வெள்ளி, 16 டிசம்பர், 2011

பாண்டிச்சேரியில் முஸ்லிம் முஸ்லிமல்லாதோருக்கு இறை வேதம் வழங்கும் நிகழ்ச்சி!

பரபரப்பான செய்திகளுடன் இப்போது விற்பனையில் இந்தவார சமுதாயமக்கள் ரிப்போர்ட்...

 

'நச்'சுன்னு ஒரு கேள்வி!

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்; கடந்த அதிமுக ஆட்சியில் எங்கள் மீது மேம்பால ஊழல் வழக்குப் போடப்பட்டது. அப்போது என் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், நீதிமன்றம் தண்டனை தரவேண்டாம். நானே தூக்குத் தண்டனை கொடுத்துக் கொள்கிறேன் என்றேன். 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்கள். குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை. இப்போது சொல்கிறேன். வீடு பறிப்பு வழக்கில் என் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றம் தண்டனை தரவேண்டாம். நானே கொடுத்துக் கொள்கிறேன். அப்படி நிரூபிக்காவிட்டால் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தயாரா?


புறக்கனிக்கப்பட வேண்டியது தினமலரா? மூட நம்பிக்கையா?

றைத்தூதரும் அவர் தம் தோழர்களும் இஸ்லாத்திற்காக நாடு துறந்த நிகழ்வையும், இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமும், இறைத்தூதரும் இறைவனுடன் உரையாடிய சிறப்பை பெற்றவருமான நபி மூஸா[அலை] அவர்களை கொடியவன் ஃபிரவ்னின் கொடுமையிலிருந்து இறைவன் காத்த வரலாற்று செய்தியும் நினைவு கூறும் முஹர்ரம் மாதத்தில் முஸ்லிம்களில் ஒரு சாரார் அறியாமையின் காரணமாக செய்யும் செயல்கள் மற்றாரை முஸ்லிம்களை பார்த்து எள்ளி நகையாட வழிவகுத்து விடுகிறது.
 
முஹர்ரம் மாதம் ஒன்பது மற்றும் பத்தாம் நாள் நோன்பு நோற்க வேண்டும் என்ற மார்க்க கட்டளையை பேணாத முஸ்லிம்களில் சிலர், அன்றைய தினம் தீ  மிதிப்பது, சாட்டையால் தம்மைத் தாமே அடித்துக் கொள்வது, தமக்கு தாமே காயங்களை ஏற்படுத்திக் கொள்வது இவ்வாறான மூடத்தனமான செயல்களை இஸ்லாத்தின் பெயரால் செய்கின்றனர். இந்த மூடத்தனத்தை செய்தியாக்கும் போர்வையில் சில காவி பத்திரிகைகள்  இஸ்லாத்திற்கு சம்மந்தமில்லாத, இஸ்லாத்திற்கு இழிவைத் தரும் செய்தியை வெளியிட்டு நம்மை நோகடிக்கின்றனர். அந்தவகையில் சமீபத்திய மொகரம் பண்டிகை[!]யின்  போது, முஸ்லிம்களின்[!] தீ மிதி திருவிழா செய்தியை வெளியிட்ட தினமலர் நாளிதழ், ''பாத்திமா நாச்சியாரின் மகன்களான அசேன், உசேன் இருவரும் போரில் இறந்த செய்தி கேட்டு, பாத்திமா தீக்குளித்து இறந்தார். அவர் நினைவாக இந்த பள்ளி வாசலில் 183 வது ஆண்டாக தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றது. முஸ்லிம் பள்ளி வாசல் முன் நடந்த தீமிதி நிகழ்ச்சியில் இந்துக்களும் கலந்து கொண்டனர்'' என்று செய்தியை வெளியிட்டுள்ளது.
 
இந்த செய்தியை படித்த மாத்திரமே முஸ்லிம்களில் பெரும்பாலோர் தினமலரை புறக்கணிக்கக் வேண்டும் என்ற கருத்தை இணையதளங்களில் பதிவு செய்தனர். தினமலர் அவ்வப்போது வேண்டுமென்றே இதுபோன்ற கற்பனை செய்திகளை இஸ்லாத்திற்கு எதிராக காலம் இறக்குவது வாடிக்கை தான். சமீபத்தில் கூட இளையான்குடியின் முஸ்லிமான பேரூராட்சித் தலைவர், கோயிலில் கிடா வெட்டி நேர்த்திக்கடன் நிறைவேற்றியதாக ஒரு பொய்யான செய்தியை வெளியிட்டு, சம்மந்தப்பட்டவர் தினமலருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதும் கவனிக்கத்தக்கது. அதே நேரத்தில் இந்த பாத்திமா நாச்சியாரின் தற்கொலை கற்பனைக் கதையை தினமலர் வேண்டுமென்றே புனைந்ததா? அல்லது முஸ்லிம்களில்[!] எவரேனும் தினமலருக்கு இத்தகைய செய்தியை தந்தார்களா? என்று தெரியவில்லை. தினமலர் வேண்டுமென்றே புனைந்திருந்தால் தினமலரை அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து கண்டிக்கவேண்டும். தினமலர் அலுவலத்திற்கு சென்று அவர்களுக்கு உரிய விளக்கம் அளித்து மறுப்பு வெளியிடச் செய்யவேண்டும். மறுத்தால் போராட்டம் நடத்தவேண்டும். அதே நேரத்தில் இந்த செய்தி ஒரு பெயர் தாங்கி முஸ்லிமால் தரப்பட்டிருக்குமாயின் நாம் தினமலரை நோவதில் அர்த்தமில்லை. மேலும் தினமலர் போன்றவற்றை புறக்கணிப்பதை விட அவைகளையும் படித்தால் தான் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான  செய்தி வெளியிட்டால் நம்மால் மறுத்து விளக்கமளிக்க முடியும். எனவே எந்த ஊடகத்தையும் புறக்கணிப்போம் என்பதை விட, அனைத்தையும் படிப்போம்; நல்லதை எடுப்போம்; அல்லதை[தீயதை] புறந்தள்ளுவோம். தவறான செய்திகளை வெளியிட்டால் விளக்கமளித்து அவர்களுக்கும் இஸ்லாத்தை எடுத்தியம்புவோம் என்பதுதான் ஒரு முஸ்லிமின் நோக்கமாக இருக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் விட இத்தகைய தவறான செய்திகளை ஊடகங்கள் வெளியிட காரணமாக அமைந்துள்ள தீமிதி உள்ளிட்ட மூட நம்பிக்கைகளை ஒழிக்க முழு மூச்சாக களமிறங்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதையும் முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.  
 
குறிப்பு; தினமலர் தனது செய்திக்கு மறுப்பு வெளியிட்டு விட்டது.

ஜெயலலிதாவின் விளையாட்டுப் பொம்மைகளா மந்திரிகள்?

மிழக அமைச்சர்களும், ஆளுங்ககட்சி மாவட்டச் செயலாளர்களும் தாங்கள் பதவியில் இருக்கிறோமா இல்லையா என்பதை மணிக்கொருமுறை ஊடகங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளும் நிலைதான் உள்ளது. ஆட்சி அமைந்து முழுசாக ஆறுமாசம் முடிந்ததோ இல்லையோ மந்திரி சபை மாற்றம் மட்டும் மாதம் தவறாமல் நடக்கிறது. தமிழக அமைச்சரவை மீண்டும் அதிரடியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. எம்.பரஞ்சோதி, செல்வி ராமஜெயம் ஆகிய 2 அமைச்சர்கள் நீக்கப்பட்டு, பா.வளர்மதி, எம்.எஸ்.எம். ஆனந்தன் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
 
முதல்வர் ஜெயலலிதா ஒருவரை ஏன் மந்திரியாக்குறார் என்றும் யாருக்கும் தெரிவதில்லை. அதே மந்திரியை ஏன் நீக்குகிறார் என்றும் யாருக்கும் சொல்வதில்லை. இதே நிலையில் சென்றால் ஜெயலலிதாவின் ஆட்சி முடிவில் முன்னாள் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை விட முன்னாள் மந்திரிகளின் எண்ணிக்கை அதிகமானாலும் ஆச்சர்யமில்லை. சரி செயல்படாத மந்திரிகளை வைத்து என்ன செய்வது? என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஆனாலும் சில நாட்களில் சில வாரங்களில் மந்திரிகள் பதவி பறிப்பு என்பது, உண்மையில் செயல்படும் மந்திரிகளுக்கும் பலவீனத்தையே தரும் என்பதையும், பதவி எந்த நொடியில் போகுமோ அதனால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் 'தேற்றி' விடுவோம் என்ற சிந்தனையும் சில மந்திரிகளுக்கு வருவதற்கும் வாய்ப்புண்டு என்பதை   முதல்வர் ஜெயலலிதா உணர்ந்து கொள்ளவேண்டும்.
 
இப்போது நீக்கப்பட்ட இரு மந்திரிகளில் மு. பரஞ்ஜோதி மீது தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, தன்னிடமிருந்த சொத்துகளை பறித்து ‌மோசடி செய்து விட்டார் என்று பெண் டாக்டர் ராணி, போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து கோர்ட் உத்தரவுப்படி, திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இதனையடுத்து தான் பரஞ்ஜோதி தனது பதவியை இழந்தார் என்றும் அரசியல் அரங்கில் பரவலாக  பேசப்படுகிறது. பரஞ்ஜோதியின் மாவட்டச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது அரசியல் நோக்கர்களின் கூற்றை வலுப்படுத்துவதாக உள்ளது. ஒருபுறம் திமுக மந்திரிசபையிலோ லிமிடெட் கம்பெனி போல சிலர் தான் மந்திரிகள் என்ற நிலை. ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் இன்றைய சாமன்யன் நாளைய மந்திரியாக முடியும். இன்றைய மந்திரி நாளை முன்னாள்'களாக மூளையில் முடக்கப்படுவதும் வாடிக்கையே. எது எப்படியோ எத்துனை மந்திரிகள் வந்தாலும், போனாலும் மக்கள் நலம் பெற்றால் சரி!

மதுவுக்கு வக்காலத்து வாங்குவது மத்திய மந்திரிக்கு அழகா?

மிழகத்தின் கஜானாவை நிறைக்கும் அமுதசுரபியாக மது விற்பனை திகழ்ந்து வருகிறது. கடந்த 2010 -2011 ஆம் ஆண்டில் ரூ.14,965 கோடி அளவுக்கு மது விற்பனை ஆகியிருக்கிறது. இப்போது ருசி கண்ட பூனையாக மது விற்பனையில் புதிய பரிமாணத்தை எட்டவுள்ளது தமிழக அரசு. கடந்த 23.8.11 அன்று தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 800 டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு ஆணை பிறப்பித்தது. அவற்றில் 200 கடைகள், உயர்தர மதுக்களைக் கொண்ட 'எலைட்' மதுக்கடைகளாகும். இவை மிகப்பெரிய வர்த்தக கட்டிடங்களில் மட்டும் அமைக்கப்படும். சென்னையில் மட்டும் 6 எலைட் கடைகள் வருகின்றன. இந்த எலைட் மதுக்கடை திறப்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் எம்.ஞானசேகரன் எனபவர் பொதுநலன் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
 
அதில் மதுவின் தீமைகளை பட்டியலிட்டுள்ள அவர், எலைட் கடை திறப்பது அப்பட்டமான அரசியல் சாசன சட்ட மீறலாகும். எனவே அந்த கடைகளை திறப்பதற்கு தடை விதித்து, அதற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். பொதுவாகவே பூரண மதுவிலக்கு வேண்டும் என்ற குரல் வலிமையாக இந்திய அளவில் குறிப்பாக தமிழகத்தில் வலுவாகவே ஒலித்தாலும், எந்த கட்சி ஆட்சியிலும் இக்குரல் அவர்களின் காதுகளை சென்றடைவதில்லை; திறந்த மதுக்கடையை பூட்ட முடியவில்லை என்ற நிலையிருக்க, ஒரு பொறுப்பான மத்திய அமைச்சர் ஒருவர் பூட்டப்பட்ட மதுக்கடைகளை திறக்க வேண்டும் என திருவாய் மலர்ந்துள்ளார். அதிலும் இவர் முஸ்லிம் என்பது மற்றொரு வேதனைக்குரிய கூடுதல் தகவல். அவர் வேறு யாருமல்ல. மத்திய எரிசக்தி துறை அமைச்சர் பரூக் அப்துல்லா தான்.
 
காஷ்மீரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ''காஷ்மீரில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் திரை அரங்குகள்,  மதுபானக் கடைகளை மீண்டும் திறக்க வேண்டும். அண்டை நாடான பாகிஸ்தானில் திரை அரங்குகள் மற்றும் மதுபானக் கடைகள் உள்ளன. நமது வீடுகளில் தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளன அவற்றில் சிடிக்கள் போட்டு படம் பார்க்கும்போது  திரையரங்குகளில் போய் படம் பார்ப்பதில் என்ன தவறு? திரையரங்குகள்  மதுபானக் கடைகள் திறப்பதால் காஷ்மீர் வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். இதனால் நமது சுற்றுலாத்துறை நல்ல வளர்ச்சி அடையும். அரசுக்கும் அதிகப்படியான வருமானம் கிடைக்கும். இப்போது காலம் மாறிவருகிறது அதற்கு ஏற்றார் போல காஷ்மீர் மக்களாகிய நாமும் மாற வேண்டும்'' என்று பேசியுள்ளார்.
 
இவரைப் போன்றவர்கள் அதிகாரத்தில் இருந்தால் அரசு வருமானத்திற்காக இதுமட்டுமல்ல. 'எதையும்' செய்யத் துணிவார்கள் என்பது தான் உண்மை. மக்களை கெடுத்து மக்களாட்சி[!]  நடத்த நினைக்கும் இவரைப் போன்ற அரசியல்வாதிகளை  அதிகாரத்தில் வைத்திருக்கும் இந்திய மக்களாகிய நாம், வல்லரசுக் கனவு காண்கிறோம். எங்கே போய் முட்டிக் கொள்வது?

கைதியை விடுதலை செய்த பாகிஸ்தான்; கண்டுகொள்ளாத இந்தியா!

னிதர்களைத் திருத்துவதற்காக உருவாக்கப்பட்டதுதான், சிறைச்​சாலை. ஆனால், இன்று அது மனித துவேஷத்தைக் காட்டும் அகங்காரச் சின்னமாகிவிட்டது என்று மனித உரிமையாளர்கள் சொல்கிறார்கள். தங்கள் நாட்டுச் சிறையில் அடைபட்டவர்கள், என்றாவது ஒரு நாள் விடுதலைக் காற்றை சுவாசிக்கலாம். ஆனால் அன்னிய நாட்டுச் சிறையில் அடைப்பட்டவர்கள்?
 
போர்க் குற்றவாளிகள் மட்டுமின்றி, நூற்றுக்​கணக்கான அப்பாவிகள் அன்னிய நாட்டுச் சிறை​களில் இருக்கிறார்கள். அவர்கள் எதிர்காலம் என்னவென்று தெரியாமல் உள்ளேயே கிடந்து சாகிறார்கள். ஏனென்றால் சாதாரணக் குடிமகன்கள், அன்னிய நாட்டுச் சிறைக்குள் போய்விட்டால், அவர்களைக் காப்பாற்ற எந்த ஓர் அரசும் தீவிர முயற்சிகள் எடுப்பது இல்லை. நம் இந்தியாவும் இந்த விஷயத்தில் இரும்பு இதயம் படைத்ததுதான் என்பதற்கு ஓர் உதாரணம், டாக்டர் கலீல் சிஸ்டி.
சமீபத்தில் இந்திய பிரஸ் கவுன்சிலின் தலைவராகப் பொறுப்பேற்ற முன்னாள் நீதியரசர் மார்கண்டேய கட்ஜு இந்திய அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்தார். ''அஜ்மிர் சிறையில் கடந்த 19 ஆண்டுகளாக இருக்கும் கலீல் சிஸ்டிக்கு தள்ளாத வயதாகிவிட்டது. அவரால் நடக்க இயலாது. இதய நோய், சர்க்கரை நோய் உட்பட பல நோய்கள் இருக்கின்றன. கராச்சியில் மருத்துவப் படிப்பை முடித்த அவர், ஸ்காட்லாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் நச்சு நுண்மவியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர். கராச்சி பல்கலைக்கழகத்தில் மைக்ரோபயாலஜி துறைத் தலைவர். தலைசிறந்த மருத்துவர். அவர் நீண்ட நாட்கள் வாழப்போவது இல்லை. அவரது இறுதிக் காலத்தை அவருடைய மனைவி மற்றும் மகளுடன் நிம்மதி​யாகக் கழிக்கட்டும். அவர் இந்திய சிறையில் இறந்துபோனால், தீராத அவப் பெயர் நமக்கு ஏற்படும். அதனால் அவரை கருணை அடிப்படையில் விடுவிக்க வேண்டும்...'' என்று கோரிக்கை வைத்து இருக்கிறார்.
 
இவர் இப்படிக் கேட்பது முதல் முறை அல்ல. பல மாதங்களுக்கு முன்பே பிரதமர், உள்துறை அமைச்சர், ராஜஸ்தான் மாநில ஆளுநர் ஆகியோருக்கு கலீல் சிஸ்டியை கருணை அடிப்படையில் விடுவிக்கும்படி கடிதம் எழுதி இருந்தார். ஆனால், அரசிடம் இருந்து எந்த சலனமும் இல்லை.
பாகிஸ்தான் மருத்துவரான கலீல் சிஸ்டி, தனது சகோதரருடன் இந்தியாவில் வசிக்கும் தாயைப் பார்க்க, கடந்த 92-ம் ஆண்டு அஜ்மிர் வந்தார். அப்போது அவரது சகோதரரின் மருமகன்களுக்கும், அவரது விரோதிகளுக்கும் ஏற்பட்ட சண்டையில் மரு​மகன் ஒருவர் துப்பாக்கியால் சுட முற்பட்டார். கலீல் சிஸ்டி அதைத் தடுக்க முயற்சிக்கும்போது, கை தவறிக் குண்டு பாய்ந்து ஒருவர் இறந்துவிட்டார். இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட கலீல் சிஸ்டி, சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 19 ஆண்டுகளாக நடந்த வழக்கு விசாரணைக்குப் பிறகு, கலீல் சிஸ்டி மற்றும் அவரது உறவினர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்த்து நீதிமன்றம். வயோதிகம் காரணமாக நடக்க முடியாத இவர், சமீபத்தில் தவறி விழுந்ததில் தோள்பட்டை எலும்பு முறிந்தது. தொடர்ந்து மாரடைப்பு ஏற்பட்டது. இப்போது அவர் அஜ்மிர் சிறையின் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ஆனாலும் இறங்கி வரவில்லை மத்திய அரசு.
 
பாகிஸ்தான் மருத்துவருக்கு இந்திய அரசு இப்படி இன்னல் கொடுத்துக்கொண்டு இருக்க, பாகிஸ்தானோ இந்தியர் ஒருவருக்கு நன்னயம் செய்து இருக்கிறது. மார்கண்டேய கட்ஜு, கடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின்போது இந்தியா வந்திருந்த பாகிஸ்தான் பிரதமரிடம் பாகிஸ்தான் சிறையில் 27 ஆண்டுகளாக அடைக்கப்பட்டு இருக்கும் இந்தியரான கோபால்தாஸ் என்பவரைக் கருணை அடிப்படையில் விடுவிக்கும்படி கோரி இருந்தார். அதனை ஏற்று, பாகிஸ்தான் அரசு கடந்த ஏப்ரல் மாதம் அவரை விடுவித்தது. பஞ்சாப்பைச் சேர்ந்த கோபால்தாஸ் தனது உறவினரைப் பார்க்க ஜம்மு காஷ்மீர் சென்றபோது, தெரியாமல் எல்லைக் கோட்டைத் தாண்டியதற்காக பாகிஸ்தானின் சிறையில் அடைக்கப்பட்டவர்!
தற்போது ராஜஸ்தான் கவர்னரின் மேஜையில் கண்டுகொள்ளப்படாமல் காத்திருப்பது கலீல் சிஸ்டியின் கருணை மனு மட்டும் அல்ல, கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க்கொண்டு இருக்கும் அவரது உயிரும்கூட!
இப்போது 848 பாகிஸ்தானியர்கள் இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். 793 இந்தியர்கள் பாகிஸ்தான் சிறைகளில் உள்ளனர். இவர்களில் சுமார் 10 சதவிகிதம் பேர் மட்டுமே குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள். மற்றவர்கள் எல்லாம் தெரியாமல் கடலில் எல்லைத் தாண்டிய மீனவர்கள்.
டி.எல்.சஞ்சீவிகுமார். நன்றி;ஜு.வி.                                           

வியாழன், 8 டிசம்பர், 2011

பரபரப்பான செய்திகளுடன் இப்போது விற்பனையில் இந்தவார சமுதாயமக்கள் ரிப்போர்ட்...


 

நலம் பெற துஆ செய்யுங்கள்!

பாபர் மஸ்ஜித் மீட்பு ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்டு ஊர் திரும்பிய அதிரையை சேர்ந்த சகோதரர்கள் பசீர் மற்றும் சாகுல் ஹமீது இருவரும் வாகன விபத்தில் சிக்கி, பசீர் அவர்களுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக குடந்தை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் அவர்களை சகோ: கோவை ஜாபர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார் மற்றும் தமுமுக நிர்வாகிகளும் நேரில் சென்று நலம் விசாரித்து சென்றனர் மேலும் இந்த சகோதரர்கள் வீடு திரும்பும் வரை மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்து அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்தனர் என்பது குறிப்பிட தக்கது. Thanks&Regards

 M.NOORULAMEEN                              

 cell;9787332923                                               


ஏவுகணையை முதன் முதலில் கண்டறிந்தவர் தீரர் திப்புசுல்தான்!

நன்றி;தினத்தந்தி.

இதஜ'வின் டிசம்பர் ஆறு ஆர்ப்பாட்ட செய்தி பத்திரிக்கைகளில்[part 2]


தஞ்சை மாவட்ட இதஜ'வின் டிசம்பர் ஆறு ஆர்ப்பாட்ட செய்தி  தினமணி மற்றும் தினத்தந்தியில்
 
 
 
 
 
 


--
Thanks&Regards

 M.NOORULAMEEN                              
 cell;9787332923                                               




--
Thanks&Regards

 M.NOORULAMEEN                              
 cell;9787332923                                               


செவ்வாய், 6 டிசம்பர், 2011

19 ஆண்டுகளாக குறையாத உணர்ச்சி; ஐ.என்.டி.ஜே. ஆர்ப்பாட்டத்தில் பேரெழுச்சி!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
 
காவி பயங்கரவாதிகளால் தரைமட்டமாக்கப்பட்ட தனியோனின் இல்லமாம் பாபர் மஸ்ஜிதை மீட்கும் அறப்போராட்டத்தில் ஐ.என்.டி.ஜே. ஆர்பரித்து களமிறங்கி, மேலப்பாளையம் முதல் சென்னை வரை 'பாபர்மஸ்ஜித் மீட்பு ரதயாத்திரை' அறிவித்தது. ஆளும் வர்க்கத்தின் தடையையும் மீறி, அயோக்கியர்களின் தடைக் கற்களையும் தவிடு பொடியாக்கி, ரதயாத்திரையை நடத்திக் காட்டி கைதாகினர் இதஜவின் வேங்கைகள். 
 
அதன் தொடர்ச்சியாக டிசம்பர் 6 அன்று மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்த ஐ.என்.டி.ஜே., அல்லாஹ்வின் பேரருளால் பேரெழுச்சியுடன் நடத்தி முடித்துள்ளது. சென்னையில் தேசியத்தலைவர் எஸ்.எம்.பாக்கர் தலைமையிலும், மாநிலத்தின் ஏனைய பகுதிகளில் மாநில நிர்வாகிகள் தலைமையிலும் போராட்டங்கள் நடந்தேறின. சென்னையில் நடபெற்ற ஆர்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்  தலைவர் தொல்.திருமாவளவன், யாதவ மகாசபைத் தலைவர் தி.தேவநாதன், உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டு தங்களின் கண்டங்களை பதிவு செய்தனர். புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! 

திங்கள், 5 டிசம்பர், 2011

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு; இதஜ கண்டனம்!

உசார்; பெண்களை தடம் மாற்றும் குழந்தைகள்!

நன்றி;தினத்தந்தி

ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் புதிய கிளை!

விழித்திருக்கும் நேரமெல்லாம் சமுதாயத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கும்  வீரிய மிக்க   இந்திய  தவ்ஹீத்  ஜமாத்தின் புதிய கிளை ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் துவங்கப் பட்டது! மாநிலப் பேச்சாளர் முஹய்யிதீன் மற்றும் மாவட்ட தலைவர் முசம்மில்ஹார் முன்னிலையில் கீழ்க் கண்டவர்கள் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப் பட்டனர். அல்ஹம்து லில்லாஹ்

தலைவர் -எம்.ஜமால் முஹம்மத்
துணைத்தலைவர் - சீமான் அலி
செயலாளர்- தவ்பிக் ரஹ்மான்
துணைசெயலர்-  எஸ்.காதர்   மைதீன்
பொருளாளர்-நூர் முஹம்மத்
மாணவர் அணி - யாசிர் அரபாத்
மீனவர் அணி-நைனா முஹம்மத்.  
 

டிஎன்டிஜேவின் அயோக்கியத்தனம்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் பாபர் மஸ்ஜித் மீட்பு போராட்டத்தை குலைப்பதற்காக தனி நபர் ஜமாஅத்தினர் அரங்கேற்றியுள்ள ஆண்மையற்ற நடவடிக்கை....

நீதிமன்றத்தில் எங்களுக்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சங்கத்திற்கும் தொடர்பில்லை என்று சொல்லி மனு கொடுத்த தனி நபர் ஜமாஅத்தினர் இன்று டிரஸ்ட் முலமாக பதிவு செய்யப்பட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் பாபர் மஸ்ஜித் போராட்டத்தை தடுக்கக்கோரி காவல்துறையில் மனு கொடுத்து வருகின்றனர். 

அது மட்டுமல்லாது வேறு சில்லரைத்தனமான வேலைகளையும் செய்து வருகின்றனர்.

இறைவன் அருளால் இந்தத் தடைகளை வென்று காட்டுவோம். பாபர் மஸ்ஜித் மீட்பிற்கான ஐஎன்டிஜேவின் போராட்டங்களை தொடர்ந்து நடத்துவோம்.

முஸ்லிம் சமுதாயத்தினரே பள்ளிவாசலை மீட்கும் போராட்டத்தை தடுக்கும் இந்த அயோக்கியர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.

- எஸ்.எம். சையது இக்பால்
துணைப் பொதுச் செயலாளர்

வியாழன், 1 டிசம்பர், 2011

முஹர்ரம் 10.செய்யவேண்டியவையும்-செய்யக்கூடாதவையும்!


முஹர்ரம் 10.செய்யவேண்டியவையும்-செய்யக்கூடாதவையும்!


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

முஸ்லிம்களில் சிலர் முஹர்ரம் 10 வந்துவிட்டால், அந்த நாளில் என்னசெய்ய வேண்டுமென்று மார்க்கம் சொல்லியிருக்கிறது என்றெல்லாம் பார்ப்பதில்லை காலம் காலமாக நடைமுறையில் என்ன உள்ளதோ அல்லது ஆலிம்சாக்கள் என்ன சொல்கிறார்களோ அதை செய்து நன்மைக்கு பதிலாக அல்லாஹ்விடம் பாவத்தை பெற்றுக்கொள்வதை பார்க்கிறோம்.

சில  பகுதிகளில் முஹர்ரம10. அன்று கொழுக்கட்டை சுட்டு, வீடுவாசலை நன்றாக கழுவிவிட்டு ஆலிம்சாவை கூப்பிட்டு பாத்திகா ஓதிவிட்டால் கடமை முடிந்தது என்ற பழக்கம் இருந்தது. அல்லாஹ்வின் பேரருளால் தற்போது இந்த பித்அத்  குறைந்துள்ளது. எனினும், முழுமையாக ஒழியவில்லை.

வேறு சில பகுதிகளில்  ஹுஸைன் [ரலி] அவர்கள் ஷஹீதானதை நாங்கள் நினைவு கூறுகிறோம் என்ற பெயரில், ஷியாக்களின் வழிமுறையான பஞ்சா எடுத்து, இந்துக்களின் வழிமுறையான தீ மிதிப்பதையும் முஸ்லிம்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இது தெளிவான வழிகேடாகும்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"
தன்னுடைய கன்னத்தில் அறைந்து கொள்பவனும் ஆடையைக் கிழித்துக்  கொள்பவனும் அறியாமைக் காலத்துச் சொற்களைப் பயன்படுத்துபவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்." [புகாரி எண்; 1294 ]

முஹர்ரம் மாதத்தில் செய்யவேண்டியது என்ன என்று நபி[ஸல்] அவர்கள் நமக்கு தெளிவாக்கிவிட்டார்கள். நாம் செய்யவேண்டியது இரண்டு நோன்புகள் நோற்பது மட்டுமே நபிவழியாகும்;

நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். இந்நாளின் சிறப்பென்ன? என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவுனையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் நாங்கள் தான் மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள் என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பாளர்;இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்,

ஆஷுரா தினத்தன்று நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்று அதை நோற்கும்படி  ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே! என நபித்தோழர்கள் கேட்டார்கள், அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால், எதிர்வரும் வருடம் ஒன்பதாவது நாளையும் (சேர்த்து) நோற்பேன் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள். (முஸ்லிம்)

ஆஷுரா நோன்பை ஆர்வமூட்டிய அல்லாஹ்வின் தூதர்;
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்;
"ஆஷுரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றைவிடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை!" [புகாரி எண்; 2006 ]

ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள் அஸ்லம் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதரை அனுப்பி, 'இன்று ஆஷுரா  நாளாகும்; எனவே, இந்நாளில் யாரேனும் சாப்பிட்டிருந்தால் அவர் இந்நாளின் எஞ்சிய பகுதியில் நோன்பாக இருக்கட்டும்! யாரேனும் சாப்பிடாமல் இருந்தால் அவர் நோன்பாக இருக்கட்டும்!" என்று அறிவிக்கச் செய்தார்கள்! [புகாரி எண்; 2007 ]

ஆஷுரா நோன்பு ரமளானுக்கு முன்னும்; பின்னும்
;
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;
அறியாமைக் காலக் குறைஷியர் ஆஷுரா நாளில் நோன்பு நோற்றனர்; நபி(ஸல்) அவர்களும் நோற்றனர். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, தாமும் அந்நாளில் நோன்பு நோற்று மக்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷுரா  நோன்பைவிட்டுவிட்டனர். விரும்பியவர் நோன்பு நோற்றனர். விரும்பாதவர்விட்டுவிட்டனர். [புகாரி எண்; 2002 ]

எனவே, சகோதர/சகோதரிகளே! இரண்டு நோன்பை நோற்பதன் மூலம் இறை உவப்பை பெறுவோம். மேலும் அநியாயக்கார அரசனான ஃபிர்அவ்ன்
இடமிருந்து அல்லாஹ்வின் தூதர் மூஸா[அலை] அவர்களையும் நம்பிக்கை கொண்டோரையும் அல்லாஹ் காப்பாற்றினான். அதுபோல் ஃபிர்அவ்னின் மறுவடிவமான அமெரிக்கா, இஸ்ரேல், சங்பரிவாரத்திடமிருந்தும், சக முஸ்லிம்களின் உயிர்- உடமை- மானத்தோடு விளையாடும் குழப்பவாதிகளிடமிருந்தும்  உலக முஸ்லிம்களை பாதுகாக்குமாறு அந்நாளில் துஆ செய்வோம்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
-முகவை எஸ்.அப்பாஸ் 


 

பாபர் மஸ்ஜித் மீட்பு போரட்ட பிட் நோட்டிஸ்.

 

பாபர் மஸ்ஜித் ஆர்ப்பாட்ட கோஷங்கள்!

 

சரத்பவார் தாக்குதலின் பின்னணியில் சங்பரிவார்...?

த்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு மத்திய விவசாய மந்திரி சரத்பவார்தான் காரணம் என்று கூறி அவரை வாலிபர் ஒருவர் தாக்கியுள்ளார். டெல்லியில் நடந்த ஒரு விழாவில் இந்த பரபரப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சரத்பவார் தாக்கப்பட்ட சம்பவத்தை அனைத்துக் கட்சிகளும் கண்டித்துள்ளன. பாரதீய ஜனதாக்கட்சியும் கூட வெளிப்படையாக கண்டித்துள்ளது. ஆனாலும் தாக்குதலுக்கு பாரதீய ஜனதா மீது காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரஷித் ஆல்வி குற்றம் சாட்டி உள்ளார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க தவறினால் மக்களின் கோபம் வன்முறையாக வெடிக்கும் என்று கடந்த செவ்வாய்க்கிழமை பாரதீய ஜனதா மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா கூறியதாகவும், அதன் எதிரொலியாகத்தான் இந்த தாக்குதல் சம்பவம் நடந்து உள்ளது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
 
ரஷித் ஆல்வியின் கருத்திலும் உண்மையில்லாமல் இல்லை. ஏனெனில் வன்முறையை எழுத்தின் மூலமும், பேச்சின் மூலமும் தூண்டுபவர்கள் சங் பரிவாரத்தினர். மும்பையில் நடைபெற்ற முஸ்லிம் இனப்படுகொலைக்கு சாம்னா பத்திரிக்கையில் பால்தாக்கரே எழுதிய தலையங்கமே பிரதான காரணியாக அமைந்தது என்பது மக்களுக்கு நினைவிருக்கலாம். அந்தவகையில் பாஜகவின் யஸ்வந்த் சிங்கா'வின் பேச்சு இந்த தாக்குதலுக்கு அடிப்படையாக இருக்கலாம் என காங்கிரசின் சந்தேகம் அர்த்தமுள்ளதாகவே மக்கள் கருதுகிறார்கள். 
 
மேலும், சரத்பவாரை தாக்கிய  அந்த வாலிபர், ''அன்னா ஹசாரே கூறுவது போல் ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் மசோதா தேவை என்றும் கத்தியுடன் கத்தியுள்ளார். இதன் மூலம் இவர் அன்னா ஹசாரேயின் ஆதரவாளர் என்பதும் புலப்படுகிறது. மேலும், சரத்பவார் தாக்கப்பட்டது பற்றி, அன்னா ஹசாரேயிடம் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தபோது, அதைக் கேட்ட அவர், என்ன... சரத்பவார் தாக்கப்பட்டாரா? ஒரே ஒரு அடிதானா? என்று  கேட்டுள்ளார். இதன் மூலம்  இப்படிப்பட்ட  வன்முறையை ஹசாரே ஆதரிகிறாரோ எனக் கருத வேண்டியுள்ளது. ஹசாரேயின் இந்தப் பேச்சைக் கணடித்து ஆங்காங்கே சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபடுவதைக் கண்டு பயந்த ஹசாரே, விளக்கம் என்ற பெயரில் மீண்டும் தனது உள்ளக்கிடக்கை வெளிப்படுத்தியுள்ளார். பத்திரிகையாளர்களை சந்தித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில்,  ''சரத்பவார் தாக்கப்பட்டதாக சிலர் வந்து என்னிடம் தெரிவித்தனர். அவர்களிடம், அவரை அடிக்க மட்டுமே செய்தார்களா? அல்லது வேறு எதுவும் நடந்ததா? என்று தான் அவர்களிடம் கேட்டேன். சரத்பவார் மீது இருந்த அக்கறை காரணமாக எனது கவலையை தெரிவித்தேன். மற்றபடி உள்நோக்கம் எதுவும் கிடையாது'' என்று கூறியுள்ளார்.
 
உண்மையில் சரத்பவார் மீது இவர் அக்கறை கொண்டவராக இருந்தால் தாக்கப்பட்ட செய்தி அறிந்தவுடன் துடித்துப்போய், 'அப்படியா! அவரை தாக்கி விட்டார்களா? அவருக்கு ஒன்றும் பாதிப்பில்லையே? இப்போது நலமாக உள்ளாரா? என்று கேட்பதற்கு பதிலாக, அடிக்க மட்டும் தான் செய்தார்களா? வேறு எதுவும் நடந்ததா? என்று கேட்பதன் மூலம் வேறு ஏதோ நடக்க வேண்டும் என்று ஹசாரே விரும்பினாரோ என்ற சந்தேகமும் மக்கள் மனதில் எழுகிறது. யஸ்வந்த் சின்காவின் பேச்சு, அதையொட்டி நடந்த சரத்பவார்  தாக்குதல், ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் அன்னா ஹசாரேயின்  அலட்சியமான கருத்து இவைகளுக்கு மத்தியில் ஏதோ ஒரு தொடர்பிருப்பதாக சந்தேகிக்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள். ஆயினும் ஒரு தனி மனிதனுக்கு எதிரானதாக இருந்தாலும், அரசுக்கு எதிரானதாக இருந்தாலும் எதிர்ப்பு என்பது ஆரோக்கியமான ஜனநாயக வழியில் அமையவேண்டுமேயன்றி வன்முறை வழியில் இருக்ககூடாது என்பதை அனைவரும் உணர்வது நல்லது.

அகிம்சை பேசும் கசாப்புக்கடைக்காரன் கத்தி!

லகமெங்கும் போர் என்ற பெயரின் அரச பயங்கரவாதம் நிகழ்த்திவரும் நாடான அமெரிக்காவே, ஒரு பயங்கரவாதி தனது நாட்டிற்கு வந்துவிடக் கூடாது என அனுமதி மறுக்கும் அளவுக்கு சிறப்பை பெற்றவர் திருவாளர் நரேந்திரமோடி. இவர் கையில் உள்ள சூலாயுதத்தில் இன்றும் முஸ்லிம்களின் இரத்தம் சொட்டிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் இவர் காந்தி பிறந்த மாநிலத்தை ஆளும் முதல்வர் என்பதால் அவ்வபோது அகிம்சை கருத்துக்களையும் அவிழ்த்து விட்டு வருகிறார். அந்த வரிசையில், போலீசார் மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ள இவர்,  அவ்வாறு இல்லையெனில், மக்களுக்கு போலீசிற்கு எதிரான உணர்வு ஏற்பட்டு விடும். அதற்கு போலீசார் இடம்தரக் கூடாது'' என்றும் கூறியுள்ளார்.
 
மனிதநேயம் குறித்து இந்த மாமிசபட்சிணி அடுத்தவர்களுக்கு உபதேசிக்கும் அருகதையுண்டா?
முஸ்லிம் இனப்படுகொலையை கண்டுகொள்ளாமல் காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கச் சொன்னவர், பல போலி என்கவுன்டர்களுக்கு தூண்டுகோலாக இருந்தவர், என்கவுண்டர்கள் மூலம் கொலை செய்வதை ஒரு கொள்கையாகவே குஜராத் அரசு வைத்திருக்கிறது. 2002ல் நடந்த கலவரங்கள், போலீஸ் அடக்குமுறைகள், கொலைகள் உள்ளிட்டவற்றுக்கு குஜராத் அரசே காரணம் என்று முன்னாள் குஜராத் டிஜிபி ஸ்ரீகுமார் அவர்களால் குற்றம் சாட்டப்பட்டவர் இந்த மோடி,
 
2005-ஆம் ஆண்டு சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் படுகொலை நிகழ்ந்தது. நவம்பர் 26-ஆம் தேதி அதிகாலை நரோல் க்ராஸிங்கில் இந்த போலி என்கவுண்டர் படுகொலை நிகழ்த்தப்பட்டது. சொஹ்ரபுத்தீன் ஷேக்கையும், அவரது மனைவி கெளஸர் பீயையும் இஷ்ரத் ஜஹான் உள்பட நான்கு பேரை படுகொலைச் செய்த அதே விவசாய பண்ணை வீட்டில் வைத்து கொலைச் செய்ததாகவும், சொஹ்ரபுத்தீன் மனைவி கெளஸர் பீயை கொலைச் செய்யும் முன்பு மோடியின் போலீஸ் மிருகங்கள் அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர் என்பதும் பின்னர் நிரூபணமானது. கவுஸர் பீயை கொலைச் செய்து தீயிலிட்டு கொளுத்தியுள்ளனர். இந்த போலி என்கவுண்டர் படுகொலைக்கு சாட்சியான போலீஸ் இன்ஃபார்மர் துளசிராம் பிரஜாபதியை கடந்த 2006-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி படுகொலைச் செய்தனர்.இவையெல்லாம் மோடியின்  மனிதநேய[!] ஆட்சிக்கு சிறு உதாரணங்கள்.
 
மேலும், போலி என்கவுண்டர்கள் மூலம் முஸ்லிம்கள் உயிரை பறிப்பது ஒருபுறம், ஏற்கனவே கொன்றுவிட்டு என்கவுண்டர் நாடகமாடிய இந்த மோடியின் முகத்திரை இஸ்ரத் ஜஹான் விசயத்தில் வெளிப்பட்டதே! ""இந்துக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்காதீர்கள்" என்று மோடி அந்தக் கூட்டத்தில் வெளிப்படையாகவே உத்தரவிட்டதை, உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் சஞ்சீவ் பட் சாட்சியமளித்தார். அந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவும் மோடிக்கு ஆதரவாகச் செயல்படவே, தனது சாட்சியத்தையே உச்ச நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலமாக அவர் தாக்கல் செய்தார் என்பதற்காக அவரை பதவியை  விட்டு நீக்கி, பொய் வழக்குப் போட்டு சிறையில் தள்ளினாரே மோடி! இவர் மனிதநேயம் பேசுவதா?
 
என்ன செய்வது?  சவப்பெட்டி ஊழல் முதல், நில ஒதுக்கீடு ஊழல், சுரங்க ஊழல் என அத்தனை ஊழல்களையும் 'அசால்டாக' செய்து விட்டு, பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சிக் காலத்தில் (1999) தொலைத்தொடர்புத் துறையில் ரூ.43,523 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய அமைச்சர் மிலிந்த் தேவ்ரா'வால் குற்றம் சாட்டப்படும் இவர்கள், ஊழலுக்கு எதிராக ரதயாத்திரை வெட்கமின்றி, நடத்தும் போது, மனிதநேயம் பேசுவதில் என்ன ஆச்சர்யமிருக்கிறது? மோடி மனித நேயம் பேசி அதைக் கேட்கும் நிலையில் நமது நாடு உள்ளது வேதனைக்குரியதுதானே!
 
 

ஜூலையா? நவம்பரா? முதல்வரே எது உண்மை..?

ண்மையில் தமிழக அரசு பேருந்துக்கட்டணம் மற்றும் பால்விலையை உயர்த்தியது.  மத்திய அரசு போதிய நிதி உதவி தரவில்லை என்பதால்தான் இவ்வாறு விலை உயர்த்தப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.  ஆனால் கடந்த 7.7.2011 அன்று வெளிவந்த நாளிதழ்களில் முந்தைய திமுக அரசை விட கூடுதல் நிதிகளை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கியுள்ளதாக முதல்வர் ஜெயலலிதாவும், மத்திய திட்டக் கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியாவும் பத்திரிக்கையளர்கள் சந்திப்பில் கூறிய செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த செய்தி இதுதான்;
 
''முதல்வர் ஜெயலலிதா நேற்று டெல்லி சென்று [6 .7.2011 ]மத்திய திட்டக் கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியாவுடன் பேச்சு நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கினார். நிதி ஒதுக்கீடு குறித்தும் அவர் பல்வேறு கோரிக்கைகளை வைத்தார்.
தமிழக அரசின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப் பாராட்டு தெரிவித்த அலுவாலியா வளர்ச்சி விகிதத்தையும் பாராட்டினார். கூட்டத்தின் இறுதியில் அலுவாலியாவும்,ஜெயலலிதாவும் சேர்ந்து செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது அலுவாலியா கூறுகையில், தமிழக திட்டப் பணிகளுக்குரூ. 23,535 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது முதல்வர் ஜெயலலிதா கோரிய நிதியை விட ரூ. 535 கோடி அதிகம். மேலும் கடந்த ஆண்டு[திமுக ஆட்சி] திட்ட ஒதுக்கீட்டை விட ரூ. 3467 கோடி அதிகம் என்று தெரிவித்தார்.இதைத் தொடர்நது தமிழக அரசு கோரியதை விட கூடுதலாக நிதி ஒதுக்கிய திட்டக் கமிஷனுக்கு முதல்வர் ஜெயலலிதா பாராட்டு தெரிவித்துக் கொண்டார்.
 
மேற்கண்ட செய்தியை மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் ஜி.கே. வாசனும் உறுதிப்படுத்தும் வகையில் நவம்பர் 19 அன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழகத்தை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துதாக முதல்வர் ஜெயலலிதா கூறியது தவறான தகவல்.கடந்த 2011-12 ம் ஆண்டில், தமிழகத்தின் முக்கிய திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ. 23 ஆயிரத்து 636 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது 2010 -11 ம் ஆண்டைக் காட்டிலும் ரூ. 3467 கோடி அதிகம். இதில் இருந்து அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு ஒரே மாதிரியே நடத்துவதை அறியலாம்'' என்று கூறியுள்ளார். ஆனால் ஜெயலலிதாவோ மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்கிறார். மத்திய அரசு ஒத்துக்கொண்ட நிதியை ஒதுக்கவில்லை என்று ஜெயலலிதா கூறுவாரானால், அந்த நிதியைப் பெற மத்திய அரசை நிர்பந்திக்கும் வகையில் முயற்ச்சிகள் மேற்கொள்வதை விடுத்து, மக்கள் தலையில் மிளகாய் அரைப்பது போல விலைவாசியை உயர்த்துவது நியாயமா? அல்லது மத்திய அரசு உண்மையில்  நிதியே ஒதுக்கவில்லை என்றால், முதல்வர் முன்னிலையில் மத்திய திட்டக்கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியா சொன்ன செய்தி பொய் என்று சொல்லப்போகிறாரா? அப்படியும் சொல்லமுடியாதே! ஏனென்றால் ஜெயலலிதாவின் கட்சிப் பத்திரிக்கையான நமது எம்.ஜி.ஆர் நாளிதழும் இந்த செய்தியை வெளியிட்டு, அம்மாவின் சாதுர்யத்தால் கூடுதல் நிதியை மத்திய அரசில் பெற்றுள்ளதாக புகழ் பாடியுள்ளதே! எனவே மத்திய அரசு நிதி ஒதுக்கியது குறித்து ஜூலையில் முதல்வர் சொன்னது உண்மையா? அல்லது மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று நவம்பரில் சொன்னது உண்மையா? முதல்வர் தெளிவுபடுத்துவரா?  

மனிதன் அறிவை மங்கசெய்யும் அனைத்து பொருட்களும் போதை பொருட்களே; இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் விவாத முடிவு!

ள்ளிக்கூட விடுமுறை நாட்களில் நம் வீட்டுச் சிறுவர்கள் அண்டை வீட்டு சிறுவர்களை நோக்கி, வாங்கடா! விளையாடப் போவோம்' என்று சொல்வதைப் பார்க்கிறோம். அதே போல சிலர் பொழுது போக்குக்காகவும், சிடியாக்கி பணமாக்குவதற்காகவும் தான்  விவாதம் செய்கிறார்களோ என எண்னும் அளவுக்கு விவாதங்களில் ஈடுபடுவதைப் பார்க்கிறோம். முடிவே இல்லாத இப்படிப்பட்ட விவாதங்களில் இருந்து மாறுபட்டு ஒரு பயனுள்ள அவசியமான விவாதம் ஒன்று சென்னையில் சமீபத்தில் நடந்தேறியுள்ளது.
 
கள் உணவின் ஒரு பகுதி என்றும், கள் இறக்க தமிழகத்தில் விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என்றும், பனை, தென்னை பொருட்களை மூலப் பொருட்களாக கொண்டு மதுபானங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு கள் இயக்கம் தொடர்ந்து போராடி வருகிறது. இதன் ஒருங்கிணைப்பாளர்  நல்லசாமி, கள்ளை காந்தி ஆதரித்தார்., மத்திய அரசு கள்ளுக்கு நிதி ஒதுக்கியது, கள் உணவுப் பொருள்தான் என்று மருத்துவம் சொல்கிறது என்றெல்லாம் பேசி வந்தார். மேலும் கள் இறக்குமதி செய்வதை வலுவாக எதிர்த்த முன்னாள் பனைவாரிய நலத்தலைவர் குமரி அனந்தனை விவாதத்திற்கும்  அழைத்தார். நல்லசாமியின் விவாத அறைகூவலை குமரி அனந்தன் ஏற்றதையடுத்து கடந்த 23  ஆம் தேதி சென்னையில் விவாதம் நடைபெற்றது.
 
கள் உணவுப் பொருள் என்ற தலைப்பில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமியும், கள் போதைப் பொருள் என்ற தலைப்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனும் பேசினார்கள். நடுவராக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஜி.எஸ்.ஆறுமுகம் கலந்து கொண்டார்.
விவாதத்தில் கள் உணவுப்போருளே என்று நிரூபிக்கவேண்டிய நல்லசாமியோ, ''திருவள்ளுவர் சொல்லிவிட்டார் இறைச்சி உண்ணக்கூடாது என்று இருக்க முடியாது. ஒரு அரசின் கடமை என்ன? சத்தான உணவு கொடுப்பது. வாழ்க்கை தரத்தை உயர்த்துவது. உடல் நலத்தை பாதுகாப்பது. இவை அனைத்தும் கள்ளில் உள்ளது. இப்போது உள்ள மதுவில் என்ன உள்ளது. ஆல்கஹாலை தவிர ஒன்றும் இல்லை. சித்த வைத்தியத்தில் கள் மருந்து. கள்ளினும் காமம் இனிது என்று திருவள்ளுவரே கூறியுள்ளார்'' என்று சொல்ல,
நல்லசாமியின் கூற்றை மறுத்த குமரி அனந்தனோ,  ''கள்ளும் இனிது, காமமும் இனிது என்று திருவள்ளுவர் கூறவில்லை. கள்ளைவிட காமம் இனிது. கள்ளை குடித்து கெட்டு போகாதீர்கள். காதலியின் காதல், காமம் இனிது என்றே திருவள்ளுவர் கூறியுள்ளார். மது என்பது மருத்துவரின் அறிவுரைப்படி மருந்தாக மட்டுமே இருக்க வேண்டும். மருந்தே விருந்தாக ஆகிவிடக் கூடாது. நம் அனைவரின் நோக்கம் முழுமையான மது விலக்காகவே இருக்க வேண்டும் என்று மடக்கி திருக்குறள் பற்றிய நல்லசாமியின் அறியாமையை விவரித்தார்.
இவ்வாறாக நடந்த விவாத முடிவில், நடுவர் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ஜி.எஸ்.ஆறுமுகம், ''மக்களுக்கு சத்துணவு அளிப்பதும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும், பொது சுகாதாரத்தை காப்பதும் அரசின் கடமை என அரசியல் அமைப்பச் சட்டப் பிரிவு 47 கூறுகிறது. இதன்படி, கள்ளுக்கு அரசு தடை விதித்திருப்பது சரியே. மனிதனின் அறிவை மங்கச் செய்கின்ற பொருள்கள் அனைத்தும் போதைப் பொருள்களே. அப்படியானால், கள்ளும் போதைப் பொருளே. எனவே, கள்ளுக்கும் தடை விதிப்போம், மற்ற மதுபானங்களுக்கும் தடை விதிப்போம் என்று தீர்ப்பளித்தார். 
 
இந்த விவாதத்தின் தீர்ப்பில்,  மது விசயத்தில் இஸ்லாம் கூறும் கருத்து வெளிப்பட்டுள்ளது. 
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'பித்உ' குறித்துக் கேட்கப்பட்டது. அது தேனால் தயாரிக்கப்படும் மதுவாகும். யமன் வாசிகள் அதை அருந்திவந்தார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'போதை தரும் (மது)பானம் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதேயாகும்' என்று கூறினார்கள்.[புகாரி]
மேலும், இந்த விவாதத்தின் மூலம் கள் என்பது உணவுப்பொருள் அல்ல. போதைப்பொருள் தான் என்று குமரி அனந்தனால் நிரூபிக்கப்பட்டுள்ளது. இனியாவது கள்ளை தூக்கிப்பிடித்துக் கொண்டு திரியாமல் 'நல்ல'சாமியாக மாற நல்லசாமி முயற்ச்சிக்கவேண்டும். அரசு உடனடியாக பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும். அப்போதுதான் மக்கள் நலன் நாடும் அரசாக இருக்கமுடியும்.

பரபரப்பான செய்திகளுடன் இப்போது விற்பனையில் இந்தவார சமுதாயமக்கள் ரிப்போர்ட்...