ஞாயிறு, 30 அக்டோபர், 2011
உலக சிக்கன நாள்; சிக்கனமும்-கஞ்சத்தனமும்!
சனி, 29 அக்டோபர், 2011
துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகளும் உழ்ஹிய்யாவின் சட்டங்களும்!
ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும் ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக.
சிறப்புகள்1- துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும்தான் ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும் உயிரையும் அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : புகாரி
2- நாட்களில் மிகச்சிறந்த நாள் அரஃபாவுடைய நாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்.
இந்த நாட்களில் செய்யும் அமல்கள்;
1- ஹஜ் உம்ரா:- ஒரு உம்ரா மற்ற உம்ராவுக்கு இடைப்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும். மேலும் ஏற்றுக்கொள்ப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம் - புகாரி முஸ்லிம்.
2-உபரியான தொழுகைகள் நோன்புகள் தர்மங்கள் உறவினர்களுக்கு உதவுவது குர்ஆன் ஓதுவது பாவமன்னிப்பு தேடுவது நன்மையை ஏவுவது தீமையை தடுப்பது போன்ற நல் அமல்களில் ஈடுபடுவது.
[குறிப்பு- துல் ஹஜ் மாதத்தின் பத்தாம் நாளாகிய பெருநாளன்று நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டுள்ளது.ஆதாரம் - புகாரிமுஸ்லிம்]
3- அரஃபா நோன்பு :- அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம்-முஸ்லிம்
[குறிப்பு :- அரஃபா நோன்பை ஹாஜிகள் நோற்க்கக்கூடாது ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் சிறந்தது]
அரஃபா தினத்தன்று அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கொண்டுவந்த பாலை அருந்தி தான் நோன்பு நோற்கவில்லை என்பதை மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள்.ஆதாரம் புகாரி முஸ்லிம்.
4- தக்பீர் கூறுவது:- கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும் பள்ளிவாசல் வீடு கடைவீதி போன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறுவது ;
ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை. ஆகவே லாஇலாஹா இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : அஹ்மத்.
இப்னு உமர் (ரலி) அபூஹுரைரா (ரலி) ஆகிய இரு நபித்தோழர்களும் துல்ஹஜ் (மாதம் ஆரம்ப) பத்து தினங்களிலும் கடைவீதிகளுக்கு செல்லும் போதெல்லாம் தக்பீர் கூறுவார்கள் இவ்விருவரும் கூறுவதை கேட்கின்ற மற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள்.
ஆதாரம் - புஹாரி.
5- ஹஜ் பெருநாள் தொழுகை இன்னும் குத்பா பிரசங்கத்தில் கலந்து கொள்வது.
நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப்பெருநாளிலும் கன்னிப்பெண்கள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் (உட்பட) முஸ்லிம்களின் பிரார்த்தனைகளிலும் நல்ல அமல்களிலும் கலந்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழுகையில் கலந்து கொள்ளாமல் தொழுகை நடக்கும் பகுதிக்கு வெளியே இருந்து கொள்ள வேண்டும் என்றார்கள்.
ஆதாரம் :- புகாரி முஸ்லிம்.
6- உழ்ஹிய்யா:- உழ்ஹிய்யா என்பது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு பின் இறை திருப்தியை நாடி அறுக்கப்படும் பிராணிக்கு சொல்லப்படும் இது நபியவர்கள் வலியுறுத்திய சுன்னத்தாகும்.கொம்புள்ள கறுப்பு நிறம் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளை நபி (ஸல்) அவர்கள் உழ்ஹிய்யாவாக கொடுத்தார்கள் அப்போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி அவ்விரண்டின் ஒரு பக்கத்தின் மீது தனது காலை வைத்து கையால் அறுத்தார்கள்.
ஆதாரம் - புஹாரி.
குர்பானி பிராணியின் வயது;
குர்பானி கொடுக்கப்பட வேண்டிய பிராணிகளில் ஒட்டகத்திற்கு ஐந்து வயதும், ஆடு, மாடுகளுக்கு இரண்டு வயதும் பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
"முஸின்னா"வைத் தவிர வேறு எதனையும் அறுக்காதீர்கள். அது கிடைக்க வில்லையானால் ஆறுமாதக் குட்டியைக் கொடுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்".(ஜாபிர்(ரலி) – முஸ்லிம், அபூதாவூத், நஸஈ, இப்னுமாஜா, அஹ்மத் )
இங்கு "முஸின்னா" என்று கூறப்படும் வார்த்தை ஆடு மாட்டில் இரண்டு பல் முளைத்த பிராணிகளுக்கு பயன்படுத்தப் படுகின்றது. ஒட்டகம் ஐந்து வயது முடிந்தவுடனும், ஆடு, மாடு இரண்டு வயது முடிந்தவுடனும் இரண்டு பற்கள் வருவதால், ஒட்டகம் ஐந்து வயது, ஆடு, மாடு இரண்டு வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டுமெனக் கூறப்படுகின்றது.
"முஸின்னா" கிடைக்காவிட்டால் ஆறுமாதக் குட்டியாட்டை அறுப்பது இந்த ஹதீஸில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் பிறிதொரு ஹதீஸின் மூலம் அது ஒரு தோழருக்கு மாத்திரம் வழங்கப்பட்ட சலுகை என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.
"இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்கு) திரும்பிச்சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்துகொள்வாரோ அவர் நமது வழியில் நடந்துகொண்டார். யார் (தொழுமுன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்தினருக்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியின் நன்மை எதுவும் கிடையாது" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபுர்தா(ரலி) அவர்கள் (தொழு முன்) அறுத்துவிட்டார். அவர் (நபி(ஸல்) அவர்களிடம்) என்னிடத்தில் முஸின்னாவை விட சிறந்த ஆறுமாதக் குட்டியுள்ளது (அதைக் குர்பானி கொடுக்கலாமா) என்றார். முன் அறுத்ததிற்கு இதைப் பகரமாக்குவீராக (அறுப்பீராக). எனினும், உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இதை (குர்பானிகொடுக்க) அனுமதியில்லை" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (பரா(ரலி) – புகாரி, முஸ்லிம்)
உழ்ஹிய்யாவிற்கான கால் நடைகளில் கீழ்க்கண்ட குறைகள் இருக்கக்கூடாது:
- கண் குறுடு
- கடுமையான நோயானவை
- மிகவும் மெலிந்தவை
- நொண்டியானவை அங்கங்கள் குறையுள்ளவை.
உழ்ஹிய்யாவுக்காக அறுத்துப் பலியிடப்படும் பிராணி ஒட்டகம் அல்லது மாடாக இருப்பின் ஏழு நபர்கள் கூட்டாகச் சேர்ந்து கொடுக்க முடியும். என்பதைப் பின்வரும் நபிமொழி விளக்குகின்றது.
"ஹுதைபியா என்ற இடத்தில் நபி(ஸல்) அவர்களுடன் ஏழு பேர் சேர்ந்து ஓர் ஒட்டகத்தையும், ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டையும் நாங்கள் அறுத்துப் பலியிட்டோம்"(ஜாபிர்(ரலி) – முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி)
குர்பானிப் பிராணி ஆடாக இருப்பின் ஒருவர் தமக்காகவும், தமது குடும்பத்தினருக்காகவும் ஓர் ஆட்டை அறுத்துப் பலியிட முடியும்.
"நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது என்று அபூ அய்யூப்(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒர் ஆட்டையே குர்பானி கொடுப்பார்.(அதாஃ பின் யஸார்(ரலி) – திர்மிதி, இப்னு மாஜா முவத்தா)
அறுக்கும் நேரம் ;
ஹஜ்ஜு பெருநாள் தொழுகைக்கு பின் அறுக்க வேண்டும்யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது உழ்ஹிய்யாவாக ஆகாது அவர் தன் குடும்பத்தின் தேவைக்காக அறுத்ததாகவே கணக்கிடப்படும்.யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அவர் இன்னும் ஒரு முறை குர்பாணி கொடுக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் - புகாரி,
யார் (பெருநாள்) தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது அவரின் குடும்பத்தேவைக்காக அறுத்ததாக கணக்கிட்டுக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
அறுக்கும் முறை~ ஆடு மாடுகளை படுக்கவைத்து ஒருக்கணித்து அறுக்க வேண்டும் (முஸ்லிம்)~ ஒட்டகத்தை நிற்கவைத்து அறுபடும் நரம்புகள் வெட்டப்படும் அளவுக்கு அறுக்கும் கருவியால் கீறிவிடவேண்டும். (முஸ்லிம்)~ அறுக்கும் போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். (புகாரி)
இறைச்சிகளை விநியோகித்தல்;
لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ
தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.[22:28 ]
ஸலமா இப்னு அக்வஃ(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் குர்பானிப் பிராணியை அறுக்கிறவர் (அறுத்ததிலிருந்து) மூன்று நாள்களுக்குப் பின் (அதிலிருந்து எதுவும் அவரின் வீட்டில் எஞ்சியிருக்கும் நிலையில்) காலைப் பொழுதை அடைய வேண்டாம்' என்று கூறினார்கள். அடுத்த ஆண்டு வந்தபோது, மக்கள் 'இறைத்தூதர் அவர்களே! சென்ற ஆண்டு செய்ததைப் போன்றே (இந்த ஆண்டும்) நாங்கள் செய்ய வேண்டுமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் 'நீங்களும் அதிலிருந்து உண்டு (மற்றவர்களுக்கும்) உண்ணக் கொடுங்கள். சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், கடந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. எனவே, நீங்கள் அந்தச் சிரமத்தைப் போக்க (அவர்களுக்கு) உதவ வேண்டும் என்று விரும்பினேன்' என்று பதிலளித்தார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 5569
"உழ்ஹிய்யாக் கொடுப்பவர் தானும் சாப்பிட்டு தனது உறவினர்களுக்கும் அன்பளிப்புச் செய்து ஏழைகளுக்கு தர்மமாகக் கொடுத்தல் சுன்னத்தாகும்.
செய்யக்கூடாதவை;
உழ்ஹிய்யா கொடுக்கப்பட்ட கொடுக்கப்பட்ட பிராணிகளின் முடிகளையோ தோல்களையோ மாமிசங்களையோ அறுத்தவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது.
குர்பானி கொடுப்பதற்கான ஒட்டகங்களை மேற்பார்வை செய்வதற்கு என்னை நபி (ஸல்) அவர்கள் நியமித்தார்கள் அவைகளின் மாமிசம் தோல் ஆகியவற்றை தர்மமாகவே கொடுக்க வேண்டும் என்றும் அவற்றில் எதையும் அறுப்பவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது என்றும் கூறினார்கள் என அலி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.ஆதாரம்:- புகாரி,
ஹஜ் மாதம் பிறந்ததும் உழ்ஹிய்யா கொடுக்க நாடியவர் தன்னுடைய முடி மற்றும் நகத்திலிருந்து எதையும் அகற்றக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.ஆதாரம்:- முஸ்லிம்
குறிப்பு:- இத்தடை உழ்ஹிய்யா கொடுப்பவருக்கு மாத்திரம்தான் அவரின் குடும்பத்தினருக்கு அல்ல.
நன்றி; இப்ராஹீம் மதனி மற்றும் மவ்லவி இஸ்மாயில் ஸலபி ஆகியோரின் ஆக்கங்களில் இருந்து தொகுக்கப்பட்டது.
வெள்ளி, 28 அக்டோபர், 2011
என்ன சொல்லப்போகிறார் மருத்துவர்..?
கல்வி அமைச்சரின் தலைக்கு விலை; அரங்கேறும் அரசியல் கூத்து.
சபாநாயகரிடம் அளிக்கப் பட்ட சம்மன், "அமைச்சர் கல்யாணசுந்தரம் வீட்டில் இல்லை" என திரும்ப வந்த நிலையில் அவரது வீட்டிற்குத் தமிழக காவல்துறையினர் இரண்டாவது சம்மனை அனுப்பினர். கல்யாண சுந்தரம் இல்லை என இரண்டாவது சம்மனும் திரும்பியது. இந்நிலையில் புதுச்சேரி இளைஞர் காங்கிரசார், "அமைச்சரைக் காணவில்லை; கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு ரூ 1000 சன்மானம் வழங்கப்படும்" என புதுச்சேரி முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். மற்றொரு புறம், புதுச்சேரி மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. ஒரு படி மேலே போய்,
வியாழன், 27 அக்டோபர், 2011
புதன், 26 அக்டோபர், 2011
கடாஃபியின் வீழ்ச்சி; மக்களின் எழுச்சியா? அமெரிக்காவின் சூழ்ச்சியா?
லிபியாவை 42 ஆண்டு காலம் ஆட்சி செய்த கடாபி, தன் சொந்த மண்ணில் கடந்த 20ம் ,தேதி கிளர்ச்சியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த நாட்டின் ஆட்சியை, 1969ம் ஆண்டு ராணுவ கேப்டனாக இருந்த கடாபி, புரட்சி மூலம் கைப்பற்றினார். கடந்த 42 ஆண்டு காலம் ஆட்சி செய்தார். துனிசியாவில் ஏற்பட்ட மக்கள் புரட்சியை காட்டி, கடாபியை பதவியை விட்டு நீக்கிட முயற்சி செய்த ஒரு கூட்டம் மக்கள் கிளர்ச்சிக்கு வித்திட்டது. கிளர்ச்சியாளர்கள் மீது கடாபி படையினர் தாக்குதல் நடத்தினர். இதில், நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். சமயம் பார்த்து காத்திருந்த உலக சட்டாம்பிள்ளையான அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும் கூடிய 'நேட்டோ' எனும் நாச நாட்டுப் படைகள் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக லிபியா ராணுவத்தினர் மீது தாக்குதல் தொடுக்க சற்றே பின் வாங்கியது கடாபியின் ராணுவம். கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத உதவி வழங்கியதோடு, வான்வெளி தாக்குதலையும் லிபியாவில் மேற்கொண்டது நேட்டோ.
அதோடு, "கடாபி சரணடைய வேண்டும்' என, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வற்புறுத்தின. ஆனால், இதை கடாபி மறுத்து விட்டார். நெதர்லாந்தில் உள்ள சர்வதேச கோர்ட், கடாபியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் லிபிய அதிபர் மும்மர் கடாபி, அவரது மகன் சைப் அல் இஸ்லாம், உளவுத்துறைத் தலைவர் அப்துல்லா அல் சனுசி ஆகியோருக்கு கைது வாரண்ட்டை பிறப்பித்தது. ''சரணடைய மாட்டேன்; நேட்டோவுக்கு அஞ்சமாட்டேன்; வேறு நாட்டிற்கு ஓடவும் மாட்டேன்; வெற்றி அல்லது வீரமரணம் என்பதே எனது இலக்கு என்று கர்ஜித்தார் கடாபி.
இந்நிலையில் நேட்டோ ஆதரவுடன் கிளர்ச்சிப் படைகளின் கை ஓங்கியதில், சமீபத்தில் தலைநகர் திரிபோலி கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்ததால், ஆட்சியை இழந்த நிலையில், கடாபி தலைமறைவானார். கடாபியின் சொந்த ஊரான சிர்தியில் கடாபி மறைந்திருக்கலாம் எனக் கருதிய கிளர்ச்சியாளர்கள் கடந்த ஒரு வாரமாக தாக்குதல் நடத்தி வந்தனர். இந்நிலையில் இங்கு நடந்த கடும் சண்டையில், கடாபியின் அமைச்சரவையில் ராணுவ அமைச்சராக இருந்த அபுபக்கர் யூனுஸ் பலியானார். கடாபியின் மகன் ஒருவரும் பலியாகியுள்ளார். இதைத் தொடர்ந்து, பலத்த காயங்களுடன் கடாபி பிடிபட்டார். அவரது இரண்டு கால்களும் பலத்த காயமடைந்திருந்ததாகவும் கிளர்ச்சிப் படையினர் தெரிவித்தனர். இந்த சண்டையில், கடாபியின் உடலில் ஏராளமான குண்டுகள் பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது. பின்பு அவர் மரணமடைந்தார் என்பதை விட காயங்களுடன் பிடிக்கப்பட்ட காடபியை கிளர்ச்சியாளர்கள் தாக்கியும், சுட்டும் கொன்றனர் என்ற தகவல் வலுவானதாக ஊடகங்களில் கூறப்படுகிறது.
கொல்லப்பட்டதாக கூறப்படும் கடாபியின் புகைப்படங்கள், வீடியோக்கள் மீடியாக்களில் வலம் வருகிறன. இவைகள் கடாபி கொல்லப்பட்டதை ஊர்ஜிதப்படுத்துவது போல் இருக்கிறது. அமெரிக்க அதிபர் ஒபாமாவும் கடாபியின் மரணத்தை உறுதிப் படுத்தியுள்ளார். மேலும் அமெரிக்காவின் வெளியுறவுச செயலாளர் ஹிலாரி கிளிண்டன் லிபியாவுக்கு சென்று திரும்பிய மறுநாளே கடாபி கொல்லப்பட்டார் என்ற செய்தி சற்று சந்தேகத்தையும் எழுப்புகிறது.
எது எப்படியோ கடாபி கொல்லப்பட்டார். கடாபியின் மரணம் என்பது அவரது சர்வாதிகார ஆட்சியின் மூலம் பாதிக்கபட்ட மக்களின் எழுச்சியின் விளைவு என்று ஊடகங்கள் ஆரூடம் சொல்கின்றன. ஹிட்லர், முசோலினி, போன்றவர்கள் பட்டியலில் கடாபியையும் சேர்த்து அவரை சர்வாதிகாரியாக காட்டுவதில் வெற்றியும் பெற்றுவிட்டன. சர்வாதிகார ஆட்சி நடத்துவதற்கு இது ஹிட்லர் காலம் அல்ல என்பதை மட்டும் ஏனோ ஊடகங்கள் வசதியாக மறைத்து விட்டன. கடாபியின் 42 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சியில் மக்கள் பாதிக்கப்பட்டதாக கடந்த ஆண்டுவரை ஊடகங்களில் எந்த செய்தியும் இல்லையே? இந்த ஆறுமாத காலமாகத் தானே லிபியா ஊடகங்களில் அடிபடுகிறது. அப்படியானால் கடாபி திடீரென சர்வாதியாக மாறிவிட்டாரா? அவரது சர்வாதிகாரத்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தால், கிளர்ச்சிக்கு பின்னால் பிடிவராண்டு பிறப்பிக்கும் சர்வதேச நீதிமன்றம், முன்பே கடாபிக்கு பிடிவாரண்டு பிறப்பிக்காதது ஏன்? மேலும் மனித உரிமை அமைப்புகள் எல்லாம் கடாபியின் நாற்பது ஆண்டுகால சர்வாதிகார செயல்களை கண்டும் காணாமல் இருந்ததா? உலக ஊடகங்கள் பார்வைக்கு நாற்பது ஆண்டுகால சர்வாதிகாரம் தெரியாமல் மறைந்து விட்டதா? அப்படி ஊடகங்களுக்கு தெரியாமல் அடக்குமுறையை அமுக்கி விடமுடியுமா? அப்படியாயின் மக்கள் கிளர்ச்சி என்பது சர்வாதிகாரத்தின் பாதிப்பால் மட்டும் எழுந்ததல்ல. மாறாக வேறு ஏதோ ஒரு பின்னணி உள்ளது என்பது தெரிகிறதல்லவா?
அது என்ன? அரபுலகின் அஞ்சா நெஞ்சன் சதாம் ஹுசைன் எப்படி அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நெஞ்சுரத்தோடு எதிர்த்தாரோ, அதே போல அமெரிக்காவின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் கடாபி. அமெரிக்காவுக்கு அனுதினமும் ஒத்து ஊதுவதையே தொழிலாக கொண்டிருக்கும் ஐ.நா. பற்றி, ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கடாபி பேசுகையில்,
''ஐ.நா. சபையும் இந்த பாதுகாப்பு கவுன்சிலும் உருவாக்கப்பட்ட பின்னர் 65 போர்கள் நடந்துள்ளன. இதற்கு மேலும் இதுபோல நடக்க கூடாது.பாதுகாப்பு கவுன்சில் என்று கூறுவதை விட தீவிரவாத கவுன்சில் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும்.''என்றார்.
அதோடு, தனது வீட்டோ அதிகாரத்தை வைத்து அமெரிக்க அநியாயம் செய்து வருவதால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ளன நிரந்தர உறுப்பினர்களுக்கு வீட்டோ அதிகாரம் இருக்கக் கூடாது'' என்றார்.
மேலும் அனைத்து நாடுகளுக்கும் சம உரிமை வேண்டும் என்ற கருத்தில் கடாபி, ஆப்பிரிக்க யூனியன்,லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவற்றுக்கு சபையில் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும். மேலும் நிரந்தர உறுப்பு நாடுகளை சுழற்சி முறையில் அதாவது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்'' என்றார்.
அதேபோல கொரியா , வியட்நாம் , ஈராக் , ஆப்கானிஸ்தான் போர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முழங்கிய கடாபி, ''பின்லேடன் தலிபான் என்று யார் சொன்னது. பின் லேடன் தலிபான் அல்ல , ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவரும் அல்ல.'' என்று அமெரிக்காவுக்கு செக் வைத்தார்.
இதுபோல வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அமெரிக்காவின் அநியாயங்களை அகிலம் அறியும் வகையில் ஆணித்தரமாக பதிவு செய்தார் கடாபி. இது சதாமுடன் நாடு ரீதியான நமது எதிரிகள் சகாப்தம் ஒழிந்தது என்று கருதிய அமெரிக்காவுக்கு 'கிலி'யை உண்டாக்கியது. அதே நேரத்தில் ஈராக் போன்று நேரடியாக போர் தொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ளவும் அமெரிக்கா விரும்பவில்லை. எனவே பலம் நழுவி பாலில் விழுந்த கதையாக மக்களின் கிளர்ச்சி சிறு பொறியாக கிளம்ப, அதை ஆயுதப் போராட்டமாக மாற்றி தானும் லிபியாமீது ஆயுத மழை பொழிந்து கடாபியை வீழ்த்தியுள்ளது அமெரிக்கா. எனவே கடாபியின் வீழ்ச்சி என்பது அமெரிக்காவின் சூழ்ச்சி என்பதே உண்மை.
அடுத்து இந்த நேரத்தில் இன்னொன்றையும் இங்கே பதிவு செய்கிறோம். அமைதியாக போராடும் மக்கள் மீது கடாபி ஆயுதப்பிரயோகம் செய்து மக்களை கொன்றார். எனவே மக்களை காக்கவே நேட்டோ களமிறங்கியது என்ற அமெரிக்காவின் கூற்று உண்மையானால், லிபியாவில் கிளர்ச்சி தொடங்கிய அதே காலகட்டத்தில் தான் பஹ்ரைன், சிரியா, ஏமன் ஆகிய நாடுகளிலும் தொடங்கியது. இதில் பஹ்ரைனில் பெரிய அளவு போராட்டக்காரர்கள் பலியாகவில்லை. எனினும், சிரியா-ஏமன் ஆகிய நாடுகளில் இன்றுவரை கிளர்ச்சியாளர்கள் பலியாகி வருகின்றனர். உலக மக்களின் ஆபத் பாந்தவனான அமெரிக்கா, இந்த நாடுகளுக்கு ஏன் தனது படையை அனுப்பவில்லை? ஒரே காரணம் தான். ஏமனோ-சிரியாவோ கடாபி போன்று அமெரிக்க எதிர்ப்பாளர்கள் அல்ல. எனேவேதான் அங்கே அந்த ஆட்சியாளர்களால் மக்கள் கொல்லப்பட்டாலும் அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை. எனவே லிபியா மக்கள் மீதான கருணையால் அமெரிக்கா லிபியா மீது தாக்குதல் தொடுக்கவில்லை. மாறாக தனது எதிரியை ஒழிக்கவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டது.
அடுத்து கடாபி கொல்லப்பட்டவுடன் ஒபாமா பேசிய செய்தியில், கடாபி அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு எதிரானவராக இருந்தார் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்ல அடுத்து ஒபாமா சொல்லியுள்ளதுதான் மிக முக்கியமான 'பாய்ன்ட்'. அதாவது ''லிபியாவில் ஏற்பட இருக்கும் இடைக்கால அரசாங்கத்துடன் ஒரு பங்குதாரராக அமெரிக்கா இருக்கும்.'' என்கிறார். இது ஒன்றே கடாபி கொல்லப்பட்டதற்கான காரணத்தை அறிந்து கொல்லப் போதுமானதாகும். இராக்கிலும், ஆப்கானிலும் இருந்த தனது எதிரிகளை ஒழித்து, அங்கே தனக்கு தலையாட்டும் ஒரு பொம்மை ஆட்சியை நிறுவியது போன்று, லிபியாவின் கடாபியை ஒழித்து அங்கே ஒரு பொம்மை ஆட்சியை நிறுவுவதுதான் அமெரிக்காவின் நோக்கம் என்பது ஒபாமா வார்த்தை சொல்லும் உண்மையாகும். மேலும் ஒபாமா சொல்கிறார்; ''மேற்கு ஆசியாவில் உள்ள மற்ற சர்வாதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கை'' என்கிறார். ஒபாமாவின் இந்த பேச்சு,அமெரிக்கவை எதிர்க்கும் எவரும் ஆட்சியிலும்-அதிகாரத்திலும் ஏன் உயிரோடு கூட இருக்கமுடியாது என்பதை கடாபியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று மிரட்டும் வகையில் உள்ளது.
அமெரிக்காவின் தொடர் அநீதிகளை கண்டும் காணாமல் இருக்கும் நாடுகள், இனியேனும் கண்விழித்து கண்டிக்க முன் வரவேண்டும். குறிப்பாக அண்டை வீடுகள் பற்றி எறிந்தால் நமக்கென்ன என்ற ரீதியில் இருக்கும் முஸ்லிம் நாடுகள் முன்வரவேண்டும். தவறினால் நேற்று..சதாம்., இன்று கடாபி., நாளை.?
இறுதியாக லிபிய மக்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். கடாபி உண்மையில் சர்வாதிகாரியாக இருந்து லிபிய மக்கள் பாதிக்கப் பட்டிருந்தாலும், அந்த பாதிப்பை போக்குவதற்கு லிபிய மக்கள் கொண்ட வழிமுறை நிரந்தர தீர்வளிப்பைவையாக இல்லை. பெயரில் மட்டும் 'நல்லபாம்பு' என்று உள்ளதால், இதற்கு விஷம் இருக்காது என்று நம்பி நடு வீட்டில் வைத்தால் என்றாவது அது தீண்டாமல் விடாது. அதைப் போல கடாபியை தேளாக கருதிய லிபிய மக்கள், தேளை ஒழிக்க அமெரிக்கா எனும் நல்ல[?]பாம்பின் உதவியை நாடி விட்டார்கள். அது காலைச் சுற்றிய பாம்பு என்பதை கண்முன்னே ஆப்கானிலும்- ஈராக்கிலும் கண்டபின்னும் லிபிய மக்கள் கணிக்கத் தவறிவிட்டார்கள். எது எப்படியோ, இனியாவது லிபியாவில் ரத்தம் சிந்தாமல் இருந்தால் சரிதான்.
நன்றி; சமுதாய மக்கள் ரிப்போர்ட் வார இதழ்.
செவ்வாய், 25 அக்டோபர், 2011
ஆதார் அடையாள அட்டைக்கான பதிவு இன்று முதல் துவக்கம்
சென்னை : "ஆதார் அடையாள அட்டை' பெற, தபால் நிலையம் மூலம் பதிவு செய்யும் பணி, இன்று முதல் துவக்கப்படுகிறது. இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையத்துடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இந்திய தபால் துறை அடையாள அட்டை வழங்குவதற்கான பதிவு செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது. இந்த அடையாள அட்டை மூலம் பல்வேறு பணிகள், பயன்களைப் பெற முடியும். வங்கி கணக்கு துவக்கவும், மருத்துவத்துக்கும், மொபைல்போன் இணைப்பு பெறவும், இந்த ஆதார் அடையாள அட்டை பயனுள்ளதாக இருக்கும்.
அடையாள அட்டை பெற, தபால் நிலையம் மூலம் பதிவு செய்யும் பணியை, தமிழக உள்துறை முதன்மைச் செயலர் ரமேஷ்ராம் மிஸ்ரா, இன்று சென்னையில் துவக்கி வைக்கிறார். தமிழக தபால் வட்டம் துவக்கும் இப்பதிவுப் பணி, சென்னையில் மயிலாப்பூர், தி.நகர் மற்றும் பூங்கா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தலைமை தபால் நிலையங்களுக்கும், நவ., 1ம் தேதி முதல் விரிவுப்படுத்தப்படும்.
மேலும், நவ., 21ம் முதல் தமிழகத்தில் உள்ள 31 மாவட்ட தலைமை தபால் நிலையங்களுக்கும், அடுத்த 30 நாட்களில் 154 முக்கிய தபால் நிலையங்களிலும் விரிவுப்படுத்தப்படவுள்ளது. இந்த ஆதார் அடையாள அட்டையை இலவசமாக, பொதுமக்கள் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். இதுகுறித்து, மேலும் விவரங்களை அறிய, 044-28582798, 0431-241245,0452-2526398,0422-2558204 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, தமிழக வட்ட தலைமை தபால் துறை தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
-நன்றி;தினமலர்திங்கள், 24 அக்டோபர், 2011
ஐ.என்.டி.ஜே தலைமையகத்தில் ஒரே நாளில் இஸ்லாத்தை ஏற்ற மூவர்!
ஞாயிறு, 23 அக்டோபர், 2011
போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது எப்படி?
வியாழன், 20 அக்டோபர், 2011
உள்ளாட்சித் தேர்தல் முடிவை உடனுக்குடன் அறிந்து கொள்ள....
அரசின் அலட்சியம்; பலியான அப்பாவி மாணவி!
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் சுமார் 900க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் பி.எஸ்சி முதலாம் ஆண்டு படிக்கும் நிரவி, கீழராஜவீதியை சேர்ந்த நைனா மரைக்காயர் மகள் மெகபூப்நிசா(வயது 18) என்ற மாணவி கல்லூரிக்கு வந்தார். காலை 9.30 மணிக்கு வகுப்புகள் தொடங்கும் என்பதால் அவர் சக மாணவிகளுடன் கல்லூரியின் 2வது மாடியில் உள்ள தனது வகுப்பறைக்கு அருகில் உள்ள வராண்டாவில் நின்று பேசிக் கொண்டிருந்தார்.
மருத்துவருக்கு இப்போதைக்கு தேவை வேகம் அல்ல விவேகம் தான்!
'சிறை'யூரப்பாவாக மாறிய எடியூரப்பா.
ஜெயலலிதாவை குறை சொல்ல ஸ்டாலினுக்கு தகுதியுண்டா?
புதன், 19 அக்டோபர், 2011
இறைமறை வழங்கும் விழாவாக மாறிய இருமணம் இணையும் நிகழ்ச்சி!
செவ்வாய், 18 அக்டோபர், 2011
கவுன்சிலர் தேர்தலை புறக்கணித்த முஸ்லிம் சமூகத்தினர்
வெள்ளி, 14 அக்டோபர், 2011
'நச்'சுன்னு ஒரு கேள்வி!

உண்மையில், அது 4.5 ஏக்கர் அதாவது 90 கிரவுண்ட் நிலத்தில் இருக்கிறது. அப்படியென்றால், 25 கிரவுண்ட் போக மீத நிலத்தை அரசிடம் திருப்பித்தர கருணாநிதி தயாரா?
காவலரை மிரட்டும் காவி சு.சாமி
அரசியலில் தடம்பதிக்கும் அன்னா ஹசாரே!
"லோக்பால் விசாரணை வரம்பிற்குள் பிரதமரையும் கொண்டு வர உதவும், தங்களது ஜன் லோக்பால் மசோதாவை மத்திய அரசு ஏற்க வேண்டும்' என, வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தார் அன்னாஹசாரே. இவரது உண்ணாவிரத போராட்டத்தின் பின்னணியில் சங்பரிவார சக்திகளின் உந்துதல் உள்ளது என மத்திய அமைச்சர் திக்விஜய்சிங் போன்றவர்கள் மட்டுமன்றி நடுநிலையான அரசியல் பார்வையாளர்களும் விமர்சித்தனர். அதை உண்மைப்படுத்தும் வகையில், ஹசாரேயின் உண்ணாவிரத மேடை காவிகளால் நிரம்பியிருந்தது. அதுமட்டுமன்றி, இவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் தள்ளப்பட்டவுடன் அங்கு ஓடோடி சென்று ஆதரவளித்தவர்களும் ராம்தேவ்- ரவிசங்கர் போன்ற காவிகள் தான். மேலும் ஹசாரேயின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ். முழு ஒத்துழைப்பு வழங்கியது என்ற உண்மையும் வெளியாகியுள்ளது. ''சமீபத்தில் ஊழலுக்கு எதிராக நடந்த போராட்டங்கள் மற்றும் இயக்கங்களில் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் அதிக அளவில் பங்கேற்றனர். சமூகத்தின் மீது கொண்ட அக்கறை காரணமாக அவர்கள் இத்தகைய போராட்டங்களில் கலந்து கொண்டனர்'' என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகாவத் கூறியுள்ளார். இவையெல்லாம் ஹசாரே-சங்பரிவார் உறவை உண்மைப்பைடுத்துவதாகும்.
இது ஒருபுறமிருக்க, ஹசாரே ஊழலை ஒழிக்க வந்த இரண்டாம் மகாத்மா என கருதிய பெரும்பான்மை மக்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு இவரை ஆதரித்தனர். ஆனால் ஹசாரே அதை மறந்து இன்று அரசியல்வாதியாகவும் அவதாரம் எடுத்து விட்டார். சமீபத்தில், "ஜன் லோக்பால் மசோதாவை கொண்டு வர மத்திய அரசு தவறினால், ஹிசார் லோக்சபா இடைத்தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு நடக்கும் ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரசை தோற்கடியுங்கள்' என, வாக்காளர்களிடம் பிரசாரம் செய்வேன்' என, தெரிவித்தார்.
இதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அவரின் பிரசாரம் துவங்க உள்ளது. அரியானா மாநிலம் ஹிசார் லோக்சபா தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தொகுதிக்கு இன்று செல்லும் ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், கிரண் பேடி, மனிஷ் சிசோடியா, கோபால் ராய் நவீன் ஜிண்டால் ஆகியோர், வரும் 10ம் தேதி வரை அங்கு தங்கியிருக்கின்றனர். அப்போது, காங்கிரசுக்கு எதிராக பிரசாரமும் செய்கின்றனர். அத்துடன், "ஊழல் அரசாங்கம்' என்ற தலைப்பில், ஹசாரே பேசிய வீடியோவும் ஆங்காங்கே திரையிடப்படுகிறது.
அதில், "ஜன் லோக்பால் மசோதாவை கொண்டு வர தவறிவிட்ட காங்கிரசுக்கு ஓட்டு போடாதீர்கள்' என, பொதுமக்களை ஹசாரே கேட்டுக் கொள்ளும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ்க்கு எதிரான சிந்தனையை விதைத்து, எதிர்கட்சியான பாஜகவின் வெற்றிக்கு ஹசாரே வலுவான அடித்தளம் அமைத்து தனது செஞ்சோற்றுக் கடனை நிறைவேற்றுகிறார். இதன் மூலம் ஹசாரே அரசியலிலும் தடம் பதிக்கிறார்.
இதற்கிடையில் எதிர்பாராத விதமாக இந்துத்துவாவின் மற்றொரு அங்கமான சிவசேனைத் தலைவர் பால்தாக்கரே ஹசாரேயின் ஊழல் ஒழிப்பு போராட்டங்கள் வேடிக்கையானவை என்று விமர்சித்துள்ளார். "ஊழலுக்கு எதிராக ஹசாரே போராட்டம் நடத்துவது வேடிக்கையானது. இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க முடியாது. ஏனென்றால், பெரிய மீன்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளன. இந்த மீன்களைப் பிடிக்க அன்னா ஹசாரே வலை வீசினால், வலை தான் கிழியும். பெரிய மீன்கள் தப்பி ஓடி விடும்' என பால்தாக்கரே கூற, "தாக்கரேவுக்கு வயசாகி விட்டது. அவர் அப்படித் தான் பேசுவார்' என ஹசாரே பதிலடி கொடுக்க, ஹசாரேவின் இந்த பதிலால் கோபமடைந்த பால் தாக்கரே, "என்னை விட உங்களுக்கு வயது குறைவாக இருப்பதற்காக, குழந்தைத் தனமாகச் செயல்படக்கூடாது. நாங்கள் காந்தியவாதிகள் கிடையாது. தேவையில்லாமல் விரோதத்தை தூண்டாதீர்கள்' என எச்சரிக்க இவர்களுக்கிடையில் நடக்கும் கூத்துக்களும் பஞ்சமில்லை. ஹசாரேயின் நாடகத்தில் அடுத்த காட்சி என்னவோ?
வியாழன், 13 அக்டோபர், 2011
சாட்சிகளை மிரட்டிய சங்கராச்சாரி...???
ரவுடிகள் மிரட்டியதால் முரண் சாட்சி அளித்தேன்
தலைமை நீதிபதிக்கு சங்கரராமன் மனைவி கடிதம்
ரவுடிகள் மிரட்டியதால் சங்கரராமன் கொலை வழக்கில் முரண் சாட்சி (பல்டி சாட்சி) அளித்தேன் என்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு அவரது மனைவி மனு கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் அந்த கோர்ட்டின் நீதிபதியுடன் ஜெயேந்திரர் தொலைபேசியில் பேரம் பேசியதாகக் கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சங்கரராமன் கொலை வழக்கின் சாட்சி விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது.
2009&ம் ஆண்டில் சாட்சி விசாரணைக்காக என்னை புதுச்சேரி கோர்ட்டுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்துச் சென்றனர். Ôசங்கரராமனை பார்த்து பேச வேண்டும்Õ என்று கொலைக்கு முந்தைய நாள் என் வீட்டுக்கு வந்து விசாரித்த சிலரை நான் கோர்ட்டில் அடையாளம் காட்டினேன். சாட்சி சொல்லிவிட்டு மதிய உணவுக்காக அமர்ந்திருந்தேன்.அப்போது 3 பேர் என்னிடம் வந்தனர். உண்மையை பேசினால் உனது மகன், மகளை ஆசிட் தொட்டியில் போட்டு கரைத்து விடுவோம். அவர்களின் உடல் கூட உனக்குக் கிடைக்காது என்று மிரட்டினர். பின்னர் மதியத்துக்கு மேல் நடந்த குறுக்கு விசாரணையில் உண்மையை சொல்ல முடியாமல் போய்விட்டது. இதனால் முரண் சாட்சியாகிவிட்டது. இதுபோல்தான் பணம் கொடுத்தும், மிரட்டியும் பலர் முரண் சாட்சி அளித்துள்ளனர். எனது மருமகனும் மிரட்டப்படுகிறார். எனவே எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சனி, 8 அக்டோபர், 2011
குஜராத்தில் மோடியின் சர்வாதிகார ஆட்சிக்கு தேசிய மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு
கோத்ரா நிகழ்வுக்குப் பிந்தைய வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்ட இந்து வெறியர்களைக் கட்டுப் படுத்த வேண் டாம் என்று முதல்வர் நரேந்திர மோடி காவல் துறைக்கு உத்தரவிட் டதை காவல்துறை அதிகாரி சந்தீப்பட் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார்.
இதனைத் தொடர்ந்து அவரை பணியிடை நீக்கம் செய்து, கைது செய்து சிறையில் அடைத் தது நரேந்திரமோடி அரசு.
மோடியின் இந்த சர்வாதிகாரத்தைக் கண்டித்து புதுடில்லி ஜந்தர்மந்திரில் மனித உரிமை ஆர்வலர்கள் தர்ணாப் போராட்டம் நடத்தினர். குஜராத் அரசு கைது செய்த அய். பி.எஸ். அதிகாரி சந்தீப் பட்டை உடனடியாக விடுதலை செய்ய வேண் டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இது குறித்து செய்தி யாளர்களிடம் பேசிய சமூக ஆர்வலர் சப்னா ஆஸ்மி கூறுகையில், சந்தீப் பட்டின் கைது நடவடிக்கையைக் கண் டித்து நாடு முழுவதும் 40 நகரங்களில் எதிர்ப் புப் போராட்டம் நடை பெற்று வருகிறது என் றார்.
குஜராத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை என் றும் அவர் கடுமையாகக் குற்றம் சாட்டினார். திரைப்பட இயக்குநர் மகேஷ்பட் கூறுகையில், தங்களுக்கு எதிரான நபர்களை இருக்கும் இடம் தெரியாமல் செய் யும் பாரதிய ஜனதாவின் தத்துவார்த்தத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என்றார்.
ஓய்வு பெற்றகுஜராத் முன்னாள் டி.ஜி.பி. ஆர்.பி.சிறீகுமார் கூறு கையில், குஜராத்தில் மோடி அரசின் நட வடிக்கை மிக மோச மான வன்கொடுமை ஆகும். 2002 ஆம் ஆண்டு வன்முறைக்குப் பின்னர் மோடி அரசு காவல்துறை உள்பட அரசு அதிகாரிகளை அச்சுறுத்தி வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
கோத்ராவுக்குப் பிந்தைய வன்முறை தொடர்பாக 2 ஆவது சாட்சி நபராக சந்தீப்பட் உள்ளார். இந்த சம்பவம் குறித்து முதல் ஆதார மாகத் திகழ்ந்தவரான ஹரன் பாண்ட்யா என்ன ஆனார் என்றே தெரிய வில்லை.
நன்றி; விடுதலை 08 அக்டோபர் 2011
வெள்ளி, 7 அக்டோபர், 2011
ஆனாலும் இந்தியா மதசார்பற்ற நாடு என்றே நம்புவோம்[!]
இதை கண்டித்து எம்.எல்.ஏ. அப்துல் ரஷித், தனது ஆதரவாளர்களுடன் சட்டசபைக்கு வெளியே ரோட்டில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். இருப்பினும், அவர் சட்டசபைக்குள் செல்ல மறுத்து விட்டார். அவருடைய ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
கருணாநிதியின் உள்ளங்கை ரேகை'யான லீக்.
அதனைப் போலவே வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் போட்டியிடும் சில தொகுதிகள் தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் திருச்சி மேற்கு சட்டமன்ற இடைத் தேர்தலிலும் முழுமனதான ஆதரவை வழங்க இருப்பதாக கூறியுள்ளார்.
வந்தது தீர்ப்பு வாச்சாத்தி'க்கு...! வருமா குஜராத்துக்கு?
பின்பு இந்த வழக்கின் விசாரணை தர்மபுரி மாவட்ட அமர்வு கோர்ட்டிற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது.