புதன், 30 மார்ச், 2011

ஜப்பான் பொருட்கள்; சவூதியை கிண்டலடிக்கும் தினமலர்!

ண்டை நாட்டில் ஏற்படும், நோய் அல்லது வேறு விதமான பாதிப்புகள் தனது நாட்டு மக்களுக்கும் பரவிவிடக் கூடாது என்று கவலை கொள்வதும், அதற்க்காக முன்னேற்பாடுகளை செய்து கொள்வதும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொரு நாடும் செய்து வரும் நடைமுறையாகும். சமீபத்தில் வெளிநாடுகளில் பன்றிக்காய்ச்சல் பரவியபோது, அது நமது நாட்டு மக்களை தாக்கிவிடக் கூடாது  என்பதற்காக வெளிநாட்டிலிருந்து வருகை தந்த பயணிகளை விமான நிலையத்திலேயே மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியது இந்தியா. இதுபோன்ற முன்னேற்பாடுகளை  செய்வது அரசின் கடைமையாகும். இதை யாரும் குறைகாண முடியாது. ஆனால் இத்தகைய ஒரு முன்னேற்பாட்டை  செய்வது ஒரு முஸ்லிம் நாடு என்றால் அங்கே வேறு பார்வை பார்க்கப்படுகிறது.

''ஜப்பானில் அணு உலைகள் வெடித்து, அவற்றில் இருந்து கதிர் வீச்சு பரவுவதால், அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் நுகர்வோர் பொருட்களை முழுமையாக சோதனையிடும்படி, சவுதி அரேபியா அரசு, தனது துறைமுக அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.  ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நுகர்வோர் பொருட்கள் அனைத்தையும், ஆய்வகத்தில் முழுமையாக சோதனையிடும்படியும், அந்த பொருட்களில் அணு கதிர் வீச்சின் பாதிப்பு உள்ளதா என கண்டறியும்படியும், தனது நாட்டில் உள்ள துறைமுக அதிகாரிகளுக்கு, சவுதி அரேபிய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, வர்த்தக சங்கத்துக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சோதனை செய்யப்படாத பொருட்களை, சவுதி அரேபியாவுக்குள் அனுமதிக்க வேண்டாம் என்றும், அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது'' என்ற செய்தியை வெளியிட்ட தினமலர் சந்தடி சாக்கில் தனது 'குசும்பை' வெளிப்படுத்தியுள்ளது.

அதாவது இந்த செய்திக்கு 'ஜப்பான் பொருட்களா? சவுதி அலறுகிறது' என்று தலைப்பிடுகிறது. இதன் மூலம் ஜப்பான் விசயத்தில் ஏதோ சவூதி பயந்து சாவது போன்ற தோற்றத்தை தர முயல்கிறது தினமலர். சவூதியின் முன்னெச்சரிக்கையில் என்ன தவறிருக்க  முடியும்? சம்மந்தப்பட்ட ஜப்பானே தனது நாட்டு மக்கள் கதிர்வீச்சால் பாதிக்கப் பட்டுள்ளார்களா என பரிசோதிக்கும் போது, அந்நாட்டிலிருந்து வரும் பொருளை சவூதி சோதிப்பதை தினமலர் கிண்டலடிப்பது எதற்காக? ஒருவேளை வருமுன் காப்போம் என்பது தினமலருக்கு பிடிக்காதோ!  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக