சனி, 19 பிப்ரவரி, 2011

வெளிநாடுவாழ் இந்தியர் வாக்களிப்பது எப்படி.?

திரைகடலோடியும் திரவியம் தேடு என்ற தத்துவத்திற்கேற்ப, 
வளைகுடா உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்தியாவைச்சேர்ந்த சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள்  மூலம் இந்தியாவிற்கு பெருமளவில் அந்நியச்செலவாணி கிடைத்து வருகிறது. தாயகத்தின் வளர்ச்சிக்காக அந்நிய மண்ணில் பணியாற்றும் இவர்கள், தாயகத்தின் ஆட்சியாளரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைக்காமல் தவித்ததையடுத்து, வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் வாக்குரிமை வேண்டும் என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை சமீபத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்டது. இதற்கிடையே, வெளிநாடுவாழ் இந்தியர்கள் எவ்வாறு வாக்களிப்பது என்ற விளக்கத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.  அதன்படி,
 
18 வயது நிரம்பிய, வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றிடாத ஒருவர், தேர்தல் நடைபெறும்போது தங்கள் தொகுதிக்கு வருகை தந்து, பாஸ்போர்ட்டை  வாக்குச்சாவடியில் காண்பித்து வாக்கு செலுத்தலாம். மேலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் வாக்கு செலுத்தலாம் என்றால், அவர் தேர்தலில் போட்டியிடவும் செய்யலாம் என்பதும் கவனிக்கத்தக்கது. அதே நேரத்தில் பழைய விதிகளின் படி, ஒருவர் ஆறு மாதத்திற்கும்  மேலாக வெளிநாட்டில் தங்கிவிட்டால், அவரது பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக