புதன், 30 ஜனவரி, 2013

ஏனப்பா! நீங்க உடைச்சா தேங்கா; நாங்க உடைச்சா வெடிகுண்டா?

ஏனப்பா! நீங்க உடைச்சா தேங்கா; நாங்க உடைச்சா வெடிகுண்டா?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கருத்துசுதந்திரம் பேசி இஸ்லாமியர்கள் சகிப்புத்தன்மை  அற்றவர்கள் என்று பேசும் சந்தர்ப்பவாதிகளே! அன்று சென்சார் போர்டு அனுமதித்த டேம் 999 படத்திற்கு எதிராக வைகோ முழங்குவதை படியுங்கள்;

''மதிமுக இந்தப் படத்தை வெளியிட விடாமல் தடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். இந்தப் படம் வெளியாகவே கூடாது. அதற்கான போராட்டத்தில் மதிமுக இறங்குகிறது. இப்போது அமைதி வழியில் போராடுகிறோம். மீறி படத்தை வெளியிட முனைந்தால் போராட்டம் அடுத்த கட்டத்துக்கு போகும்.

முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இந்தப் படத்தை தமிழகத்தில் வெளியிடக்கூடாது என ஆணை பிறப்பிக்க வேண்டும். அத்துடன் மத்திய அரசையும் இதுகுறித்து வலியுறுத்தி இந்தியாவில் அந்தப் படம் வெளியாகாமல் தடுக்க வேண்டும்.

இந்திய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டில் மத்திய அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் டேம் 999 படத்தைத் தடுக்க வேண்டும். இப்படியொரு படத்தை கொஞ்சமும் சகித்துக் கொள்ள முடியாது.''
 **********************************************************
அன்பானவர்களே! அன்றைக்கு வைகோ போன்றவர்கள் கோரிக்கையை ஏற்று முதல்வர் ஜெயலலிதா டேம் 999 படத்திற்கு தடை விதித்த போது கருத்து சுதந்திரம் என்று ஏன் கூப்பாடு போடவில்லை?
***********************************************************

டேம் 999 படம் பிரிவியு காட்சி நடந்த தியேட்டர் மீது மதிமுகவினர் தாக்குதல்; தியேட்டர் கண்ணாடிகள் உடைப்பு!

மதிமுக ரகளை: டேம் 999 பிரிவியூ காட்சி ரத்து

சர்ச்சைக்குரிய டேம் 999 படத்தின் பிரிவியூ காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க.,வினர் ரகளையில் ஈடுபட்டதால், காட்சி ரத்து செய்யப்பட்டது.


இந்த நிலையில் இந்தப் படத்தின் அறிமுக பத்திரிகையாளர் சந்திப்பு சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் அரங்கில் இன்று மாலை 4 மணிக்கு நடப்பதாக இருந்தது.

இந்த விஷயம் தெரிந்ததும் மதிமுகவினர் பிரசாத் லேபில் குவிந்தனர். நாம் கட்சியினரும் அவர்களுடன் சேர்ந்து தமிழருக்கு எதிரான ஒரு படத்துக்கு சென்னையில் பிரஸ் மீட் வைப்பதா என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

படச்சுருளை உருவினர் போராட்டக்காரர்கள்

மேலும் பிரசாத் லேபில்தான் இந்த டேம் 999 படத்துக்கு பிரிண்ட் போடுகிறார்கள் என்ற தகவல் பரவியதால், அந்த படச்சுருளை கைப்பற்ற லேபுக்குள் புகுந்தனர் ஆர்ப்பாட்டக்காரர்கள். இதில் டேம் 999 படம் என நினைத்து வேறு ஒரு படத்தின் நெகடிவ்வை சில அடிகளுக்கு உருவிவிட்டனர்.

அது ஒரு கன்னடப் படம் என்பது தெரிந்ததும் விட்டுவிட்டனர்.

போராட்டக்காரர்களை அடக்க பெரும் போலீஸ் பட்டாளம் குவிக்கப்பட்டிருந்தது. தடியடிக்கு தயாராக பெரிய லட்டிகளை வைத்துக் கொண்டு நின்றனர் போலீசார்.

இதனால் கொதித்துப் போன இயக்குநர் வ கவுதமன், "தமிழருக்கு எதிராக, தமிழர் நலனுக்கு எதிராக வேண்டுமென்றே படம் எடுக்கிறார்கள். அதை எதிர்க்க வந்த எங்களை கைது செய்வதாக மிரட்டுகிறது நமது போலீஸ். இது என்ன நியாயம்? தமிழ்நாட்டுப் போலீஸ் தமிழருக்கு பாதுகாப்பாக இல்லையே...

இந்தப் படத்தை தமிழகத்தில் எந்த திரையரங்கிலும் திரையிட விடமாட்டோம். மீறி திரையிட்டால், அந்த திரையரங்கம் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும். அனைத்து திரையரங்குகள் முன்பும் தமிழ் சினிமா இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் போராட்டம் நடத்துவார்கள்," என்றார்.

இந்நிலையில், இதை திரையிடக்கூடாது என வலியுறுத்தி ம.தி.மு.க.,வினர் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் பிரிவியூ காட்சி ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக மல்லை சத்யா உள்ளிட்ட ம.தி.மு.க.,வினர் கைது செய்யப்பட்டனர்.

*********************************************************
அன்றைக்கு தியேட்டரில் இவர்கள் ரகளை செய்தபோது இந்த கருத்து சுதந்திரவாதிகள் எங்கே போயிருந்தார்கள்? ஏனப்பா! நீங்க உடைச்சா தேங்கா; நாங்க உடைச்சா வெடிகுண்டா?
********************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக