வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

வேளச்சேரி பகுதியில் அடக்கஸ்தலம்- மேயர் அறிவிப்பு; ஐ.என்.டி.ஜே போராட்டத்தின் வெற்றி!




''போராட்டம் இது போராட்டம்
ஐ.என்.டி.ஜே போராட்டம்!
அநீதிக்கு எதிரான அறவழி போராட்டம்!!

''கேட்க மாட்டோம் கேட்கமாட்டோம்!
இலவசங்களை கேட்கமாட்டோம்!!
கேட்கிறோம் கேட்கிறோம்!
இறந்தவர்களை அடக்கம் செய்ய கபர்ஸ்தான் கேட்கிறோம்!!

என்ற கோஷங்கள் விண்ணை முட்ட, வேளச்சேரி மற்றும் தரமணி பகுதி முஸ்லிம்களின் பல்லாண்டு கோரிக்கையான 'அடக்கஸ்தலம்' கேட்டு, அலட்சியம் காட்டும் மாநகராட்சியைக்  கண்டித்து கடந்த 28 -01 -2011 அன்று களமிறங்கியது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.

தனி அமைப்பாக இருந்தாலும், தனி கட்சியிலே இருந்தாலும் கூட, சமுதாயப் பிரச்சினை என்ற அடிப்படையில் இந்த போராட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் முஹம்மது யூசுப், மற்றும் இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழக செயலாளர் தர்வேஷ் ரஷாதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களின் சமூக அக்கறையை வெளிப்படுத்தினர்.

இப்போராட்டத்தில் கண்டன உரையாற்றிய இதஜ தேசியத்தலைவர் எஸ்.எம். பாக்கர் அவர்கள்,
''ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிலே கொள்ளையடித்தீர்களே அதில் பங்கு கேட்கவில்லை. இந்த தேசத்தில் எங்களுக்கு உரிமை இருக்கிறது. இந்த நாட்டிற்காக தியாகம் செய்தவர்கள் முஸ்லிம்கள். இந்த சமுதாயம் அடக்கம் செய்வதற்கு இடம் கேட்டால் ஒடுக்கப் பார்க்கிறீர்களா? இது எச்சரிக்கை; இது ஆரம்பம். இதற்கு செவி சாயுங்கள்.
உரிமைக்காக போராடினால் கைது நடவடிக்கையா?  முஸ்லிம்கள் என்றால் கிள்ளுக்கீரையா? இது கலைஞர் அரசுக்கு அடிக்கின்ற சவப்பெட்டி. அடுத்து யாராவது இறந்தால் ஜனாஸாவை எடுத்துக் கொண்டு கலைஞர் வீட்டை முற்றுகையிடுவோம் என கர்ஜித்தார்.

தேசியத் தலைவரின் கர்ஜனையும், போராட்டத்தில் குழுமிய மக்களின் ஆதங்கமும் அதிகார வர்க்கத்தின்  கதவுகளைத் தட்ட, பல்லாண்டு கோரிக்கைக்கு விடை கிடைத்துள்ளது. நேற்று  [10 -02 -2011 ] நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் அவர்கள்,

''வேளச்சேரி பகுதி உட்பட இரண்டு  இடங்களில் இஸ்லாமியர்கள் உடல் அடக்கம் செய்வதற்காகவும், கிறிஸ்தவர்கள் அடக்கம் செய்வதற்காக இரண்டு இடங்களும், என சென்னையில் நான்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு வரும் மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக