புதன், 2 மே, 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 8]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அயல்நாட்டு நிதி விசயத்தில் பீஜேயின் அப்பட்டமான பொய்களையும், முரண்பாடுகளையும் அலசிவரும் இந்த தொடரின் 7 வது தொடரில், அபூதாவூத் மொழிபெயர்ப்புக்காக லுஹாவுக்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டதையும், பின்பு அவர் அபூதாவூதை மொழிபெயர்த்து தராததால் பீஜேயின் திர்மிதியை வெளியிடுவதற்காக பீஜெயிக்கு ஒரு லட்சம் இஸ்லாமிய கல்விச் சங்கம் வழங்கிய விஷயங்களை எழுதி, திர்மிதி விற்பனை தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினோம். இப்போது அதே திர்மிதி தொடர்பாக இன்னும் சில விசயங்களைப் பார்ப்போம்.

திர்மிதி நூலை சாஜிதா புக் சென்டர் விற்று, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை அண்ணனால் நியமிக்கப்பட்ட அபிமானியான அன்வர்பாஷாவிடம் கொடுத்து வந்த நிலையில், திடீரென்று மீதமுள்ள நூல்களை மீடியாவேல்டில் ஒப்படைக்கச் சொன்னார் பீஜே. அவ்வாறு ஒப்படைக்கப்பட்டு குறுகிய நாட்களில் 'எங்கோ தவறு நடந்து விட்டது' என்று வசனம் பேசி மீண்டும் நூல்களை சாஜிதாவிடம் ஒப்படைக்கச் செய்தார். இதை நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். இவ்வாறு மீடியாவேல்டிற்கு சென்று பிறகு சாஜிதாவிடம் திரும்பி வருகையில் 318 நூல்கள் குறைவாக இருந்ததாக அந்நிறுவனம் சொல்கிறது. அப்படியானால் இந்த 318 நூல்கள் மீடியாவேல்டினால் விற்கப்பட்டுள்ளது. இந்த நூல்களுக்கான தொகை மொத்த விலையில் குறைந்தது ஒரு நூல் 133 ரூபாய்கள் என்று கணக்கிட்டாலும், 42 ,294 ரூபாய்கள் ஆகும். இந்த தொகை ஹாமித்பக்ரியிடம் வழங்கப் படவில்லை. சாஜிதாவிடமும் வழங்கப்படவில்லை. அப்படியானால் எங்கே சென்றிருக்கும்?. வேறு எங்கே தவ்ஹீத் ஜமாத்திற்குத்தான்.

ஏற்கனவே திர்மிதி வகைக்காக சாஜிதா அன்வர்பாஷாவிடம் வழங்கியது 5 ,47 ,085
இப்போது மீடியாவேல்ட் மூலமாக விற்ற தொகை 42 ,294                                   
ஆக மொத்தம் 5 ,89 ,379 .00 ஐந்து லட்சத்து என்பத்தி ஒன்பதாயிரத்து முன்னூற்றி எழுபத்தி ஒன்பது ரூபாய்கள்.  

இந்த தொகை எத்தனை ஷேர் ஹோல்டர்களுக்கு எந்தெந்த ஷேர் ஹோல்டர்களுக்கு பீஜெயால் நியமிக்கப்பட்ட அன்வர்பாஷாவால் வழங்கப்பட்டது என்பதற்கு வெள்ளையறிக்கை ஒன்றை பீஜே வெளியிடவேண்டும். அப்படி வெளியிட தவறும் பட்சத்தில் ஹதீஸ் நூலை வெளியிடப்போகிறோம் என்று மக்களிடம் ஹாமித்பக்ரி வசூலித்து வந்த பணத்தை வைத்து, பீஜே திர்மிதி என்ற பெயரில் ஸ்வாஹா செய்துவிட்டார் என்று மக்கள் விளங்கிக்கொள்வார்கள். 

அடுத்து, தவ்ஹீத் ஜமாத்திருந்து நீக்கப்பட்ட[?] ஹாமித்பக்ரி, சாஜிதாவிடம் திர்மிதி விற்ற பணத்தை வாங்கி சாப்பிட ஆரம்பித்தார் என்று பீஜே சொன்னதை ஏற்கனவே நாம் எழுதியுள்ளோம். ஆனால் உண்மையில் சாஜிதாவிடமிருந்து ஹாமித்பக்ரி திர்மிதி வகையில் ஐந்து பைசா கூட வாங்கவில்லை என்று உறுதியாகக் கூறுகிறோம். பீஜே தனது கூற்றில் உண்மையாளர் என்றால், சாஜிதாவிடமிருந்து ஹாமித்பக்ரி எத்தனை ஆயிரம் ரூபாய்கள் வாங்கினார் என்று சாஜிதா வவுச்சருடன் காட்டவேண்டும்.இல்லையேல் இவர் ஹாமித்பக்ரி மீது அவதூறு சொன்ன பாவத்திற்கு ஆளாக நேரிடும் என்று எச்சரிக்கிறோம்.

மேலும், நாம் மேலே பட்டியலிட்டுள்ள தொகையான 5 ,89 ,379 .00ஐந்து லட்சத்து என்பத்தி ஒன்பதாயிரத்து முன்னூற்றி எழுபத்தி ஒன்பது ரூபாய்கள் என்பது மொத்த விலையான 133 ரூபாய் கணக்குப்படி சுமார் 4431 நூல்களுக்கான தொகையாகும். [விற்கமுடியாத அளவுக்கு சேதமடைந்த நூல்கள் பற்றி முன்பு குறிப்பிட்டுள்ளோம்]
இந்த தொகை ஹாமித்பக்ரியிடம் செல்லவில்லை. ஜமாத்திற்குத்தான் சென்றுள்ளது. அப்படியானால் மோசடியாளர் யார்? ஹாமித்பக்ரியா? பீஜேயா? அல்லது அன்வர்பாஷாவா? சிந்தியுங்கள் சகோதரர்களே! 

திர்மிதி வெளியான சில நாட்களிலேயே ஹாமித்பக்ரி ஜமாத்திலிருந்து நீக்கப் பட்டதாகவும், அவர் சாஜிதாவிடமிருந்து திர்மிதி விற்ற காசை வாங்கி சாப்பிட்டதாகவும், ஷேர் ஹோல்டர்களை முழுமையாக ஏமாற்றியதாகவும் பீஜே சொல்கிறாரே! ஷேர் ஹோல்டர்களுக்கு பணத்தை திருப்பித் தரவேண்டும் என்பதற்காக முயற்சித்த ஹாமித்பக்ரி அவர்கள், லுஹாவுக்கு ஒரு லட்சம் வாயில் தட்டினார். பீஜெயிக்கு ஒரு லட்சம் வாயில் தட்டினார். பின்பு புத்தகங்கள் வெளியான பிறகு அதிலிருந்து ஐந்து பைசா வாங்காமல் அனைத்தும் ஜமாத்திற்கு கிடைக்கச் செய்தார். அதன் மூலம் ஷேர் ஹோல்டர்களுக்கு பணம் போய் சேர்ந்திருக்கும் என்று நம்பினார். ஆனால் திர்மிதி விற்ற காசை லட்சக்கணக்கில் வாங்கிய ஜமாஅத், அதை என்ன செய்ததோ தெரியவில்லை. இன்று ஹாமித்பக்ரி மீது பழிபோட்டு விட்டு, பரிசுத்த வேதாந்தம் பேசுகிறார் பீஜே. திர்மிதி நூல் காசை சாப்பிட்டு மக்களை ஹாமித்பக்ரி ஏமாற்றவில்லை என்பதை ஆணித்தரமாக பதிவு செய்திருக்கிறோம். நாம் மேலே எழுதியுள்ளபடி, திர்மிதி காசை ஹாமித்பக்ரி வாங்கித் தின்றதை சாஜிதா வவுச்சருடன் பீஜே காட்டத் தயாரா?

அயல்நாட்டு நிதியில் பீஜேயின் அப்பட்டமான பொய்கள் இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக