புதன், 23 பிப்ரவரி, 2011

[இதஜவின் சமூகத்தீமை எதிர்ப்பு மாதம். பிப்-2011] மதுவை மாய்ப்போம்!!

بسم الله الرحمن الرحيم

சமூகத்தில் புரையோடிப்போய் உள்ள சமூகத் தீமைகளை ஒழிக்கும் வகையில், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகம்,  பிப்ரவரி-2011 முழுவதும் சமூகத்தீமை எதிர்ப்பு மாதமாக அறிவித்து, சமூகத் தீமைகள் குறித்த பிரசுரங்கள்- தெருமுனைக் கூட்டங்கள் வாயிலாக, மக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்க தீர்மானித்துள்ளது. இதையொட்டி, 
 18-02 -2011 வெள்ளியன்று நமது மண்டலம் சார்பாக, பிரசுரமாக  விநியோகம் செய்த கட்டுரை  உங்கள் பார்வைக்கு
 
து நாட்டுக்கு, வீட்டுக்கு, உடலுக்கு கேடு' என்று ஒருபுறம் எழுதிவைத்துக்கொண்டு அத்தகைய கேடானதை விற்பதற்கென 'டாஸ்மாக்' நிலையங்களை உருவாக்கி அதில் படித்த பட்டதாரிகளையும் பணியாளர்களாக்கி அரசு கஜானாவை நிறைத்துவருகிறது தமிழக அரசு. அரசின் பட்ஜெட் தேவையை நிறைவேற்றுவதில் மது வியாபாரம் முக்கிய இடத்தில் இருந்து வருகிறது. இந்த மது அருந்துபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதையும், வரும் பத்தாண்டுகளில் மது அருந்ததாதவர்களை காண்பது அரிதாகிவிடும் என்று ஆய்வுகள் சொல்லும் அளவுக்கு, பெரியவர்களில் தொடங்கி, சிறார்கள் வரை இந்த மது எனும் சமூகத்தீமை ஆட்கொண்டுள்ளது.அது மட்டுமன்றி நாகீகம் என்ற பெயரில் மது பென்களையும் கவர ஆரம்பித்துள்ளது ஆபத்தின்  அறிகுறியாகும். இத்தகைய மதுவை ஒருகாலத்தில் மறைந்திருந்து குடித்தவர்கள், இன்று பட்டப்பகலில் தேநீர் அருந்துவதுபோல் பொது  இடத்தில் அருந்துகின்ற அளவுக்கு இந்த தீமை சகஜமாகிவிட்டது. மதுவால் எத்தனை லட்சம் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளன. எத்தனை குற்றங்களுக்கு இந்த மது காரணியாக உள்ளது என்பதைப் பற்றி எல்லாம் எவரும் கவலை கொள்ளும் நிலையில் இல்லை. ஆனால் இத்தகைய சமூகத்தீமையான  மதுவை,  குடம் குடமாக குடித்த மதுப்பிரியர்களை ஒரு கட்டளை  மூலம், திருத்திக் காட்டியது இஸ்லாம்;
 
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.[5 ;90]
நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான். எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?[5 ;91 ]
 
இறைக்கட்டளை வந்த மாத்திரமே கட்டுப்பட்ட சஹாபாக்கள்;
 
அனஸ்[ரலி] அவர்கள் அறிவித்தார்கள்;
நான் அபூ தல்ஹா(ரலி) வீட்டில் மக்களுக்கு மது பரிமாறுபவனாக இருந்தேன். அந்த நாள்களில் பேரீச்சம் பழ மதுவை (பேரீச்ச மரக்கள்ளை)யே அவர்கள் குடித்து வந்தனர். (மதுவைத் தடை செய்யும் இறைவசனம் அருளப்பட்டவுடன்), இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவரை அழைத்து, '(மக்களே!) மது தடை செய்யப்பட்டுவிட்டது" என்று அறிவிக்கும்படி கட்டளையிட்டார்கள். அபூ தல்ஹா(ரலி) என்னிடம், 'வெளியே சென்று இதை ஊற்றிவிடு" என்று கூறினார்கள். நான் வெளியே சென்று அதை (சாலையில்) ஊற்றி விட்டேன். மதீனா நகரின் தெருக்களில் அது ஓடியது.
[நூல்;புகாரி]
 
ஆனால் இன்றைக்கு முஸ்லிம்கள என்று தங்களை சொல்லிக் கொள்பவர்களில் பலர், இன்றைக்கு  மதுப் பிரியர்களாக இருப்பதை பார்க்கிறோம். மது அருந்தும் ஒருவர் அந்த நேரத்தில் முஸ்லிமாக இருக்க மாட்டார். நீங்கள் முஸ்லிமா? முடிவு உங்கள் கையில்!
 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"
"விபசாரி, விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் விபசாரம் புரிவதில்லை. மேலும், ஒருவன் மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் மது  அருந்துவதில்லை. ஒருவன் திருடுகிற பொழுது இறைநம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் திருடுவதில்லை. ஒருவன் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க, (பிறரின் பொருளை அபகரித்துக்) கொள்ளையடிக்கும்போது இறைநம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் கொள்ளையடிப்பதில்லை.[புகாரி]
 
இறைத்தூதர் வெறுத்த பானம் நம் கையிலா?
 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"
என்னை (விண் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் நான் மூஸா அவர்களைப் பார்த்தேன். அவர்கள், 'ஷனூஆ' குலத்து மனிதர்களில் ஒருவரைப் போல் (எண்ணெய் தடவிப்) படிந்த தொங்கலான தலைமுடியுடையவர்களாக இருந்தார்கள். நான் ஈசா அவர்களைப் பார்த்தேன். அவர்கள் நடுததர வயதுடைய சிகப்பான மனிதராகவும் (அப்போதுதான்) குளியலறையிலிருந்து வெளியே வந்தவரைப் போன்றும் இருந்தார்கள். இப்ராஹீம்(அலை) அவர்களின் சந்ததிகளிலேயே அவர்களுக்கு (தோற்றத்தில்) மிகவும் ஒப்பாக இருப்பவன் நானே. பிறகு என்னிடம் இரண்டு பாத்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அவ்விரண்டில் ஒன்றில் பால் இருந்தது; மற்றொன்றில் மது இருந்தது. (வானவர்) ஜிப்ரீல் அவர்கள், 'இரண்டில் எதை நீங்கள் விரும்புகிறீர்களோ அதைக் குடியுங்கள்" என்று கூறினார்கள். நான் பாலை எடுத்துக் குடித்தேன். 'நீங்கள் இயல்பான (பானத்)தை எடுத்துக் கொண்டீர்கள். மதுவை நீங்கள் எடுத்திருந்தால் உங்கள் சமுதாயம் வழி தவறிப் போயிருக்கும்" என்று கூறினார்கள்.[புகாரி]
 
இறைத்தூதர்[ஸல்] அவர்களோ மதுவை வெறுத்து, இயற்கை பானமான பாலை தேர்ந்தெடுக்க, நாமோ இறைத்தூதருக்கு மாற்றமாக, மதுவை தேர்ந்தெடுத்து மண்ணாகிப் போவது நியாமா?
 
போதைதரும் ஒவ்வொன்று பானமும் ஹராமே!
இன்றைக்கு சிலர் சிலவகை  மதுபானங்கள் ஹராம் அல்ல என்று கூறுவதை பார்க்கிறோம். ஆனால் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் கூறுவதை பாருங்கள்;
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'பித்உ' குறித்துக் கேட்கப்பட்டது. அது தேனால் தயாரிக்கப்படும் மதுவாகும். யமன் வாசிகள் அதை அருந்திவந்தார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'போதை தரும் (மது)பானம் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதேயாகும்' என்று கூறினார்கள்.[புகாரி]
 
மது அருந்துபவர்களுக்கு செருப்படிதான் தண்டனை;
 
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்; மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாகப் பேரீச்ச மட்டையாலும் காலணியாலும் அடுத்திடும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள் (தம் ஆட்சிக் காலத்தில்) நாற்பது சாட்டையடிகள் வழங்க உத்தரவிட்டார்கள்.[புகாரி]
 
மது அருந்துபவன் சுவனம்  செல்ல முடியாது;
 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உலகில் மது அருந்திவிட்ட பிறகு (அதைக் கைவிட்டு) அதற்காகப் பாவமன்னிப்புக் கோராதவன் மறுமையில் (சொர்க்கத்தின்) மதுவை அருந்தும் பேற்றை இழந்துவிடுவான்.[புகாரி]
 
மது மறுமைநாளின் அறிகுறியாகும்;
 
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்; என் அல்லாத வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியேற்ற செய்தி ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கப் போகிறேன், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கல்வி அகற்றப்பட்டுவிடுவதும், அறியாமை மலிந்துவிடுவதும், விபசாரம் அதிகரித்து விடுவதும், மது அருந்துதல் அதிகரித்து விடுவதும், ஐம்பது பெண்களுக்கு - அவர்களை நிர்வகிக்க  ஒரே ஆண் என்ற நிலைமைவரும் அளவுக்குப் பெண்கள் மிகுந்து, ஆண்கள் குறைந்துவிடுவதும் மறுமை நாளின் அடையாளங்களில் அடங்கும்.[புகாரி
]
 
எனவே மதுவை மாய்ப்போம்! மணிதம் பேணுவோம்!
 
சமுதாய நலன் நாடி வெளியிடுவது;
இந்திய தவ்ஹீத் ஜமாஅத், குவைத் மண்டலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக