வெள்ளி, 25 மார்ச், 2011

பாகிஸ்தானில் இரட்டைக் கொலையும்; அமெரிக்காவின் இழப்பீடும்!

மெரிக்காவின் தூதரக அதிகாரி  ரோமாண்ட் டேவிஸ் என்பவர்,பாகிஸ்தானில் கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதியன்று இரு  பாகிஸ்தானியர்களை சுட்டுகொன்றார். இவர்கள் கொள்ளையர்கள் என நினைத்து டேவிஸ் சுட்டார் என்று கூறப்பட்டது. இந்த படுகொலை  பாகி்ஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக டேவிஸ் கைது‌ செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு லாகூர் கோர்டில் நடந்தது. 'தூதரக அதிகாரி என்ற முறையில் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் விடுவிக்கவேண்டும் என்று அமெரிக்கா கோரியது. இதற்கு பாகிஸ்தான் சம்மதிக்கவில்லை. இதை தொடர்ந்து இருதரப்பு உறவில் பாதிப்பு ஏற்பட்டது. டேவிஸ் விடுதலையாகும் வரை பாகிஸ்தானுடன் எந்த உறவும் வைத்துக்கொள்ள மாட்டோம் என்று அமெரிக்கா அறிவித்தது. இருந்தாலும் பாகிஸ்தான் அசைந்து கொடுக்கவில்லை.
இந்நிலையில், வேறு வழியின்றி  கொலையானவர்களின் குடும்பத்துக்கு 2 -34 மில்லியன் டாலர் இழப்பீடு தர அமெரிக்கா முன்வந்ததையடுத்து, கொலையானவர்களின் குடும்பத்தாரும் இழப்பீட்டை பெற்றுக் கொள்வதற்கு  ஒப்புக் கொண்டதன் அடிப்படையிலும் டேவிசை விடுதலை செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. இதையொட்டி ‌அவர் விடுதலை செய்யபபபட்டார்.
 
டேவிஸின் விடுதலையை எதிர்த்து பாகிஸ்தானில் மக்கள் போராட்டங்களை வீரியமாக நடத்தி வருகின்றனர். அதோடு டேவிஸின்  விடுதலையை எதிர்த்து ரேய் முகமது நவாஸ் என்ற வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து நவாஸ் குறிப்பிடுகையில், அப்பாவி இருவரை சுட்டுக்கொன்றவரை கோர்ட் விடுவித்தது அரசியல் சட்டத்திற்கு விர‌ோதமானது. இதனை ‌எதிர்‌த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடங்கப்பட்டுளளது. முடிந்தால் இந்த பிரச்னையை பயங்கரவாத எதிர்ப்பு கோர்ட்டிலும் வழக்கு தொடரப்படும் என்றார்.

இஸ்லாமிய சட்டப்படி கொலைகாரர், கொலையானவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு (ரத்தப்பணம்) கொடுக்க வேண்டும். இந்த இழப்பீட்டை பெற்றுக்கொண்டு கொலைகாரரை மன்னிப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தால், கொலைகாரரை விடுதலை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தில் ஒரு விஷயத்தை  கவனத்தில் கொள்ளவேண்டும். பல்வேறு விஷயங்களில் அமெரிக்காவின் உதவியைப் பெற்று வரும் பாகிஸ்தான், தனது மக்கள் விஷயத்தில்  அமெரிக்காவின் ஆதிக்கக் குரலுக்கு செவி சாய்க்கவில்லை.
 
ஆனால் போபால் விஷவாயு கசிவில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். போபால் விஷவாயு தாக்குதலுக்கு காரணமான யூனியன் கார்பைடிடம்  1984-ல் 3.3 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்ட ஈடு கேட்ட இந்திய அரசு, 1999-ல் 450 மில்லியன் டாலர் போதும் என்று ஒப்புக்கொண்டது. மாறாக, இந்திய அரசு, 3.3 பில்லியன் டாலருக்கு ஒரு ஒரு துளியும் குறையாமல் யூனியன் கார்பைடிடம் கறந்திருக்கவேண்டும்.அப்படி அந்தப் பணத்தைப் பெற்று  பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு கிடைக்குமாறு செய்திருக்கவேண்டும். செத்த ஒவ்வொருவர் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் (இன்றைய பணத்தில்); உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் 25 லட்சம் முதல் 50 லட்சம் வரையில்... என்றால் ஓரளவுக்கு அது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும். அரசு இதையும் கோட்டை விட்டதோடு, இந்த நிறுவனத்தின் அமெரிக்கத் தலைமையகத்தின் தலைவரான வார்ரென் ஆண்டர்ஸென் என்ற அமெரிக்கர் இந்த வழக்கில் ஒரு குற்றவாளியாக ஆரம்பத்தில் சேர்க்கப்பட்டிருந்தார் என்றாலும், அப்ஸ்காண்டீ அதாவது தப்பியோடியவர் என்று பின்னர் இவரை நீதிமன்றம் அறிவித்திருந்தது. போபால் விஷவாய குறித்த நீதிமன்றத் தீர்ப்பில் தீர்ப்பில் அவர் பெயர் எங்கும் இடம்பெறவில்லை என்பதும்  குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக