு
  2. கடுமையான நோயானவை
  3. மிகவும் மெலிந்தவை
  4. நொண்டியானவை அங்கங்கள் குறையுள்ளவை.
கூட்டு குர்பானி;
உழ்ஹிய்யாவுக்காக அறுத்துப் பலியிடப்படும் பிராணி ஒட்டகம் அல்லது மாடாக இருப்பின் ஏழு நபர்கள் கூட்டாகச் சேர்ந்து கொடுக்க முடியும். என்பதைப் பின்வரும் நபிமொழி விளக்குகின்றது.
"ஹுதைபியா என்ற இடத்தில் நபி(ஸல்) அவர்களுடன் ஏழு பேர் சேர்ந்து ஓர் ஒட்டகத்தையும், ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டையும் நாங்கள் அறுத்துப் பலியிட்டோம்"(ஜாபிர்(ரலி) – முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி)

குர்பானிப் பிராணி ஆடாக இருப்பின் ஒருவர் தமக்காகவும், தமது குடும்பத்தினருக்காகவும் ஓர் ஆட்டை அறுத்துப் பலியிட முடியும்.

"நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது என்று அபூ அய்யூப்(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒர் ஆட்டையே குர்பானி கொடுப்பார்.(அதாஃ பின் யஸார்(ரலி) – திர்மிதி, இப்னு மாஜா முவத்தா)

அறுக்கும் நேரம் ;
ஹஜ்ஜு பெருநாள் தொழுகைக்கு பின் அறுக்க வேண்டும்யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது உழ்ஹிய்யாவாக ஆகாது அவர் தன் குடும்பத்தின் தேவைக்காக அறுத்ததாகவே கணக்கிடப்படும்.யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அவர் இன்னும் ஒரு முறை குர்பாணி கொடுக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் - புகாரி,

யார் (பெருநாள்) தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது அவரின் குடும்பத்தேவைக்காக அறுத்ததாக கணக்கிட்டுக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

அறுக்கும் முறை~ ஆடு மாடுகளை படுக்கவைத்து ஒருக்கணித்து அறுக்க வேண்டும் (முஸ்லிம்)~ ஒட்டகத்தை நிற்கவைத்து அறுபடும் நரம்புகள் வெட்டப்படும் அளவுக்கு அறுக்கும் கருவியால் கீறிவிடவேண்டும். (முஸ்லிம்)~ அறுக்கும் போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். (புகாரி)


இறைச்சிகளை விநியோகித்தல்;

لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ
தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.[22:28 ]

ஸலமா இப்னு அக்வஃ(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் குர்பானிப் பிராணியை அறுக்கிறவர் (அறுத்ததிலிருந்து) மூன்று நாள்களுக்குப் பின் (அதிலிருந்து எதுவும் அவரின் வீட்டில் எஞ்சியிருக்கும் நிலையில்) காலைப் பொழுதை அடைய வேண்டாம்' என்று கூறினார்கள். அடுத்த ஆண்டு வந்தபோது, மக்கள் 'இறைத்தூதர் அவர்களே! சென்ற ஆண்டு செய்ததைப் போன்றே (இந்த ஆண்டும்) நாங்கள் செய்ய வேண்டுமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் 'நீங்களும் அதிலிருந்து உண்டு (மற்றவர்களுக்கும்) உண்ணக் கொடுங்கள். சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், கடந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. எனவே, நீங்கள் அந்தச் சிரமத்தைப் போக்க (அவர்களுக்கு) உதவ வேண்டும் என்று விரும்பினேன்' என்று பதிலளித்தார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 5569

"உழ்ஹிய்யாக் கொடுப்பவர் தானும் சாப்பிட்டு தனது உறவினர்களுக்கும் அன்பளிப்புச் செய்து ஏழைகளுக்கு தர்மமாகக் கொடுத்தல் சுன்னத்தாகும்.


செய்யக்கூடாதவை;
உழ்ஹிய்யா கொடுக்கப்பட்ட கொடுக்கப்பட்ட பிராணிகளின் முடிகளையோ தோல்களையோ மாமிசங்களையோ அறுத்தவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது.

குர்பானி கொடுப்பதற்கான ஒட்டகங்களை மேற்பார்வை செய்வதற்கு என்னை நபி (ஸல்) அவர்கள் நியமித்தார்கள் அவைகளின் மாமிசம் தோல் ஆகியவற்றை தர்மமாகவே கொடுக்க வேண்டும் என்றும் அவற்றில் எதையும் அறுப்பவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது என்றும் கூறினார்கள் என அலி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.ஆதாரம்:- புகாரி,


ஹஜ் மாதம் பிறந்ததும் உழ்ஹிய்யா கொடுக்க நாடியவர் தன்னுடைய முடி மற்றும் நகத்திலிருந்து எதையும் அகற்றக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.ஆதாரம்:- முஸ்லிம்

குறிப்பு:- இத்தடை உழ்ஹிய்யா கொடுப்பவருக்கு மாத்திரம்தான் அவரின் குடும்பத்தினருக்கு அல்ல.


நன்றி; இப்ராஹீம் மதனி மற்றும் மவ்லவி இஸ்மாயில் ஸலபி ஆகியோரின் ஆக்கங்களில் இருந்து தொகுக்கப்பட்டது.

வெள்ளி, 28 அக்டோபர், 2011

என்ன சொல்லப்போகிறார் மருத்துவர்..?

ந்த தேர்தலாக இருந்தாலும், என்னதான் தேர்தல் கமிஷன் கெடுபிடி காட்டினாலும் அரசியல் கட்சிகளின் 'கொடுபிடி'களை மட்டும் பெரும்பாலும் தடுக்க முடிவதில்லை. இப்படி வாக்களர்களுக்கு கையூட்டு கொடுத்து ஒட்டு வாங்குவதி ஆளுங்கட்சி- எதிர்கட்சி, பெரிய கட்சி, சிறிய கட்சி என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. அவரவர் சக்திக்குட்பட்டு பணமாகவோ, பொருளாகவோ நேரடியாகவோ மறைமுகமாகவோ வாக்களர்களுக்கு திணிப்பதில் அதீத கவனம் செலுத்துகின்றனர். அதையும் தாண்டி தேர்தலில் தோற்ற கட்சிகள், ''அதிகாரபலம் படைபலம் பணபலம் ஜெயித்து விட்டது.'' என்ற ஸ்லோகத்தை மறக்காமல் சொல்லிவிட்டு தங்களின் தோல்வியை மறைத்து விடுவர். அதே போல, ''நாங்கள் எந்த அணியில் இருக்கிறோமோ அதுதான் வெற்றி அணி.'' என்று ஒரு மாயை உருவாக்கி தேர்தலுக்குத் தேர்தல் அணிமாறி அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக தன்னை வளர்த்துக் கொண்ட கட்சி பாமக., இனி எந்த திராவிடக் கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்று அறிவித்து இந்த உள்ளாட்சியில் தனி ஆவர்த்தனம் கண்டார் பாமக நிறுவனர் ராமதாஸ். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்பதை விட, சுமாரான வெற்றியை மட்டுமே ஈட்டியது. உடனே மருத்துவர் ராமதாஸ், ''திராவிட கட்சிகளின் பண பலம், அதிகார பலம் இவற்றையெல்லாம் தாண்டி பா.ம.க. பெற்றுள்ள இந்த வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது.'' என்று அறிக்கை வெளியிட்டார். அதாவது இவரது கட்சியை சேர்ந்தவர்கள் வாக்களர்களுக்கு பணமே கொடுக்கவில்லை என்ற ரீதியில் இவரது அறிக்கை சொல்கிறது. இவரது அறிக்கை வெளியான சூடு அடங்குவதற்குல்ளாகவே அவரது கட்சியை சேர்ந்த ஒருவர் வாக்களர்களுக்கு சேலை கொடுத்த செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர சபைக்கு உட்பட்ட 28 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பா.ம.க. சார்பில் லதாராசாத்தி போட்டியிட்டார். இவர் தன்னை தேர்தலில் வெற்றிபெற செய்யுங்கள் என்று கூறி அந்த வார்டுக்கு உட்பட்ட வாக்காளருக்கு அன்பளிப்பாக புடவை வழங்கி உள்ளார். ஆனால் நேற்று வெளியான தேர்தல் முடிவில் வார்டில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முகமதுஜியாஉதீன் வெற்றி பெற்றார். லதாராசாத்தி தோல்வியை சந்தித்ததை அடுத்து, அவர் வாக்காளர்களை சந்தித்து நீங்கள் எனக்கு வாக்களிக்கவில்லையே பிறகு எதற்கு நான் வழங்கிய புடவையினை ஏன் வைத்துள்ளீர்கள் என்று கூறி அதனை திருப்பி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஒன்றுதிரண்டு மின்நகரில் உள்ள லதாராசாத்தி வீட்டின் முன்பு கையில் புடவையுடன் திரண்டனர். அந்நேரத்தில் வேட்பாளர் லதாராசாத்தி அங்கு இல்லாத காரணத்தினால், நாங்கள் அவரை சந்தித்து புடவையினை கொடுத்துவிட்டு தான் செல்வோம் என்று கூறினார்கள்.'' என்று செய்திகள் கூறுகின்றன.
 
பணபலம்-படைபலம்- அதிகார பலத்தால் வெற்றியின் சதவிகிதத்தை  சற்று உயர்த்த வாய்ப்புண்டே தவிர, இதைக்கொண்டு முழுமையான வெற்றியை அடைந்துவிட முடியாது என்பதையும், மேலும் வெற்றி பெறுவதற்காக வாக்களர்களை 'கவனிக்கும்' வேட்பாளர்களில் தனது கட்சி வேட்பாளர்களும் விதிவிலக்கல்ல என்பதையும் மருத்துவர் புரிந்து கொள்ளட்டும்.
 

கல்வி அமைச்சரின் தலைக்கு விலை; அரங்கேறும் அரசியல் கூத்து.

ரு திரைப்படத்தில் இப்படி ஒரு வசனம்; கல்வி அமைச்சரை நோக்கி கதாநாயகன் கேட்பார். ''நீங்க கல்வி அமைச்சரா இருக்கீங்களே! என்ன படிச்சிருக்கீங்க என்று. அய்ய! நான் மழைக்குக் கூட இஸ்கூலு பக்கம் ஒதுங்குனதில்லீங்கோ' என்று அந்த கல்வி அமைச்சர் சொல்வார். அதைப் போலத்தான் இன்றைக்கு தான் பதவி வகிக்கும் துறைக்கும் தனக்கும் சம்மந்தமில்லாத நிலையில்தான பெரும்பாலான அமைச்சர்கள் நிலை உள்ளது. இதே போல இந்த பாண்டிச்சேரி அமைச்சரும் இருந்து விட்டு போயிருக்கலாம். ஆனால் அவருக்கு எப்படியும் நான் 'SSLC' முடித்தவன் என்ற பெருமை வேண்டும் என நினைத்தாரோ என்னவோ, பெயிலான பாடங்களை எழுத முடிவு செய்தார். அரசியல்வாதிகள் சொத்து வாங்கும் போது மட்டும் தான் 'பினாமி' வச்சுக்கணுமா? இதோ நான் பரிட்சைக்கே பினாமி வைக்கிறேன்னு தனக்குப் பதிலாக ஆள் வைத்து 10 ஆம் வகுப்புத் தேர்வு எழுதியதினார். இதையொட்டி  எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தமிழக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அமைச்சர் கல்யாணசுந்தரம் நேரில் ஆஜராக புதுச்சேரி சபாநாயகரிடம் சம்மன் அளித்தனர்.

சபாநாயகரிடம் அளிக்கப் பட்ட சம்மன், "அமைச்சர் கல்யாணசுந்தரம் வீட்டில் இல்லை" என திரும்ப வந்த நிலையில் அவரது வீட்டிற்குத் தமிழக காவல்துறையினர் இரண்டாவது சம்மனை அனுப்பினர். கல்யாண சுந்தரம் இல்லை என இரண்டாவது சம்மனும் திரும்பியது. இந்நிலையில் புதுச்சேரி இளைஞர் காங்கிரசார், "அமைச்சரைக் காணவில்லை; கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு ரூ 1000 சன்மானம் வழங்கப்படும்" என புதுச்சேரி முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். மற்றொரு புறம்,  புதுச்சேரி மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. ஒரு படி மேலே போய், 
''ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் தேடப்பட்டுவரும் புதுச்சேரி கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு யாராக இருந்தாலும் ரூ 50 ஆயிரம் பரிசு வழங்கப்படும்.'' என்று அறிவித்துள்ளார்.
 
அமைச்சர் ஊழல் செய்துள்ளார். அதை கண்டுபிடித்து ஊழல் செய்த பணத்தை பறிமுதல் செய்யவேண்டும் என்ற சர்ச்சை எழுவது இயற்கை. ஆனால் அமைச்சரையே காணவில்லை என்பது விசித்திரமானது தானே?  இதற்கிடையில் கடந்த 24 ஆம் தேதி அவர் சட்டசபை அலுவலகத்துக்கு வந்தார். வழக்கம்போல அலுவல்களை கவனித்தார். பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் அவரை சந்தித்து விட்டு சென்றனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இனிமேலாவது அவருக்கு சம்மன் வழங்கலாம்தானே!

வியாழன், 27 அக்டோபர், 2011

மண்ணடியில் நடந்த 'பாபர் மஸ்ஜித் மீட்பு ரதயாத்திரை' விளக்க பொதுக்கூட்டம்!

இப்போது விற்பனையில் பரபரப்பான செய்திகளுடன்...

 

சங்கராச்சாரியின் வன்முறைப் புத்தி.

 
நன்றி;விடுதலை.

பழைய கணக்கடா பேராண்டி!

 
நன்றி;விடுதலை.

புதன், 26 அக்டோபர், 2011

கடாஃபியின் வீழ்ச்சி; மக்களின் எழுச்சியா? அமெரிக்காவின் சூழ்ச்சியா?

லிபியாவை 42 ஆண்டு காலம் ஆட்சி செய்த கடாபி, தன் சொந்த மண்ணில் கடந்த 20ம் ,தேதி கிளர்ச்சியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த நாட்டின் ஆட்சியை, 1969ம் ஆண்டு ராணுவ கேப்டனாக இருந்த கடாபி, புரட்சி மூலம் கைப்பற்றினார். கடந்த 42 ஆண்டு காலம் ஆட்சி செய்தார். துனிசியாவில் ஏற்பட்ட மக்கள் புரட்சியை காட்டி, கடாபியை பதவியை விட்டு நீக்கிட முயற்சி செய்த ஒரு கூட்டம் மக்கள் கிளர்ச்சிக்கு வித்திட்டது. கிளர்ச்சியாளர்கள் மீது கடாபி படையினர் தாக்குதல் நடத்தினர். இதில், நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். சமயம் பார்த்து காத்திருந்த உலக சட்டாம்பிள்ளையான அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும் கூடிய 'நேட்டோ' எனும் நாச நாட்டுப் படைகள் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக லிபியா ராணுவத்தினர் மீது தாக்குதல் தொடுக்க சற்றே பின் வாங்கியது கடாபியின் ராணுவம். கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத உதவி வழங்கியதோடு, வான்வெளி தாக்குதலையும் லிபியாவில் மேற்கொண்டது நேட்டோ.

அதோடு, "கடாபி சரணடைய வேண்டும்' என, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வற்புறுத்தின. ஆனால், இதை கடாபி மறுத்து விட்டார். நெதர்லாந்தில் உள்ள சர்வதேச கோர்ட், கடாபியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் லிபிய அதிபர் மும்மர் கடாபி, அவரது மகன் சைப் அல் இஸ்லாம், உளவுத்துறைத் தலைவர் அப்துல்லா அல் சனுசி ஆகியோருக்கு கைது வாரண்ட்டை பிறப்பித்தது. ''சரணடைய மாட்டேன்; நேட்டோவுக்கு அஞ்சமாட்டேன்; வேறு நாட்டிற்கு ஓடவும் மாட்டேன்; வெற்றி அல்லது  வீரமரணம் என்பதே எனது இலக்கு என்று கர்ஜித்தார் கடாபி.

இந்நிலையில் நேட்டோ ஆதரவுடன் கிளர்ச்சிப் படைகளின் கை ஓங்கியதில், சமீபத்தில் தலைநகர் திரிபோலி கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்ததால்,  ஆட்சியை இழந்த நிலையில், கடாபி தலைமறைவானார். கடாபியின் சொந்த ஊரான சிர்தியில் கடாபி மறைந்திருக்கலாம் எனக் கருதிய   கிளர்ச்சியாளர்கள் கடந்த ஒரு வாரமாக தாக்குதல் நடத்தி வந்தனர். இந்நிலையில் இங்கு நடந்த கடும் சண்டையில், கடாபியின் அமைச்சரவையில் ராணுவ அமைச்சராக இருந்த அபுபக்கர் யூனுஸ் பலியானார். கடாபியின் மகன் ஒருவரும் பலியாகியுள்ளார். இதைத் தொடர்ந்து, பலத்த காயங்களுடன் கடாபி பிடிபட்டார். அவரது இரண்டு கால்களும் பலத்த காயமடைந்திருந்ததாகவும் கிளர்ச்சிப் படையினர் தெரிவித்தனர். இந்த சண்டையில், கடாபியின் உடலில் ஏராளமான குண்டுகள் பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது. பின்பு அவர் மரணமடைந்தார் என்பதை விட காயங்களுடன் பிடிக்கப்பட்ட காடபியை கிளர்ச்சியாளர்கள் தாக்கியும், சுட்டும் கொன்றனர் என்ற தகவல் வலுவானதாக ஊடகங்களில் கூறப்படுகிறது.

 

கொல்லப்பட்டதாக கூறப்படும் கடாபியின் புகைப்படங்கள், வீடியோக்கள் மீடியாக்களில் வலம் வருகிறன. இவைகள் கடாபி கொல்லப்பட்டதை ஊர்ஜிதப்படுத்துவது போல் இருக்கிறது. அமெரிக்க அதிபர் ஒபாமாவும் கடாபியின் மரணத்தை உறுதிப் படுத்தியுள்ளார். மேலும் அமெரிக்காவின் வெளியுறவுச செயலாளர் ஹிலாரி கிளிண்டன் லிபியாவுக்கு சென்று திரும்பிய மறுநாளே கடாபி கொல்லப்பட்டார் என்ற செய்தி சற்று சந்தேகத்தையும் எழுப்புகிறது.

எது எப்படியோ கடாபி கொல்லப்பட்டார். கடாபியின் மரணம் என்பது அவரது சர்வாதிகார ஆட்சியின் மூலம் பாதிக்கபட்ட மக்களின் எழுச்சியின் விளைவு என்று ஊடகங்கள் ஆரூடம் சொல்கின்றன. ஹிட்லர், முசோலினி, போன்றவர்கள் பட்டியலில் கடாபியையும் சேர்த்து அவரை சர்வாதிகாரியாக காட்டுவதில் வெற்றியும் பெற்றுவிட்டன. சர்வாதிகார ஆட்சி நடத்துவதற்கு இது ஹிட்லர் காலம் அல்ல என்பதை மட்டும் ஏனோ ஊடகங்கள் வசதியாக மறைத்து விட்டன. கடாபியின் 42 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சியில் மக்கள் பாதிக்கப்பட்டதாக கடந்த ஆண்டுவரை ஊடகங்களில் எந்த செய்தியும் இல்லையே? இந்த ஆறுமாத காலமாகத் தானே லிபியா ஊடகங்களில் அடிபடுகிறது. அப்படியானால் கடாபி திடீரென சர்வாதியாக மாறிவிட்டாரா? அவரது சர்வாதிகாரத்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தால், கிளர்ச்சிக்கு பின்னால் பிடிவராண்டு பிறப்பிக்கும் சர்வதேச நீதிமன்றம், முன்பே கடாபிக்கு பிடிவாரண்டு பிறப்பிக்காதது ஏன்? மேலும் மனித உரிமை அமைப்புகள் எல்லாம் கடாபியின் நாற்பது ஆண்டுகால சர்வாதிகார செயல்களை கண்டும் காணாமல் இருந்ததா? உலக ஊடகங்கள் பார்வைக்கு நாற்பது ஆண்டுகால சர்வாதிகாரம் தெரியாமல் மறைந்து விட்டதா? அப்படி ஊடகங்களுக்கு தெரியாமல் அடக்குமுறையை அமுக்கி விடமுடியுமா? அப்படியாயின் மக்கள் கிளர்ச்சி என்பது சர்வாதிகாரத்தின் பாதிப்பால் மட்டும் எழுந்ததல்ல. மாறாக வேறு ஏதோ ஒரு பின்னணி உள்ளது என்பது தெரிகிறதல்லவா?

அது என்ன? அரபுலகின் அஞ்சா நெஞ்சன் சதாம்  ஹுசைன் எப்படி அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நெஞ்சுரத்தோடு எதிர்த்தாரோ, அதே போல அமெரிக்காவின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் கடாபி. அமெரிக்காவுக்கு அனுதினமும் ஒத்து ஊதுவதையே தொழிலாக கொண்டிருக்கும் ஐ.நா. பற்றி, ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கடாபி பேசுகையில், 

''ஐ.நா. சபையும் இந்த பாதுகாப்பு கவுன்சிலும் உருவாக்கப்பட்ட பின்னர் 65 போர்கள் நடந்துள்ளன. இதற்கு மேலும் இதுபோல நடக்க கூடாது.பாதுகாப்பு கவுன்சில் என்று கூறுவதை விட தீவிரவாத கவுன்சில் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும்.''என்றார்.

அதோடு, தனது வீட்டோ அதிகாரத்தை வைத்து அமெரிக்க அநியாயம் செய்து வருவதால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ளன நிரந்தர உறுப்பினர்களுக்கு வீட்டோ அதிகாரம் இருக்கக்   கூடாது'' என்றார்.

மேலும் அனைத்து நாடுகளுக்கும் சம உரிமை வேண்டும் என்ற கருத்தில் கடாபி, ஆப்பிரிக்க யூனியன்,லத்தீன் அமெரிக்கா  மற்றும் ஆஸ்திரேலியா  ஆகியவற்றுக்கு சபையில் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும். மேலும் நிரந்தர உறுப்பு நாடுகளை சுழற்சி முறையில் அதாவது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்'' என்றார்.

அதேபோல கொரியா , வியட்நாம் , ஈராக் , ஆப்கானிஸ்தான் போர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முழங்கிய கடாபி, ''பின்லேடன் தலிபான் என்று யார் சொன்னது. பின் லேடன் தலிபான் அல்ல , ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவரும் அல்ல.'' என்று அமெரிக்காவுக்கு செக் வைத்தார்.

இதுபோல வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அமெரிக்காவின் அநியாயங்களை அகிலம் அறியும் வகையில் ஆணித்தரமாக பதிவு செய்தார் கடாபி. இது சதாமுடன் நாடு ரீதியான நமது எதிரிகள் சகாப்தம் ஒழிந்தது என்று கருதிய அமெரிக்காவுக்கு 'கிலி'யை உண்டாக்கியது. அதே நேரத்தில் ஈராக் போன்று நேரடியாக போர் தொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ளவும் அமெரிக்கா விரும்பவில்லை. எனவே பலம் நழுவி பாலில் விழுந்த கதையாக மக்களின் கிளர்ச்சி சிறு பொறியாக கிளம்ப,  அதை ஆயுதப் போராட்டமாக மாற்றி தானும் லிபியாமீது ஆயுத மழை பொழிந்து கடாபியை வீழ்த்தியுள்ளது அமெரிக்கா. எனவே கடாபியின் வீழ்ச்சி என்பது அமெரிக்காவின் சூழ்ச்சி என்பதே உண்மை.

அடுத்து இந்த நேரத்தில் இன்னொன்றையும் இங்கே பதிவு செய்கிறோம். அமைதியாக போராடும் மக்கள் மீது கடாபி ஆயுதப்பிரயோகம் செய்து மக்களை கொன்றார். எனவே மக்களை காக்கவே நேட்டோ களமிறங்கியது என்ற அமெரிக்காவின் கூற்று உண்மையானால், லிபியாவில் கிளர்ச்சி தொடங்கிய அதே காலகட்டத்தில் தான் பஹ்ரைன், சிரியா, ஏமன் ஆகிய நாடுகளிலும் தொடங்கியது. இதில் பஹ்ரைனில் பெரிய அளவு போராட்டக்காரர்கள் பலியாகவில்லை. எனினும், சிரியா-ஏமன் ஆகிய நாடுகளில் இன்றுவரை கிளர்ச்சியாளர்கள் பலியாகி வருகின்றனர். உலக மக்களின் ஆபத் பாந்தவனான அமெரிக்கா, இந்த நாடுகளுக்கு  ஏன் தனது படையை அனுப்பவில்லை? ஒரே காரணம் தான். ஏமனோ-சிரியாவோ கடாபி போன்று அமெரிக்க எதிர்ப்பாளர்கள் அல்ல. எனேவேதான் அங்கே அந்த ஆட்சியாளர்களால் மக்கள் கொல்லப்பட்டாலும் அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை. எனவே லிபியா மக்கள் மீதான கருணையால் அமெரிக்கா லிபியா மீது தாக்குதல் தொடுக்கவில்லை. மாறாக தனது எதிரியை ஒழிக்கவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டது.

அடுத்து கடாபி கொல்லப்பட்டவுடன் ஒபாமா பேசிய செய்தியில், கடாபி அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு எதிரானவராக இருந்தார் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்ல அடுத்து ஒபாமா சொல்லியுள்ளதுதான் மிக முக்கியமான 'பாய்ன்ட்'. அதாவது ''லிபியாவில் ஏற்பட இருக்கும் இடைக்கால அரசாங்கத்துடன் ஒரு பங்குதாரராக அமெரிக்கா இருக்கும்.'' என்கிறார். இது ஒன்றே கடாபி கொல்லப்பட்டதற்கான காரணத்தை அறிந்து கொல்லப் போதுமானதாகும். இராக்கிலும், ஆப்கானிலும் இருந்த தனது எதிரிகளை ஒழித்து, அங்கே தனக்கு தலையாட்டும் ஒரு பொம்மை ஆட்சியை நிறுவியது போன்று, லிபியாவின் கடாபியை ஒழித்து அங்கே ஒரு பொம்மை ஆட்சியை நிறுவுவதுதான் அமெரிக்காவின் நோக்கம் என்பது ஒபாமா வார்த்தை சொல்லும் உண்மையாகும். மேலும் ஒபாமா சொல்கிறார்; ''மேற்கு ஆசியாவில் உள்ள மற்ற சர்வாதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கை'' என்கிறார். ஒபாமாவின் இந்த பேச்சு,அமெரிக்கவை எதிர்க்கும் எவரும் ஆட்சியிலும்-அதிகாரத்திலும் ஏன் உயிரோடு கூட இருக்கமுடியாது என்பதை கடாபியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று மிரட்டும் வகையில் உள்ளது.

அமெரிக்காவின் தொடர் அநீதிகளை கண்டும் காணாமல் இருக்கும் நாடுகள், இனியேனும் கண்விழித்து கண்டிக்க முன் வரவேண்டும். குறிப்பாக அண்டை வீடுகள் பற்றி எறிந்தால்     நமக்கென்ன என்ற ரீதியில் இருக்கும் முஸ்லிம் நாடுகள் முன்வரவேண்டும். தவறினால் நேற்று..சதாம்., இன்று கடாபி., நாளை.?

இறுதியாக லிபிய மக்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். கடாபி உண்மையில் சர்வாதிகாரியாக இருந்து லிபிய மக்கள்  பாதிக்கப் பட்டிருந்தாலும், அந்த பாதிப்பை போக்குவதற்கு லிபிய மக்கள் கொண்ட வழிமுறை நிரந்தர தீர்வளிப்பைவையாக இல்லை.  பெயரில் மட்டும் 'நல்லபாம்பு' என்று உள்ளதால், இதற்கு விஷம் இருக்காது என்று நம்பி நடு வீட்டில் வைத்தால் என்றாவது அது தீண்டாமல் விடாது. அதைப் போல கடாபியை தேளாக கருதிய லிபிய மக்கள், தேளை  ஒழிக்க அமெரிக்கா எனும் நல்ல[?]பாம்பின் உதவியை நாடி விட்டார்கள்.  அது காலைச் சுற்றிய பாம்பு என்பதை கண்முன்னே ஆப்கானிலும்- ஈராக்கிலும் கண்டபின்னும் லிபிய மக்கள் கணிக்கத் தவறிவிட்டார்கள். எது எப்படியோ, இனியாவது லிபியாவில் ரத்தம் சிந்தாமல் இருந்தால் சரிதான்.

நன்றி; சமுதாய மக்கள் ரிப்போர்ட் வார இதழ்.


செவ்வாய், 25 அக்டோபர், 2011

ஆதார் அடையாள அட்டைக்கான பதிவு இன்று முதல் துவக்கம்

சென்னை : "ஆதார் அடையாள அட்டை' பெற, தபால் நிலையம் மூலம் பதிவு செய்யும் பணி, இன்று முதல் துவக்கப்படுகிறது. இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையத்துடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இந்திய தபால் துறை அடையாள அட்டை வழங்குவதற்கான பதிவு செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது. இந்த அடையாள அட்டை மூலம் பல்வேறு பணிகள், பயன்களைப் பெற முடியும். வங்கி கணக்கு துவக்கவும், மருத்துவத்துக்கும், மொபைல்போன் இணைப்பு பெறவும், இந்த ஆதார் அடையாள அட்டை பயனுள்ளதாக இருக்கும்.
அடையாள அட்டை பெற, தபால் நிலையம் மூலம் பதிவு செய்யும் பணியை, தமிழக உள்துறை முதன்மைச் செயலர் ரமேஷ்ராம் மிஸ்ரா, இன்று சென்னையில் துவக்கி வைக்கிறார். தமிழக தபால் வட்டம் துவக்கும் இப்பதிவுப் பணி, சென்னையில் மயிலாப்பூர், தி.நகர் மற்றும் பூங்கா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தலைமை தபால் நிலையங்களுக்கும், நவ., 1ம் தேதி முதல் விரிவுப்படுத்தப்படும்.


மேலும், நவ., 21ம் முதல் தமிழகத்தில் உள்ள 31 மாவட்ட தலைமை தபால் நிலையங்களுக்கும், அடுத்த 30 நாட்களில் 154 முக்கிய தபால் நிலையங்களிலும் விரிவுப்படுத்தப்படவுள்ளது. இந்த ஆதார் அடையாள அட்டையை இலவசமாக, பொதுமக்கள் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். இதுகுறித்து, மேலும் விவரங்களை அறிய, 044-28582798, 0431-241245,0452-2526398,0422-2558204 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, தமிழக வட்ட தலைமை தபால் துறை தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

-நன்றி;தினமலர்

திங்கள், 24 அக்டோபர், 2011

ஐ.என்.டி.ஜே தலைமையகத்தில் ஒரே நாளில் இஸ்லாத்தை ஏற்ற மூவர்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
 
அழைப்பு பணியை தன முழு முதற் பணியாக கொண்டுள்ள இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தன்னுடைய தாஃவா   பணிகளை அல்லாஹ்வின் அருளால் சிறப்பாக செய்து கொண்டுள்ளது.
இதன் பயனாக கடந்த 2 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தலைமையகத்தில் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர்.
 
அந்த வகையில் கடந்த 21/10/2011  வெள்ளிக்கிழமை ஐ.என்.டி.ஜே தலைமையகத்தில் நடந்த ஜுமுஆ தொழுகைக்குப் பிறகு இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் இஸ்லாத்தை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டு இஸ்லாத்தின் கொள்கைப் பிரகடனமான திருக்கலிமாவை மொழிந்தனர்.இஸ்லாத்தின் ஏகத்துவக் கொள்கை விளக்கத்தை அவர்களுக்கு தலைவர் எஸ்.எம்.பாக்கரும், துணைப் பொதுச் செயலாளர் எஸ்.எம்.சையத்  இக்பாலும் சொல்லிக்கொடுத்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
 

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது எப்படி?

போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது பற்றி கூறும் சட்ட ஆலோசகர் சுரேந்திரநாத் ஆர்யா: போலீஸ் நிலையத்தில் நாம் எழுத்து மூலம் புகார் கொடுக்க வேண்டுமானால், புகாரை எழுதும் போது, அதை ஒரு கடித வடிவில், அனுப்புனர், பெறுனர் விலாசங்களைக் குறிப்பிட்டு எழுத வேண்டும். எதற்காகப் புகார் அளிக்கிறோம் என்பதை, முதலில் ஓரிரு வரியில் குறிப்பிட வேண்டும்.அடுத்ததாக, சம்பவத்தின் நேரம், நடந்த இடம், சம்பவத்தினால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய என்ன தீர்வு எதிர்பார்க்கிறோம் என்பதையெல்லாம் தெளிவாக எழுத வேண்டும். சாலை விபத்து, கற்பழிப்பு, திருட்டு போன்ற விஷயங்களுக்கும், இதுபோல் புகார் எழுதலாம்.
 
பொதுவாக ஒரு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர், நேரில் கண்ட சாட்சி, பாதிக்கப்பட்டவரின் உறவினர் அல்லது நண்பர் என்று யார் வேண்டுமானாலும் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கலாம். புகார் அளித்தவுடன், போலீஸ் நிலையத்தில், எப்.ஐ.ஆர்., எனும் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வர்.அடுத்து, புகார் கொடுத்தவருக்கு ஒரு கிரைம் நம்பர் கொடுப்பர். இந்த நம்பரை, நாம் புகார் கொடுத்ததற்கு ஆதாரமாகக் கருதலாம்.
 
இது தவிர, சில சமயங்களில் புகார் கொடுக்கும் போது, சில வகையான ஆதாரங்களை போலீஸ் கேட்க வாய்ப்புள்ளது. உதாரணத்திற்கு, இருசக்கர வாகனம் தொலைந்து போகும் பட்சத்தில், அந்த வாகனத்தின் ஆர்.சி., புத்தகத்தைக் கேட்கலாம். வீட்டில் நகைகள் காணாமல் போனால், சந்தர்ப்ப சூழ்நிலையைப் பொறுத்து, நகைகள் வாங்கிய பில், ரசீது போன்றவற்றைக் கேட்கலாம்.அவசர உதவிக்கு, 100 என்ற தொலைபேசி எண்ணுக்கு, எந்த ஒரு பகுதியிலிருந்தும், பிரச்னைக்காக புகார் தெரிவிக்கலாம். போலீஸ் நிலையங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட எல்லைக் கட்டுப்பாடுகள் உங்களை பாதிக்காது.ரயில்வே பிளாட்பாரம், ரயில் தண்டவாளம் போன்ற இடங்களில் குற்றம் அல்லது பிரச்னை ஏற்பட்டால், அது குறித்து, ரயில்வே போலீசிடம் தான் புகார் தர முடியும்.
 
நன்றி; தினமலர்

வியாழன், 20 அக்டோபர், 2011

உள்ளாட்சித் தேர்தல் முடிவை உடனுக்குடன் அறிந்து கொள்ள....

ள்ளாட்சித் தேர்தல் முடிவை உடனுக்குடன் அறிந்து கொள்ள இங்கே கிளிக்குங்கள்; http://tnsec.tn.nic.in/results/index_result.htm 

அரசின் அலட்சியம்; பலியான அப்பாவி மாணவி!

ருமுன் காப்போம் என்பது அரசின் தாரக மந்திரமாக இருக்கவேண்டும். ஆனால் நம்மை ஆளும் அதிகார வர்க்கத்திற்கோ நாம் சில இழப்புகளை சந்தித்தபின்தான் அவர்களுக்கு சட்டம் போடவேண்டும் என்ற என்னமோ அல்லது இருக்கும் சட்டத்தை அமுல்படுத்தவேண்டும் என்ற என்னமோ, அல்லது பாதுக்கப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற என்னமோ  ஏற்படுவதை நாம் காண்கிறோம்.  ஒரு கல்விக்கூடத்தை நடத்த வேண்டுமெனில், அதற்கென சில விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகளின் படிதான் கல்வி நிலையங்கள் இயங்குகின்றதா என்பதை கடுமையாக கண்காணித்து இருந்தால் சில ஆண்டுகளுக்கு முன் கும்பகோணத்தில் நூற்றிற்கும் மேற்பட்ட குழந்தைகளை தீயின் கோரத்திற்கு பலிகொடுத்திருக்கமாட்டோம். அதே போல, அரசு கல்வி நிலையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதில் அரசு காட்டும் அலட்சியம் அப்பாவிகளின் உயிருக்கு கேடாய் முடிகிறது. அரசு பள்ளிகளின் கட்டங்களின் இஸ்திரத்தன்மை பல இடங்களில் பயமுறுத்தும் வகையில் உள்ளன. பல கல்வியங்களின் அடிப்படை பாதுகாப்பு மற்றும்  சுகாதார விஷயங்கள் பொதுப்பணித் துறையின் மெத்தனப் போக்குகளால் மாணவ- மாணவியரின் உயிருக்கு உலைவைக்கும் சம்பவங்களுக்கு காரணியாக அமைந்து விடுகிறது. அந்தவகையில், பத்திரிக்கையில் வந்த செய்தி நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.  

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் சுமார் 900க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் பி.எஸ்சி முதலாம் ஆண்டு படிக்கும் நிரவி, கீழராஜவீதியை சேர்ந்த நைனா மரைக்காயர் மகள் மெகபூப்நிசா(வயது 18) என்ற மாணவி கல்லூரிக்கு வந்தார். காலை 9.30 மணிக்கு வகுப்புகள் தொடங்கும் என்பதால் அவர் சக மாணவிகளுடன் கல்லூரியின் 2வது மாடியில் உள்ள தனது வகுப்பறைக்கு அருகில் உள்ள வராண்டாவில் நின்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது முதல்நாள் நடைபெற்ற விருந்தின் போது மாணவிகள் சாப்பிட்டு விட்டு கீழே போட்டிருந்த உணவுப்பொருட்களை சாப்பிட குரங்குகள் கூட்டமாக அந்த பகுதிக்கு வந்தன. மாணவிகளை கண்ட குரங்குகள் திடீரென அவர்களை விரட்ட தொடங்கின.இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் அங்கிருந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது கட்டைச்சுவர் அருகே நின்று கொண்டிருந்த மாணவி மெகபூப்நிசா நிலை தடுமாறி 2வது மாடியில் இருந்து தலைகுப்புற கீழே விழுந்தார். மாணவி விழுந்த போது முதல் மாடியில் உள்ள வகுப்பறை ஜன்னல் சன்சேடு அவரது நெற்றியில் குத்திக் கிழித்தது. அவர் தரையில் வந்து விழுந்தபோது இடது கால் முறிந்தது. தோள்பட்டையிலும் படுகாயம் ஏற்பட்டது. அவர் கீழே விழுந்ததில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
இது குறித்து தகவல் அறிந்த மகளிர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவியை மீட்டு ஆம்புலன்சில் அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலன் இன்றி மாணவி மெகபூப்நிஷா பரிதாபமாக இறந்தார்.
 
அப்போது பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள காரைக்காலுக்கு வந்திருந்த அமைச்சர் ராஜவேலு மருத்துவமனைக்கு சென்று மாணவியின் தாயார் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் கல்லூரிக்கு சென்ற அமைச்சர் ராஜவேலு, மாணவி நின்று பேசிக் கொண்டிருந்த இடம், தவறி விழ காரணமாக இருந்த கட்டைச் சுவர், கீழே விழுந்த இடம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
தொடர்ந்து கல்லூரி முதல்வர் அறைக்குச் சென்ற அமைச்சர் கல்லூரி முதல்வரிடம் சுவற்றின் உயரத்தை அதிகப்படுத்தி, இரும்பு ஜன்னலை வைக்க வேண்டியதுதானே? என்று கேட்டார். அதற்கு கல்லூரி முதல்வர் இது குறித்து பொதுப்பணித்துறைக்கு பல முறை கடிதம் எழுதி விட்டோம். எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை என்று கூறினார். இதைக்கேட்ட அமைச்சர் அங்கிருந்த பொதுப்பணித்துறை செயற்பொறியாளரிடம், உடனடியாக கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டைச்சுவர்களின் உயரத்தை அதிகப்படுத்தி, இரும்பு ஜன்னல்களை பொருத்த உத்தரவிட்டார்'' என்கிறது அந்த செய்தி.
 
இந்த சம்பவத்தில், சுவற்றின் உயரத்தை உயர்த்திடக் கோரி கல்லூரி நிர்வாகம் பலமுறை பொதுப்பணித் துறைக்கு வேண்டுகோள் விடுத்தபோதும், பொதுப்பணித் துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டியுள்ளனர். அதன் காரணமாகவே ஒரு அப்பாவி மாணவியின் உயிர் பறிபோயுள்ளது. இந்த சம்பவத்திற்கு பின் அந்த சுவற்றை உயர்த்த அதிரடியாக உத்தரவிட்ட அமைச்சரின் செயல் பாராட்டுக்குரியது எனபதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இவ்வளவு நாளாக இந்த் விஷயத்தை கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை? மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் உள்ளிட்ட அடுக்கடுக்ககன சலுகைகள் பெறும் அரசு அதிகாரிகள் அவர் தம் கடமையை செய்யத்தவறினால் அவர்களை கடுமையாக தண்டிக்க அரசு முன்வரவேண்டும். அப்போதுதான் தவறு செய்யும் அதிகார வர்க்கம் திருந்தும். அரசு நடவடிக்கை எடுக்குமா?

மருத்துவருக்கு இப்போதைக்கு தேவை வேகம் அல்ல விவேகம் தான்!

டந்த பாராளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் தான் வெற்றி பெற்றதாகவும்  அதிகாரிகளின் கடைசி நேர உள்ளடிகளால்
ப. சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவித்து விட்டர்கள் என்று ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தேர்தல் பணியில் சில கருப்பு ஆடுகள் இருக்கலாம் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் தேர்தலை நியாயமாக நடத்திடத் தான் தேர்தல் ஆணையம் உள்ளது. தேர்தலில் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டார்கள் என்று ஆதாரப்பூர்வமாக அறியவந்தால் அவர்களை சட்டரீதியாக எதிர்கொள்ள  ஒவ்வொரு அரசியல்கட்சிக்கும் உரிமையுண்டு. ஆனால் பாமக நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் இது குறித்து கூறியுள்ள வார்த்தைகள் அவரது 'பழைய' நடவடிக்கைகளை பிரதிபலிப்பதாக உள்ளது. தேர்தல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராமதாஸ்,
 
''உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில், 50, 100 ஓட்டு வித்தியாசம் இருக்கும் பகுதிகளில், அ.தி.மு.க., வெற்றி பெற்றதாக அதிகாரிகள் அறிவிக்க அறிவுரை வழங்கியதாகக் கூறுகின்றனர். அதிகாரிகள் அப்படி அறிவித்தால், அவர்கள் வெளியில் நடமாட முடியாது. அந்த அதிகாரிகள் வீட்டின் முன், என்ன நடக்கும் எனத் தெரியாது. வீட்டில் இருந்து ஒருவர் கூட வெளியில் வர முடியாது என எச்சரிக்கிறேன். தமிழகத்தில் புரட்சி நடக்கும். கலகம் நடக்கும் என்று பேசியுள்ளார். 
 
தேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகளை வீட்டை விட்டு வெளியேவர முடியாது என மிரட்டுவதும், புரட்சி வெடிக்கும்; கலகம் நடக்கும் என்றெல்லாம் மிரட்டுவது ஒரு கட்சித்தலைவருக்கு அழகல்ல. இதுபோன்ற வார்த்தைகளை சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் தான் பயன்படுத்துவார்கள். மருத்துவரும் அத்தகைய வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்துவது சமூகத்தில் அவருக்கு உள்ள மதிப்பை குறைக்கவே செய்யும். மருத்துவருக்கு இப்போதைக்கு தேவை வேகம் அல்ல விவேகம் தான் என்பதை புரிந்து கொண்டால் சரி.

'சிறை'யூரப்பாவாக மாறிய எடியூரப்பா.

ரு இமாலய தவறை தாங்களே செய்துகொண்டு அதற்கு எதிராக போராடுவது போல் மக்கள் முன்பாக நாடகம் ஆடுவதில் கைதேர்ந்தவர்கள்  சங்பரிவாரங்கள். சவபெட்டி ஊழல் வரை சளைக்காமல் செய்த கட்சி பாரதீயஜனதா என்பது சாமான்யனுக்கும் தெரியும். ஆனால் அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானியோ, ஊழல் எதிர்ப்பு மற்றும் கருப்புப் பண மீட்பு என்று ரதயாத்திரை தொடங்கி நாட்டை வலம்வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பாஜகவின் முன்னாள் முதல்வரான எடியூரப்பா ஊழல் வழக்கில் 'உள்ளே' போய் விட்டார் என்பதுதான் பரபரப்பு செய்தியாகும்.
 
சுரங்க ஊழல் காரணமாக கர்நாடக அரசுக்கு ரூபாய் 15 ஆயிரத்து 85 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், முதலமைச்சர் எடியூரப்பாவின் குடும்ப அறக் கட்டளைக்கு முறைகேடாக ரூ.30 கோடி வழங்கப்பட்டதாகவும் லோக் அயுக்தா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊழல் ஒழிப்பு சட்டத்தின் கீழ் எடியூரப்பாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அறிக்கையில் சிபாரிசு செய்யப்பட்டு இருக்கிறது.
 
இதுபோக,   இவரது ஆட்சி காலத்தில் அரசு நிலத்தை தனது மகன்கள் நடத்தும் கம்பெனிக்கு குறைந்த விலைக்கு தாரை வார்த்ததாக ( அரசுக்கு 40 கோடி இழப்பு ) லோக்அயுக்தா சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது . சிராஜின் பாட்சா, பால்ராஜ் என்பவர் இந்த புகாரை தெரிவித்திருந்தார்.  இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என எடியூரப்பா முன் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை கோர்ட் நிராகரித்து விட்டது. மற்றும் மாஜி அமைச்சர் கிருஷ்ணய்யா ரெட்டி ஜாமினும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து வாரன்ட் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதனால் எடியூரப்பா கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர் கோர்ட்டில் சரண் அடைந்தார். இவரை வரும் 22 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
 
பாஜக ஆளும் மாநிலங்கள் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளன என்று பாஜக தலைவர்கள் அவ்வப்போது முழங்குவர். ஊழல் விவகாரத்தில் பதவியை இழந்து சிறையையும் சந்தித்துள்ள எடியூரப்பா போன்றவர்கள் தான் முன்மாதிரி என்றால் இதை விட இந்தநாட்டிற்கு வேறு கேவலம் உண்டா? இந்த லட்சணத்துல ஊழல் ஒழிப்பு ரதயாத்திரை வேறு அத்வானி நடத்துகிறார். முடியுமானால் எடியூரப்பாவின் படத்தையும் அத்வானி ரதத்தில் வைத்துக் கொள்ளட்டும். மக்கள் இவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

ஜெயலலிதாவை குறை சொல்ல ஸ்டாலினுக்கு தகுதியுண்டா?

டந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதி அ.தி. மு.க. வேட்பாளராக மரியம் பிச்சை போட்டியிட்டு வெற்றி பெற்று சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஆனார். அமைச்சராக பதவியேற்ற  அவர், எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்பதற்கு முன்பே கார் விபத்தில் மரணம் அடைந்தார். இதனால் அந்த தொகுதிக்கு கடந்த 13-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது.   இந்த தொகுதியில் முஸ்லிம் ஒருவருக்கே வாய்ப்பளிக்கப்படும் என்ற நம்பிக்கை இருந்த நிலையில், அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. மு.பரஞ்ஜோதி அறிவிக்கப்பட்டார். இது தமிழக முஸ்லிம்கள் மத்தியில் ஜெயலலிதா மீது அதிருப்தியை ஏற்படுத்தியது என்பது உண்மை. ஆனால் முதல்வர் ஜெயலலிதாவின் இந்த முஸ்லிம் விரோத போக்கை எதிர்கட்சியான திமுக தனக்கு சாதகமாக பயன்படுத்தும் வகையில் ஒரு நாடகம் ஆடியது. இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய திமுக பொருளாளர் ஸ்டாலின், ''ஒரு காலத்தில் எனது ஆருயிர் நண்பர் அன்பில் பொய்யாமொழி இந்தத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, அகால மரணம் அடைந்ததன் காரணமாக இடைத் தேர்தல் வந்தது. அப்போது வேட்பாளராக பொய்யாமொழியின் சகோதரர் பெரியசாமியை தலைவர் நிறுத்தினார். அது போல் இப்போது ஜெயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்? இறந்துபோனவரின் குடும்பத்தில் இருந்து ஒருவரை வேட்பாளராக நிறுத்தி இருக்க வேண்டும். அல்லது, சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்தி இருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், நமது தலைவர் அவர்கள் வேட்பாளரை நிறுத்தி இருக்க மாட்டார். அதுதான் தலைவரின் மாண்பு. ஆனால், ஜெயலலிதா இந்தத் தொகுதிக்கே சம்பந்தம் இல்லாத ஒருவரை நிறுத்தி இருக்கிறார்'' என்று பேசியுள்ளார்.
 
ஸ்டாலினின் பேச்சு மேலோட்டமாக பார்த்தால் சரிதானே என என்னத்தோன்றும். ஆனால் இதை சொல்லும் தகுதி ஸ்டாலினுக்கு உண்டா என்பதுதான் கவனிக்க வேண்டிய விசயமாகும். ஏனெனில் இந்த தேர்தலில் திமுகவிற்கு முன்பாகவே வேட்பாளரை அறிவித்து விட்டார் ஜெயலலிதா. ஸ்டாலினுக்கோ அவரது தந்தைக்கோ உண்மையில் முஸ்லிம்கள் மீது பற்று இருந்திருக்குமானால், ஜெயலலிதா செய்யத்தவறியதை செய்துவிட்டு, அதாவது திமுக சார்பாக முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தி விட்டு ஜெயலலிதாவை விமர்சித்தால் அதில் அர்த்தமிருக்கும்.  ஆனால் அவ்வாறு செய்யாமல் வழக்கம்போல நேருவை நிறுத்தி விட்டு, முஸ்லிம்கள் விசயத்தில் ஜெயலலிதாவை மட்டும் விமர்சிப்பது ஊருக்கு மட்டும் உபதேசம் செய்வது போல் உள்ளதை ஸ்டாலின் உணரவில்லையா? இதில் வேடிக்கை என்னவென்றால் ஸ்டாலினை போல சிந்தித்த ஒரு இயக்கம் முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தாத ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்டப் போகிறோம்[!] என்று ஓடிப்போய் நேருவுக்கு அதரவு என்று சொல்லி ஒட்டிக் கொண்டது தனிக்கதை. இவர்களின் அரசியல் ஆட்டத்திற்கு முஸ்லிம்களின் தலையை  உருட்டுவதுதான் வேதனைக்குரியது.

புதன், 19 அக்டோபர், 2011

இறைமறை வழங்கும் விழாவாக மாறிய இருமணம் இணையும் நிகழ்ச்சி!


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
ல்லாஹ்வின் பேரருளால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலச் செயலாளர் சகோதரர் சாதிக் அவர்களின் திருமணம் 16 -10 -2011 ஞாயிறன்று அவரது சொந்த ஊரான கூனிமேட்டில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி வெறுமனே திருமண மேடையாக மாறிவிடாமல் இறைமறை வேதத்தை மக்களிடம்   சேர்ப்பிக்கும் நிகழ்ச்சியாகவும், அதில் ஒருபகுதியாக தனது திருமண நிகழ்வையும் அமைத்திட விரும்பிய சகோதரர் சாதிக், அவ்வாறே அல்லாஹ்வின் அருளாளால் நடத்தி முடித்துள்ளார் அல்ஹம்துலில்லாஹ். அந்த நிகழ்ச்சியிலிருந்து சில காட்சிகள்;

இப்போது விற்பனையில் இந்த வார சமுதாய மக்கள் ரிப்போர்ட்!

செவ்வாய், 18 அக்டோபர், 2011

கவுன்சிலர் தேர்தலை புறக்கணித்த முஸ்லிம் சமூகத்தினர்

கோவை, அக்.17: தங்களுக்கு பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டதாகக் கூறி கோவை மாநகராட்சியின் 87 மற்றும் 95-வது வார்டு கவுன்சிலர் தேர்தலை முஸ்லிம் சமூகத்தினர் புறக்கணித்தனர்.

கோவை மாநகராட்சி எல்லை விரிவாக்கத்தில் குறிச்சி மற்றும் குனியமுத்தூர் 3-ம் நிலை நகராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. குறிச்சி நகராட்சியில் 1,2,6-வது வார்டுகள் மாநகராட்சியின் 95-வது வார்டாகவும், குனியமுத்தூர் நகராட்சியின் 1,2 மற்றும் 21 வார்டுகள் மாநகராட்சியின் 87-வது வார்டாகவும் மாற்றப்பட்டுள்ளன. இவ்விரு வார்டுகளும் தாழ்த்தப்பட்ட மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த இரு வார்டுகளையும் பொது வார்டாக மாற்ற வேண்டும் எனக் கோரி தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் கோரி வந்தன.

கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் மற்றும் அனைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவுன்சிலர் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டது.

95-வது வார்டில் அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களும், 4 சுயேச்சைகளும் வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.

வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து இப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. 95-வது வார்டுக்கு உள்பட்ட குறிச்சிப்பிரிவு நொய்யல்பாலம் நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் ஏராளமான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர்.

காலை 9 மணி நிலவரப்படி இப் பள்ளியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் (1035) மேயர் பதவிக்கு 140 பேர் வாக்களித்தனர். ஆனால் கவுன்சிலர்களுக்கு 7 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். 133 பேர் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று பதிவேட்டில் கையெழுத்திட்டிருந்தனர்.

இதே பள்ளியில் மற்றொரு வாக்குச் சாவடியில் 130 பேர் மேயருக்கு வாக்களித்தனர். கவுன்சிலர்களுக்கு 20 பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர். எஞ்சிய 110 பேர் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை பதிவு செய்தனர்.

87-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக, திமுக, மார்க்சிஸ்ட், காங்கிரஸ் மற்றும் இரு சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். இந்த வார்டுக்கு உட்பட்ட குனியமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடிகளில் காலை 9 மணி நிலவரப்படி சராசரியாக 8 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

கவுன்சிலர் தேர்தல் புறக்கணிப்பு குறித்து மனிதநேய மக்கள் கட்சி மாநிலச் செயலர் ஜி. உமர், தமுமுக மாவட்ட செயலர் எச்.அமீது ஆகியோர் கூறியது:

தாழ்த்தப்பட்டோர் வார்டுகள் உருவாக்கப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், குறிச்சி நகராட்சியில் இருந்து சேர்க்கப்பட்டுள்ள 2 வார்டுகளில் ஏற்கெனவே முஸ்லிம் சமூகத்தினர் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.

மூன்றாவதாக ஒரு வார்டை சேர்த்து தனி வார்டாக மாற்றியுள்ளனர். முஸ்லிம் சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் வரக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த மாற்றம் செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்றனர்.
 
நன்றி; தினமணி 18 Oct 2011

தென்சென்னையில் தெருக்கள் தோறும் பிரச்சாரம்!

 

எழுச்சியுடன் நடைபெற்ற பெண்களுக்கான நிகழ்ச்சி.

 

ஜாமீனில் வெளியான நீதியின் குரல்.

செய்தி நன்றி; தினத்தந்தி.

வெள்ளி, 14 அக்டோபர், 2011

'நச்'சுன்னு ஒரு கேள்வி!

முதல்வர் ஜெயலலிதா; ''அடுத்தவர் சொத்தை அபகரிப்பது கருணாநிதிக்கு கைவந்த கலை. சென்னையில் தி.மு.க.,வின் அண்ணா அறிவாலய நிலம் அபகரிக்கப்பட்டுள்ளதாக, நான் திருச்சி தேர்தல் பிரசாரத்தில் பேசினேன். அதற்கு பதிலளித்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, அது மொத்தமே 25 கிரவுண்ட் நிலத்தில் தான் இருப்பதாக பொய் கூறியுள்ளார்.

உண்மையில், அது 4.5 ஏக்கர் அதாவது 90 கிரவுண்ட் நிலத்தில் இருக்கிறது. அப்படியென்றால், 25 கிரவுண்ட் போக மீத நிலத்தை அரசிடம் திருப்பித்தர கருணாநிதி தயாரா?

காவலரை மிரட்டும் காவி சு.சாமி


முஸ்லிம்களுக்கு எதிரான மததுவேஷ கருத்துக்களை உதிர்த்த அரசியல் கோமாளியும், காவி சிந்தனையாளருமான ஜனதா தள கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி
மீது கடந்தவாரம் மதஉணர்வுகளை தூண்டக்கூடிய செய்திகளை வெளியிட்டதற்காக டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
 
வழக்கமாக அடுத்தவர் மீது உப்புச் சப்பில்லாத வழக்குகளை தொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி, ''நல்ல பாத்துக்கங்க; அரசியலில் நானும் இருக்கேன்''' என காமெடி செய்துவரும் இந்த சு. சாமிக்கு தன் மீதே வழக்கு போடப்பட்டதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் மீது வழக்கு பதிவு செய்த டில்லி போலீசாரை மிரட்டும் வகையில், ''என் மீது டில்லி போலீசார் போட்ட வழக்கின் நகலி என்னிடம் இன்னும்  தரவில்லை.நகல் கிடைக்காவிட்டால் கோர்ட்டில் வழக்கு தொடர்வேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.
 
சு.சாமியின் இந்த மிரட்டலை, போலீசைத் தானே மிரட்டியுள்ளார் என்று சட்டம் சும்மா இருக்குமானால், நாளை இவர் நீதிமன்றத்தையும் மிரட்டினாலும் ஆச்சர்யமில்லை. எனவே இவர் போன்ற மததுவேஷ புல்லுருவிகள் மீது  சட்டம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.


அரசியலில் தடம்பதிக்கும் அன்னா ஹசாரே!

 "லோக்பால் விசாரணை வரம்பிற்குள் பிரதமரையும் கொண்டு வர உதவும், தங்களது ஜன் லோக்பால் மசோதாவை மத்திய அரசு ஏற்க வேண்டும்' என, வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தார் அன்னாஹசாரே. இவரது உண்ணாவிரத போராட்டத்தின் பின்னணியில் சங்பரிவார சக்திகளின் உந்துதல் உள்ளது என மத்திய அமைச்சர் திக்விஜய்சிங் போன்றவர்கள் மட்டுமன்றி நடுநிலையான அரசியல் பார்வையாளர்களும் விமர்சித்தனர். அதை உண்மைப்படுத்தும் வகையில், ஹசாரேயின் உண்ணாவிரத மேடை காவிகளால் நிரம்பியிருந்தது. அதுமட்டுமன்றி, இவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் தள்ளப்பட்டவுடன்  அங்கு ஓடோடி சென்று ஆதரவளித்தவர்களும் ராம்தேவ்- ரவிசங்கர் போன்ற காவிகள் தான். மேலும் ஹசாரேயின் உண்ணாவிரத  போராட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ். முழு ஒத்துழைப்பு வழங்கியது என்ற உண்மையும்  வெளியாகியுள்ளது. ''சமீபத்தில் ஊழலுக்கு எதிராக நடந்த போராட்டங்கள் மற்றும் இயக்கங்களில் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் அதிக அளவில் பங்கேற்றனர். சமூகத்தின் மீது கொண்ட அக்கறை காரணமாக அவர்கள் இத்தகைய போராட்டங்களில் கலந்து கொண்டனர்'' என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகாவத் கூறியுள்ளார். இவையெல்லாம் ஹசாரே-சங்பரிவார் உறவை உண்மைப்பைடுத்துவதாகும்.

இது ஒருபுறமிருக்க, ஹசாரே ஊழலை ஒழிக்க வந்த இரண்டாம் மகாத்மா என கருதிய பெரும்பான்மை மக்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு இவரை ஆதரித்தனர். ஆனால் ஹசாரே அதை மறந்து இன்று அரசியல்வாதியாகவும் அவதாரம் எடுத்து விட்டார். சமீபத்தில், "ஜன் லோக்பால் மசோதாவை கொண்டு வர மத்திய அரசு தவறினால், ஹிசார் லோக்சபா இடைத்தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு நடக்கும் ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரசை தோற்கடியுங்கள்' என, வாக்காளர்களிடம் பிரசாரம் செய்வேன்' என, தெரிவித்தார்.

இதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அவரின் பிரசாரம் துவங்க உள்ளது. அரியானா மாநிலம் ஹிசார் லோக்சபா தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தொகுதிக்கு இன்று செல்லும் ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், கிரண் பேடி, மனிஷ் சிசோடியா, கோபால் ராய் நவீன் ஜிண்டால் ஆகியோர், வரும் 10ம் தேதி வரை அங்கு தங்கியிருக்கின்றனர். அப்போது, காங்கிரசுக்கு எதிராக பிரசாரமும் செய்கின்றனர். அத்துடன், "ஊழல் அரசாங்கம்' என்ற தலைப்பில், ஹசாரே பேசிய வீடியோவும் ஆங்காங்கே திரையிடப்படுகிறது.

அதில், "ஜன் லோக்பால் மசோதாவை கொண்டு வர தவறிவிட்ட காங்கிரசுக்கு ஓட்டு போடாதீர்கள்' என, பொதுமக்களை ஹசாரே கேட்டுக் கொள்ளும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ்க்கு எதிரான சிந்தனையை விதைத்து, எதிர்கட்சியான பாஜகவின் வெற்றிக்கு ஹசாரே வலுவான அடித்தளம் அமைத்து தனது செஞ்சோற்றுக் கடனை நிறைவேற்றுகிறார். இதன் மூலம் ஹசாரே அரசியலிலும் தடம் பதிக்கிறார்.

இதற்கிடையில்  எதிர்பாராத விதமாக இந்துத்துவாவின் மற்றொரு அங்கமான சிவசேனைத் தலைவர் பால்தாக்கரே ஹசாரேயின் ஊழல் ஒழிப்பு போராட்டங்கள் வேடிக்கையானவை என்று விமர்சித்துள்ளார்.   "ஊழலுக்கு எதிராக ஹசாரே போராட்டம் நடத்துவது வேடிக்கையானது. இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க முடியாது. ஏனென்றால், பெரிய மீன்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளன. இந்த மீன்களைப் பிடிக்க அன்னா ஹசாரே வலை வீசினால், வலை தான் கிழியும். பெரிய மீன்கள் தப்பி ஓடி விடும்' என பால்தாக்கரே கூற,  "தாக்கரேவுக்கு வயசாகி விட்டது. அவர் அப்படித் தான் பேசுவார்' என ஹசாரே பதிலடி கொடுக்க,  ஹசாரேவின் இந்த பதிலால் கோபமடைந்த பால் தாக்கரே, "என்னை விட உங்களுக்கு வயது குறைவாக இருப்பதற்காக, குழந்தைத் தனமாகச் செயல்படக்கூடாது. நாங்கள் காந்தியவாதிகள் கிடையாது. தேவையில்லாமல் விரோதத்தை தூண்டாதீர்கள்' என எச்சரிக்க இவர்களுக்கிடையில் நடக்கும் கூத்துக்களும் பஞ்சமில்லை. ஹசாரேயின் நாடகத்தில் அடுத்த காட்சி என்னவோ?


வியாழன், 13 அக்டோபர், 2011

சாட்சிகளை மிரட்டிய சங்கராச்சாரி...???

சங்கரராமன் கொலை வழக்கில்

ரவுடிகள் மிரட்டியதால் முரண் சாட்சி அளித்தேன்

தலைமை நீதிபதிக்கு சங்கரராமன் மனைவி கடிதம்
சென்னை, அக்.13
ரவுடிகள் மிரட்டியதால் சங்கரராமன் கொலை வழக்கில் முரண் சாட்சி (பல்டி சாட்சி) அளித்தேன் என்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு அவரது மனைவி மனு கொடுத்துள்ளார்.
காஞ்சீபுரம் கோயில் நிர்வாகி சங்கரராமன் சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட பலர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். வழக்கை புதுச்சேரி செசன்சு கோர்ட்டு விசாரித்து வருகிறது. சாட்சி விசாரணையில் பலர் முரண் சாட்சி (பல்டி) அளித்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த கோர்ட்டின் நீதிபதியுடன் ஜெயேந்திரர் தொலைபேசியில் பேரம் பேசியதாகக் கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சங்கரராமன் கொலை வழக்கின் சாட்சி விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பாலுக்கு சங்கரராமனின் மனைவி பத்மா மனு ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:&
2009&ம் ஆண்டில் சாட்சி விசாரணைக்காக என்னை புதுச்சேரி கோர்ட்டுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்துச் சென்றனர். Ôசங்கரராமனை பார்த்து பேச வேண்டும்Õ என்று கொலைக்கு முந்தைய நாள் என் வீட்டுக்கு வந்து விசாரித்த சிலரை நான் கோர்ட்டில் அடையாளம் காட்டினேன். சாட்சி சொல்லிவிட்டு மதிய உணவுக்காக அமர்ந்திருந்தேன்.அப்போது 3 பேர் என்னிடம் வந்தனர். உண்மையை பேசினால் உனது மகன், மகளை ஆசிட் தொட்டியில் போட்டு கரைத்து விடுவோம். அவர்களின் உடல் கூட உனக்குக் கிடைக்காது என்று மிரட்டினர். பின்னர் மதியத்துக்கு மேல் நடந்த குறுக்கு விசாரணையில் உண்மையை சொல்ல முடியாமல் போய்விட்டது. இதனால் முரண் சாட்சியாகிவிட்டது. இதுபோல்தான் பணம் கொடுத்தும், மிரட்டியும் பலர் முரண் சாட்சி அளித்துள்ளனர். எனது மருமகனும் மிரட்டப்படுகிறார். எனவே எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செய்தி நன்றி; தினத்தந்தி.

சனி, 8 அக்டோபர், 2011

குஜராத்தில் மோடியின் சர்வாதிகார ஆட்சிக்கு தேசிய மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு

 குஜராத்தில் பா.ஜ.க. முதல்வர் நரேந்திர மோடியின் சர்வாதிகார ஆட்சிக்கு நாடு முழு வதும் உள்ள மக்கள் அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த துடன் போராட்டங்கள், தர்ணாக்கள், கண்டனக் கூட்டங்கள் நடத்தி வருகின்றன.

கோத்ரா நிகழ்வுக்குப் பிந்தைய வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்ட இந்து வெறியர்களைக் கட்டுப் படுத்த வேண் டாம் என்று முதல்வர் நரேந்திர மோடி காவல் துறைக்கு உத்தரவிட் டதை காவல்துறை அதிகாரி சந்தீப்பட் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார்.

இதனைத் தொடர்ந்து அவரை பணியிடை நீக்கம் செய்து, கைது செய்து சிறையில் அடைத் தது நரேந்திரமோடி அரசு.

மோடியின் இந்த சர்வாதிகாரத்தைக் கண்டித்து புதுடில்லி ஜந்தர்மந்திரில் மனித உரிமை ஆர்வலர்கள் தர்ணாப் போராட்டம் நடத்தினர். குஜராத் அரசு கைது செய்த அய். பி.எஸ். அதிகாரி சந்தீப் பட்டை உடனடியாக விடுதலை செய்ய வேண் டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இது குறித்து செய்தி யாளர்களிடம் பேசிய சமூக ஆர்வலர் சப்னா ஆஸ்மி கூறுகையில், சந்தீப் பட்டின் கைது நடவடிக்கையைக் கண் டித்து நாடு முழுவதும் 40 நகரங்களில் எதிர்ப் புப் போராட்டம் நடை பெற்று வருகிறது என் றார்.

குஜராத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை என் றும் அவர் கடுமையாகக் குற்றம் சாட்டினார். திரைப்பட இயக்குநர் மகேஷ்பட் கூறுகையில், தங்களுக்கு எதிரான நபர்களை இருக்கும் இடம் தெரியாமல் செய் யும் பாரதிய ஜனதாவின் தத்துவார்த்தத்தை  நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என்றார்.

ஓய்வு பெற்றகுஜராத் முன்னாள் டி.ஜி.பி. ஆர்.பி.சிறீகுமார் கூறு கையில், குஜராத்தில் மோடி அரசின் நட வடிக்கை மிக மோச மான வன்கொடுமை ஆகும். 2002 ஆம் ஆண்டு வன்முறைக்குப் பின்னர் மோடி அரசு காவல்துறை உள்பட அரசு அதிகாரிகளை அச்சுறுத்தி வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

கோத்ராவுக்குப் பிந்தைய வன்முறை தொடர்பாக 2 ஆவது சாட்சி நபராக சந்தீப்பட் உள்ளார். இந்த சம்பவம் குறித்து முதல் ஆதார மாகத் திகழ்ந்தவரான ஹரன் பாண்ட்யா என்ன ஆனார் என்றே தெரிய வில்லை. 

நன்றி; விடுதலை 08 அக்டோபர் 2011

வெள்ளி, 7 அக்டோபர், 2011

ஆனாலும் இந்தியா மதசார்பற்ற நாடு என்றே நம்புவோம்[!]

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள், 1991  ஆண்டு நடைபெற்ற  தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்தபோது தற்கொலை குண்டுதாரியால் படுகொலை செய்யப்பட்டார். ராஜீவோடு சேர்த்து காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 15 பேரும் பலியாயினர். இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளான சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, சம்மந்தப்பட்டவர்களின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததும், தண்டனைக்கு நாள் குறிக்கப்பட்ட  நிலையில்,  சென்னை உயர்நீதி மன்றத்தில் குற்றவாளிகள் சார்பாக செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் நீதிமன்றம் 8 வாரம் தண்டனையை தள்ளி வைத்ததும் நாமறிந்ததே. 
 
இதே காலகட்டத்தில் புலிகளை கடுமையாக எதிர்க்கும் ஜெயலலிதா, புலிகளின் வழிகாட்டுதலின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்ட ராஜீவ் படுகொலை வழக்கு குற்றவாளிகள் மூவரது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் வேண்டும் என்று சட்டமன்றத்தில்  தீர்மானம் நிறைவேற்றினார். இந்த தீர்மானத்தை  காங்கிரஸ் நீங்கலாக, அனைத்து  கட்சிகளும் வரவேற்றன.   
 
அப்போது, தமிழகத்தை முன்மாதிரியாக கொண்டு, டெல்லி பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும்  அப்சல் குருவின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றவேண்டும் என்று காஷ்மீர் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தால் இந்த அரசியல் வாதிகள் அமைதி காப்பார்களா? என்று காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் அறிவுப்பூர்வமான கேள்வியை முன்வைத்தார். உமர்அப்துல்லாஹ்வின் செய்தி வெளியான மாத்திரமே பாஜக குய்யோ- முறையோ என கூப்பாடு போட ஆரம்பித்தது.  
 
இந்நிலையில், ராஜீவ் கொலையாளிகள் 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி, தமிழக சட்டசபையில் தீர்மானம் இயற்றப்பட்டதுபோல காஷ்மீர் மாநில சுயேட்சை எம்.எல்.ஏ., சேக் அப்துல் ரஷீத் என்பவர், அப்சல் குருவுக்கு மன்னிப்பு அளிக்கக் கோரும் தீர்மானத்தை சட்ட சபையில் கொண்டு வந்தார்.
 
இந்த தீர்மானத்துக்கு பாரதீய ஜனதா, தேசிய பாந்தர் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த தீர்மானத்தை கைவிட வேண்டும் என்று சபாநாயகரிடம் அவர்கள் வலியுறுத்தினர். இதனால் கேள்வி நேரம் பாதிக்கப்பட்டது. ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.
 
பாரதீய ஜனதா உறுப்பினர்களை வெளியேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் மேஜை மீது நின்று கூச்சல் போட்டனர். ஆளும் தரப்பும், எதிர் தரப்பும் வார்த்தை போரில் ஈடுபட்டனர். இதனால் சபையில் கூச்சலும், அமளியும் நிலவியது. உறுப்பினர்களை அமைதியாக இருக்குமாறு சபாநாயகர் முகமது அக்பர் லோன் பலமுறை கேட்டுக் கொண்டார்.   ஆனால், அமளி நீடித்ததால், சபை அரை மணி நேரம் ஒத்திவைக்கப்படடது. சபை மீணடும் கூடியதும், அமளி நீடித்தது. எனவே மறுபடியும் ஒரு மணி நேரம் சபை ஒத்தி வைக்கப்பட்டது.
 
இதறிடையில் இந்த  தீர்மானம் காலாவதி ஆகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை கண்டித்து எம்.எல்.ஏ. அப்துல் ரஷித், தனது ஆதரவாளர்களுடன் சட்டசபைக்கு வெளியே ரோட்டில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். இருப்பினும், அவர் சட்டசபைக்குள் செல்ல மறுத்து விட்டார். அவருடைய ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
 
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் தமிழர்கள் என்பதற்காக தமிழக சட்டமன்றம் தீர்மானம்  கொண்டுவந்தால், அமைதி காக்கும் அரசியல்வாதிகள், காஷ்மீரி என்பதற்காக காஷ்மீர் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தால் மட்டும் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கின்றனர். காரணம் அப்சல் நாடாளுமன்ற தாக்குதல் குற்றாவாளி என்று கருதப் படுவதாலா? அல்லது அவர் ஒரு முஸ்லிம் என்பதாலா?  16 உயிர்களை படுகோரமாக கொன்ற வழக்காளிகளுக்கு காட்டப்படும் கருணை; ஒரு கட்டடத்தை தாக்கியதாக கூறப்படுபவனுக்கு இல்லையாம். ஆனாலும் இந்தியா மதசார்பற்ற நாடு என்றே நம்புவோம்.
 
 

கருணாநிதியின் உள்ளங்கை ரேகை'யான லீக்.

திமுகவின்  சிறுபான்மைப் பிரிவு என்று பலராலும் விமர்சிக்கப்படும் முஸ்லிம்லீக் இந்த முறை கொஞ்சம் சொரணை வந்து உள்ளாட்சியில் தனித்துப் போட்டி என்று அறிவித்துள்ளது. இதற்கு காரணம் நகமும் சதையுமாக இருந்த காங்கிரஸை உள்ளாட்சியில் கழற்றி விட்ட கருணாநிதி, திமுக தனித்துப் போட்டி என அறிவித்து விட்டதால், உள்ளாட்சியில் திமுகவிடம் ஒதுக்கீடு கேட்க இயலாது என்பதுதான் முஸ்லிம்லீக் தனித்து போட்டியிடும் நிர்பந்தத்திற்கு தள்ளியது. ஆனாலும் கருணாநிதியின் தயவு என்றைக்கும் தேவை என்பதால் திருச்சி இடைத்தேர்தலில் ஆதரவு என்று அறிவித்துக் கொண்டது.
 
இந்நிலையில், எந்தவித நிபந்தனையுமின்றி கருணாநிதியிடம் சரணடையை இதோ! இன்னொரு லீக் தயார். தி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசிய தேசிய லீக் கட்சி தலைவர் எம்.பஷீர் அகமது,
''வெள்ளம் வந்தாலும், என்றும் தேசிய லீக் உங்கள் உள்ளங்கை ரேகை போல என்றும் வெளியேராமல், தங்களோடு இருக்க வேண்டும் என்ற உறுதி மொழியேற்று 2004, 2009 நாடாளுமன்ற தேர்தலிலும் 2011 சட்டப் பேரவை தேர்தலிலும் எந்தவிதமான முன்நிபந்தனைகளும் இன்றி தி.மு.க.வுக்கு தேசிய லீக் ஆதரவு அளித்து வருகிறது.
அதனைப் போலவே வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் போட்டியிடும் சில தொகுதிகள் தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் திருச்சி மேற்கு சட்டமன்ற இடைத் தேர்தலிலும் முழுமனதான ஆதரவை வழங்க இருப்பதாக கூறியுள்ளார்.
 
லீக்குகள் என்னதான் கருணாநிதியின் உள்ளங்கை ரேகையாக இருக்க விரும்பினாலும், லீக்குகளை தனது இடது கை ரேகையாகத்தான் கருணாநிதி கருதுவாரே தவிர, வலது கை ரேகையாக கருத மாட்டார் என்பதை என்றைக்குத்தான்  இவர்கள் புரிந்து கொள்ளப் போகிறார்களோ?
 
 

வந்தது தீர்ப்பு வாச்சாத்தி'க்கு...! வருமா குஜராத்துக்கு?

ர்மபுரி மாவட்டம் அரூர் அருகே வாச்சாத்தி மலைக்கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராம பகுதியில் சிலர் சந்தனமரங்களை வெட்டி கடத்துவதாக வனத்துறையினருக்கு புகார் சென்றதையடுத்து வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறையை சேர்ந்த கூட்டுக்குழுவினர் 1992 ம் ஆண்டு ஜூன் மாதம் 20 ந் தேதி வாச்சாத்தி கிராமத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள்.
 
அப்போது வாச்சாத்தி கிராமத்தை சேர்ந்த 18 பெண்களை கூட்டுக்குழுவினர் பாலியல் பலாத்காரம் (கற்பழிப்பு) மற்றும் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
 
பாதிக்கப்பட்டோர் தரப்பில் விடுத்த வேண்டுகோளை ஏற்று, கடந்த 1996 ம் ஆண்டு இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.  1996 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ. தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
பின்பு இந்த வழக்கின் விசாரணை தர்மபுரி மாவட்ட அமர்வு கோர்ட்டிற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
 
இதற்கிடையே, வாச்சாத்தி வழக்கு தொடர்பான விசாரணையை விரைவுபடுத்தி முடிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, வாச்சாத்தி வழக்கின் விசாரணை தர்மபுரி மாவட்ட செசன்சு கோர்ட்டில் நீதிபதி குமரகுரு முன்னிலையில் கடந்த ஜூலை முதல் நடந்து வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய 269 பேரில் 54 பேர் இறந்துவிட்ட நிலையில் 215 பேர் விசாரணைக்கு ஆஜராகி வந்தனர்.
இந்த வழக்கின் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பை சேர்ந்த வக்கீல்களின் கருத்தை கேட்டறிந்த மாவட்ட அமர்வு நீதிபதி குமரகுரு, தண்டனை விவரத்தை அறிவித்தார். தண்டனை பெற்றவர்களில், 126 பேர் வனத்துறையையும், 84 பேர் போலீஸ் துறையையும், 5 பேர் வருவாய் துறையையும் சேர்ந்தவர்கள்.
இவர்களில் 12 பேருக்கு கற்பழிப்பு மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ்மக்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி 10 ஆண்டு கடுங்காவல் ஜெயில் தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும், அபராததொகையை கட்டத்தவறினால் கூடுதலாக 9 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
5 பேருக்கு வன்கொடுமை சட்டத்தின்படி 7 ஆண்டுகள் கடுங்காவல் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் தவிர இந்த வழக்கில் மற்ற 198 பேருக்கும் வன்கொடுமை, சாட்சியங்களை மறைத்தல், கலகம் விளைவித்தல், குற்றத்தின் சாட்சிகளை மறைத்தல், குற்றத்தை பற்றி தவறான தகவல் அளித்தல் உள்பட 10&க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் ஒரு ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் தலா ரூ.1000 முதல் ரூ.2000 வரை அபராதமும் விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும் அபராதத் தொகையில் இருந்து தலா ரூ.15 ஆயிரம் நிவாரண உதவியாக வழங்க வேண்டும் என்றும், 15 ஆண்டுகளாக வழக்கை நடத்தி வந்த சி.பி.ஐ.க்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேற்கண்ட வழக்கில் 19 ஆண்டுகள் கடந்த பின்னால் தீர்ப்பு வந்துள்ளது. காலம் கடந்தாலும்  நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை இந்த தீர்ப்பு தந்தாலும், அளவு கடந்த தாமதம், இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட 54 பேர் தண்டனை பெறாமலேயே மரணமடைந்து விட்டனர். மேலும் இந்த தணடனைகள் நடந்து விட்ட பாலியல் பலாத்காரங்களுக்கு உரிய நிவாரணமாக இல்லை என்றாலும், அரசு அதிகாரிகளாகவே இருந்தாலும் தவறு செய்தவர் என்றாவது ஒருநாள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என்ற கருத்து இந்த தீர்ப்பின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த நேரத்தில் அரசின் ஆதரவோடு குஜராத்தில் மற்றொரு வாச்சாத்தி சம்பவம் கடந்த 1992 ல் நடைபெற்றது. கோத்ரா ரயில் எரிப்பை காரணம்  காட்டி நரமோடியின் ஆசியுடன் நடைபெற்ற முஸ்லிம் இனப்படுகொலையில் பல முஸ்லிம் பெண்கள் கற்பழித்து கொல்லப்பட்டனர். மார்ச் மாதம்  3ந் தேதி, 2002- நடந்தேறிய இச்சம்பவத்தில் பில்கிஸ் பானுவின் குடும்பத்தினர் துரத்தப்பட்டு், பில்கிஸ் பானு நிர்வாணப்படுத்தப்பட்டு கும்பலால் கற்பழிக்கப்பட்டார். இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட மூவருக்கு மரணதண்டனை கோரி, சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் கூட செய்தது.
 
ஒரு பில்கிஸ் பானு மட்டுமல்ல; குஜராத்தில் இந்துத்துவாக்களால் கற்பழிக்கப்பட்ட பெண்களுக்கு ஒன்பது ஆண்டுகள் கடந்த பின்னும் நீதி கிடைக்கவில்லை.  காரணம் முக்கிய குற்றவாளி மாநிலத்தின் முதல்வராக வீற்றிருப்பது தான். எனவே, வாச்சாத்தி சம்பவத்திற்கு சற்றும் குறைவில்லாமல் நடந்த குஜராத் கற்பழிப்பு சம்பவங்களுக்கும் நீதிமன்றம் விரைந்து நீதி வழங்கிட வேண்டும் என்பதே நமது வேண்டுகோளாகும்.

