வெள்ளி, 11 மே, 2012

GCC நாடுகளில் குற்றப்பிண்ணனியில் தாயகம் சென்றவர்கள் மீண்டும் GCC வரமுடியாதா?

வூதி அரேபியா, குவைத், ஓமன், பஹ்ரைன், கத்தார், அமீரகம் ஆகிய நாடுகள் GCC நாடுகள் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாடுகளுக்குள் சில விசயங்கள் ஒருங்கினைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பான சட்டமாகும். இது தொடர்பான கேள்வி ஒன்றும் அதற்கான பதிலும் இந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இங்கே பதிவு செய்கிறோம்.

கேள்வி; ஒரு சகோதரர் சவுதி கபில் கொடுமை காரணமாக சவுதி அரேபியா ஜெத்தா சென்று
போலிசிடம் சரணடைந்து தாயகம் சென்றார் அப்போது போலிசில் அவருடைய கை ரேகையை
பதிவு செய்து கொண்டார்கள். தற்போது அவர் சென்று இரண்டரை வருடங்கள் ஆன நிலையில், இரண்டு தினங்களுக்கு முன் அல்தவா பார்மசி விசா மூலம், பம்பாயில் விசா ஸ்டாம்ப் செய்யப்பட்டு
தம்மாம் வந்த அவரை எமிக்ரேசன் போலீசார் கை ரேகையை பதிவு செய்து
பார்த்தவுடன் அடுத்த பிளைட்டில் மீண்டும் தாயகத்திற்கே அனுப்பி விட்டு
விட்டார்கள்.

அதே பிளைட்டில் ஏற்கனேவே குவைதில் பணி புரிந்து, குவைத் போலிசிடம்
சரணடைந்து தாயகம் சென்ற பெண் மீண்டும் சவுதிக்கு வந்த போது அவரையும்
சவுதி எமிக்ரேசன் போலீசார் கை ரேகையை பதிவு செய்து பார்த்தவுடன் அடுத்த
பிளைட்டில் மீண்டும் தாயகத்திற்கு அனுப்பயுள்ளர்கள் (இருவரும் ஒரே
பிளைட்டில் திரும்ப நேர்ந்ததால் இந்த தகவல் கிடைத்தது).

மேற்படி சகோதரர் ஒரு லட்சத்திற்கு மேல் சிலவு செய்து பாதிக்க பட்டு விட்டார்.

தயவு செய்து இதுபோல் சென்ற சகோதரர்களுக்கு எச்சரிக்கையாக இதை சொல்லவும்.


1 . இது போல் சென்றவர்கள் மீண்டும் சவூதிக்கு தான் வர முடியாதா?
2 . அல்லது GCC கே வரமுடியாதா?
3 . எந்தெந்த நாடுகளுக்கு செல்ல முடியாது?


இது சம்பதமாக தெரிந்தவர்கள் சொன்னால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

-நாகூர் சுல்தான்
சவுதி அரேபியா.

பதில்; வளைகுடா நாடுகளின் குடியுரிமை மற்றும் சட்டம் ஒழுங்கு சம்பந்தமான அனைத்தும் ஒரு குடையின் கீழ் நெட்ஒர்க் செய்யப்பட்டுள்ளது. வளைகுடாவில் உள்ள எந்த நாட்டிலாவது ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டு அவர் தாயகம் அனுப்பிய பின் அவர் மீண்டும் வளைகுடாவின் வேறு எந்த நாட்டிற்கும் வரமுடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 
ஒரு கம்பெனியில் பணியாற்றிய ஒருவர் அந்த கம்பெனியிலிருந்து விடுப்பில் தாயகம் சென்றுவிட்டு அந்த கம்பெனிக்கு மீண்டும் வராமல் அந்த விடுப்பு விசா காலாவதி ஆகிவிட்டால் வேறு விசாவில் வளைகுடாவின் எந்தப் பகுதிக்கும் அவரது வாழ் நாள் முழுதும் செல்லமுடியாத நிலை உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.  
 
யாராவது நான் ஏற்பாடு செய்கிறேன் என்றும் கொண்டுவந்து விடுவேன் என்றும் குறுக்கு வழியை கையாண்டு உள்ளே வந்தால் வந்தவர் நாடு திரும்பவே முடியாது என்பதையும் நினைவில் கொள்ளவும்.
 
இதில் குறிப்பிட்டுள்ள தகவல் தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் ஆகும். வரும் காலங்களில் மாற்றப்படலாம் அல்லது தொடரலாம்... அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
 
நன்றி; ஹூஸைன்கனி, ரியாத்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக