செவ்வாய், 15 மே, 2012

வெளிநாடுவாழ் தமிழர்களுக்காக தனி அமைச்சகம்: பண்ருட்டி ராமச்சந்திரன் கோரிக்கை.


தமிழகத்தைச் சேர்ந்தவர்களில் எண்ணற்றோர் வெளிநாடுகளின் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இந்திய நாட்டிற்கு அன்னியச் செலவாணியை ஈட்டித்தருவதில் பெரும்பங்கு வகிக்கின்றனர். வெளிநாடுவாழ் கேரளர்களின் நலனுக்காக அந்த மாநில அரசு தனியாக அமைச்சகம் அமைத்து செயல்பட்டு வருகையில், தமிழகத்தில் அத்தகைய ஒரு அமைச்சகம் இல்லாதது, வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஒரு குறையாக இருந்தது. தமிழகத்தைச் சேர்ந்த சில முஸ்லிம் இயக்கங்கள் அவ்வப்போது இந்த தனி அமைச்சக கோரிக்கைகளை வைத்தபோதும் அவை கண்டுகொள்ளப்படாத நிலையில், சட்டமன்றத்தில் இந்த கோரிக்கையை பதிவு செய்துள்ளார் மூத்த அரசியல்வாதியும், சட்டமன்ற எதிர்கட்சித் துணைத்தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரன்.

சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசும்போது, ''வெளிநாடுகளில் வாழும் மலையாள மக்களின் நலனுக்காக கேரளத்தில் தனி அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. அதுபோல, வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு உதவுவதற்காக வெளிநாடுவாழ் தமிழர்கள் விவகாரத் துறை அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும்.'' என்று பேசியுள்ளார்.

சட்டமியற்றும் அவைதனிலே வெளிநாடுவாழ் தமிழர்களின் நலனுக்கான ஒரு கோரிக்கையை வைத்த எதிர்கட்சித்துனைத் தலைவரைப் பாராட்டுகின்றேன். இனியாவது அரசு வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு தனி அமைச்சகம் அமைத்து அவர்கள் நலன் காக்க முன்வரவேண்டும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக