செவ்வாய், 15 ஜனவரி, 2013

துலே கலவரம்:கொள்ளை, தீவைப்பில் ஈடுபட்ட காக்கி உடை அணிந்த காவிகள்!...

மஹராஷ்ட்ரா மாநிலம் துலேயில் நிகழ்ந்த கலவரத்தின் போது போலீஸ் மீது
தாக்குதல் நடத்தியதாக கூறி இச்சம்பவத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லாத
அப்பாவி முஸ்லிம்களை சுட்டுக் கொலைச் செய்ததோடு முஸ்லிம் வீடுகளில்
கொள்ளையடித்தும், துப்பாக்கிச்சூடும் காக்கி உடை அணிந்த காவிகளால்
அரங்கேற்றப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலையில் மச்சி பஜாரில்(மீன் சந்தை) ஒரு உணவு
கடைகாரருடன் இரண்டு இளைஞர்களுக்கு ஏற்பட்ட தகராறு கலவரமாக உருவெடுத்தது.
உணவு கடை வியாபாரியுடன் ஏற்பட்ட தகராறுக்கு தீர்வு காண முஸ்லிம்
இளைஞர்கள் போலீஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால்,காவி மனம் படைத்த
போலீஸ் முஸ்லிம் இளைஞர்களை விரட்டியடித்துள்ளது. தொடர்ந்து இப்பிரச்சனை
இரு பிரிவினர் இடையேயான மோதலாக மாறியது. பின்னர் போலீஸ் நடத்திய
வெறியாட்டத்தில் முஸ்லிம் வீடுகள் தீக்கிரையாகின. 5 முஸ்லிம் இளைஞர்கள்
அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கலவரத்தின் போது நடந்த மரணம் என்று போலீஸ் கூறினாலும், முஸ்லிம்
இளைஞர்களை போலீஸ் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது என்று உறவினர்களும்,
நேரில் கண்டவர்களும் கூறுகின்றனர். போலீஸின் கூற்றுக்கு மாநில சிறுபான்மை
நல அமைச்சரும், சிறுபான்மை கமிஷன் தலைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

போலீஸ் நடவடிக்கையில் அதிருப்தியை வெளியிட்ட சிறுபான்மை நல அமைச்சர்
ஆரிஃப் நஸீம் கான், நீதி விசாரணைக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக
தெரிவித்தார். போலீஸ் முஸ்லிம்களை எதிரிகளாக பார்த்தது என்று சிறுபான்மை
கமிஷன் தலைவர் முனாஃப் ஹக்கீம் தெரிவித்தார்.

போலீஸின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிட்சைப் பெற்றுவந்த
துணிக்கடை உரிமையாளர் ரிஸ்வான் ஷா நேற்று முன் தினம் மரணமடைந்தார். இதன்
மூலம் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் பலியான அப்பாவி முஸ்லிம்களின்
எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. எவ்வித முன்னறிவிப்பும் இன்றியே
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. கண்ணீர் புகையோ, லத்தி சார்ஜோ
நடத்தப்படவில்லை.பெரும்பாலோருக்கும் நெஞ்சிலும், வயிற்றிலும் துப்பாக்கி
குண்டுகள் பாய்ந்துள்ளன. மக்கள் கூட்டத்தை கலைப்பதற்கு அல்ல,
மாறாமுஸ்லிம்களை கொலைச் செய்வதே போலீசாரின் நோக்கம் என்பது இதன் மூலம்
நிரூபணமாகிறது.

இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படும் பொழுது முஸ்லிம்கள் மட்டும் ஏன்
கொலைச் செய்யப்படுகின்றனர்? என்று ரிஸ்வான் ஷாவின் தந்தை ஹஸன் ஷா கேள்வி
எழுப்புகிறார். 70 முஸ்லிம் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மச்சி
பஜாரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால்,
பாதிக்கப்பட்டவர்கள் இதனைப் பொருட்படுத்தாமல் போலீஸ் நடவடிக்கையை
குறித்து கேள்வி எழுப்பி களமிறங்கியுள்ளனர்.

தஸ்லீம் யூசுஃப் என்ற பெண்மணியின் மகளின் திருமணத்திற்கு சேமித்து
வைத்திருந்த ரூ.50 ஆயிரமும், தங்க நகைகளும், புத்தாடைகளும் போலீஸ்
கொள்ளையடித்துள்ளது. வீட்டை பூட்டி விட்டு போலீஸின் அராஜகத்தில் இருந்து
தப்பிக்க முயன்றபொழுது போலீசும், சில நபர்களும் வீட்டின் கதவை உடைத்து
உள்ளே புகுந்துள்ளனர். தஸ்லீமின் அண்டை வீடான நஃபீஸா ஷாவின் இரண்டு
மாடிக் கட்டிடம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. போலீசுதான் இதனைச் செய்ததா?
என்பது தெரியவில்லை. ஆனால், போலீஸின் ஒத்துழைப்புடனே இந்த அராஜகம்
அரங்கேற்றப்பட்டுள்ளது என்று நஃபீஸா கூறுகிறார்.

sourse;
http://www.thoothuonline.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக