செவ்வாய், 15 ஜனவரி, 2013

குஜராத் இனப்படுகொலை தொடர்பான ஆவணங்கள் அழிப்பு: விசாரணை நடத்த நானாவதி கமிஷன் உத்தரவு! !!!!!!!!!!!!!!!!!!!!!!!

அஹ்மதாபாத்:குஜராத் மாநிலத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கடந்த
2002-ஆம் ஆண்டு இந்திய வரலாறு காணாத முஸ்லிம் இனப்படுகொலையை
அரங்கேற்றினர். மோடியின் தலைமையில் நடந்த இந்த மாபெரும் இனப்படுகொலை
தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது
குறித்து விசாரணை நடத்த குஜராத் முஸ்லிம் இனப்படுகொலைக் குறித்து விசாரணை
நடத்தி வரும் நானாவதி கமிஷன் புதன்கிழமை(நேற்று) உத்தரவிட்டுள்ளது.

ஓய்வு பெற்ற நீதிபதி ஜி.டி. நானாவதி தலைமையிலான கமிஷன் முன்னிலையில், இது
தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆவணங்கள் அழிக்கப்பட்டது
தொடர்பாக விசாரிக்க மாநில உள்துறைச் செயலாளர் எம்.டி. அந்தானி, காவல்துறை
கூடுதல் தலைவர் (ஏடிஜிபி) தீர்த்தராஜ் ஆகியோரடங்கிய குழுவை அமைத்து
நானாவதி கமிஷன் உத்தரவிட்டது.

மூன்று வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் கமிஷன் உத்தரவிட்டது.

மாநில அரசு அல்லது டிஜிபி அலுவலகம் அல்லது உளவுத்துறையால்
பாதுகாக்கப்படும் வழக்கு தொடர்பான ஆவணங்களை, மோடியின் பழிவாங்குதல்
நடவடிக்கையால் இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்
ஆய்வு செய்ய அனுமதிப்பதா என்று இக்குழு விசாரணை நடத்தும்.

மேலும், எந்த சூழ்நிலையில் எப்போது அந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டன; அதில்
மாநில அதிகாரிகளுக்கு உள்ள பங்கு ஆகியவை குறித்தும் இக்குழு விசாரணை
நடத்தவுள்ளது.

இக்கலவரம் தொடர்பான விசாரணை ஆவணங்களில் சில அழிக்கப்பட்டன. இது குறித்து
விசாரிக்க உயர் அளவிலான விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று
இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட் கடந்த ஆண்டு
நவம்பர் 9ஆம் தேதி, நானாவதி கமிஷன் முன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த நானாவதி கமிஷன், இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

sourse;
http://www.thoothuonline.com.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக