வியாழன், 30 ஜூன், 2011

பல்கிஸ் பானு கற்பழிப்பு வழக்கு : குற்றவாளிகளுக்கு ஜாமின் மறுப்பு

 ல்கிஸ் பானு கற்பழிப்பு வழக்கு குற்றவாளிகளின் ஜாமின் மனுவை, மும்பை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2002ல் குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரத்தின் போது, அங்குள்ள ராந்திக்பூர் என்ற கிராமத்தில் வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தினர். பல்கிஸ் பானு என்ற பெண் வீட்டின் மீதும், வன்முறையாளர்கள் தாக்கினர். அந்த பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் கொல்லப்பட்டனர். வன்முறை கும்பல், பில்கிசை கற்பழித்தது.
இது தொடர்பான வழக்கு, மும்பை கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையே, தங்களுக்கு ஜாமின் அளிக்கும்படி மும்பை ஐகோர்ட்டில், குற்றவாளிகள் ஏழு பேர் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், "இந்த வழக்கில் குற்றவாளிகள் மீதான குற்றத்தின் தீவிரத் தன்மையை கருத்தில் கொண்டு, ஏழு பேருக்கும் ஜாமின் அளிக்க முடியாது' என, உத்தரவிட்டது.
 
நன்றி;தினமலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக