திங்கள், 14 மே, 2012

நரேந்திரமோடி ஆட்சியில் குஜராத் மக்கள் அச்சத்துடன் வாழ்கிறார்கள்; பா.ஜனதா முன்னாள் முதல்மந்திரி குற்றச்சாட்டு.

ஆமதாபாத், மே.14
குஜராத் மாநிலத்தில் பா.ஜனதா கட்சி முதல் முறையாக ஆட்சி பொறுப்பேற்றபோது முதல்&மந்திரியாக பதவி ஏற்றவர் கேசுபாய்படேல். அவர் நிறைய பிரச்சினைகளை சந்திக்க நேரிட்டதால், 2001ம் ஆண்டு அவருக்கு பதிலாக நரேந்திரமோடி முதல்மந்திரியாக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். 2007ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, 'நரேந்திரமோடி ஆட்சியில், குஜராத்தில் 'மினி எமர்ஜென்சி' போன்ற சூழ்நிலை நிலவுவதாக குற்றம் சாட்டினார். அந்த தேர்தலில் நரேந்திரமோடிக்கு அபார வெற்றி கிடைத்ததை அடுத்து தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கினார். 

வரும் டிசம்பர் மாதம் குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையட்டி தனது ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்தில் பேசிய அவர், 'நரேந்திரமோடி ஆட்சியில், நான் சார்ந்த 'படேல்' சமுதாய மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக' முன்பு சொன்னேன். ஆனால் இன்றைக்கு குஜராத்தில் வாழும் அனைத்து மக்களும் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். 

பா.ஜனதா கட்சியின் முதல்மந்திரி நரேந்திரமோடியை அதே கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்மந்திரி குற்றம் சாட்டி இருப்பது குஜராத் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 
நன்றி;தினத்தந்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக