வெள்ளி, 18 நவம்பர், 2011

தேசிய கொடி அவமதிப்பு: மத்திய பிரதேச முதல்-மந்திரி சவுகான்- சுஷ்மாவுக்கு வாரண்டு!

மத்திய பிரதேச மாநிலம் செகோர் என்ற இடத்தில் கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந்தேதி பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜுக்கு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பாராட்டு விழா நடந்தது. இதில் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் அப்போதைய மாவட்ட கலெக்டர் மற்றும் வட்டார பாரதீய ஜனதா தலைவர் நஸ்ருல்லா கஞ்ச் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இதையொட்டி பேரணி நடந்தது. இதில் கலந்து கொண்ட 10 வயது சிறுமி பாரத மாதா போல் வேடம் அணிந்து இருந்தார். பின்னர் அவர் மேடையில் ஏறி சுஷ்மாசுவராஜ், முதல்- மந்திரி சவுகான் மற்றும் பிரமுகர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.   அப்போது சிறுமி தேசிய கொடியை தலை கீழாக பிடித்து இருந்தார். இதை தலைவர்கள் கண்டு கொள்ளவில்லை.
 
இதுபற்றி செகோர் நகரைச் சேர்ந்த துவாரகாஜாட் என்பவர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் சுஷ்மா சுவராஜுக்கு நடந்த பாராட்டு விழாவில் தேசிய கொடியை தலை கீழாக பிடித்து அவமதிக்கப்பட்டது. இதுபற்றி போலீசில் புகார் செய்தேன். ஆனால் எனது புகாரை போலீசார் பதிவு செய்ய மறுத்து விட்டனர். எனவே சுஷ்மா சுவராஜ், சவுகான், அப்போதைய கலெக்டர், வட்டார தலைவர் ஆகியோர் மீது தேசிய அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.  
 
நீண்ட காலமாக வழக்கு விசாரணையில் இருந்தது. நேற்று இந்த வழக்கு மாஜிஸ்திரேட்டு ஜாபர்இக்பால் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சுஷ்மா சுவராஜ், முதல்-மந்திரி சவுகான், கலெக்டர் வட்டார தலைவர் ஆகியோருக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத வாரண்டு பிறப்பித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
 
இதையடுத்து முதல்- மந்திரி சவுகான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2004-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் ஊப்ளியில் தேசிய கொடி அவமதிப்பு தொடர்பாக அப்போதைய முதல்-மந்திரி உமா பாரதிக்கு எதிராக கோர்ட்டு தீர்ப்பு கூறிய போது அவர் பதவி விலகினார். அது போல் சவுகான் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மானக் அகர்வால் கூறினார்.
 
நன்றி;மாலைமலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக