சனி, 26 ஜனவரி, 2013

நிரந்தரமாக தடை செய்; குவைத்தில் ''விஸ்வரூபம்'' எடுத்த முஸ்லிம்களின் கூட்டமைப்பு!

நிரந்தரமாக தடை செய்; குவைத்தில் ''விஸ்வரூபம்'' எடுத்த முஸ்லிம்களின் கூட்டமைப்பு!

குவைத் ஜன 25;
இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆனையும், இஸ்லாமியர்களையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் திரைப்படத்தை நிரந்தரமாக தடை  வேண்டும் என்று குவைத் தமிழ் முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இஸ்லாத்தையும் முஸ்லிம்களின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்தும் வகையில் விஸ்வரூபம் திரைப்படத்தை நடித்து, இயக்கி, தயாரித்துள்ள கமல் ஹாசனுக்கு கண்டனமும்,  இடைக்கால தடை விதித்த தமிழ்க அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், இப்படத்திற்கு நிரந்தரமாக தடை விதிக்கக் கோரியும். குவைத் தமிழ் முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக குவைத் தலைநகர் மிர்காப்'பில்  தஞ்சை உணவகத்தில் அமைந்துள்ள மாவீரன் சலாஹுத்தீன் அய்யூபி அரங்கத்தில் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கண்டன உரையாற்றிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமைப்புகளின் நிர்வாகிகள், ''விஸ்ரூபம் திரைப்படத்தின் மூலம் இஸ்லாமியர்களை மட்டுமல்ல; இந்தியாவையும் இழிவுபடுத்தியுள்ளார் கமல்ஹாசன். ஆப்கானிஸ்தான் அல் காயிதாவினருக்கு இந்தியாவின் உளவுப்பிரிவான ''ரா' அமைப்பின் அதிகாரி  பயிற்சி அளிப்பது போன்ற காட்சியை அமைத்துள்ளார். இது இந்தியாவின் இறையாண்மையை இழிவுபடுத்துவதாகும். அதோடு  தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள ஒரு ஆப்கானிஸ்தான் தலைவர், கோவையிலும் மதுரையிலும் ஒரு வருடத்திற்கும் மேலாக பதுங்கியிருந்தார் என்று காட்சி அமைத்திருப்பதன் மூலம் இந்திய ரானுவம் மற்றும் தமிழக போலீசார் தமது கடமையை தவறிவிட்டதாக சித்தரிக்கிறார். எனவே இப்படத்தை  இஸ்லாமியர்கள் மட்டுமன்றி, இந்திய  தேச நலனில் அக்கறையுள்ள ஒவ்வொரு இந்தியனும் எதிர்க்கவேண்டும்' என்று பேசினார்கள்.

மேலும், தமிழக அரசு உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள மற்றும் பல்வேறு நாடுகள இப்படத்தை தடை செய்த பின்னும் தனது தவறை திருத்த முன்வராத கமல்ஹாசன், தடையை நீக்க நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு   மதிப்பளித்து, டேம 999 படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததோடு, மக்களின் உணர்வுகளுக்கு மாற்றமாக ஒரு தனிநபரின் உணர்வுகளை உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொள்ளாது என்று கூறியுள்ளதன் அடிப்படையில் விஸ்வரூபம் படத்திலும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அப்படத்திற்கு நிரந்ததரமாக தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம்  தீர்ப்பளித்து  தமிழக அமைதிக்கு வித்திட வேண்டும் என்றும் தீர்மானம் இயற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக