ஞாயிறு, 27 ஜனவரி, 2013

மருத்துவரே! அன்றைக்கு எங்கேபோனது உமது புழுத்துப்போன கருத்துச் சுதந்திரம்?

''மரம் வெட்டி'' என அறியப்பட்டிருந்த ராமதாசை மக்கள் மன்றத்தில் தலைவராக முன்னிறுத்தியவர் மறைந்த சகோதரர் பழனிபாபா அவர்களாவார். அரசியலில் சற்றே வளர்ந்தவுடன் பழனி பாபாவை ஓரங்கட்டினார் இந்த மருத்துவர். தனக்கு தேவைப்படும் போதெல்லாம் எந்த சாதியையும் தூக்கிப் பிடித்து பிழைப்பை ஓட்ட தயங்காதவர். சேரிகளின் எறிந்த குடிசைகளின் சாம்பலில் பல் துலக்கியவர், பின்னாளில்  தேர்தல் ஆதாயத்திற்காக திருமாவளவன் தோளில்  கை போட்டு அந்த சமுதாயத்தின் நம்பிக்கையை பெற்றவராக தன்னை காட்டிக்கொண்டு ''தமிழ் குடிதாங்கி''யாக உயர்ந்தவர். இப்போது அதே ராமதாஸ் மீது தர்மபுரி மாவட்டத்தில் மீண்டும் ஒரு  சாதீய தாண்டவம் ஆடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தலித்  மக்களுக்கு எதிராக சாதீயவாதிகளுடன் கரம் கோர்த்து  களமாடும்  ஒரு சுயநலவாதிதான் இந்த ராமதாஸ். அரசியல் ரீதியாக எந்தக் கட்சியும் இவரை சீண்டாத நிலையில், சீ..சீ.. இந்தப் பழம் புளிக்கும் என்ற கதையாக திராவிடக் கட்சிகளுடன்  கூட்டணி இல்லை என அறிவித்துக் கொண்டவர். தனது இருப்பை காட்டிக்கொள்ள அவ்வப்போது  அறிக்கை அரசியல் நடத்துபவர். அப்படி அவர்  நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை தான்  இஸ்லாமிய விரோதியும் இந்திய தேச விரோதியுமான கமல்   படமான விஸ்வரூபத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் என்ற அறிக்கை.

அவரது அறிக்கையில், ''விஸ்வரூபம் திரைப்படம் நடுநிலையான இஸ்லாமியர்களை பெருமையடையச் செய்யும் விதத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது என்று கமலஹாசன் கூறியுள்ள நிலையில், இதை பொதுவான இஸ்லாமியர்கள் உள்ளிட்ட ரசிகர்களின் முடிவுக்கே விட்டுவிடுவதுதான் சரியானதாக இருக்கும். மாறாக படத்தை முடக்க முயல்வது எதிர்மறையான எண்ணத்தையே ஏற்படுத்தும். விஸ்வரூபம் படத்திற்கு தணிக்கை வாரியம் அனுமதி அளித்துவிட்ட நிலையில், தமிழக அரசு தலையிட்டு, யாருடைய கருத்தையும் கேட்காமல் தடை விதித்திருப்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதாகும். எனவே, விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தமிழக அரசு உடனடியாக நீக்கவேண்டும்'' என்று கூறியுள்ளார்.

கமல்ஹாசனே சொல்லிட்டாராம். அதுனால மக்கள் தீர்ப்புக்கே விட்டுரனுமாம். அதோட சென்சார் போர்டு அனுமதிச்ச படத்தை தமிழக அரசு தடுத்தது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதாம் சொல்கிறார் மருத்துவர். மருத்துவருக்கு செலக்டிவ் அம்னீசியா நோய் இருக்கின்ற காரணத்தினால், ஒரு விஷயத்தை அவருக்கு நினைவூட்டுகிறோம்.  சில ஆண்டுகளுக்கு முன்னால் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் பாபா. இந்த படத்திற்கு சென்சார் போர்டும் அனுமதி அளித்தது.  தமிழக அரசு  தடை ஏதும் செய்யவில்லை. அந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கோ சாதிக்கோ எதிரான கருத்து இருப்பதாக யாரும் போராடவும் இல்லை. ஆனால் ராமதாஸ் அந்த படத்திற்கு எதிராக தனது கட்சியினர் மூலமாக கலவரத்தில் ஈடுபட்டார். அதைப்பற்றி அன்றைய காலகட்டத்தில் பத்திரிக்கைகளில் வெளியான செய்திகளில் ஒன்றே ஒன்று மட்டும் மருத்துவர் பார்வைக்கு;

பூம்புகாரில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து டாக்டர் ராமதாஸ் பேசிய பேச்சுக்கள் தமிழகத்தையே கடந் சில நாட்களாகஉலுக்கி எடுத்து விட்டன. குறிப்பாக வட மாவட்டங்களில் நடிகர் ரஜினிக்கு எதிராக ஆங்காங்கே போராட்டங்கள்நடந்தன. ரஜினியின் கொடும்பாவியை பாமகவினர் எரித்தனர். பாபா படம் போட்ட தியேட்டர்களுக்கு சென்று படங்களைத்திரையிட விடாமல் கலாட்டா செய்தனர். ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தியேட்டரைத் தாக்கி "பாபா" படப்பெட்டியை சிலர் கடத்திச் சென்றனர்.உச்சகட்டமாக விருத்தாசலத்தில் அப்படத்தைத் திரையிட்ட தியேட்டர் உரிமையாளரும் கடத்தப்பட்டு பின்னர்விடுவிக்கப்பட்டார். இதனால் பல பகுதிகளில் "பாபா" படம் திரையிடப்படவில்லை. "பாபா"வுக்கு எழுந்த எதிர்ப்பு வன்முறையாக மாறுவதைக் கண்ட தமிழக அரசு, "பாபா" ஓடும் தியேட்டர்களில்பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தது. அதேபோல, ரஜினிக்கு எதிராக பாமகவினர் நடத்தியபோராட்டங்களையும் போலீஸார் தலையிட்டுத் தடுத்தனர். அதேபோல, போராட்டத்தில் ஈடுபட்ட ரஜினிரசிகர்களும் சரமாரியாகக் கைது செய்யப்பட்டனர்.

Read more at: http://tamil.oneindia.in/news/2002/08/19/ramadoss.html


மருத்துவரே! அன்றைக்கு எங்கேபோனது  உமது  புழுத்துப்போன கருத்துச் சுதந்திரம்? நீர் உரசிப்பார்க்க இஸ்லாமியர்கள் வெறும் தீக்குச்சி அல்ல; அதையும் தாண்டி....''எரிமலை'' என்பதை மனதில் கொண்டு  தைலாபுர தோட்டத்தில்  காற்று வாங்குவதுதான்   நல்லது என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக