புதன், 30 மார்ச், 2011

முஸ்லிம் லீக்கும் பாமகவும் ஒன்றா?

கடந்த  நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு சீட்டுக் கூட முஸ்லிம்களுக்கு ஒதுக்காத பாமகவை ஆதரிக்க மாட்டோம்  என்று தீர்மானம்  போட்ட தனிநபர் ஜமாஅத், இந்த தேர்தலில் ஒரு சீட்டுக்கூட முஸ்லிம்களுக்கு  ஒதுக்காத அதே பாமகவை, கருணாநிதியை முதல்வராக்கியே தீர்வது என்ற தனது அபிலாசைக்காக இலவச இணைப்பாக ஆதரிப்பது  குறித்து ஏற்கனவே நாம் எழுதியுள்ளோம்.
 பாமக ஒரு சீட்டுக் கூட முஸ்லிம்களுக்கு  கொடுக்காததற்கு குறைந்த பட்சம் இந்த தனிநபர் கண்டிப்பதற்கு பதிலாக, அவ்வாறு கேள்வி கேட்பதே பைத்தியக்காரத்தனம் என்று சாடியதோடு, முஸ்லிம் லீக்கில் ஒரு வன்னியருக்கு சீட்டுக் கொடுப்பார்களா என்று சப்பைக் கட்டு கட்டி, பாமகவையும்- முஸ்லிம் லீக்கையும் ஒப்பிட்டு அந்த பொதுக்குழுவில் பேசியுள்ளார்.
 
முஸ்லிம் லீக்கும் பாமகவும் ஒன்றா? முஸ்லிம் லீக்கில் ஒரு முஸ்லிமல்லாதவர் உறுப்பினராக முடியுமா? ஒரு பொறுப்பிற்கு வர முடியுமா? முடியாது. காரணம் முஸ்லிம் லீக் முழுக்கக் முழுக்க முஸ்லிம்களின் அமைப்பாகும். ஆனால் பாமக அப்படியல்ல. அக்கட்சியில் எம்மதத்தவரும் உறுப்பினராகலாம். பொறுப்புக்கு வரலாம். பாமகவின் மாநிலத் துணைத்தலைவராக முஸ்லிமான கஸ்ஸாலி இருந்து வருகிறார். எப்படி திமுக-அதிமுகவில் எம்மதத்தவரும் இணையமுடியுமோ, பொறுப்புக்கு வரமுடியுமோ அவ்வாறே பாமக கட்சியிலும் வர முடியும். ஆனால் திமுக அதிமுக சில முஸ்லிம்களையாவது  வேட்பாளராக நிறுத்துகிறது. ஆனால் பாமக வெகுஜன அமைப்பு என்று சொல்லிக்கொண்டு, கட்சிப்பதவியில்  மட்டும் பெயருக்கு ஒன்றிரண்டு முஸ்லிம்களுக்கு வாய்ப்பு தந்து கொண்டு, தேர்தலில் மட்டும் முஸ்லிம்களுக்கு வாய்ப்பளிக்க தொடர்ந்து மறுக்கிறது என்றால், இத்தகைய கட்சியை நாம் ஆதரிப்பது அறிவுடமையா? என்று  கேட்டால் அக்கேள்வி பைத்தியக்காரத்தணமாம்.  ஆனால் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு மறுக்கும் அக்கட்சிக்கு முஸ்லிம்களின் வாக்கை செலுத்த சொல்வது மட்டும் உலக மகா அறிவாளித்தணமாம்.
 
இவ்வாறு நாம் வாதத்தை வைத்தவுடன் இந்த வார்த்தைஜால வித்தகர்கள் இன்னொரு வாதத்தை வைக்கலாம். பாரதீய ஜனதாவிலும் தான்  யார் வேண்டுமானாலும் சேரமுடியும். அதனால் அக்கட்சி ஜாதிக்கட்சி இல்லை என்று ஆகிவிடுமா என்று கேட்பார்கள்  இந்த அதிமேதாவிகள். பாரதீய ஜனதா மதவாத கட்சியாக இருந்தாலும் அக்கட்சி கூட முஸ்லிம்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கிறது என்பது  ஒருபுறம், அடுத்து பிஜேபி போன்று பாமக மதவாத பயங்கரவாதத்தில்  ஈடுபடும் கட்சியல்ல. எனவே பிஜேபியோடு ஒப்பிட்டு மீண்டும் முகத்தில் கரி பூசிக்கொள்ள வேண்டாம்.
 
எங்கே செல்லும் இந்த தக்லீது பாதை....???????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக