புதன், 30 மார்ச், 2011

தேடிவந்த பட்டத்தை புறக்கணித்த தெண்டுல்கர்!

வரவ டாக்டர் பெற்ற ஒரு அரசியல்வாதி ஒரு கிராமத்திற்கு விஜயம் செய்தாராம். அவரிடம் ஒரு வயதான பெண்மணி தனது நோய்க்கு மருந்து கேட்டாராம். இப்படி ஒரு நகைச்சுவை துணுக்கு படித்த நினைவு. அந்த அளவுக்கு அரசியல்வாதிகளுக்கும், சினிமா நடிகர்களுக்கும் பல்கலைக் கழகங்களும், நிகர்நிலை பல்கலை கழகங்களும் போட்டி போட்டு 'டாக்டர்' பட்டத்தை வழங்கி கவுரவிப்பதைக் காண்கிறோம்.
 
இத்தகைய கவுரவ டாக்டர் பட்டங்களை விரும்பி பெற்றுக் கொள்பவர்களுக்கு மத்தியில், பிரபல கிரிக்கெட் வீரர் தெண்டுல்கர் தனக்கு கிடைக்கவிருந்த டாக்டர் பட்டத்தை வேண்டாம் என புறக்கணித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
 
''மைசூர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா வருகிற ஏப்ரல் மாதம் 10ம்  தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தெண்டுல்கருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலைக்கழகம் முடிவு செய்து இருந்தது.
ஆனால் மைசூர் பல்கலைக்கழகத்தின் வேண்டுகோளை ஏற்க தெண்டுல்கர் மறுத்து விட்டார். இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வி.ஜி.தல்வாருக்கு, தெண்டுல்கரின் மனைவி அஞ்சலி ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
எந்த கவுரவ டாக்டர் பட்டத்தையும் ஏற்பது இல்லை என்று தெண்டுல்கர் முடிவு செய்துள்ளார். இந்தியாவுக்காக தொடர்ந்து சிறந்த முறையில் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். எனவே, தாங்கள் அளிக்க முன்வந்த கவுரவ டாக்டர் பட்டத்தை ஏற்க இயலாத நிலையில் இருப்பதை தெரிவித்துக் கொள்கிறோம்என்று அந்த கடிதத்தில் அஞ்சலி தெண்டுல்கர் கூறியுள்ளார்.
 
வெற்று கவுரவத்தை விரும்பாத தெண்டுல்கர் வித்தியாசமான மனிதர்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக