வியாழன், 31 மார்ச், 2011

தவறான தகவல் தந்தமைக்காக வருந்துகிறோம்

தனிநபர் ஜமாஅத்தின் தேர்தல் நிலைப்பாடு தொடர்பான நமது விளக்கத்தில் 'முஸ்லிம்லீக்கும் பாமகவும் ஒன்றா? என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வடித்திருந்தோம். அதில் முஸ்லிம்லீக்கில் முஸ்லிமல்லாத ஒருவர் உறுப்பினராக முடியாது என்றும், முஸ்லிமல்லாத ஒருவர் அக்கட்சியின் பொறுப்புக்கு வரமுடியாது என்றும் குறிப்பிட்டிருந்தோம். இந்த செய்தி முஸ்லிம் லீக் குறித்து நாம் அறிந்தவரை உள்ள அறிவின் அடிப்படையில் எழுதப்பட்டது. இருப்பினும் நன்கு உறுதிப்படுத்தும் நோக்கில் தாய்ச்சபையை இன்று நாம் தொடர்பு கொண்டு பேசியபோது,  முஸ்லிம்லீக்கின் கொள்கையை ஏற்றுக்கொண்ட எம்மதத்தவரும் அக்கட்சியில் சேரலாம் என்றும், முஸ்லிமல்லாத ஒருவரே மாநில நிர்வாகியாகவே  இருக்கிறார் என்ற தகவலும் அறிந்து கொண்டோம். எனவே நாம் அறிந்தவரை சொன்ன மேற்கணட் தகவலை வாபஸ் பெறுகிறோம். அதோடு  ஒரு தவறான தகவல் தந்தமைக்காக  வருந்துகிறோம். சம்மந்தப்பட்ட தாய்ச்சபையினரும், ஏனைய  சகோதரர்களும் மன்னிக்க வேண்டுகிறோம்.
 
அதே நேரத்தில் அக்கட்டுரையில்  எழுதப்பட்டுள்ள ஏனைய விஷயங்களில் நாம் உறுதியாக இருக்கிறோம். முஸ்லிம்லீக் ஒரு வன்னியருக்கு சீட்டுத்தருமா  என்று அந்த தனிநபர் கேட்டாரே! ஆனால் கேரளாவில் முஸ்லிமல்லாதவர்களுக்கும் தாய்ச்சபை வாய்ப்பளித்துள்ளது. எனவே முஸ்லிம் லீக்கோடு ஒருபோதும் பாமகவை ஒப்பிட முடியாது என்பதை  மீண்டும் ஆணித்தரமாக சொல்லிக்கொள்கிறோம். முஸ்லிம்களுக்கு தொடர்ந்து ஒரு சீட்டுக்கூட ஒதுக்காமல் வஞ்சிக்கும் பாமகவை, ஆதரிக்க சொல்லும்  தனிநபர் ஜமாஅத்தை மீண்டும் வன்மையாக கண்டிக்கிறோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக