வியாழன், 31 மார்ச், 2011

எதையெல்லாம் தாங்குவது?

சில ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்வி, "ராஜாத்தி அம்மாள் யார்?' அதற்கு முதல்வர் கருணாநிதி அளித்த சாதுர்யமான பதில், "என் மகள் கனிமொழியின் தாய்'. தர்மசங்கடமான ஒரு கேள்வியை எளிமையாக, சொல்வன்மையால் கருணாநிதி எதிர்கொண்ட அழகை எதிர்க்கட்சியினரும்கூட ரசிக்கவே செய்தார்கள்.

இரு நாள்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிக்குத் தமிழக முதல்வர் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், கலைஞர் தொலைக்காட்சி தொடர்பாக ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அளித்த பதில்: "கலைஞர் டி.வி. கருணாநிதிக்குச் சொந்தமானது அல்ல. கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் அதில் பங்குதாரர்களாக இருக்கிறார்கள்' அவ்வளவே!

இப்போதும் அதே சாதுர்யத்துடன் தமிழக முதல்வர் பதிலளித்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அப்போது ரசித்ததுபோல இப்போது அவரது பதிலை ரசிக்க இயலவில்லை. முந்தைய பதிலின் பின்புலத்தில் ஒரு தனிநபரின் அன்பின் விரிவும் ஆழமும் இருந்தது. இப்போதைய பதிலின் பின்புலத்தில் பொதுமக்களின் பணம், சட்ட விதிமீறல், முறைகேடு, அரசியல் ஆதாயம் எல்லாமும் வெட்டவெளிச்சமாக இருக்கிறது.

ஒரு தனிநபரின் மனைவியும் மகளும் தனிப்பட்ட முறையில் சொத்து வைத்திருப்பது புதிதல்ல. முடியாத செயலும் அல்ல. அது ஒருவகையில் பூர்வீகச் சொத்தாக இருக்கலாம். அல்லது கணவன், தந்தை வழியாகக் கிடைத்ததாக இருக்கலாம். அல்லது அவர்கள் வணிகம் நடத்தியோ, நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தோ சம்பாதித்ததாகக்கூட இருக்கலாம். அதேவேளையில், இத்தகைய நடவடிக்கைகளில் அந்த மகளோ அல்லது மனைவியோ சட்டவிதிகளை மீறியிருந்தால், பொருளாதாரக் குற்றம் செய்திருந்தால், அவர்களைத்தான் சட்டம் தண்டிக்குமே தவிர, கணவரையோ அல்லது தந்தையையோ அல்ல என்பதும் எல்லோரும் அறிந்ததுதான்.

மகள் 20 விழுக்காடு பங்குகள் வைத்திருக்கிறார், மனைவி 60 விழுக்காடு பங்குகள் வைத்திருக்கிறார் என்றால், அதற்கான பணம் ரூ.214 கோடியை கடனாகப் பெற்று வட்டியுடன் கடனைச் செலுத்திவிட்டார்கள் என்றால், நல்லது. அப்படியே ஆகட்டும். ஆனால், யாரோ ஒருவரால் எந்தவித அடமானமும் இல்லாமல் இவ்வளவு பெரிய தொகை கடனாகக் கொடுக்கப்பட்டது ஏன்? கருணாநிதி முதல்வராக இல்லாமல் இருந்திருந்தால், அவரது கட்சியினரான ஆ. ராசா மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இல்லாமல் இருந்திருந்தால், அந்த நிறுவனம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலம் லாபம் அடைவதாக இல்லை என்றால், கலைஞர் தொலைக்காட்சிக்கு கடன் கொடுத்துக் கைதூக்கிவிட முன்வந்திருக்குமா என்கிற கேள்விக்கும் முதல்வர் கருணாநிதி பதிலளித்திருக்க வேண்டுமே, ஏன் செய்யவில்லை?

கனிமொழி மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்டபோது, கலைஞர் டி.வி. செயல்பட்டுக் கொண்டிருந்தது. அவர் அதில் பங்குதாரர் என்றால், அதனை உரிய படிவத்தில் தெரிவித்திருந்தாரா? அவை கடன்தான் என்பதைக் குறிப்பிட்டிருந்தாரா?

முதல்வர் கருணாநிதியின் சொத்து மதிப்பு ரூ. 4.92 கோடி என்றால், தயாளு, ராஜாத்தி இரு மனைவிமார்களின் மொத்தச் சொத்து மதிப்பு ரூ. 39.42 கோடி. இப்படியிருக்க, இந்தச் சொத்து மதிப்பைக் காட்டிலும் 5 மடங்கு அதிகமாக ரூ. 214 கோடி கடன், எந்த அடமானமும் இல்லாமல், அநியாய வட்டி என்றாலும் பரவாயில்லை, யாராவது தருவார்களா?

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற மனிதர், தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா புறப்படும்போது, அவரது சேவையை நினைவுகூர்ந்து ஒரு பாராட்டுவிழா நடத்தப்படுகிறது. விழாவை ஏற்பாடு செய்தவர்கள், காந்தியின் மனைவி கஸ்தூரிபா அம்மையாருக்கு சில நகைகளைப் பரிசாக அளிக்கின்றனர். அந்த நகைகளைப் பொதுக்கணக்குக்கு நன்கொடையாக அளித்து விடு என்று மனைவிக்குச் சொல்கிறார் காந்திஜி.

கஸ்தூரிபா மறுக்கிறார். ""இவை எனக்காக அளிக்கப்பட்ட நகைகள்; உங்களுக்கானது அல்ல. இதைத் தர மாட்டேன்''.

ஆனாலும் காந்திஜி சொல்கிறார். ""கஸ்தூரிபா என்பதற்காக அளிக்கப்பட்ட நகைகள் அல்ல அவை. அவர்களுக்கு உதவிகள் செய்த என்பொருட்டு உனக்கு அளிக்கப்பட்ட பரிசு. அவை உனக்கானவை அல்ல'' என்று சொல்லி வலுக்கட்டாயமாகப் பறித்து பொதுக்கணக்கில் சேர்க்கிறார்.

தயாளு அம்மாள் தனது மனைவி என்று ஒத்துக் கொள்கிறார். கனிமொழி தனது மகள் என்பதையும் ஒத்துக் கொள்கிறார். தனது சொத்துக் கணக்கில் மனைவியின் சொத்துகளையும், துணைவியின் சொத்துகளையும் பட்டியலிட்டுச் சமர்ப்பிக்கிறார். அவர்கள் பங்குதாரர்களாக உள்ள கலைஞர் தொலைக்காட்சியின் அலுவலகத்தைக் கட்சித் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இயங்க அனுமதிக்கிறார். அந்தத் தொலைக்காட்சிக்குத் தனது பெயரைச் சூட்டி மகிழ்கிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இன்னின்ன என்பதுவரை தனது ஆலோசனைப் பங்களிப்பையும் தந்து உதவுகிறார். ஆனால், கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களாகத் தனது மனைவியும் மகளும் இருப்பதைத் தவிரத் தனக்கும் அதற்கும் தொடர்பே இல்லை என்று நாகூசாமல் கூறவும் செய்கிறார்.

எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்; இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்? "கடற்கரையில் காற்று வாங்கும் அண்ணாவிடம் இதையெல்லாம் கூறி வருந்துவதைத் தவிர, வேறென்ன செய்ய?' அப்படி ஓர் அண்ணா, அவருக்கு இப்படி ஒரு தம்பி!

நன்றி; தினமணி 01 -04 -2011

 
                                        ஏக இறைவனின் திருப்பெயரால்....

            ததஜவின் தரங்கெட்ட அரசியல் நிலைப்பாடு!!

தேர்தல் நேரம் நெருங்கும் பொழுதெல்லாம் உங்கள் ஒட்டு யாருக்கு? அல்லது சமுதாய ஒட்டு யாருக்கு? என்ற தலைப்பில் ஒரு கூட்டத்தை கூட்டி, சத்தியத்திற்க்காகவும் தங்களின் ஜீவாதார உரிமைக்காகவும் எந்த சுயநலமும் இல்லாமல் அநியாயக்கார அரசனை எதிர்க்கும் முகமாகவும் பெரும் திரளாக திரளும் மக்கள் சக்தியை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அரசியல் அரக்கர்களிடம் அடகு வைப்பதும் அதற்க்கு ஈடாக பெறவேண்டியதை பெற்று பொட்டி பாம்பாக அவர்களின் காலை சுற்றுவதும் தனி நபர் ஜமாத்தின் தரங்கெட்ட நிலை என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

இதை மெய்பிக்கும் முகமாக சமீபத்திய அவர்களின் அரசியல் நிலைபாடும் அமைந்துள்ளது.

எதிர்வரும் வரும் சட்ட சபை தேர்தலில் தங்களின் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் ஆளும் திமுகவுக்கு தான் என்ற ஒரு அவல நிலைப்பாட்டை எடுத்து இருக்கின்றனர்.

இவர்கள் இந்த நிலைப்பாட்டிற்கு ஆளாக என்ன காரணம்?காரணம் வேறாக இருந்தாலும் அடிப்படை காரணமாக இவர்கள் கூறுவது "ஆளும் திமுக அரசு இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக உறுதியளித்துள்ளது.அதுவும் தனது தேர்தல் அறிக்கையில்.எனவே தான் நாங்கள் திமுக ஆதரவு நிலைபாட்டை எடுத்திருக்கின்றோம்" என்பதுதான்.

இதோ! ததஜ வின் கொள்ளை புரத்தலைவருமான,அதிகாரபூர்வத்தலைவருமான அதே நேரத்தில் ஆயுட்கால தலைவருமான பொய்யர் பீஜே கூறுவதை பாருங்கள்..
.
"தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இந்த இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக அறிவித்திருக்கிறார்கள். அ.தி.மு.க. கூறாமல் சென்றுவிட்டது. தேர்தல் அறிக்கையில் கூறாமல் பிரசாரங்களில் கூறுவதை நாங்கள் உறுதியாக எடுத்துக்கொள்ள முடியாது.

அதன் அடிப்படையில், ஒட்டுமொத்த முஸ்லிம்களின் கோரிக்கை அடிப்படையில் தி.மு.க.வை ஆதரிப்பது என்று எங்கள் மாநில பொதுக்குழுவில் முடிவெடுத்திருந்தோம். அந்த முடிவினை முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து தெரிவித்தோம். பொதுக்குழுவில் எடுத்த முடிவுப்படி முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு தரவேண்டும் என்றும் நாங்கள் அவரிடம் கூறியிருக்கிறோம்"

ஆளும் திமுக அரசு இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக தனது தேர்தல் அறிக்கையில் எந்த இடத்தில் கூறியுள்ளது என்பதை இந்த பொய்யர் பீஜே விளக்குவாரா? மாறாக ஆளும் திமுக அரசு இஸ்லாமியர்களின் இடவொதுக்கீட்டை கூடுதலாக அதிகரிப்பதற்கு "பரிசீலிக்கப்படும்" என்றுதான் கூறி இருக்கிறது.இப்படி இருக்க அதை திருத்தி கூறும் மர்மம் என்ன? சமுதாயத்தை அடகு வைத்து பெறவேண்டியதை பெற்றுவிட்டதற்க்கு தான் இந்த திரிபு நாடகமோ?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவோ இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டை கூடுதலாக அதிகரிப்பதற்கு வாக்குறுதி அளித்திருப்பதை சற்று சிந்தித்து பாருங்கள்.

சிறுபான்மையினருக்குத் தனி இட ஒதுக்கீடு கிடைக்கும் வகையில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மூலம் எனது ஆட்சிக் காலத்தில்தான் சட்டம் திருத்தி அமைக்கப்பட்டது. ஆனால், 2006-ம் ஆண்டில் கருணாநிதி முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, இஸ்லாமியர்கள் இடம் பெறாத வகையில் இந்தச் சட்டம் திருத்தப்பட்டது. மேலும், கருணாநிதி தன்னிச்சையாக இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை அறிவித்தார். என்றாலும், இதுவும் முறையாக அமல்படுத்தப்படவில்லை. அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு விகிதம் உயர்த்தி அறிவிக்கப்படும். மேலும், அது முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதும் கண்காணிக்கப்படும். இஸ்லாமியர்களின் இதரக் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும்

முதலாவதாக முஸ்லிம்களின் இடஒதுக்கீடு உயர்த்தப்படும் என்று உறுதிபடக் கூறுகிறார்.

இரண்டாவதாக இடஒதுக்கீடு  கொடுத்த மாதிரி கொடுத்து அதன் பயன்களை
இஸ்லாமியர்கள் பெற்றுவிடக்கூடாது என்பதற்கு திமுக அரசு பார்த்த உள்வேலையை தனது கண்காணிப்பின் மூலம் உடைத்து எறிவதாகவும் உறுதிபடக் கூறுகிறார்.

மூன்றாவதாக இஸ்லாமியர்களின் இதர கோரிக்கைகளை "பரிசீலிக்கப்படும்" என்று கூறுகிறார்.

அதாவது முஸ்லிகளின் மற்ற தேவைகள் , கோரிக்கைகள் கலந்தாலோசித்து ஏற்றுக்கொள்ளும் விதமாக இருந்தால் ஏற்றுக்கொள்ளப்படும் இல்லையெனில் நிராகரிக்கப்படும்.என்ற அர்த்தத்தில் "பரிசீலிக்கப்படும்" என்று கூறுகிறார். சுருக்கமாக கூறுவதாக இருந்தால் பரிசீலிக்கப்படும் என்ற இந்த வார்த்தையானது வலுவற்ற ஒரு வார்த்தையாகும்.

இஸ்லாமியர்களின் இதர தேவைக்காக "பரிசீலிக்கப்படும்" என்று ஜெயலலிதா சொன்ன இந்த வலுவற்ற வார்த்தையை தான் இஸ்லாமியர்களின் அத்தியாவசிய அடிப்படை கோரிக்கையான இடஒதுக்கீட்டுக்கு திமுக அரசு பயன்படுத்துவதை கவனியுங்கள்.
''இஸ்லாமிய மக்களுக்கு வழங்கப்படும் மூன்றரை சதவிகித இட ஒதுக்கீட்டினை மேலும் உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும்.

இடஒதுக்கீடு உயர்த்தப்படும் என்பதற்கும் பரிசீலிக்கப்படும் என்பதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தையும் வலிமையையும் அது எவ்விடத்தில் திமுக அரசால் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் சாதாரண சாமானியனும்  புரிந்து கொள்ளும் பொழுது இந்த சந்தர்ப்பவாதிகளுக்கு புரியாமல் போனது தான் ஆச்சரியம்.

உண்மையிலையே புரியவில்லை என்றால் புரியவைக்கலாம். புரிந்தும் புரியாதது போல் வேடமிடும் வேடதாரிகளை  என்னவென்று சொல்வது.

தரம் தாழ்ந்து சமுதாயத்தை அடகு வைத்து  இவர்கள் எடுத்த தரங்கெட்ட தற்ப்பொழுதைய அரசியல் நிலைபாட்டை தனது இணையதளம் மூலம் தண்டோரா வேறு அடிக்கின்றனர்.

நடுநிலை சமுதாயமே! குள்ளநரிகளின் கூக்குரலில் மயங்கி மாய்ந்து விடாதீர்கள்!
வரும் தேர்தலில் யாருடைய வாக்குறுதிகளில் முஸ்லீம்களுக்கு முழு நன்மைகள் இருக்கிறது என்பதை ஆராய்ந்து, அறிந்து சிந்திதுனர்ந்து,வாக்களித்து வெற்றிபெற வேண்டுகிறோம்.

குறிப்பு :பச்சைப் பொய்யர் பீஜேயின் முக கவசத்தை கிழிக்கும் அடுத்த பதிவுகள் விரைவில் இன்ஷா அல்லாஹ்.....

இவன் : முபாரக்
குவைத் மண்டலம் 

ஏப்ரல்ஃபூல் ஒரு ஏகத்துவ பார்வை!


ஏப்ரல்ஃபூல் ஒரு ஏகத்துவ பார்வை!

உலக மகளிர்தினம், அன்னையர்தினம், குழந்தைகள் தினம், காதலர்தினம், இப்படி வருடத்தில் 365.நாட்களும் ஏதாவது ஒரு தினத்தை ஏற்படுத்தி அதை உலக மக்களில் பெரும்பாலோர் கொண்டாடுவதை பார்க்கிறோம். இதில் உருப்படாத பலவிஷயங்கள் உண்டு அதில் ஒன்றுதான் ஏப்ரல் முதல்நாள் கொண்டாடப்படும் ஏப்ரல் ஃபூல் எனப்படும் முட்டாள்கள் தினமாகும். இந்த முட்டாள்கள் தினம் எப்போது யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்பது பற்றி பல்வேறு கருத்துகள் நிலவிவருகின்றன. எனவே, இந்த தினம் எவ்வாறு தோன்றியது என்பதை ஆய்வு செய்யாமல், இந்த தினம் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை பார்ப்போம்.


இந்த முட்டாள்கள் தினம் என்றால், இல்லாததை சொல்லி மற்றவர்களை நம்பவைத்து அதில் மகிழ்ச்சி கொள்வது, அதாவது பொய்சொல்லி மற்றவர்களை ஏமாற்றுவதுதான் இந்த தினத்தின் கொண்டாட்ட முறையாகும். தாய்க்கு போன்செய்து அவர்களின் ஒரேமகன் விபத்துக்குள்ளாகி, குறிப்பிட்ட மருத்துவமனையில் அவசரப்பிரிவில் சேர்க்கப்பட்டு இருக்கிறான் என்று சொல்லி அந்த தாயை தவிக்கவிடுவது; அலுவலகம் சென்ற கணவனை பற்றி மனைவியிடம் , 'ஒங்க வீட்டுக்காரரை ஒரு பொண்ணோட இப்பதான் பீச்சுல பாத்தேன் என்று சரடுவிட்டு குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்குவது; இப்படி பல்வேறு வகையான பொய்கள் பல்வேறு பரிமாணத்தில் இந்த நாளில் அரங்கேறும் . இதில் வேடிக்கை என்னவெனில், அறிவுப்பூர்வமான மார்க்கத்துக்கு சொந்தக்காரர்களான முஸ்லிம்களில் சிலரும் இந்த முட்டாள்கள் தினத்தை கொண்டாடுவதுதான். இந்த தினத்தின் மைய கருப்பொருளான பொய் பற்றி இஸ்லாம்;


நபி [ஸல்] அவர்கள் அல்லாஹ்வின் தூதராக ஆவதற்கு முன்பிருந்தே வாய்மையாளராகதிகழ்ந்துள்ளார்கள். எந்த அளவுக்கெனில், இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத முஷ்ரிக்குகள் கூட நபியவர்கள் பொய் சொல்லக்கூடியவர் என்று சொன்னதில்லை. ஹெர்குலிஸ் மன்னனிடம் [அப்போது இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிராத] அபூசுப்யான்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களை பற்றி கூறிய வாசகம் பாரீர்;


ஹெர்குலிஸ்; அவர் [நபிஸல்] இவ்வாறு[தூதரென்று] வாதிப்பதற்கு முன் அவர் பொய் சொல்லக் கூடியவர் என்று எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா?

அபூ சுப்யான்;இல்லை.[ஹதீஸ் சுருக்கம்] நூல்;புஹாரி,எண் ;7

முஸ்லிமல்லாத மாற்றாரும் கூட வாய்மையாளர் என்று சான்று பகர்ந்த நம்தலைவரின் வழிவந்த நாம் முட்டாள்கள் தினத்தை கொண்டாட பொய் சொல்லலாமா?

நீங்கள் முஸ்லிமா? முனாஃபிக்கா?

'நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான்; பேசினால் பொய்யே பேசுவான்; ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்; விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். நூல்;புஹாரி

வியாபாரத்திலும் பொய் கூடாது;

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக்குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் (அருள் வளம்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!"நூல்;புஹாரி

வியாபாரத்தில் கூட பொய் கூடாது எனில், இந்த உதவாத முட்டாள்கள் தின பொய் தேவையா?

எந்த நிலையிலும் பொய்யுரைக்காத சத்திய சகாபாக்கள்;

தபுக் யுத்தத்தில் கலந்துகொள்ளாதவர்களில் மூவர் தவிர மற்றவர்கள் சாக்குபோக்கு சொன்னவர்கள் மன்னிக்கப்பட, பொய் சொல்லவிரும்பாத கஅப் இப்னு மாலிக்(ரலி) ஹிலால்[ரலி], முராரா[ரலி] ஆகியோர் பொய்யுரைக்க விரும்பாததால், அவர்களுக்கு ஏற்பட்ட நிலை பற்றி கஅப் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் கூறியதாவது;

அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் என்னை (இஸ்லாம் எனும்) நேர்வழியில் செலுத்திய பிறகு அவன் எனக்கு வழங்கிய மாபெரும் அருட்கொடை என்னவென்றால், (தபூக் போரில் நான் கலந்துகொள்ளாதது குறித்து வினவியபோது) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் (மற்றவர்களைப் போன்று) பொய்யுரைக்காமல் உண்மை பேசியதுதான். அவ்வாறு நான் பொய் சொல்லியிருந்தால் பொய் கூறிய(மற்ற)வர்கள் அழிந்ததைப் போன்று நானும் அழிந்து போயிருப்பேன்.

'நீங்கள் அவர்களிடம் திரும்பி வரும்போது அவர்களை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிடவேண்டும் என்பதற்காக உங்கள் முன்னிலையில் அல்லாஹ்வின் மீது அவர்கள் சத்தியம் செய்வார்கள். எனவே, நீங்கள் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்து விடுங்கள். (ஏனென்றால்) அவர்கள் அசுத்தமானவர்கள்; அவர்கள் சேருமிடம் நரகமாகும். அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த (தீய)வற்றுக்கு இதுவே பிரதிபலனாகும். நீங்கள் அவர்களின் மீது திருப்தியுறவேண்டும் என்பதற்காக உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்வார்கள். நீங்கள் அவர்களின் மீது திருப்தி கொண்டாலும் நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான (இத்தகைய) மக்களின் மீது ஒருபோதும் திருப்திகொள்ளமாட்டான்' எனும் வசனங்களை (திருக்குர்ஆன் 09:95, 96) அருளப்பெற்றபோது அந்தப் பொய்யர்கள் அழிந்து போனார்கள். நூல்;புஹாரி,எண் 4673


மற்றொரு ஹதீஸில்;
அல்லாஹ்வின் மீதாணையாக! உண்மை பேசுவதில் என்னைச் சோதித்ததைவிட சிறப்பாக வேறவரையும் அல்லாஹ் சோதித்தாக நான் அறியவில்லை. அல்லாஹ்வின் தூதரிடம் நான் உண்மை பேசியதிலிருந்து இறுதி நாள் வரை நான் வேண்டுமென்றே பொய் சொல்ல முனைந்ததில்லை. அந்தச் சமயத்தில் (என் உண்மைக்குப் பரிசாக) அல்லாஹ் பின் வரும் வசனங்களை அருளினான்.

'நிச்சயமாக அல்லாஹ் (தன்) தூதர் மீது அருள்புரிந்தான். (அவ்வாறே) துன்பவேளையில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்கள் மற்றும் அன்சார்களின் மீதும் (அருள் புரிந்தான்). அவர்களில் ஒரு பிரிவினரின் இதயங்கள் தடுமாறிக் கொண்டிருந்த பின்னரும் அவர்களை மன்னித்(து அவர்களின் மீது அருள் புரிந்)தான். நிச்சயமாக அவன் அவர்களின் மீது அன்பும் கருணையும் உடையோனாக இருக்கிறான்.' 'மேலும் எவருடைய விவகாரத்தில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தோ அந்த மூவரையும் அவன் மன்னித்தான்; (அவர்கள் நிலைமை எந்த அளவு மோசமாம் விட்டிருந்ததெனில்), பூமி இத்துணை விரிவாய் இருந்தும் அவர்களைப் பொறுத்தவரை அது குறும் அவர்கள் உயிர் வாழ்வதே சிரமமாம் விட்டிருந்தது. இன்னும் அல்லாஹ்விடமிருந்து தப்பிப்பதற்கு அவன் பக்கம் திரும்புவதைத் தவிர வேறு புகலிடம் இல்லை என்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள். பின்னர், அவர்கள் பாவத்திலிருந்து மீள வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அவர்களை மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ்தான் மிக மன்னிப்போனும், கருணையுடையோனுமாயிருக்கிறான். இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் வாய்மையாளர்களுடன் இருங்கள்.(திருக்குர்ஆன் 09:117-119) நூல்; புஹாரி, எண் 4678


கஅப் இப்னு மாலிக்[ரலி] உள்ளிட்ட மூவர் பொய் சொல்லி அல்லாஹ்வின் தூதரிடம் தப்பித்திருக்கமுடியும், ஆனால் அல்லாஹ்வுக்கு அஞ்சிய காரணத்தால் பொய்சொல்வதில் இருந்து தங்களை காத்துக்கொண்டார்கள் என்றால், சகாபாக்களும் எம்மைப்போன்ற மனிதர்கள்தான் என்று வாய்கிழிய பேசும் நாம், இந்த பொய்யை மூலதனமாக கொண்ட முட்டாள்கள் தினத்தை கொண்டாடலாமா?

பொய்யர்களுக்கு தண்டனை;


ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவித்தார்.
நபி[ஸல்]அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கி, 'இன்றிரவு உங்களில் யாரும் கனவு கண்டீர்களா?' என்று கேட்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். எவரேனும் கனவு கண்டு அதைக் கூறினால், 'அல்லாஹ் நாடியது நடக்கும்' எனக் கூறுவார்கள். ஒரு நாள், 'உங்களில் யாரும் இன்றிரவு கனவு கண்டீர்களா?' என்று கேட்டதும் நாங்கள் இல்லை என்றோம். அவர்கள், 'நான் இன்றிரவு ஒரு கனவு கண்டேன்; அதில் இருவர் என்னிடம் வந்து என்னுடைய கைகளைப் பிடித்து என்னைப் புனித பூமியொன்றுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே ஒருவர் உட்கார்ந்திருந்தார். நின்றிருந்த இன்னொருவரின் கையில் இரும்பாலான கொக்கிகள் இருந்தன. அவர் அதைக் கொண்டு உட்கார்ந்திருப்பவரின் கீழ்த்தாடையின் ஒருபுறம் குத்த அது அவரின் பிடரி வழியாக வெளியேறியது. இப்படியே தாடையின் இன்னொரு புறமும் செய்தார். இதற்குள் தாடையின் முதற் பகுதி ஒழுங்காகிவிட்டது . பின்பு இது குத்தப்பட்டதும் அது பழைய நிலையை அடைந்தது. உடனே நான் என்ன இது என்று கேட்டேன். அதற்கு இருவரும் 'ஆம்! முதலில் தாடை சிதைக்கப்பட்ட வரைப் பார்த்தீரே! அவர் பெரும் பொய்யர். அவர் பொய் பேச அது பலர் வழியாக உலகம் முழுவதையும் அடையும். நீர் பார்த்த அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும்.[ஹதீஸ் சுருக்கம்]நூல்;புஹாரி,

என்ன சகோதரர்களே! இம்மை/ மறுமையை பாழாக்கும் பொய்யும் , அதையொட்டிய இந்த முட்டாள்கள் தினமும் தேவையா? சிந்திப்பீர்!
 

தவறான தகவல் தந்தமைக்காக வருந்துகிறோம்

தனிநபர் ஜமாஅத்தின் தேர்தல் நிலைப்பாடு தொடர்பான நமது விளக்கத்தில் 'முஸ்லிம்லீக்கும் பாமகவும் ஒன்றா? என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வடித்திருந்தோம். அதில் முஸ்லிம்லீக்கில் முஸ்லிமல்லாத ஒருவர் உறுப்பினராக முடியாது என்றும், முஸ்லிமல்லாத ஒருவர் அக்கட்சியின் பொறுப்புக்கு வரமுடியாது என்றும் குறிப்பிட்டிருந்தோம். இந்த செய்தி முஸ்லிம் லீக் குறித்து நாம் அறிந்தவரை உள்ள அறிவின் அடிப்படையில் எழுதப்பட்டது. இருப்பினும் நன்கு உறுதிப்படுத்தும் நோக்கில் தாய்ச்சபையை இன்று நாம் தொடர்பு கொண்டு பேசியபோது,  முஸ்லிம்லீக்கின் கொள்கையை ஏற்றுக்கொண்ட எம்மதத்தவரும் அக்கட்சியில் சேரலாம் என்றும், முஸ்லிமல்லாத ஒருவரே மாநில நிர்வாகியாகவே  இருக்கிறார் என்ற தகவலும் அறிந்து கொண்டோம். எனவே நாம் அறிந்தவரை சொன்ன மேற்கணட் தகவலை வாபஸ் பெறுகிறோம். அதோடு  ஒரு தவறான தகவல் தந்தமைக்காக  வருந்துகிறோம். சம்மந்தப்பட்ட தாய்ச்சபையினரும், ஏனைய  சகோதரர்களும் மன்னிக்க வேண்டுகிறோம்.
 
அதே நேரத்தில் அக்கட்டுரையில்  எழுதப்பட்டுள்ள ஏனைய விஷயங்களில் நாம் உறுதியாக இருக்கிறோம். முஸ்லிம்லீக் ஒரு வன்னியருக்கு சீட்டுத்தருமா  என்று அந்த தனிநபர் கேட்டாரே! ஆனால் கேரளாவில் முஸ்லிமல்லாதவர்களுக்கும் தாய்ச்சபை வாய்ப்பளித்துள்ளது. எனவே முஸ்லிம் லீக்கோடு ஒருபோதும் பாமகவை ஒப்பிட முடியாது என்பதை  மீண்டும் ஆணித்தரமாக சொல்லிக்கொள்கிறோம். முஸ்லிம்களுக்கு தொடர்ந்து ஒரு சீட்டுக்கூட ஒதுக்காமல் வஞ்சிக்கும் பாமகவை, ஆதரிக்க சொல்லும்  தனிநபர் ஜமாஅத்தை மீண்டும் வன்மையாக கண்டிக்கிறோம். 

புதன், 30 மார்ச், 2011

முஸ்லிம் லீக்கும் பாமகவும் ஒன்றா?

கடந்த  நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு சீட்டுக் கூட முஸ்லிம்களுக்கு ஒதுக்காத பாமகவை ஆதரிக்க மாட்டோம்  என்று தீர்மானம்  போட்ட தனிநபர் ஜமாஅத், இந்த தேர்தலில் ஒரு சீட்டுக்கூட முஸ்லிம்களுக்கு  ஒதுக்காத அதே பாமகவை, கருணாநிதியை முதல்வராக்கியே தீர்வது என்ற தனது அபிலாசைக்காக இலவச இணைப்பாக ஆதரிப்பது  குறித்து ஏற்கனவே நாம் எழுதியுள்ளோம்.
 பாமக ஒரு சீட்டுக் கூட முஸ்லிம்களுக்கு  கொடுக்காததற்கு குறைந்த பட்சம் இந்த தனிநபர் கண்டிப்பதற்கு பதிலாக, அவ்வாறு கேள்வி கேட்பதே பைத்தியக்காரத்தனம் என்று சாடியதோடு, முஸ்லிம் லீக்கில் ஒரு வன்னியருக்கு சீட்டுக் கொடுப்பார்களா என்று சப்பைக் கட்டு கட்டி, பாமகவையும்- முஸ்லிம் லீக்கையும் ஒப்பிட்டு அந்த பொதுக்குழுவில் பேசியுள்ளார்.
 
முஸ்லிம் லீக்கும் பாமகவும் ஒன்றா? முஸ்லிம் லீக்கில் ஒரு முஸ்லிமல்லாதவர் உறுப்பினராக முடியுமா? ஒரு பொறுப்பிற்கு வர முடியுமா? முடியாது. காரணம் முஸ்லிம் லீக் முழுக்கக் முழுக்க முஸ்லிம்களின் அமைப்பாகும். ஆனால் பாமக அப்படியல்ல. அக்கட்சியில் எம்மதத்தவரும் உறுப்பினராகலாம். பொறுப்புக்கு வரலாம். பாமகவின் மாநிலத் துணைத்தலைவராக முஸ்லிமான கஸ்ஸாலி இருந்து வருகிறார். எப்படி திமுக-அதிமுகவில் எம்மதத்தவரும் இணையமுடியுமோ, பொறுப்புக்கு வரமுடியுமோ அவ்வாறே பாமக கட்சியிலும் வர முடியும். ஆனால் திமுக அதிமுக சில முஸ்லிம்களையாவது  வேட்பாளராக நிறுத்துகிறது. ஆனால் பாமக வெகுஜன அமைப்பு என்று சொல்லிக்கொண்டு, கட்சிப்பதவியில்  மட்டும் பெயருக்கு ஒன்றிரண்டு முஸ்லிம்களுக்கு வாய்ப்பு தந்து கொண்டு, தேர்தலில் மட்டும் முஸ்லிம்களுக்கு வாய்ப்பளிக்க தொடர்ந்து மறுக்கிறது என்றால், இத்தகைய கட்சியை நாம் ஆதரிப்பது அறிவுடமையா? என்று  கேட்டால் அக்கேள்வி பைத்தியக்காரத்தணமாம்.  ஆனால் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு மறுக்கும் அக்கட்சிக்கு முஸ்லிம்களின் வாக்கை செலுத்த சொல்வது மட்டும் உலக மகா அறிவாளித்தணமாம்.
 
இவ்வாறு நாம் வாதத்தை வைத்தவுடன் இந்த வார்த்தைஜால வித்தகர்கள் இன்னொரு வாதத்தை வைக்கலாம். பாரதீய ஜனதாவிலும் தான்  யார் வேண்டுமானாலும் சேரமுடியும். அதனால் அக்கட்சி ஜாதிக்கட்சி இல்லை என்று ஆகிவிடுமா என்று கேட்பார்கள்  இந்த அதிமேதாவிகள். பாரதீய ஜனதா மதவாத கட்சியாக இருந்தாலும் அக்கட்சி கூட முஸ்லிம்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கிறது என்பது  ஒருபுறம், அடுத்து பிஜேபி போன்று பாமக மதவாத பயங்கரவாதத்தில்  ஈடுபடும் கட்சியல்ல. எனவே பிஜேபியோடு ஒப்பிட்டு மீண்டும் முகத்தில் கரி பூசிக்கொள்ள வேண்டாம்.
 
எங்கே செல்லும் இந்த தக்லீது பாதை....???????

தேர்தல் நேரம்; 'நோ' ஈழம்!

 லங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நடந்த வேளையில், போர் நிறுத்தம் கோரி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் 2009-ல் உருவானது. அந்த இயக்கத்தில் அங்கம் வகித்தவர்களில் முதன்மையானவர்கள் பா.ம.க. நிறுவனர் ராமதாசும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்  திருமாவளவனும் ஆவர். அதுமட்டுமன்றி இலங்கைக்கு போர் விஷயத்தில் இந்தியா உதவி செய்கிறது என பலமுறை காங்கிரஸை வறுத்தெடுத்தவர் திருமாவளவன். இந்த தமிழ் போராளிகள்[?] இருவரும் இப்போது நடைபெற உள்ள தேர்தலில் திமுக-காங் கூட்டணியில் உள்ளனர்.

இந்நிலையில்  இலங்கையில் போர் உச்ச கட்டத்தில் இருந்தபோது, போரை நிறுத்த உலக நாடுகள் செய்த முயற்சியை இந்தியா தடுத்து நிறுத்தியதாகவும், இலங்கைக்கு ஆதரவாக நின்று போர் தொடர்ந்து நடைபெற உதவியதாகவும் வாஷிங்டனுக்கு அமெரிக்கத் தூதரகம் அனுப்பிய செய்தியை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது. இந்தத் தகவல் ஆங்கிலப் பத்திரிகையில் வியாழக்கிழமை வெளியானது.

விக்கி லீக் வெளியிட்டுள்ள இந்த செய்தி குறித்து  இலங்கையில் போர் தொடர்ந்து நடைபெற இந்தியா உதவியுள்ளதாக செய்தி வந்துள்ளதே என நிருபர்கள் கேட்டனர். அதற்கு இந்த தமிழ் போராளிகள் சொன்னதுதான் 'ஹைலைட்' ''தங்களது கவனம் முழுவதும் இப்போது நடைபெற உள்ள தேர்தலில் உள்ளதாகக் கூறி, இதுகுறித்து கருத்துத் தெரிவிக்க இரு தலைவர்களும் மறுத்துவிட்டனர்.

தி.மு.க. கூட்டணியில்  காங் இடம்பெற்றிருப்பதால் மத்திய அரசுக்கு எதிராக இவர்கள் வாய் திறக்கவில்லை. இந்நேரம் தேர்தல்  நேரமாக மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் வானத்திற்கும் பூமிக்கும் குதித்து, காங்கிரஸை ஒரு வழி பன்னியிருப்பார்களே! அதுசரி! தேர்தல்  அறுவடை நேரத்துல, தேய்ந்துபோன தமிழ் ஈழம் பற்றி பேசி என்ன ஆகப்போவுது என நினைத்து விட்டார்களோ!

தேடிவந்த பட்டத்தை புறக்கணித்த தெண்டுல்கர்!

வரவ டாக்டர் பெற்ற ஒரு அரசியல்வாதி ஒரு கிராமத்திற்கு விஜயம் செய்தாராம். அவரிடம் ஒரு வயதான பெண்மணி தனது நோய்க்கு மருந்து கேட்டாராம். இப்படி ஒரு நகைச்சுவை துணுக்கு படித்த நினைவு. அந்த அளவுக்கு அரசியல்வாதிகளுக்கும், சினிமா நடிகர்களுக்கும் பல்கலைக் கழகங்களும், நிகர்நிலை பல்கலை கழகங்களும் போட்டி போட்டு 'டாக்டர்' பட்டத்தை வழங்கி கவுரவிப்பதைக் காண்கிறோம்.
 
இத்தகைய கவுரவ டாக்டர் பட்டங்களை விரும்பி பெற்றுக் கொள்பவர்களுக்கு மத்தியில், பிரபல கிரிக்கெட் வீரர் தெண்டுல்கர் தனக்கு கிடைக்கவிருந்த டாக்டர் பட்டத்தை வேண்டாம் என புறக்கணித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
 
''மைசூர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா வருகிற ஏப்ரல் மாதம் 10ம்  தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தெண்டுல்கருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலைக்கழகம் முடிவு செய்து இருந்தது.
ஆனால் மைசூர் பல்கலைக்கழகத்தின் வேண்டுகோளை ஏற்க தெண்டுல்கர் மறுத்து விட்டார். இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வி.ஜி.தல்வாருக்கு, தெண்டுல்கரின் மனைவி அஞ்சலி ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
எந்த கவுரவ டாக்டர் பட்டத்தையும் ஏற்பது இல்லை என்று தெண்டுல்கர் முடிவு செய்துள்ளார். இந்தியாவுக்காக தொடர்ந்து சிறந்த முறையில் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். எனவே, தாங்கள் அளிக்க முன்வந்த கவுரவ டாக்டர் பட்டத்தை ஏற்க இயலாத நிலையில் இருப்பதை தெரிவித்துக் கொள்கிறோம்என்று அந்த கடிதத்தில் அஞ்சலி தெண்டுல்கர் கூறியுள்ளார்.
 
வெற்று கவுரவத்தை விரும்பாத தெண்டுல்கர் வித்தியாசமான மனிதர்தான்.

சிதறு தேங்காயுடன் சேர்ந்து சிதறிய திமுகவின் பகுத்தறிவு?

பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் படித்தவர், காஞ்சிப் பாசறையில் வளர்ந்தவர் என்று தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கருணாநிதி, தமது அரசின் மருத்துவக் காப்பீடு குறித்த விளம்பரத்தில் எமதர்மர் உயிரைப் பறிப்பதைப் போலவும், அதை இவர் தடுப்பது போலவும் சித்தரித்து தன்னுடைய பகுத்தறிவு முகமூடியை தானே கிழித்துக் கொண்டு தன்னுடைய சுயரூபத்தை வெளிப்படுத்தியதும் மக்களுக்கு நினைவிருக்கலாம்.

குங்குமப் பொட்டு வைத்துக் கொள்ளும் திமுகவினரையும், தீ மிதிக்கும் கட்சிக்காரர்கள் மற்றும் அமைச்சர்களையும் அவ்வப்போது கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், இந்து மதத்தினர் கடவுளென நம்புபவர்களை கொச்சைப் படுத்தியும், நிந்தித்தும் தன்னை ஒரு நாத்திகர் போல் காட்டிக் கொண்டிருந்தார் கருணாநிதி. ஆனால் மஞ்சள் துண்டுக்கு மாறினார். அதற்கு வியாக்கியானமும் கொடுத்து மறைத்தார். மேலும், சாய்பாபாவுடனும்,அமிர்தானந்தமயியுடனும் மேடையில் காட்சிதந்து அருள்பாலித்தார்[?].அத்துடன் 'கடவுளை நான் ஏற்றுக்கொள்கிறேனா என்பதைவிட கடவுள் என்னை ஏற்றுக்கொள்ளக்கூடிய பணியை செய்கிறேனா என்பதுதான் முக்கியம்' என்று திருவாய் மலர்ந்தார். 

மேலும் தஞ்சை பெரிய கோயிலுக்கு புறவாசல் வழியாக சென்று விழாவில் கலந்து கொண்டதும் பத்திரிக்கைகளில்  பரபரப்பாக பேசப்பட்டது.  இந்நிலையில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து, மூன்று நாள் சுற்றுப் பயணமாக சென்னையிலிருந்து திருவாரூர் புறப்பட்டார் கருணாநிதி. பிரசார வேன் மூலம் திருவாரூர் புறப்பட கருணாநிதி வேனில் ஏறி அமர்ந்ததும், கோபாலபுரத்தில் அவர் வீட்டு முன் உள்ள வேணுகோபால்சாமி கோவிலுக்கு முன், சூறை தேங்காய்கள் உடைக்கப்பட்டன. இதற்காக, பிரசார வேன் சில நிமிடங்கள் நின்று, சூறை தேங்காய் உடைக்கப்பட்ட பின் புறப்பட்டு சென்றது.

'சில வேண்டுதல்கள் அடிப்படையில் தேங்காய் உடைப்பது இந்துமதத்தவரின் நம்பிக்கை. ஆனால் தன்னை  நாத்திகன் என்று சொல்வதிலேயே ஆனந்தம் என்று கூறும் கருணாநிதி, தான் செல்வதற்கு முன்னால் தேங்காய் உடைத்ததை அனுமதித்தது எந்த நம்பிக்கையில் என்பதுதான் புரியாத புதிராகும்.

அடுத்து பிரச்சாரத்திற்கு செல்லும் தலைவரே தேங்காய் உடைத்து பக்திமயமாக  செல்கையில், அவரது கட்சி வேட்பாளர் என்ன நினைத்தாரோ ஒரு சாமியாரின் காலில்  சாஸ்டாங்கமாக விழுந்து ஆசி பெற்றுள்ளார்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின், 50வது பட்டம் ஜீயராக ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமி உள்ளார். ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதாவுக்கு எதிராக தி.மு.க., சார்பில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர் ஆனந்த், தனது பரிவாரங்களுடன் ஜீயரை சந்தித்தபோது, திமுக வேட்பாளர் ஆனந்த், ஜீயர் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். இந்த தேர்தலில் போட்டியிடும் தன்னை வெற்றி பெற ஆசி வழங்கும்படி கேட்டுக் கொண்டார். "நிச்சயம் நீ வெற்றி பெறுவாய்' என, ஜீயர் ஆசி வழங்கினார். 

எல்லாம் பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சியோ? கி. வீரமணியார் கேட்டுச்சொன்னால்  நல்லாருக்கும்.


சட்டங்களின் சலுகைகள் முஸ்லிம்களுக்கு எட்டாக்கனியோ..?

ஒரு குற்றச்செயலில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டால் அவருக்கு அவசிய நிமித்தமாக வெளியே வரும் நிலை ஏற்பட்டால் வழங்கப்படுவதுதான் 'பரோல்' என்பதாகும். இந்த பரோல் விசயத்தில் கூட அரசு முஸ்லிம்கள் விசயத்தில் பாராமுகமாக நடந்து வருகிறது. 
 
ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஜாகிர் உசேன்  சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், நான் கொலை வழக்கு தொடர்பாக 1999 ம் ஆண்டு முதல் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருக்கிறேன். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. என்னை தமிழக அரசாணைப்படி முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளேன். அது நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில் எனக்கு திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. திருமண கொண்டாட்டங்களுக்காக எனக்கு ஒரு மாதம் பரோல் தர வேண்டும் என்று உள்துறை செயலாளர், டி.ஜி.பி., கோவை ஜெயில் சூப்பிரண்டு ஆகியோருக்கு எனது சகோதரர் கடந்த 1 ம்  தேதி விண்ணப்பித்தார். எனக்கு பரோல் கொடுக்கும் பட்சத்தில்தான் திருமணம் நடக்கும். இவ்வாறு அதில் அவர் கூறி இருந்தார்.
 
இதற்கு சிறப்பு அரசுப் பிளீடர் கே.பாலசுப்பிரமணியன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கொலை வழக்கில் சிக்கியுள்ள ஜாஹீரை வெளியே கொண்டு வருவதற்கு அதிக போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது இருக்கும். தேர்தல் நடக்கும் நேரத்தில் அந்த பணிக்கு அதிக போலீசார் சென்றுவிடுவதால், ஒரு மாதத்துக்கு ஒரு கைதியை பாதுகாப்பதற்கு போலீசாரும் கிடைக்க மாட்டார்கள்.சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்காக மட்டுமல்ல, அவர் ஈடுபட்டிருந்த குற்றத்தின் தன்மையையும் கருதும்போது அவருக்கு ஒரு மாதம் பரோல் அளிப்பது நல்லதல்ல என்று வாதிட்டார்.இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி பி.ஜோதிமணி,
 
ஜாகிர் உசேன் பரோல் கேட்பது தனது திருமணத்துக்காகத்தானே தவிர வேறெதற்கும் அல்ல. எனவே 3 நாட்களுக்கு  பரோல் அளித்து உத்தரவிடுகிறேன்.அவருக்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார்.
 
ஜாஹிரின் ஒரு மாத கால பரோல் கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்த சிறப்பு அரசுப் பிளீடர் கே.பாலசுப்பிரமணியன் கூறிய காரணத்தில் ஒன்று, ''ஜாஹீரை வெளியே கொண்டு வருவதற்கு அதிக போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது இருக்கும். தேர்தல் நடக்கும் நேரத்தில் அந்த பணிக்கு அதிக போலீசார் சென்றுவிடுவதால், ஒரு மாதத்துக்கு ஒரு கைதியை பாதுகாப்பதற்கு போலீசாரும் கிடைக்க மாட்டார்கள் என்பதாகும்.
 
தமிழகத்தில் 1 ,04 ,783 காவலர்கள் பணியில் இருக்கும் நிலையில், ஜாஹிரின் பாதுகாப்புக்கு  போலிஸ் கிடைக்க மாட்டார்களாம்.  நல்ல வேடிக்கைதான் போங்க. போலீஸ் கிடக்கவில்லை என்றால்  அரசியவாதிகள் பின்னாடி பாதுகாப்புன்ற பேருல ஒரு படை போலீஸ் அலையுதே;  அதிலிருந்து ரெண்டு பேரை போடவேண்டியதுதானே! மேலும், ஜாஹிரின் குற்றத்தின் தன்மை  குறித்தும் ப்ளீடர் பேசுகிறார். இதுபோன்ற கொலைக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் இதற்கு முன்பாக பரோலில் வந்ததே இல்லையா? அல்லது பிளீடருக்கு  தெரியாதா?  பிளீடரின் உப்புச்சப்பில்லாத காரணத்தின் அடிப்படையில் ஒரு  திருமணம் செய்யவுள்ளவருக்கு மூன்று நாள் பரோல் என்பது மாபெரும் அநியாயமாகும்.
 
கடந்த காலங்களில், ஜாஹிரை விட கடுமையாக குற்றம் சாட்டப்பட்ட சிலருக்கு வழங்கப்பட்ட பரோலை பார்வைக்கு வைக்கிறோம்;
 
  • கொலை மற்றும் கற்பழிப்பு ஆகிய குற்றத்துக்காக இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற சாமியார் பிரேமானந்தாவுக்கு  ஒரு மாத காலம் பரோல் வழங்கிய நீதிமன்றம்.
  • இதே பிரேமானந்தாவுக்கு சிவராத்திரி பூஜையில்  கலந்து கொள்ள இவருக்கு 6 நாட்கள் பரோலில் விடுதலை.
  • மதவெறியை  தூண்டும் வகையில் தேர்தல் நேரத்தில் பேசிய வருண் காந்திக்கு  15 நாட்கள் பரோலில் விடுதலை செய்த உச்சநீதிமன்றம்.
  • முன்னாள் மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜனனை சுட்டுக்கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் அவரது சகோதரர் பிரவீன் மகாஜன் 14 நாள் பரோலில் விடுதலை செய்த மும்பை நீதிமன்றம்.

இவ்வாறு  பட்டியல்கள் நீளும். ஏற்கனவே மதானிக்கு தொடர்ந்து ஜாமீன் மறுப்பதன் மூலம் அநீதியை காட்டிவரும் நீதித்துறை, இப்போது இந்த வழக்கில் குறைந்த நாள் பரோல் வழங்கி தனது அநீதியை தொடர்கிறது. என்ன செய்வது! சட்டத்தின் சலுகைகள் முஸ்லிம்களுக்கு எப்போதுமே எட்டாக்கனிதானே!


ஜப்பான் பொருட்கள்; சவூதியை கிண்டலடிக்கும் தினமலர்!

ண்டை நாட்டில் ஏற்படும், நோய் அல்லது வேறு விதமான பாதிப்புகள் தனது நாட்டு மக்களுக்கும் பரவிவிடக் கூடாது என்று கவலை கொள்வதும், அதற்க்காக முன்னேற்பாடுகளை செய்து கொள்வதும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொரு நாடும் செய்து வரும் நடைமுறையாகும். சமீபத்தில் வெளிநாடுகளில் பன்றிக்காய்ச்சல் பரவியபோது, அது நமது நாட்டு மக்களை தாக்கிவிடக் கூடாது  என்பதற்காக வெளிநாட்டிலிருந்து வருகை தந்த பயணிகளை விமான நிலையத்திலேயே மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியது இந்தியா. இதுபோன்ற முன்னேற்பாடுகளை  செய்வது அரசின் கடைமையாகும். இதை யாரும் குறைகாண முடியாது. ஆனால் இத்தகைய ஒரு முன்னேற்பாட்டை  செய்வது ஒரு முஸ்லிம் நாடு என்றால் அங்கே வேறு பார்வை பார்க்கப்படுகிறது.

''ஜப்பானில் அணு உலைகள் வெடித்து, அவற்றில் இருந்து கதிர் வீச்சு பரவுவதால், அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் நுகர்வோர் பொருட்களை முழுமையாக சோதனையிடும்படி, சவுதி அரேபியா அரசு, தனது துறைமுக அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.  ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நுகர்வோர் பொருட்கள் அனைத்தையும், ஆய்வகத்தில் முழுமையாக சோதனையிடும்படியும், அந்த பொருட்களில் அணு கதிர் வீச்சின் பாதிப்பு உள்ளதா என கண்டறியும்படியும், தனது நாட்டில் உள்ள துறைமுக அதிகாரிகளுக்கு, சவுதி அரேபிய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, வர்த்தக சங்கத்துக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சோதனை செய்யப்படாத பொருட்களை, சவுதி அரேபியாவுக்குள் அனுமதிக்க வேண்டாம் என்றும், அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது'' என்ற செய்தியை வெளியிட்ட தினமலர் சந்தடி சாக்கில் தனது 'குசும்பை' வெளிப்படுத்தியுள்ளது.

அதாவது இந்த செய்திக்கு 'ஜப்பான் பொருட்களா? சவுதி அலறுகிறது' என்று தலைப்பிடுகிறது. இதன் மூலம் ஜப்பான் விசயத்தில் ஏதோ சவூதி பயந்து சாவது போன்ற தோற்றத்தை தர முயல்கிறது தினமலர். சவூதியின் முன்னெச்சரிக்கையில் என்ன தவறிருக்க  முடியும்? சம்மந்தப்பட்ட ஜப்பானே தனது நாட்டு மக்கள் கதிர்வீச்சால் பாதிக்கப் பட்டுள்ளார்களா என பரிசோதிக்கும் போது, அந்நாட்டிலிருந்து வரும் பொருளை சவூதி சோதிப்பதை தினமலர் கிண்டலடிப்பது எதற்காக? ஒருவேளை வருமுன் காப்போம் என்பது தினமலருக்கு பிடிக்காதோ!  


செவ்வாய், 29 மார்ச், 2011

ஜாதிக்கட்சியே ஆனாலும் கருணாநிதிக்காக கரம்பிடிப்பேன்''''''-ததஜ!

நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரிக்க முடிவு செய்துள்ள தனிநபர் ஜமாஅத், திமுகவை ஆட்சியில் அமர்த்தியே தீருவது என்ற தனது ஏக்கத்திற்கு  ஏதுவாக இலவச இணைப்பாக சில கட்சிகளை ஆதரிக்க முடிவு செய்துள்ளது. அதில் ஒன்றுதான் மருத்துவர் ராமதாஸின்  பாட்டாளி மக்கள் கட்சி.  இக்கட்சி பற்றி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனிநபர் ஜமாஅத் கொண்ட கொள்கை முழக்கத்தை நினைவு படுத்தி விட்டு பின்னர் விஷயத்திற்கு வருவோம்.

5-4-2009 கோவையில் TNTJ மாநிலப் பொதுக்குழு கூடியது இதில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் ஒன்று;

5. பமாக தொடர்ந்து முஸ்லிம் விரோதியாகச் செயல்படுவதாலும் இலங்கைப் பிரச்சனையை மையமாக வைத்து முஸ்லிம்களுக்கு தீவிரவாதிப் பட்டம் சுமத்தியதாலும் கடந்த தேர்தலிலும் இந்த தேர்தலிலும் முஸ்லிம்களுக்கு ஒரு இடம் கூட தராத காரணத்தினாலும் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு விஷயத்தில் புதுவையில் உள் வேளை செய்த காரணத்தினாலும் பமகாவை ஆதரிப்பதில்லை என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

தனிநபர் ஜமாஅத் மேற்கண்ட தீர்மானத்தில் பாமக பற்றிக் கூறியுள்ள விஷயத்தில் எந்த மாற்றமாவது  ஏற்பட்டுள்ளதா? முஸ்லிம்களுக்கு தீவிரவாத பட்டம் சுமத்தியதற்காக மன்னிப்பு கேட்டுவிட்டதால் இந்த சட்டமன்றத் தேர்தலில்  பாமகவை ஆதரிக்கிறார்களா? இந்த தேர்தலில்  முஸ்லிம் வேட்பாளர் பலரை பாமக நிறுத்தியதால் தனிநபர் ஜமாஅத் ஆதரிக்கிறதா? முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு விஷயத்தில் புதுவையில் செய்த உள்குத்து வேலையை பாமக விட்டு விலகிவிட்டதாக, முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டிற்கு புதுவையில் பாமக பாடுபடுவதாக  தனிநபர் ஜமாத்திற்கு ஏதேனும்  அறிவிப்பு வந்ததால் ஆதரிக்கிறார்களா?

மேலும், திமுக ஆதரவு கண்ட தனிநபர் ஜமாஅத்தின் பொதுக்குழுவில், முஸ்லிம்களுக்கு  ஒரு தொகுதி கூட ஒதுக்காத  பாமக பற்றி கேள்வி எழுப்பப் பட்டபோது அந்த தனிநபர், 'பாமக ஒரு ஜாதிக் கட்சிமா; அவன் ஒரு முஸ்லிம்களை நிறுத்தலன்னு சொல்றதே முட்டாள்தனம் என்று திருவாய் மலர்ந்தார்.

ஒரு முஸ்லிமை கூட நிறுத்தாத பாமகவை நாம் ஆதரிக்கனுமா என்று கேட்டால் அவ்வாறு கேட்பதே முட்டாள்தனம் என்று இன்று கூறும் இந்த தனிநபர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பாமக முஸ்லிம்களை நிறுத்தாதது  பற்றி தீர்மானத்தில்  கொண்டுவந்தது முட்டாள்தனமில்லையா என்று யாரும் கேட்டுவிடக் கூடாது. ஏனென்றால் அண்ணன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

மேலும் பாமகவை ஜாதிக்கட்சி என்று இந்த தனிநபர் எந்த அடிப்படையில் கூறுகிறார்? ஒரு வாதத்தை வைக்கிறார். அதாவது ராமதாஸ், வன்னியர் ஒட்டு அன்னியருக்கு இல்லை என்று சொல்லி விட்டாராம். எனவே பாமக ஜாதிக்கட்சியாம். ராமதாஸ் சொன்னது அவரது இன உணர்வு. தனது சமுதாயத்தின் மீதான அக்கறை. தனது சமுதாய ஒட்டு வன்னியரைத் தவிர வேறு யாருக்கும் சென்று விடக்கூடாது. தனது சமுதாயத்தின் வாக்கு வங்கி தனது சமுதாயத்தின் வெற்றிக்கே பயன்படவேண்டும் என்ற அவரது சமுதாய நலன் சார்ந்த நோக்கம். அப்படி அவர் தனது சமுதாய வாக்குகளை ஒருங்கிணைத்து சில வெற்றிகளை ஈட்டியதால்தான் இன்றைக்கு திராவிடக் கட்சிகள் அவரோடு கூட்டணி வைக்க போட்டி போடுகின்றன. அவரது கட்சி சில மாவட்டங்களில் மட்டுமே வாக்கு வங்கி உடையதாக இருந்தாலும் தொகுதிகளை அள்ளிக் கொடுக்க திராவிடக் கட்சிகள் முன் வந்ததற்கு காரணம் அவரது சமுதாய ஓட்டுக்களை ஒருங்கினைத்ததே!

 ஆனால் இந்த தனிநபரோ தானும் தனது ஜமாஅத்தும்  மட்டுமே முஸ்லிம் சமுதாய பாதுகாவலர்கள்; சமுதாய நலன் விரும்பிகள் என்று சொல்லிக்கொண்டு, சமுதாயத்தின்  வாக்குகளை பிரித்ததோடு, தனது வரட்டு கவுரவத்திற்காக  முஸ்லிம் சமுதாய வேட்பாளரை தோற்கடித்து, சமுதாயத்தின் வாக்குகளை அடுத்தவர் அறுவடை செய்ய திட்டங்கள் தீட்டுகிறார். தீர்மானங்கள்  போடுகிறார். இவர் ராமதாஸிடம் பட்டும்  படிக்கட்டும்.

ஆனாலும் நம்புங்கள் முஸ்லிம்களே! இவர்கள் மட்டுமே முஸ்லிம் சமுதாயத்தின் பாதுகாவலர்கள்[!?]

குறிப்பு; பாமக  குறித்து நாங்கள் வைத்த குற்றச்சாட்டு இன்னும்  அப்படியேதான் உள்ளது. பாமக எந்த வகையிலும் தன்னை  மாற்றிக்கொள்ளவில்லை. ஆனாலும் பாமகவை ஆதரிப்போம். ஆனால் மமக குறித்த விசயத்தில் மாத்திரம் மண்ணைக்கவ்வ வைக்கும் எங்களின் முடிவில் எந்த மாற்றமுமில்லை. ஏனெனில் இவர்கள் முஸ்லிம்கள் என்பதால்.

திங்கள், 28 மார்ச், 2011

துரோகமே செய்தாலும் காங்கிரஸை நான் மறவேன்....''-ததஜ!!!

முன்னுரை; நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக அணியை ஆதரிக்க உள்ளதாம் தனிநபர் ஜமாஅத். அந்த திமுக அணியில் இடம்பெறுள்ள காங்கிரஸ் குறித்த தனிநபர் ஜமாஅத்தின் கடந்த சில மாத எழுத்துக்களை- தீர்மானங்களை மக்கள் பார்வைக்கு வைக்கிறோம். ஆனாலும் இவர்கள் மட்டுமே சமுதாயத்தின் காவலர்கள் என்று நம்ப வேண்டும் இல்லையேல் நீங்கள் தடம்புரண்டவர்களாகி விடுவீர்கள்;

17.10.2010 அன்று செங்கல் பட்டில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழுவில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

காங்கிரஸ் கட்சி இழைத்த துரோகங்கள்.

துரோகம் : 1
1949 ஆம் ஆண்டு டிசம்பர் 22, 23 நள்ளிரவில்தான் இராமர், இலட்சுமணர், சீதை ஆகியோரின் சிலைகள் பாபரி மஸ்ஜிதின் உள்வளாகத்தில் வைக்கப்பட்டன. அப்போது மாநிலத்தில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சிதான். அந்தச் சிலைகளை உடனே அப்புறப்படுத்தி , அத்து மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததோடு மட்டுமல்லாமல் ஐவேளை தொழவிடாமல் தடுத்து நிறுத்தி பள்ளிவாசலை இழுத்து மூடிய துரோகத்தை காங்கிரஸ்தான் செய்தது. அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் இந்த அக்கிரமத்திற்கு துணைபோனது.

துரோகம் : 2
1989 ராஜீவ் காந்தி பிரதம அமைச்சராக இருக்கும் போது நாடாளுமன்ற தேர்தலுக்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பாக இந்துக்கள் ஓட்டுக்களை பொறுக்குவதற்காக பாபரி மஸ்ஜித் பள்ளிவாசல் அமைந்த நிலத்திற்குள் விஸ்வஹிந்து பரிஷத் குண்டர்கள் சிலா நியாஸ் என்ற பெயரில் அடிக்கல் நாட்டு வைபவத்தை நடத்துவதற்கு அனுமதிவழங்கியததான் 1992ல் பாபர் மஸ்ஜித் உடைப்பிற்கு காரணமானது. இது காங்கிரஸ் கட்சி செய்த அடுத்த துரோகமாகும்

துரோகம் : 3
1992 பாபரி பள்ளிவாசல் இடிக்கப்படப் போகின்றது என்று உளவுத் துறை தகவல் தெரிவித்தும் மாநில பிஜேபி அரசைக் கலைக்காமல் கரசேவை என்ற பெயரில் இராணுவத்தின் மேற்பார்வையில் இந்துத்துவா சக்தி கயவர்கள் பாபரி மஸ்ஜிதை இடிக்கவிட்டு வேடிக்கை பார்த்ததும் காங்கிரஸ் ஆட்சிதான்.

துரோகம் : 4
பள்ளிவாசல் இடிக்கப்பட்ட பிறகு அதே இடத்தில் தற்காலிக கோயில் கட்ட அனுமதித்ததும் காங்கிரஸ் அரசுதான்.

துரோகம் : 5
பாபர் மஸ்ஜித் இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்பது மஸ்ஜித் இடிக்கப்படுவதற்கு முன்னால் வெறும் சிந்தனையோட்டமாக மட்டுமே இருந்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசுதான் அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் விதத்தில் முதன் முதலாக பள்ளியின் கீழ் கோயில் இருந்ததா? என்பதை ஆய்வு செய்வதற்காக தன் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொல்லியல் துறை மூலம் அகழ்வாராய்ச்சிக்குரிய வழிகளை ஏற்பாடு செய்தது.. அதுதான் இன்றைய இந்தத் தீர்ப்பிற்கு காரணமாக அமைந்தது. இப்படி அடுக்கடுக்காக முஸ்லிம்களுக்கு துரோகங்களுக்காக காங்கிரஸ் கட்சியை இந்தச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.  

 

தீவுத்திடலில் 15 லட்சம் பேர்[?] கூடிய மாநாட்டில் தீர்மானம்;

இந்திய நாட்டை உருவாக்குவதிலும், இந்தியாவின் அடிமைத் தளையை உடைத்தெறிவதிலும் பெரும் பங்கு ஆற்றிய முஸ்லிம்கள் நாடு விடுதலையடைந்து 60 ஆண்டுகள் கடந்த பின்பும் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந்திய அரசு அமைத்த நீதிபதி ராஜேந்திர சச்சார் கமிஷனும், நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனும் இதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்துள்ளன. முஸ்லிம்களுக்குப் பத்து விழுக்காடு தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று மிஸ்ரா கமிஷன் தெளிவான பரிந்துரை யையும் வழங்கியுள்ளது.

கல்வியில் இட ஒதுக்கீடு

முஸ்லிம்களின் இந்த அவல நிலை மாறிட ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.எஸ்.சி. உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அனைத்து மாநிலங்களில் உள்ள கல்லூரிகளிலும் முஸ்லிம்களுக்குப் பத்து விழுக்காடு தனி இட ஒதுக்கீட்டைச் சட்டமாக்க வேண்டும் என்று முஸ்ம் சமுதாயம் சார்பில் இம்மாநாடு மத்திய அரசை வயுறுத்துகிறது.

வேலை வய்ப்பில் இட ஒதுக்கீடு

அனைத்து மாநிலங்களிலும், அனைத்து மத்திய அரசுப் பணிகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும், தனியார்கள் நடத்தும் பெரிய நிறுவனங்களிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் முஸ்லிம்களுக்குப் பத்து விழுக்காடு தனி இட ஒதுக்கீட்டைச் சட்டமாக்க இம்மாநாடு மத்திய அரசை வயுறுத்துகிறது.

பாதுகாப்புத்துறையில் இட ஒதுக்கீடு

நாட்டில் நடக்கும் வகுப்புக் கலவரங்களின்போது, காவல்துறை, உளவுத்துறை, மத்தியக் காவல் படை, துணை இராணுவம் மற்றும் இராணுவம் ஆகிய அனைத்து துறைகளும் பாரபட்சமாகவும், சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் நடந்துள்ளனர். இதை மத்திய அரசு அமைத்த பல்வேறு கமிஷன்கள் ஆதாரத்துடன் சுட்டிக் காட்டியுள்ளன. எனவே மத்திய அரசின் இராணுவம், உளவு உள்ளிட்ட பாதுகாப்புத் துறைகளிலும் மாநில அரசுகளின் காவல் மற்றும் உளவுத்துறையிலும் 20 சதவிகிதம் முஸ்லிம்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வற்புறுத்துகிறது.

அரசியல் அதிகாரத்தில் தனி இட ஒதுக்கீடு

மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மாநில சட்டமன்றங்களிலும் முஸ்ம்களின் பிரதிநிதித்துவம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. அனைத்துக் கட்சிகளும், பெரும்பான்மை சமுதாய வேட்பாளரையே நிறுத்துவதால் முஸ்லிம்கள் அரசியல் அதிகாரத்தில் பங்கு பெற இயலவில்லை. இந்த நிலை மாறிட தத் சமுதாய மக்களுக்கு ரிசர்வ் தொகுதிகள் இருப்பதுபோல் உள்ளாட்சி, சட்டமன்றம், நாடாளு மன்றம், மாநிலங்களவை, மாநில மேலவைகள் அனைத்திலும் பத்து விழுக்காடு தொகுதிகளை முஸ்லிம் ரிசர்வ் தொகுதிகளாக அறிவித்து சட்டமியற்ற மத்திய அரசை முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் இம்மாநாடு வயுறுத்துகிறது.

நலத்திட்டங்களிலும் இட ஒதுக்கீடு

மத்திய, மாநில அரசுகளின் அனைத்து நலத்திட்டங்களிலும், இலவசத் திட்டங்களிலும் அதிகாரிகள் முஸ்லிம்களைப் புறக்கணித்து துரோகம் செய்து வருகின்றனர். எனவே நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் பரிந்துரைக்கு ஏற்ப அனைத்து நலத்திட்டங்களிலும் முஸ்லிம்களுக்குப் பத்து விழுக்காடு தனியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று இம்மாநாடு மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

காங்கிரஸின் தார்மீகக் கடமை

2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தன் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிப்போம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியது. அதை நம்பி முஸ்லிம்கள் வாக்களித்ததால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. மிஸ்ரா அறிக்கைக்காக மட்டுமன்றி காங்கிரஸ் அளித்த தேர்தல் வாக்குறுதிக்காகவும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் தார்மீகப் பொறுப்பு கங்கிரசுக்கு உள்ளது என்பதையும் காங்கிரசுக்கு இம்மாநாடு சொல்லிக் கொள்கிறது.[2004தேர்தல்அறிக்கையில் சொன்னதை 2011வரை நிறைவேற்றாமல்  அல்வா கொடுக்கும் காங்கிரஸை   மீண்டும்                          ஆதரிப்பது ஒருபுறம்;   அதேபோன்று தேர்தல்  அறிக்கையில் பரிசீலிப்போம்   என்று மட்டும் சொல்லியுள்ள திமுகவை  ஆதரிக்கிறது தனிநபர் ஜமாஅத். காங்கிரஸ்  தந்த அல்வாவை தின்றபின்னும் தேர்தல் அறிக்கைஇல் சொல்லிவிட்டால் அது நம்பகமானது என தனது ரசிகர்களை  நம்ப வைக்கலாம். முஸ்லிம்களை நம்ப வைக்கலாமோ?]  

பிரதமர்-சோனியா சந்திப்பு முடிந்தவுடன் செய்த ஃபில்டப்;

பிரதமர், நீதிபதி மிஸ்ரா அவர்களின் அறிக்கை வந்தது முதல் அது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். இந்த சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு நிச்சயம் தருவோம் என்று நம்பிக்கை அளிக்கும் விதமாகப் பேசினார்கள்.

சோனியாகாந்தி, இட ஒதுக்கீட்டைப் பொருத்தவரை எத்தனை சதவிகிதம் என்பதில் தான் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்கள்.

கடந்த  06-07-2010 ல் நடந்த சந்திப்பின் போது, முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவது என்று முடிவாகி விட்டது. எத்தனை சதவிகிதம் என்பதில்தான் விவாதம்  நடக்கிறது என்று சோனியா சொன்னதாக  சொன்ன இந்த தனிநபர்ஜமாத்தினர், அந்த விவாதத்தை இன்னும் தொடரும் சோனியாவின் காங்கிரஸை தமிழகத்தில் ஆதரிக்கிறார்களாம்.

ஆக பாபர் மஸ்ஜித் விசயத்தில் துரோகம் செய்த காங்கிரஸ் என்று ஒரு புறம் கூறிக்கொண்டு, இட ஒதுக்கீடு விசயத்தில் இன்றுவரை ஏமாற்றும் காங்கிரஸை தமிழகத்தில் ஆதரிக்க கிளம்பி விட்டது இந்த சமுதாய நலனை மட்டுமே முன்னிறுத்தும்[!?] தனிநபர் ஜமாஅத்.

ஒருவேளை மத்தியில் ஆளும் காங்கிரஸ் வேறு; தமிழ்நாட்டில் இப்போது போட்டியிடும் காங்கிரஸ் வேறோ என்னவோ? அல்லது காங்கிரஸை நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலில்   பார்த்துக்கொள்வோம் என்று வாய்ச்சவடால் அடிக்கப் போகிறார்களா? அதுவும் செய்யமுடியாது. ஏனென்றால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸை ஆதரிக்க மாட்டோம் என்று பொதுக்குழுவில் தீர்மானம் போட்டுவிட்டு, பிறகு கொல்லைப் புறமாக மாவட்ட முடிவு- மண்ணாங்கட்டி முடிவு என தீவிரமாக காங்கிரஸை ஆதரித்ததையும் முஸ்லிம்கள் மறக்கவில்லை.

ஆயிரம் துரோகங்களை முஸ்லிம்களுக்கு செய்தாலும் அன்னை சோனியாவை ஆதரிப்போம். ஆனால் மறந்தும் கூட முஸ்லிமான மமகவை மன்னிக்கவே மாட்டோம்.

நம்புங்கள் முஸ்லிம்களே! இவர்கள் மட்டுமே சமுதாய  காவலர்கள்[?!].

ஞாயிறு, 27 மார்ச், 2011

கைமேல் தரும் அன்பளிப்புக்கு தடை; வருங்கால கவனிப்புக்கு அனுமதியா?

தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் கமிஷனின் நெருக்குதல் அதிகமாவதால் திருமங்கலம் பார்முலாவை அமுல்படுத்த முடியாமல் திண்டடுகின்றன பிரதான கட்சிகள். சாலைகளில் செல்லும் வாகன சோதனையில் லட்சகணக்கில் பணம் கைப்பற்ற பட்டுள்ளது.  பறக்கும் படையின் வாகன சோதனையில் வியாபாரிகள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. தகுந்த தகவல்  இன்றி சோதனையிடுவதற்கு நீதிமன்றம் தடை விதிக்கும் அளவுக்கு தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு எனும் மூக்கனாங்கயிரை கச்சிதமாக செயல்படுத்தி வருகிறது. தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கை பாராட்டுக் குரியதாகும். அதே நேரத்தில் இத்தகைய கட்டுப்பாடுகள்  எதற்காக விதிக்கப்படுகிறதோ அந்த இலக்கை தேர்தல் கமிஷன் அடைய வேண்டுமெனில் மற்றொரு சட்டதிருத்தம் கொண்டுவர வேண்டும். அதாவது தேர்தல் அறிக்கை என்ற பெயரில் அரசியல் கட்சிகள் அளிக்கும் வருங்கால 'அன்பளிப்புகளை' தடுக்க வகை செய்யும் சட்டம் கொண்டுவர வேண்டும்.
 
ஒரு காலத்தில் தங்கள் கட்சிகளின் கொள்கையை சொல்லி வாக்கு கேட்டவர்கள் இன்று, வாக்குகளை இலவசங்களால் அள்ள நினைத்து, தேர்தல்  அறிக்கை என்ற பெயரில் பெரும்பகுதி இலவசங்களை அறிவித்து மக்களை மயக்கி வாக்குகளை அறுவடை செய்கின்றனர்.
 
ஒருவர் கிரைண்டர் அல்லது மிக்சி என்கிறார். மற்றொருவர் கிரைண்டர், மிக்சி மற்றும் மின்விசிறி மூன்றும் இலவசம் என்கிறார்.
 
ஒருவர் ஒரு ரூபாய் அரிசி  என்கிறார் . மற்றொருவர் 20 கிலோ அரிசி, முற்றிலும்  இலவசம் என்கிறார்.
 
ஒருவர் 58 வயது உடையோர், அரசு பஸ்களில் பயணம் செய்ய இலவச பஸ் பாஸ் என்கிறார்.
மற்றொருவர் 58 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்.ஆதரவற்ற ஆண்கள், பெண்கள், முதியவர்களுக்கு தங்கும் இடம், உணவு இலவசம் என்கிறார்.
 
ஒருவர் அரசு கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக, "லேப்-டாப்' வழங்கப்படும் என்கிறார். மற்றொருவர் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு இலவச, "லேப்-டாப்!'
அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச, "லேப்-டாப்!'என்கிறார்.
 
இவ்வாறு இவர்கள் போட்டி போட்டு அறிவித்துள்ள இலவசங்களைஅடுக்கிக்கொண்டே  போகலாம் . வாக்குக்கு பணமோ-அன்பளிப்போ கொடுத்து அதை பெற்று விடாமல் தடுப்பதுதான் தேர்தல் கமிஷனின் நோக்கம் எனில், கைமேல் தரும் அன்பளிப்பை மட்டும் தடுத்து, வருங்கால வைப்பு நிதி போன்று,  தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள அன்பளிப்புகளை கண்டு கொள்ளததது சரியல்ல. எனவே தேர்தல் அறிக்கையில் வெறுமனே நாட்டின் முன்னேற்ற திட்டங்கள் மட்டுமே இடம்பெறும் வகையில், சட்டதிருத்தம் கொண்டு வந்தால்தான் இலவசங்கள் மூலம் வாக்குகளை கொள்ளையடிக்கும் நிலை மாறும்.

சனி, 26 மார்ச், 2011

தனிநபர் ஜமாஅத்தின் ஆதரவு; திமுக அவசர சட்டம் பிறப்பித்து விட்டதா?

''அதிமுக வின் துரோகச் செயலுக்கு தக்க பாடம் புகட்டுவதற்காகவும் திமுக தேர்தல் அறிக்கையில் இட ஒதுக்கீடு குறித்து சொல்லி இருக்கிற காரணத்துக்காகவும் அதிமுகவுக்கு எதிராகவும் திமுகவுக்கு ஆதரவாகவும் வாக்களிப்பது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலப் பொதுக்குழு தீர்மானிக்கின்றது என்று அறிவித்துள்ளது ததஜ.
 
தனிநபர் ஜமாஅத்தின் இந்த வாதம் சரியா என்று பார்ப்போம்.
 
அதிமுக தலைவி ஜெயலலிதா தேர்தல்  அறிக்கையில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு தொடர்பாக எதுவும் கூறவில்லை  என்பது உண்மையே. ஆனால் தனது தேர்தல் பிரச்சாரத்தில்,
சிறுபான்மையினருக்குத் தனி இட ஒதுக்கீடு கிடைக்கும் வகையில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மூலம் எனது ஆட்சிக் காலத்தில்தான் சட்டம் திருத்தி அமைக்கப்பட்டது. ஆனால், 2006-ம் ஆண்டில் கருணாநிதி முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, இஸ்லாமியர்கள் இடம் பெறாத வகையில் இந்தச் சட்டம் திருத்தப்பட்டது. மேலும், கருணாநிதி தன்னிச்சையாக இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை அறிவித்தார். என்றாலும், இதுவும் முறையாக அமல்படுத்தப்படவில்லை. அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு விகிதம் உயர்த்தி அறிவிக்கப்படும். மேலும், அது முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதும் கண்காணிக்கப்படும். இஸ்லாமியர்களின் இதரக் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும் என்று கூறியுள்ளார். எனவே முஸ்லிம்களின் இடஒதுக்கீடு தொடர்பாக ஜெயலலிதா ஒன்றும் கூறாமல் துரோகம் செய்துவிட்டார் என தனிநபர் ஜமாஅத்  கூறுவது பொய்யாகும்.
 
அதே நேரத்தில் இந்த வார்த்தைஜால வித்தகர்கள் ஒன்று சொல்லலாம். தேர்தல் பிரச்சாரத்தில் சொல்வதெல்லாம் நம்பமுடியுமா என்று. உண்மைதான். தேர்தல் பிரச்சாரத்தில் சொல்வதை எப்படி நம்பமுடியாதோ, அதே போன்று தேர்தல் அறிக்கையில்  சொல்வதையும் நம்பிவிட முடியாது. ஏனெனில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவோம் என்று தேர்தல் அறிக்கையில் சொன்ன காங்கிரஸ் தொடர்ந்து அல்வா கொடுக்கவில்லையா? இதை தனிநபர் ஜமாஅத் மறுக்குமா? எனவே ஜெயலலிதாவை எதிர்ப்போம் என்பதற்கு இவர்கள் வைக்கும் வாதம் அடிபட்டுவிட்டது. அடுத்து கருணாநிதி தேர்தல் அறிக்கையில் இட  ஒதுக்கீடு குறித்து சொல்லியிருக்கிறார் எனவே ஆதரிக்கிறோம் என்கிறார்கள். கருணாநிதி தேர்தல்  அறிக்கையில்  முஸ்லிம்களின் இடஒதுகீட்டை அதிகரிப்பேன் என்று ஜெயலலிதா போல் உறுதியாக சொல்லியுள்ளாரா  என்றால் இல்லவே இல்லை. இதோ கருணாநிதியின் அறிவிப்பு;
 
''இஸ்லாமிய மக்களுக்கு வழங்கப்படும் மூன்றரை சதவிகித இட ஒதுக்கீட்டினை மேலும் உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும்.என்கிறார்.
 
ஜெயலலிதாவோ உயர்த்தப்படும் என்று உறுதியாக சொல்கிறார். ஆனால் கருணாநிதியோ பரிசீலிப்போம் என்று அதாவது 'பாப்போம்' என்று சாதாரணமாக சொல்கிறார். இந்த இருவரின் வார்த்தையில் எது வலிமையானது என்பது அறிவுடையோர் அறிந்து கொள்ளலாம். தேர்தல் அறிக்கையில் சொல்லாதது தான் ஜெயலலிதாவை எதிர்ப்பதற்கு காரணம் எனில், தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு வாக்குறுதியாக சொன்னது அனைத்தும் அரசியல்கட்சிகளால்  நிறைவேற்றப் பட்ட ஆதாரத்தை தனிநபர் ஜமாஅத் வைக்கவேண்டும்.
 
அடுத்து கருணாநிதியை ஆதரிக்க வேண்டுமெனில், முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை ஐந்து சதவிகிதமாக ஆக்கி அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்பதே நேற்றுவரை தனிநபர் ஜமாஅத்தின் கொள்கையாகும். அவர்களது உணர்வில்[18 ;24 ];
 
''முஸ்லிம்களின் வாக்கு திமுகவுக்கு விழவேண்டுமெனில் முஸ்லிம்களின் தனி இட ஒதுக்கீட்டை ஐந்து சதவிகிதமாக அதிகரிப்போம் என்று சொன்ன கருணாநிதி, அதற்காக அவசர சட்ட திருத்தத்தை பிறப்பித்திருந்தால் ததஜ திமுகவுக்காக களப்பணியாற்றி  முஸ்லிம்களின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல்  திமுகபக்கம் கொண்டு வந்திருக்கும். அந்த வாய்ப்பையும் கருணாநிதி நழுவ விட்டு விட்டார். என்று எழுதியிருந்தனர்.
 
அதாவது  கருணாநிதி அவசரசட்டம் பிறப்பித்தால் தான் ஆதரிப்போம் என்று சொன்ன தனிநபர்வாதிகள், கருணாநிதியின் எந்த அவசர சட்டத்தைப்  பார்த்து ஆதரவு நிலை எடுத்தார்கள் என்பது அவர்களுக்கும் அல்லாஹ்வுக்குமே வெளிச்சம். ஒருவேளை தேர்தல் விதிமுறை நடைமுறையில் உள்ள இந்த  காலகட்டத்தில்  அவசரசட்டம் பிறப்பித்தார் என்று சொல்லப் போகிறார்களா?
 
அடுத்து, பொதுக்குழுவில் அவிழ்க்கப்படாத முடிச்சுகள்  பல உள்ளன. திமுகவுக்கு ஆதரவு  என்று தான் சொல்லியுள்ளார்களே தவிர, திமுக கூட்டணிக்கு ஆதரவு என்று சொல்லவில்லை. எனவே,
  • மத்தியில் இட ஒதுக்கீடு விசயத்தில் தொடர்ந்து துரோகமிழைக்கும் காங்கிரஸ் விசயத்தில் இவர்களின் நிலை என்ன?
  • ஜெயலலிதா இரு முஸ்லிம்களை மட்டுமே நிறுத்தியுள்ளார் என முறுக்கிக்கொண்ட இவர்கள், ஒரு முஸ்லிமை கூட நிறுத்தாத பாமக விஷயத்தில் நிலை என்ன?
  • சிறுத்தைகள் மற்றும் இதர கட்சிகள் விசயத்தில் இவர்களின் நிலை என்ன?
  • மமக மற்றும் முஸ்லிம் லீக் கட்சியை ததஜ கணக்கிலேயே எடுப்பது  கிடையாது என்று எழுதிய இவர்கள், முஸ்லிம்லீக் விசயத்தில் எடுக்கும்  நிலை என்ன?
  • முஸ்லிம் லீக்கை கணக்கிலெடுக்க இப்போது இவர்கள் முன் வந்தால் அதே நிலையில் உள்ள மமகவை மட்டும் புறக்கணிப்பது ஏன்? 
ஆக, தனிநபர் ஜமாஅத்தின் முடிவு, வேறு வழியின்றி எடுக்கப்பட்டதாகவும், வலிமையான சமுதாய நலன் புறந்தள்ளப் பட்டதும் உள்ளங்கை நெல்லிக்கனியாக  'சிந்திப்பவர்களுக்கு' புலப்படும்.
 
அல்லாஹ்வே மிக அறிந்தவன். 
 

தேர்தல் நிலைப்பாடு; தாங்கள் பொய்யர்களே என நிரூபித்த தனிநபர் ஜமாஅத்!

முஸ்லிம்களின் ஓட்டு யாருக்கு என்பதை முடிவு செய்யும் டிஎன்டிஜே யின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னை டி நகரில் உள்ள வெங்கடேஷ்வரா திருமண மண்டபத்தில் 06..3.11 ஞாயிறன்று காலை 10.30மணிக்கு கூடியது.
 
முஸ்லிம் சமுதாயத்திற்கு நன்மை பயக்கக்கூடிய வகையில் இந்தத் தேர்தலில் எத்தகைய முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதற்கான சாதக பாதகங்கள் அலசப்பட்டு, எந்த எந்த முடிவுகளை எடுத்தால் முஸ்லிம் சமுதாயம் முழு நன்மை பெறும் என்ற விஷயங்கள் பேசப்பட்டு, அதற்கு தகுந்தாற்போல முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த முடிவுகளைத் தக்க தருணத்தில் மாநில நிர்வாகம் கூடி அறிவிக்கும் எனவும், செயற்குழுவில் எடுத்த முடிவை அறிவிக்கும் அதிகாரத்தை மாநில நிர்வாகக் குழுவுக்கு அளிப்பது எனவும் செயற்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக முடிவெடுத்தனர்.
 
என்று  கூறிய தனிபர் ஜமாஅத், தக்க நேரம் வந்தபின்னும் இந்த செயற்குழு முடிவை அறிவித்து எந்த அணிக்கு ஆதரவு என்று தெளிவு படுத்துவதை விடுத்து, 26-3-11 சனிக்கிழமை காலை 11 மணிக்கு மாநில அவசரப் பொதுக்குழு என்று அறிவித்தனர். அப்படியாயின்,   இந்த பொதுக்குழுவில்  தான் 'முடிவெடுக்கப் போவதாக' கூறும் இந்த பொய்யர்கள், ஏற்கனவே செயற்குழுவில் முடிவெடுத்தோம் என்று சொன்னதை பொய் என இந்த பொய்யர் பீஜே ஜமாஅத் ஒத்துக் கொள்கிறதா? என்று கேட்டோம். பதிலில்லை.
 
இப்போது 06..3.11 செயற்குழுவில் முடிவெடுத்ததாக கூறியது அப்பட்டமான  பொய் என்பதற்கு இன்னொரு சான்றை பார்க்கலாம். இன்று[26-3-11 ] நடந்த பொதுக்குழுவில்  ஒரு விஷயத்தை சொல்கிறது தனிநபர் ஜமாஅத். அதாவது, ''இதன் காரணமாகவே அதிமுக வின் தேர்தல் அறிக்கை வரும் வரை யாருக்கு ஆதரவு என்னும் முடிவை எடுக்காமல் தள்ளி வைத்தோம். என்கிறது.
 
தனிநபர் ஜமாஅத்தின் இந்த வாக்குமூலப்படியும் கடந்த 06..3.11 செயற்குழுவில் முடிவெடுத்ததாக கூறியது அப்பட்டமான  பொய் என்பது மீண்டும் நிரூபணமாகிறது ஏனெனில் ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கையை 24 -03 -11 அன்றுதான் வெளியிட்டார். சரியாக சொல்வதானால் இருநாட்களுக்கு முன்னால்தான். எனவே அதிமுக வின் தேர்தல் அறிக்கை வரும் வரை யாருக்கு ஆதரவு என்னும் முடிவை எடுக்காமல் தள்ளி வைத்தோம் என்ற ததஜ கூற்று மட்டுமே உண்மை என்றும், கடந்த 06..3.11 செயற்குழுவில் முடிவெடுத்ததாக கூறி மக்களை எமாற்றியுள்ளார்கள் என்றும் சந்தேகமற தெரிகிறது.  அதோடு தங்களை  அப்பட்டமான  பொய்யர்கள் என்று மீண்டும்  ஒருமுறை சந்தேகமற நிரூபித்துள்ளார்கள். 
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! 
 

வெள்ளி, 25 மார்ச், 2011

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்தப்படும்: ஜெ., அறிவிப்பு

திருச்சி: அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் மரியம் பிச்சையை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், தி.மு.க., அரசு முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியிருந்தாலும் அது முறையாக செயல்படுத்தப்படவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், அது முறையாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்தார். http://www.dinamalar.com/News_Detail.asp?Id=212366

தன்மானக் குரல் எழுப்பிய சகோதரி ஃபாத்திமா முஸஃப்ஃபர் நீக்கம்!

தாய்ச்சபைக்கு திமுக வழங்கிய மூன்று சீட்டில்  ஒன்றை பிடுங்கிய திமுகவின் அடாவடி அரசியலை கண்டித்து தன்மானக்  குரல் எழுப்பியவர்  சகோதரி ஃபாத்திமா முஸஃப்ஃபர். அதோடு கருணாநிதியின் இந்த சந்தர்ப்பவாத அரசியலை கண்டும் காணமல் அமைதி காக்கும் தாய்ச்சபையின் தலைவர் காதர் மொஹிதீன் பதவி விலக வேண்டும் என்றும்  துணிந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் கர்ஜித்தார் சகோதரி ஃபாத்திமா முஸஃப்ஃபர். திமுகவால் பிடுங்கப்பட்ட ஒரு தொகுதி மீண்டும் தாய்ச்சபைக்கு  கிடைத்ததற்கு இவரது இவரது போர்க்குரலே கராணம் என்றால் மிகையல்ல.  அப்படிப்பட்ட ஃபாத்திமா முஸஃப்ஃபர் தாய்ச்சபையில் இருந்து தற்காலிகமாக  நீக்கப்பட்டுள்ளதாக   அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
 
இது ஒருபுறமிருக்க, திமுக ஒரு தொகுதியை பிடுங்கியபோதும் அசாத்திய மவுனம் காத்த  தாய்சபையின் செயலை பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஃபாத்திமா முஸஃப்ஃபர் சாடும்போது, அவருடன் மவ்லவி ஹாமித்பக்ரியும்  உடனிருந்ததாக பத்திரிக்கையில் படங்கள் வெளியானதே! அந்த ஹாமித்பக்ரி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என தெரியவில்லை. இவ்வாறு  நாம் கேட்பது அவர் மீதான வெறுப்பில் அல்ல. மாறாக அப்படி அவரும் நீக்கப்பட்டால் மீண்டும் ஏகத்துவ பிரச்சார பாதைக்கு திரும்பிவிட மாட்டாரா என்ற நப்பாசையால்தான்.

அந்த மூன்று முக்கிய வியூகங்கள்!

பிள்ளையார் சுழியுடன் பிரச்சாரமா? மைதீன்கானே இதுதான் இஸ்லாமிய நெறியா?

ரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா!  என்ற காமெடி வரி அனைவருக்கும் பரிச்சயமானதுதான். அரசியல் என்றாலே சில விட்டுக் கொடுத்தல்களை செய்து  தான் ஆகவேண்டும் என்பது எழுதாத சட்டமாக உள்ளது. ஆனால் அப்படி விட்டுக் கொடுப்பது இஸ்லாமாக இருப்பதுதான் வேதனையாகும். அரசியல் என்று வந்துவிட்டால் அங்கே இஸ்லாம் இரண்டாம் பட்சம்தான் போலும்.

வெள்ளிக்கிழமை தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தற்போதைய அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், தனது பிரச்சாரத்தை தொடங்கிய இடம்தான் கவனிக்க வேண்டியதாகும். இவர் நெல்லை வண்ணார்பேட்டை சாலைத் தெருவில் உள்ள வெற்றி வேலடி விநாயகர் கோயிலில்  சிறப்பு பூஜையை முடித்துக் கொண்டு, விநாயகரை வணங்கி கன்னத்தில் போட்டுக் கொண்டு, தேங்காய் விடலையும் போட்டு தனது பிரசாரத்தை தொடங்கினாராம்.  

 என்ன இப்படி? என கட்சிக்காரர்களிடம் கேட்டால், மைதீன்கான் இதே தொகுதியில் 2001, 2006 தேர்தல்களில் போட்டி போட்டபோதும் இதே கோயிலில் வணங்கிவிட்டுதான் பிரசாரத்தை தொடங்கினார். இரு தேர்தல்களிலும் அவருக்கு அமோக வெற்றி. அதுமட்டுமல்ல, கடந்த தேர்தல் வெற்றி அவரை அமைச்சராகவும் ஆக்கியது. அந்த "சென்டிமெண்ட்'தான் மைதீன்கானை இந்தத் தேர்தலிலும் இங்கே அழைத்து வந்துள்ளது என்றனராம். 
முஸ்லிமான மைதீன்கான், தனக்கு வெற்றியையும்-தோல்வியையும் தீர்மானிப்பது இறைவன் தான் என்பதை மறந்து, அல்லாஹ்வை விடுத்து வேறு ஒரு தெய்வத்தை பிரார்த்தித்து தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் என செய்திகள் கூறுகின்றன. மேலும், இந்த கோயிலில் வழிபட்டு சென்றால் வெற்றி உறுதி என்பதும் அவரது செண்டிமெண்ட் என்றும் தெரிகிறது. பதவி எனும் மேல் துண்டிற்காக இஸ்லாம் எனும் உயிர்மூச்சை பின்னுக்கு தள்ளுவது ஒரு முஸ்லிமுக்கு அழகல்ல என்பதை சகோதர வாஞ்சையோடு அவருக்கு சொல்லிக் கொண்டு, அவரது இறைநம்பிக்கையின் உறுதிக்காக பிராத்திக்கிறோம். 

பாகிஸ்தானில் இரட்டைக் கொலையும்; அமெரிக்காவின் இழப்பீடும்!

மெரிக்காவின் தூதரக அதிகாரி  ரோமாண்ட் டேவிஸ் என்பவர்,பாகிஸ்தானில் கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதியன்று இரு  பாகிஸ்தானியர்களை சுட்டுகொன்றார். இவர்கள் கொள்ளையர்கள் என நினைத்து டேவிஸ் சுட்டார் என்று கூறப்பட்டது. இந்த படுகொலை  பாகி்ஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக டேவிஸ் கைது‌ செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு லாகூர் கோர்டில் நடந்தது. 'தூதரக அதிகாரி என்ற முறையில் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் விடுவிக்கவேண்டும் என்று அமெரிக்கா கோரியது. இதற்கு பாகிஸ்தான் சம்மதிக்கவில்லை. இதை தொடர்ந்து இருதரப்பு உறவில் பாதிப்பு ஏற்பட்டது. டேவிஸ் விடுதலையாகும் வரை பாகிஸ்தானுடன் எந்த உறவும் வைத்துக்கொள்ள மாட்டோம் என்று அமெரிக்கா அறிவித்தது. இருந்தாலும் பாகிஸ்தான் அசைந்து கொடுக்கவில்லை.
இந்நிலையில், வேறு வழியின்றி  கொலையானவர்களின் குடும்பத்துக்கு 2 -34 மில்லியன் டாலர் இழப்பீடு தர அமெரிக்கா முன்வந்ததையடுத்து, கொலையானவர்களின் குடும்பத்தாரும் இழப்பீட்டை பெற்றுக் கொள்வதற்கு  ஒப்புக் கொண்டதன் அடிப்படையிலும் டேவிசை விடுதலை செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. இதையொட்டி ‌அவர் விடுதலை செய்யபபபட்டார்.
 
டேவிஸின் விடுதலையை எதிர்த்து பாகிஸ்தானில் மக்கள் போராட்டங்களை வீரியமாக நடத்தி வருகின்றனர். அதோடு டேவிஸின்  விடுதலையை எதிர்த்து ரேய் முகமது நவாஸ் என்ற வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து நவாஸ் குறிப்பிடுகையில், அப்பாவி இருவரை சுட்டுக்கொன்றவரை கோர்ட் விடுவித்தது அரசியல் சட்டத்திற்கு விர‌ோதமானது. இதனை ‌எதிர்‌த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடங்கப்பட்டுளளது. முடிந்தால் இந்த பிரச்னையை பயங்கரவாத எதிர்ப்பு கோர்ட்டிலும் வழக்கு தொடரப்படும் என்றார்.

இஸ்லாமிய சட்டப்படி கொலைகாரர், கொலையானவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு (ரத்தப்பணம்) கொடுக்க வேண்டும். இந்த இழப்பீட்டை பெற்றுக்கொண்டு கொலைகாரரை மன்னிப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தால், கொலைகாரரை விடுதலை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தில் ஒரு விஷயத்தை  கவனத்தில் கொள்ளவேண்டும். பல்வேறு விஷயங்களில் அமெரிக்காவின் உதவியைப் பெற்று வரும் பாகிஸ்தான், தனது மக்கள் விஷயத்தில்  அமெரிக்காவின் ஆதிக்கக் குரலுக்கு செவி சாய்க்கவில்லை.
 
ஆனால் போபால் விஷவாயு கசிவில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். போபால் விஷவாயு தாக்குதலுக்கு காரணமான யூனியன் கார்பைடிடம்  1984-ல் 3.3 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்ட ஈடு கேட்ட இந்திய அரசு, 1999-ல் 450 மில்லியன் டாலர் போதும் என்று ஒப்புக்கொண்டது. மாறாக, இந்திய அரசு, 3.3 பில்லியன் டாலருக்கு ஒரு ஒரு துளியும் குறையாமல் யூனியன் கார்பைடிடம் கறந்திருக்கவேண்டும்.அப்படி அந்தப் பணத்தைப் பெற்று  பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு கிடைக்குமாறு செய்திருக்கவேண்டும். செத்த ஒவ்வொருவர் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் (இன்றைய பணத்தில்); உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் 25 லட்சம் முதல் 50 லட்சம் வரையில்... என்றால் ஓரளவுக்கு அது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும். அரசு இதையும் கோட்டை விட்டதோடு, இந்த நிறுவனத்தின் அமெரிக்கத் தலைமையகத்தின் தலைவரான வார்ரென் ஆண்டர்ஸென் என்ற அமெரிக்கர் இந்த வழக்கில் ஒரு குற்றவாளியாக ஆரம்பத்தில் சேர்க்கப்பட்டிருந்தார் என்றாலும், அப்ஸ்காண்டீ அதாவது தப்பியோடியவர் என்று பின்னர் இவரை நீதிமன்றம் அறிவித்திருந்தது. போபால் விஷவாய குறித்த நீதிமன்றத் தீர்ப்பில் தீர்ப்பில் அவர் பெயர் எங்கும் இடம்பெறவில்லை என்பதும்  குறிப்பிடத்தக்கது.

பாலஸ்தீனத்தில் மக்கள் போராட்டம்; இது ஆட்சியை மாற்றக் கோரி அல்ல.

பாலஸ்தீனத்தில் ஃபதாஹ் ஆளுகையின் கீழ் உள்ள வெஸ்ட்பேங், ஹமாஸ் ஆளுகையின் கீழ் உள்ள காஸா ஆகிய இரு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கனோர் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது. இப்பேரணி ஏனைய அரபு நாடுகளைப் போல்
 இது ஆட்சியை மாற்றக் கோரி நடத்தப்பட்டதல்ல. மாறாக பாலஸ்தீனம் இரு ஆட்சியின் கீழ் உள்ளதை ஒருங்கிணைத்து ஒரே தலைமையின் கீழ் ஆட்சி நடைபெற இரு தலைவர்களும் மீண்டும்  பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து இப்பேரணி நடத்தப்பட்டது.  
 
பாலஸ்தீனத்தில் கடந்த 2007 வாக்கில் காஸா பகுதியை ஹமாஸ் போராளிகள் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததையடுத்து, அங்கிருந்து வெளியேறிய ஃபதாஹ் அமைப்பு, வெஸ்ட் பேங்கில் மட்டும் தனது ஆட்சியை அமைத்துக் கொண்டது. காஸா பகுதியில் ஹமாஸ் பிரதமராக  இஸ்மாயில் ஹனியா இருந்து வருகிறார். மேலும் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் போதெல்லாம் பெரிய அளவில் கண்டு கொள்வதில்லை என்ற கருத்தும் உண்டு. இப்படி இரு அரசுகளாக இருப்பது சரியல்ல என்பதை உணர்ந்த பாலஸ்தீன மக்கள், ஒன்றினையும் பேச்சுவார்த்தையை இருதரப்பும் தொடங்க வேண்டும் என்று போராட்டம் நடத்தியுள்ளனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பியுள்ளனர். 
 
ஃபதாஹ் அமைப்பை பேச்சு வார்த்தைக்கு ஹமாஸ் அழைத்த  போதெல்லாம்  புறந்தள்ளிய மஹ்மூத் அப்பாஸ், மக்களின் எழுச்சியை கண்டு 16 -3 -2011 அன்று காஸா வருகை தந்தார். அவரை ஹமாஸ் பிரதமர் இஸ்மாயில் ஹனியா இன்முகத்துடன் வரவேற்றுள்ளார். காஸாவில் ஹமாஸ் ஆட்சி அமைந்தவுடன் வெளியேறிய மஹ்மூத் அப்பாஸ், நான்கு ஆண்டுகள் கழித்து இப்போதுதான் காஸா வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படியேனும் இரு தலைவர்களும் பேச்சு வார்த்தை  நடத்தி, மக்களின் எதிர்பார்ப்பான ஒன்றிணைந்த ஒரே பாலஸ்தீன அரசு அமைந்தால் மகிழ்ச்சிதானே!

பொருத்து பார்த்து பொங்கி எழுந்த பஹ்ரைன்; அடங்கிய கிளர்ச்சியாளர்கள்!

ஹ்ரைன் ஆட்சியாளருக்கு எதிராக ஷியா பிரிவு முஸ்லிம்கள் ஒரு மாத காலமாக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். கிளர்ச்சியாளர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திட இளவரசர் சல்மானை நியமித்தார் மன்னர் ஹமத். ஆனால் பேச்சுவார்த்தையை புறந்தள்ளி சாலைகளை முடக்குவது, முக்கிய அலுவலகங்களை முற்றுகையிடுவது, மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துவது என இவ்வாறான செயல்களில் கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
 
இந்நிலையில் சவூதி அரேபியா, பஹ்ரைன், ஓமன், கத்தார், குவைத், எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் அடங்கிய வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில்[GCC ] மூலம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நாடினார் மன்னர் ஹமத். உடனடியாக சவூதியில்  இருந்து 1000 ராணுவ வீரர்களும், துபையிலிருந்து 500 ராணுவத்தினரும் கடந்த 14 -03 -11 அன்று பஹ்ரைன் வந்தடைந்தனர். அதை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு 'எமெர்ஜென்சி' எனப்படும் அவசரநிலைப் பிரகடனத்தை அறிவித்தார் மன்னர்.
 
இதற்கு பின்னும் கிளம்பிய கிளர்ச்சியாளர்களை ராணுவம் கட்டுக்குள் கொண்டுவந்து கிளர்ச்சியை முழுமையாக அடக்கியுள்ளது. இரவு நேரங்களில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கிளர்சியை தூண்டுவதாக எதிர்க்கட்சி தலைவர்கள் ஹசன் முஷைமா, அப்துல் வகாப், இப்ராகிம் ஷெரீப் உள்ளிட்ட ஆறு தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஹசன் முஷைமா ஏற்கனவே அரசியல் கைதியாக இருந்து சமீபத்தில் மன்னரால் விடுதலை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதற்கிடையில் பஹ்ரைனுக்கு சவூதி மற்றும் எமிரேட்ஸ் படைகள் சென்றதை இரான்  கண்டித்துள்ளது. மேலும் இராக் மற்றும் குவைத் ஷியாக்களும் கண்டனப் போராட்டங்களை நடத்தியுள்ளனர். சவூதி மற்றும் எமிரேட்ஸ் படைகள் பஹ்ரைனுக்கு சென்றதற்கு காரணம், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின்  உறுப்பு நாடாக  உள்ள பஹ்ரைனில் அமைதியை ஏற்படுத்தவே அன்றி, ஆட்சியாளர்கள் சன்னிப் பிரிவினர் என்பதற்காக அல்ல. எனவே சவூதி  மற்றும் எமிரேட்ஸின் அமைதிக்கான ஒத்துழைப்பை ஷியா-சன்னி கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு என்கின்றனர் அரபுலக ஆய்வாளர்கள்.

பாபர் மசூதி இடிப்பு; நீலிக்கண்ணீர் வடிக்கும் அத்வானி!

பாபர் மஸ்ஜித் இடிப்பின் சூத்ரதாரி அத்வானி, கடந்த 1992ம் ஆண்டில், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் குறித்து,இணைய தளத்தில் கருத்து தெரிவித்து இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது;
பாபர் மசூதி இடிக்கப்பட்டு இரு வாரங்கள் கழித்து பத்திரிகை கட்டுரை ஒன்றில் நான் குறிப்பிட்டு இருந்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன். சர்ச்சைக்குரிய அந்த கட்டிடம் இடிக்கப்பட்ட நாள், எனது வாழ்நாளில் மிகவும் துயரமான நாள் என்று அதில் கூறி இருந்தேன்.
நான் அப்படி கூறி இருந்ததற்கு கட்சியில் என்னுடன் பணிபுரியும் சிலர், நீங்கள் அப்படி ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று விமர்சித்து இருந்தனர்.
அதற்கு பதில் அளித்த நான், அயோத்தி ராமர் கோவில் இயக்கத்தில் என்னை இணைத்துக் கொண்டதற்காக பெருமைப்படுகிறேன். ஆனால், டிசம்பர் 6ந்தேதிய நிகழ்வால் (பாபர் மசூதி இடிப்பு) நமது கட்சியின் நம்பகத்தன்மை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டு இருந்தேன். அன்று நடைபெற்ற இயக்கத்தில் பங்கேற்ற தொண்டர்களின் பொறுமையின்மையை மதிப்பீடு செய்ய தவறிவிட்டதாக, இயக்கத்துக்கு ஏற்பாடு செய்த அமைப்புகளின் மீது குற்றம் சாட்டப்படலாம் என்றும் அந்த கட்டுரையில் நான் எழுதி இருந்தேன்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்று, ஏற்கனவே அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக அப்போதைய உத்தரபிரதேச மாநில அரசு, மிகவும் கவனத்துடன் செயல் திட்டம் ஒன்றை தயாரித்து அதை நிறைவேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தது.
எந்த ஒரு சட்ட விதிகளையோ அல்லது கோர்ட்டு உத்தரவுகளையோ மீறாத வகையில், கோவில் கட்டுவதற்காக போடப்பட்டு இருந்த செயல் திட்டத்தை அந்த துயர நிகழ்வால் நிறைவேற்ற முடியாமல் போய் விட்டது. இவ்வாறு கூறியுள்ளார் அத்வானி. 
பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டது துயர நிகழ்வு  என்ற அத்வானியின் கூற்று உளப்பூர்வமானது என்றால்,  அத்தகையை துயர நிகழ்வுக்கு பொறுப்பேற்று, சட்டத்தின் முன் சரணடைந்து தண்டனையை ஏற்றுக் கொள்ள அத்வானி தயாரா? தன்னால் திரட்டப் பட்ட கரசேவர்கள்[?] பொறுமையிழந்து[!] செய்த முட்டாள் தனமான காரியத்திற்காக இடிக்கப்பட்ட பள்ளியை மீண்டும் அதே இடத்தில் கட்டித்தர அத்வானி தயாரா?
எந்த ஒரு சட்ட விதிகளையோ அல்லது கோர்ட்டு உத்தரவுகளையோ மீறாத வகையில், கோவில் கட்டுவதற்காக போடப்பட்டு இருந்த செயல் திட்டத்தை அந்த துயர நிகழ்வால் நிறைவேற்ற முடியாமல் போய் விட்டது என்று புலம்பும் அத்வானி, முஸ்லிம்களுக்கு சொந்தமான அந்த இடத்திற்கு உரிமை கோரி, பிரச்சினையை உண்டாக்கியதும், அதை ஊதிப் பெரிதாக்கியதும், அதையொட்டி ரத்த ஆற்றை  ஓட்டியதும்  சட்ட விதிகளை மீறியது தானே! அடுத்து இந்த துயர சம்பவம் மூலம் கட்சிக்கு இருந்த நற்பெயர் கெட்டுவிட்டது என்று அத்வானி கூறுவதுதான் இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவையாகும்.
எனவே பாபர் மஸ்ஜித் குறித்த அத்வானியின் திடீர் நீலிக் கண்ணீருக்கு  காரணம், பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு தொடர்பாக சமீபத்தில் அவருக்கு மீண்டும் அனுப்பப்பட்ட சம்மனும், நடைபெறவுள்ள ஐந்து மாநில தேர்தலும் தான்   என்பது சாமானியனும் அறிந்த ஒன்று தானே!  

படித்து விட்டீர்களா? இந்த வார [3-05] சமுதாய மக்கள் ரிப்போர்ட்!

புதன், 23 மார்ச், 2011

ஒரு தேர்தல்; கண்ணித்தீவாக நீளும் தனிநபர் ஜமாஅத் ஆதரவு நிலைப்பாடு!

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழ்நாடு தனிநபர் ஜமாஅத்
ஒரு முடிவை எட்டமுடியாமலும், முன்னுக்குப் பின் முரணாகவும் பொதுக்குழு- செயற்குழு-இப்போது மீண்டும் பொதுக்குழு என 'கண்ணித்தீவாக' தனது ஆதரவு கதையை நீட்டிக்கொண்டே செல்கிறது.
 
கடந்த ஜனவரி மாதம் இறுதியில் நடைபெற்ற தனிநபர் ஜமாஅத் பொதுக்குழுவிற்கு முன்னால், தேர்தல் நிலைப்பாடு குறித்து சேலம் பொதுக்குழு முடிவு செய்யும் என்றார்கள். அவர்கள் சொன்ன  சேலம் பொதுக்குழுவும் கடந்த 30-01-11 ஞாயிறன்று சேலத்தில் கூடியது. அதில் தேர்தல் குறித்து முடிவெடுக்க முடியாமல்,
''தேர்தல் நெருக்கத்தில் மாநில செயற்குழுவைக் கூட்டி அதில் யாருக்கு ஆதரவு என்ற முடிவை எடுப்பதற்கு மாநில செய்ற்குழுவிற்கு இந்த பொதுக்குழு அங்கீகாரம் வழங்குவதாக கூறி முடித்தனர்.
 
பின்னர் அவர்கள் சொன்ன செயற்குழுவும் கூடியது. அந்த செயற்குழுவிற்கு, 'தேர்தல் முடிவெடுக்கும் செயற்குழு' என்றே அறிவித்ததோடு, முடிவும் எடுத்ததாகவும் அறிவித்தனர்.
 
''தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் இந்த பரபரப்பான சூழ்நிலையில் முஸ்லிம்களின் ஓட்டு யாருக்கு என்பதை முடிவு செய்யும் டிஎன்டிஜே யின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னை டி நகரில் உள்ள வெங்கடேஷ்வரா திருமண மண்டபத்தில் 06..3.11 ஞாயிறன்று காலை 10.30மணிக்கு கூடியது.
 
முஸ்லிம் சமுதாயத்திற்கு நன்மை பயக்கக்கூடிய வகையில் இந்தத் தேர்தலில் எத்தகைய முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதற்கான சாதக பாதகங்கள் அலசப்பட்டு, எந்த எந்த முடிவுகளை எடுத்தால் முஸ்லிம் சமுதாயம் முழு நன்மை பெறும் என்ற விஷயங்கள் பேசப்பட்டு, அதற்கு தகுந்தாற்போல முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த முடிவுகளைத் தக்க தருணத்தில் மாநில நிர்வாகம் கூடி அறிவிக்கும் எனவும், செயற்குழுவில் எடுத்த முடிவை அறிவிக்கும் அதிகாரத்தை மாநில நிர்வாகக் குழுவுக்கு அளிப்பது எனவும் செயற்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக முடிவெடுத்தனர்.
 
அதாவது 06..3.11 அன்று கூடிய செயற்குழு தேர்தல் ஆதரவு குறித்து முடிவுகள் எடுத்து விட்டதாகவும் அதை தக்க நேரத்தில் மாநில நிர்வாகம் அறிவிக்கும் என்று கூறிய இந்த தனிநபர் ஜமாஅத், அந்த செயற்குழு முடிவை அறிவிக்காமல் ஒரே அமுக்காக அமுக்கியது. அப்போதே மக்கள் மனதில் ஒரு சந்தேகம்! இந்த  செயற்குழுவுக்கு பெயர் 'அவசர செயற்குழு'.  அவசரமாக ஒரு விஷயத்தில் முடிவெடுத்து உடனடியாக அறிவிக்க வேண்டிய விஷயத்திற்குத் தான் அவசர செயற்குழுவோ பொதுக்குழுவோ  கூட்டப்படும். அதில் எட்டப்படும் முடிவும் உடனடியாக அறிவிக்கப்படும். இந்த நியதிக்கு மாற்றமாக, சாவகாசமாக அறிவிப்பதற்கு  எதற்கு அவசர செயற்குழு[?] என்ற சந்தேகத்திற்கு இப்போது விடை கிடைத்துள்ளது. அதாவது இந்த செயற்குழுவில் தேர்தல் ஆதரவு குறித்து முடிவெடுத்து விட்டதாகவும், அதை தக்க நேரத்தில் அறிவிப்போம்  என்றும் சொன்னது அப்பட்டமான அக்மார்க் பொய் என்பது  தெளிவாகி விட்டது. அதை கீழ்கண்ட தனிநபர் ஜமாஅத்தின் அவசர[?] பொதுக்குழு அறிவிப்பு உண்மைப்படுத்துகிறது.

''தேர்தல் குறித்து முடிவு செய்ய ஏற்ற சூழ்நிலை உருவாகியுள்ளதால் வருகின்ற 26-3-11 சனிக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை இம்பீரியல் ஹால் – எழும்பூர்- இல் மாநில அவசரப் பொதுக்குழு கூடுகிறது. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது இதையே அழைப்பாக ஏற்று கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

என்று அழைப்பு விடுக்கிறது தனிநபர் ஜமாஅத்.

 06..3.11 செயற்குழுவில் முடிவுகள் எடுத்ததாக கூறியது பொய்தானே!

அது உண்மை எனில் அந்த செயற்குழுவில் எடுத்த முடிவை மாநில நிர்வாகம் அறிவிக்க வேண்டியது தானே!

செயற்குழு முடிவை அறிவிக்காமல்  இன்னொரு அவசர பொதுக்குழு எதற்கு?

இந்த பொதுக்குழுவில்  'முடிவெடுக்கப் போவதாக' கூறுவதன் மூலம் ஏற்கனவே செயற்குழுவில் முடிவெடுத்தோம் என்று சொன்னதை பொய் என இந்த பொய்யர் பீஜே ஜமாஅத் ஒத்துக் கொள்கிறதா?  

நாங்கள் அந்த செயற்குழுவில்  முடிவெடுக்கவில்லை; முடிவை பொதுக்குழு தீர்மானிக்கும் என்று தான் முடித்தோம் என்றால் அதை அறிவிக்காதது ஏன்?

சப்பைக் கட்டு கட்டாமல் பதிலளிப்பார்களா தனிநபர்வாதிகள்?

 


ஞாயிறு, 20 மார்ச், 2011

பறந்தது பட்டம் மட்டுமல்ல; பச்சிளம் பாலகனின்உயிரும்தான்!

மாஞ்சா நூல் எந்த நேரத்தில் எங்கிருந்து வரும் என்று தெரியாது.இதன் பிடியில் சிக்கினால் மரணம் நிச்சயம். சென்னையில் உயிர் பலிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.மோட்டார் சைக்கிளில் சென்ற பலர் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இந்த மாஞ்சா நூல்  நச்சு பொருட்களின் கலவையாகவே உள்ளது. இதுவே உயிர் பலிக்கு முக்கிய காரணமாகும்.
 
ஆரொட்டா மாவை நன்றாக காய்ச்சி, டியூப்லைட், பாட்டில்களை பொடியாக்கி அதில் போடுகிறார்கள். பின்னர் மயில்துத்தம், வஜ்ரம், சப்பாத்திக்கள்ளி கரைசல் ஆகியவற்றையும் இதனுடன் சேர்க்கிறார்கள். பின்னர் இந்த பசையை நூலில் தடவி காயவைக்கிறார்கள்.மொறு... மொறு.... வென மாஞ்சா நூல் தயாராகி விடுகிறது. சென்னையில் வண்ணாரப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, சவுகார்பேட்டை ஆகிய பகுதிகளில் மாஞ்சா நூல் தயாரிப்பு குடிசைத் தொழில் போல நடைபெற்று வருகிறது. மாஞ்சா நூல் பண்டல் 300 ரூபாயில் இருந்து விற்பனை செய்யப்படுகிறது.
 
மாஞ்சா நாளைக் கொண்டு பட்டம் விடுவதை காவல்துறை  தடை செய்துள்ளது. இருப்பினும்  இந்த மாஞ்சா நூலால் ஏற்படும்  உயிர்ப்பலி தொடர்கதையாக  இருக்கிறது. சென்னையில் சில  தினங்களுக்கு முன் காற்றாடி மாஞ்சா நூல் 4 வயது சிறுமியின் கழுத்தை அறுத்ததில் பரிதாபமாக இறந்தது. பெற்றோர் கண்முன் குழந்தை துடி, துடித்து உயிரை விட்டது நெஞ்சை உருக்கும் காட்சியாக இருந்தது.
சென்னை பெரம்பூர் குருசாமி தெருவை சேர்ந்தவர் செய்யது ஷேக் முகமது இவரது 4 வயது மகள் செரீன் பானு எல்.கே.ஜி. படித்துவந்தாள்.
செரீன் பானுவை  தனது  பைக்கில் முன் பகுதியில் அமர்த்தி பீச்சுக்கு  அழைத்துச்சென்ற வேளையில் யாரோ விட்ட காற்றாடியின் மாஞ்சா நூல் குழந்தை செரீன் பானுவின் கழுத்தை அறுத்தது. இதனால் ரத்தம் பீறிட்டு வடிந்தது.
உடனடியாக பெற்றோர் அழுது கொண்டு அந்த குழந்தையை அருகில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை செரீன் பானுவுக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிறிது நேரத்தில் குழந்தை பரிதாபமாக இறந்தது.
 
பத்து மாதம் சுமந்த பெற்றோர் கண் முன்னே ஒரு பச்சிளம் பாலகன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து  இறப்பதை விட கொடுமையான காட்சி உண்டா? உயிரிழந்த குழந்தையின் தந்தை செய்யது ஷேக் முகமது கண்ணீர் விட்டு அழுதபடி கூறும்போது, காற்றாடி விடுவதை இனிமேலும் அனுமதிக்கக்கூடாது. இதனால் உயிரிழப்பு ஏற்படக்கூடாது. எனது குழந்தைதான் இதனால் உயிரை விட்ட கடைசி குழந்தையாக இருக்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.  
மாஞ்சா நூலால் உயிர்பலி நடைபெறும் நேரங்களில் மட்டுமே போலீசார் விழித்துக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. இந்த நிலை மாற வேண்டும். மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


படித்து விட்டீர்களா? இந்த வார சமுதாய மக்கள் ரிப்போர்ட்!







வெள்ளி, 18 மார்ச், 2011

அமெரிக்காவில் போலி சாமியாருக்கு தண்டனை!

மாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கவே செய்வார்கள் என்பது தொடர்ந்து நிருபிக்கப் பட்டு வருகிறது. ஆன்மீகத்தின் பெயரால் மக்களின் பொருளாதரத்தையும், பெண்களின் கற்பையும் சூறையாடும் போலி மதகுருமார்கள் பற்றிய செய்திகள் தினமும் வந்தாலும் வெளிச்சத்திற்கு மயங்கும் விட்டில் பூச்சிகளாக இவர்களை நாடி செல்லும் கூட்டத்திற்கோ  பஞ்சமில்லை. அதனால் இந்த போலி சாமியார்கள் தங்களில் சித்து வேலையை காட்டுவதோடு, சில வேளை கைது செய்யப்பட்டாலும் ஜாமீனில் வெளிவந்து தங்களின் தூய ஆன்மீக[!] பணியை மீண்டும் தொடங்கி விடுகிறர்கள். இந்த போலிகளின் விஷயங்கள் இந்தியாவில் மட்டுமன்றி அமெரிக்காவிலும் அரங்கேறியுள்ளது. 
 
அமெரிக்காவில் ஆஸ்டின் நகரில் 200 ஏக்கர் பரப்பில் ஆசிரமம் நடத்தி வருபவர் 82 வயதான பிரகாஷ் ஆனந்த் சரஸ்வதி. இவர் தனது ஆசிரமத்தில் 12 வயது சிறுமிகளாக இருந்த காலம் தொடங்கி தங்கி வளர்ந்து வந்த இரு பெண்களை, அப்பெண்கள்   "டீன்ஏஜ்" பருவத்தில் இருந்தபோது, அதாவது கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சாமியார் பிரகாஷ் ஆனந்த் சரஸ்வதி இவர்களுடன் "செக்ஸ்" உறவில் ஈடுபட்டதாக காவல்துறையில் புகார் செய்தனர்.   கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்பெண்களின் இப்போதைய வயது  30 மற்றும் 27 ஆகும். இதை தொடர்ந்து சாமியார் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு ரூ.5 கோடி ரொக்க ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.
 
இந்த வழக்கு விசாரணை ஹீல்டன் மாவட்ட கோர்ட்டில் நடந்தது.   வழக்கை விசாரித்த நீதிபதி சார்லஸ் ராம்சே குற்றம் சாட்டப்பட்ட பிரகாஷ் ஆனந்த் சரஸ்வதி சுவாமிக்கு 14 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், ரூ.90 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். இதற்கிடையில்  இந்த சாமியார் தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
 
இடம் மாறினாலும் சிலருக்கு இயற்கை குணம் மாறாது என்பதற்கு இந்த் போலிச்சாமியார் சிறந்த உதாரணமாக உள்ளார். மக்கள் விழித்துக் கொண்டால் சரி!
 

லிபியாவுக்கு நிவாரணப் பொருட்கள்; குவைத் அனுப்பியது!

லிபியாவில் ஒரு மாத களமாக நீடித்துவரும் ஆட்சியாளருக்கு எதிரான கிளர்ச்சி ஒரு உள்நாட்டு போராகவே உருவெடுத்துள்ளது. இந்த கிளர்ச்சியில் நூற்றுக் கணக்கானோர் மாண்டுள்ளனர். ஆயிரக்கணக்கனோர் காயமுற்றுள்ளனர். இந்நிலையில், லிபியாவில் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண பணிக்காக, குவைத் அதிபர் ஷேக் சபா அல் அஹ்மத் சபா அவர்களின் உத்தரவின் பேரில், 14 டன் எடையுள்ள மருந்துப் பொருட்கள் உள்ளடக்கிய நிவாரணப் பொருட்கள் குவைத் சார்பாக அனுப்பப் பட்டுள்ளதாக செய்திகள்  கூறுகின்றன. மேலும், துனிசியா-லிபியா எல்லைப் பகுதி நிவாரணப் பணிகளுக்காக ஒரு மில்லியன் டாலர் ஐ.நாவின்[UNHCR ] வசம் குவைத் வழங்கியுள்ளதாகவும் ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.


சுனாமி; இயற்கையின் சீற்றமா? இறைவனின் நாட்டமா?

ரந்து விரிந்த நீர்ப்பரப்பு; பரவசமூட்டும் நீல நிறம்; காலை தழுவிச் செல்லும் அலைகள், மேனியை இதமாக வருடும் கடல் காற்று இவற்றின் மூலம் மனிதனின் இதயத்தை கொள்ளை கொண்ட கடல்,  என்னதான்  வேகமாக கிளம்பினாலும் ஒரு எல்லைக்குள்  வந்து திரும்பிய அலைகள், ஏணியை போல் ஒய்யாரமாக எழும்பி, ஒரு பெருந்தொகை மக்களை விழுங்கி செல்லும் அந்த சுனாமி நாளில்தான், அக்கடலின் அரசன் ஒருவன்  இருக்கிறான் என்றும், அவன்தான் ஆர்ப்பரித்து  வரும்  அலைகடலை அணைபோட்டு தடுத்து  வந்தவன் என்றும்,  அநீதிகள் பெருகும் போது தனது ஆற்றலை அவ்வப்போது மனிதனின் படிப்பினைக்காக வெளிப்படுத்திக் காட்டுகிறான் என்பதை  மனிதன் ஏனோ உணர மறுக்கிறான்.
 
கடல் காவு கொள்ளும் இந்த சுனாமி என்ற வார்த்தையே ஜப்பான் மொழியாகும். சிறிதாகவும், பெரிதாகவும் சுனாமியால் அதிகமாக அடிக்கடி தாக்கப்படும் நாடும் ஜப்பான்தான். இந்த சுனாமியிலிருந்து  தற்காத்துக் கொள்ள எண்ணற்ற முன்னேற்பாடுகளையும் ஜப்பான் செய்து வைத்திருந்தாலும், மார்ச் 11 அன்று ஜப்பானை கடுமையாக தாக்கிய சுனாமியால் உயிர்கள் பலி, உடமைகள்-வீடுகள் சேதம் என நிலைகுலைந்து நிற்கிறது ஜப்பான். இந்த  சுனாமி இன்று நேற்றல்ல பன்னெடுங்காலமாகவே அவ்வப்போது  பல நாடுகளை பதம் பார்த்துள்ளது.
 
உலகில் ஏற்பட்ட சுனாமி தாக்குதல்கள் : இதுவரை உலகில் சுனாமி அலைகளின் தாக்குதலால் ஏராளமான உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. அவை:
1700, ஜனவரி: அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா, ஓரிகன், வாஷிங்டன் மற்றும் கொலம்பியா நகரங்களை பூகம்பம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோளில் 9 புள்ளிகள் இருந்தது. இதனை தொடர்ந்து ஜப்பானை சுனாமி தாக்கியது.
 
1730, ஜூலை: சிலி நாட்டில் ரிக்டர் அளவில் 8.7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதில் 3 ஆயிரம் பேர் பலியானார்கள்.
1755, நவம்பர்: போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் ரிக்டர் அளவில் 8.7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சுனாமியால் 60 ஆயிரம் பேர் பலியானார்கள்
 
1868, ஆகஸ்ட்: சிலியில் ரிக்டர் அளவில் 9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக தோன்றிய சுனாமி அலைகள், தென் அமெரிக்காவை தாக்கின. இதில் 25 ஆயிரம் பேர் இறந்தனர்.
1906, ஜனவரி: ஈகுவெடார் மற்றும் கொலம்பியா கடற்கரையில் ரிக்டர் அளவில் 8.8 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் 500 பேர் சிக்கி பலியானார்கள்
 
1946, ஏப்ரல்: யுனிமாக் தீவுகளில் ரிக்டர் அளவில் 8.1 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக அலாஸ்காவை சுனாமி அலைகள் தாக்க, 165 பேர் பலியானார்கள்.
1960, மே: தெற்கு சிலியில் ரிக்டர் அளவில் 9.5 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 1,716 பேர் பலியானார்கள்.
 
1964, மார்ச்: அமெரிக்காவின் பிரின்ஸ் வில்லியம் சவுண்டு பகுதியில் 9.5 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டது. இதன்காரணமாக அலாஸ்காவை சேர்ந்த 131 பேர் பலியானார்கள். 128 பேர் சுனாமியில் சிக்கி இறந்தனர்.
1976, ஆகஸ்ட்: பிலிப்பைன்ஸ் நாட்டில் 9.2 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக சுனாமி தாக்கி 5 ஆயிரம் பேர் பலியானார்கள்.
 
2004, டிசம்பர்: இந்திய பெருங்கடலில் ரிக்டர் அளவில் 9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுனாமி அலைகள் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை தாக்கியது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியானார்கள்.
2007, ஏப்ரல்: சாலமன் தீவுகளில் 8.1 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. பின்னர் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 28 பேர் பலியானார்கள்.
 
2009, செப்டம்பர்: தெற்கு பசிப்பிக் பகுதியில் ரிக்டர் அளவில் 8 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. பின்னர் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 194 பேர் பலியானார்கள்.
2010 ஜனவரி: ஹெய்தியில் ரிக்டர் அளவில் 7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதில்சுமார் 3 லட்சம் பேர் பலியானார்கள்.
அக்டோபர்: இந்தோனேசியாவில் சுனாமி மற்றும் எரிமலை சீற்றத்தால் 500 பேர் பலியானார்கள்.
 
2011, மார்ச்: ஜப்பானில் ரிக்டர் அளவில் 8.9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ராட்சத சுனாமி அலைகள் ஜப்பானை தாக்கியது.[புள்ளி விவரங்கள் நன்றி; thirudan.com ]
 
இத்தகைய பேரழிவு சுனாமியை இஸ்லாமிய பார்வையில் சற்று அலசி பார்ப்போம்.
 
நபி நூஹ்[அலை] அவர்கள் தமது சமுதாயத்திடம் சத்தியத்தை சொன்னபோது, அவர்களில் பெரும்பாலோர் சத்தியத்தை  ஏற்க மறுத்ததோடு, வரம்பு மீறியதன் காரணமாக, அந்த சமுதாயத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் நீங்கலாக, மற்றவர்கள்   அல்லாஹ்வால் அழிக்கப்பட்டார்கள். அந்த சமுதாயத்தை அழிப்பதற்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்த வழி, பூமியிலிருந்து அலைபோல நீரை பொங்க வைத்ததும் வானிலிருந்து மழையை பொழிவித்ததுமாகும். இதுபற்றி அல்லாஹ் தன் வேதத்தில் கூறுகின்றான்;
 

மேலும், நூஹ்வுக்கு வஹீ அறிவிக்கப்பட்டது; "(முன்னர்) ஈமான் கொண்டவர்களைத் தவிர, (இனி) உம்முடைய சமூகத்தாரில் நிச்சயமாக எவரும் நம்பிக்கை கொள்ளமாட்டார்; ஆதலால் அவர்கள் செய்வதைப்பற்றி நீர் விசாரப்படாதீர்ர்கள்  (11:36)

"நம் பார்வையில் நம்(வஹீ) அறிவிப்புக்கு ஒப்ப கப்பலைக் கட்டும்; அநியாயம் செய்தவர்களைப் பற்றி(ப் பரிந்து இனி) நீர் என்னிடம் பேசாதீர்; நிச்சயமாக அவர்கள் (பிரளயத்தில்) மூழ்கடிக்கப்படுவார்கள்."  (11:37)

அவர் கப்பலைக் கட்டிக் கொண்டிருந்த போது, அவருடைய சமூகத்தின் தலைவர்கள் அவர் பக்கமாகச் சென்றபோதெல்லாம் அவரைப் பரிகசித்தனர்; (அதற்கு) அவர்; "நீங்கள் எங்களைப் பரிகசிப்பீர்களானால், நிச்சயமாக நீங்கள் பரிகசிப்பதுபோலவே, (அதிசீக்கிரத்தில்) நாங்கள் உங்களைப் பரிகசிப்போம்" என்று கூறினார்.  (11:38)

"அன்றியும், எவன்மீது அவனை இழிவு படுத்தும் வேதனை வருமென்றும், எவன்மீது நிலைத்திருக்கும் வேதனை இறங்கும் என்றும் வெகு விரைவில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்" (என்றும் கூறினார்).  (11:39)

இறுதியாக, நம் உத்தரவு வந்து, தண்ணீர்  பொங்கவே, (நாம் நூஹை நோக்கி;) "உயிர்ப் பிராணிகள் ஒவ்வொரு வகையிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) ஒவ்வொரு ஜோடியை (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளும்; (மூழ்கடிக்கப்படுவார்கள் என்று எவர்களைக் குறித்து முன்பே நம்) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவர்களைத் தவிர் உம் குடும்பத்தாரையும், ஈமான் கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளும்" என்று நாம் கூறினோம்; வெகு சொற்ப மக்களைத் தவிர மற்றவர்கள் அவருடன் ஈமான் கொள்ளவில்லை.  (11:40)

இதிலே நீங்கள் ஏறிக் கொள்ளுங்கள்; இது ஓடுவதும் நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே (நிகழ்கின்றன). நிச்சயமாக என் இறைவன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். என்று கூறினார்.  (11:41)

பின்னர் அக்கப்பல், மலைகளைப் போன்ற அலைகளுக்கிடையே அவர்களை சமந்து கொண்டு செல்லலாயிற்று; (அப்போது தம்மை விட்டு) விலகி ந்ன்ற தம் மகனை நோக்கி "என்னருமை மகனே! எங்களோடு நீயும் (கப்பலில்) ஏறிக்கொள்; காஃபிர்களுடன் (சேர்ந்து) இராதே!" என்று நூஹ் அழைத்தார்.  (11:42)

அதற்கு அவன்; "என்னைத் தண்ணீரிலிருந்து பாதுகாக்கக் கூடிய ஒரு மலையின்மேல் சென்று நான் (தப்பி) விடுவேன்" எனக் கூறினான். இன்றைய தினம் அல்லாஹ் யாருக்கு அருள் புரிந்திருக்கிறானோ அவரைத் தவிர அல்லாஹ்வின் கட்டiளியிலிருந்து காப்பாற்றப்படுபவர் எவருமில்லை என்று கூறினார். அச்சமயம் அவர்களிடையே பேரலை ஒன்று எழுந்து குறுக்கிட்டது; அவன் மூழ்கடிக்கப்பட்டவர்களில் ஒருவனாகவி விட்டான்.  (11:43)

பின்னர்; "பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக்கொள்" என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது; (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்து விட்டது; (கப்பல்) ஜூதி மலைமீது தங்கியது - அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது.  (11:44)

 
நூஹ்[நபி] அவர்கள் பிரார்த்திததன் காரணத்தினால் அல்லாஹ், அலைபோல நீரை பொங்க வைத்து  அநியாயக்காரர்களை மட்டும் அழித்தான். ஆனால் இப்போது ஏற்படும் சுனாமி  போன்ற பேரிழப்புகளில் நல்லவர்களும் பலியாகிறார்களே என நமக்கு ஒரு கேள்வி எழலாம். இதைப்பற்றியும் வல்ல அல்லாஹ் தன் திருமறையில்,

நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை - நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.[8 ;25 ]

அல்லாஹ் பொதுவாக ஒரு அழிவை உண்டாக்கும்போது அதில் நல்லவர்கள் பாதிக்கப்பட்டாலும், அவர்களின் எண்ணத்திற்கேற்ப நன்மையுண்டு என்று நபியவர்கள் விளக்கமளித்துள்ளர்கள். இது ஒருபுறமிருக்க, இதைப் போன்ற பேரழிவுகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வரும் என்பதை நபி[ஸல்] முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்;

பொதுச் சொத்து தன் சொத்தைப் போல பாவிக்கப்படும் போது,

போரில் கிடைக்கப்படும் அமானிதம் (கனீமத்) தன் பங்குப் பொளாகக் கருதப்படும் போது,

ஜகாத் கடன் கொடுப்பதைப் போன்று கடினமாகக் கருதப்படும் போது,

தீனுடைய நோக்கமின்றி கல்வி கற்பிக்கப்படும் போது,

கணவன் தன் மனைவிக்கு அடிபணிந்து வாழும் போது,

பெற்ற தாய் தன் மக்களால் வேதனை செய்யப்படும் போது,

தனது நண்பனை தனக்கு நெருக்கமாக்கி, பெற்றெடுத்த தந்தையை புறக்கணிக்கும் போது,

அல்லாஹ்வின் பள்ளிவாயில்களில் சப்தங்கள் உயர்த்தப்படும் போது,

ஒரு கூட்டத்தினருக்கு அவர்களில் உள்ள தீயவன் தலைவனாகும் போது,

ஒரு கூட்டத்திலுள்ள இழிவானவன் கண்ணியமானவனாகவும், கண்ணியமானவர் அவர்களில் மிக இழிவானவராகக் கருதப்படும்போது,

ஒரு மனிதனுடைய தீமைக்குப் பயந்து அவனுக்கு கண்ணியமளிக்கப்படும் போது

ஆடல் பாடல்களில் ஈடுபடும் பெண்களும், இசைக்கருவிகளும் அதிகரிக்கும் போது,

மதுபானங்கள் தாராளமாக அருந்தப்படும் போது,

இந்த உம்மத்தில் பின்னால் வருகிறவர் முன் சென்றவர்களைச் சபிக்கும் போது

இத்தகைய காரியங்களெல்லாம் ஏற்படுகிற காலத்தில் சிவந்த நிறமான காற்றையும், நில நடுக்கத்தையும், பூமிக்குள் அழுத்தப்படுவதையும், உருவமாற்றம் நிகழ்வதையும், கல்மாரி பொழிவதையும் நூலருந்த மணிகள்போல் ஒன்றன்பின் ஒன்றாக பல வேதனைகளை எதிர்பாருங்கள். அறிவிப்பவர் : அபூஹூரை (ரழி) நூல் : திர்மிதி.

இறைத்தூதர்[ஸல்] அவர்கள் தன் திருவாயால் முன்னறிவிப்பு செய்த  மேற்கண்ட  அநியாயங்கள் இன்றைக்கு உலகில் அச்சரம் பிசகாமல் நடக்கிறதா? இல்லையா? பொதுச் சொத்துக்களை தனதாக்கிக் கொள்வதும், உலக ஆதாயத்திற்காக மார்க்கத்தை கற்பதும், தீயவன் சமுதாய தலைவனாக காட்சியளிப்பதும், அந்த தீயவனுக்கு பயந்து அவனுக்கு மரியாதை செலுத்தி, அவன் சொல்லும் அனைத்திற்கும் தலையாட்டுவதும், அமைதியாக இருந்த பள்ளிவாசல்கள் துப்பாக்கி சத்தம் கேட்கும் இடமாக மாற்றப்பட்டதும், நல்லவனை இழிவாகவும், அயோக்கியனை தலையில் தூக்கி வைத்து ஆடுவதும், மேலும், மது-விபச்சாரம்- ஆடல்- பாடல்- இப்படி எல்லாம் மிகுதியாகி விட்டதை கண்கூடாக காண்கிறோம். இத்தகைய இழிநிலையை  மாற்றி இறைவனின் அச்சத்தை மனிதில் தாங்கி, இறையச்சமுடையவர்களாக நாம்  மாறவேண்டும் என்பதுதான் இந்த சுனாமி தரும் படிப்பினையாகும்.