வியாழன், 6 அக்டோபர், 2011

நரமோடியின் மீது குற்றம் சாட்டிய அதிகாரி கைது; பழிவாங்கும் நடவடிக்கையா?

டந்த 2002ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் மோடியின் நல்லாசியுடன் நடைபெற்ற முஸ்லிம் இன சுத்திகரிப்பு கலவரத்தில் மோடியின் பங்கு குறித்து, ஐ.பி.எஸ். அதிகாரியான சஞ்சீவ் பட் நரேந்திர மோடிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து இருந்தார். அதில், கலவரத்தின்போது உயர் போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டிய நரேந்திர மோடி, இந்துத்துவாக்களின் கோபத்தை காட்ட அனுமதிக்கும்படியும், முஸ்லிம்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் பேசியதாக சஞ்சீவ் பட் குறிப்பிட்டு இருந்தார். இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
மோடி கூட்டிய உயர் போலீஸ் அதிகாரிகள்  கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொள்ளவில்லை என்றும், சஞ்சீவ் பட் பொய்யுரைப்பதாகவும் மோடி தரப்பு கூறிவந்த நிலையில், ''கலவரத்தின்போது நரேந்திரமோடி கூட்டிய கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொண்டதாக பிரமாண பத்திரத்தில் கையெழுத்து போடும்படி அரசு ஊழியர் ஒருவரை சட்ட விரோதமாக அடைத்து வைத்து மிரட்டியதாக, போலீஸ்காரர் ஒருவர் கொடுத்த புகாரை அடுத்து அந்த அதிகாரி சஞ்சீவ் பட் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
இதனை தொடர்ந்து பட் ஜாமீன் கேட்டு  மனு செய்துள்ளார். மோடி அரசின் எதிர்ப்பை மீறி சஞ்சீவ் பாட்டின் ஜாமீன் மனுவை கோர்ட் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது ஆறுதலான விசயமாகும். ஆனால் ஜாமீன் கிடைக்குமா? என்பதை சட்டம் தான் தீர்மானிக்க வேண்டும்.
 
இந்நிலையில் ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டின் மனைவி அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது. உடனே அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கேட்டு குஜராத் போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
மத நல்லிணக்கம்- சமூக நல்லிணக்கம் என்ற பெயரில் உண்ணாவிரத  நாடகமாடிய மோடி, உண்மையில் மதநல்லிணக்கம் விரும்புபவறல்ல என்பதை, தனது உண்மை முகத்தை  உலகுக்கு காட்டிய அதிகாரியை பழிவாங்கும் வகையில் கைது செய்ததன் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார். இந்த லட்சணத்தில் இந்த நரமோடி பிரதமரானால் இந்தியா வல்லரசாகும் என்ற இந்துத்துவ மீடியாக்களின் ஒப்பாரிகளுக்கோ பஞ்சமில்லை.

கூட்டணி குறித்து குழப்பும் விஜயகாந்த்!

ரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; நிரந்தர பகைவரும் இல்லை என்பது அரசியல் அரிச்சுவடி கற்ற அனைவருக்கும் தெரியும். அதே போல் 'நாங்கள் மற்ற கட்சிகளில் இருந்து வேறுபட்டவர்கள்' என்று காட்ட சில தேர்தல்களில் தனித்து களம் கண்டு விட்டு கூட்டம் சேர்ந்தவுடன் அந்த கூட்டத்தைக் காட்டி கூட்டணி பேசிய கட்சிகளும் உண்டு. இதில் இரண்டாமவர் நம்ம விஜயகாந்த். இந்த விஜயகாந்த், கடவுளோடும் மக்களோடும் தான் கூட்டணி என்று முழங்கியவர் கடந்த தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி கண்டு எதிர்கட்சித் தலைவரானார். விஜயகாந்தின் வளர்ச்சி தனக்கு வீழ்ச்சி என்று ஜெயலலிதா தாமதமாக உணர்ந்ததாலோ என்னவோ விஜயகாந்தை கூட்டணியிலிருந்து கழற்றி விட்டார். இதற்கிடையில், திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக போன்று இவர் தனித்து களம் காண்பாரோ என்று எண்ணியிருந்த வேளையிலே சட்டென தம்மைப் போல் ஜெயலலிதாவால் கழற்றி விடப்பட்டு முழித்து கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுடன் கைகோர்த்துக் கொண்டு உள்ளாட்சியை சந்திக்கிறார்.
 
இவரது இந்த கூட்டணி பற்றி ஒரு நிருபர், ''தெய்வத்தோடும், மக்களோடும்தான் கூட்டணி என்கிறீர்கள். கம்யூனிஸ்டுகளோடு கூட்டணி வைத்துள்ளீர்களே என்று கேட்க, அதற்கு விஜயகாந்த், ''இப்போதும் சொல்கிறேன் மக்கள்தான் தெய்வம். அவர்கள் விருப்பப்படிதான் கூட்டணி வைத்தேன். மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காகத் தான் கூட்டணி வைத்தேன்  என்று கூறியுள்ளார்.
 
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கண்டது சேலம் மாநாட்டில் மக்கள் கருத்தை கேட்டுத்தான் என்றவர், இப்போது உள்ளாட்சியில் கம்யூனிஸ்டுகளிடம் கூட்டணி சேர்வதற்கு எந்த மாநாட்டை கூட்டி எந்த மக்களிடம்  கேட்டார்?  மேலும், விஜயகாந்த் கூற்றுப்படி மக்கள் தான் தெய்வம் என்றால் மக்களுடன் மட்டும் தான் கூட்டணி என்று சொல்ல வேண்டியது தானே?  தெய்வத்தோடும் மக்களோடும் கூட்டணி என்று சொல்ல வேண்டியதில்லையே? தெய்வம்- மக்கள் என்று பிரித்து சொல்வதன் மூலம் தெய்வம் வேறு; மக்கள் வேறு என்று தெரியவில்லையா?
 
எனவே அரசியல் கூட்டணி  என்பது அந்ததந்த  காலகட்டத்திற்கு ஏற்ப அமைவது என்று ஒரு வார்த்தையில் சொல்லி விட்டு செல்வதற்கு பதிலாக, மக்கள்- தெய்வம் என தானும் குழம்பி மக்களையும் மடையர்களாக்க விஜயகாந்த் நினைப்பது அவரது அரசியல் தெளிவின்மையை காட்டுகிறது. அது சரி! அவர் தெளிந்த நிலையில் இருந்தால் அல்லவா அரசியல் தெளிவு பெறுவதற்கு என்று எங்கோ பாமரன் கூறும் வார்த்தை காற்று வாக்கில் கேட்கிறது.
 
 

உள்நாட்டு விவகாரங்களில் அன்னியத் தலையீடு; ஐ.நா.வில் பிரதமரின் அசத்தல் பேச்சு.

வ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு கொள்கையை சட்டதிட்டத்தை கொண்ட ஒரு அரசு, மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தனது கொள்கையை திணிக்கும்  நோக்கில் அல்லது தனது கொள்கையை ஏற்பவர்களை ஆட்சியாளராக அமர்த்தும் நோக்கில் அன்னிய நாடுகள் தலையிடுவது என்பது அடுத்த நாட்டின் இறையாண்மையை கேள்விக்குரியதாக ஆக்குவதாகும். அந்த வகையில் அடுத்த நாட்டின் விவகாரங்களில் சம்மன் இல்லாமல் ஆஜராகும் ஒரே நாடு அமெரிக்கா என்பது அழும் குழந்தைக்கும் தெரியும். தான் கொண்டு வரும் தீர்மானங்களில் அனைத்து நாடுகளும் படித்து பார்க்காமல் கையெழுத்திட வேண்டும். எதிர்ப்பவர் எதிரி நாடாக கணிக்கப்பட்டு அவர்களின் நாள் எண்ணப்பட்டு கதை முடிக்கப்படும் என்ற அடிப்படையில் அமெரிக்கா நடந்து வருவதை இராக், ஆப்கானிஸ்தான், லிபியா உள்ளிட்ட பல நாடுகளில் காணமுடிகிறது. ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் மூக்கை நுழைத்து அந்நாட்டின் இஸ்திரத்தன்மைக்கு வேட்டு வைக்கும் அமெரிக்காவை இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங் மறைமுகமாக ஒரு பிடி பிடித்துள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் சபையின் 66-வது ஆண்டு பொதுச் சபை கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங்,  "சட்டப்படியான ஆட்சி என்பது நாடுகளுக்கு உள்ளே மட்டும் அல்ல, சர்வதேச அரங்கிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். தங்களுடைய எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும், தங்களுக்கு எப்படிப்பட்ட அரசு வேண்டும் என்பதை அந்தந்த நாடுகளின் மக்களே தீர்மானிக்குமாறு விட்டுவிட வேண்டும். வெளியிலிருந்து ராணுவத் தாக்குதல் மூலம் ஒரு நாட்டைக் கைப்பற்றி அங்கே புதிய ஆட்சியை நிறுவும் போக்கு கூடவே கூடாது' .

 "ஒரு நாட்டில் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தால் அங்கு சுமுகமான ஆட்சி மாற்றம் ஏற்படவும் ஜனநாயக அமைப்புகள் வலுப்படவும் உதவ வேண்டிய கடமை சர்வதேசச் சமூகத்துக்கு இருக்கிறது. ஆனால் ஒரு நாட்டின் பிரச்னைக்குத் தீர்வு என்ன என்று வெளியிலிருந்து பரிந்துரைப்பதும் அதை அமல்படுத்த ராணுவ ரீதியாகத் தலையிடுவதும் மிகவும் ஆபத்தானது.

 ஒரு நாட்டின் ஒற்றுமை, பிரதேச ஒருமைப்பாடு, இறையாண்மை, சுதந்திரத் தன்மையையும் மதிக்கும் வகையிலும் காப்பாற்றும்வகையிலும்தான் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகள் அமைய வேண்டும். வளர்ச்சிக்கு உற்ற சூழலை மக்கள் உருவாக்க உதவ வேண்டிய கடமை ஒவ்வொரு அரசுக்கும் இருக்கிறது. இதுதான் ஜனநாயகத்தின் அடிநாதமாகவும் அடிப்படை மனித சுதந்திரத்தின் சாரமாகவும் இருக்கிறது. உலக நாடுகளின் பிரச்னைகளைத் தீர்க்க நம்மிடையே ஒத்துழைப்பு அவசியம்; முரண்பட்டு மோதலில் இறங்கினால் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியாது'''! என்று பேசியுள்ளார்.
 
மன்மோகன்சிங்கின் பேச்சு, நாடு பிடிக்கும் கொள்கையைக் கொண்ட அமெரிக்கா  மற்றும் அதன் நாச[நேச] நாட்டுகளுக்கும் சம்மட்டி அடியாகும். தமது நாட்டின் அரசு எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை அந்த நாட்டு குடிமக்களுக்கே அன்றி, அமெரிக்காவின் ராணுவ டாங்கிகளுக்கு அல்ல என்பதையும், ஒரு நாட்டின் ஒற்றுமை, பிரதேச ஒருமைப்பாடு, இறையாண்மை, சுதந்திரத் தன்மையையும் மதிக்கும் வகையிலும் காப்பாற்றும்வகையிலும்தான் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்றும் கூறி அமெரிக்காவையும், அதன் அநியாயத்திற்கு  ஒத்து ஊதும் ஐ.நா.வையும் ஒரு சேர கண்டித்துள்ள பிரதமரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வெல்டன் மிஸ்டர் மன்மோகன் சிங்!