சனி, 5 மே, 2012

இலங்கையில் பள்ளிவாசல் மீதான தாக்குதலைக் கண்டித்து, குவைத்தில் இதஜ நடத்திய கண்டனக் கூட்டம்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
லங்கை தம்புள்ளா பகுதியில், புத்த பிக்குகள் மற்றும் சிங்கள வெறியர்களால் மஸ்ஜிதுல் ஹைரிய்யா தாக்கப்பட்டதைக் கண்டித்தும், தாக்குதல் நடத்திய காடையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும், இலங்கையின் மதசார்பின்மைக்கு சாவுமணியடிக்கத் துடிக்கும் ராஜபக்சேயின் இனவெறி அரசைக் கண்டித்தும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் சார்பாக 4 -5 -2012 வெள்ளிக்கிழமை மாலை மாபெரும் கண்டனக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு இதஜ கவுரவ ஆலோசகர் கூத்தூர் ஜாபர் தலைமை ஏற்று சிற்றுரையாற்ற, மண்டலத்துணைத் தலைவர் ஜாஹித் பிர்தவ்ஸ் இறைமறை ஓத, மண்டலத் தலைவர் முகவைஅப்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். மண்டலச் செயலாளர் அபூஷிபா அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மக்கள் தொடர்பாளர் பீர் மரைக்காயர், தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் பொதுச்செயலாளர் அப்துர்ரஹீம், காயிதே மில்லத் பேரவையின் தலைவர் தலைவர் முஹம்மது பாரூக், குவைத் இந்தியா பிடர்நிட்டி பார்ம் அமைப்பின் பிரதிநிதி சிக்கந்தர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் குவைத் பிரதிநிதிகள் சத்யா மற்றும் விஜயன், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் குவைத் பிரதிநிதிகள் அன்பரசன் மற்றும் அறிவழகன் ஆகியோர் மஸ்ஜித் தாக்கப்பட்டதற்கு எதிரான தங்களின் கண்டனக் கணைகளை, வார்த்தை ஏவுகணைகளை ராஜபக்சேயின் இனவாத அரசிற்கு எதிராக ஏவினார்கள். 

தொடர்ந்து, பள்ளிவாசலை தாக்கிய காடையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பள்ளிவாசல் இடம் மாற்றப்படாது என்ற உத்திரவாதத்தை இலங்கை அரசு வழங்கவேண்டும், இலங்கையில் மதசுதந்திரம் பேணப்பட சர்வதேச நாடுகள் இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும், பள்ளிவாசல் தாக்கப்பட்ட விசயத்தில் இலங்கை அரசைக் கண்டிக்காத இந்திய நடுவன் அரசையும், தமிழக அரசையும் கண்டிக்கிறோம் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பள்ளிவாசல் தாக்கப்படவில்லை என்று அறியாமையில் இருந்த மக்களுக்கு, மக்கள் ரிப்போட்டரில் வெளியான புத்த பிக்குகளின் மதவெறியாட்ட படங்களும், தர்கா இடிக்கப்பட்ட படமும், இடிக்கப்பட்ட பள்ளிவாசலை இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் பார்வையிடும் படங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டதால் உண்மைநிலையை அறிந்துகொண்டதாக கூறினர். இறுதியாக மண்டலப் பொருளாளர் சாதிக்சதாம் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. எல்லாப் புகளும் அல்லாஹ்வுக்கே.
மதிமுகவின் சம்பை விஜயன்.
தமுமுகவின் பீர் மரைக்காயர்.
காயிதே மில்லத் பேரவையின் முஹம்மது பாரூக்.
விடுதலைச் சிறுத்தைகளின் பிரதிநிதி அன்பரசன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக