செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

மக்கள் வரிப்பணம் விரையமாவது பற்றி கருணாநிதி பேசுவதா?(news)

டந்த திமுக ஆட்சிக்காலத்தில் சுமார் 550 கோடி செலவில், கருணாநிதியால் அவசரக் கோலத்தில் அள்ளித்தெளித்ததைப் போன்று, புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

பின்னர் ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா, புதிய தலைமைச் செயலகம் மருத்துவமனையாக மாற்றப்படும் என்றும் , பழைய தலைமைச்  செயலகத்தில் தான் நான் கோலோசசுவேன் என்றும் அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பு அரசியல் கட்சிகள் மட்டுமன்றி பொதுமக்கள் மத்தியிலும் பலத்த எதிர்ப்பை சந்தித்தது.

முதல்வரின் இந்த அறிவிப்பை எதிர்த்து தொடரபட்ட வழக்கு தள்ளுபடி ஆன நிலையில், தான்  நினைத்தபடி புதிய தலைமைச்செயலகத்தை மருத்துவமனையாக திறந்துவைத்து தனது சபதத்தை நிறைவேற்றியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

இதையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ள திமுக  தலைவர் கருணாநிதி, மக்களின் வரிப் பணத்தை ஜெயலலிதா வீணடிப்பதாக விமர்சித்துள்ளார். ஜெயலலிதாவின் இந்த மருத்துவமனை விவகாரத்தை நாமும் கண்டிக்கிறோம் அதே நேரத்தில் மக்களின் வரிப்பணம் வீணாவது பற்றி கருணாநிதி பேசுவது ஆச்சர்யமானதாகும்.   இறந்து போன தலைவர்கள் பெயரால் தமிழகத்தில் உள்ள மணிமண்டபங்கள, சிலைகள் யாவும் பெரும்பாலும் இந்த திருக்குவளையார் திறந்து வைத்ததுதான். இதற்காக மக்களின் வரிப்பணம் கருணாநிதியால் பல்லாயிரம் கோடி விரையமாக்கப் பட்டதே! இந்த மணிமண்டபங்கள் இப்போது பெரும்பாலும் காதலர்கள் ஒதுங்குமிடங்கலாகவே பயன்படுகிறது என்று மக்கள் பேசிக்கொள்வதை கருணாநிதி அவர்களால் மறுக்க முடியுமா?

பருவமழை பொய்த்து, கர்நாடகாவும் காவிரி நீரை கை விரித்த காரணத்தினால் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வயலும் வயிறும் காய்ந்த போது கவலைப்படாத கருணாநிதி, மத்தியில் அமைந்துள்ள தனது கூட்டணி கட்சித் தலைமையை வலியுறுத்தாத கருணாநிதி, விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை மத்திய அரசு வழங்க வேண்டும்  என்று வலியுறுத்தாத கருணாநிதி, குமரியிலே தான் திறந்து வைத்த வள்ளுவர் சிலை பராமரிப்பின்றி கிடக்கிறதே என கண்ணீர் வடித்தார். இந்த வள்ளுவர் சிலையை கடலிலே அமைக்க கருணாநிதி கொட்டிய தொகை 10 கோடி. இந்தப் பணமெல்லாம் கருணாநிதிக்கு வீண் விரையமாக தெரியவில்லையா?

ஆக கருனாநிதியாரே! மக்கள் வரிப்பணத்தை விரையமாக்கி புகழ் பெறுவதில் ஜெயலலிதா உங்களுக்கு போட்டியாக உருவெடுத்துள்ளார் என்றாலும்  உங்களை வெல்ல முடியாது என்பதை நினைத்து ஆறுதல் அடைந்து கொள்ளுங்கள். மக்கள் தங்களின் வரிப்பணம் அரசால் எந்த வகைக்கு செலவிடப்படுகிறது என்பதை கண்காணித்து கேள்வி கேட்காத வரைக்கும் உங்களையும் ஜெயலலிதாவையும் திருத்துவது கடினமே.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக