புதன், 23 பிப்ரவரி, 2011

எல்லைக்கல்; எல்லைச் சாமியாகுமா..?

றைவனின் படைப்பில் சிறந்தது மணித  இனமே. அதற்கு காரணம் மனிதனுக்குள்ள பகுத்தறிவே.  அந்த பகுத்தறிவு மூலமே படைப்பினங்களை ஆராய்ந்து, அதன் மூலம் படைத்தவனை அறிந்து அவனை வணங்குகிறோம். நாம் வணங்கும்  இறைவன் எல்லாவகையிலும் சிறந்தவனாக, எவருக்கும்-எதற்கும் ஒப்பற்றவனாக இருக்கவேண்டும். இத்தகைய இறையிலக்கனத்தை  மனிதர்களில் பெரும்பான்மையோர் மறந்த காரணத்தினால்தான், மனிதனை விட பலவீனமான  இன்னும் சொல்லப்போனால் மனிதனால் உருவாக்கப்பட்டவையே அவனுக்கு கடவுளாக கற்பித்துக் கொண்டான். அந்தவகையில், திரைப்படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி,
 
ரோட்டோரம் நடப்படும் எல்லைக்கல் மீது ஒருவர் சிவப்பு துண்டைக் காயப்போட, அந்த கல்மீது அமரும் காமெடியருடன் 'எங்க சாமி மேலேயே உட்காந்துட்டியா' என்று சண்டைபோடுவார் ஒரு பக்தர். அது நிஜத்திலும் இப்போது நடந்துள்ளது.
''.ராமநாதபுரம் மாவட்டம் எட்டிவயல் அருகே மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் எல்லை கல் ஒன்று உள்ளது. சில நாட்களுக்கு முன், அந்த கல் மீது சிலர் மாலை போட்டு, பூஜை நடந்ததற்கான அடையாளங்களுடன் விட்டு சென்றனர். அதை அவ்வழியாக வந்தவர்கள் பார்த்து, வழிபட துவங்கினர்.சில நாட்களில் எல்லை கல் வழிபாடு பிரபலமானது. என்ற செய்தி வெளியாகியுள்ளது.
 
சாலையோராம் நடப்படும் எல்லைக்கல் என்று தெளிவாக தெரிந்த பின்னும் அதை வணங்குவதற்கு மனிதன் தயாராகிறான் என்றால், அவனது கடவுள்கொள்கை எந்த அளவுக்கு பலவீனமானது என்பதை உணர்ந்து கொள்ளலாம். ஆனால், பலநூறு சிலைகள் மூலம் படைத்தவனுக்கு இணைவைத்துக் கொண்டிருந்த பாமர மக்களை தனது பகுத்தறிவு பிரச்சராத்தால் பக்குவப்படுத்தினார்கள் முஹம்மது நபி[ஸல்] அவர்கள், அந்த அறியாமைக்கால மக்கள் எந்த அளவுக்கு, இஸ்லாத்திற்கு பின் சிறந்த பகுத்தறிவுவாதியாக திகழ்ந்தார்கள் என்பதற்கு ஒரு சான்று;
 
உமர்(ரலி) அவர்கள், ஹஜருல் அஸ்வத் [கருப்புக்கல்] அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு, 'நீ தீங்கோ, நன்மையோ அளிக்கமுடியாத ஒரு கல்தான் என்பதை நான் நன்கறிவேன். நபி(ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதைக் காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்' என்றார்.
[புகாரி]
 
''நபிகளார் உருவாக்கிய இவர் 'அந்த கல்லிற்கு எந்த சக்தியுமில்லை' என்று திட்டவட்டமாக கூறுகிறார். ஆனால், எல்லைக்கல்லை வணங்கும் ஒருவர் கூறுவதை பாருங்கள்;
 
''ஒரு மாதத்தில் தான் இந்த வழிபாட்டு முறை வந்தது. இதை வழிபட்டு சென்றதால், எனக்கு சில காரியத்தில் வெற்றி கிடைத்தது. இதற்கு பெயர் வைத்தால் வழிபட வசதியாக இருக்கும் என்கிறார்.
 
கூடியவிரைவில் எல்லைக்கல், எல்லைச்சாமி ஆனாலும் ஆகலாம். ஆச்சர்யப்படுவதற்கில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக