வெள்ளி, 11 மே, 2012

அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்யும் செய்யும் அகிலேஷின் முடிவும்; ஆர்.எஸ்.எஸ்'ஸின் புலம்பல்களும்!

ந்திய நாட்டில் பெரும்பான்மை சமூகமான இந்துச் சமூகத்தில் மிக மிக குறைவான சதவிகிதம் மட்டுமே உள்ள 'அவாள்கள்' நாட்டின் பெரும்பதவிகளை சுகித்து, சுகபோக வாழ்கையில் திளைத்து வருகின்றனர். ஆனால் சுதந்திர இந்தியாவை கட்டமைத்த சிற்பிகளான முஸ்லிம்களுக்கு அவ்வபோது ஏதேனும் சிறு நன்மைகளை மத்திய மாநில அரசுகள் வழங்க முடிவெடுத்தால், ஆர் டி எக்ஸ்'ஸுக்கு, [மன்னிக்கவும்] ஆர்.எஸ்.எஸ்'ஸுக்கு மூக்கு வியர்க்க ஆரம்பித்துவிடும். 

உத்தரப்பிதேசத்தில் முஸ்லிம்களின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்துள்ள சமாஜ்வாதி கட்சியின் முதல்வர் அகிலேஷ்யாதவ், சிறையில் உள்ள அப்பாவி முஸ்லிம்களை எல்லாம் விடுதலை செய்ய ஆவன செய்யப்படும் என்று சமீபத்தில் கூறியிருந்தார். பொறுக்குமா ஆர்.எஸ்.எஸ்'ஸுக்கு..? எடுத்தது எழுதுகோலை! தீட்டியது கட்டுரையை!!

ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையான 'ஆர்கனைசர்' கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:

''அரசியல் ஆதாயத்திற்காக மதத்தை கையிலெடுக்கிறார் அகிலேஷ்யாதவ். சிறையில் உள்ள அப்பாவி முஸ்லிம்களை எல்லாம் விடுதலை செய்யப்போகிறேன் என்று அகிலேஷ் யாதவ் அறிவித்திருப்பது ஆபத்தான நடவடிக்கை ஆகும். சிறுபான்மை இனத்தவரை கைது செய்வதற்கு முன்பு பல முறை யோசிக்குமாறு போலீசுக்கு விடுக்கப்பட்டுள்ள மறைமுக எச்சரிக்கை இது. விசாரணை அமைப்புகளுக்கும் அதிகப்படியான நிர்ப்பந்தங்கள் வரும். 
மதத்தின் அடிப்படையில் சிறையில் உள்ளவர்களை விடுவிப்பதாக அறிவிப்பது என்பது, ஒரு குறிப்பிட்ட இனத்தவர் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று அரசாங்கம் லைசென்ஸ் கொடுப்பது போலத்தான். உத்தரபிரதேசத்தில் விரைவு நீதிமன்றங்களை அமைக்கலாம். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க கூடுதல் கோர்ட்டுகளை நிறுவலாம். அப்பாவி மக்களை வழக்குகளில் சிக்க வைத்தவர்களை தண்டிக்கலாம்'' என்று கூறியுள்ள ஆர்.எஸ்.எஸ்., ''ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தீவிரவாதத்துக்கு வர்ணம் கொடுக்கிறது. அதுவே மாநிலங்களிலும் பிரதிபலிக்கிறது' என்றும் கூறியுள்ளது.

அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக முதல்வர் அகிலேஷ் கூறியது அவர்கள் முஸ்லிம்கள் என்பதற்காக மட்டுமல்ல. அவர்கள் அநியாயமாக பாதிக்கப்படுள்ளார்கள் என்பதற்காகவே. இந்தியாவில் நினைத்த நேரத்தில் எந்த ஆதாரமுமின்றி குற்றவாளியாக ஆக்கப்படுபவர்களில் அதிகமானோர் முஸ்லிம்கள் தானே. விசாரணைக் கைதிகளாகவே பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடுவதும் முஸ்லிம்கள் தானே. நாட்டில் எந்த மூளையில் குண்டுவெடிப்பு நடந்தாலும், அதற்காக முதல் பலிகடா ஆக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும், பின்பு பத்து ஆண்டுகால சிறைவாசத்திற்கு பின் குற்றமற்றவராக விடுதலை செய்யப்படுவதும் முஸ்லிம்கள் தானே! அவ்வளவு ஏன்? மாலேகான் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்துத்துவாக்கள் நடத்திய குண்டுவெடிப்பில் முதலில் சந்தேகம் பதித்தது முஸ்லிம்கள் மீது தானே! ஹேமந்த் கர்கரே போன்ற நேர்மையான அதிகாரிகளால் தானே இந்துத்துவாக்களின் கோரமுகம் உலகுக்கு வெளிப்பட்டது என்பதை மறுக்க முடியுமா? இதுபோன்று தனது மாநிலத்தில் அநியாயமாக பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் விடுதலை குறித்துதான் அகிலேஷ் பேசியுள்ளாரே தவிர, குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட முஸ்லிம் கைதிகளை விடுவிப்பேன் என்று அவர் சொல்லவில்லை. எனவே ஆர்.எஸ்.ஸின் அலறல் என்பது அருவருக்கத்தக்கது.

அடுத்து, முஸ்லிம் அப்பாவி சிறைவாசிகள் விடுதலை என்ற அகிலேஷின் முடிவு அரசியல் ஆதாயத்திற்காக மதத்தை பயன்படுத்துவதாகும் என்று சாடுகிறது ஆர்.எஸ்.எஸ். அரசியல் ஆதாயத்திற்காக மதத்தை பயன்படுத்துவதில் கை தேர்ந்தவர்கள் யார் என்று மக்களுக்குத் தெரியாது என்று ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறதா? மத்திய ஆட்சியையும், மாநில ஆட்சிகளையும் பிடிக்க ராமரை பயன்படுத்தியதையும், ஆட்சியில் அமர்ந்தவுடன் அவரை வனவாசம் அனுப்பிதையும் மறக்கலாமோ?

மேலும், மத்திய அரசு தீவிரவாத்திற்கு வர்ணம் கொடுப்பதாகவும், அது மாநிலங்களிலும் பிரதிபலிக்கிறது என்றும் புலம்புகிறது ஆர்.எஸ்.எஸ்., நாட்டிலேயே தீவிரவாதத்திற்கு முதன் முதலில் இஸ்லாமிய வர்ணம் பூசியவர்கள் நீங்கள் தானே! ஒரு தீவிரவாதச் செயல் நடந்து அதில் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கு முயன்பாகவே, இஸ்லாமிய பயங்கரவாதம் என்றும் முஸ்லிம் தீவிரவாதம் என்றும் குதித்தவர்கள் நீங்கள் தானே! அன்று நீங்கள் தீவிரவாதத்திற்கு பூசிய இஸ்லாமிய வர்ணம் பொய் என்பது 'கர்கரே' எனும் மழையால் கரைந்து, மறைந்திருந்த தீவிரவாத்தின் நிறம் காவி எனும் வர்ணம் வெளிப்பட்டவுடன் இப்போது புலம்பி ஆவதென்ன? யார் தவறு செய்கிறார்களோ அவனை குறிப்பிட்டு தீவிரவாதி என்று அன்று நீகள் சொல்லியிருந்தால் இன்று புலம்பவேண்டிய நிலை வந்திருக்காது. மாறாக மனிதனின் செயலுக்கு மதச்சாயம் பூசினீர்கள். அது 'பூமாராங்; ஆக திருப்பி இன்று உங்களையே தாக்குகிறது என்பதை ஆர்.எஸ்.எஸ்., உணர்ந்து அடக்கி வாசிப்பதும் ஆகவேண்டிய வேலையைப் பார்ப்பதும் தான் அந்த அமைப்பிற்கும் நாட்டிற்கும் நல்லது.


























































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக